துன்னாலை சந்தி அருகே
தூங்காமல் விழித்திருந்தாள் சாந்தி
பின் வாசல் வழியே
பாய்ந்தது ஓர் சைக்கிள்
இன் நேரம் யாரங்கே,
இங்கிதமாய் உணர்ந்து கொண்டாள்
இளசுகளிற்கு ஈக்குவலாய்
இன் நாளில் ஆப் அடிப்பதிலோ அவர் வம்பர்
தன்னார்வ நிலை மறந்து, மெதுவாய்
தன்னார்வ நிலை மறந்து, மெதுவாய்
தள்ளாடி வந்தார் தம்பர்!
தம்பருக்கு மனசிற்குள் தனோர்
தமிழ் பட நாயகன் போல் நினைப்பு
வம்பிழுத்துப் பார்ப்பார், பெண்களினை, ரோட்டில்
வாஞ்சையுடன் பெயர் சொல்லி அழைப்பார்
தம் அடித்த வாறு பாட்டை
தலை கீழாய் மாற்றிப் பாடிடுவார்
அம்மனவள் சிலையோ, அழகில் நீ நமியோ
அன்பே என கவி தொடுப்பார்!
வேலருக்கு இப்போது புதிதாய்
வேட்கை தீர்க்கும் டாஸ்மாக் மீது காதல்
கால் நடுங்கும் வயதினிலும் ஊரிலுள்ள
கன்னியரின் மீது காம மோதல்
கோலமிடும் மகளிர், கொஞ்சுகின்ற குமரிகளை
கண்டதுமே பற்றி விடும் நெருப்பு
காலமது இன்னும் கையருகே இல்லையெனும்
காத்திருப்பால் கழிந்ததவர் தவிப்பு!
வேட்டியைத் தவிர வேறேதும் அறியாத புண்ணியவான்
வொட்கா அடித்தால் வேகம் எடுக்கும் என எண்ணியவர்
வீட்டில் பெட்டிப் பாம்பாய் இருக்கும் நல்ல மகான்
வேசம் போட்டு ஆசைய மறைக்கும் கள்ளனவன்
சாட்டில் ஒரு சுந்தரியை வேலர் சைட் கப்பில்
சற்றே கரக்ட் பண்ணி(ப்) பேச்சிழுத்தார்
ரோட்டில் அவளைச் சந்தித்து, தன்
ராக லீலையை மீட்டி விட நாட் குறித்தார்!
கப் பென்று பைக்கில் தொற்றி ஏறி
கன்னியினைச் சந்திக்க முன்னர்
மப்பொன்று அடித்தால், மனமும் இளகிவிடும்
மங்கையும் மடங்கிடுவாள், என;
பக் கென்று நினைத்தார் தம்பர், பரவசமாய்
பெக் ஒன்றை அடித்தார்
ஹிக் அன்று ஏறியதும், ஹியரை முறுக்கி
விக் மண்டை மயிராட ஓடினார்!
பட்டென குறுக்கே பாய்ந்ததோர் வெள்ளாடு
நட்டாற்று வீதியில் தம்பர் விழுந்தாட
கட்டிய வேட்டியோடோ கழன்றோட
கட்டிலில் கலக்கும் ஆசை அழிந்தோட
வெட்டியாய் ஆனார் தம்பர், இனி
வேட்டி கிளிந்த வெங்கியாய் வம்பர்!
டிஸ்கி: மரபு கவிதை எனும் முதிர் கன்னி மீது இப்போதும், இக் காலத்திலும்; தமிழ் உறவுகளுக்கு காதல் இருக்கிறதா என்பதனை அறியும் நோக்கிலும், சகோதரன் ஜனா அவர்களின் வேண்டுகோளுக்கமைவாகவும் புனையப்பட்டது தான் இக் கவிதை.
இக் கவிதை அனைவருக்கும் புரியும் வகையில் இலகு நடையில் எழுதப்பட்டுள்ளது. புரியாதவர்கள் யாராவது இருப்பின், உங்கள் சந்தேகங்களை, இக் கவிதை பற்றிய உங்களின் கருத்துக்களை முன் வைக்கலாம் உறவுகளே!
|
94 Comments:
ஐ முதல்முறையா எனக்கு வடை
படிச்சிட்டு வாறன், மிச்சத்துக்கு
பாஸ் மறைக்காம சொல்லுங்க... நீங்கதானே அந்த தம்பர்.... ஹி.. ஹி நீங்கதானே
//வேட்டியைத் தவிர வேறேதும் அறியாத புண்ணியவான்//
அதுதான் இப்பத்த பாஷன் பாஸ்
//பட்டென குறுக்கே பாய்ந்ததோர் வெள்ளாடு
நட்டாற்று வீதியில் தம்பர் விழுந்தாட
கட்டிய வேட்டியோடோ கழன்றோட
கட்டிலில் கலக்கும் ஆசை அழிந்தோட
வெட்டியாய் ஆனார் தம்பர், இனி
வேட்டி கிளிந்த வெங்கியாய் வம்பர்!//
ஐயையோ! பட்ட கஷ்டமெல்லாம் பாழப்போச்சே
@மதுரன்
ஐ முதல்முறையா எனக்கு வடை//
வடைக்குரிய தட்சணையைக் கொடுத்தால், வடை தரலாம்,
இல்லேன்னா பழைய மசால் வடை தான் தரப்படும்;-))
@மதுரன்
படிச்சிட்டு வாறன், மிச்சத்துக்கு//
என்ன சாப்பிட்டு வாறீங்களோ;-))
யோ, அது பத்து நாள் பழசான புளிச்சல் வடை சகா.
@மதுரன்
பாஸ் மறைக்காம சொல்லுங்க... நீங்கதானே அந்த தம்பர்.... ஹி.. ஹி நீங்கதானே//
ஏன் பாஸ், என்னைப் பார்த்தால் உங்களுக்கு அப்படியாகவா தெரிகிறது.
@மதுரன்
//வேட்டியைத் தவிர வேறேதும் அறியாத புண்ணியவான்//
அதுதான் இப்பத்த பாஷன் பாஸ்//
மக்களே, அனுபவசாலி சொல்லுறாரு, எல்லோரும் நோட் பண்ணிக்குங்க.
//நிரூபன் said...
@மதுரன்
ஐ முதல்முறையா எனக்கு வடை//
வடைக்குரிய தட்சணையைக் கொடுத்தால், வடை தரலாம்,
இல்லேன்னா பழைய மசால் வடை தான் தரப்படும்;-))//
பாஸ் நான் என்ன வடைய கட்டிக்கவா கேட்டன்.. வாயில வச்சு கடிக்கிறதுக்கு கேட்டன் பாஸ்
@மதுரன்
பாஸ் நான் என்ன வடைய கட்டிக்கவா கேட்டன்.. வாயில வச்சு கடிக்கிறதுக்கு கேட்டன் பாஸ்//
அடப் பாவமே, பூஜை முடிந்த பின்னாடி தானே வடை பாயாசம் கொடுப்பாங்க. பூசாரிக்கு தட்சணை தந்தால் தான் வடை,
நீங்க அந்த மாதிரியெல்லாம் யோசிக்கிறீங்களா. அவ் .............
வணக்கம் நிரு!
கவிதையின் எதுகை மோனையில் எகிறி விழுந்தேன் நான்.......
அருமை நண்பரே...
நேத்து ஜனா போட்ட பதிவுக்கு குறிப்பால உணர்த்தி போட்ட பதிவு தானே இது!
என்னாது மரபுக் கவுதையா??
கருமம் அதென்ன கழுதையோ கச்மாலமோ ஹிஹி
உன்னுடைய திறமைகளை முழுமையாக அறிந்தவன் நான்! அதனால் தான் சில பல இடங்களில் உன்னை உதாரணம் காட்டினேன்! நீ அதை நிரூபித்து விட்டாய்!
உங்க எதுகை மோனையில் டி ஆர் எகிறி அதிரி புதிரி ஆகி ஒடப்போராறு ஹே ஹே ஹே ஹே...
ஆப் அடிப்பதா இல்லை ஆப்பு அடிப்பதா பாஸ்?
அந்த வயது போன தம்பர் வேறுயாருமல்ல நிருபன் தான் என்பதை இச்சபையில் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன் ஜுவ ஆர்னர்!
வெட்டி கிழிந்த வென்கியா??ஹிஹி நல்லா வைக்கிறாங்கப்பா தலைப்பு...
சரி சமனா கட் அடிக்கிறாரா?
ஹிஹி மக்கா எதோ யாரோ ஒடப்போராங்கலாமே!!ஹ்ஹிஹி
எனக்காக கொஞ்சம் வெள்ளைன்ன பதிவு போட்டதற்கு நன்றி பாஸ் ஹிஹி
நிரு ஒரு சின்ன ஐடியா! தன்னார்வ.... கு நேர வரக்கூடிய மாதிரி இந்நாளில்..... வரியை போடவும்! அதுதான் சரியா வரும்!
இளசுகளிற்கு... வரியை கீழே இறக்கவும்! எல்லாம் பொருந்தி கணக்கா வரும்
அம்மனவள் சிலையோ, அழகில் நீ நமியோ
அன்பே என கவி தொடுப்பார்!
டாப் கிளாஸ்!!
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
வணக்கம் நிரு!//
வணக்கம் மிஸ்டர் ஓட்ட வடை நாராயணன்!
சேமம் எப்படி?
@பலே பிரபு
கவிதையின் எதுகை மோனையில் எகிறி விழுந்தேன் நான்.......
அருமை நண்பரே...//
நன்றிகள் சகோ. மரபுக் கவிதையினை நேசிக்கும் உங்களைப் போன்ற உறவுகளின் ஆதரவு தான் எனது இப் பதிவிற்கான காரணம் சகோ.
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
நேத்து ஜனா போட்ட பதிவுக்கு குறிப்பால உணர்த்தி போட்ட பதிவு தானே இது!//
மாப்பு, டிஸ்கியிலை சொல்லியிருக்கேனே......அவ்.........
கோலமிடும் மகளிர், கொஞ்சுகின்ற குமரிகளை
கண்டதுமே பற்றி விடும் நெருப்பு
காலமது இன்னும் கையருகே இல்லையெனும்
காத்திருப்பால் கழிந்ததவர் தவிப்பு!
சூப்பர் வரிகள் மச்சி! தாளக்கட்டு உதறி தள்ளுது!
@மைந்தன் சிவா
என்னாது மரபுக் கவுதையா??
கருமம் அதென்ன கழுதையோ கச்மாலமோ ஹிஹி//
புரியாத பாசையில் பதிவெழுதி நானும் நீங்களும் மட்டும் தனிக் கடை நடாத்தி மகிழ்வதைப் பார்க்க இது கொஞ்சம் better ஆக இருக்குமே சகா.
அதான் கொஞ்சம் வெரைட்டியா யோசித்தேன்.
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
உன்னுடைய திறமைகளை முழுமையாக அறிந்தவன் நான்! அதனால் தான் சில பல இடங்களில் உன்னை உதாரணம் காட்டினேன்! நீ அதை நிரூபித்து விட்டாய்!//
குருவே! எல்லாம் உங்களின் ஆசிர்வாதம் தான்!
நடப்பை அனைத்தும் நன்மைக்கே நடக்கட்டும்.
சகா, குரு தட்சணை கேட்க மாட்டீங்க தானே;-))
@மைந்தன் சிவா
ஆப் அடிப்பதா இல்லை ஆப்பு அடிப்பதா பாஸ்?//
பாஸ், ஆப்/
அல்லது ஹாப்
அல்லது அரை அடிப்பது பாஸ்!
சிலருக்கு இது ஆப்பு அடிப்பதாகவும் புரியலாம்(((;
@நிரூபன்
நேத்து ஜனா போட்ட பதிவுக்கு குறிப்பால உணர்த்தி போட்ட பதிவு தானே இது!//
மாப்பு, டிஸ்கியிலை சொல்லியிருக்கேனே......அவ்.........
அட ஓம் என இப்பதான் பார்க்கிறேன்!
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
அந்த வயது போன தம்பர் வேறுயாருமல்ல நிருபன் தான் என்பதை இச்சபையில் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன் ஜுவ ஆர்னர்!//
எனக்குப் பக்கத்தில் இருந்து ஊத்திக் கொடுத்தது யாரு?
ஊறுகாயை தொட்டு நாக்கில் வைச்சதாரு!
நீங்க தானே சகா.
@மைந்தன் சிவா
வெட்டி கிழிந்த வென்கியா??ஹிஹி நல்லா வைக்கிறாங்கப்பா தலைப்பு...//
அவ்.....அவனவன் மற்றவங்களின் பதிவை காப்பி பண்ணி ஹெடிங் வைக்கிறாங்க பாஸ்,
இது கொஞ்சம் வெரைட்டியாக உட்கார்ந்து யோசித்து வைத்த தலைப்பு.
@மைந்தன் சிவா
சரி சமனா கட் அடிக்கிறாரா?//
யாரய்யா சரி சமனா அடிக்கிறது. அவ்....
@மைந்தன் சிவா
எனக்காக கொஞ்சம் வெள்ளைன்ன பதிவு போட்டதற்கு நன்றி பாஸ் ஹிஹி//
பேசின படி, பேசின இடத்திலை, எமவுண்டை கொடுத்தால் ஓக்கே.
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
நிரு ஒரு சின்ன ஐடியா! தன்னார்வ.... கு நேர வரக்கூடிய மாதிரி இந்நாளில்..... வரியை போடவும்! அதுதான் சரியா வரும்!
இளசுகளிற்கு... வரியை கீழே இறக்கவும்! எல்லாம் பொருந்தி கணக்கா வரும்//
மிக்க நன்றிகள் சகோ,
உண்மையில் நீங்கள் கூறுவது போல மாற்றுகையில் அர்த்தங்கள் அதிகமாக வருகிறது சகோ.
@FOOD
//டிஸ்கி: மரபு கவிதை எனும் முதிர் கன்னி மீது இன்னும் தமிழ் உறவுகளுக்கு காதல் இருக்கிறதா என்பதனை அறியும் நோக்கிலும், சகோதரன் ஜனா அவர்களின் வேண்டுகோளுக்கமைவாகவும் புனையப்பட்டது தான் இக் கவிதை.//
அவரையும் இழுத்து போட்டாச்சா?//
ஆமா சகோ, இனி எல்லாமே நேயர் விருப்பம் தான். அவ்...
அட அட அட........மாப்ள நல்லாத்தான்யா சொல்லி இருக்க!
இக்காலத்திலும் மரபுக்கவிதை இனிக்கவே செய்கிறது.
//வம்பிழுத்துப் பார்ப்பார், பெண்களினை, ரோட்டில்
வாஞ்சையுடன் பெயர் சொல்லி அழைப்பார்// வாஞ்சைக்கு வஞ்சியரின் பதில் என்னவோ? கஞ்சி ஆக்கியிருப்பார்களே!
//வேலருக்கு இப்போது புதிதாய்
வேட்கை தீர்க்கும் டாஸ்மாக் மீது காதல்
கால் நடுங்கும் வயதினிலும் ஊரிலுள்ள
கன்னியரின் மீது காம மோதல்// நல்ல சந்தம் விளையாடும் வரிகள்.
என்ன கொடுமை சாமி இப்போதெல்லாம் துன்னாலையில் பனை இல்லை இருப்பது எல்லான் வெளிநாட்டுச் சரக்காம் பாவம் சாந்தி இரவு வாரன் அவளுக்கு உண்மையை உரைக்க!
தம்பர் அன்று பனைக்குப் பின்னுக்குப்போனாலும் 5,6 அப்பர் இப்ப மெண்டிஸ்க்குப் பின்னால் 3 இக்கும் மூச்சு இழுக்குதாம் இது தெரியாதா சாந்தி கேட்டாளாம் விவாகரத்து!
உதுக்குத்தான் சொல்லுவது காலகாலத்தில் வல்லை வெளியில் கடலை போட்டால் திக்கத்தில் சுண்ணாம்பு கேட்க மாட்டம் என்று !
வணக்கம் பாஸ் ...
///தன்னார்வ நிலை மறந்து, மெதுவாய்
தள்ளாடி வந்தார் தம்பர்!///உண்மையை சொல்லுங்க நீங்க தானே அது .)
தம்பருக்குப் புத்தூர் தாண்டினால் புள்ளை கூட்டி தெரியாது பனக்கூடலில் காத்திருப்பது பெரிய பானை என்று தெரியாதா பேதை சாந்திக்கு நீ இருப்பது இன்னும்1967 இல் தானா நண்பா!?
////வீட்டில் பெட்டிப் பாம்பாய் இருக்கும் நல்ல மகான்
வேசம் போட்டு ஆசைய மறைக்கும் கள்ளனவன்
சாட்டில் ஒரு சுந்தரியை வேலர் சைட் கப்பில்
சற்றே கரக்ட் பண்ணி(ப்) பேச்சிழுத்தார்
ரோட்டில் அவளைச் சந்தித்து, தன/// வீட்டில், சாட்டில், ரோட்டில் ..............வார்த்தைகளால் பின்னுரிங்க பாஸ் ...
///ஹிக் அன்று ஏறியதும், ஹியரை முறுக்கி
விக் மண்டை மயிராட ஓடினார்!/// ஓஒ ஆளுக்கு மண்டேல்ல முடி இல்லையா !!!!
சொன்ன விதம சூப்பரு ...
அடுக்கு மொழி , எதுகை மோனை என்று பின்னி எடுத்துட்டிங்க தலீவா ...
//வேட்டியைத் தவிர வேறேதும் அறியாத புண்ணியவான்//காத்தோட்டமா இருக்கும்ல ...))
தம்பர் கிழித்தது கதர் வேட்டியல்ல காலாவதியான லக்சல கைத்தரி வேட்டி ஆனாலும் இது மானம்காக்கும் கோவனமாக இது எல்லாம் தெரியாத சுண்டெலி நாளை வரும் விடியலில் நீ ஏன் முள்ளிவாய்க்காலில் முதுகெலும்பு இல்லாமல் ஓடிவந்தாய் என்று!
தம்பர் தாறி கெட்டு வந்தாலும் சாப்பாடு போடக்காத்திருந்தால் சாந்தி! எப்பாடு பட்டும் காத்துவாரன் என் பெண்பிள்ளையை என்று வல்லை வெளி போன சாந்தியின் தங்கை செம்பனியில் கிழிந்து போனால் தாயோடு மகளாக அடுத்த நாள் வந்தது தகவல் தாயும் மகளும் கானவில்லை என்று!
முதிர்கன்னியின் மறைமொழி தெரியாதவர்கள் புதுப்பெண்டாட்டி என்று பொய்வேசம் போடுவது புதுப் பெஸன் மாப்பூ!
குறுக்கால் போன குட்டி ஆடு சாந்தியின் கடைசியா பின்னாலே வாரன் அந்தக்கவிதைக்கு (கரு)த்துரைக்க பாவம் சில கவிதைகளுக்கு இப்போ பொருள் தெரியாத வொட்காவின் பெயர் தெரிகிறது!
நீங்கள் கவிதையில் சந்தங்களை இப்படி கோத்து எங்களையும் பினைக்கிறீர்கள் நண்பா! இரவு வேலை வடை இல்லை இன்று. நாளை பார்ப்பம் ஓட்டை வடை ஓய்வு தந்தாள்!
எனக்கும் கவிதையை எழுதும் விதிமுறையை உரைத்து என்னையும் உங்கள் சீடனாக ஏற்பீர்களா!
தலைப்பு எப்படி இப்படி உங்களிடம் மாட்டுகிறது(சாந்தி) பெயர்கள் சிந்தனையில் தனியாளோ! இல்லை மங்களம் உண்டோ மறுத்துரைக்க மாமா என்று மழலைகள்! மறைக்காமல் கூறுவீர்!
மரபு கவிதையா இல்லை மப்புக்கவிதையா? ஹிஹிஹி
haha... Very nice heading!!!
நல்லா இருக்கு பாஸ்! :-)
வேட்டி கிழந்திட வெங்கி-படித்து
வெடித்திட சிரிப்பும் போங்கி
நட்டின் நிலயை நிருப-நிலை
நட்டினீர் நன்கே நிருப
ஏனோ
வாட்டுது நெஞ்சில் துன்பம்-நாளும்
வற்றிட அந்தோ பண்பும்
மீட்டிடு வாராம் யாரே-இனி
மெதுவாய் அழியுமா ஊரே
புலவர் சா இராமாநுசம்
இந்தக் கவிதையை நீங்கள்தான் எழுதியிருந்தால், உங்களில் அற்புதமான கவிஞன் ஒளிந்திருக்கிறான். வாழ்த்துக்கள் :-)
/////கப் பென்று பைக்கில் தொற்றி ஏறி
கன்னியினைச் சந்திக்க முன்னர்
மப்பொன்று அடித்தால்,/////
யோவ் மாதிடம் போறதுக்கு மது எதற்க fanta விரிவு தெரியும் தானே...
ரொம்ப ரசிச்சென்பா சூசூசூப்பராயிருக்கு... தம்பருக்கு ஒரு ஜம்பர் போட்டால் என்னவாம்...
@எஸ் சக்திவேல்
இந்தக் கவிதையை நீங்கள்தான் எழுதியிருந்தால், உங்களில் அற்புதமான கவிஞன் ஒளிந்திருக்கிறான். வாழ்த்துக்கள் :-)//
ரொம்பத் தான் நக்கல் பண்ணுறீங்க,
இந்தக் கவிதையை நான் தான் எழுதியுள்ளேன் என்று டிஸ்கியில் போட்டுள்ளேன், படிக்கவில்லையா சகோதரம்,
சகோ கவிதை கலக்கல்....எதுகை மோனை ரைமிங்கும் சூப்பர்....அழகான கவிதை.....மரபுக் கவிதை ஆயினும் எளியநடை அழகாய் இருந்தது...மரபு கவிதை எனும் முதிர் கன்னி மீது இப்போதும், இக் காலத்திலும்; தமிழ் உறவுகளுக்கு காதல் இருக்கிறதா.....
சகோ எப்போதும் எங்களுக்கு கன்னிகள் மீது காதல் தான்....வழக்கங்கள் மாற, நாம் புதுமையை புகுத்தியதால், புதுக் கவிதை பிறந்தது...ஆயினும், மரபுக் கவிதைகள் என்றும் அழகு தான்....ஆனாலும் எனக்கு மரபுக் கவிதை புனையத் தெரியாது சகோ...படிக்க மட்டுமே தெரியும்....நகைச்சுவையோடு விளையாடிய, அழகான கவிதை...மிகவும் ரசித்தேன்...வாழ்த்துக்கள் சகோ
மரபுக்கவிதைங்கறது முதிர் கனி மாதிரி.. புதுக்கவிதைங்கறது 20+ ஃபிகர் மாதிரி.. ஹைக்கூ என்பது டீன் ஏஜ் கேர்ள் மாதிரி
சகோ அருமையாய் உள்ளது . எதுகை மோனையில பிச்சி எறியிறீங்க
நன்று சகோ.மரபும் அட்டகாசமாய் வருகிறதே!
துன்னாலை சந்தி அருகே
தூங்காமல் விழித்திருந்தாள் சாந்தி
பின் வாசல் வழியே
பாய்ந்தது ஓர் சைக்கிள்//
நீ தானே அந்த சைக்கிளில்.. தெரியும் மச்சி..
அம்மனவள் சிலையோ, அழகில் நீ நமியோ
அன்பே என கவி தொடுப்பார்!//
ஹி ஹி.. உன்னய பத்தி சொல்லும்போதே எனக்கு தெரியம்மயா.. நீ இப்படிபட்டவன் தான்னு..
கால் நடுங்கும் வயதினிலும் ஊரிலுள்ள//
இருந்தாலும் உன் வயச நீயே இப்படி வெளிபடையா சொல்லியிருக்க தேவையில்ல..
சாட்டில் ஒரு சுந்தரியை வேலர் சைட் கப்பில்
சற்றே கரக்ட் பண்ணி(ப்) பேச்சிழுத்தார்
ரோட்டில் அவளைச் சந்தித்து, தன்
ராக லீலையை மீட்டி விட நாட் குறித்தார்! //
அடப்பாவி.. நீ இணையத்திலே சுத்தி வரும்போதே தெரியுமடா இப்படி ஏதாச்சும் பண்ணுவனு..
ஹிக் அன்று ஏறியதும், ஹியரை முறுக்கி
விக் மண்டை மயிராட ஓடினார்!//
உனக்கு முடி கூட உண்மையில்லையா.? அதுவும் விக்-ஆ.? கொடுமை நிரூ..
வெட்டியாய் ஆனார் தம்பர், இனி
வேட்டி கிளிந்த வெங்கியாய் வம்பர்! //
அய்யய்யோ.!! இப்படினா என்ன நிரூ.. எனக்கு புரியவே இல்லையே.!!
கவிதை நன்றாகவே புரிகிறது.. ஆனால் இதற்கு எனக்கு மரபு விளக்கும் தரமுடியுமா.? ப்ளீஸ்..
உண்மைய சொல்லணும்னா புதுகவிதையை விட மரபு கவிதையில தான் கிக்கு அதிகம் நிரூ.. எனக்கு ரொம்ப பிடிச்சது மரபு கவிதை தான்.. என்னை எழுத வைத்ததே அந்த மரபு கவிதை தானே.!!
மரபு கவிஞ்சரே வாழ்க தொடர்க உம்பணி உமக்கு ஆயிரம் பொட் காசுகள் அள்ளி தருகிறேன்
புது முயற்சிக்கு வாழ்த்துதல் மரபு!
வாவ்... இது இதுதான் நிரூ..
இங்கிதமாய் உணர்ந்து கொண்டாள்
இளசுகளிற்கு ஈக்குவலாய்
இன் நாளில் ஆப் அடிப்பதிலோ அவர் வம்பர்
தன்னார்வ நிலை மறந்து, மெதுவாய்
தள்ளாடி வந்தார் தம்பர்!
Superb..
தம்பருக்கு மனசிற்குள் தனோர்
தமிழ் பட நாயகன் போல் நினைப்பு
வம்பிழுத்துப் பார்ப்பார், பெண்களினை, ரோட்டில்
வாஞ்சையுடன் பெயர் சொல்லி அழைப்பார்
தம்பர்ட குணாதிசியங்களுடன் நம்ம ஊரில முந்தி ஒரு அள் இருந்தாரு :)
கால் நடுங்கும் வயதினிலும் ஊரிலுள்ள
கன்னியரின் மீது காம மோதல்
கோலமிடும் மகளிர், கொஞ்சுகின்ற குமரிகளை
கண்டதுமே பற்றி விடும் நெருப்பு
காலமது இன்னும் கையருகே இல்லையெனும்
காத்திருப்பால் கழிந்ததவர் தவிப்பு!
ஆஹா...
வேட்டியைத் தவிர வேறேதும் அறியாத புண்ணியவான்
வொட்கா அடித்தால் வேகம் எடுக்கும் என எண்ணியவர்
வீட்டில் பெட்டிப் பாம்பாய் இருக்கும் நல்ல மகான்
வேசம் போட்டு ஆசைய மறைக்கும் கள்ளனவன்
சாட்டில் ஒரு சுந்தரியை வேலர் சைட் கப்பில்
சற்றே கரக்ட் பண்ணி(ப்) பேச்சிழுத்தார்
ரோட்டில் அவளைச் சந்தித்து, தன்
ராக லீலையை மீட்டி விட நாட் குறித்தார்!
ஆஹா.. இதோடையே பசி தீர்ந்ததையா
கன்னியினைச் சந்திக்க முன்னர்
மப்பொன்று அடித்தால், மனமும் இளகிவிடும்
மங்கையும் மடங்கிடுவாள், என;
பக் கென்று நினைத்தார் தம்பர், பரவசமாய்
பெக் ஒன்றை அடித்தார்
குசும்புக்காரர்..
பட்டென குறுக்கே பாய்ந்ததோர் வெள்ளாடு
நட்டாற்று வீதியில் தம்பர் விழுந்தாட
கட்டிய வேட்டியோடோ கழன்றோட
கட்டிலில் கலக்கும் ஆசை அழிந்தோட
வெட்டியாய் ஆனார் தம்பர், இனி
வேட்டி கிளிந்த வெங்கியாய் வம்பர்!
கடைசியின் இப்படியா முடிவு.. பாவமையா அந்த ஆளர்..
என்பசியையும் ஒரு பொருட்டென நினைத்து மரபு எனும் கவிதனை அவித்து, பக்குவமாய், பாவதை ஊற்றி, திகட்டா நல் நகைச்சுவையும் நனைத்து, தொண்டைவரை விருந்துவைத்த நிரூ நீ வாழி...
அப்பாடா..தூக்கம் வருதே உண்ட கழைப்பு தொண்டனுக்கு உண்டே
//வேட்டி கிளிந்த வெங்கியாய்//
யாருங்க அந்த வெங்கி?
கவிதை நல்லாருக்கு!
யோவ் கவிதைன்னா ரெண்டு வரியில அழகா முடிக்காம இப்படி ரெண்டு பக்கத்துக்கு எழுதி வச்சா எப்படியா ஹா ஹா நண்பா சும்மா சொன்னேன் கவிதை சூப்பரா இருக்கு.
தம்பி...நிரூ....பொடியா .... கலக்கிப்போடியள் கவிதைக் கடல்தான் நீங்க.நான் என்னத்தைச் சொல்லக் கிடக்கு.எல்லாரும் வரிக்கு வரி ரசிச்சு உங்களைப் பாராட்டியிருக்கினம்.
உண்மையிலேயே நீங்கள் கவிஞரேதான்.பாராட்டுக்கள் !
கட்டிய வேட்டியோடோ கழன்றோட
கட்டிலில் கலக்கும் ஆசை அழிந்தோட
வெட்டியாய் ஆனார் தம்பர், இனி
வேட்டி கிளிந்த வெங்கியாய் வம்பர்!
பேராசை பேரு நஷ்ட்டமா? சகோ
நல்ல கவிதை
19 ஓட்டு என்னுடையது சகோ
பல் நிறை தம்பருக்கும்
சொல் கூட்டும் வம்பருக்கும்
பல்சுவை வித்தர் என்பேன்:)
Post a Comment