சின்ன வீடு வேணுமென்றார் சுப்பர்-வாழ்வு
சீரழிந்து போகுமென்றார் அப்பர்,
கன்னியரின் பின்னலைந்தார் மப்பில்
காம நோயை வாங்கி வந்தார் சைட் கப்பில்!
முன்னாடி யோசிக்கனும்!
கட்டிலது காத்திருக்கு கனகா-
காலெடுத்து வாவனடி மெதுவா
தொட்டிலது வேண்டுமோடி கனியே
தொழிலுக்கெங்கே போவேனடி இனிமே(ல்)!
டிஸ்கி: யாராச்சும் உரிய தொழில் இல்லாமல் குழந்தைக்கு ட்ரை பண்ணினீங்க, உங்கள் நிலை கோவிந்தா! கோவிந்தா தான்;-))
இரக்கமில்லா இன்ப நிலை!
வல்லை வெளிச் சூட்டி
வாடகையை(க்) கூட்டி
எல்லை இல்லா இன்பம்
எப் பொழுவும் ஊட்டி
ஏக்கமுடன் வாழுகிறாள் நாட்டில்- நானோ
ஏளனமாய்ப் பாடுகிறேன் இதை(ப்) பாட்டில்!
டிஸ்கி: வல்லை வெளி- இலங்கையின் யாழ்ப்பாணத்தில் உள்ள ஓர் வெளிப் பிரதேசம்.
கட்டுப்பாடற்ற கள்ள(க்) காதல்!
முத்தனவன் மனைவி- அவளோ
மூன்று பேர்க்கு(த்) துணைவி
பத்திரத்தோ டொன்று- மறைவாய்
பற்றைக்குள்ளே ரெண்டு!
டிஸ்கி: இப்ப எல்லாம் ஊரில் லைசென்ஸ்சோடு ஒன்றும் லைசென்ஸ் இல்லாமல் பலதும் எனும் நிலையும் முளை கொள்ளத் தொடங்கிறது. அதாங்க கள்ளக் காதல்;-))
டவுசர் கிழிஞ்ச கதை!
பேஸ்புக்கில் பார்த்த குட்டி சூட்டி
பெஸ் டைம்மில் கூட்டிப் போனாள் ஊட்டி
காஸ் விட்ட மணம் தாங்கா கன்னி
கஸ்டமென்று கழட்டி விட்டாள் என்னை!
டிஸ்கி: மக்களே ஜாக்கிரதை. அனுபவப் பட்டவன் சொல்றேன், வாய்வுப் பிரச்சினை உங்கள் வாழ்க்கைக்கே ஆப்பாகிடும்;-))
|
74 Comments:
அய்.... வடை வடை,
முதல் முதலாய்...
சோ ஹப்பி..........
முதல் பனங்காய் பணியாரம் எனக்கா?
அடடா துசி முந்திட்டாரே!
சரி பறவாயில்லை! இருங்கோ படிச்சிட்டு வாறன்
கொளுத்தும் வெயிலுக்கு இனிக்கும் அஷ்கா!
தலைப்பே ஒரு மார்க்கமா இருக்கு!
சின்ன வீடு வேணுமென்றார் சுப்பர்-
ஓட்டு வீடோ கிடுகு வீடோ?
@துஷ்யந்தனின் பக்கங்கள்
அய்.... வடை வடை,
முதல் முதலாய்...
சோ ஹப்பி..........//
நம்ம நாட்டின் பண வீக்கத்தையும், அதள பாதாளத்தினை நோக்கிச் செல்லும் பொருளாதாரத்தையும் கருத்திற்கு இலவச வடை வழங்குதலை நிறுத்தியுள்ளேன், தட்சணை கொடுத்தால் மாத்திரமே வடை வழங்கப்படும்.
மாப்பு, முதலில் பூசைக்குரிய காசை எடுங்க, அப்புறமா வடை தாறேன்.
ஹா..ஹா....
சின்ன வீடு வேணுமென்றார் சுப்பர்-வாழ்வு
சீரழிந்து போகுமென்றார் அப்பர்,
கன்னியரின் பின்னலைந்தார் மப்பில்
காம நோயை வாங்கி வந்தார் சைட் கப்பில்!
ஆஹா ஆஹா புலவரே கவிஞரே என்னையா இது, அடுக்கு மொழியில் கிடுக்கு பிடி போடுறீரே
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
முதல் பனங்காய் பணியாரம் எனக்கா?//
மேலே ஒருத்தன் பாரிசில் இருந்து வந்து வடையைக் கவ்விக் கொண்டு போயிட்டான், நீங்க வேறை.
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
அடடா துசி முந்திட்டாரே!//
ஆமா, அவர் பாரிஸ் மெட்ரோ ரயிலில் வந்திருக்கிறார். நீங்கள் டாக்ஸியில் வந்துள்ளீர்கள். சோ துஸி முந்திட்டாரு.
முதலாவது போட்டோவுக்கு கீழ இருக்கிற வசனமே செம காமெடியா இருக்கு!
எக்ஸ்ட்ரா காசு கேப்பாவாம்
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
சரி பறவாயில்லை! இருங்கோ படிச்சிட்டு வாறன்//
அதுக்கும் ஒரு கமெண்டா. அவ்...
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
கொளுத்தும் வெயிலுக்கு இனிக்கும் அஷ்கா!
தலைப்பே ஒரு மார்க்கமா இருக்கு!//
எல்லாம், தலைப்பு வைப்பதில் சூட்சுமம் சொல்லித் தருவதில் வல்லவராக இருக்கும் குரு நாதர் உங்களின் உபயம் தான் ஐயா.
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
சின்ன வீடு வேணுமென்றார் சுப்பர்-
ஓட்டு வீடோ கிடுகு வீடோ?//
என்னா சின்னப் புள்ளத் தனமா?
இது மற்ற வீடு மாப்பு.
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
ஆஹா ஆஹா புலவரே கவிஞரே என்னையா இது, அடுக்கு மொழியில் கிடுக்கு பிடி போடுறீரே//
இது தானாம் சிந்து கவியாம். அவ்......
கட்டிலது காத்திருக்கு கனகா-
காலெடுத்து வாவனடி மெதுவா
தொட்டிலது வேண்டுமோடி கனியே
தொழிலுக்கெங்கே போவேனடி இனிமேல்!
ஹா ஹா சூப்பர் மச்சி! கனியே க்கு பொருத்தமா இனிமேல் ஒகே! பட் ல் உதைக்குது!
இனிமே என்று இருந்தால் கூட பொருள் சரியாக வரும்தானே! கவிதைகளில் இலக்கணம் கொஞ்சம் இளகி கொடுப்பது தமிழின் சிறப்பு
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
முதலாவது போட்டோவுக்கு கீழ இருக்கிற வசனமே செம காமெடியா இருக்கு!
எக்ஸ்ட்ரா காசு கேப்பாவாம்//
அடடா, அதைக் கூடக் கூர்ந்து கவனிக்கிறீங்களே. அவ்...
ஆஹா ஆஹா புலவரே கவிஞரே என்னையா இது, அடுக்கு மொழியில் கிடுக்கு பிடி போடுறீரே//
இது தானாம் சிந்து கவியாம். அவ்......
June 1, 2011 12:14 AM
அட நான் நினைச்சன் சிந்து கவி எண்டா, விதானையாரிண்ட மூத்தவள்...... அந்த சிந்துவ பற்றி பாடுற பாட்டென்று... ஹி ஹி ஹி
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
ஹா ஹா சூப்பர் மச்சி! கனியே க்கு பொருத்தமா இனிமேல் ஒகே! பட் ல் உதைக்குது!
இனிமே என்று இருந்தால் கூட பொருள் சரியாக வரும்தானே! கவிதைகளில் இலக்கணம் கொஞ்சம் இளகி கொடுப்பது தமிழின் சிறப்பு//
ஆமா சகோ, மாத்திட்டாப் போச்சு,
கொஞ்ச நேரமா யோசித்துப் பார்த்தேன், அடி பிறழ்ந்து கொண்டிருந்தது.
இப்ப உங்களின் உதவியோடு கரெக்டாக்கிடுவோம்.
நன்றிகள் மச்சி
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
அட நான் நினைச்சன் சிந்து கவி எண்டா, விதானையாரிண்ட மூத்தவள்...... அந்த சிந்துவ பற்றி பாடுற பாட்டென்று... ஹி ஹி ஹி//
மச்சி, நீங்கள் அவளை இன்னும் மறக்கலையா.
ரெண்டாவது கவிதைக்கு சிவப்பு சிக்னல் போட்டது சாலவும் பொருத்தமானது!
01. அது சிவப்பு விளக்கு பகுதியை மறைமுகமாக குறீக்கிறது
02. சரியான தொழில் இல்லாமல் கலியாணத்துக்கு அவசரப்படக்கூடாது எண்டதுக்கு சிவப்பு விளக்கு காட்டுறமாதிரியும் இருக்கு!
அருமை மச்சி
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
ரெண்டாவது கவிதைக்கு சிவப்பு சிக்னல் போட்டது சாலவும் பொருத்தமானது!
01. அது சிவப்பு விளக்கு பகுதியை மறைமுகமாக குறீக்கிறது
02. சரியான தொழில் இல்லாமல் கலியாணத்துக்கு அவசரப்படக்கூடாது எண்டதுக்கு சிவப்பு விளக்கு காட்டுறமாதிரியும் இருக்கு!
அருமை மச்சி//
நன்றிகள் மாப்பிளை.
வல்லை வெளிச் சூட்டி
வாடகையை(க்) கூட்டி
எல்லை இல்லா இன்பம்
எப் பொழுவும் ஊட்டி
ஏக்கமுடன் வாழுகிறாள் நாட்டில்- நானோ
ஏளனமாய்ப் பாடுகிறேன் இதை(ப்) பாட்டில்!
ஹி ஹி ஹி ஒருக்கா போயிட்டு வாறது....!!
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
ஹி ஹி ஹி ஒருக்கா போயிட்டு வாறது....!!//
பாஸ், பச்சை கலர் சட்டித் தொப்பிக்காரங்கள் தான் இப்ப அங்கே நிற்கிறாங்க...
நிறைய எலும்புக் கூடுகளும் எடுக்கலாமாம்((;
முத்தனவன் மனைவி- அவளோ
மூன்று பேர்க்கு(த்) துணைவி
பத்திரத்தோ டொன்று- மறைவாய்
பற்றைக்குள்ளே ரெண்டு!
மச்சி கையக்குடு.... சூப்பரோ சூப்பர்! சிரிக்க ரசிக்க .....கொஞ்சம் கிளு கிளு கொஞ்சம் குளு குளு....அசத்திட்டே
பேஸ்புக்கில் பார்த்த குட்டி சூட்டி
பெஸ் டைம்மில் கூட்டிப் போனாள் ஊட்டி
காஸ் விட்ட மணம் தாங்கா கன்னி
கஸ்டமென்று கழட்டி விட்டாள் என்னை!
கொய்யாலே ..... இது என்ன இது என்ன இது?
சரி இதுவும் ஒரு வாழ்வியல் அம்சம் தானே!
அதுசரி அவளுக்கு வராதோ?
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
மச்சி கையக்குடு.... சூப்பரோ சூப்பர்! சிரிக்க ரசிக்க .....கொஞ்சம் கிளு கிளு கொஞ்சம் குளு குளு....அசத்திட்டே///
பாஸ் கையை உங்க கிட்ட நான் கொடுத்திட்டு, கசூரினா பீச்சுக்குப் போகும் போது என்னத்தைக் கொண்டு போறது;-))
///துஷ்யந்தனின் பக்கங்கள் said...
அய்.... வடை வடை,
முதல் முதலாய்...
சோ ஹப்பி..........
//// யோவ் ,ஒரு வடை இப்போ முப்பது ரூபா, அந்தாள் எங்க போவார் வாறவைக்கு எல்லாம் வடை கொடுக்க ... பேசாம பாட்டி சுர்ற இடமா பாத்து சுட்டுடுங்க பாஸ் .ஹிஹிஹி
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
கொய்யாலே ..... இது என்ன இது என்ன இது?
சரி இதுவும் ஒரு வாழ்வியல் அம்சம் தானே!
அதுசரி அவளுக்கு வராதோ?//
மச்சி, வாழ்வியல் அம்சம் ஓக்கே, ஆனால் வயிற்றைப் பிடுங்கிற மாதிரி முட்டை தின்ற நாத்தத்தை வுட்டால் மூக்குத் தாங்குமா?
///சின்ன வீடு வேணுமென்றார் சுப்பர்-வாழ்வு
சீரழிந்து போகுமென்றார் அப்பர்,
கன்னியரின் பின்னலைந்தார் மப்பில்
காம நோயை வாங்கி வந்தார் சைட் கப்பில்! //// எயிட்சை தடுக்கும் விளம்பரமாய் இதை பயன்படுத்தால் போல ....
////கட்டிலது காத்திருக்கு கனகா-
காலெடுத்து வாவனடி மெதுவா
தொட்டிலது வேண்டுமோடி கனியே
தொழிலுக்கெங்கே போவேனடி இனிமே(ல்)! //// குடும்ப கட்டுப்பாடும் அவசியம் ;-)
@கந்தசாமி.
எயிட்சை தடுக்கும் விளம்பரமாய் இதை பயன்படுத்தால் போல ...//
ஆமா மாப்பிளை, ஆனால் இந்தக் கவிதை செல்லுமா செல்லாதா என்று இலக்கணக்காரர் சொல்லனுமே, அவ்......
மச்சி கவிதைகளும் அருமை படங்களும் அருமை! கலக்கறே நிரு!
அப்புறம் இன்னொரு விஷயம்....காசி ஆனந்தன் ஒரு பாட்டு எழுதினவர்
பாரீசில் வாழும் சூட்டி பல
நாளாச்சு நீ கடிதம் போட்டு .....
என்று! நான் கனகாலமா மண்டைய பிச்சுக்கொண்டு இருந்தனான் சூட்டி எண்டதுக்கு, போட்டு எப்படி பொருந்தும் என்று?
சூட்டி - இகரத்தில முடியுது , போட்டு - உகரத்தில முடியுது எப்படி பொருந்தும் எண்டு?
பிறகு ஒரு பேராசிரியர் விளங்கப்படுத்தினவர்!
மச்சி பாடல்களைக் கேட்டு கேட்டே எங்கட டவுட்டுகள கிளியர் பண்ணலாம்
///வல்லை வெளிச் சூட்டி
வாடகையை(க்) கூட்டி
எல்லை இல்லா இன்பம்
எப் பொழுவும் ஊட்டி
ஏக்கமுடன் வாழுகிறாள் நாட்டில்- நானோ
ஏளனமாய்ப் பாடுகிறேன் இதை(ப்) பாட்டில்!
/// அடுக்கு மொழி பின்னுறிங்க போங்க!!! நம்ம டி ஆர் கோவிக்க போறாரு,,,
////வல்லை வெளிச் சூட்டி
வாடகையை(க்) கூட்டி
எல்லை இல்லா இன்பம்
எப் பொழுவும் ஊட்டி
ஏக்கமுடன் வாழுகிறாள் நாட்டில்- நானோ
ஏளனமாய்ப் பாடுகிறேன் இதை(ப்) பாட்டில்!
/// ஆமா இது டபுள் மீனிங் போல இருக்கே ;-))
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
மச்சி கவிதைகளும் அருமை படங்களும் அருமை! கலக்கறே நிரு!
அப்புறம் இன்னொரு விஷயம்....காசி ஆனந்தன் ஒரு பாட்டு எழுதினவர்
பாரீசில் வாழும் சூட்டி பல
நாளாச்சு நீ கடிதம் போட்டு .....
என்று! நான் கனகாலமா மண்டைய பிச்சுக்கொண்டு இருந்தனான் சூட்டி எண்டதுக்கு, போட்டு எப்படி பொருந்தும் என்று?
சூட்டி - இகரத்தில முடியுது , போட்டு - உகரத்தில முடியுது எப்படி பொருந்தும் எண்டு?
பிறகு ஒரு பேராசிரியர் விளங்கப்படுத்தினவர்!
மச்சி பாடல்களைக் கேட்டு கேட்டே எங்கட டவுட்டுகள கிளியர் பண்ணலாம்//
மாப்பிளை, இது சிவலக்காளை என்ற இறுவட்டில், செல்லப்பர் இசையமைச்சுப் பாடிய பாட்டு.
முட்கம்பிக்குப் பின்னாடி இருந்தும் இப்பவும் நினைவிலை இருக்கு. அவ்....
காசியின் பாடல்களில் அநேகமானவை மரபு தழுவி, சந்தம், அடி என்பன சீராக வரும் வகையில் தான் எழுதப்பட்டிருக்கும்.
///முத்தனவன் மனைவி- அவளோ
மூன்று பேர்க்கு(த்) துணைவி
பத்திரத்தோ டொன்று- மறைவாய்
பற்றைக்குள்ளே ரெண்டு! ////
என்ன கொடும பாஸ்....
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
என்னடா உனக்கென்ன நீ செல்லப் பிள்ளை
இங்கு தாண்டா தம்பி நாள் தோறும் தொல்லை!
பாரிசில் வாழும்........
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
நெல்லியடியில் உன் வீடு இங் கில்லை
நெருப்பிலே போச்சு ஊர்ப் பனங் கொலை
செல்லையா போன கிழமைதான் செத்தான்
சேதி சொன்னாடா தம்பி உன் அத்தான்!
அவ்.......
பாடல் வரி எல்லாம் கரெக்டா வருதே மச்சி.
////பேஸ்புக்கில் பார்த்த குட்டி சூட்டி
பெஸ் டைம்மில் கூட்டிப் போனாள் ஊட்டி
காஸ் விட்ட மணம் தாங்கா கன்னி
கஸ்டமென்று கழட்டி விட்டாள் என்னை! ////மக்களே ஜாக்கிரதை. அனுபவப் பட்டவன் சொல்றேன்,////
எல்லோரும் குறிச்சு வச்சுக்கொங்கோ இவரை பற்றி ஹிஹிஹி
அழகான கவிதையும் படங்களும் நண்பா!
நாட்டில் இப்போது வெள்ளரசுப்பேய்கள் கள்ளக்காதலையும் ஓட்டல் வாசங்களையும் ஊக்கிவிக்கிறது தானே புதுப் பெஸன்!
பேஸ்புக் இப்போது நல்ல கருத்து(கரு)க்களுக்குத்தான் பயன்படுகிறது போல்!?
@கந்தசாமி.
ஆமா இது டபுள் மீனிங் போல இருக்கே ;-))//
ஆமா சகோ, கண்டு பிடித்தமைக்கு நன்றிகள்.
மாடு எப்போ பிடிக்கப் போறீங்க.
வல்லை வெளிதாண்டி காலங்கள் 8 ஓடிவிட்டது திரும்பியும் வரனுமா?
@கந்தசாமி.
என்ன கொடும பாஸ்....//
யோ, இது நிஜம் பாஸ், இப்படித் தான் கள்ளக் காதல் ஊரெங்கும் நடக்க்கிறது பாஸ்.
வாய்வுத் தொல்லையை விட உம்ம வாய் தொல்லை பெருசுன்னு ஓடி இருப்பாங்க.
@கந்தசாமி.
எல்லோரும் குறிச்சு வச்சுக்கொங்கோ இவரை பற்றி ஹிஹிஹி//
உண்மையைப் பப்ளிக்கிலை சொல்ல என்னையைப் போல ஒரு தில் வேணும் மச்சி. அவ்...........
ச்....சும்மா...
@Nesan
அழகான கவிதையும் படங்களும் நண்பா!
நாட்டில் இப்போது வெள்ளரசுப்பேய்கள் கள்ளக்காதலையும் ஓட்டல் வாசங்களையும் ஊக்கிவிக்கிறது தானே புதுப் பெஸன்!//
ஆமாய்யா, கேட்க யாரும் இல்லை என்றால்?
@Nesan
பேஸ்புக் இப்போது நல்ல கருத்து(கரு)க்களுக்குத்தான் பயன்படுகிறது போல்!?//
அடடா, அனுபவசாலி சொல்லுறாரு, மக்களே நோட் திஸ்ட் பாயிண்ட்.
//டிஸ்கி: யாராச்சும் உரிய தொழில் இல்லாமல் குழந்தைக்கு ட்ரை பண்ணினீங்க, உங்கள் நிலை கோவிந்தா! கோவிந்தா தான்;-))///
ஆமா இது காமெடி அல்ல சீரியஸ் விஷயம்!!!
சப்பா...கடுமையா பாதிக்கப்பட்டிருக்கார் போல பாஸ் வாய்வு தொல்லையால..
உள்ளி சாப்பிடுங்க...பாஸ் ஹிஹி
ஏன் பாஸ் பற்றைக்குள் ரெண்டு???ரொம்ப கஷ்டமே??#டவுட்டு
மாப்ள ஜொள் ஜொள்ளாக இருக்கும்வரையே வாழ்கை நமதாக இருக்கும் ஹிஹி!
இத்தனி நாளா நிரூபனை நல்லவர்னு நினைட்ச்சுட்டு இருந்தேன் ஹ ஹா ஹா அண்னன் விக்கி தக்காளியை விட பெரிய கேடி போல..
தமிழ்மணத்திடம் பல்பு வாங்காம இருக்க,அஷ்கா வா..பலே
Nice...
கவிதைக்குள் சில ரகசியங்கள் அம்பலமாகிக் கிடக்கு..
கடைசி டிஸ்கி மேட்டர் ..ஹி ஹி....கொடுமையான அனுபவமோ அண்ணா....
எப்போதும் சோகமான கவிதையே எழுதுகிறீர்கள் ..
கொஞ்சம் சந்தோசத்தின் உணர்வுகளையும் எழுதுங்களேன்.
http://zenguna.blogspot.com
@குணசேகரன்...
எப்போதும் சோகமான கவிதையே எழுதுகிறீர்கள் ..
கொஞ்சம் சந்தோசத்தின் உணர்வுகளையும் எழுதுங்களேன்.//
மாப்பிளை, என்னய்யா ஓவர் நக்கல் பண்ணுறீங்க, நீங்கள் பதிவைப் படிக்கலையா. இந்தப் பதிவில் உள்ளவை எல்லாமே சந்தோசமான கவிதைகள் தான்.
ஏ யப்பா கொல்றாயிங்க கொல்றாயிங்க....
நண்பரே நல்லா எழுதுகிறீர்கள் ரசித்தேன் உங்கள் வரிகளை
யாரந்த சுப்பர் சகோ
ரொம்ப பொறாமை படவைக்கிறாரே ?????
சுவையான , பயனுள்ள , கொஞ்சம் அனுபவ பதிவு ......... வாயுதான்
கடைசிக் கவிதை படிக்கும்போதே மூக்கைப் பிடிக்க வச்சுட்டீங்க!
நடக்கட்ட்டும்!
வேண்டிய அளவு இந்த பதிவு விமர்சிக்கப்பட்டு விட்டதால் (நான் லேட்) நான் வோட்டு மட்டும் போட்டுட்டு அப்பீட்டு
மாப்ள! பேஸ்புக் அனுபவம்....பாவம்யா அந்த பிகர்.
சந்தம் சிந்து கொள்ள கவிதை மனதை கவர சிலேடை சிந்திக்க வைக்க
சிம்பிளாய் ஒரு கவிதை
இதைதான் சொல்லுறது வயித்தாலை அடிக்கிற மாதிரி கவிதை எழுதிறதெண்டு
சொல்லவேண்டியதை
ரசிக்கும் படியா சொல்லி இருக்கீங்க
அரசாங்கம் கூட பிரச்சாரத்துக்கு
பயன்படுத்தலாம்...
கலக்கறீங்களே சகோ! இவ்வளவு நாள் எங்க இருந்தீங்க ? சரி அஷ்கான்னா ஒரு வகை சர்க்கரைதானே?
என்ன சார் எதுகை மோனையில் பட்டயை கிளப்புறீங்க. எல்லாம் நல்லா இருந்தது!
முதலாவது கவிதை பலருக்கு நல்ல அறிவுரை! கடைசி படம் டாப்பு
ஹா ஹா நல்ல நகைச்சுவையான கவிகள்
அனுபவப் பட்டவன் சொல்றேன், வாய்வுப் பிரச்சினை உங்கள் வாழ்க்கைக்கே ஆப்பாகிடும்;-))சூப்பரு!வெல் டன்! சரி வாய்வா,வாயுவா?(டவுட்டு!) யோகா.எஸ் -Present!
//முத்தனவன் மனைவி- அவளோ
மூன்று பேர்க்கு(த்) துணைவி
பத்திரத்தோ டொன்று- மறைவாய்
பற்றைக்குள்ளே ரெண்டு! //
நம்ம ஊரிலயும் இப்போ இந்த நிலைமை வந்துட்டுதா.. என்ன கொடுமை சார். உங்களை நம்பித்தானே ஊறவிட்டுடு நாம இங்க இருக்காம்.. பாத்துகோங்க சார்.
Ashwin Win
மனம் போல் வாழ்க்கை. வீரியமா? விபரீதமா?
Post a Comment