ஜஸ்..பிஸ்க்...மஸ்க்....விஸ்க்...ஹிக்!
’’வணக்கம் பிள்ளையள்,
’’வணக்கம் டீச்சர்....எனத் தன் வணக்கத்தினைச் சொல்லிப், பிள்ளைகளின் பதில் முக மலர்ச்சியினையும் பெற்றவாறு, ஐந்தாம் வகுப்பினுள் நுழைந்தா டீச்சர் டங்குனியா.
’இன்னைக்கு நாம எல்லோரும் கம்பியூட்டர் பற்றிப் படிக்கப் போறோம்.
’கம்பியூட்டர் என்பது, கம்--பியூட்டர் எனத் தமிழில் பிரிந்து கொள்ளும், கம் என்றால் வா..என்றும் யூட்டர் என்றால், ஸ்கூட்டருக்கு நிகரான வேகத்தினையும் இக் கம்பியூட்டர் தருவதால் தான் இப்படிப் பெயர் வந்திச்சு’’ என்று டீச்சர் சொல்லி முடிக்கவும், கடைசி வாங்கிலிருந்து கஸ்மாளன் எந்திருச்சு ஒரு டவுட் கேட்கவும் சரியாக இருந்தது.
’’டீச்சர்...டீச்சர். அப்படீன்னா மவுஸ் என்றால் என்ன டீச்சர்?
’மவுஸ் என்றால் என்ன டீச்சர்?...தமிழில் இந்தப் பொருளுக்கு மவுசு அதிகம் என்று சொல்லுவோம் தானே!, அதே மாதிரி கம்பியூட்டர் இயங்க மிக இந்த மவுசும் மவுசாக இருப்பதால் அப்படி ஓர் பெயர் வந்தது’’ என்று சமாளிபிக்கேசன் விட்ட டங்குனியா டீச்சர்,
‘எல்லோரும் வடிவா நோட் பண்ணிக்குங்க. இது தான் கம்பியூட்டரோடை அறிமுமம்,. இப்படித் தான் கம்பியூட்டரினை ஆன் செய்வாங்க. ஸோ, உங்களுக்கு ஏதாச்சும் டவுட் என்றால், என்னிடம் கேளுங்க. பாடம் சொல்லிக் கொடுக்கும் போது, வானத்தைப் பார்த்து யோசித்துப் போட்டு, மூளையை எங்கேயாச்சும் அடகு வைச்சிட்டு,
அப்புறமா இது என்ன டீச்சர் என்று யாராச்சும் புரியாமற் கேட்டீங்க. அப்புறமா உங்களைக் ஹெட் மாஸ்டரிடம் அழைத்துச் சென்று விடுவேன் எனத் தன் முதலாவது நாளிலேயே ஒரு மிரட்டல் மிரட்டினா டங்குனியா.
கம்பியூட்டரை எப்படி ஆன் செய்வதென்று தெரியுமோ? எப்பவுமே எடுத்தோம் கவிழ்த்தோம் என்று கம்பியூட்டரினை ஆன் செய்யக் கூடாது. முதலில் பவர் சுவிச்சை ஆன் செய்து யூபிஎஸ்ஸினை(UPS) ஆன் செய்து மேலே இருக்கிற மானிட்டரின் திரை விலக்கி, அப்புறமாத் தான் கீழே உள்ள CPU வினை ஆன் செய்யனும். என.....
டீச்சர் சொல்லுவதை வைத்த கண் வாங்காது பார்த்திருந்த அங்குசன் எந்திருச்சு ஒரு கேள்வி கேட்டான் பாருங்க.
’ஏன் டீச்சர், கீழே இருந்து எப்பவுமே ஆன் செய்யக் கூடாதா’ இப்படி ஒரு கேள்வி வந்ததும், வகுப்பறையில் உள்ள இருபத்தியெட்டு மாணவர்களும் கொல்...கல...கல...வெனச் சிரித்தார்கள்.
இதனால் கடுப்படைந்த டீச்சர், ’எப்பவுமே CENTRAL PROCESSING SYSTEM இல் இருந்து ஸ்ராட் பண்ணுவது தப்பில்லை. ஆனால் கம்பியூட்டர் நிறையக் காலம் ஒர்க் பண்ணுமா என்றது தான் டவுட் என்று கூறி முடித்தா டீச்சர்.
’’பிள்ளைகளே கம்பியூட்டர் பற்றி எல்லோருக்கும் இப்ப சின்னதா ஒரு அறிமுகம் கிடைச்சிருக்கும். இன்னைக்கு கம்பியூட்டரை வைத்துக் கவிதை எழுதுவது எப்படி என்று பார்ப்போம் என டீச்சர் கற்றுக் கொடுக்கத் தொடங்கினா.
’கம்பியூட்டரில் உள்ள முக்கியமான அயிட்டங்களை எல்லோரும் நல்லா உற்றுப் பாருங்க பிள்ளைகளா.
இனிமே நாம கவிதை எழுதுவோமா. உங்கள் சிந்தனையில் வரும் கவிதைகளை எழுதிக் கொண்டு வாங்கோ. அது எதுவாக இருந்தாலும் வரவேற்கிற மனப்பாங்கு என்னிடம் இருக்கு. ஆனால் காப்பி பேஸ்ட் கவிதை மாதிரி எங்கேயாச்சும் உல்டா செய்து கொண்டு வந்தீங்க...அப்புறமா என் சுய ரூபத்தை நீங்கள் தெரிஞ்சுக்க நேரிடலாம் என டீச்சர் ஒரு அறிக்கை விட்டு விட்டு தனக்கான ஆசனத்தில் போய் உட்கார்ந்து கொண்டா.
எல்லா மாணவர்களும் தமக்காக ஒதுக்கப்பட்ட கம்பியூட்டர் பாட டைம்மில் கவிதை எழுதி முடித்திருந்தார்கள்.
‘’எங்கே அங்குசன் உங்கடை கவிதையை வாசியுங்கோ பார்ப்போம்.
‘உன் பார்வை என்னும் சுனாமி வைரஸ்ஸை எதிர்க்க
உலகில் இதுவரை எந்தவொரு அன்ரி வைரஸ்சுகளும் இல்லை''
’’ச்...சீ...This is not good, இது நல்லாயில்லையே. எனச் சொல்லியவாறு வகுப்பறையில் உள்ள எல்லா மாணவர்களினதும் கவிதையினைச் செவிமடுத்துப் பாராட்டி வந்த டீச்சருக்கோ, தான் எதிர்பார்த்த கவிதை மாத்திரம் கிடைக்கவில்லையே எனும் ஏமாற்றத்தினை நிராகரிக்கும் வண்ணம் ஜங்குசன் எனும் மாணவனது கவிதை அமைந்தது.
‘என் முன்னே வந்தாய் விழி மூடி யோசிக்கையில்
சந்தோசம் தந்தாய் தனியாகப் பேசுகையில்
மழைக்காலம் இது அல்லவா
மழைக் கிளியும் நீயல்லவா
நான் என்னை உன் விழி வழியே கண்டேனே’
'ஜங்குசன், நீங்கள் இந்தக் கவிதையினை எங்கிருந்தாச்சும் காப்பி பண்ணியிருக்கிறீங்களா?
'இல்லை டீச்சர்; நெசமாவே நான் தான் எழுதினேன், என மாணவனின் பதில் அமைந்தது.
‘உண்மையைச் சொல்லுங்கோ?
’இல்லை டீச்சர், நான் போய்க் காப்பி பண்ணுவேனா?
’என் கற்பனையில் உதித்த கவிதை இது. உங்களுக்கு என்ன பைத்தியமா டீச்சர்?
’நீ தான் சரியான மாணவன், உன்னிடம் ஒரு திறமை ஒளிந்திருக்கிறது. நீ ஒரு ப்ளாக்கராகுவதற்கான சந்தர்ப்பம் இருக்கிறது. அடித்துச் சொல்கிறேன், சந்தேகமே இல்லை, ஜங்குசன் Congrats நீங்கள் ஒரு வலைப் பதிவராக இனிமேல் என் கம்பியூட்டர் கிளாஸிலை இருந்து வலம் வரப் போறீங்க.
அயன் படத்தில் வந்த ‘விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய்....
பாடலைக் காப்பி பண்ணி ஒரு கவிதை எழுதிப் போட்டு, இறுதி வரை, அது காப்பி இல்லை, நீ சொந்தமா எழுதின கவிதை என்று என் கூட வாதிட்டியே! இது தான் திறமை. நீ தான் கவிஞர் ஜங்குசன். இனிமேல் என் கிளாஸில், ஒரு இருபது நிமிடத்தை ஜங்குசனின் கவித் திறமைக்காக ஒதுக்கப் போகிறேன். சோ...நீங்க வீட்டிலை இருந்து நிறையக் கவிதைகளை யோசித்துக் கொண்டு வாங்கோ எனச் சொல்லி விட்டு வகுப்பறைய விட்டு நகர்ந்தா டீச்சர்.
‘ஜங்குசன்...அப்பாடா...இனிமே நானும் ஒரு இணைய எழுத்தாளர் எனத் தனக்குள் தானே சொல்லிப் பெருமைப்பட்டுக் கொண்டான். வகுப்பறையில் உள்ள ஏனைய மாணவர்கள் ஜங்குசனை வைத்த கண் வாங்காது பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
'தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்த பின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்’ - திருக்குறள் 293
|
58 Comments:
உறவுகளே, நான் வேலைக்குப் போகிறேன், யாராவது தமிழ் மணத்தில் இப் பதிவினை இணைத்து விடவும்.
வலைச்சர அறிமுகத்துக்கு மீண்டும் வாழ்த்துக்கள்
மீண்டும் கோப்பி பேஸ்ட் பதிவர்களுக்கு ஒரு சவுக்கடி
சூப்பர்
தமிழ் மனம் தகராறு பண்ணுதே
Sariyana Mokkai
vaalthukal.
http://www.kovaikkavi.wordpress.com
மாப்பிளைக்கு இன்னும் ஆத்திரம் தீரவில்லைபோல் தெரிகிறது.. ஆனா நான் அத ரசித்து வாசித்தேன்யா.. அதுதான்யா கொம்பீற்றர் திரைய எப்பிடி விலக்குவதென்று பாடம் எடுத்ததைத்தான்யா.. அது சரி எதோ பெரியவங்க சமாச்சாரம்ன்னு சொன்னியே மாப்பிள அது இதுக்குள்ள எங்கையா இருக்கு விளக்கமா கோடு போட்டு காட்டியிருக்கலாமே..!? காட்டானுக்கு கண்ணு கொஞ்சம் அப்புடி இப்புடிதான்யா..!?
''அயன் படத்தில் வந்த ‘விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய்....
பாடலைக் காப்பி பண்ணி ஒரு கவிதை எழுதிப் போட்டு, இறுதி வரை, அது காப்பி இல்லை, நீ சொந்தமா எழுதின கவிதை என்று என் கூட வாதிட்டியே! இது தான் திறமை. நீ தான் கவிஞர் ஜங்குசன். இனிமேல் என் கிளாஸில், ஒரு இருபது நிமிடத்தை ஜங்குசனின் கவித் திறமைக்காக ஒதுக்கப் போகிறேன்''. சாட்டையடி நெத்தியடி சுப்பர்
///எச்சரிக்கை அறிவிப்பு: இந்தப் பதிவு வளர்ந்தவர்கள், குழந்தைங்க, அப்புறமா நடுத்தர வயதுக்காரங்க...என எல்லோருக்கும் உகந்தது. ஆபாசம் என்றால் என்னவென்று சரியான அர்த்தம் தெரியாதோர் மாத்திரம் படிக்கக் கூடாத பதிவு தான் இது./// ஹிஹிஹி ..
டங்குனியா,அங்குசன்,ஜங்குசன்....ஹிஹி ,
அப்புறம் நேமிசாவையும் சேர்த்திருக்கலாம் பாஸ் ))
///’கம்பியூட்டர் என்பது, கம்--பியூட்டர் எனத் தமிழில் பிரிந்து கொள்ளும், கம் என்றால் வா..என்றும் யூட்டர் என்றால், ஸ்கூட்டருக்கு நிகரான வேகத்தினையும் இக் கம்பியூட்டர் தருவதால் தான் இப்படிப் பெயர் வந்திச்சு’’// பார்ரா ,இப்பிடி ஒரு டீச்சர் எனக்கு கிடைக்காமல் போய்ட்டாவே..))
///’மவுஸ் என்றால் என்ன டீச்சர்?...தமிழில் இந்தப் பொருளுக்கு மவுசு அதிகம் என்று சொல்லுவோம் தானே!, அதே மாதிரி கம்பியூட்டர் இயங்க மிக இந்த மவுசும் மவுசாக இருப்பதால் அப்படி ஓர் பெயர் வந்தது’’ /// ஒரு வேளை இதுவும் உண்மையாக இருக்குமோ ..))
////’ஏன் டீச்சர், கீழே இருந்து எப்பவுமே ஆன் செய்யக் கூடாதா’ இப்படி ஒரு கேள்வி வந்ததும், வகுப்பறையில் உள்ள இருபத்தியெட்டு மாணவர்களும் கொல்...கல...கல...வெனச் சிரித்தார்கள். /// பள்ளி வாழ்க்கையில்ல இதெல்லாம் சகயமப்பா ஹிஹி
///அயன் படத்தில் வந்த ‘விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய்....
பாடலைக் காப்பி பண்ணி ஒரு கவிதை எழுதிப் போட்டு, இறுதி வரை, அது காப்பி இல்லை, நீ சொந்தமா எழுதின கவிதை என்று என் கூட வாதிட்டியே! இது தான் திறமை. நீ தான் கவிஞர் ஜங்குசன். இனிமேல் என் கிளாஸில், ஒரு இருபது நிமிடத்தை ஜங்குசனின் கவித் திறமைக்காக ஒதுக்கப் போகிறேன். சோ...நீங்க வீட்டிலை இருந்து நிறையக் கவிதைகளை யோசித்துக் கொண்டு வாங்கோ எனச் சொல்லி விட்டு வகுப்பறைய விட்டு நகர்ந்தா டீச்சர்.///ஹிஹி ,புரியுது புரியுது..)
அடுத்தவரின் மூளையை அடகு எடுக்கும்
சட்டாம்பிள்ளைகளுக்கு சாட்டையடி.
/ஆபாசம் என்றால் என்னவென்று சரியான அர்த்தம் தெரியாதோர் மாத்திரம் படிக்கக் கூடாத பதிவு தான் இது.// அடுத்தவர் பதிவைத் திருடுவதே ஆபாசம்-னு சொல்றீங்களா நிரூ?
//முதலில் பவர் சுவிச்சை ஆன் செய்து யூபிஎஸ்ஸினை(UPS) ஆன் செய்து மேலே இருக்கிற மானிட்டரின் திரை விலக்கி, அப்புறமாத் தான் கீழே உள்ள CPU வினை ஆன் செய்யனும்.//
கம்ப்யூட்டர் க்ளாஸில் பயாலஜி பாடம் எடுப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
//'தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்த பின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்’ - //
சூப்பர் மாப்ள!
கலக்கலான மொக்கை... நன்றி
http://chithiran-vel.blogspot.com/
ஆபாசம் ஒண்ணும் இல்லையே...
பதிவராவதற்குத்தானே பொய் சொன்னான் அவன்...பொய்மையும் வாய்மையிடத்து...!
'தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்த பின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்’
ஹா ஹா ஹா சூப்பரு.... ஊருல பாதி கவிஞர்கள் இப்படித்தான்.
நிரூ...!
மீண்டுமொரு சாடையடிப்பதிவு.
////‘உன் பார்வை என்னும் சுனாமி வைரஸ்ஸை எதிர்க்க
உலகில் இதுவரை எந்தவொரு அன்ரி வைரஸ்சுகளும் இல்லை''////
இது ரொம்பவும் நல்லாயிருக்கு!
அதுசரி, எங்க பாஸ் 'டங்குனியா' போன்ற விநோதமாக பெயர்களைப் பிடிக்கிறீர்கள்? ஹிஹிஹி.
வாழைப்பழத்தில் ஊசியாய் வார்த்தைகளில் தண்டனை .
அருமை நண்பரே
@செங்கோவி
/ஆபாசம் என்றால் என்னவென்று சரியான அர்த்தம் தெரியாதோர் மாத்திரம் படிக்கக் கூடாத பதிவு தான் இது.// அடுத்தவர் பதிவைத் திருடுவதே ஆபாசம்-னு சொல்றீங்களா நிரூ?//
மச்சி, அடுத்தவர் பதிவினைத் திருடி எழுதி விட்டு, ஆபாசம் என்றால் ஒரு புது வரைவில்லக்கணம் கொடுப்பார்களே, அவர்களுக்கான பதிவு தான் இது மச்சி.
கம்பியூட்டர் இயங்க மிக இந்த மவுசும் மவுசாக இருப்பதால் அப்படி ஓர் பெயர் வந்தது’’
"விளக்கம் அருமை "
கடைசி வரி சூப்பர் :-) தன்நெஞ்சே தன்னைச் சுடும்’
சகோ! உங்களைக் கொஞ்சம் கலாய்க்கணும் போலிருக்குது. கோவிச்சுக்காதீங்க! :-))))
முகத்தை எப்படி சுழிக்கிறதாம்? சுளிக்கத் தான் முடியும்?
//ஆபாசம் என்றால் என்னவென்று சரியான அர்த்தம் தெரியாதோர் மாத்திரம் படிக்கக் கூடாத பதிவு தான் இது.//
அப்போ நான் என்ன செய்யட்டும்? போயிட்டு அப்பாலிக்கா வர்றேன். :-)))
ஆனா, அந்தக் கவிதை சினிமாப் பாட்டுன்னே எனக்குத் தெரியாது. நான் ரொம்ப ரசிச்சு வாசிச்சேன்.
செங்கோவி அண்ணனுக்கு கொடுத்த விளக்கம் செம
எப்பவும் எதையோ கிண்டிக் கிளறிக் கொண்டிருங்கோ !
நீங்கள் சொல்லும் வரை
எனக்க அது அயன் படப் பாடல்
என்று தெரியவே இல்லை சகோ
அருமையான பதிவு
பாஸ் உங்கள் தலைப்புக்கேத்த செய்தி உள்ளே மறைந்துள்ளது.மற்றது பதிவராக அந்த மாணவன் வருவான் என்று ஆசிரியர் கணித்த விதம் சூப்பர்.
காமெடி கலந்து காப்பியடிப்பவர்களின் கழுத்தை நெரிக்கும் பதிவு ........செம டெர்ரர் .....
:-)
ரசித்தேன்
#ச்...சீ...This is not good, இது நல்லாயில்லையே.#
நல்லாயிருக்கு நிரு.
http://www.pc-park.blogspot.com/
சவுக்கடி சவுக்கடி கோப்பி பேஸ்ட் பதிவர்களுக்கு சவுக்கடி
//கம் என்றால் வா..என்றும் யூட்டர் என்றால், ஸ்கூட்டருக்கு நிகரான வேகத்தினையும் இக் கம்பியூட்டர் தருவதால் தான் இப்படிப் பெயர் வந்திச்சு’//
பாஸ் நீங்க ஒரு வில்லேஜ் விஞ்ஞானி பாஸ்!!
//மிரட்டினா டங்குனியா./
என்ன பாஸ் டங்கு வயர் அறுந்திடிச்சா அவங்களுக்கு?
//உன் பார்வை என்னும் சுனாமி வைரஸ்ஸை எதிர்க்க
உலகில் இதுவரை எந்தவொரு அன்ரி வைரஸ்சுகளும் இல்லை''//
நிரூபன் "அன்டி' ஹீரோவாம்!!
//என் முன்னே வந்தாய் விழி மூடி யோசிக்கையில்
சந்தோசம் தந்தாய் தனியாகப் பேசுகையில்
மழைக்காலம் இது அல்லவா
மழைக் கிளியும் நீயல்லவா
நான் என்னை உன் விழி வழியே கண்டேனே’//
ஹிஹி கலக்கல் மாணவன்...ராக்ஸ்!!
//. வகுப்பறையில் உள்ள ஏனைய மாணவர்கள் ஜங்குசனை வைத்த கண் வாங்காது பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
/
எது...அந்த வடிவேலை சிறைக்குள் ஒரு மொட்டையன் பாப்பானே குறு குருன்னு அப்பிடியா பாஸ்?
திருக்குறள் மட்டுமே போதும் சாட்டைக்கு!
முத்தாய்ப்பாக திருக்குறள் மேற்கோள் அருமை!
உங்க பதிவு எவர்களுக்கோ சுரீர் என்று உறைக்கவேண்டும் என்ற வகையில் எழுதப்பட்டிருக்கிறது என்று மட்டும் உணர்கிறேன்...
அதுக்கு மேல எனக்கு விவரம் பத்தாதுங்க :)
ஆனாலும் அந்த காப்பி பேஸ்ட் பாடல் வரியமைப்பு நிஜமாகவே நல்லாருக்கு!
என்ன பாஸ் காம்பியூட்டர் பற்றி நமக்கு சொல்லித்தருவாயோ என்று ஓடிவந்தால் இப்படி காப்பி போஸ்ட் சவுக்கடி தேவையா.
ஆழைவிடு சாமி ஓடிப்போறன் யாழ்தேவி காத்திருக்கு இரவு பயணத்திற்கு!
ஆசிரியர் பேரு நச்சுன்னு இருக்கு மாப்ளே
விடாமா அடிக்கிறீங்க பாஸ்
ஹி ஹி
இது அவங்களுக்கு தேவைதான்
இனியாவது சொந்தமா யோசிக்கட்டும் பாஸ்
@சேட்டைக்காரன்
சகோ! உங்களைக் கொஞ்சம் கலாய்க்கணும் போலிருக்குது. கோவிச்சுக்காதீங்க! :-))))
முகத்தை எப்படி சுழிக்கிறதாம்? சுளிக்கத் தான் முடியும்?//
ஹி....ஹி...நான் கோவிச்சுக்க மாட்டேன் சகோ,
ஆமா தலைப்பில் எழுத்துப் பிழை விட்டு விட்டேன், தங்களின் அன்பிற்கு நன்றி, இப்போதே திருத்துகிறேன்.
அனைவருக்கும் ஓர் அறிவித்தல்!
இப் பதிவின் தலைப்பில் சுளிக்கும் என வரவேண்டிய இடத்தில் சுழிக்கும் என எழுதியிருந்தேன்.தற்போது திருத்தி விட்டேன், தவறினைச் சகோதரன் சேட்டைக்காரன் அவர்கள் சுட்டிக்காட்டியிருந்தார். அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
Nice.,
Mobilil comment poduvathaal template comment thaan. sorry.
போட்டுத்தாக்கிட்டீங்க..........
நீங்க அன்குசனா.....? இல்லை ஜங்குசனா.....?
தெரியலையப்பா.........ன்னு சொல்லக்கூடாது
//'ஜங்குசன், நீங்கள் இந்தக் கவிதையினை எங்கிருந்தாச்சும் காப்பி பண்ணியிருக்கிறீங்களா?//
சரிதான் நியாயமான சந்தேகமே!கலக்கல் சகோ.
புதிய புதிய பெயர்கள் பாஸ் எப்பிடி உங்களால மட்டும் . நல்ல இருக்கு கொஞ்சம் டவுட் இருக்கு .
Post a Comment