வணக்கம் உறவுகளே, இன்று எல்லோரும் சைக்கிள் ஓடுவோமா?
இன்றைய நவீன உலகில், கார், மோட்டார் சைக்கிள் என பல ஐயிட்டங்கள் வந்தாலும், நம்ம ஊர் சைக்கிளுக்கு ஈடாக எதுவும் வராதில்ல...(அவ்............)
இன்றைய நவீன உலகில், கார், மோட்டார் சைக்கிள் என பல ஐயிட்டங்கள் வந்தாலும், நம்ம ஊர் சைக்கிளுக்கு ஈடாக எதுவும் வராதில்ல...(அவ்............)
சைக்கிள்களில் நம்ம ஊரில் பேமஸ் றல்லி (Ralli), லுமாலா (Lumala), இந்த இரண்டும் தான், இதற்கு அடுத்த படியாக ஹீரோ(Hero) சைக்கிள் இருந்திச்சு. றல்லி சைக்கிளை வயசான ஆளுங்க தான் அதிகமாக விரும்பி ஓடுவாங்க,(90'S_)
நம்மளை மாதிரி இளம் பசங்களுக்கு லுமாலா சைக்கிளில் ஏறி காலை மேலாலை தூக்கிப் போட்டு, சவாரி செய்வது என்றால் காணும். சொல்லவே தேவையில்லை.
நம்மளை மாதிரி இளம் பசங்களுக்கு லுமாலா சைக்கிளில் ஏறி காலை மேலாலை தூக்கிப் போட்டு, சவாரி செய்வது என்றால் காணும். சொல்லவே தேவையில்லை.
பெண்களுக்கு உள்ள சைக்கிளை லேடிஸ் சைக்கிள் என்று அழைப்போம்.(அடப் பாவி..இதெல்லாம் சொல்லியா தெரிய வேண்டும்?)
கிரவல்(செம் மண்) றோட்டில் சைக்கிளில் சவாரி செய்த காலங்களை மறக்க முடியாது. அதுவும் ரியூசன் விடும் நேரம் பார்த்து சைக்கிளில் குச் சொழுங்கை வழியே(Little Street) காத்திருந்து, நம்ம ஊர் டியூசன் பிகருங்க வரும் வரைக்கும் வெயிட் பண்ணி, அவர்களின் பின்னால் சேஸிங் விட்டு(Ceasing) கலாய்த்து, காமெடி பண்ணி, நக்கல் அடித்து, நாம் வாழ்ந்த காலங்களை இலகுவில், எம் நினைவுகளை விட்டு அழிக்க முடியாது.
நம்ம ஊர் காதல்களில் அதிகமானவை நிறை வேறுவதற்கும், பெண்களைப் பின்னால் கலைத்துச் சென்று லெட்டர் கொடுத்து, காதலை வாழ வைப்பதற்கும் இந்தச் சைக்கிள்கள் தான் காதல் தூதுவர்களாகவும் இருந்திருக்கின்றன. எப்பூடி என்று கேட்கிறீங்களா?
’டீயூசனிலை என்னுடைய சைக்கிள் சீட்டுக்குள்ளே லெட்டர் வைச்சிருக்கிறன் என்று எனக்கு பிடித்த நாயகியிடம் சொல்லிட்டாப் போச்சு,
அவா உடனே ஓடிப் போய்,’சேர் தண்ணி குடிச்சிட்டு வாறன்’ என்று டியூசன் கிணற்றடிக்குச் சென்று, அங்கே பார்க்கிங்கில் இருக்கும் சைக்கிள் சீட்டினுள் இருக்கிற லெட்டரையும் எடுத்துக் கொண்டு, தண்ணியும் குடிச்சிட்டு வருவா..
{எப்பூடி நம்ம திறமை..;-)))}
பெண்களின் பின்னால் சைக்கிளில் சென்று. பாதுகாப்பு வழங்கி அவர்களை நாங்கள் பத்திரமாக வீடு வரைக்கும் அழைத்துச் செல்லுவதற்கும்,
குமர்ப் பெண்கள்(திருமணமாகத இளம் பெண்கள்) உள்ள வீடுகளில் அவர்கள் யாராவது குளிக்கிறார்களா என நோட்டம் பார்த்து, வீதியால் ரெண்டு மூன்று ரவுண்ட் அடித்து அவர்களை ரசிப்பதற்கும் சைக்கிள் தான் நம்ம தோஸ்த்தாக இருந்திருக்கின்றது.
குமர்ப் பெண்கள்(திருமணமாகத இளம் பெண்கள்) உள்ள வீடுகளில் அவர்கள் யாராவது குளிக்கிறார்களா என நோட்டம் பார்த்து, வீதியால் ரெண்டு மூன்று ரவுண்ட் அடித்து அவர்களை ரசிப்பதற்கும் சைக்கிள் தான் நம்ம தோஸ்த்தாக இருந்திருக்கின்றது.
இதனை விளக்கத் தான் நம்ம ஊர் நாடகம் ஒன்றில்
‘சைக்கிள் சீட்டு உயர...மதில் உயரும்’ என்று நக்கலாக ஔவையாரின் நீர் உயர பாடலினை மாற்றிப் பாடிக் காமெடி பண்ணியிருக்கிறார்கள்.
இந்தச் சைக்கிள்கள் சில நேரம் சைத்தான்களாகவும் மாறி விடும், அதுவும் பெண்களை பின் தொடர்ந்து கலைத்துச் செல்லும் முக்கியமான தருணங்களில் கிரவல் வீதியில் சைக்கிள் சறுக்கி விட்டால் போதும். ஒரு கரணம் அடிச்சு, முகங் குப்புற விழுந்து அவமானப் பட வேண்டிய நிலமை உருவாகி விடும்.
குப்புற விழுந்த பின்னர், எங்கையடா நம்ம ஆளுங்க என்று பார்த்தால்.அவளவை.. ஒரு ஐஞ்சடி தள்ளி, கல கல என எங்களை நக்கல் அடித்து, கலாய்த்துப் பேசிய வண்ணம் போய்க் கொண்டிருப்பாளுங்க.
பிறகு சைக்கிளின் நிலமையை எப்பூடிச் சொல்வது, ஹாண்டில்(cycle handlebar) திரும்பி இருக்கும், சைக்கிளை நிமிர்த்தினால் அது ஹாண்டில் நேராக இருக்காமல் வேறு எங்கோ பார்த்துக் கொண்டிருக்கும்.
பிறகென்ன, ரோட்டில் உதவிக்கு ஆளையா கூப்பிட முடியும். தன் கையே தனக்கு உதவி என, கவட்டுக்கை(இரண்டு கால்களுக்கும் நடுவில்) சைக்கிளின் முன் சில்லை வைத்து, சைக்கிளின் இரண்டு கைப் பிடிகளையும்(Bicycle handlebar) கையால் பிடித்து, சீட்டுக்கு நேராகவும், முன் அச்சிற்கு சமாந்தரமாகவும் ஹாண்டில் வரும் படி திருப்பி அட்ஜஸ்ற் (Adjust) பண்ணி, நேராக வந்ததன் பின்னர் தான் சைக்கிள் ஓடத் தொடங்குவோம், இதனை ’வக்கிள்’ எடுப்பது(Buckle) என்று எங்கள் ஊரில் சொல்லுவோம். இது ஒரு வகை வக்கிள் எடுக்கும் முறை.
{இப் பதிவில் உள்ள படங்களில் வக்கிள் எடுக்கும் படங்கள், சகோதரன் மதிசுதாவின் கை வண்ணத்தில் எடுக்கப்பட்ட படங்கள்.}
புதிதாக சைக்கிள் வாங்கினாலோ, அல்லது சைக்கிளை சர்வீஸ் செய்து, கழுவிப் பூட்டினாலோ சைக்கிள் றிம்மினையும் வக்கிள் எடுக்க வேண்டும்,
இல்லா விட்டால், ரோட்டில் டண் டணக்கா விளையாட்டு, விளையாட வேண்டி நேரலாம்.
(Cycle Wheel Buckle). இது இரண்டாவது வக்கிள். இது எப்புடீன்னா, சைக்கிள் றிம்மில், சைக்கிள் கம்பிகளைப் பொருத்திய பின்னர், பூச் சாவியால் சுத்திச் சுத்தி, இறுக்க வேண்டும், இதுக்கு அப்புறம், றிம்மினைச் சுத்திச் சுத்தி, ஆட்டம், அசைவு ஏதும் இல்லாமல், ஒரே நேருக்கு றிம் அசையும் வண்ணம் வக்கிள் எடுப்பது தான் இரண்டாவது முறை.
இது தான் நம்ம ஊரின் வக்கிள் எடுப்பு மேட்டர்.
டிஸ்கி: இன்னொரு வக்கிள் எடுக்கும் முறை இருக்கு...
ஆனால் சொல்ல வெட்கமாவும் இருக்கே,
நம்ம ஊரில் புதிதா கலியாணமான பொண்ணுங்க, கொஞ்ச நாளைக்கு ஒரு மாதிரியாத் தான் நடப்பாங்க,(சில நேரம் காலை அகட்டி வைச்சு நடப்பாங்க) அவங்களை பார்த்து நம்ம பசங்க எப்பூடிச் சொல்லுவாங்க தெரியுமா?
ஆளுக்கு நல்லாத் தான் வக்கிள் எடுக்கிறார் போல,
பார்த்தீங்களா,............. ஆடுற ஆட்டத்தை..
இதுக்கு சத்தியமா எனக்கு அர்த்தம் தெரியாது எனும் உண்மையினையும், நான் ஒரு பச்சப் புள்ளை என்பதையும் இத்தால் சொல்லிக் கொள்கிறேன்.
அட நம்புங்க மக்கள்ஸ்!
டிஸ்கி: மேலே உள்ள படங்களில் வக்கிள் எடுக்கும் படங்கள், சகோதரன் மதிசுதாவின் கை வண்ணத்தில் எடுக்கப்பட்ட படங்கள்.
|
105 Comments:
vada?
yes vada for me
மலரும் நினைவுகளா?
சைக்கிள் பல நேரங்களில் ஆபத்பாந்தவனா இருந்திருக்கு எங்கள் வீட்டில். 7, 8 மைல்கள் ஒரு நாளில் ஓடிய அனுபவம் இருக்கு. அமெரிக்காவில் சைக்கிள் வாங்க வேண்டும் என்ற என் ஆசை ஏனோ இன்று வரை நிறைவேறவேயில்லை.
cycle
chain
Lumala
HERO CYCLE
RALLY CYCLE
HI NIRU..... HOW ARE YOU?
10 th vada for me
just wait.... i read and come....
//நம்ம ஊரில் புதிதா கலியாணமான பொண்ணுங்க, கொஞ்ச நாளைக்கு ஒரு மாதிரியாத் தான் நடப்பாங்க,(சில நேரம் காலை அகட்டி வைச்சு நடப்பாங்க) அவங்களை பார்த்து நம்ம பசங்க எப்பூடிச் சொல்லுவாங்க தெரியுமா?
ஆளுக்கு நல்லாத் தான் வக்கிள் எடுக்கிறார் போல,
பார்த்தீங்களா,............. ஆடுற ஆட்டத்தை..//
ஏன் பாஸ் அப்பிடி சொல்லுறாங்க?
//இதுக்கு சத்தியமா எனக்கு அர்த்தம் தெரியாது எனும் உண்மையினையும், நான் ஒரு பச்சப் புள்ளை என்பதையும் இத்தால் சொல்லிக் கொள்கிறேன்.
அட நம்புங்க மக்கள்ஸ்!//
இத நாங்க நம்பனுமா?
//வாங்கய்யா, வக்கிள் எடுப்போம்!//
தலையங்கமே வில்லங்கமா இருக்கே
HAAAAAAA.....SUPER POST NIRU..... I RECALLED MY CHILDCOOD BY READING THIS POST.
நீ நல்ல புள்ள தான் மாப்ள நான் நம்பிட்டேன்.......!
நல்லாத்தான் வக்கீல் எடுக்கிறாங்கய்யா....
french cycles have no buckle
african cycles have too buckles.no one can bend it.
it is very easy to bend buckle for chinees and Thailand cycles.....
i speak only about cycles.nobody need to confuse...
haaaa......haaaaa.....
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
vada?//
சந்தேகமே இல்லை...
ஆனால் பூஜைக்குரிய தட்சணை போட்டு, உண்டியலை நிரப்பினால் தான் பிரசாதம் வழங்கப்படும்,
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
yes vada for me//
அடப் பாவிங்களா. என்ன ஒரு வில்லத் தனம்.
@vanathy
மலரும் நினைவுகளா?
சைக்கிள் பல நேரங்களில் ஆபத்பாந்தவனா இருந்திருக்கு எங்கள் வீட்டில். 7, 8 மைல்கள் ஒரு நாளில் ஓடிய அனுபவம் இருக்கு. அமெரிக்காவில் சைக்கிள் வாங்க வேண்டும் என்ற என் ஆசை ஏனோ இன்று வரை நிறைவேறவேயில்லை.//
நாங்கள் ஒரு சைக்கிள் வாங்கி அனுப்பி விடவா சகோ. ஆமாம் சகோ, நாங்கள் வன்னி, யாழ்ப்பாணம் என்று பல மைல் தூரம் இந்தச் சைக்கிள்களில் தான் சென்றிருக்கிறோம்.
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
cycle//
தீனா குறூப் மாதிரி ஒன்றைத் தொடங்கி அடிபடப் போறீங்களோ.
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
chain//
ஏன் நாய் கட்ட வேணும் என்று தேடுறீங்களோ.
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
Lumala//
லுமாலா,
இது சைக்கிளோடை பெயரா, இல்லே
பிரெஞ்ச் பிகருங்களோடை பெயரா.
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
HERO CYCLE//
என்ன இது...ஹீரோவின் சைக்கிளா.
அப்போ ஹீரோயின் சைக்கிள் இல்லையா/
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
RALLY CYCLE//
சைக்கிளில் றிலே ஓடப் போறீங்களோ...
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
HI NIRU..... HOW ARE YOU?//
வாஃட் யூ ஸ்பீக்கிங், பிரதர்ர்...ர்ர்ர்ர்ர்ர்ர்
குட்.. ஹவ் எபக்ட் யூ.
என் தந்தை முன்னர் சைக்கிள் கடைதான் வைத்து இருந்தார். நாங்கள் பெண்ட் எடுக்கிறது என்போம்(சைக்கிள சொன்னேன்). வருமானம் இல்லாத காரணத்தால். இப்போது வேறு ஒரு இடத்தில் வேலை செய்கிறார். நல்ல பதிவு....
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
10 th vada for me//
அடிங் கொய்யாலா, தாங்கள் போட்டிருப்பது
இப்போது பதினைந்தாவது பின்னூட்டம்.
அப்...........
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
just wait.... i read and come....//
அப்போ இது வரைக்கும் பதிவைப் படிக்கவே இல்லையா.
@Mathuran
//நம்ம ஊரில் புதிதா கலியாணமான பொண்ணுங்க, கொஞ்ச நாளைக்கு ஒரு மாதிரியாத் தான் நடப்பாங்க,(சில நேரம் காலை அகட்டி வைச்சு நடப்பாங்க) அவங்களை பார்த்து நம்ம பசங்க எப்பூடிச் சொல்லுவாங்க தெரியுமா?
ஆளுக்கு நல்லாத் தான் வக்கிள் எடுக்கிறார் போல,
பார்த்தீங்களா,............. ஆடுற ஆட்டத்தை..//
ஏன் பாஸ் அப்பிடி சொல்லுறாங்க?//
என்னய்யா, என்ன நடக்கிறது இங்க..
எனக்கே காரணம் தெரியாமல் தானே,
உங்க கிட்ட கேட்கிறன்.
நீங்க அதனை என் கிட்ட கேட்கிறீங்களே.
@Mathuran
இத நாங்க நம்பனுமா?//
வேறை என்ன வழி! நம்பித் தானே ஆகனும்.
@Mathuran
//வாங்கய்யா, வக்கிள் எடுப்போம்!//
தலையங்கமே வில்லங்கமா இருக்கே//
என்னாதிது,
நல்லாத் தானே போய்க்கிட்டிருக்குது.அவ்....
நம்ம ஊரு சைக்கிள் தெரியாதா.
பிச்சுப் புடுவேன், பிச்சு.
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
HAAAAAAA.....SUPER POST NIRU..... I RECALLED MY CHILDCOOD BY READING THIS POST.//
முன் பாதியை படிச்சு, உங்களை மாதிரி ஆளுங்க சின்னப் புள்ளை ஆகிடுவாங்க என்பதால்,
அவங்களை மீண்டும் பெரிய ஆள் ஆக மாற்றத் தானே, பின் பாதியில் ஆப்பு வைச்சிருக்கிறம்
@விக்கி உலகம்
நீ நல்ல புள்ள தான் மாப்ள நான் நம்பிட்டேன்.......!//
இது தான் நண்பனுக்கு அழகு.
ஹி...ஹி..
@MANO நாஞ்சில் மனோ
நல்லாத்தான் வக்கீல் எடுக்கிறாங்கய்யா....//
எங்கே ஐயா, எங்கே?
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
french cycles have no buckle//
ஏனய்யா, ஏனு?
நல்லாப் பாவிச்ச பழைய சைக்கிளா, பிரெஞ்சில் இருக்கு.
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
african cycles have too buckles.no one can bend it.//
ஆபிரிக்கன் சைக்கிள், ஹாண்டில் கொஞ்சம் பெரிசா இருக்கும், அதான் காரணம் போல இருக்கே சகோ.
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
it is very easy to bend buckle for chinees and Thailand cycles.....//
அவங்க ஊர் சைக்கிள் மெல்லிதாய் இருக்கிறதால், ஓடக் கஸ்டம் என்று சொல்லுறாங்களே, உண்மையா,
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
i speak only about cycles.nobody need to confuse...
haaaa......haaaaa.....//
அதானே பார்த்தேன்..
i tried to bend buckle for sinhala cycle too
@பலே பிரபு
என் தந்தை முன்னர் சைக்கிள் கடைதான் வைத்து இருந்தார். நாங்கள் பெண்ட் எடுக்கிறது என்போம்(சைக்கிள சொன்னேன்). வருமானம் இல்லாத காரணத்தால். இப்போது வேறு ஒரு இடத்தில் வேலை செய்கிறார். நல்ல பதிவு....//
ஆமாம் சகோ, சைக்கிள் கடையில் நிறைய வருமானம் கிடைக்காது, அப்படிக் கிடைக்க வேண்டும் என்றால்,
நாம ஊசியும் கையுமாக பார்க்கிங் எல்லாம் அலைய வேண்டுன்ம்;-))
என்னதூ...பெண்ட் எடுக்கிறதா..நமக்கா, வேணாமுங்க சகோ.
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
i tried to bend buckle for sinhala cycle too//
அட, இது வேறையா, இவ்ளோ பேசுறீங்களே, உங்களாலை ஒரு சைக்கிளை எவ்வளவு நேரம் Sorry, தூரம் ஓட முடியும்?
we should be patient while bending buckles.... some persons bending buckles quickly..... as soon as they got tired.
if i say openly...after a lots of customer will apply for bend buckle.
after that all tools will be hot......
எத்தனை புதிய சாதனம் வந்தாலும் அன்நாளில் சைக்கிளில் சுற்றிய சந்தோசம் வருமா?அதுவும் ராலே சயிக்கள் பார் உடையாது தெரியுமோ!
வணக்கம் நிரூபன்
தீவுத் தமிழைக் கற்றுக்கொள்கிறேன்
எங்களுடன் கிளாழிக்கடல் தாண்டியது உடன்பிறவா இந்த சைக்கிளுக்குத்தானே முதல் இடம்!
இந்த சைக்கிளில் 6பேர் ஏறி ஒருத்தன் உழக்க மற்றவன் பெடல் போட களவாக கள்ளுத்தவறனைப் பக்கம் போன சுகம் எத்தனை பேருக்கு வரும்!
மதில் ஏறிபோக சமயத்தில் உயரமாக்குவது சைக்கிள் சீட்டைத்தானே அது எல்லாம் ஒருகாலம் ஹீரோ ஹொண்டா வெறு தூசு!
All in All azhaguraja came and read the wheel bending post of Niroopan.
ஹா..ஹா..தூள் சகோ..நல்லா எடுக்காங்கய்யா வக்கிளை!..நாங்களும் பெண்டு எடுக்குறதுன்னு தான் சொல்வோம், சைக்கிளைத் தான்!
சைக்கிள் பற்றிய இந்த விஷயங்களை பதிவெழுத வேண்டும் என்ற எண்ணத்திற்கே பாராட்ட வேண்டும்..
இது ஒரு ஆல் இன் ஆல் அழகு ராஜா பதிவு. என்னவென்று தெரியவில்லை என்றால் வைதேகி காத்திருந்தாள் படம் பார்க்கவும்..
/////‘சைக்கிள் சீட்டு உயர...மதில் உயரும்’ என்று நக்கலாக ஔவையாரின் நீர் உயர பாடலினை மாற்றிப் பாடிக் காமெடி பண்ணியிருக்கிறார்கள்.////
அந்த கூடைக்குள்ள இலக்க வச்ச கடிதம் போடுவது ஒரு தனிக் கலையப்பா ?
பக்கிள் எடுப்பதே தனிக்கலையப்பா... எந்தப் பக்கம் றிம் முட்டுதோ அதற்கு எதிர்ப்பக்கம் உள்ள கம்பியில் ஒன்று விட்ட கம்பியை இறுக்கணும்...
யோவ் படத்தின்ர விறுத்தத்தில பேரைப் போட்டு மானத்தை வாங்குறீரா ?
இதெல்லாம் பிரதியுபகாரம்...
நல்லா தான் வக்கில் எடுகிரிங்க நிருபன்
உங்களை இலத்தின் காத்திரமான பதிவர் லிஸ்டில் மைந்தன் சேர்த்துள்ளார்
நல்லா தான் வக்கில் எடுகிரிங்க நிருபன்
உங்களை இலத்தின் காத்திரமான பதிவர் லிஸ்டில் மைந்தன் சேர்த்துள்ளார்
உங்களைஈழத்தின் காத்திரமான பதிவர் லிஸ்டில் மைந்தன் சேர்த்துள்ளார்
இந்திய தமிழ் கலப்பு அதிகம் தெரிகிறதே
அண்ணா பழைய நினைவுகளை மீட்டடுதந்த பதிவு இது...
எனக்கும் கிரவல் ரோட்டில் விழுந்த அனுபவங்கள் எல்லாம் உண்டு..........
தங்களின் தமிழ் ரொம்ப பிடிச்சிருக்கு எனக்கு..
மதிசுதா போட்டோக்கள் சூப்பர். வாழ்த்துகள்! காலச்சக்கரத்தை பின்புறம் சுழல விட்டதற்கு நன்றி!
>>நம்ம ஊரில் புதிதா கலியாணமான பொண்ணுங்க, கொஞ்ச நாளைக்கு ஒரு மாதிரியாத் தான் நடப்பாங்க,
இதை எல்லாம் நல்லா நோட் பண்ணூங்கய்யா.. ஹா ஹா
சைக்கிள் பத்தின நினைவுகள் கண்டிப்பா மகிழ்ச்சியா தான் இருக்கும் .. சின்ன வயசுல பழகும்போது கீழ விழுறது அப்புறம் கைவிட்டு ஓட்டுறது இது எல்லாமே சுவையான அனுபவங்கள் :-))
புதுசா பேர் வாங்கினதுக்கு அதான் .com பண்ணினதுக்கு வாழ்த்துகள் :-))
மலரும் நினைவுகளா?
அனுபவ பகிர்வு ரொம்ப நல்லாருக்கு
உங்கள் பிரச்சனைகள் தீர்ந்து வெற்றி பெற்றன்மைக்கு வாழ்த்துக்கள்
♔ம.தி.சுதா♔ said...
பக்கிள் எடுப்பதே தனிக்கலையப்பா... எந்தப் பக்கம் றிம் முட்டுதோ அதற்கு எதிர்ப்பக்கம் உள்ள கம்பியில் ஒன்று விட்ட கம்பியை இறுக்கணும்.
பாருங்கையா... நம்ம மதிசுதாவை.. ம்ம்ம்..நன்றா pறைய பக்கிள் எடுத்திருக்கார் போல!
நாம நேரில் பேசும்போது இதை நினைவு படுத்துங்க
மிச்சத்தை நேரில் சொல்லுறன்.
தமிழ் மனம் ஓட்டு போட்டுட்டோமில்ல..
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
we should be patient while bending buckles.... some persons bending buckles quickly..... as soon as they got tired.//
பதறாத காரியம் சிதறாது என்பது ஆன்றோர் வாக்கு..ஹி..ஹி..
அவசரப் பட்டு சைக்கிள் ஓடினால் Control பண்ண முடியாமல் அக்சிடன் ஆகவும் நேரலாம்.
ஹி...ஹி...
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
f i say openly...after a lots of customer will apply for bend buckle.
after that all tools will be hot.....//
ரேடியேற்றருக்கு தண்ணி விட்டாப் பின்னர் சூடு தணிஞ்சு குளிர் தானே வரும்.
@Nesan
எத்தனை புதிய சாதனம் வந்தாலும் அன்நாளில் சைக்கிளில் சுற்றிய சந்தோசம் வருமா?அதுவும் ராலே சயிக்கள் பார் உடையாது தெரியுமோ!//
ஆஹா...ஆஹா...அனுபவம் பேசுதே!
@Nesan
எத்தனை புதிய சாதனம் வந்தாலும் அன்நாளில் சைக்கிளில் சுற்றிய சந்தோசம் வருமா?அதுவும் ராலே சயிக்கள் பார் உடையாது தெரியுமோ!//
ஆஹா...ஆஹா...அனுபவம் பேசுதே!
@இரா.எட்வின்
வணக்கம் நிரூபன்
தீவுத் தமிழைக் கற்றுக்கொள்கிறேன//
இங்கே எங்கே நான் தீவுத் தமிழ் கற்பிக்கிறேன்.
ஹி...ஹி..ஹி..
@Nesan
எங்களுடன் கிளாழிக்கடல் தாண்டியது உடன்பிறவா இந்த சைக்கிளுக்குத்தானே முதல் இடம்!//
அந்த நாளில் எங்கள் தோழனாகவும் சைக்கிள் இருந்ததை, யாராலும் மறக்க முடியாது சகோ,
இடுப்பளவு தண்ணீருக்குள் சைக்கிளை தலைக்கு மேல் தூக்கியபடி நடந்த நினைவுகளை இலகுவில் அழித்து விட முடியாது!
@Nesan
இந்த சைக்கிளில் 6பேர் ஏறி ஒருத்தன் உழக்க மற்றவன் பெடல் போட களவாக கள்ளுத்தவறனைப் பக்கம் போன சுகம் எத்தனை பேருக்கு வரும்!//
எனக்கு நிச்சயமாக அந்த வாய்ப்பு கிடைக்கேல்லை சகோ- காரணம் நான் கள்ளு குடிப்பதில்லை
ஹி...ஹி...
@Nesan
மதில் ஏறிபோக சமயத்தில் உயரமாக்குவது சைக்கிள் சீட்டைத்தானே அது எல்லாம் ஒருகாலம் ஹீரோ ஹொண்டா வெறு தூசு!//
மக்களே, அடுத்த வீட்டுப் பிகர் குளிக்கிறதை எட்டிப் பார்த்த, அனுபவசாலி சொல்லும் கதையைக் கேட்டீர்களா!
ஹி..ஹி...
@டக்கால்டி
All in All azhaguraja came and read the wheel bending post of Niroopan.//
ஆல் இன் ஆல் அழகுராஜா. அவரு நீங்களா!
@செங்கோவி
ஹா..ஹா..தூள் சகோ..நல்லா எடுக்காங்கய்யா வக்கிளை!..நாங்களும் பெண்டு எடுக்குறதுன்னு தான் சொல்வோம், சைக்கிளைத் தான்!//
இதிலை டபுள் மீனிங் இல்லையே சகோ.
@பாரத்... பாரதி...
சைக்கிள் பற்றிய இந்த விஷயங்களை பதிவெழுத வேண்டும் என்ற எண்ணத்திற்கே பாராட்ட வேண்டும்..//
நன்றிகள் சகோ.
@பாரத்... பாரதி...
இது ஒரு ஆல் இன் ஆல் அழகு ராஜா பதிவு. என்னவென்று தெரியவில்லை என்றால் வைதேகி காத்திருந்தாள் படம் பார்க்கவும்..//
வைதேகி காத்திருந்தாள் படம் பல வருடங்களுக்கு முன்னாடி பார்த்தேன் சகோ, ஆனால் நீங்கள் சொல்லும் ஆல் இன் ஆல் விடயம் நினைவிற்கு வரவில்லை, யாராவது ஞாபகப்படுத்த முடியுமா.
@♔ம.தி.சுதா♔
/////‘சைக்கிள் சீட்டு உயர...மதில் உயரும்’ என்று நக்கலாக ஔவையாரின் நீர் உயர பாடலினை மாற்றிப் பாடிக் காமெடி பண்ணியிருக்கிறார்கள்.////
அந்த கூடைக்குள்ள இலக்க வச்ச கடிதம் போடுவது ஒரு தனிக் கலையப்பா ?//
கூடைக்குள் கடிதம் போட்டாப் பின்னாடி, அந்தக் கடிதத்தை அவள் எடுப்பாளா, இல்லே வேறு யாராவது கண்டு விடுவார்களா என்று நெஞ்சு பக் பக் என்று அடிக்குமே,
அந்த அவஸ்தையிலும் ஒரு இன்பம் இருந்திருக்குமே சகோ!
@♔ம.தி.சுதா♔
பக்கிள் எடுப்பதே தனிக்கலையப்பா... எந்தப் பக்கம் றிம் முட்டுதோ அதற்கு எதிர்ப்பக்கம் உள்ள கம்பியில் ஒன்று விட்ட கம்பியை இறுக்கணும்...//
நிஜமாவா..
ஹா...ஹா....
@♔ம.தி.சுதா♔
யோவ் படத்தின்ர விறுத்தத்தில பேரைப் போட்டு மானத்தை வாங்குறீரா ?
இதெல்லாம் பிரதியுபகாரம்...//
இல்லைச் சகோ,
அடுத்ததாக வால் கட்டை பூட்டுவது எப்படி என்றும், காற்றடிப்பது எப்படி என்றும் யாராவது கேட்டு, படத்திற்கு அப்பிளை பண்ணுவாங்கள் எனும் ஒரு நம்பிக்கையிலும்,
நம்ம கூட்டாளியின் படப் பிடிப்பிற்கு ஒரு விளம்பரம் கொடுக்க வேண்டும் தானே, அது தான் ஒரு சின்ன விளம்பரமாகவும் இருக்கட்டுமே என்று தான், இந்த வேலை சகோ.
@யாதவன்
நல்லா தான் வக்கில் எடுகிரிங்க நிருபன்
உங்களை இலத்தின் காத்திரமான பதிவர் லிஸ்டில் மைந்தன் சேர்த்துள்ளார்//
சகோ, மைந்தனின் வலையில் ‘ஈழத்தின் காத்தில்லாத’ பதிவர்கள் என்று தான் லிஸ்ட் இருக்கு
ஹி...ஹி...
@யாதவன்
உங்களைஈழத்தின் காத்திரமான பதிவர் லிஸ்டில் மைந்தன் சேர்த்துள்ளார்
இந்திய தமிழ் கலப்பு அதிகம் தெரிகிறதே//
வலையில் அதிகமான வாசகர்களாக நம்ம உறவுகள் தான் இருக்கிறாங்க. எங்கள் தமிழில் எழுதும் போது, அவர்கள் புரிந்து கொள்வதில் சிரமங்களை எதிர் நோக்குகிறார்கள். அதனால் தான் எல்லாம் கலந்த ஒரு மிக்ஸிங் தமிழில் எழுதுகிறேன் சகோ.
@akulan
அண்ணா பழைய நினைவுகளை மீட்டடுதந்த பதிவு இது...
எனக்கும் கிரவல் ரோட்டில் விழுந்த அனுபவங்கள் எல்லாம் உண்டு.........//
அப்போ காயம் ஏதும் வரலையே, பின்னாலை வந்த பொண்ணுங்க பார்த்துச் சிரிக்கலையா சகோ.
@!* வேடந்தாங்கல் - கருன் *!
தங்களின் தமிழ் ரொம்ப பிடிச்சிருக்கு எனக்கு..//
நிஜமாகவா சகோ, நன்றிகள் சகோ.
@! சிவகுமார் !
மதிசுதா போட்டோக்கள் சூப்பர். வாழ்த்துகள்! காலச்சக்கரத்தை பின்புறம் சுழல விட்டதற்கு நன்றி!//
உங்களுக்கும் நன்றிகள் சகோ.
@இராஜராஜேஸ்வரி
மலரும் நினைவுகளா?//
ஆமாம், மலரும் நினைவுகளோ சேர்த்து, வக்கிள் எடுப்பது எப்படி என்று ஒரு ஆராய்ச்சியும் செய்திருக்கிறேன்.
நன்றிகள் சகோ.
@சி.பி.செந்தில்குமார்
>>நம்ம ஊரில் புதிதா கலியாணமான பொண்ணுங்க, கொஞ்ச நாளைக்கு ஒரு மாதிரியாத் தான் நடப்பாங்க,
இதை எல்லாம் நல்லா நோட் பண்ணூங்கய்யா.. ஹா ஹா//
நாம பார்க்கும் பார்வையில் வித்தியாசமா, ஏதாச்சும் தெரிஞ்சா தானே நோட் பண்ணுவோம், அதனால் தான் நோட் பண்ணினேன்.
@சி.பி.செந்தில்குமார்
>>நம்ம ஊரில் புதிதா கலியாணமான பொண்ணுங்க, கொஞ்ச நாளைக்கு ஒரு மாதிரியாத் தான் நடப்பாங்க,
இதை எல்லாம் நல்லா நோட் பண்ணூங்கய்யா.. ஹா ஹா//
நாம பார்க்கும் பார்வையில் வித்தியாசமா, ஏதாச்சும் தெரிஞ்சா தானே நோட் பண்ணுவோம், அதனால் தான் நோட் பண்ணினேன்.
@சி.பி.செந்தில்குமார்
>>நம்ம ஊரில் புதிதா கலியாணமான பொண்ணுங்க, கொஞ்ச நாளைக்கு ஒரு மாதிரியாத் தான் நடப்பாங்க,
இதை எல்லாம் நல்லா நோட் பண்ணூங்கய்யா.. ஹா ஹா//
நாம பார்க்கும் பார்வையில் வித்தியாசமா, ஏதாச்சும் தெரிஞ்சா தானே நோட் பண்ணுவோம், அதனால் தான் நோட் பண்ணினேன்.
@கோமாளி செல்வா
சைக்கிள் பத்தின நினைவுகள் கண்டிப்பா மகிழ்ச்சியா தான் இருக்கும் .. சின்ன வயசுல பழகும்போது கீழ விழுறது அப்புறம் கைவிட்டு ஓட்டுறது இது எல்லாமே சுவையான அனுபவங்கள் :-))
புதுசா பேர் வாங்கினதுக்கு அதான் .com பண்ணினதுக்கு வாழ்த்துகள் :-))
//
நன்றிகள் சகோ.
@மாலதி
மலரும் நினைவுகளா?//
ஆமாம் சகோ.
@ஆர்.கே.சதீஷ்குமார்
அனுபவ பகிர்வு ரொம்ப நல்லாருக்கு//
நன்றிகள் சகோ.
@ஆர்.கே.சதீஷ்குமார்
உங்கள் பிரச்சனைகள் தீர்ந்து வெற்றி பெற்றன்மைக்கு வாழ்த்துக்கள்//
இவை எல்லாவற்றிற்கும் நண்பர்களின் ஆசிர்வாதம் தான் காரணம் சகோ,
நன்றிகள் சகோ,
@Jana
♔ம.தி.சுதா♔ said...
பக்கிள் எடுப்பதே தனிக்கலையப்பா... எந்தப் பக்கம் றிம் முட்டுதோ அதற்கு எதிர்ப்பக்கம் உள்ள கம்பியில் ஒன்று விட்ட கம்பியை இறுக்கணும்.
பாருங்கையா... நம்ம மதிசுதாவை.. ம்ம்ம்..நன்றா pறைய பக்கிள் எடுத்திருக்கார் போல!
நாம நேரில் பேசும்போது இதை நினைவு படுத்துங்க
மிச்சத்தை நேரில் சொல்லுறன்.//
ஆஹா..ஏதோ ரகசிய மேட்டர் ஒன்றை வைச்சிருக்கிறீங்க போல இருக்கே..
ஹி..ஹி..
@FOOD
புதிய உலகம்(.com), புதுமை வரும். ஏற்றம் பெரும்.வாழ்த்துக்கள்!//
நன்றிகள் சகோ.
@!* வேடந்தாங்கல் - கருன் *!
தமிழ் மனம் ஓட்டு போட்டுட்டோமில்ல..//
நன்றிகள் சகோ.
Post a Comment