Friday, May 27, 2011

ஆபாச அறிவிப்பு- உண்மைச் சம்பவம்!

ம்….அச்சும், ம்…..இர்……ருர்ர்……….எனச் செருமியவாறு மாறன் தன் குரலைச் சரி செய்து கொண்டிருந்தான். ''நேயர்கள் கேட்டுக் கொண்டிருப்பது உங்கள் அபிமான பேரலை எப் எம், நேரம் சரியாக......சீ இது நல்லா இல்லையே, இது இலங்கை வானொலியில் மாலை நேர நிகழ்ச்சி செய்கிற அறிவிப்பாளரின் குரல் மாதிரியெல்லோ இருக்கு. அவரைப் பாலோ பண்ணி, அவரை மாதிரிப் பேசுவதை விடக் கொஞ்சம் வெரைட்டியா ட்ரை பண்ணிப் பார்ப்போம் எனத் தனக்குள் யோசித்தவனாய் மாறன் தன் குரல் பயிற்சியினைத் தொடர்ந்து கொண்டிருந்தான்.
இன்னொரு வாட்டி ட்ரை பண்ணிப் பார்ப்பம்; ‘இந்த மணித்தியாலத்தின் ஹோல்டன் ஹிட்ஸ் பாடலை’ உங்களுக்கு வழங்குவது குருவிட்ட நரி சோப்’ அடச் சீ.. இது அந்தத் தனியார் வானொலியில் உதய வேளை நிகழ்ச்சி செய்கிற அறிவிப்பாளரின் ஸ்டைலில் வருதே. ’’இந்த மாதிரிக் காப்பியடிக்கிற குரல் பாணி எல்லாம் வேண்டாம். இந்த வழியிலை போனால் உருப்படவே ஏலாது. எனக்கென்று ஒரு புதுப் பாணியை அமைத்துக் கொள்ளுவோம் என யோசித்தபடி குரல் டெஸ்ட்டிங்கில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவனைத் தாயார் பாக்கியம்,

‘தம்பி மாறன்! உங்களுக்குச் சொன்னது கேட்கலையோ? காலங்க காத்தாலை என்ன டெஸ்ட்டிங் வேண்டிக் கிடக்கு உமக்கு? உங்களைக் கடைக்குப் போய்ப் பாணெல்லே வேண்டிக் கொண்டு வரச் சொன்னனான். நான் சொன்னதைக் காதிலை விழுத்தாது நீர் டெஸ்ட்டிங் பண்ணுறீரோ! டெஸ்ட்டிங்க்! 
முதல்லை போய்ப் பாணை வேண்டிக் கொண்டு வாரும் பார்ப்பம்! பிறகு டெஸ்ட்டிங் பண்ணாலாம்., நான் தங்கச்சியவையைப் பள்ளிக் கூடத்திற்கெல்லே அனுப்ப வேண்டும்!

’ஓம் போறேன். இப்பவே போய் வாங்கி வாறேன். உன்னோடை பெரிய கரைச்சலாய்ப்(Disturbance) போய்ச்சு அம்மா! 
மாறன் தாய் சொல்லைத் தட்டாதவனாய்த் தன் மிதி வண்டியில் ஒரு கெந்தல் கெந்தி(Jumbing அல்லது சைக்கிளில் துள்ளி ஏறுதல்) சைக்கிளை மிதித்துச் சென்று கனகரின் கடைக்குப் பாண் வாங்குவதற்காக வரிசையில் நின்றவர்களோடு வரிசையாகத் தானும் சேர்ந்து கொண்டான்.

பாணிற்காக மக்கள் கூட்டம் கூட்டமாக வரிசையில் முண்டியடித்துக் கொண்டு நிற்கையில், தன்னை மறந்தவனாய் கடையில் ஒலித்துக் கொண்டிருந்த வானொலிப் பெட்டியோடு ஐக்கியமாகிறான் மாறன்!

வானொலி கேளுங்கள்! லட்சம் ரூபா பரிசினை வெல்லுங்கள்! ’‘நேயர்களே எமது விளம்பரக் குழுவினர் உங்கள் இடங்களுக்கு வரும் நேரத்தில், எமது பேரலை எப். எம் வானொலியானது உங்கள் வணிக நிறுவனங்களில் ஒலித்துக் கொண்டிருந்தால், உங்களில் ஒருவருக்கு இலட்சம் ரூபாயை வெல்வதற்கான சந்தர்ப்பம் காத்திருக்கிறது. ஆகவே சந்தர்ப்பத்தைத் தவற விடாதீர்கள்! பாட்டைப் போடுங்கள்! பரிசினைத் தட்டிச் செல்லுங்கள்! என ஒலித்த விளம்பரத்தினைத் தொடர்ந்து, செய்தியறிக்கை ஒலிபரப்பாகத் தொடங்கியது.

நேரம் காலை ஏழுமணி! பேரலை எப் எம் செய்திகள்! வாசிப்பது - - - - - - - - - - - - - - - - எனத் தொடர்ந்த செய்தியோடு ஒன்றித்தனவாக, ‘கடவுளே! எப்போது இந்த வானொலியில் என் குரலும் வரப் போகுதோ? என இலவு காத்த கிளியாக ஏங்கிக் கொண்டிருந்தான்.

’’தம்பி மாறன்! நீர் பாண் வேண்ட வந்தனீரோ! இல்லை வெள்ளி பார்க்க வந்தனீரோ,(வெள்ளி பார்த்தல்- சுய சிந்தனையற்று கண்ணை மட்டும் பார்த்த படி மனதை வேறோர் சிந்தனையோடு அலைய விடுதல்) கடைக்கு வந்து கியூவை எல்லே மறிச்சுக் கொண்டு நிற்கிறீர் எனக் கடைக் காரர் ஏசுகையில் தன் சுய நினைவு வந்தவனாய், பாணை வேண்டிக் கொண்டு வீட்டை நோக்கிப் புறப்பட்டான் மாறன்.

வன்னியின் அவல வாழ்வினைச் சந்தித்த மானமுள்ள தமிழர்கள் வரிசையில், முட்கம்பி வேலிகளைக் கடந்து, முகாமெனும் கோர முகத்தினுள் உள் இழுக்கப்பட்டவனாய், காற் தடங்களை தம் மீது அழுந்தப் பதித்தவர்களுக்கு, அவர்கள் முகத்தில் அடித்தாற் போல, எல்லாம் இழந்து போனால் என்ன, எமக்கு வாழ நம்பிக்கை இருக்கிறது’ எனச் சொல்லி  முகாமினை விட்டு வெளியேறி வாழும் பல ஆயிரகணக்கான மக்களோடு மக்களாக மாறனும் தன் பெற்றோருடன் யாழ்ப்பாணத்தில் இரண்டாயிரத்து ஒன்பதுகளின் இறுதிப் பகுதியில் குடி புகுந்தான்.

சிறு வயது முதலே இருந்த வானொலி மீதான அவனது தீராக் காதல், இன்று அவனுக்குள் வானொலி அறிவிப்பாளர் ஆக வேண்டும் எனும் இலட்சிய வெறி ஏற்படுவதற்கு காரணமாய் அமைந்து விட்டது. தன் குடும்பத்தார் அவனது துறையில் வேலை தேடச் சொல்லியதைக் கூடப் பொருட்படுத்தாதவனாய்,
அறிவிப்பாளர் ஆக வேண்டும், அதுவும் பேரலை எப் எம் இல் அறிவிப்பாளர் ஆக வேண்டும் எனத் திடசங்கற்பம் பூண்டிருந்தான்.

மாறனும், நிலவனும் பள்ளிக் காலம் முதல் நெருங்கிய நண்பர்களாகவே இருந்தார்கள். இருவரும் மாலை வேளைகளில் விளையாட்டுத் திடலில் அடிக்கடி சந்தித்துக் கொள்வார்கள். நிலவன் கொஞ்சம் வெடிப் புளுகன்(ஓவராய் உல்டா வுடுற ஆள்).ஆனாலும் இருவரது இலட்சியங்களுமே வானொலி அறிவிப்பாளராக வர வேண்டும் என்பதாகத் தான் இருந்தது.

மாறனுக்கு ஒரு அறிவிப்பாளருக்குரிய தனித்துவத் திறமைகள் அனைத்தும் வரப்பிரசாதமாய் அமைந்திருந்தது. நிலவனை விட மாறன் அதீத திறமைசாலியாகவும் இருந்தான். ஆனால் நிலவனோ; தனக்குப் பிரபலமான பேரலை எப்.எம் வானொலி அறிவிப்பாளர்களோடு தொடர்பிருப்பதாகவும், தான் வெகு விரைவில் அறிவிப்பாளர் ஆகிடுவேன் எனவும் மாறனுக்கு மூஞ்சியில் அடிப்பது போல(முகத்தில் அறைவது போல) இளக்காரமாய், மாறனைப் பார்த்து அடிக்கடி சொல்லிக் கெக்கட்டம் போட்டுச்(ஹா…ஹா..ஹா.. எனச் சிரித்தல்) சிரித்து மகிழ்வான்!

ஒரு நாள் காலை வேளையில் செய்தியறிக்கையினைக் கேட்பதற்காய்  வானொலிப் பெட்டியைத் திருப்பிய போது, ‘உங்கள் பேரபிமானம் பெற்ற பேரலை எப் எம் இல் ‘அறிவிப்பாளராக ஓர் அரிய வாய்ப்பு! திறமையுள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம். மேலதிக விபரங்களை எமது பேரலை எப்.எம் இன் இணையத் தள முகவரியான WWW.பேரலை.Com ஊடாகவோ அல்லது எமது பேஸ் புக் முகவரியூடாக அறிந்து கொள்ளலாம்’’ என விளம்பரம் ஒலித்து ஓய்ந்தது. 

மாறன் அவசர அவசரமாகத் நேர்முகத் தேர்விற்கு விண்ணப்பித்தான். நிலவனும் இச் சேதியினை அறிந்து விண்ணப்பித்தான். இருவரும் யாழ்பாண மாவட்டத்திலிருந்து நேர்முகத் தேர்விற்காகத் தெரிவு செய்யப்பட்டிருந்தார்கள். நேர்முகத் தேர்வு இடம் பெறுகையில் மாறனின் குரல் வளம் நிலவனின் குரல் வளத்தை விடச் சிறந்தது என்று பாராட்டினார் தேர்வாளர்.

’உங்களின் ஆங்கில அறிவு எப்படி? எனக் கேட்டார் தேர்வாளர்,
’ஏதோ கிரிக்கட் செய்திகளை ஆங்கிலத்தில் இருந்து மொழி பெயர்க்கும் அளவிற்குப் போதுமான அறிவு இருக்கு’ என்று’ நக்கலாகப் பதிலுரைத்தான் மாறன். இந்தப் பதிலால் தேர்வாளர் கடுப்படைந்திருந்தாலும் காட்டிக் கொள்ளவில்லை. சிறிது நேரத்தின் பின் மாறனின் வாய்ஸ் டெஸ்ட்டிங்ஸ் நல்லா இருக்கு எனச் சொல்லிய தேர்வாளர், கொஞ்சம் அசடு வழிய ஆரம்பித்தார்.

மாறன் வானொலி உலகம் என்பது கொஞ்சம் போட்டி நிறைந்தது. இதில் நுழைகிற எல்லோரும் நின்று நிலைப்பதாகச் சொல்ல முடியாது. ஆனாலும் உங்கடை இலட்சிய வெறியினையும், ஆர்வத்தையும் பார்க்கும் போது நீங்கள் எங்களின் வானொலிக்கு அறிவிப்பாளராகத் தெரிவு செய்யப்பட்ட பின்னர் தொடர்ந்தும் திறமையாகச் செயற்படுவீர்கள் என்று நினைக்கிறேன். ஆனாலும் அதில் ஒரு சின்னச் சிக்கல் இருக்கு.


’கடவுளே, இடக்கு முடக்கா ஏதும் ஆகிடக் கூடாது என நினைத்தவாறு, மனதிற்குள் செல்வச் சந்ந்திதி முருகனை வேண்டிக் கொண்டான் மாறன்.

எங்களோடை ரேடியோ தானே இப்போ நம்பர் ஒன் ஆக இருக்கு. அதில் இணைந்து கொஞ்ச நாளிலை மற்றைய போட்டி வானொலி நிலையங்கள், உங்களுக்கு ஆசை வார்த்தை காட்டி, கை நிறையச் சம்பளம் தருவதாக வாக்களித்து; உங்களைத் தங்களின் வானொலியோடு இணையச் சொல்லிக் கேட்கலாம், ஆகவே, நீங்கள் தொடர்ந்தும் எங்கடை வானொலியோடு இணைந்திருப்பீங்க என்பதற்கு உத்தரவாதமாக ஒரு ’’மூன்று இலட்சம் ரூபா நான் தாற வங்கிக் கணக்கிலை வைப்புச்(Deposit) செய்தீங்கள் என்றால், உங்களின் பணிக்கு அந்தப் பணம் உத்தரவாதமாக இருக்கும்’ எனக் கூறினார் தேர்வாளர்.

இல்லை அண்ணா, நாங்கள் வன்னியிலிருந்து உயிரை மட்டும் தான் கையிலை பிடிச்சுக் கொண்டு அகதியாக, வெளியேறினோம். எங்கடை சொத்துக்களைச் சண்டையிலை பறி கொடுத்திட்டோம். இந்தளவு பெரிய தொகை கொடுக்கிற நிலமையிலை எங்களின் குடும்பம் இல்லை’ என்று மாறன் கூறி முடிக்க முதல் குறுக்கிட்டவராய், தேர்வாளர்;

‘ஏதோ உங்களின் எதிர்கால நன்மைக்காகத் தான் சொல்றன்’ உங்களால் முடிந்தால் மூன்று இலட்சம் தாருங்கோ. இல்லாவிட்டால், தேர்வில் உங்களுக்கு கீழே இருக்கும் நிலவனை அறிவிப்பாளராகத் தெரிவு செய்யலாம் என முடிவெடுத்திருக்கிறோம், என்றார் தேர்வாளர்.
மாறனின் முகத்தில் ‘பேயறைந்த மாதிரியான உணர்வு’ தேர்வு மண்டபத்தை விட்டு வெளியேறிக் கோட்டை புகையிரத நிலையத்திற்குச் செல்வதற்காய் முச்சக்கர வண்டியினைப் பிடிக்கத் தெருவிற்கு இறங்குகிறான்.

‘அடக் கடவுளே! இந்த நாசமறுவார், என்னைப் போல எத்தனை பேரின் வாழ்க்கையினைப் பாழாக்கியிருப்பாங்களோ! திறமைக்கு முதலிடம் கொடுத்த காலம் போய்;- இப்ப பணத்திற்கும் சிபாரிசுக்கும் எல்லே முதலிடம் கொடுக்கிறாங்கள், இவங்களை யார் தான் திருத்துவாங்களோ என நொந்து கொண்டான் மாறன்,

ஊருக்கு வந்ததும், கருமமே கண்ணெனக் கொண்டு தனது துறையில் வேலை தேடத் தொடங்கினான் மாறன். சிறிது காலத்தின் பின்னர் மாறனுக்கு, யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் கணக்காளர் வேலை கிடைத்தது, இப்போதைக்கு இது போதும் என எண்ணியவனாய், தன் வேலையினைக் கொண்டு காலத்தை ஓட்டிக் கொண்டிருந்தான் மாறன்.

ஒரு நாள் மாறனின் நண்பன் ‘சேந்தன்’ தனது பிறந்த நாள் விழாவினைக் கொண்டாடி மகிழத் தன் வீட்டிற்கு வருமாறு மாறனுக்கும், அவனது நண்பர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தான். அறிவிப்பாளராகிச் சில மாதங்கள் கடந்த பின்னர், கொழும்பிலிருந்து நிலவனும் சேந்தனின் பிறந்த நாளுக்கு வந்திருந்தான், மூவருக்கும் போதை கொஞ்சம் ஏறத் தொடங்கியது. ஆளாளுக்கு அவரவர் தொழில்களைப் பற்றிச் சுய விமர்சனம் செய்யத் தொடங்கினார்கள்.

சேந்தன் சொன்னான், அடேய் நிலவன்’ நீ, நல்லாத் தான் பீலா விட்டுக் கொண்டு இருக்கிறாய். உன்னுடைய தொழில் உயர்ந்ததோ, நீ நிறையப் பெண்களோடை பேசுவியோ. எனக்கெல்லோ தெரியும் நீ எப்பூடி அறிவிப்பாளரா வந்தனி என்று.
வீதி உலா என்று பேரலை எப் எம் காரர் ஊர் ஊரா வரும் போது வால் பிடிச்சுக் கொண்டு திரிஞ்சாய் கொஞ்சக் காலம், அப்புறமா பேஸ் புக், ருவிட்டர், ப்ளாக் என்று சமூக வலைத் தளங்களைத் திறந்து அதனூடாக அந்த அறிவிப்பாளரைப் பற்றி ஓவராப் புகழ்ந்து தள்ளி, வாளி வைத்துப் பப்பாவிலை ஏற்றி, உள் வீட்டுக்குள்ளாலை போய் மூன்று இலட்சம் காசு கொடுத்து அறிவிப்பாளரா வந்தனீ தானே நீ மச்சான்!!

நிலவன் பேச்சு முச்சின்றி, சேந்தனின் கூற்றுக்களை மறுக்க முடியாதவனாய் நின்றான்.
’அதுவும் நந்தவனம் பத்திரிகையில் பேரலை எப் எம் பணிப்பாளரைப் பற்றி ஒரு தனிப் பக்க கட்டுரை எழுதி, அதனை கட்டிங்க் எடுத்து அந்தப் பணிப்பாளருக்கு அனுப்பித் தானே நீ அறிவிப்பாளர் ஆகினனி மச்சான்!! இது நிலவனுக்கு சேந்தனிடமிருந்து கிடைத்த அடுத்த அடி!

’’சேந்தன் குடி போதையில் நிலவனைப் பற்றிப் பேசினாலும் அதில் உண்மைகள் நிரம்பியிருந்தது.
’’மாறன் நீ வா மச்சான், நாங்கள் இன்னொரு கட்டிங் அடிப்பம்’ என்று சொல்லி, மாறனை அழைத்துக் கொண்டு வெளியே சென்றான் சேந்தன்.

’மச்சான், இவங்கள் இந்தக் காலத்திலை திறமைக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. தனக்கு யார் அடி வருடிகளாக இருக்கிறார்களோ, அவர்களுக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ஆகவே கவலையை விடு மச்சி! உனக்கு இப்ப நல்ல சம்பளம் கிடைக்குது, நீ நல்ல வேலையில் இருக்கிறாய், நீ இந்த வங்கியில் பதவி உயர்வு பெற்றுப் பெரியாளாகி விட்டால்; ‘இவர்களுக்குச் சவலாகச் சொந்தமா ஒரு வானொலியை எல்லே நீ தொடங்கலாம்’ என்று கூறி முடித்தான் சேந்தான்.

ஓமோம் மச்சான், நீ சொல்வதிலும் உண்மை இருக்கிறது. எனச் சொல்லி விட்டு, பிறந்த நாள் விழாவினை முடித்துக் கொண்டு தனித் தனியாகப் பிரிந்து வீடு நோக்கிப் புறப்பட்டார்கள் நண்பர்கள் மூவரும்!

மறு நாள் காலை அலுவலகத்திற்குப் போவதற்காக, அவசர அவசரமாக ரெடியாகியபடி, செய்தியறிக்கை கேட்பதற்காக வானொலிப் பெட்டியை முறுக்கினான் மாறன்,
‘வணக்கம்! நேரம் காலை ஏழு மணி!
பேரலை எப் எம் செய்திகள்!
வாசிப்பது சிங்காரம் நிலவன்!
முதலில் தலைப்புச் செய்திகள்!
எண்ண விலை அதிகரிப்பு காரணமாக, நாட்டின் பொருளாதராத்தில் சூழ்ச்சி ஏற்பாட்டுள்ளது.
மந்தை மேற்குப் பகுதிப் பிரதேச செயலர் பிரிவில், இனந் தெரியாத நபர்களால் இளம் பென் சுட்டுப் படு கொள்ளை!…
இங்கிலாந்து கிரிக்கட் அணியினை இலங்கை அணி மூன்று வீக்கட்டுக்களால் தோக்கடித்தது! .

அடக் கடவுளே, நாசமாப் போக, இந்த மாதிரிக் கொச்சைத் தமிழையெல்லாம் கேட்டுத் தொலைக்க வேண்டிய காலம் என மனதினுள் புழுங்கிக் கொண்டு, ரேடியோ மீட்டரை அடுத்த வானொலியை நோக்கித் திருப்பினான்;
’பரம சிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா
யாரும் இருக்குமிடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்கியமே,
கருடன் சொன்னது
அதில் அர்த்தம் உள்ளது….,
என வானொலியில் ஒலித்துக் கொண்டிருந்த பாடலைக் கேட்டவாறு வேலைக்குக் கிளம்பத் தொடங்கினான் மாறன்!!
                                            யாவும் கற்பனையல்ல……
இச் சிறுகதையின்; 

153 Comments:

பிரபாஷ்கரன் said...
Best Blogger Tips

வானொலி வேலைக்கு இவ்வளவு grace இருக்கிறதா .உங்கள் கதை சொல்லும் நடை அருமை

Prabu Krishna said...
Best Blogger Tips

பணம் பத்தும் செய்யும். நாம கொஞ்சம் பாத்து செஞ்சா முன்னேறலாம். நல்ல கதை.

ஆமாம் நண்பரே, தலைப்பில் இருக்கும் "ஆபாச அறிவுப்பு " கதையில் வரவே இல்லை??

டக்கால்டி said...
Best Blogger Tips

Padikkum pothe unmai sambavam endru therinju pochu

டக்கால்டி said...
Best Blogger Tips

ottavadaiku vaazhthugal sollidunga...

நிரூபன் said...
Best Blogger Tips

@பிரபாஷ்கரன்


வானொலி வேலைக்கு இவ்வளவு grace இருக்கிறதா .உங்கள் கதை சொல்லும் நடை அருமை//

இதனை விட இன்னும் பல கேவலமான விடயங்களும் இருக்கிறன சகோ, எமது நாட்டின் சட்டங்களுக்கு அமைவாக வெளியே சொல்ல முடியாத நிலை.
உங்களின் கருத்துக்களுக்கு நன்றிகள் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@பலே பிரபு

பணம் பத்தும் செய்யும். நாம கொஞ்சம் பாத்து செஞ்சா முன்னேறலாம். நல்ல கதை.

ஆமாம் நண்பரே, தலைப்பில் இருக்கும் "ஆபாச அறிவுப்பு " கதையில் வரவே இல்லை??//

சகோ, இறுதிப் பந்தியில், பரமசிவன் கழுத்திலிருந்து பாடலுக்கு முன்பதாக, நிலவன் வாசிக்கும் செய்தியறிக்கையில் உள்ள எழுத்துப் பிழைகளைப் பார்த்தீர்கள் ஆனால் அங்கே, ஆபாச அறிவிப்பு வந்திருக்கிறது புரியும்.

நிரூபன் said...
Best Blogger Tips

@டக்கால்டி

Padikkum pothe unmai sambavam endru therinju pochu//

நன்றிகள் சகோ, உங்களுக்கு விளங்காத சம்பவம் ஏதாவது இருக்குமா;-))
அவ்....

நிரூபன் said...
Best Blogger Tips

@டக்கால்டி

ottavadaiku vaazhthugal sollidunga...//

ஆமாம் சகோ, நானும் சொல்லிடுறேன், அவரும் வந்து இதனைப் படிப்பார் சகோ.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

வணக்கம் நிருபன்! நீங்கள் படித்துக்கொண்டிருப்பது என்னோட கமெண்ட்ஸ்! பிரதான அனுசரனை - எனது லப் டப், இணை அனுசரணை - எனது விரல்கள்!

நிரூபன் said...
Best Blogger Tips

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி


வணக்கம் நிருபன்! நீங்கள் படித்துக்கொண்டிருப்பது என்னோட கமெண்ட்ஸ்! பிரதான அனுசரனை - எனது லப் டப், இணை அனுசரணை - எனது விரல்கள்!//

ஒரு பாட்டுக்கு இடையில் தான் விளம்பரம் என்றால், இப்போ ஒரு பதிவிற்கு நடுவிலும் விளம்பரமா. என்ன கொடுமைடா சாமி!

நாராயணா! இந்தக் கொசுத் தொல்லை தாங்க முடியலையே!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

இருங்கோ பாத்ரூம் போயிட்டு வாறன்! நான் பாத்றோம் போக அனுசரணை - தங்க நகை உலகில் கொங்கா புகழ் பெற்ற
உம்மணா ஜுவலர்ஸ்

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

யோவ் ஒரு வரிதானே சொன்னேன்! அத இவ்வளவு பெரிய கதை ஆக்கீட்டீங்கள்! ரொம்ப நன்றி! இப்ப நான் நன்றி சொன்னதுக்கு அனுசரணை.......அவ்வ்வ்வ்வ்!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

சீ இது நல்லா இல்லையே, இது இலங்கை வானொலியில் மாலை நேர நிகழ்ச்சி செய்கிற அறிவிப்பாளரின் குரல் மாதிரியெல்லோ இருக்கு.//////

யாரப்பா அது! பீம்ல வச்சே பெக் அடிப்பார்! அவரோ?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

இன்னொரு வாட்டி ட்ரை பண்ணிப் பார்ப்பம்; ‘இந்த மணித்தியாலத்தின் ஹோல்டன் ஹிட்ஸ் பாடலை’ உங்களுக்கு வழங்குவது குருவிட்ட நரி சோப்’ அடச் சீ.. இது அந்தத் தனியார் வானொலியில் உதய வேளை நிகழ்ச்சி செய்கிற அறிவிப்பாளரின் ஸ்டைலில் வருதே./////

இந்த இடத்தில நான் நித்திரை!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

மாறன் தாய் சொல்லைத் தட்டாதவனாய்த் தன் மிதி வண்டியில் ஒரு கெந்தல் கெந்தி(Jumbing அல்லது சைக்கிளில் துள்ளி ஏறுதல்) கனகரின் கடைக்குப் பாண் வாங்குவதற்காக வரிசையில் நின்றவர்களோடு வரிசையாகத் தானும் சேர்ந்து கொண்டான்.////


கெந்தல் என்ற சொல்லை உச்சரித்து எவ்வளவு நாளாச்சு? ஞாபகப்படுத்தினதுக்கு நன்றி நிரு!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

’‘நேயர்களே எமது விளம்பரக் குழுவினர் உங்கள் இடங்களுக்கு வரும் நேரத்தில், எமது பேரலை எப். எம் வானொலியானது உங்கள் வணிக நிறுவனங்களில் ஒலித்துக் கொண்டிருந்தால், உங்களில் ஒருவருக்கு இலட்சம் ரூபாயை வெல்வதற்கான சந்தர்ப்பம் காத்திருக்கிறது. ஆகவே சந்தர்ப்பத்தைத் தவற விடாதீர்கள்! பாட்டைப் போடுங்கள்! பரிசினைத் தட்டிச் செல்லுங்கள்!//////

எங்கட ரேடியோவ கேளுங்கோ எண்டு இந்த ரூபத்தில கெஞ்சுகினம்.....ஹி ஹி ஹி ஹி !!!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

நிலவன் கொஞ்சம் வெடிப் புளுகன்(ஓவராய் உல்டா வுடுற ஆள்).//////

வெடிப்புழுகன் எண்டா எப்படி? அவர மாதிரியோ?

நிரூபன் said...
Best Blogger Tips

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி

இருங்கோ பாத்ரூம் போயிட்டு வாறன்! நான் பாத்றோம் போக அனுசரணை - தங்க நகை உலகில் கொங்கா புகழ் பெற்ற
உம்மணா ஜுவலர்ஸ்//

அடப் பாவி, நீங்க பாத் ரூம் போறதுக்கெல்லாம் இந்த அப்பாவி நேயர்கள் தானா கிடைத்தார்கள். பாத்ரூம் போறதுக்குப் பொருத்தமாக ஒரு ஹார்பிக் விளம்பரத்தைப் போட்டாலச்சும் புண்ணியமாப் போகுமெல்லே.

ஏன் தங்க நகை விளம்பரத்தைப் போடுறீங்க.
தண்ணி பட்டால் தங்கம்
கறுக்காதோ;-))

நிரூபன் said...
Best Blogger Tips

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி


யோவ் ஒரு வரிதானே சொன்னேன்! அத இவ்வளவு பெரிய கதை ஆக்கீட்டீங்கள்! ரொம்ப நன்றி! இப்ப நான் நன்றி சொன்னதுக்கு அனுசரணை.......அவ்வ்வ்வ்வ்!//

என்ன ஒரு வரி, கதையின் முழுக் கருத்துமே நீங்க தானே சொன்னது.
அவ்...அவ்..அவ்...அவ்....அவ்..

நிரூபன் said...
Best Blogger Tips

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி

சீ இது நல்லா இல்லையே, இது இலங்கை வானொலியில் மாலை நேர நிகழ்ச்சி செய்கிற அறிவிப்பாளரின் குரல் மாதிரியெல்லோ இருக்கு.//////

யாரப்பா அது! பீம்ல வச்சே பெக் அடிப்பார்! அவரோ?//

பப்ளிக்! பப்ளிக்! பப்ளிக்!

நிரூபன் said...
Best Blogger Tips

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி

இன்னொரு வாட்டி ட்ரை பண்ணிப் பார்ப்பம்; ‘இந்த மணித்தியாலத்தின் ஹோல்டன் ஹிட்ஸ் பாடலை’ உங்களுக்கு வழங்குவது குருவிட்ட நரி சோப்’ அடச் சீ.. இது அந்தத் தனியார் வானொலியில் உதய வேளை நிகழ்ச்சி செய்கிற அறிவிப்பாளரின் ஸ்டைலில் வருதே./////

இந்த இடத்தில நான் நித்திரை!//

ஏன் மாப்பு அவரோடை குரலைக் கேட்டு நித்திரையாகிட்டீங்களோ. அவ்...

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

’எங்களோடை ரேடியோ தானே இப்போ நம்பர் ஒன் ஆக இருக்கு. அதில் இணைந்து கொஞ்ச நாளிலை மற்றைய போட்டி வானொலி நிலையங்கள், உங்களுக்கு ஆசை வார்த்தை காட்டி, கை நிறையச் சம்பளம் தருவதாக வாக்களித்து; உங்களைத் தங்களின் வானொலியோடு இணையச் சொல்லிக் கேட்கலாம், ?????


நிரு, இந்த வரிகளை வன்மையாக கண்டிக்கிறேன். எப்படி நீங்கள் வானொலிகளை ஒப்பிடலாம்? ஒன்றை உயர்த்தி ஒன்றை தாழ்த்துவது மஞ்சள்தனம் இல்லையா?

என்னையா இது லூசுத்தனம்?

நிரூபன் said...
Best Blogger Tips

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி


கெந்தல் என்ற சொல்லை உச்சரித்து எவ்வளவு நாளாச்சு? ஞாபகப்படுத்தினதுக்கு நன்றி நிரு!//

நமக்குள்ளை எதுக்கு பாஸ் நன்றி!
நீங்க தொடங்கிற ரேடியோவிலை,
என்னையை நிகழ்ச்சிப் பொறுப்பாளராகப் போடுங்கோ.
நன்றிக் கடனாக நான் உங்களுக்கு எப்பவுமே துணையிருப்பன்!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

’’மூன்று இலட்சம் ரூபா நான் தாற வங்கிக் கணக்கிலை வைப்புச்(Deposit) செய்தீங்கள் என்றால், உங்களின் பணிக்கு அந்தப் பணம் உத்தரவாதமாக இருக்கும்’ எனக் கூறினார் தேர்வாளர்.


மூன்று லட்சமா? ரொம்ப கம்மியா இருக்கே!

நிரூபன் said...
Best Blogger Tips

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி


எங்கட ரேடியோவ கேளுங்கோ எண்டு இந்த ரூபத்தில கெஞ்சுகினம்.....ஹி ஹி ஹி ஹி !!!//

அவ்...
கெஞ்சுறதை விடப் பல பரிசுகளை அள்ளி வீசிக் காசைக் கரியாக்கினம் பாஸ்..
வானொலி ஸ்ரிக்கரை ஆட்டோவிலை ஒட்டியிருந்தால் பரிசு!
வானொலியை ஆட்டோவிலை போட்டிருந்தால் பரிசு!
வானொலியை எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு அண்மையாக வைத்துக் கேட்டுக் கொண்டிருந்தால் பரிசு!
சாப்பாட்டுக் கடையில் வானொலி ஒலித்துக் கொண்டிருந்தால் பரிசு!

போற வேகத்தைப் பார்த்தால், இனி, வருங் காலத்தில் டாய்லெட்டுக்குள் வானொலி கேட்டால்
டூப்பர், பம்பர்! சூப்பர் பரிசெல்லாம் வழங்குவார்கள் போல இருக்கே!

நிரூபன் said...
Best Blogger Tips

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி

நிலவன் கொஞ்சம் வெடிப் புளுகன்(ஓவராய் உல்டா வுடுற ஆள்).//////

வெடிப்புழுகன் எண்டா எப்படி? அவர மாதிரியோ?//

அவரையே மாதிரித் தான்!
நேற்று என்ன செய்தோம் என்பது தான் முக்கியம்! வரலாறு!
இன்று எவர் என்ன செய்கிறார்கள் என்பதைப் பற்றிக்
கவலைப் பட நாம யாரு!
அவர்கள் யாரு!
நாம படித்த இலக்கியவாதிகள் என்று சொல்லுவாரே!
அவரை மாதிரி பாஸ்...

நிரூபன் said...
Best Blogger Tips

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி

நிரு, இந்த வரிகளை வன்மையாக கண்டிக்கிறேன். எப்படி நீங்கள் வானொலிகளை ஒப்பிடலாம்? ஒன்றை உயர்த்தி ஒன்றை தாழ்த்துவது மஞ்சள்தனம் இல்லையா?

என்னையா இது லூசுத்தனம்?//

ஏனய்யா, இது MDR தரப்படுத்தல் மச்சி.
இதன் அடிப்படையில் தான் நாங்கள் போட்டி வானொலி நம்பர் ஒன் என்று சொல்லுற அதே நேரத்திலை நாமளும்
எங்கடை வானொலியை நம்பர் ஒன் என்று சொல்லி மகிழுவம் மச்சி!
இது கூடத் தெரியாமல் இருந்தா
நீ எப்ப ரேடியோ தொடங்கிறது?
உன்னையை வால் பிடிக்கிற நான் எப்ப அறிவிப்பாளர் ஆகிறது!

நிரூபன் said...
Best Blogger Tips

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி

’’மூன்று இலட்சம் ரூபா நான் தாற வங்கிக் கணக்கிலை வைப்புச்(Deposit) செய்தீங்கள் என்றால், உங்களின் பணிக்கு அந்தப் பணம் உத்தரவாதமாக இருக்கும்’ எனக் கூறினார் தேர்வாளர்.


மூன்று லட்சமா? ரொம்ப கம்மியா இருக்கே!//

ஏன் கம்மி மச்சி,
இப்படிப் பத்துப் பேரிடம் வாங்கினால்,
நீ லைப்பில் செட்டிலாக இது போதாதா மாப்பு;-))

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

’அதுவும் நந்தவனம் பத்திரிகையில் பேரலை எப் எம் பணிப்பாளரைப் பற்றி ஒரு தனிப் பக்க கட்டுரை எழுதி, அதனை கட்டிங்க் எடுத்து அந்தப் பணிப்பாளருக்கு அனுப்பித் தானே நீ அறிவிப்பாளர் ஆகினனி மச்சான்!! ::::::

அடப்பாவி இப்படியெல்லாம் இருக்கோ? அப்படியெண்டா என்னை பாராட்டி நாலு கட்டுரை போடு! அப்பத்தான் வேலை தருவன்! அதோட நிரு நீர் ஒரு கெட்டிக்காரன் எண்டு எனக்குத் தெரியும்!

அதால பிரைம் டைம் நிகழ்ச்சிகள் உமக்கு தரேலாது! பிறகு என்ர பேர் கெட்டுப் போடும்

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

‘வணக்கம்! நேரம் காலை ஏழு மணி!
பேரலை எப் எம் செய்திகள்!
வாசிப்பது சிங்காரம் நிலவன்!
முதலில் தலைப்புச் செய்திகள்!
எண்ண விலை அதிகரிப்பு காரணமாக, நாட்டின் பொருளாதராத்தில் சூழ்ச்சி ஏற்பாட்டுள்ளது.
மந்தை மேற்குப் பகுதிப் பிரதேச செயலர் பிரிவில், இனந் தெரியாத நபர்களால் இளம் பென் சுட்டுப் படு கொள்ளை!…
இங்கிலாந்து கிரிக்கட் அணியினை இலங்கை அணி மூன்று வீக்கட்டுக்களால் தோக்கடித்தது! ./////////////

இதெல்லாம் கொச்சை தமிழ் எண்டு யார் சொன்னது? இதுதான் நல்ல தமிழ்!

இன்று - கொச்சை தமிழ்
இன்ரு - நல்ல தமிழ்

நன்றி - கொ.த
நன்ரி - நல்ல தமிழ்!

கார்த்தி said...
Best Blogger Tips

உங்கள் கதையில் உள்ள அந்த இடத்தில் வழக்கத்தில் உள்ள சொற்களை சொல்லும்போது அடைப்பில் அதன் சரியான கருத்தையும் போட்டது அழகு!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

ஹி ஹி ஹி நிரு உமக்கு ஒரு பகிடி தெரியுமே எதியோப்பியா நாட்டை ஒரு பெண்மணி - குறில் வாற இடத்தில் எல்லாம் நெடில் போட்டு வாசிச்சவா!

கார்த்தி said...
Best Blogger Tips

பல வேலை தளங்களிலும் இவ்வாறான சிபாரிசுகள்தான்! அதற்காக ஒட்டு மொத்தமாக வானொலிகளை கிண்டலடிப்பது சரியாக படவில்லை!!

நிரூபன் said...
Best Blogger Tips

@கார்த்தி
உங்கள் கதையில் உள்ள அந்த இடத்தில் வழக்கத்தில் உள்ள சொற்களை சொல்லும்போது அடைப்பில் அதன் சரியான கருத்தையும் போட்டது அழகு!//

நன்றிகள் சகோ, படிக்கும் எல்லோரையும் இக் கதை தடங்கலின்றி எட்ட வேண்டும் எனும் ஒரு சிறிய சிந்தனையின் வெளிப்பாடு தான் இம் முயற்சி சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@கார்த்தி

பல வேலை தளங்களிலும் இவ்வாறான சிபாரிசுகள்தான்! அதற்காக ஒட்டு மொத்தமாக வானொலிகளை கிண்டலடிப்பது சரியாக படவில்லை!!//

அண்ணாச்சி, நீங்க என்ன இப்படிச் சொல்லிட்டீங்க. ஒட்டு மொத்தமாக வானொலிகளைக் கிண்டலிப்பது சரியில்லை என்று சொல்லிட்டீங்க சகோ.
உள்ளார்ந்து படித்தால், உங்களுக்கு ஒன்னே ஒன்னு! கண்ணே கண்ணு என்று தான் தெரியும் சகோ.
உங்களுக்குப் புரியாத சம்பவமா என்ன சகோ;-)))

நிரூபன் said...
Best Blogger Tips

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி

இதெல்லாம் கொச்சை தமிழ் எண்டு யார் சொன்னது? இதுதான் நல்ல தமிழ்!

இன்று - கொச்சை தமிழ்
இன்ரு - நல்ல தமிழ்

நன்றி - கொ.த
நன்ரி - நல்ல தமிழ்!//

தமிழுக்கே அர்த்தம் சொல்லும் நாராயணா!
இப்படி ஓர் தமிழ் இருக்கிறது எனக்குப் புரியாமல் போய் விட்டதே சகோ.
அவ்...

நிரூபன் said...
Best Blogger Tips

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி


ஹி ஹி ஹி நிரு உமக்கு ஒரு பகிடி தெரியுமே எதியோப்பியா நாட்டை ஒரு பெண்மணி - குறில் வாற இடத்தில் எல்லாம் நெடில் போட்டு வாசிச்சவா!//

அபச்சாரம்! அபச்சாரம்! பொது இடத்திலை வந்து சொல்ல வேண்டிய வார்த்தையா இது!
இதனைக் கேட்டுக் கொண்டு நின்ற உங்களின் மன நிலை எப்படி இருக்கும்?
உங்களை அவா கேட்பது போலத் தானே!
அவ்............

நிரூபன் said...
Best Blogger Tips

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி

அடப்பாவி இப்படியெல்லாம் இருக்கோ? அப்படியெண்டா என்னை பாராட்டி நாலு கட்டுரை போடு! அப்பத்தான் வேலை தருவன்! அதோட நிரு நீர் ஒரு கெட்டிக்காரன் எண்டு எனக்குத் தெரியும்!

அதால பிரைம் டைம் நிகழ்ச்சிகள் உமக்கு தரேலாது! பிறகு என்ர பேர் கெட்டுப் போடும்//

மாப்பு, என்ன தான் இருந்தாலும் எனக்கு காலை வேளை நிகழ்ச்சி தருவாய் என்று சத்தியம் செய்தால் தான், நான் நிகழ்ச்சிப் பணிப்பாளராக இருப்பேன். இல்லே என்றால் இப்பவே மலைத் தொடரில் இருக்கிற ரேடியோக்காரர் அடிக்கடி போன் பண்ணி என்னைத் தங்களின் வானொலியுடன் இணையச் சொல்லிக் கேட்கிறாங்க.
உனக்கு டாட்டா காட்டிட்டு ஓடிடுவேன்!
ஏதோ தெளிவான ஒரு முடிவை எடு மாப்பு.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

நிரு, இந்தியாவில் சினிமா நடிகர் நடிகைகளுக்கு நட்சத்திர அந்தஸ்து இருப்பது போல இலங்கையில் நட்சத்திர அந்தஸ்து பெற்றவர்கள் ரேடியோக்காரர்கள்!

ஒருவர் நட்சத்திர அந்தஸ்து பெற்றால் அவருக்கு சில கட்டுப்பாடுகள் இருக்க வேணும்! சில தகுதிகள் இருக்கவேணும்!

ஹி ஹி ஹி இலங்கையில நட்சத்திர அந்தஸ்து பெற்றவர்களுக்கு, அதை மெயிண்ட்டெயின் பண்ணத் தெரியாது!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

நிரு...... கொஞ்சம் வேலை கிடக்கு பிறகு வாறன்

ராஜ நடராஜன் said...
Best Blogger Tips

வன்னித் தமிழை வட்டார வழக்கோடு கூடவே உண்மைகளையும் எழுத்தில் கொண்டு வந்துள்ளீர்கள்.

இன்னும் வானொலிக்கான மயக்கம் இலஙகையில் இருப்பது கண்டு மகிழ்ச்சி.

தமிழ் ஓசைக்கும்,திரைப்பாடல்களுக்கும்,வர்ணனைக்கும் இலங்கை வானொலியே நிறைய பங்களித்திருக்கிறது.

Anonymous said...
Best Blogger Tips

வணக்கம் பாஸ் ...

Anonymous said...
Best Blogger Tips

வந்தனம் பாஸ் ...

Anonymous said...
Best Blogger Tips

வந்துதான் பாஸ் ....

Anonymous said...
Best Blogger Tips

////வன்னியின் அவல வாழ்வினைச் சந்தித்த மானமுள்ள தமிழர்கள் வரிசையில், முட்கம்பி வேலிகளைக் கடந்து, முகாமெனும் கோர முகத்தினுள் உள் இழுக்கப்பட்டவனாய், காற் தடங்களை தம் மீது அழுந்தப் பதித்தவர்களுக்கு, அவர்கள் முகத்தில் அடித்தாற் போல, எல்லாம் இழந்து போனால் என்ன, எமக்கு வாழ நம்பிக்கை இருக்கிறது’///// என்னே அழுத்தமான வரிகள்....

ராஜ நடராஜன் said...
Best Blogger Tips

//இதெல்லாம் கொச்சை தமிழ் எண்டு யார் சொன்னது? இதுதான் நல்ல தமிழ்!

இன்று - கொச்சை தமிழ்
இன்ரு - நல்ல தமிழ்

நன்றி - கொ.த
நன்ரி - நல்ல தமிழ்!//

குட்டு...குட்டு....எழுத்தில் குட்டு
தட்டு...தட்டு....தமிழில் தட்டு

Anonymous said...
Best Blogger Tips

/////’அதுவும் நந்தவனம் பத்திரிகையில் பேரலை எப் எம் பணிப்பாளரைப் பற்றி ஒரு தனிப் பக்க கட்டுரை எழுதி, அதனை கட்டிங்க் எடுத்து அந்தப் பணிப்பாளருக்கு அனுப்பித் தானே நீ அறிவிப்பாளர் ஆகினனி மச்சான்!! இது நிலவனுக்கு சேந்தனிடமிருந்து கிடைத்த அடுத்த அடி!//// இதை தான் காக்கா பிடித்தல் என்பார்களோ ஓ!!!!

Anonymous said...
Best Blogger Tips

///மந்தை மேற்குப் பகுதிப் பிரதேச செயலர் பிரிவில், ///ஆடு மாடுக்கேல்லாம் செயலகம் வாச்சாசோ )

Anonymous said...
Best Blogger Tips

////யாவும் கற்பனையல்ல……///என்னய்யா பின்னுக்கு ஒரு குண்டை தூக்கி போடுறியள் ...:p

நிரூபன் said...
Best Blogger Tips

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி

நிரு, இந்தியாவில் சினிமா நடிகர் நடிகைகளுக்கு நட்சத்திர அந்தஸ்து இருப்பது போல இலங்கையில் நட்சத்திர அந்தஸ்து பெற்றவர்கள் ரேடியோக்காரர்கள்!

ஒருவர் நட்சத்திர அந்தஸ்து பெற்றால் அவருக்கு சில கட்டுப்பாடுகள் இருக்க வேணும்! சில தகுதிகள் இருக்கவேணும்!

ஹி ஹி ஹி இலங்கையில நட்சத்திர அந்தஸ்து பெற்றவர்களுக்கு, அதை மெயிண்ட்டெயின் பண்ணத் தெரியாது!//


பாஸ், இப்ப இந்த சீனுக்கு நான் நித்திரை! அவ்...

நிரூபன் said...
Best Blogger Tips

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி


நிரு...... கொஞ்சம் வேலை கிடக்கு பிறகு வாறன்//

அடுத்ததாக என்ன விளம்பரம் போடுறது என்று சொல்லிப் புட்டுப் போனால் தானே நான் போட முடியும், அவ்...

நிரூபன் said...
Best Blogger Tips

@ராஜ நடராஜன்

வன்னித் தமிழை வட்டார வழக்கோடு கூடவே உண்மைகளையும் எழுத்தில் கொண்டு வந்துள்ளீர்கள்.

இன்னும் வானொலிக்கான மயக்கம் இலஙகையில் இருப்பது கண்டு மகிழ்ச்சி.

தமிழ் ஓசைக்கும்,திரைப்பாடல்களுக்கும்,வர்ணனைக்கும் இலங்கை வானொலியே நிறைய பங்களித்திருக்கிறது.//


ஆமாம் சகோ, இலங்கை வானொலியின் தமிழ் உச்சரிப்பு, தரமான நிகழ்ச்சிகளோடு கட்டுண்டு இருந்த காலங்களை மறக்க முடியுமா சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@கந்தசாமி.

வணக்கம் பாஸ் ...//

ஹலோ வணக்கம் சொல்லுங்கோ!
நீங்கள் இணைந்திருப்பது காலை வணக்கம் நிகழ்ச்சி!

தனிமரம் said...
Best Blogger Tips

வணக்கம் நேயர்களே ! 
நான் இப்போது வாசித்துக்கொண்டிருப்பது நாற்றின் வலைப் பதிவை இது பாரிஸ்  நேரம் இரவு 9.40 நிமிடங்கள் ! தொடர்ந்து வாசிக்க முன்னர் சில விளம்பர இடைவெளி!

நிரூபன் said...
Best Blogger Tips

@கந்தசாமி.


வந்தனம் பாஸ் ...//

முதலில் உங்களின் வானொலிப் பெட்டியின் சத்தத்தைக் கொஞ்சம் குறைச்சு வைக்க முடியுமோ. நீங்கள் கதைப்பது எனக்கு இரண்டாக கேட்கிறது. எக்கோ பண்ணுறது கந்தசாமி!

நிரூபன் said...
Best Blogger Tips

@கந்தசாமி.


வந்துதான் பாஸ் ....//

வந்தது பெண்ணா பாடல் வேண்டுமா?
ஓக்கே, அவள் வருவாளா திரைப்படத்திலிருந்து எஸ். ஏ ராஜ்குமாரின் இசையில் நீங்கள் கேட்ட ஓ...வந்தது பெண்ணா பாடல் உங்கள் பேரலை எப். எம் இனூடாக இப்போது உங்களை நாடி வரவிருக்கிறது.

கந்ஸ்சாமி! இந்தப் பாடலை யார் யாருக்கெல்லாம் விரும்பிக் கேட்கப் போறீங்க.

நிரூபன் said...
Best Blogger Tips

@கந்தசாமி.

என்னே அழுத்தமான வரிகள்....//

என்ன, உங்கடை பக்கத்து வீட்டுப் பொண்ணுக்கும் சேர்த்துப் பாடல் விரும்பிக் கேட்கிறீங்களா.

வானொலிப் பெட்டியின் சத்தத்தைக் குறைச்சு வைக்கச் சொல்லி உங்களுக்கு எத்தனை தடவை சொல்லுறது.

தனிமரம் said...
Best Blogger Tips

நேயர்களே இரவின் மடியில் ஒலிக்கும் நேரத்தில் ஒலிபரப்பில் ஏற்பட்ட தடங்களுக்கு வருந்துகிறோம் எங்கள் அறிவிப்பாளர் ஒருவரின் உண்மை உருவம் வலையில் ஏறியுள்ளது அங்கே நடப்பதை நேரஞ்சல் செய்ய நண்பர் ஓட்டை வடை காத்திருக்கிறார் அவரிடம் என் கோப்பையை மன்னிக்கனும்முங்கோ மைக் கையழிக்கிறேன்!

நிரூபன் said...
Best Blogger Tips

@ராஜ நடராஜன்

/இதெல்லாம் கொச்சை தமிழ் எண்டு யார் சொன்னது? இதுதான் நல்ல தமிழ்!

இன்று - கொச்சை தமிழ்
இன்ரு - நல்ல தமிழ்

நன்றி - கொ.த
நன்ரி - நல்ல தமிழ்!//

குட்டு...குட்டு....எழுத்தில் குட்டு
தட்டு...தட்டு....தமிழில் தட்டு//

இன்றைய வானொலித் தமிழை நன்றாகத் தான் புரிந்து வைத்திருக்கிறீர்கள் சகோ.

நன்றிகள் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@கந்தசாமி.
இதை தான் காக்கா பிடித்தல் என்பார்களோ ஓ!!!!//

நேயரே, நீங்கல் அழைப்பில் இணைந்திருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் பேசுவது தெளிவாகக் கேட்கவில்லை.

நிரூபன் said...
Best Blogger Tips

@கந்தசாமி.


///மந்தை மேற்குப் பகுதிப் பிரதேச செயலர் பிரிவில், ///ஆடு மாடுக்கேல்லாம் செயலகம் வாச்சாசோ )//

யோ, அது மாந்தை மேற்குப் பகுதி ஐயா...
என்ன சின்னப் புள்ளைத் தனமா இருக்கு.
யாராச்சும் எழுத்துப் பிழையைக் கண்டு பிடிச்சு ஒலி ஒளியில் விமர்சனமா எழுதி என்னயைப் பிரபலமாக்கிறதை வுட்டிட்டி, விளக்கம் கொடுக்கிறீங்க. விளக்கம்!

தனிமரம் said...
Best Blogger Tips

இப்போது நேரம் நெஞ்சத்தை க்கிள்ளும் பாடல்கள் ஒலிக்கும் இதயராகம் கேட்கும் நேரத்தில் அடுப்பில் ஆடு கொதிக்கிறது ஆசை துடிக்கிறது அதிகாலை நிகழ்ச்சி செய்யனும் இப்போது விடை பெறுவது கடல்கடந்து  ஓடிவந்த உறவுப்பாலம் நிகழ்ச்சி அன்பு அறிவிப்/அரிவிப்பாளர்/ பனையின் குட்டி வராங்கள் வாராங்கள் குறியிசை ஒலிக்கிறது!

நிரூபன் said...
Best Blogger Tips

@Nesan


வணக்கம் நேயர்களே !
நான் இப்போது வாசித்துக்கொண்டிருப்பது நாற்றின் வலைப் பதிவை இது பாரிஸ் நேரம் இரவு 9.40 நிமிடங்கள் ! தொடர்ந்து வாசிக்க முன்னர் சில விளம்பர இடைவெளி!//

வணக்கம் அண்ணா! உங்களின் வானொலியில் நீங்கள் கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரங்களைத் தான் போடுவீர்களா?
இல்லைக் கட்டணம் செலுத்தாத விளம்பரங்களையும் சேர்த்துக் கொள்வீர்களா.

என்ரை புது லுமாலா சைக்கிள் ஒன்று விற்பனைக்குண்டு! அதனையும் விளம்பரமாகப் போட முடியுமே!

அத்தோடு பெரியம்மா வீட்டிலிருந்து பெரியம்மாவின் பிள்ளைகளின் பழைய உடு புடவைகள்(ஆடைகள்) எறியும் நிலையில் இருக்கு. அதனை ஏதாவது இடர் முகாமைத்துவப் பணிக்கு ஏற்றுக் கொள்ள முடியுமோ?
அப்படியே சைட் கப்பிலை சனங்களுக்கு உதவி செய்கிறதா உங்கடை பேரையும் தடித்த எழுத்தில் பத்திரிகையில் விளம்பரமாகப் போட உங்களின் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

நிரூபன் said...
Best Blogger Tips

@Nesan

நேயர்களே இரவின் மடியில் ஒலிக்கும் நேரத்தில் ஒலிபரப்பில் ஏற்பட்ட தடங்களுக்கு வருந்துகிறோம் எங்கள் அறிவிப்பாளர் ஒருவரின் உண்மை உருவம் வலையில் ஏறியுள்ளது அங்கே நடப்பதை நேரஞ்சல் செய்ய நண்பர் ஓட்டை வடை காத்திருக்கிறார் அவரிடம் என் கோப்பையை மன்னிக்கனும்முங்கோ மைக் கையழிக்கிறேன்!//

வணக்கம் நேயரே! யார் கதைக்கிறீங்க, பாரிசில் இருந்து நேசனோ!
ஓ நேசன் நீங்கள் பேசுவது தெளிவாகக் கேட்கவில்லை!
பீப்....பீப்...பீம்...
லைன் கட்டாப் போச்சுப் போல இருக்கே.
அடுத்த இணைப்பில் யார் இணைந்திருக்கிறார் என்று பார்ப்போம்.

தனிமரம் said...
Best Blogger Tips

எனக்கும் ஆசை இருந்து குரல் தேர்விற்கும் போனேன் அந்த சமயத்தில் ஏற்பட்ட வெடிகுண்டு வெடிப்பில் நிகழ்ச்சி தள்ளிவைக்கப் பட்டது பிறகு கடிதம் போடுவதாக கூறினார்கள் அதற்குள் கடல் கடந்து என் தமிழை காத்துவிட்டேன் நண்பா ரசிகனாகவே இருப்பம் நன்மை!

தனிமரம் said...
Best Blogger Tips

எல்லாவற்றையும் விட ஒரு கொடுமை அன்நாட்களில் ஒரு தனியார் வானொலி அயல்நாட்டில் இருந்து பிரபல்ய பின்னனிப்பாடகரின் மகனை வைத்து நிகழ்ச்சி செய்தார்கள் அவர்கள் நிகழ்ச்சி செய்ததை விடகாதல் செய்து ஜோடியானார்கள் ! திறமையானவர்களுக்கு பஞ்சம் இல்லாத நாட்டில் என்ன செய்வது பணம்தானே ஆளுகிறது! எல்லா இடத்தையும்!

தனிமரம் said...
Best Blogger Tips

சில அறிவிப்பாளர்கள் முன்னர் k.s.ராஜா,பரா ,ஹமீத்,ராஜேஸ்வரி,நடா போன்றவர்களை  தந்த நிலையத்தில் இன்று புதுயுகம் என்று சொல்லிக்கொண்டு  சிலரின் சில்லறைத்தனம் சகிக்கமுடியாது!

தனிமரம் said...
Best Blogger Tips

நேயர்களிடம் அன்பாக பேசுறம் என்று இவர்கள் செய்யும் அலுப்பறை என்ன வென்று சொல்லுவது!

தனிமரம் said...
Best Blogger Tips

தூங்காத நெஞ்சங்களை தாலாட்ட துள்ளி/துல்லி வருகிறது இடைவிடா இசை தனிக்குத்துப் பாட்டு பாவம் அடுத்த வீட்டுக்காரன் நித்திரைக்கு ஆப்பு என்ன கொடுமை சகோ!

தனிமரம் said...
Best Blogger Tips

மெல்லிசை,நம்மவர் இசைக்கு வாரத்தில் ஒரு அரைமணித்தியாலம் அடுத்தவர் நாட்டு துள்ளிசைக்கு 24மணித்தியாலம் போட்டே உதைத்தான் விரும்புகினம் என்று வியாக்கியானம் வேற உவையள்தான் சொல்லினம்!

தனிமரம் said...
Best Blogger Tips

இலக்கிய உணர்வு ,பாடல் திறமை ,மிமிக்கிரி, நகைச்சுவை அறிவுத்தேடலுக்கு இடம் இல்லை தெரியாதவர்கள் வரலாம் இது புதிய தலைமுறையின் முதல்தரமானது உவையல் தான் முதல் பாடல் போட்டவர்கள்!

செங்கோவி said...
Best Blogger Tips

உங்கள் கதை பழைய இலங்கைப் பண்பலை ஞாபகங்களைக் கிளறி விட்டது..அதுவும் தற்போதைய உச்சரிப்புகள் (இங்கு) நம் கடுப்பைக் கிளப்புகின்றன.

நிகழ்வுகள் said...
Best Blogger Tips

வானொலிப் பெட்டியின் சத்தத்தைக் குறைச்சு வைக்கச் சொல்லி உங்களுக்கு எத்தனை தடவை சொல்லுறது. /// யோவ்! இப்ப தானேய்யா ஒலிபரப்பினிங்க "சத்தமா வானொலி கேட்ப்பவர்களுக்கு ஒரு தொலைக்காட்சி பெட்டி பரிசு எண்டு"

ஒக்காந்து ஒரு முடிவுக்கு வாங்கையா! நான் அப்புறமா வர்றன்..

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

வணக்கம் நிருபன்! உங்களோட ' இணைஞ்சிருக்கிற ' நான், உங்கள் ஓட்ட வட நாராயணன், நான் ' இணைஞ்சு ' முடிஞ்சாப்பிறகு, நீங்கள் பன்னிக்குட்டி ராம்சாமியோட ' இணையலாம்' , அவரோட ரெண்டு மணித்தியாலம் இணைஞ்சிருந்திட்டு, பிறகு காலம செந்தில்குமார் வருவார், அவரோட ' இணையலாம் '

இப்படியே நாள் முழுக்க ' இணைந்சிருந்து ' மகிழ்ச்சியா, இருக்கலாம்! இதோ எமது புதிய பெண் அறிவிப்பாளர் கலையகம் வந்திருக்கிறா, அவாவோடையும் நேயர்கள் அனைவனையும் ' இணைந்திருக்குமாறு ' கேட்டுக்கொள்கிறேன்!

அவ்வ்வ்வவ்வ்வ்.....!!! நிரு நான் சரியாகத்தான் பேசுறேனா? ஒன்னும் யெல்லோ கலர்ல இல்லைத்தானே!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

அறிவிப்பாளர் : நேயர்களே தொடர்ந்தும் உங்கள் ' பக்தியோடு ' இணைந்திருங்கள்!

நேயர்கள் : ஓகே இணைஞ்சிருக்கிறம்

( இரண்டு வருடங்களின் பின்னர் )

அறிவிப்பாளர் : நேயர்களே உங்கள் ' ஆரியன் ' உடன் இணைந்திருங்கள்!

நேயர்கள் : என்ன இவர் மாறி கீறி சொல்லிப்போட்டாரோ? சரி பரவாயில்லை! இணைஞ்சிருக்கிறம்

( சில வருடங்களின் பின்னர் )

அறிவிப்பாளர் : நேயர்களே உங்கள் ' பற்றி ' யோடு இணைந்திருங்கள்!

முதலாவது நேயர் : நோ, பற்றி யோட எப்படி இணையிறது? பற்றிய ரேடியோவுக்குள்ள போட்டுட்டம்!

ரெண்டாவது நேயர் : சரி போனாப் போவுது, பற்றியோட இனையிறம், ஆனா சேர், எத்தினை வருஷம்? எத்தினை மாதம் பற்றியோட இணைந்சிருக்கிறது எண்டு முற்கூட்டியே சொன்னால் கொஞ்சம் வசதியா இருக்கும்! ஏனென்டா நீங்கள் திடீரெண்டு காணாமல் போடுவீங்கள்!

( இன்னும் சில வருடங்களின் பின்னர் )

அறிவிப்பாளர் : நேயர்களே நான் இப்போது ஆளுங் கட்சியில இணைசிருக்கிரன். நீங்களும் இணைந்சிருங்கோ!

பொதுசனம் : அண்ணே நீங்கள் எப்போது எதிர்கட்சிக்கு மாறுவீங்கள்? ரேடியோவிலேயே ஒரு இடத்தில இருக்க மாட்டியள்! அரசியல்ல.........!!!!!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

சம்பவம் : புதன் கிரகத்தில், அமெரிக்க விண்வெளி வீரர்கள் - தண்ணீர் எடுக்கிறார்கள்! - வானொலியில் நேரடி ஒலிபரப்பு!

கலையாக அறிவிப்பாளர்: நேயர்களே புதன் கிரகத்தில் இப்போது அமெரிக்க விண்வெளி வீரர்கள் தண்ணீர் எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்! தொலைக்காட்சி வழியே அந்தக் காட்சியை பார்த்துக்கொண்டு இருக்கிறம், இதோ ஒரு விண்வெளி வீரர், மண்ணை தோண்டுகிறார், அங்கே தண்ணீர் சுரக்கிறது! இதனை மிக அழகாக தொலைக்காட்சியில் காட்டுகிறார்கள்!

இப்போது அங்கு நேரடியாக சென்றிருக்கும் எமது சக அறிவிப்பாளரை தொடர்பு கொள்வோம்! வணக்கம் அண்ணே!

அறிவிப்பாளர்: நான் இப்போது புதன் கிரகத்தில் இருந்து பேசிக்கொண்டு இருக்கிறேன்! வாற வழியில ஒரே செக்கிங்! போனை, கமெராவ எல்லாத்தையும் பறிச்சுப் போட்டாங்கள்!

கலையக அறிவிப்பாளர் : அண்ணே தண்ணி வந்தத பார்த்திட்டீன்களோ?

அறிவிப்பாளர்: இல்ல கிட்ட நெருங்க முடியல ஒரே கூட்டமா இருக்கு!

பொதுசனம் : அதான் கலையகத்தில இருந்தே டி வி யா பார்த்து சொல்லீட்டினமே, பிறகேன் உவையள் காசை சிலவளிச்சுகொண்டு அங்க போனவை?

Mahan.Thamesh said...
Best Blogger Tips

ம்ம் நம் நாட்டில் பணத்தினை வாரியிறைத்து தான் வேலையினை பெறவேண்டியுள்ளது.
திறமையிருந்தும் பலர் தங்கள் திறமைக்கான வேலையினை பெறமுடியாதுள்ளது சகோ .
இலங்கையில் உள்ள உயர் நிலைகளில் பணியாற்றும் பெரும்பாலானவர்கள் பணம் படைத்தவர்களே

விடியல் said...
Best Blogger Tips

நிருபன், ஓட்டவடை, நேசன் நீங்களெல்லாம் இறுதி யுத்தத்தோடு காணமாற் போயிருக்க வேண்டிய நபர்கள். முற் பிறப்பில் செய்த பிறவிப் பயனாகத் தான் இப்போது பிழைத்திருக்கிறீர்கள் என நினைக்கிறேன்.

கற்பனைகளையும், கட்டுக் கதைகளையும் கதையாக எழுதிப் பெயரெடுப்பதை விடுத்து நீங்கள் ஏன் இறுதிப் போரில் சாகவில்லை என்பதனை எழுதலாமே இலங்கையில் உள்ள எந்த ஒரு வானொலியிலும் நீங்கள் பதிவில் கூறியுள்ளது போன்று இதுவரை எந்தச் சம்பவமும் இடம் பெற்றதில்லை. ஆகவே இந்த பதிவை நீக்கி விடுங்கள். இல்லையேல் உங்கள் வலைபதிவினை நாங்களாக முடக்கி வைக்க வேண்டிய நிலமைக்கு நீங்கள் ஆளாகலாம்.

Unknown said...
Best Blogger Tips

நிரூ,இப்படி பேய் உலாவுற நேரத்தில பதிவு போட்டால் நாம வடை வாங்க முடியாதே!!

Unknown said...
Best Blogger Tips

ஏலே யாரோ கொலை மிரட்டல் விடுக்கிரான்கப்பா............
பயன்திடுவோம் பயன்திடுவோம்...இல்லாவிட்டால் நிலைத்து நிக்கேலாது

Unknown said...
Best Blogger Tips

அருமையான உரை நடை!!!
உண்மையின் உரை நடை!!!
இருப்பது கொஞ்ச வானொலிகளே...
நான் நினைக்கிறேன் எல்லாவற்றிலும் எல்லாம் இருக்கவேண்டும் போல சேர!!

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

>>இச் சிறுகதையின்;
கரு வடிவம்: மிஸ்டர் ஓட்ட வடை நாராயணன், ஓணர் ஆப் மாத்தியோசி.
எழுத்து வடிவம்: செல்வராஜா நிரூபன்.

hi hi அப்படியே டைட்டில் ஐடியா மிஸ்டர் ஓட்ட வடை நாராயணன், ஓணர் ஆப் மாத்தியோசி.

எனவும் போட்டிருக்கலாம்

ஹா ஹா

தமிழ்வாசி பிரகாஷ் said...
Best Blogger Tips

அருமையான கதை அமைப்பு.

தமிழ்வாசி பிரகாஷ் said...
Best Blogger Tips

நீங்க சொல்லியிருக்கற நடை அருமை சகோ

Unknown said...
Best Blogger Tips

என்னே ஒரு விஷயம் மாப்ள நன்றி!

Anonymous said...
Best Blogger Tips

அறிவிப்பாளர்கள் பற்றிய சுவையான தொகுப்பு

Anonymous said...
Best Blogger Tips

அர்4உமையான சுவையான எழுத்து நடை

சசிகுமார் said...
Best Blogger Tips

சாரி தங்களின் எழுத்து வடிவம் நன்றாக இருக்கு சார்.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

அய்யய்யோ யாரோ கொலைமிரட்டல் விட்டுட்டாங்க! ரொம்ப பயமா இருக்கு! நிரு .... நீங்களும் பயப்பிடுங்க! ( யோவ் பயம் வராட்டியும், வந்தமாதிரி நடிய்யா ) நிரு இந்தப் பதிவ தூக்கிடுங்க! நேசன் நீங்களும் பயப்பிடுங்க! எனக்கு ஒரே பயமா இருக்கு! இருங்க உச்சா போய்ட்டு வந்துடறேன்! ( என்னது உச்சா வரலேன்னா, அவங்களோட ரேடியோ கேக்கணுமா? ஆளை விடுடா சாமீ..........!!!!)

ம.தி.சுதா said...
Best Blogger Tips

மிகவும் அருமையான எழுத்து நடை நிரு... இந்த துறையில் எனக்கு அறிமுகங்கள் இருந்தாலும் துறை சார் பரிட்சையமில்லை ஏதோ ஒரு கொஞ்ச நாள் கிரிக்கேட் வர்ணனை செய்தது மட்டுமே (சேவையாக) இருக்கும் அனுபவம்...

ம.தி.சுதா said...
Best Blogger Tips

ஃஃஃஃஃஅய்யய்யோ யாரோ கொலைமிரட்டல் விட்டுட்டாங்க! ஃஃஃஃ

உண்மையாவா ஐயோ எஸ்கேப்பு...

கார்த்தி said...
Best Blogger Tips

/* பல வேலை தளங்களிலும் இவ்வாறான சிபாரிசுகள்தான்! அதற்காக ஒட்டு மொத்தமாக வானொலிகளை கிண்டலடிப்பது சரியாக படவில்லை! */

நீங்கள் பிழையாக விளங்கிவிட்டீர்கள். மீண்டும் சொல்கிறேன் இங்கே நான் கூற வந்தவிடயம் பல துறைகளிலும் இவ்வாறான தவறுகள் இடம்பெறுகின்றன. அதற்காக ஏன் வானொலிதுறையை இழுக்கின்றீர்கள் என்றே கேக்கிறேன். சொல்வதற்கு மன்னிக்கவும் நண்பா உங்கள் கருத்துக்களுடன் நான் ஒத்துப்போகவில்லை.
மதி.சுதா சொன்னது போல நானும் Escape......

தனிமரம் said...
Best Blogger Tips

நண்பா இங்கு கருத்துச்சுதந்திரம் இருக்கும் நிலையை என்னித்தான் சக்கரம் படத்தில் a.m.ராஜா பாடுவார் காசேதான் கடவுள் அப்பாட யாரோ கொலைமிரட்டல் விடுகிறார்  நண்பா நான் மதியம் செய்தி வாசிக்கனும் இன்னும் குத்துப் பாட்டு கேட்கனும் ஆளை விடுங்க  சுனாமியே பார்த்திட்டு வாரன்!

ஆதிரை said...
Best Blogger Tips

நிரூபன்,
நேரடியாகவே கேட்கிறேன்... நேரடியாகவே பதில் தருவீர்கள் என்ற நம்பிக்கையில்!

வானொலியில் அறிவிப்பாளராவதற்கு பணம் கேட்டார்கள் என இங்கே நீங்கள் குறிப்பிட்டிருப்பது உண்மைச் சம்பவமா? அல்லது உங்களின் கற்பனையில் உதித்த சோடிப்பா?


@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி,
WTH (for your comments)

ஷர்புதீன் said...
Best Blogger Tips

தமிழ் நிருபர் திரட்டியின் முகப்பு வாசகம் போல் தெரிகிறதே சில வார்த்தைகள் உங்கள் இடுக்கையில்

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

அருமையா சொல்லி இருக்கீங்க மக்கா...!!

Vathees Varunan said...
Best Blogger Tips

இங்கே ஆதிரை கேட்ட விடயத்தைத்தான் நானும் கேட்கிறேன் இது உண்மையிலே நடந்த சம்பவமா? ஏனென்றால் எனக்கு தெரிந்தவரையில் அறிவிப்பாளர் ஆகுவதற்கு அப்படியான பணம்கொடுக்கும் சம்பவங்களைப்பற்றி நான் கேள்விப்பட்டதில்லை ஆனால் வங்கிகளில் வேலைசெய்வதற்கு 4 இலட்சம் வரையிலும் பணம்கொடுத்தவர்களை நான் நேரடியாகவே பார்த்திருக்கின்றேன்

Vathees Varunan said...
Best Blogger Tips

பதிலளிப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறன்

சென்னை பித்தன் said...
Best Blogger Tips

நடைமுறை யதார்த்தத்தை எடுத்தியம்பும் ந்ல்ல கதை!

Mathuran said...
Best Blogger Tips

ரொம்ப அனுபவிச்சிருக்குறீங்க என்று விளங்குது

நிரூபன் said...
Best Blogger Tips

@Nesan

எனக்கும் ஆசை இருந்து குரல் தேர்விற்கும் போனேன் அந்த சமயத்தில் ஏற்பட்ட வெடிகுண்டு வெடிப்பில் நிகழ்ச்சி தள்ளிவைக்கப் பட்டது பிறகு கடிதம் போடுவதாக கூறினார்கள் அதற்குள் கடல் கடந்து என் தமிழை காத்துவிட்டேன் நண்பா ரசிகனாகவே இருப்பம் நன்மை!//

ஆஹா.. உங்களுக்குப் பரந்த மனசு சகோ, நன்றிகள் சகா.

நிரூபன் said...
Best Blogger Tips

@Nesan


எல்லாவற்றையும் விட ஒரு கொடுமை அன்நாட்களில் ஒரு தனியார் வானொலி அயல்நாட்டில் இருந்து பிரபல்ய பின்னனிப்பாடகரின் மகனை வைத்து நிகழ்ச்சி செய்தார்கள் அவர்கள் நிகழ்ச்சி செய்ததை விடகாதல் செய்து ஜோடியானார்கள் ! திறமையானவர்களுக்கு பஞ்சம் இல்லாத நாட்டில் என்ன செய்வது பணம்தானே ஆளுகிறது! எல்லா இடத்தையும்!//

இப்பொழுது எங்களூரில் இது ஓர் பாஷன் ஆகிவிட்டது, உள்ளூர்க் கலைஞர்களின் திறமைகளுக்கு முன்னுரிமை கொடுப்பதை விட, ஒரு சில வானொலிகள் வெளியூர் கலைஞர்களுக்குத் தான் பட்டாபிஷேகம் செய்து மகிழ்கின்றன.

நிரூபன் said...
Best Blogger Tips

@Nesan

சில அறிவிப்பாளர்கள் முன்னர் k.s.ராஜா,பரா ,ஹமீத்,ராஜேஸ்வரி,நடா போன்றவர்களை தந்த நிலையத்தில் இன்று புதுயுகம் என்று சொல்லிக்கொண்டு சிலரின் சில்லறைத்தனம் சகிக்கமுடியாது!//

இந்த மணித்தியாலத்தின் வேற்று மொழிப் பாடலை ஒலிபரப்பிய நேசன் அவர்களுக்கு நன்றிகள்.

என்னய்யா, பிரெஞ் மொழியில் பாட்டைப் போட்டால் எனக்குப் புரியுமா;-))

நிரூபன் said...
Best Blogger Tips

@Nesan


நேயர்களிடம் அன்பாக பேசுறம் என்று இவர்கள் செய்யும் அலுப்பறை என்ன வென்று சொல்லுவது!//

எக்ஸ் கியூஸ் மீ, நேசன், உங்கடை வானொலிப் பெட்டியின் சத்தத்தைக் கொஞ்சம் குறைத்து வைக்க முடியுமா?

நிரூபன் said...
Best Blogger Tips

@Nesan


மெல்லிசை,நம்மவர் இசைக்கு வாரத்தில் ஒரு அரைமணித்தியாலம் அடுத்தவர் நாட்டு துள்ளிசைக்கு 24மணித்தியாலம் போட்டே உதைத்தான் விரும்புகினம் என்று வியாக்கியானம் வேற உவையள்தான் சொல்லினம்!//

யோ, உம்மட்டை நிகழ்ச்சியைச் செய்யச் சொல்லித் தந்தால், ஊர் வம்பளக்கிறீங்க சகா.


இப்போது தானே மணித்தியாலத்திற்கு ஒரு தடவை நம்ம கற்ஸ் போடுறோமே, அது போதாதா உங்களுக்கு.

நிரூபன் said...
Best Blogger Tips

@Nesan

இலக்கிய உணர்வு ,பாடல் திறமை ,மிமிக்கிரி, நகைச்சுவை அறிவுத்தேடலுக்கு இடம் இல்லை தெரியாதவர்கள் வரலாம் இது புதிய தலைமுறையின் முதல்தரமானது உவையல் தான் முதல் பாடல் போட்டவர்கள்!//

இது என்ன என் வானொலிக்குப் போட்டியா, நீர் புது வானொலி தொடங்கும் ஆலோசனையில், எனக்குத் தெரியாமல் ரகசியமாக விளம்பரம் தயாரிக்கிறீங்க போல இருக்கே((((;

நிரூபன் said...
Best Blogger Tips

@செங்கோவி

உங்கள் கதை பழைய இலங்கைப் பண்பலை ஞாபகங்களைக் கிளறி விட்டது..அதுவும் தற்போதைய உச்சரிப்புகள் (இங்கு) நம் கடுப்பைக் கிளப்புகின்றன.//

யோ, நீங்க என்ன சின்னப் புள்ளத் தனமாகப் பேசுறீங்க.
இது தான் இப்போதைய நேயர்களின் விருப்பமாக இருக்கல்லவா. ஆகவே உங்கள் தெரிவே! எங்கள் சேவை மாப்பு!

நிரூபன் said...
Best Blogger Tips

@நிகழ்வுகள்

வானொலிப் பெட்டியின் சத்தத்தைக் குறைச்சு வைக்கச் சொல்லி உங்களுக்கு எத்தனை தடவை சொல்லுறது. /// யோவ்! இப்ப தானேய்யா ஒலிபரப்பினிங்க "சத்தமா வானொலி கேட்ப்பவர்களுக்கு ஒரு தொலைக்காட்சி பெட்டி பரிசு எண்டு"

ஒக்காந்து ஒரு முடிவுக்கு வாங்கையா! நான் அப்புறமா வர்றன்.//

நாம எப்போ இதனைச் சொன்னாங்க?
நீங்க கேட்டது பழைய ரேடியோவிலை,
இப்ப நாங்கள் சொல்வது புதிய ரேடியோவில்.
அது அப்போ;-))
இது இப்போ;-))

சைட் கப்பிலை ஆட்டையைப் போடுற நோக்கமா.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி

வணக்கம் நிருபன்! உங்களோட ' இணைஞ்சிருக்கிற ' நான், உங்கள் ஓட்ட வட நாராயணன், நான் ' இணைஞ்சு ' முடிஞ்சாப்பிறகு, நீங்கள் பன்னிக்குட்டி ராம்சாமியோட ' இணையலாம்' , அவரோட ரெண்டு மணித்தியாலம் இணைஞ்சிருந்திட்டு, பிறகு காலம செந்தில்குமார் வருவார், அவரோட ' இணையலாம் '

இப்படியே நாள் முழுக்க ' இணைந்சிருந்து ' மகிழ்ச்சியா, இருக்கலாம்! இதோ எமது புதிய பெண் அறிவிப்பாளர் கலையகம் வந்திருக்கிறா, அவாவோடையும் நேயர்கள் அனைவனையும் ' இணைந்திருக்குமாறு ' கேட்டுக்கொள்கிறேன்!

அவ்வ்வ்வவ்வ்வ்.....!!! நிரு நான் சரியாகத்தான் பேசுறேனா? ஒன்னும் யெல்லோ கலர்ல இல்லைத்தானே!//

இருபத்தி நான்கு மணி நேர வானொலி என்பதன் அர்த்தம் இது தானோ..
அவ்...
அப்போ அடுத்து நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவது யாரு?

நிரூபன் said...
Best Blogger Tips

@FOOD


எடுத்து சொல்லியுள்ள விதம் அருமை//

நன்றிகள் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@விடியல்
நிருபன், ஓட்டவடை, நேசன் நீங்களெல்லாம் இறுதி யுத்தத்தோடு காணமாற் போயிருக்க வேண்டிய நபர்கள். முற் பிறப்பில் செய்த பிறவிப் பயனாகத் தான் இப்போது பிழைத்திருக்கிறீர்கள் என நினைக்கிறேன்.//

ஐயோ, தாயி! காளியம்மா காப்பாத்து!
யோ நாங்கள் சாகிறதில் உங்களுக்குச் சந்தோசம் என்றால் எங்களைப் போட்டுத் தள்ளிட வேண்டியது தானே, ரொம்ப ஓவரா அறிக்கை வுடுறீஙக.

கற்பனைகளையும், கட்டுக் கதைகளையும் கதையாக எழுதிப் பெயரெடுப்பதை விடுத்து நீங்கள் ஏன் இறுதிப் போரில் சாகவில்லை என்பதனை எழுதலாமே இலங்கையில் உள்ள எந்த ஒரு வானொலியிலும் நீங்கள் பதிவில் கூறியுள்ளது போன்று இதுவரை எந்தச் சம்பவமும் இடம் பெற்றதில்லை. ஆகவே இந்த பதிவை நீக்கி விடுங்கள். இல்லையேல் உங்கள் வலைபதிவினை நாங்களாக முடக்கி வைக்க வேண்டிய நிலமைக்கு நீங்கள் ஆளாகலாம்.//

ஏன் கூகிள் நிறுவனம் உங்களின் வீட்டுப் பற்றைக்குள்ளா இருக்க். நீங்கள் நினைத்த போதெல்லாம் என் வலையினை முடக்கி வைக்க.
முடியலை சகோ,
சின்னப் புள்ளத் தனமா அடையாளம் இல்லாமல் கமெண்டு போடுறீங்க. அவ்....

நிரூபன் said...
Best Blogger Tips

@மைந்தன் சிவா


நிரூ,இப்படி பேய் உலாவுற நேரத்தில பதிவு போட்டால் நாம வடை வாங்க முடியாதே!!//

ஏன் பாஸ், பேய்களுக்கு நீங்கள் நண்பனாக இருப்பதாக அறிந்தேனே, ஆதலால் நம்ம கடைக்கு நள்ளிரவில் வர முடியாதா என்று நினைத்தேன்.அவ்...
இன்று இரவு நீங்கள் தூங்க முன்பதாக பதிவு போடுறேன் சகா.

நிரூபன் said...
Best Blogger Tips

@மைந்தன் சிவா

ஏலே யாரோ கொலை மிரட்டல் விடுக்கிரான்கப்பா............
பயன்திடுவோம் பயன்திடுவோம்...இல்லாவிட்டால் நிலைத்து நிக்கேலாது//

நீங்கள் உங்களின் வானொலிக்கு ஏரியல் கட்டவில்லைப் போல இருக்கே,
நீங்கள் கேட்கிற ரேடியோ கிளியர் இல்லாமல் இருக்கு என்று நினைக்கிறேன். அது பாட்டுக்கு நடுவில் போடும் பஞ்ச் வசனம் பாஸ்.

கொலை மிரட்டல் இல்லை, அவ்...

நிரூபன் said...
Best Blogger Tips

@மைந்தன் சிவா

அருமையான உரை நடை!!!
உண்மையின் உரை நடை!!!
இருப்பது கொஞ்ச வானொலிகளே...
நான் நினைக்கிறேன் எல்லாவற்றிலும் எல்லாம் இருக்கவேண்டும் போல சேர!!//

எல்லாவற்றிலும் சேர எல்லாம் இருந்தால் சேரலாம் எனும் நியதி ஓக்கே பாஸ்,
ஆனால் எல்லாம் இல்லாமல் சேரும் நியதி?
லாஜிக் உதைக்குதே;-))

நிரூபன் said...
Best Blogger Tips

@சி.பி.செந்தில்குமார்

>>இச் சிறுகதையின்;
கரு வடிவம்: மிஸ்டர் ஓட்ட வடை நாராயணன், ஓணர் ஆப் மாத்தியோசி.
எழுத்து வடிவம்: செல்வராஜா நிரூபன்.

hi hi அப்படியே டைட்டில் ஐடியா மிஸ்டர் ஓட்ட வடை நாராயணன், ஓணர் ஆப் மாத்தியோசி.

எனவும் போட்டிருக்கலாம்

ஹா ஹா//

ஆஹா...
நன்றிகள் சகோ,

நிரூபன் said...
Best Blogger Tips

@தமிழ்வாசி - Prakash

அருமையான கதை அமைப்பு.//

நன்றிகள் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@விக்கி உலகம்


என்னே ஒரு விஷயம் மாப்ள நன்றி!//

நன்றிகள் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஆர்.கே.சதீஷ்குமார்


அறிவிப்பாளர்கள் பற்றிய சுவையான தொகுப்பு//

நிஜமாகவா சகோ.
இது சுவையாகவா இருக்கு, சூட்டையல்லவா கிளப்பி விட்டிருக்கிறதாக, வாயு புத்திரன் திசையில் இருந்து பேசிக்கிறாங்க;-))

நிரூபன் said...
Best Blogger Tips

@சசிகுமார்


சாரி தங்களின் எழுத்து வடிவம் நன்றாக இருக்கு சார்.//

நன்றிகள் சகோ,

நிரூபன் said...
Best Blogger Tips

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி


அய்யய்யோ யாரோ கொலைமிரட்டல் விட்டுட்டாங்க! ரொம்ப பயமா இருக்கு! நிரு .... நீங்களும் பயப்பிடுங்க! ( யோவ் பயம் வராட்டியும், வந்தமாதிரி நடிய்யா ) நிரு இந்தப் பதிவ தூக்கிடுங்க! நேசன் நீங்களும் பயப்பிடுங்க! எனக்கு ஒரே பயமா இருக்கு! இருங்க உச்சா போய்ட்டு வந்துடறேன்! ( என்னது உச்சா வரலேன்னா, அவங்களோட ரேடியோ கேக்கணுமா? ஆளை விடுடா சாமீ..........!!!!)//

அவ்... நிஜமாகவா பாஸ், இப்படி ஒரு மெதேட் இருக்கென்று தெரிந்திருந்தால்,
நான் காலையில் டாய்லெட் இருக்க கஸ்டப்பட மாட்டேனே பாஸ்.

நிரூபன் said...
Best Blogger Tips

@♔ம.தி.சுதா♔


மிகவும் அருமையான எழுத்து நடை நிரு... இந்த துறையில் எனக்கு அறிமுகங்கள் இருந்தாலும் துறை சார் பரிட்சையமில்லை ஏதோ ஒரு கொஞ்ச நாள் கிரிக்கேட் வர்ணனை செய்தது மட்டுமே (சேவையாக) இருக்கும் அனுபவம்...//

அண்ணாத்த, கழுவுற தண்ணீரில் நழுவுற தண்ணீர் மாதிரி எஸ் ஆகிறார் இல்லே.

நிரூபன் said...
Best Blogger Tips

@♔ம.தி.சுதா♔

ஃஃஃஃஃஅய்யய்யோ யாரோ கொலைமிரட்டல் விட்டுட்டாங்க! ஃஃஃஃ

உண்மையாவா ஐயோ எஸ்கேப்பு...//

வடிவாக உற்றுக் கேளுங்கள் ஐயா, அது பாடலுக்கு நடுவில் ஒலிக்கும் விளம்பரம் சகோ,

நிரூபன் said...
Best Blogger Tips

@கார்த்தி

/* பல வேலை தளங்களிலும் இவ்வாறான சிபாரிசுகள்தான்! அதற்காக ஒட்டு மொத்தமாக வானொலிகளை கிண்டலடிப்பது சரியாக படவில்லை! */

நீங்கள் பிழையாக விளங்கிவிட்டீர்கள். மீண்டும் சொல்கிறேன் இங்கே நான் கூற வந்தவிடயம் பல துறைகளிலும் இவ்வாறான தவறுகள் இடம்பெறுகின்றன. அதற்காக ஏன் வானொலிதுறையை இழுக்கின்றீர்கள் என்றே கேக்கிறேன். சொல்வதற்கு மன்னிக்கவும் நண்பா உங்கள் கருத்துக்களுடன் நான் ஒத்துப்போகவில்லை.
மதி.சுதா சொன்னது போல நானும் Escape......//

சகோ, என் பதிவினை நீங்கள் இன்னமும் முழுமையாகப் படிக்கவில்லை என்று நினைக்கிறேன். மீண்டும் ஒரு தடவை படித்தீர்கள் என்றால், உள்டக்கம் உங்களுக்குப் புரியும் சகா.
சிபாரிசு இருந்தால் தான் வேலைக்குள் உள் நுழையலாம் என்பதனை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் நான் இங்கே இச் சிறுகதையில் விளக்கியுள்ள விடயம், சிபாரிசு பற்றியல்ல, வால் பிடித்தல்.

சிபாரிசு: Recommendation Or Referral இங்கே சிபாரிசு இருந்தாலும் நேர்முகத் தெரிவிற்கு முகங் கொடுத்து ஒரு வேலையினைப் பெற்றுக் கொள்வதற்கும், பின் கதவால் வால் பிடித்து ஒருவர் வேலையில் இணைவதற்கும் எந்தளவு வேறுபாடுகள் உள்ளது சகோ. இதனைத் தான் என் சிறுகதையில் முன் வைத்துள்ளேன்.
வால் பிடித்தல்: ஒரு வரைப் பற்றி என்னால் எந்தளவு தூரம் போற்றிப் பாராட்ட முடியுமோ, அத்தனை துறைகளையும் தேர்வு செய்து அவரைப் பற்றிப் போற்றித் துதி பாடி, அவர் மூலமாகவே அந்த வேலையினைப் பெற்றுக் கொள்ளல், get into the job through/by the backdoor.

இதனைத் தான் விளக்கியுள்ளேன், இங்கே, இச் சிறுகதையில் வானொலியினை வேண்டுமென்று வம்பிளுக்க வில்லை சகோ. வானொலிகளை வேண்டுமென்று கிண்டலடிக்கவில்லை, வானொலிகளோடு தொடர்புடைய பல குறை நிறைகளை ஒரு நேயராக இருந்து எழுத வேண்டிய சந்தர்ப்பத்தின் வெளிப்பாடாகத் தான் இப் பதிவு உருவாகியுள்ளது சகா.

நிரூபன் said...
Best Blogger Tips

@Nesan


நண்பா இங்கு கருத்துச்சுதந்திரம் இருக்கும் நிலையை என்னித்தான் சக்கரம் படத்தில் a.m.ராஜா பாடுவார் காசேதான் கடவுள் அப்பாட யாரோ கொலைமிரட்டல் விடுகிறார் நண்பா நான் மதியம் செய்தி வாசிக்கனும் இன்னும் குத்துப் பாட்டு கேட்கனும் ஆளை விடுங்க சுனாமியே பார்த்திட்டு வாரன்!//

அவ்....இது பாடலுக்கு நடுவில் ஒலிபரப்பாகும் பஞ்ச் வசனம் பாஸ்.
வாங்க, வாங்க, அப்புறமா இரவுத் தாலாட்டுப் போடுவோம்.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஆதிரை

நிரூபன்,
நேரடியாகவே கேட்கிறேன்... நேரடியாகவே பதில் தருவீர்கள் என்ற நம்பிக்கையில்!

வானொலியில் அறிவிப்பாளராவதற்கு பணம் கேட்டார்கள் என இங்கே நீங்கள் குறிப்பிட்டிருப்பது உண்மைச் சம்பவமா? அல்லது உங்களின் கற்பனையில் உதித்த சோடிப்பா?


@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி,
WTH (for your comments)//

வணக்கம் சகோதரம், முதன் முதலாக என் வலையில் கருத்துக்களோடு வந்திருக்கிறீர்கள்! உங்களை வருக! வருக என வரவேற்கிறேன்!
என் பதிவில் பெயர்களைக் குறிப்பிட்டு யாரையும் சொல்ல முடியாத நிலமை. யாருக்கும் பயந்து என்று நினைக்க வேண்டாம் சகா. உண்மையில் ஈழத்திற்காய் தீக்குளிக்கப் போகும் பெண் எனும் என்னுடைய பதிவில் நண்பர் ஓட்ட வடை நாரயணன் வன்னி மக்களைப் பற்றித் தவறான கருத்துக்களைக் கூறியதாக வீரகேசரிப் பத்திரிகையின் பத்தி எழுத்தாளரைத் திட்டிக் கமெண்ட் போட்டிருந்தார். அந்தக் கமெண்டினைத் தொடர்ந்து ஒரு சிலரின் முயற்சியால் என் வலைப் பதிவானது தனி மனிதத் தாக்குதலுக்கு இடங் கொடுத்தது எனக் காரணம் காட்டப்பட்டு திரட்டிகளில் இருந்து நீக்கப்பட்டிருந்தது.

ஆகவே இவ் இடத்தில் பெயர்களைச் சொல்வதை விடுத்து, குறியூட்டு அடிப்படையில் ஒரு சில விடயங்களை நீங்கள் கேட்ட கேள்விக்கான பதிலாகத் தருகிறேன் சகோ.

கற்பனையில் உதித்த சோடிப்பு என்பது தவறானது, அப்படிச் சோடிப்பு என்றால் நான் யாவும் கற்பனை என்று தானே எழுதியிருப்பேன்.
இது நிஜவரிகள் சகோ.

இன்னோர் கேள்வி, பதிவினைப் பற்றியோ அல்லது பதிவில் உள்ள கதையினைப் பற்றியோ கருத்துக்கள் எதனையும் கூறாது, ஒரு சில வரிகளுக்கு மட்டும் நியாயம் கேட்பதன் காரணம் என்ன?

இச் சம்பவத்தை ஆதார பூர்வமாக நிரூபிக்கவும் முடியும் சகோ, உண்மைச் சம்பவம் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஷர்புதீன்

தமிழ் நிருபர் திரட்டியின் முகப்பு வாசகம் போல் தெரிகிறதே சில வார்த்தைகள் உங்கள் இடுக்கையில்.//

பதிவினை முழுமையாகப் படித்தீர்களா சகோ,
ஏனய்யா கோர்த்து வுடுறாய்,
இது திரட்டிகள் பற்றிய பதிவல்ல,
மாப்பு இது வானொலி பற்றிய பதிவு.

நிரூபன் said...
Best Blogger Tips

@வதீஸ்-Vathees


இங்கே ஆதிரை கேட்ட விடயத்தைத்தான் நானும் கேட்கிறேன் இது உண்மையிலே நடந்த சம்பவமா? ஏனென்றால் எனக்கு தெரிந்தவரையில் அறிவிப்பாளர் ஆகுவதற்கு அப்படியான பணம்கொடுக்கும் சம்பவங்களைப்பற்றி நான் கேள்விப்பட்டதில்லை ஆனால் வங்கிகளில் வேலைசெய்வதற்கு 4 இலட்சம் வரையிலும் பணம்கொடுத்தவர்களை நான் நேரடியாகவே பார்த்திருக்கின்றேன்//

ஆமாம் சகோ, மேலே பதில் அளித்திருக்கிறேன், உங்களின் வருகைக்கு நன்றி சகா.

நிரூபன் said...
Best Blogger Tips

@சென்னை பித்தன்


நடைமுறை யதார்த்தத்தை எடுத்தியம்பும் ந்ல்ல கதை!//

நன்றிகள் ஐயா,

A.R.ராஜகோபாலன் said...
Best Blogger Tips

தீண்டாத திறமையை
விளக்காத வறுமையை
சிபாரிசின் வெறுமையை
தீயான வளமை எழுத்துக்களால் சொல்லிய விதம் அற்புதம்
வெறுப்பின் உச்சத்தை
நச்சென அந்த பாடலின் மூலம் தந்தது அருமை

shanmugavel said...
Best Blogger Tips

interesting brother.

NKS.ஹாஜா மைதீன் said...
Best Blogger Tips

மிக சிறப்பாக இலக்கிய நடையில் எழுதி இருக்குறீர்கள்....பல தமிழ் வார்த்தைகளையும் அறிந்துகொண்டேன்...நன்றி...

ஹேமா said...
Best Blogger Tips

வணக்கம்.நான் சுவிஸ்ல இருந்து ஹேமா கதைக்கிறன்எனக்கு தெனாலில இருந்து நல்ல பாட்டுப் போடுங்கோ.நன்றி வணக்கம் !

தனிமரம் said...
Best Blogger Tips

வணக்கம் நேயர்களே இடையில் ஏற்பட்ட தொழில் நுட்பகாரனத்தால் பன்பலையில் உங்களை சந்திக்க காலதாமதம் இதோ முதலில் பாடல் வருகிறது நான் அடிச்சா தாங்கா மாட்டாய் வேட்டைக்காரன் பாடல் இது விஜய் படம்!

தனிமரம் said...
Best Blogger Tips

இன்று முதல்  முதல்முறையாக நீங்கள் /ல் ஆவலுடன் எதிர்பார்த்த உறவுப்பால/ளம் நிகழ்ச்சி  உங்களைத்தேடி வருகிறது இதோ அங்கே ஓட்டைவடை உங்களை வரவேற்க காத்திருக்கிறார் அருகில் தொழில்நுட்ப உதவி நிரு ஹலோ நீங்கள் விரும்பும் பாடல்!

தனிமரம் said...
Best Blogger Tips

ஹலோ நான் சிப்பாய் ஒரு பாடல் கேட்கின்ரேன் தாய் தின்ற மண்ணே ஒரு பேரரசன் புலம்பல் நன்றி  உங்கள் அழைப்புக்கு அவர்கேட்ட விஜயின் துள்ளிசைப் பாடல் தருகிறோம் நக்கு முக்கா வருகிறது!

Anonymous said...
Best Blogger Tips

வாளி என்றவுடன் ஒரு புது எண்ணம் சில பதிப்வர்கள் தம பதிவுகளின் கிழ உள்ள கருத்து உரைக்கு எதாவதுபெயர் வைப்பாங்க எனக்கு தெரிந்த சில மொக்க பதிவர்கள் இவ்வாறு பெயர் வைத்தால் நல்ல இருக்கும்...
எனக்கு வாளி வைப்பவர்கள்.....
யாராச்சும் உங்கள சொல்லுறதா நினைக்காதிங்க.ஹி ஹி

TJ said...
Best Blogger Tips

மற்றபடி கருத்து கற்பனையல்ல

Anonymous said...
Best Blogger Tips

நாம கொஞ்சம் வித்தியாசமாக முயற்ச்சி செய்வோமல்ல

TJ said...
Best Blogger Tips

,,,,,,,,,,,ஆமாம் நண்பரே, தலைப்பில் இருக்கும் "ஆபாச அறிவுப்பு " கதையில் வரவே இல்லை??,,,,,,

நாமளும் இதல தன் பதிவுக்கு வந்தோம் ஆனா பதிவ வசிக்க தொடங்கினதும் அத மறந்துட்டன் நாபக படுத்தியதற்கு பலே பிரபுக்கு நன்றி

..............சகோ, இறுதிப் பந்தியில், பரமசிவன் கழுத்திலிருந்து பாடலுக்கு முன்பதாக, நிலவன் வாசிக்கும் செய்தியறிக்கையில் உள்ள எழுத்துப் பிழைகளைப் பார்த்தீர்கள் ஆனால் அங்கே, ஆபாச அறிவிப்பு வந்திருக்கிறது புரியும்......

யோ.. நாங்கல்லாம் பொருளியல் படத்தில அருமையான எனபத எருமையான என வசித்தவங்கையா
அந்த வரிய கொஞ்சம் வித்தியாசமாக கட்டுறது

ஆதிரை said...
Best Blogger Tips

பதிலுக்கு நன்றி சகோதரா...

//இச் சம்பவத்தை ஆதார பூர்வமாக நிரூபிக்கவும் முடியும் சகோ, உண்மைச் சம்பவம் சகோ. //

ஆக, இலங்கையிலுள்ள வானொலி ஒன்றில் அறிவிப்பாளராவதற்கு பின்கதவால் பணம் அறவிடப்படுகின்றது!!!

//இன்னோர் கேள்வி, பதிவினைப் பற்றியோ அல்லது பதிவில் உள்ள கதையினைப் பற்றியோ கருத்துக்கள் எதனையும் கூறாது, ஒரு சில வரிகளுக்கு மட்டும் நியாயம் கேட்பதன் காரணம் என்ன?//

காரணம் உண்டு.
1. பின்கதவால் இப்படி பணம் அறவிடப்படும் செய்தி எனக்குப் புதிய - ஆச்சரியமான செய்தி. அது பற்றிய தெளிவுறலுக்காக இக்கேள்வியைக் கேட்டேன்.

2. உங்கள் பின்னூட்டப்பெட்டியில் இப்படி இருக்கிறது.
//வலைப் பதிவில் வெளியாகும் அனைத்து விடயங்களுக்கும், வலைப் பதிவரே பொறுப்பு எனும் காரணத்திற்கமைவாக..//
ஆனால், இப்பதிவிற்கு சம்பந்தமின்றி ஒரு சிலரால் (குறிப்பாக ஓட்டவடை) தனிமனித தாக்குதல் பின்னூட்டங்கள் இருக்கக்கண்டேன். அந்த அசிங்கம் உங்கள் பதிவு பற்றிய என் கருத்தின்மேல் தாக்கம் செலுத்தியிருக்கலாம்.

இப்போது சொல்கிறேன்....
இலங்கையிலுள்ள வானொலி ஒன்றில் அறிவிப்பாளராவதற்கு பின்கதவால் சுளையாக பணம் அறவிடப்படுகின்றமை வெளிச்சத்துக்கு கொண்டுவந்த உங்கள் பதிவுக்கு வாழ்த்துக்கள்

இன்னோர் கேள்வி, இப்பதிவிலே முட்கம்பிக்குப்பின்னால் நிற்கின்ற எம்மக்களின் படம் இணைக்கப்பட்டிருக்கின்றது. அப்படத்திற்கும் பதிவிற்கும் என்னையா தொடர்பு?

நிரூபன் said...
Best Blogger Tips

@ஆதிரை


இன்னோர் கேள்வி, இப்பதிவிலே முட்கம்பிக்குப்பின்னால் நிற்கின்ற எம்மக்களின் படம் இணைக்கப்பட்டிருக்கின்றது. அப்படத்திற்கும் பதிவிற்கும் என்னையா தொடர்பு?//

சகோ, என்ன இது சின்னப் பிள்ளைத் தனமா இருக்கு;-))
இச் சிறுகதையினை நீங்கள் முழுமையாக வாசிக்காது பதில் எழுதுவது போல இருக்கே.
இக் கதையில் வாழும் மாறன் வன்னியில் இருந்து அகதியாக வந்த ஒருவன், அவன் முட்கம்பிக்குப் பின்னால்,முகாமினுள் என் கூட இருந்தவன். அவனின் பெயர் மட்டுமே இங்கே மாற்றப்பட்டுள்ளது. மற்றும் படி படம் கதைக்குப் பொருத்தமான நோக்கத்தோடு தான் இணைக்கப்பட்டிருக்கிறது சகோ.
நன்றிகள் சகா.

Unknown said...
Best Blogger Tips

விடுங்க பாஸ் குறை கண்டு பிடிக்கனுமேண்டால் எல்லாத்திலையும் கண்டு பிடிப்பானுகள்..
ஏன் இந்தக்கலரில் ப்ளாக் வைத்திருக்கிறாய் என்று கூட கேப்பார்கள்..
கதையை முழுதாக வாசித்திருந்தால் இதை கேட்டிருக்க மாட்டார்கள்..
நின்னா குறை
இருந்தா குறை
படுத்தா குறை ஹிஹி
குறை குறை குறை

இராஜராஜேஸ்வரி said...
Best Blogger Tips
This comment has been removed by the author.
ஆதிரை said...
Best Blogger Tips

ஏற்கனவே பதிவை முழுதாக வாசித்தேன் நிரூபன்.

ஆக, மாறன் எனும் பாத்திரமும் கற்பனை இல்லை என்பதை இப்போது புரிந்து கோன்டேன்.

நன்றி!


மைந்தன் சிவா,
நிரூபனின் பதிவில் (பின்னூட்டத்தில் அல்ல) நான் குறை கண்டுபிடிக்கவில்லை. தெளிவுறலுக்காக கேட்டேன். அவர் பதில் தருகிறார். நான் ஏற்றுக் கொள்கின்றேன்!!

//விடுங்க பாஸ் குறை கண்டு பிடிக்கனுமேண்டால் எல்லாத்திலையும் கண்டு பிடிப்பானுகள்..//

நிலைக்கண்ணாடிக்கு முன்னால் நின்று இக்கேள்வியைக் கேட்டுப்பாருங்கள். சிலவேளைகளில் பதில் கிடைக்கலாம்!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

நிரு, மேலே உள்ள பின்னூட்டம் ஒன்றில் நான் இப்பதிவின் பின்னூட்டத்தில் தனிமனித தாக்குதல் செய்ததாக உண்மைக்கு புறம்பாக ஒருவர் எழுதியிருப்பதை கண்டேன்!

நான் யார்மீதும் தனிமனித தாக்குதல் செய்து பின்னூட்டம் போடவில்லை என்பதை அறியத்தருகிறேன்!

ஒருவேளை எனது கருத்துக்கள் யாராவது ஒரு தனி மனிதனை தாக்கியிருந்தால், குறித்த அந்த மனிதர் , தனது ஆட்சேபனையை தகுந்த முறையில் வெளிப்படுத்துமிடத்து, நான் அவரிடம் மன்னிப்புப்புக் கேட்க தயாராக இருப்பதோடு, எனது கருத்துக்களை பின்னெடுப்பேன் என்பதையும் இவ்விடத்தில் அரியத்தருகிறேன்!

ஆக்சுவலி, எனது பெயரைக் குறிப்பிட்டு அசிங்கமான பின்னூட்டம் போட்டார் என்று குறிப்பிடுவதுதான் தனிமனித தாக்குதல் என்று எனக்குப் படுகிறது!

எனவே என்மீதான தனிமனித [ ஆக்சுவலி நான் ஒரு தனி மனிதன் கிடையாது - என்னோடு பல பிரெஞ்சு குட்டிகள் இருக்கிறார்கள்! - இந்த ரணகளத்திலும் ஒரு கிளு கிளுப்பு )
தாக்குதல் நடத்திய ஒரு பின்னூட்டத்தை எப்படி அனுமதிதீர்கள் என்று நிரு உங்களிடம் வினவுகிறேன்!

வலையுலக, திரட்டிகளின் நடைமுறைகளை நீங்கள் மீறி இருப்பதாக நான் கருதுகிறே்ன்!

எனவே திரட்டிகளிடம் முறைப்பாடு செய்ய இருக்கிறேன்!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

மச்சி பயந்திடாத நான் சும்மா காமெடிக்கு சொன்னேன்! என்னை குறை சொல்லி பினூட்டம் போட்டதால் எனக்கு எதுவுமே குறைந்து விடவில்லை என்பதையும், இன்றுகாலை கண்ணாடி பார்த்த போது உடம்பில் உள்ள எல்லா பாட்சுகளும் அப்படியே இருக்கின்றன என்றும், எதுவுமே கரைந்து ஊத்துண்டவில்லை என்பதையும் அறியத்தருகிறேன்

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

நிரு, ஒருவர் பிரபலமாகினால், அவர்குறித்து வதந்திகளும், கேலிகிண்டல்களும், நையாண்டிகளும், வெளிவருவதும், அவை மக்களால் ரசிக்கப்படுவதும், அத்தகைய கேலிகிண்டல்களே, குறித்த பிரபலத்தை மேலும் பிரபலப்படுத்தும் என்பதுவும், பொதுவாழ்வில் ஈடுபடும் ஒருவர், எதிர்மறை விமர்சனங்களை சகிக்க பழகிக்கொள்ள வேண்டும் என்பதுவும் உலக நடைமுறை!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

இலங்கையில் ஊடக சுதந்திரம் இல்லைன்னு அடிக்கடி சொல்லுறாங்க! இப்ப ப்ரூவ் ஆகிடிச்சு இல்ல!

test said...
Best Blogger Tips

சில தனியார் வானொலிகளில் ஒரு ஆண் அறிவிப்பாளரும் பெண் அறிவிப்பாளரும் இணைந்து ஒரு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும்போது,தேவையே இல்லாமல், எந்த சம்பந்தமுமின்றி அசட்டுத்தனமாக சிரித்துக் கொள்வது...அதில் எந்த ஜோக்கும் இல்லாமல் எதற்காக என்றே புரியாமல்!
அதற்கென்ன அவசியம் இப்போதேன்று தோன்றும்!
கலகலப்பாக நிகழ்ச்சி செய்கிறோம் என்று தாங்களாக நினைத்துக் கொள்(ல்)கிறார்களா? - இதில் என்ன தவறென்று எதிர்க்கேள்வி கேட்பதை, உனக்கேன் எரிச்சலா என்பதை விடுத்து சிந்தித்துப் பார்க்கலாம்! ஒரு நகைச்சுவை என்றால் கேட்பவருக்கு சிரிப்பு வரவேண்டுமே தவிர சொல்பவர்கள் மட்டும் சிரிப்பது? - அது நகைச்சுவையாக இருந்தால்கூட ஓக்கே! இருவர் தொலைபேசியில் 'மொக்கை போடுவது', 'கடலை போடுவது' போல் கண்றாவியாக உளறிக்கொண்டு அசட்டுத்தனமாக சிரித்துக்கொண்டு இருப்பது ஒரு வானொலி நிகழ்ச்சியின் தரத்தை குறைக்காதா? அல்லது இதை எல்லோரும் ரசிக்கிறார்களா? நேயர்களின் அமோக ஆதரவு கிடைக்கிறதா? இது ஒரு 'சீப்பான' வியாபாரத் தந்திரம்? ஒண்ணுமே புரியலை!
இதை ஒரு குறையாக சொல்லவில்லை! - ஒரு சந்தேகமே!

Admin said...
Best Blogger Tips

இலங்கையின் வானொலிகள் பற்றிய ஒரு காத்திரமான விமர்சனங்களுக்குரிய களமாக இது மாறினால் நன்றாக இருக்கும்.

நண்பர் ஜீ சொல்வது உண்மை.. இன்னும் நிறைய சொல்லலாம். முற்று முழுதாக சினிமா பாடல்களினையும் , தொலைபேசியினையும் மட்டும் நம்பியே எமது வானொலிகள் சீவிக்கின்றன.. இதை மறுக்க முடியுமா?

காத்திரமான, சமூகம் சார் நிகழ்ச்சிகள் எத்தனை மணித்தியாலங்களுக்கு ஒலிபரப்பாகின்றன??

எத்தனை அறிவிப்பாளர்கள். உலக விடயங்கள் தொடர்பான Updates உடன் இருக்கின்றனர்..

இதற்கெல்லாம் காரணம் - நிருபனின் கதைக்கான காரணமோ என எண்ணத்தோன்றுகின்றது..

பூனைக்கு மணி கட்டியதற்கு நன்றி நிருபன் மற்றும் ஓ.வ.நாராயணன்

Admin said...
Best Blogger Tips

இலங்கையின் வானொலிகள் பற்றிய ஒரு காத்திரமான விமர்சனங்களுக்குரிய களமாக இது மாறினால் நன்றாக இருக்கும்.

நண்பர் ஜீ சொல்வது உண்மை.. இன்னும் நிறைய சொல்லலாம். முற்று முழுதாக சினிமா பாடல்களினையும் , தொலைபேசியினையும் மட்டும் நம்பியே எமது வானொலிகள் சீவிக்கின்றன.. இதை மறுக்க முடியுமா?

காத்திரமான, சமூகம் சார் நிகழ்ச்சிகள் எத்தனை மணித்தியாலங்களுக்கு ஒலிபரப்பாகின்றன??

எத்தனை அறிவிப்பாளர்கள். உலக விடயங்கள் தொடர்பான Updates உடன் இருக்கின்றனர்..

இதற்கெல்லாம் காரணம் - நிருபனின் கதைக்கான காரணமோ என எண்ணத்தோன்றுகின்றது..

பூனைக்கு மணி கட்டியதற்கு நன்றி நிருபன் மற்றும் ஓ.வ.நாராயணன்

நிரூபன் said...
Best Blogger Tips

மதிப்பிற்குரிய வாசகப் பெரு மக்களே, மற்றும் உறவுகளே! பதிவின் காத்திரத் தன்மை கருதியும், பதிவின் உண்மைத் தன்மையினை உணர்ந்தவர்களாய் ஒரு சில உறவுகளால் பரப்பப்படும் வதந்திகளைக் கருத்திற் கொண்டும் இப் பதிவில் உள்ள உண்மைச் சம்வத்தினையும், இப் பதிவினைப் பற்றியும் விளக்க வேண்டிய நிலையில் உள்ளேன்.

நண்பர் ஓட்ட வடை அவர்களின் கருப் பொருளினை அடிப்படையாகவும், எனது அலுவலக நண்பர்களின் கருத்துக்களின் அடிப்படையாக வைத்தும்- என்னால் எழுதப்பட்டது தான் இந்தச் சிறுகதை. இலங்கையில் உள்ள பல அரச- தனியார் வானொலிகளில் காணப்படும் குறைபாடுகளையும், சில நேரங்களில் மக்களைச் சலிப்படையும் வண்ணம் அவர்கள் நடந்து கொள்ளும் போக்கினையும் விளக்கும் வகையில் எழுதப்பட்டது தான் இந்தக் கதை.

இந்தக் கதையில் வரும் நிலவன் எனும் பாத்திரம் ஒரு உண்மைப் பாத்திரம். சந்தர்ப்ப சூழ் நிலைகளுக்கு அமைவாகவும் இலங்கைத் திரு நாட்டின் சட்ட திட்ட- அரசியல் நடப்பு விடயங்களிற்கமைவாகவும் இக் கதையோடு தொடர்புடைய குறித்த ஒரு நபரைச் சுட்ட நிலவன் எனும் பெயரினைக் கையாண்டுள்ளேன்.

இக் கதையில் வரும் நிலவன் எனும் புனை பெயரில் வரும் நபர்- என்னுடன் சிறீலங்கா ரெலிகொம் நிறுவனத்தில் பணி புரியும் காந்தன் எனும் நண்பரிற்கு நன்கு தெரிந்தவர். அறிமுகமானவர். இளம் வயது நபர்.

ஆவரங்கால் மத்திய விளையாட்டுக் கழகத்தில் துடுப்பாட்டப் போட்டிக்ககச் நிலவன் காந்தனைச் சந்திக்கும் போது தான், தான் பிரபல வானொலி ஒன்றோடு நெருங்கிய தொடர்புகளைப் பேணி வருவதாகவும், அனைவரையும் தனக்கு நன்கு தெரியும் எனவும் கூறியதோடு, வெகு விரைவில் அறிவிப்பாளராக அந்த வானொலிக்குள் ‘உள்ளால்’ நுழையவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

நிரூபன் said...
Best Blogger Tips

சிறிது காலத்தின் பின்னர், இந்த நிலவன் தான்; குறித்த ஒரு வானொலியின் பணிப்பாளரைச் சந்தித்ததாகவும், தனக்கு பின் கதவால்/ உள்ளால் நேர்முகத் தேர்வு முடிந்து விட்டதாகவும் மூன்று இலட்சம் ரூபாவை டிப்போசிட் பணமாக அந்த வானொலி நிலையப் பணிப்பாளர் கேட்டதாகவும் - தான் அந்தத் தொகையினை வானொலிக்கு கொடுத்துத் அந்த வானொலியினுள் அறிவிப்பாளராக நுழையவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

பின்னர் கனடாவில் உள்ள தனது உடன் பிறந்தவர்களின் உதவியுடன் குறித்த தொகைப் பணத்தினைச் செலுத்தி நேர்முகத் தேர்வினை முடித்துக் கொண்டதாகவும் நிலவன் மத்திய விளையாட்டுக் கழகத்தில் அறிக்கை விட்டுள்ளார்.

இதற்குப் பல சாட்சிகள் உள்ளன. இந்தச் சம்பவம் ஆவரங்கால் மத்திய விளையாட்டுக் கழகத்தில் உறுப்பினராக உள்ள ‘காந்தனிற்கும்’ அவரது தோழர்களான சுதா, சுஜீவன், கவாஸ்கர், ஜீவநேசன், ராகுலன் எனப் பலருக்கும் தெரியும். இதனை இன்னும் விரிவாக உறுதிப்படுத்த வேண்டிய ஒரு சந்தர்ப்பம் நேரிடின்,
‘என்னுடன் அலுவலகத்தில் பணி புரியும் காந்தன் வீடியோவாக இதனைப் பேட்டியாக்கி வெளியிடவும் தான் தயாராக உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஆகவே நண்பர்கள் அனைவரும் கேட்ட பின் கதவால் போவது பற்றிய விளக்கங்களிற்கும், இச் சம்பவம், கதை ஒரு கற்பனைக் கதையல்ல என்பதற்கும் இப்போது போதுமான விளக்கங்கள் கிடைத்திருக்கும் எனவும் எண்ணுகிறேன்.

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails