Wednesday, August 3, 2011

மனைவியின் மானத்தை விற்று மகுடம் வாங்கிய பிரபல எழுத்தாளர்!

பதிவிற்குள் நுழைய முன்: இப் பதிவில் வரும் சம்பவங்கள் யாவும் கற்பனையல்ல. ஆனாலும் இப் பதிவின் மையக் கருவானது, பதிவுலகில் உள்ள யாரோ ஒருவரின் வாழ்க்கையோடு பொருந்திப் போனால்...அதற்குக் கம்பனி பொறுப்பேற்காது.

சாய்மனைக் கட்டிலில் காலுக்கு மேல் கால் போட்டு, நீட்டி நிமிர்ந்து படுத்தவாறு, ஜஸ்போ கிஸ்போ பீடியினைச் சுவைபட இழுத்துப் புகை விட்டுக் கொண்டிருந்தார் ஜெம்புலிங்கம். 
‘’என்னங்க? நான் கூப்புடுறது காதிலை கேட்கலையோ? இப்பூடி எம்புட்டு நாளைக்குத் தான், ஒரு வேலையும் இல்லாமல், சோம்பேறி மாதிரி வூட்டிற்குள் உட்கார்ந்திருந்து, எழுத்தாளாரகப் போறேன்...........எழுத்தாளராகப் போறேன்; ப்ளாக்கராகப் போறேன், ப்ளாக்கராகப் போறேன் என்று ஒன்னுக்கு எண்ணூற்றி எட்டுத் தரம் வாய் ஓயாமல் சொல்லுவீங்க? எனக் கணவன் மீதுள்ள கோபத்தினை பொறி கக்கும் வார்த்தைகள் மூலமாக வெளிப்படுத்தினாள் ஜலசலட்சுமி.
’என்ன புள்ள பேசுறாய்’? எழுத்தாளராகிறதென்றால் சும்மாவோ? கொஞ்ச நேரம் பேசாமல் இரும் பார்ப்போம். இன்றைய தினசரிப் பத்திரிக்கை எதிலையாச்சும், கவிதை, சிறுகதை, கட்டுரைப் போட்டி பற்றிய அறிவிப்பு ஏதாச்சும் வந்திருக்கா? அப்பிடி ஏதாச்சும் வந்திருந்தாலாவது, நான் போட்டிக்கு எழுதிப் பரிசு வாங்கி, ஒரு பேமஸ் எழுத்தாளரா மாறிடலாமில்லே’
எனத் தன் மனைவியாகிய ஜலசலட்சுமியிடம் எதிர்ப் பேச்சுப் பேசிக் கொண்டு, பத்திரிகையைப் புரட்டிய, ஜெம்புலிங்கத்திற்கு ‘இணையத்தில் கலக்கும் இளைஞர்கள்’ என்ற பகுதி கண்களில் தட்டுப்பட்டது.

’இங்க பாரடி புள்ளே! இணையத்திலை ப்ளாக் என்று ஒன்று இருக்காமில்லே.அதிலை நம்ம தமிழ் மொழியிலையும் எழுதலாம்னு சொல்லுறாங்க. தமிழின் டாப் ருவண்டி ப்ளாக்கரைப் பற்றி ஒரு சிறப்பு அலசலையெல்லே நம்ம ’அருகே உரசு’ பத்திரிகைக்காரங்க போட்டிருக்காங்க’என இணையத்தில் உள்ள ப்ளாக் பற்றிய அருமை பெருமைகளை விலாவாரியாகத் தன் மனைவிக்கு ஒப்புவித்துக் கொண்டிருந்த ஜெம்புலிங்கத்தின் மனத்திரையில் ’’தானும் ஒரு ப்ளாக்கராகினால்’’ என்ன என்கின்ற எண்ணம் ஓடத் தொடங்கியது.

‘இனிமேவெயிட் பண்ணக் கூடாது’ எனும் உணர்வு கொண்டவராக, இப்பவே எப்படியாச்சும் கூகுள் அம்மம்மாவின் உதவியினைப் பெற்று; ஒரு ப்ளாக்கினைத் திறந்து, நானும் ஒரு பிரபல பதிவராகி, அலெக்ஸா ட்ரேங்கில் முன்னுக்கு வந்து, அட்சென்ஸ் மூலமாக விளம்பரம் சம்பாதிப்போம் எனத் தன் மனதில் கற்பனைக் கோட்டையினைக் கட்டியவாறு ஒரு ப்ளாக்கினை உருவாக்கினார் ஜெம்புலிங்கம்.

‘தான் ஒரு வித்தியாசமான பெயரோடு, ப்ளாக்வைத்திருக்க வேண்டும் எனும் நோக்கில் ‘விளிம்போ-லம்போ எனப் பெயர் வைத்துத் தன் கன்னிப் பதிவினை வலையேற்றும் நோக்கில் தீவிரமாகச் செயற்படத் தொடங்கினார் ஜெம்புலிங்கம். நாட்கள் நகர்ந்தன.விளிம்போ-லம்போவில் முப்பது பதிவுகளுக்கு மேற் பதிவிட்டும், பாலோயர் அதிகரிக்கவும் இல்லை, நாளாந்தம் பதிவுகளைப் படிப்போர் தொகை அதிகரிக்கவும் இல்லை,எனும் நிலையினை உணர்ந்து மிகுந்த மன வேதனையடைந்தார் ஜெம்புலிங்கம்.

ஸப்பா....இந்த ரேஞ்சிலை போய்க் கொண்டிருந்தால் தான் எப்போது பிரபலமாகுவது? பத்திரிகையில் தன் ப்ளாக் பற்றிய அறிமுகம் எப்போது வருவது? என மனமுடைந்திருந்த ஜெம்புலிங்கத்தினைத் தோள் கொடுத்துத் தாங்கும் வகையில் மனைவி ஜலசலட்சுமி அருமையான ஒரு ஐடியாவினைக் கொடுத்தார்.
(இப் பதிவினை நிரூபனின் நாற்று வலையில் இருந்து நான் காப்பி பேஸ்ட் செய்துள்ளேன்)

‘ஏங்க...எம்புட்டு நாளைக்குத் தான் நீங்களும் ஒண்டியா ப்ளாக் எழுதி உங்களோடை உணர்வுகளை மாத்திரம் பகிர்ந்து கொள்ளுவீங்க?
பேசாமல் என்னையைப் பற்றியும் ஏதாச்சும் எழுதிப் பாருங்களேன்,
நமக்குத் தான் அதிஷ்டரேகை உச்சியில் இருந்தால், நீங்களும் பேமஸ் ஆகிடுவீங்க. நமக்கும் அட்சென்ஸ் மூலமா வருமானமும் கிடைச்சிடுமில்லே;
என்று ஐடியா கொடுத்தாள் ஜெம்புவின் மனைவி ஜலசலட்சுமி.

ஜலசலட்சுமியின் ஐடியாவினைத் தன் மனதிலிருத்தி, தீர்க்கமான யோசினையில் இறங்கினார் ஜெம்புலிங்கம். மறு நாள், தன் வாழ்வில் வசந்தம் உதயமாகப் போகிறது எனும் மகிழ்ச்சியில், ப்ளாக்கினை ஓப்பின் பண்ணி ‘திணவெடுக்கும் என் மனைவியினை அடக்க தீரர்கள்தேவை’ என ஒரு கலக்கலான பதிவினை எழுதி வலையேற்றினார். பதிவினை வலையேற்றி அரை மணி நேரமும் ஆகவில்லை.வருகையாளர்களின் தொகை நூற்றுக் கணக்கில்- நிமிடத்திற்கு எனும் விகிதத்தில் அதிகரிக்கத் தொடங்கியது.கூடியது. பின்னூட்டங்கள் வழமைக்கு மாறாக, நூற்றுக்கு மேல் வந்து கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் ஆபாசமான பின்னூட்டங்கள் வரவே, தன் மறு மொழிப் பெட்டியினை மட்டுறுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார் ஜெம்புலிங்கம்.
(இப் பதிவினை நிரூபனின் நாற்று வலையில் இருந்து நான் காப்பி பேஸ்ட் செய்துள்ளேன்)

தன் மனைவியினைப் பற்றி எழுதிய தலைப்பினால், இம்புட்டுப் பேர் வாறாங்களே எனும் உணர்வோடு பேஜ் வியூவினைச் செக் பண்ணிய ஜெம்புவிற்கு ஆச்சரியம் காத்திருந்தது. தமிழ் பேசும் மக்கள் பரந்து வாழும் உலக நாடுகள் அனைத்திலிருந்தும், மொத்தமாகப் பதினைந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள்- திணவெடுக்கும் மனைவி பற்றிய பதிவினைப் படித்திருக்கிறார்கள் எனும் நிலையறிந்து அகமகிழ்ந்தார். 
தன் அருகே நின்ற மனைவியினை இறுக்கி அணைத்து முத்தமிட்டு மகிழ்வோம் எனும் நோக்கில் தயாரான ஜெம்புவின் உணர்ச்சிகளில் உப்பு நீரை ஊற்றும் நோக்கோடு அலைபேசி மணி ஒலிக்கும் சத்தம் காதில் கேட்டது, 


‘நாங்கள் XYZPQR பத்திரிகையில் இருந்து பேசுறோமுங்க. உங்க மனைவி விற்பனைக்கிருக்காங்களா?
இல்லே இலவசமா என்று கேட்டது தான் தாமதம்............முகத்தில் யாரோ அசிட் ஊற்றியது போன்ற எரிவினை உணர்ந்தவராய், 
’வையடா நாயே போனை..என அலைபேசி இணைப்பினைத் துண்டித்தார் ஜெம்பு. 
தொடர்ச்சியாகப் பல்வேறு இலக்கங்களிருந்து ஓயாமல் தன் அலைபேசிக்கு வந்து கொண்டிருந்த அழைப்புக்களால் கடுப்படைந்த ஜெம்பு, தன் தொலைபேசியினைத் தூக்கித் தூர எறிந்து விட்டு, இனிமேல் இந்த ப்ளாக்கும் வேணாம், ஒன்றும் வேணாம் எனும் தீர்க்கமான முடிவினை எடுத்துத் தன் விளிம்போ- லம்போவிற்கு மூடுவிழா வைத்தார்.
(இப் பதிவினை நிரூபனின் நாற்று வலையில் இருந்து நான் காப்பி பேஸ்ட் செய்துள்ளேன்)

எழுத்தாளராகும் ஆசையினை, எதிர்பாராது நிகழ்ந்த சம்பவத்தோடு கைவிட்ட ஜெம்பு, மனைவிக்கு இன்று முதல் நல்ல கணவனாக இருக்க வேண்டும் என உறுதியெடுத்தார். ஜலசலட்சுமிக்கு புத்தாடை வாங்கிக் கொடுப்பதற்காய், ஷாப்பிங் மாலுக்கு அழைத்துச் சென்றார் ஜெம்பு. போகும் வழியில், 
’’ஏன் அண்ணே,   நீங்க தானே திணவெடுக்கும் மனைவியை அடக்க ஆள் தேவை’என்று பதிவெழுதினீங்க; என்று யாரோ கிண்டலுடன் பின்னாலிருந்து அழைப்பது போன்றிருந்தது. 
திரும்பிப் பார்த்தார். யாரையுமே காணவில்லை.
(இப் பதிவினை நிரூபனின் நாற்று வலையில் இருந்து நான் காப்பி பேஸ்ட் செய்துள்ளேன்)

’ஏண்டீ...லட்சு, யாரோ நம்மளைக் கூப்பிடுற மாதிரியிருக்கே. உனக்குக் கேட்டுதாடி?
’’போங்க அத்தான் நீங்க இன்னமும் அதையே நினைச்சுக்கிட்டு இருக்கீங்களே?
இனிமேலாச்சும் இந்தக் கருமாந்திரம் புடிச்ச நினைப்பை மறந்து தொலையுங்க. 
எனச் செல்லமாக ஒரு ஏச்சுக் கொடுத்து விட்டு;ஜெம்புவின் கையோடு கை கோர்த்துக் கொண்டு ஷொப்பிங் மாலுக்குள் இருவரும் நுழைந்தார்கள்.

62 Comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...
Best Blogger Tips

யாரிந்த பிரபலம்.

தமிழ்வாசி பிரகாஷ் said...
Best Blogger Tips

சகோ....
வாசிச்சேன்....
ரசிச்சேன்....
வாக்கிட்டேன்...

செங்கோவி said...
Best Blogger Tips

நிரூ..என்ன சொல்ல வர்றீங்கன்னு புரியலை

KANA VARO said...
Best Blogger Tips

செங்கோவி said...
நிரூ..என்ன சொல்ல வர்றீங்கன்னு புரியலை//

தெளிவா குழப்பிறது இது தான்.

செங்கோவி said...
Best Blogger Tips

//KANA VARO said...
செங்கோவி said...
நிரூ..என்ன சொல்ல வர்றீங்கன்னு புரியலை//

தெளிவா குழப்பிறது இது தான்.//

பரவாயில்லை பாஸ்..உங்களுக்காவது புரிந்தால் சொல்லுங்களேன்.

தமிழ்வாசி பிரகாஷ் said...
Best Blogger Tips

எழுத்தாளராகப் போறேன்; ப்ளாக்கராகப் போறேன், ப்ளாக்கராகப் போறேன் என்று ஒன்னுக்கு எண்ணூற்றி எட்டுத் தரம் வாய் ஓயாமல் சொல்லுவீங்க?>>>>>

யாருங்க அந்த வாயாடி நபர்.... அய்யோ சகோ தெரியாம காப்பி பேஸ்ட் பண்ணிட்டேன்...
சாரி...

நிரூபன் said...
Best Blogger Tips

@தமிழ்வாசி - Prakash
யாரிந்த பிரபலம்.//

அட...ஒரு X என்று வைச்சுக் கொள்ளுங்க சகோ;-))))

நிரூபன் said...
Best Blogger Tips

@தமிழ்வாசி - Prakash
சகோ....
வாசிச்சேன்....
ரசிச்சேன்....
வாக்கிட்டேன்.//

நன்றி சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@செங்கோவி

நிரூ..என்ன சொல்ல வர்றீங்கன்னு புரியலை//

மச்சி, பிரலமாகனும் எனும் தீராத ஆசை காரணமாக, மனைவியின் நடவடிக்கையினைப் பதிவிற்குத் தலைப்பாக வைத்துப் பிரலமான ஒருவரின் கதையினைப் பதிவு சொல்கிறது சகோ.

Unknown said...
Best Blogger Tips

really enjoyed your post...
congrats

Unknown said...
Best Blogger Tips

voted

மாய உலகம் said...
Best Blogger Tips

நீங்கள் சீரியஸாக சொன்னீர்களோ... காமேடியாக சொன்னீர்களே... எனக்கு குபீர் என்று சிரிப்பு வந்துவிட்டது.. நல்லாருக்கு சகோ... வாழ்த்துக்கள்

Unknown said...
Best Blogger Tips

ஹிஹி இன்னொரு உள்குத்து பதிவா ஆவ்வ்வ்வவ்வ்வ்வ்

Unknown said...
Best Blogger Tips

ஆஹா காப்பி ரயிட்ஸ் போட்டிட்டீங்களா பாஸ்""?கோப்பி பண்ண முடியல?

Unknown said...
Best Blogger Tips

எனக்கு கொஞ்சம் கொஞ்சம் புரியுது...
ஹிஹி அது யார்னு அப்புறம் என்கிட்டே கேக்காதீங்க சகோதரங்களே!!
எல்லாம் உலகளாவிய தமிழ் ப்லோக்கர்களில் ஒருவர் தான் போலும்!

எல் கே said...
Best Blogger Tips

தரம் குறைந்த பதிவு நண்பரே. இது பதிவுலகில் எங்கும் நடந்திருப்பதாகத் தெரியவில்லை. எதுக்காக இப்படி ஒரு பதிவு. சகப் பதிவர்களை கேவலப்படுத்துவது போல் உள்ளது இது.

settaikkaran said...
Best Blogger Tips

சகோ! உங்களால் இதை விட நல்ல இடுகைகளை எழுத முடியும் என்பதற்கு உங்களது பல முந்தைய இடுகைகளின் வெற்றியே சாட்சி!

யானைக்கும் அடிசறுக்கும் என்பது இது தானோ?

நிரூபன் said...
Best Blogger Tips

@KANA VARO
KANA VARO said...
செங்கோவி said...
நிரூ..என்ன சொல்ல வர்றீங்கன்னு புரியலை//

தெளிவா குழப்பிறது இது தான்//

என்னங்க, நான் உங்களை எங்கே குழப்பினேன்.

நிரூபன் said...
Best Blogger Tips

@தமிழ்வாசி - Prakash
யாருங்க அந்த வாயாடி நபர்.... அய்யோ சகோ தெரியாம காப்பி பேஸ்ட் பண்ணிட்டேன்...
சாரி...//

ஏன் மச்சி, நான் நல்லா இருப்பது பிடிக்கலை. இப்படிப் பொது இடத்தில் அவர் பெயரை நாம ஏன் கெடுப்பான்(((((:

நிரூபன் said...
Best Blogger Tips

@ரியாஸ் அஹமது

really enjoyed your post...
congrats//

நன்றி சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@மாய உலகம்

நீங்கள் சீரியஸாக சொன்னீர்களோ... காமேடியாக சொன்னீர்களே... எனக்கு குபீர் என்று சிரிப்பு வந்துவிட்டது.. நல்லாருக்கு சகோ... வாழ்த்துக்கள்//

நன்றி சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@மைந்தன் சிவா

ஹிஹி இன்னொரு உள்குத்து பதிவா ஆவ்வ்வ்வவ்வ்வ்வ்//

ஏன் மச்சி, இப்படிக் கோர்த்து விடுறாய்.

நிரூபன் said...
Best Blogger Tips

@மைந்தன் சிவா

ஆஹா காப்பி ரயிட்ஸ் போட்டிட்டீங்களா பாஸ்""?கோப்பி பண்ண முடியல?//

இல்லை மச்சி, நீக்கிவிட்டேன். பதிவினைப் படித்துப் பின்னூட்டம் போட முடியாது என்று வாசகர்கள் பலர் குழம்பிட்டாங்க. அதான்.

நிரூபன் said...
Best Blogger Tips

@எல் கே

தரம் குறைந்த பதிவு நண்பரே. இது பதிவுலகில் எங்கும் நடந்திருப்பதாகத் தெரியவில்லை. எதுக்காக இப்படி ஒரு பதிவு. சகப் பதிவர்களை கேவலப்படுத்துவது போல் உள்ளது இது.//

அன்பிற்குரிய எல்.கே அண்ணாச்சி,
பதிவுலகில் மனைவியினை வைத்துத் தலைப்புப் போட்டு தம் பதிவுகளைக் ஹிட் ஆக்கும் நபர் ஒருவருக்காகத் தான் இப்படி ஒரு பதிவினை எழுதினேன். கடந்த மாதம் பதிவுலகில் வெளிவந்த பதிவுகளில் இத்தகைய தலைப்பிலமைந்த ஒரு பதிவும் முக்கிய இடத்தினைப் பெற்றிருக்கிறது. அப்படியான டைட்டிலில் அமைந்த ஒரு பதிவினைப் பற்றிய மொக்கை தான் இது சகோ. என் பதிவில் தவறேதுமிருப்பின் மன்னிக்கவும்.

நிரூபன் said...
Best Blogger Tips

@சேட்டைக்காரன்
சகோ! உங்களால் இதை விட நல்ல இடுகைகளை எழுத முடியும் என்பதற்கு உங்களது பல முந்தைய இடுகைகளின் வெற்றியே சாட்சி!

யானைக்கும் அடிசறுக்கும் என்பது இது தானோ?//

சகோ, பதிவுலகில் இவ்வாறான தலைப்பிலமைந்த ஒரு பதிவினைக் கலாய்க்கவே இப்படி ஒரு பதிவினை எழுதினேன். என் பதிவில் தவறிருப்பின் மன்னிக்கவும்.

யானைக்கும் அடி>>>
மாப்பு, இது உங்களுக்கே நியாயமா? நான் ஒரு ஓமக் குச்சி ஐயா.
ஹி....ஹி...
தோல்வி என்ற ஒன்று வந்தால் தானே வெற்றிக்கான படிக்கற்களை நோக்கிப் பயணிக்க முடியும்,
ஹா....ஹா....

Anonymous said...
Best Blogger Tips

நிரூபன்...உங்களுக்கு நேரம் சரியில்லை போல...தொடர்ந்து இடியாப்ப சிக்கல்ல மாட்டிக்கிறீங்க...

கூடல் பாலா said...
Best Blogger Tips

மாப்ளைக்கி இன்னும் கோபம் தீரலையா .......முடிஞ்சா எங்க ஊருக்கு வாங்க குற்றாலத்துக்கு அழைச்சிட்டு போறேன் !

J.P Josephine Baba said...
Best Blogger Tips

சகோதரா அடுத்த வீட்டு ஜென்னல் பக்கம் நிற்காதீர்கள் என்று மட்டுமே சொல்ல இயலும் .....இந்த சகோதரியால்.

ம.தி.சுதா said...
Best Blogger Tips

/////நாங்கள் XYZPQR பத்திரிகையில் இருந்து பேசுறோமுங்க. உங்க மனைவி விற்பனைக்கிருக்காங்களா?/////

டேய் இப்படி ஒரு அவஸ்தை தேவையா ஹ...ஹ... வைரமுத்து ஸ்டைலில் ஒரு கவி போடு
“என் மனைவி விற்பனைக்கல்ல“

Unknown said...
Best Blogger Tips

அந்த பதிவோட லிங்க் குடுக்காம விட்டுடீங்க நிரூபா.. நான் எப்பிடி அதை பாக்குறதாம்

ஹா ஹா ஹா

உங்க டெக்னிக் சூப்பர்
(இப் பதிவினை நிரூபனின் நாற்று வலையில் இருந்து நான் காப்பி பேஸ்ட் செய்துள்ளேன்)

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

யாருய்யா அந்த நல்ல பதிவர்...???

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

ஏ யப்பா முடியல......

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

நண்பா.. பதிவு காமெடி ஓக்கே.. ஆனா டைட்டில் பல பதிவர்களை காயப்படுத்தும்னு தோணுது

சக்தி கல்வி மையம் said...
Best Blogger Tips

(இப் பதிவினை நிரூபனின் நாற்று வலையில் இருந்து நான் காப்பி பேஸ்ட் செய்துள்ளேன்). அட...

சக்தி கல்வி மையம் said...
Best Blogger Tips

இந்த பதிவு நகைச்சுவையுடன் இருந்தாலும் .. தலைப்பு நெருடுது மச்சி.. கரக்டா நீயே சொல்லு..

sasikumar said...
Best Blogger Tips

பதிவர்கள் மீது மக்களிடம் நம்பிக்கை வளர்ந்து கொண்டிருக்கும் நேரத்தில் இது போன்ற பதிவுகள் அதை தகர்க்கும் என நினைக்கிறேன். ஏதேனும் தவறாக கூறி இருந்தால் மன்னிக்கவும்.

M.R said...
Best Blogger Tips

இப் பதிவில் வரும் சம்பவங்கள் யாவும் கற்பனையல்ல.

அப்ப இது உண்மை சம்பவம் தானே நண்பரே

M.R said...
Best Blogger Tips

இப் பதிவினை நிரூபனின் நாற்று வலையில் இருந்து நான் காப்பி பேஸ்ட் செய்துள்ளேன்)


இது நல்ல ஐடியாவா இருக்கே

test said...
Best Blogger Tips

இசகு பிசகா தலைப்பு வச்சால் பதிவு ஹிட்டாகும் என்பது தெரிந்ததுதான்! ஆனா...ஏன்...? என்னமோ சரியில்லாதமாதிரி தோணுது பாஸ்!

ராஜி said...
Best Blogger Tips

நீங்களுமா அடுத்தவங்களை தாக்கி பதிடுறீங்க. தங்கள் எண்ணங்களை பதிவிட அனைவருக்கும் உரிமையுன்டு. இனி, அதை கிண்டலடிக்க வேண்டாம்.இனி இடுப்போல பதிவுகளை தவிர்த்திடுங்கள் சகோ.

Unknown said...
Best Blogger Tips

மாப்ள என்னமோ சொல்ற யாரையோ குத்துற..யாருய்யா அந்த மனுஷன்!

Anonymous said...
Best Blogger Tips

////‘தான் ஒரு வித்தியாசமான பெயரோடு, ப்ளாக்வைத்திருக்க வேண்டும் எனும் நோக்கில் ‘விளிம்போ-லம்போ எனப் பெயர் வைத்துத் தன் கன்னிப் பதிவினை வலையேற்றும் நோக்கில் தீவிரமாகச் செயற்படத் தொடங்கினார் ஜெம்புலிங்கம். நாட்கள் நகர்ந்தன.விளிம்போ-லம்போவில் முப்பது பதிவுகளுக்கு மேற் பதிவிட்டும், பாலோயர் அதிகரிக்கவும் இல்லை, நாளாந்தம் பதிவுகளைப் படிப்போர் தொகை அதிகரிக்கவும் இல்லை,எனும் நிலையினை உணர்ந்து மிகுந்த மன வேதனையடைந்தார் ஜெம்புலிங்கம்.
/// ஒருவேளை நானாய் இருப்பேனோ??? ஹிஹிஹி

Anonymous said...
Best Blogger Tips

என்ன நடந்தது ஏனிந்த பதிவு எண்டு எனக்கு கொஞ்சம் தெரியும் பாஸ்...

Anonymous said...
Best Blogger Tips

/// (இப் பதிவினை நிரூபனின் நாற்று வலையில் இருந்து நான் காப்பி பேஸ்ட் செய்துள்ளேன்)/// இது எப்ப ஹிஹி , பாருங்கோ இதை கூட கண் மூடிக்கொண்டு copy பண்ணுவாங்கள் ...

ஹேமா said...
Best Blogger Tips

நிரூ....ஒரே கோவமா இருக்கிறமாதிரி இருக்கு.நிரூ ஒவ்வொருத்தர் ஒவ்வொரு விதம்.என்ன செய்யலாம் !

பன்னிக்குட்டி ராம்சாமி said...
Best Blogger Tips

என்ன இருந்தாலும் இது நெருடலான தலைப்பே...

Prabu Krishna said...
Best Blogger Tips

அட இந்த பதிவர்கள் தொல்ல தாங்க முடியலப்பா

K.s.s.Rajh said...
Best Blogger Tips

தலைப்பு நன்றாக இல்லை நண்பரே....

ஆனால்
இது உண்மையோ இல்லை மொக்கையோ.ஆனால் நல்லா சிரிப்பு வருகுது பாஸ்.

இந்திரா said...
Best Blogger Tips

நிஜமோ கற்பனையோ..
தலைப்பைக் கொஞ்சம் மாற்றலாமே..

நிரூபன் said...
Best Blogger Tips

பேரன்பிற்கும், பெரு மதிப்பிற்குமுரிய உறவுகளே,

பதிவின் தலைப்பில் தவறு என்று நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்கிறேன். அதே நேரம் ஏன் இப்படி ஒரு பதிவினை எழுத வேண்டிய தேவை ஏற்பட்டது என்பதனையும் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

‘என் மனைவியைத் திருப்திப்படுத்த முடியுமா?
‘என் பெண்டாட்டியை........................வையுங்கள்’’ பல சங்கடமான டைட்டில் பல பதிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, அப் பதிவுகள் மீதான எனது ஆதங்கத்தினை வெளிப்படுத்தும் நோக்கில் தான் இப்படியொரு தலைப்பினைத் தெரிவு செய்ய வேண்டிய தேவை எனக்கு ஏற்பட்டது.

இத்தகைய தலைப்பின் மூலம் உங்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்காக, இடைஞ்சல்களுக்காக என் பணிவான மன்னிப்பினை இவ் இடத்தில் கோருகிறேன்.

நிரூபன் said...
Best Blogger Tips

இப் பதிவின் மையக் கதைக்குத் தலைப்பு பொருந்திப் போவதால் தான் இப்படியொரு தலைப்பினை வைத்தேன். இங்கே எழுத்தாளர் என ஒருமையில் ஒரேயொரு நபரினைத் தான் நான் விளித்துள்ளேன்.

Mathuran said...
Best Blogger Tips

பாஸ்... ஒண்ணுமே புரியல்ல.. தண்ணி தெளிச்சு தெளிச்சு அடிக்கிற மாதிரியே இருக்குது..

shanmugavel said...
Best Blogger Tips

நகைச்சுவைக்குள் அழுத்தமான விஷயம் .நன்று.

காட்டான் said...
Best Blogger Tips

ஏன் மாப்பிள நீயும் சேத்துக்க இறங்குற..

காட்டான் குழ போட்டான்..

Anonymous said...
Best Blogger Tips

ஏன் சகோ நான் சொல்லிட்டேன் என்பதற்காக இப்படி எல்லாம் கண் மண் தெரியாமல் சேற்றுக்குள் இறங்குவியளா?
என் மஞ்சப்பக்கமும் எட்டிப் பார்க்கலாம் தானே.சமூக வெளிப்புணர்வுடன் எழுதுங்களேன்.உங்கள் நகைச்சுவை உணர்வை ஏன் வீணடிக்கிறிர்கள்.அடுத்தவன் எப்படியும் எழுதட்டும்.ஆனால் நீங்கள் 6 மாதம் அஞ்ஞாதவாசம் இருந்திட்டு பக்குவப்பட்ட பின்பும் ஏன் இந்த அடுத்தவன் ஊத்தை நமக்கு?
http://pc-park.blogspot.com/2011/08/function-keys-f1-f5.html

Anonymous said...
Best Blogger Tips

விழிப்புணர்வு வெளிப்புணர்வுடன் என்று மாறிவிட்டது.

காட்டான் said...
Best Blogger Tips

மாப்பிள உன்ர பிளாக்க அதிகமானவர்கள் பார்க்கிறார்கள்.. நீயும் அவர்கள் போல் இறங்கி வர வேண்டாம்.. அண்மையில் காட்டான் ஒரு பனைமரத்தின் படம் வேண்டுமென்று எல்லோர் பிளாக்கிளும் மேய்ந்து களைத்து புதிய யாழ்ப்பணம் கொம்மில் அதை கண்டுபிடித்து அந்தபடத்தை எடுக்கலாம் என்று பார்த்தால் அதில் அவர்களின் தல பெயர் பின்புலத்தில் மின்னுகிறது... 

கொப்பி பேஸ் உங்களை மனவருத்தமடைய செய்தால் நீங்களும் அவர்கள் போல் செய்யலாம்...!? நீங்கள் என்ன காட்டானைப்போல் கணணியறிவு இல்லாதவரா..? இதற்காக சேற்றில் இறங்காதீர்கள்.. காட்டான் கோமணத்துடன் நிற்பதால் அவனுக்கு இதில் ஒன்றும் பிரச்சனையில்லை.. நீங்கள் அதிகமானவர்கள் வாசிக்கும் தலமொன்றை கொண்டுள்ளீர்கள் என்பதாலும் எனக்கு உங்களை தனிப்பட்ட முறையிலும் பிடிக்குமென்பதாலும் இதை நான் எழுதுகிறேன்.. தவறு இருந்தால் மன்னியுங்கள்.. பன்றி சேற்றில் இருப்பது ஒன்றும் புதுமையல்ல ஆனால் யானை..!!!!!!?????

காட்டான் குழ போட்டான்...

காட்டான் said...
Best Blogger Tips

மாப்பிள உன்ர பிளாக்க அதிகமானவர்கள் பார்க்கிறார்கள்.. நீயும் அவர்கள் போல் இறங்கி வர வேண்டாம்.. அண்மையில் காட்டான் ஒரு பனைமரத்தின் படம் வேண்டுமென்று எல்லோர் பிளாக்கிளும் மேய்ந்து களைத்து புதிய யாழ்ப்பணம் கொம்மில் அதை கண்டுபிடித்து அந்தபடத்தை எடுக்கலாம் என்று பார்த்தால் அதில் அவர்களின் தல பெயர் பின்புலத்தில் மின்னுகிறது... 

கொப்பி பேஸ் உங்களை மனவருத்தமடைய செய்தால் நீங்களும் அவர்கள் போல் செய்யலாம்...!? நீங்கள் என்ன காட்டானைப்போல் கணணியறிவு இல்லாதவரா..? இதற்காக சேற்றில் இறங்காதீர்கள்.. காட்டான் கோமணத்துடன் நிற்பதால் அவனுக்கு இதில் ஒன்றும் பிரச்சனையில்லை.. நீங்கள் அதிகமானவர்கள் வாசிக்கும் தலமொன்றை கொண்டுள்ளீர்கள் என்பதாலும் எனக்கு உங்களை தனிப்பட்ட முறையிலும் பிடிக்குமென்பதாலும் இதை நான் எழுதுகிறேன்.. தவறு இருந்தால் மன்னியுங்கள்.. பன்றி சேற்றில் இருப்பது ஒன்றும் புதுமையல்ல ஆனால் யானை..!!!!!!?????

காட்டான் குழ போட்டான்...

Mahan.Thamesh said...
Best Blogger Tips

படிக்க சிறப்பாய் இருந்தது.

எஸ் சக்திவேல் said...
Best Blogger Tips

ஐயோ, ஐயோ !

maruthamooran said...
Best Blogger Tips

நிரூ...!

நேற்று வர முடியவில்லை. இடையறாத ஆணிபுடுங்கல்கள்.

நல்லாயிருக்கு. விளங்கவேண்டியவர்களுக்கு விளங்கியிருக்கும். ஹிஹிஹி.

கார்த்தி said...
Best Blogger Tips

எனக்கும் யாருக்கெண்டு விளங்குற மாதரி கிடக்கு! ஹிஹிஹி
சார் இப்ப கொஞ்சம் வேற வேலயில பிசியா இருக்கிறதால ஓழுங்கா உடனுக்குடன் வரமுடியல. மீண்டும் எல்லாம் ஒழுங்காகும் எண்டு நம்புறன்!

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails