அந்த வகையில் எமது தமிழின் கிராமத்துப் பேச்சு வழக்கு சொற்கள் பலவற்றிற்குச் சரியான விளக்கமிருக்காது. ஆனால் அந்தச் சொற்களைச் சரியான நேரத்தில், சரியான இடத்தில் இடம், பொருள் ஏவல் பார்த்து உச்சரிப்போம். அத்தகைய ஓர் சொல் வகைக்குள் அடங்குவது தான் இந்த ‘அடி சக்கை! அம்மன் கோவில் புக்கை! எனும் வாக்கியமாகும்.
தமிழகத் திரைப் படங்களில் ஒரு நிகழ்வினைக் கண்ணுற்று வியப்படையும் போதோ அல்லது ஆச்சரியப்படும் போதோ ‘அடி ஆத்தி! எனப் பெண்கள் ஒரு கையினை மறு கையில் தட்டி, உள்ளங்கையானது நாடியில் பொருந்தும் வண்ணம் வைத்துக் கொள்வார்கள். உதாரணமாக இது வரை அறிந்திராத ஒரு புதிய சங்கதியினை அறிந்து கொள்ளும் வேளையில் ‘அடி ஆத்தி! இம்புட்டுப் பெரிய விசயமா? எனக் கேட்பார்கள்.
’அட்ராசக்க’ எனும் தொனியில், ஒரு சில ஆச்சரியப்படும், விநோத நிகழ்வுகளைப் பார்த்துச் சந்தோசப்படுகையில் தமிழக உறவுகள் பேசிக் கொள்வதனையும் நாம் திரைப்படங்களில் பார்த்துள்ளோம்.
இச் சொற்கள் இரண்டிற்கும் நிகரான ஒரு செயலைத் தரக் கூடிய சொல்லாகத் தான் எமது ஈழத்தில் ‘அடி சக்கை! அம்மன் கோவில் புக்கை! எனும் பதத்தினைப் பயன்படுத்துவார்கள். ஆச்சரியப்படக் கூடிய, அல்லது விநோதமான நிகழ்வுகளைக் கண்டு மகிழ்கையில் அல்லது கேட்க நேரிடும் பொழுதுகளில் இச் சொற்றொடரினைப் பயன்படுத்தி மகிழ்வார்கள். ஆனால் இச் சொல்லுக்கான பொருள் தான் என்னவென்று தெரியவில்லை.
அடி எனப்படுவது- ஒன்றினது அடிப் பாகம் (Base) அல்லது ஒரு எட்டு அல்லது ஒரு அடி வைத்தல் (Step) எனப் பொருள் புலப்படும் வகையில் தமிழில் வந்து கொள்ளும்.
சக்கை எனும் சொல் ஒன்றினது சாறு, அல்லது ஒரு பொருளினை அரைக்கும் போது கிடைக்கும் இறுதி கழிவு(Waste) வெளியீட்டினைக் குறிக்கப் பயன்படும்.
அம்மன் கோயிலுக்கு இங்கே விளக்கம் சொல்லத் தேவையில்லை என நினைக்கிறேன்.
புக்கை எனப்படுவது ஈழத்தில் சர்க்கரை போட்டுப் பொங்கப்படும் பொங்கலைக் குறிக்கும் பாரம்பரியச் சொல்லாகும். ஈழத்தில் பொங்கலினைப் புக்கை என்றே கூறுவார்கள். எடுத்துக் காட்டாக சர்கரைப் புக்கை, பச்சையரிசிப் புக்கை, கோழிப் புக்கை என நாம் அழைத்து மகிழ்வோம். (கோழியினைக் கறியாக்கிச் சமைக்கப்படும் புக்கை- இது எப்படிச் செய்வதென்பதை ரெசிப்பியாக பிறிதோர் பதிவில் சமையல் குறிப்பின் வாயிலாகப் பகிர்ந்து கொள்கிறேன்)
இப் புக்கை எனும் சொல்லினை பெரும்பாலானவர்கள் பேச்சுத் தமிழில் தான் புக்கை என்று சொல்லுவார்கள். வானொலித் தமிழிலோ அல்லது உரை நடைத் தமிழிலோ புக்கை என்பது பொங்கல் என்று வந்து கொள்ளும்.
பேச்சுத் தமிழில்; புக்கையினைக் காய்ச்சுவதென்று சொல்லுவோம். இதுவே உரை நடைத் தமிழாக வருகையில் பொங்கலினைப் பொங்குவதாக அல்லது பொங்கி மகிழ்வதாக குறிப்பிடுவோம்.
இவ்வளவு குறிப்புக்களை வைத்துப் பார்க்கையிலும், ‘அடி சக்கை! அம்மன் கோவில் புக்கை! என்பதற்குரிய பொருள் விளக்கம்; என் அறிவிற்கு எட்டிய வரை சரியாகத் தெரியவில்லை. அல்லது இது வரை யாராலும் சரியாகக் கண்டறியப்படவில்லை என்றே கூறலாம். இச் சொற்றொடரினை நாம் பயன்படுத்தும் சந்தர்ப்பங்களும், சூழ் நிலைகளும் தெரிகிறது. எப்போது பயன்படுத்துகிறோம் என்பதுவும் புரிகிறது. ஏன் பயன்படுத்துகிறோம் என்பதும் விளங்குகிறது. அப்படியாயின் இதற்குரிய பொருள் விளக்கம் என்ன? யாராவது தெரிந்தால் கூறுங்களேன்!
டிஸ்கி: இலங்கையில் தமிழில் புக்கை என்றால் பொங்கல் என வந்து கொள்ளும். சிங்களத்தில் புக்கை என்றால் மனித உடலுறுப்பின் பிட்டப் பக்கம் அல்லது பின் பக்கத்தைக் குறிக்கும் பாணியில் இச் சொல் பொருளினைத் தரும்.
நான் பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்த காலப் பகுதியில் கட்டுகஸ்தோட்டை வீதியில் நடந்து வந்து கொண்டிருந்த போது, ஒரு சிங்களப் பெண்ணைப் பார்த்து எமது நண்பன் ஜொள்ளு விட்டுக் கொண்டு வந்தான் அல்லது அசடு வழிந்து கொண்டு வந்தான்.
அவன் எங்களோடு வந்த குழப்படிகார(Naughty) குசும்புக் குணம் கொண்ட நண்பன் ஒருவனிடம் பின் வருமாறு கேட்டான்.
‘இவள் வடிவா இருக்கிறாள் என்பதைச் சிங்களத்தில் சொல்ல வேண்டும். அதற்கு ஏதாச்சும் வசனம் சிங்களத்தில் சொல்லித் தாடா மச்சான் என்று.
உடனே அவன் சொன்னான் ‘அவளுக்கு கிட்டப் போய் ’சுது புக்கை’ என்று சொல்லு மச்சான் என்று.
இவனும் ஆர்வக் கோளாறிலை என்ன ஏது என்று அறியாது அவளுக்கு கிட்டப் போய்ச் சொல்லியிருக்கிறான். சுது புக்கை என்று...
பிறகென்ன ஆள் போலிஸ் ஸ்டேசனுக்குப் போய் முட்டி போட்ட கதை தான் நடந்திச்சு....
சுது என்றால் சிங்களத்தில் வெள்ளை நிறத்தைக் குறிக்குமாம். அப்போ புக்கை என்றால்......
ஐயோ வேணாம் சாமி, ஆளை விடுங்கோ!
|
67 Comments:
வடை..
வடை கேக்க கூடாதுனு சொன்னாலும் கேப்போம்..மொதல்ல படிச்சிட்டு வாரேன்..
வகைக்குள் அடங்குவது தான் இந்த ‘அடி சக்கை! அம்மன் கோவில் புக்கை! எனும் வாக்கியமாகும்.//
இந்த பயபுள்ளைக்கு வேற வேலையே இல்ல.. அரை டவுசர் வயசுல பண்ணாத ரவுசு பண்ணிட்டு இங்கிட்டு வந்து எல்லாத்தையும் கொட்டுறது..
‘அடி ஆத்தி! இம்புட்டுப் பெரிய விசயமா? எனக் கேட்டுக் கொள்வார்கள்.//
யோவ்.. இன்னும் பாரதிராஜா படத்த தாண்டி நீ வரவே இல்லையா.?
’அட்ராசக்க’ எனும் தொனியில்//
யு மீன் சிபி.!!
ஆனால் இச் சொல்லுக்கான பொருள் தான் என்னவென்று தெரியவில்லை.//
எங்கள் தானே தமிழ் தலைவரிடம் வந்து கேட்டுகிடலாமே!!
ஒரு சிங்களப் பெண்ணைப் பார்த்து எமது நண்பன் ஜொள்ளு விட்டுக் கொண்டு வந்தான் அல்லது அசடு வழிந்து கொண்டு வந்தான்.//
நீ செஞ்சதெல்லாம் நண்பன் செஞ்சானு பழிய போடு.. பாவும் அந்த நண்பன்..
ஐயோ வேணாம் சாமி, ஆளை விடுங்கோ!//
நல்லா தானயா போய்கிட்டு இருந்தது.. இத ஏன் போட்டு சிலர மூஞ்சு சுளிக்க வைக்கிற.?
ரஜீ-ய பாத்து குப்புற படுத்து யோசிச்சிருக்கீங்க..!! ஆனா நீங்க அவரு அளவுக்கு வொர்த் கிடையாது.. எங்க ரஜீ.. இப்ப ரஜீ வந்து பதில சொல்லுவாரு பாருங்கோ.!!
ஈழத்தில் அப்படியா சங்கதி என்று கிராமங்களில் பேசுவதும் இப்படித்தானே!
கட்டுகஸ்தோட்டையில் இன்னும் சிறப்பாக சொல்லும் வாக்கியத்தை என்னிடம் கேட்டிருக்கலாமே நிரூ!
ஆமிக்காரனிடம் எங்க ஊர் திருவிழாவில் பாட்டி புக்கை கொடுத்து வாங்கிக்கொண்ட கிழியலை இங்கு எழுதினால் ஆப்புத்தான் எனக்கு!
ஆமிக்காரனிடம் எங்க ஊர் திருவிழாவில் பாட்டி புக்கை கொடுத்து வாங்கிக்கொண்ட கிழியலை இங்கு எழுதினால் ஆப்புத்தான் எனக்கு!
கேட்டியே அவன்/அவள் செய்த விசயத்தை என்பதும் ஒரு ஆச்சரியமான விசயம்தானே! நண்பா!
இவ்வளவு குறிப்புக்களை வைத்துப் பார்க்கையிலும், ‘அடி சக்கை! அம்மன் கோவில் புக்கை! என்பதற்குரிய பொருள் விளக்கம்; என் அறிவிற்கு எட்டிய வரை சரியாகத் தெரியவில்லை. அல்லது இது வரை யாராலும் சரியாகக் கண்டறியப்படவில்லை என்றே கூறலாம்./// பாஸ்! அட்ரா சக்கை என்பது மருவி அடி சக்கை என்று வந்துட்டுது, பின்னால அம்மன்கோவில் புக்கை என்றது டைமிங் நல்லா இருக்கிறத்தால அடுக்கு மொழியாய் தொத்திவிட்டது .............என்று தான் நான் நினைக்கிறேன்............ஒரு காலத்தில் நம் மத்தியில் இந்த வசனம் பேமஸ்...
////‘இவள் வடிவா இருக்கிறாள் என்பதைச் சிங்களத்தில் சொல்ல வேண்டும். அதற்கு ஏதாச்சும் வசனம் சிங்களத்தில் சொல்லித் தாடா மச்சான் என்று.
உடனே அவன் சொன்னான் ‘அவளுக்கு கிட்டப் போய் ’சுது புக்கை’ என்று சொல்லு மச்சான் என்று.
இவனும் ஆர்வக் கோளாறிலை என்ன ஏது என்று அறியாது அவளுக்கு கிட்டப் போய்ச் சொல்லியிருக்கிறான். சுது புக்கை என்று...
பிறகென்ன ஆள் போலிஸ் ஸ்டேசனுக்குப் போய்//// அனுபவம் பேசுது போல ஹிஹிஹி .............செம காமெடி தான் ... ஆர்வக்கோளாறு கூடினால் இப்படி தான்..இதை தான் சொல்வார்கள் "எதையும் பிளான் பண்ணி செய்யணும்" எண்டு,,,))))
இட்டிலியும் தமிழ் மணமும் இப்ப ஒகே, ஆனால் தமிழ் 10 தான் மக்கர் பண்ணுது...!
எங்கள் பகுதியிலும் அடி சக்கை சொல்வோம்..அம்மன் கோயில் புக்கை எனக்கும் புதிது தான்.
புக்கை பற்றி ஒரு book-ஐ எழுதும் அளவிற்கு செய்திகள். நன்றி நிரூபன்.
அடி சக்கை! அம்மன் கோவில் புக்கை!
நிரு இந்த வாக்கியத்தில் " அடி சக்கை " என்பதற்கு மட்டும்தான் பொருள் இருப்பதாக நான் நினைக்கிறேன்! " அம்மன் கோயில் புக்கை " கு இந்த இடத்தில் வேலை இல்லை! அது சும்மா ரைமிங்குகு!! இந்த வாக்கியத்தை சொல்பவர்கள் அடி சக்கைக்கும் அம்மன்கோவில் புக்கைக்கும் இடையே அரை வினாடி அளவு இடைவெளி விடுவார்கள்!
அத்தோடு அடி சக்கை ஒரு சுருதியிலும், அம்மன் கோயில் புகையை வேறொரு சுருதியிலும் சொல்வார்கள்! உண்மையில் இரண்டு பகுதிகளுக்கும் சம்மந்தம் இல்லை!
" என்ன புஷ்பாக்கா, பெடியன் கனடாக்கு ( கவனிக்கவும் - கனடாவுக்கு அல்ல ) போய் ஒரு வருசமாகுது, ஏதேன் காச கீச அனுப்புறவனே "
இப்படி விசாரிப்பார்கள் தானே, இதில் கீசு என்றால் என்ன ? அதற்கு அர்த்தம் இல்லை! காசுக்கு சப்போர்ட்டா
வந்தது! இது போலத்தான் அடிசக்க - அம்மன் கோவில் புக்கை!
மச்சி அந்த சிங்கள சொல்லு புக்கை என்று அழுத்தம் திருத்தமா வராது ' புக்கே " என்றுதான் வரும்! அதேமாதிரி " பொச்சு" கூட கெட்ட வார்த்தையாம்!
அடி சக்கை என்றால், மறுவளமா யோசித்தால், ' சக்கையாகும் வரை' அடி என்றும் அர்த்தம் வரும்! பிறகு என்னத்தை? என்று கேட்ககூடாது!
நண்பா கூர், இப்படி சொல்லலாமா? என்னைவிட நிரு எவ்வளவோ திறமை வாய்த்தவர்! அவரை பார்த்து நான் பலவிஷயங்களில் கற்றுக்கொன்கிறேன்! இப்படி ஒப்பிடல் தகுமா?
எட்டாவது...
ஹிஹி அட்ரா சக்கை அட்ரா சக்கை....
சிங்களத்தில் புக்கை என்றால் நண்பர்களே,மனிதக்கழிவை தான் கூறுவார்கள் ஓகயா..
ஓட்டவடை:கீசை என்றால் கீரைப்புடியாச்சும் அனுப்பினானா என்று ஆதங்கத்தில் கூறும் வாக்கியம் ஹிஹி
என்ன நிறு பனை மரத்துக்கு கேள இருந்தது ஜோச்சிப்பின்களோ முழங்காலை தவிர மிச்ச இடம் எல்லாம் மூலை போல கிடக்கு உங்களுக்கு
எங்கட கம்பசில தை பொங்கலுக்கு பொங்கலை bag குக போட்டு கொடுப்பம் அப்பா சின்ஹல பெடியள் பெட்டையள் வந்தால் புக்கைய பை ஏகட்ட தாள தெண்ட மச்சான் எண்டு பிலத்து சொல்லுவம் அவங்களுக்கு ஏற்கனவே தெரியும் ஹோச்டல்ல எல்லாம் படிசிடுவான்கள் சிரிச்சிட்டு போவாங்கள்
புதிய வார்த்தைகள் சில கற்றுக்கொண்டேன் நன்றி சகோ
ம்ம்ம்....
சாமியோவ்வ் ... அப்பிடியே குருவிக்காரங்க லாங்குவேஜ் கும் விளக்கம் போடுங்க சாமியோவ்வ்......
இந்த மாதிரியெல்லாம் எழுதறதுக்கு நிரூபன விட்டா ஆளில்ல... கலக்குற மச்சி... அம்மன் கோவில் புக்கை:
ஆஹா.. அபாரம் புலவரே.. நீங்கள் கில்மா வில் மட்டும் அல்லாமல் தமிழிலும் தேர்ச்சி பெற்றுள்ளது கண்டு மகிழ்ச்சி.. ஹி ஹி
@ரஜீ:
//நண்பா கூர், இப்படி சொல்லலாமா? என்னைவிட நிரு எவ்வளவோ திறமை வாய்த்தவர்! அவரை பார்த்து நான் பலவிஷயங்களில் கற்றுக்கொன்கிறேன்! இப்படி ஒப்பிடல் தகுமா? //
இப்ப எதுக்கு ரொம்ப ஓவரா ஃபீல் பண்ணி பேசுற யா.? சும்மா ஒரு காமெடிக்கு சொன்னதை நீ உண்மையினு நம்பிட்டியா.? ஹி ஹி..
@தம்பி கூர்மதியன்
@ரஜீ:
//நண்பா கூர், இப்படி சொல்லலாமா? என்னைவிட நிரு எவ்வளவோ திறமை வாய்த்தவர்! அவரை பார்த்து நான் பலவிஷயங்களில் கற்றுக்கொன்கிறேன்! இப்படி ஒப்பிடல் தகுமா? //
இப்ப எதுக்கு ரொம்ப ஓவரா ஃபீல் பண்ணி பேசுற யா.? சும்மா ஒரு காமெடிக்கு சொன்னதை நீ உண்மையினு நம்பிட்டியா.? ஹி ஹி..
ஹி ஹி ஹி ....... மச்சி எனக்கு எதையுமே காமெடியாக எடுத்துதான் பழக்கம்! சீரியஸா எடுத்துக்க மாட்டேன்! இத பாரு, பதினாறு பொண்ணுங்க என்னைய வேணாம் னு சொன்னாளுக, நான் அசரலேயே! ஹப்பியா தானே இருக்கேன்!!
ஹிஹி!!!!!!!!!!!!!!!!!!
http://anbudansaji.blogspot.com/2011/05/blog-post_22.html
சகோ...இலங்கையில இருந்துட்டு இம்புட்டு விஷயத எப்படித்தான் புடிசிங்களோ? நீங்க பெரிய ஆளு தான்.
சுது என்றால் சிங்களத்தில் வெள்ளை நிறத்தைக் குறிக்குமாம். அப்போ புக்கை என்றால்......
ஐயோ வேணாம் சாமி, ஆளை விடுங்கோ!>>>>>>
என்னமோ சொல்ல வந்திங்க... பாதியிலே விட்டு போயிட்டிங்க...
நீங்க பேசுற தமிழ் சூப்பரா இருக்கு சார்
அப்படி போடு அருவாள
படிப்பதற்கு மிகவும் சுவாரஸ்யமாக எழுதி இருக்குறீர்கள்...
கிராமங்களில் பயன்படுத்தப்படும் சொற்கள் தற்போதைக்கு மருவி புரியாதது போல் இருந்தாலும் கண்டிப்பாக அவற்றிக்கு ஆழமான அர்த்தம் இருக்கும்...
உங்கள் விளக்கம் நன்றாகத்தான் இருக்கிறது..
மேலும் இன்னும் ஆய்வு செய்யுங்கள்..
அப்படி செய்து இன்னும் தெளிவாக கூறினால் நானும் சொல்வேன்..
அட்ராசக்க...
//சுது என்றால் சிங்களத்தில் வெள்ளை நிறத்தைக் குறிக்குமாம். அப்போ புக்கை என்றால்......//
ஹீ ஹீ ஹீ
//ஐயோ வேணாம் சாமி, ஆளை விடுங்கோ!//
இக்கும்....
சொல்லுறதையும் சொல்லிட்டு இது வெறையா..?
மண்மணம் வீசும் பதிவு பாஸ்
பாஸ்
இதுல பானுப்பிரியா போட்டோ எதுக்கு பாஸ்..?
ரொமான்ஸ்ஸா...! LOL
அனுபவங்கள்....சுiவாயனவை. அதிலும் நிரூவின் அனுபவங்கள், சொல்த்தான் வேணுமா என்ன?
கடைசி...பொங்கல்...
அம்மா சுண்டல் :)
நல்ல பதிவு புக்கை , சகோ நான் சொன்னது தமிழ் புக்கை , மொழி எப்படியெல்லாம் வார்த்தைக்கு வடிவம் கொடுக்கிறது
யார் அந்த குழப்படி பொடியன்?
நல்ல அலசல் சகோ .சரிதான்.
சக்கையிலேயே சாறு பிழிந்து விட்டீர்களே!நல்ல சக்கரைப்புக்கை!
புக்கை எனில் பொங்கல் என்று இப்போதுதான் தெரியும் .மிக்க நன்றி நிரூபன்
சுவார்ஸமான பதிவு.
யோவ்வ்.. ஓட்ட வட கூர்மதியனுக்கு பேசின அமௌன்ட் 'ட கரைக்டா குடுத்துடு...
அட...கொப்பரான நிரூ உண்மையேடா பெடியா.இப்பிடியெல்லாம் சிங்களச் சொல்லுக்கெல்லாம் விளக்கம் சொல்லி ஆரிட்ட உதை வாங்கிறதோ தெரியேல்ல.வடையண்ணா அடிக்கடி போன் பண்ணிப் பார்த்துக்கொள்ளுங்கோ !
மன்னிச்சுக்கோ சகோ பதிவ நீ பதிவிட்ட வுடனே படிச்சிட்டேன்...மறுமொழி இன்று தான் இடமுடிந்தது... ஈழத்தில் பொங்கலினைப் புக்கை என்றே கூறுவார்கள்
நான் கூட தலைப்ப பார்த்ததும் கோவிலுக்கு வசுல்க்கு இறங்கிட்டயோனு நினைச்சேன்...புக்கை னா பொங்கல் அஹ
பேச்சுத் தமிழில்; புக்கையினைக் காய்ச்சுவதென்று சொல்லுவோம். இதுவே உரை நடைத் தமிழாக வருகையில் பொங்கலினைப் பொங்குவதாக அல்லது பொங்கி மகிழ்வதாக குறிப்பிடுவோம்.
ஆமா நீ என்ன படிச்சிருக்க?...சும்மா ஒரு டவுட்...
அடி சக்கை! அம்மன் கோவில் புக்கை! என்பதற்குரிய பொருள் விளக்கம்; என் அறிவிற்கு எட்டிய வரை சரியாகத் தெரியவில்லை. அல்லது இது வரை யாராலும் சரியாகக் கண்டறியப்படவில்லை என்றே கூறலாம். இச் சொற்றொடரினை நாம் பயன்படுத்தும் சந்தர்ப்பங்களும், சூழ் நிலைகளும் தெரிகிறது. எப்போது பயன்படுத்துகிறோம் என்பதுவும் புரிகிறது. ஏன் பயன்படுத்துகிறோம் என்பதும் விளங்குகிறது. அப்படியாயின் இதற்குரிய பொருள் விளக்கம் என்ன? யாராவது தெரிந்தால் கூறுங்களேன்!
ஆக மொத்தம் உனக்கு தெரியல, ஹி ஹி..இப்போ தான் நீ என் சகோ...ஆதான் சகோ ஓட்ட வடை...பிச்சு பிச்சு வச்சிருக்காறு பாரு...
ஒரு சிங்களப் பெண்ணைப் பார்த்து எமது நண்பன் ஜொள்ளு விட்டுக் கொண்டு வந்தான் அல்லது அசடு வழிந்து கொண்டு வந்தான்.
ஐ ஐ பொய் சொல்லுற...சாட் ல வந்து அது நீ தான் னு சொல்லிட்டு இப்போ உன் நண்பன்னு பொய் சொல்லுற...ஹி ஹி
சகோ கூர் மாதிரி நீயும் ஆராய்ச்சில இறங்கிட்டயா?
அடி சக்கை என்டானாம்... ஹ..ஹ..
நல்லாத் தான் புக்கை பொங்கியிருக்கிங்க... இங்கே அடி என்பதற்கு கையிலே தட்டும் போது வரும் எதுகைக்கும் அடி என்று பொருள்வடுகிறது நிரு...
சுவாரஸ்சியமான பதிவு சகோதரரே
வாழ்த்துக்கள்.
Post a Comment