Wednesday, May 25, 2011

ஈழத்திற்காய் உரமான எலும்புகளின் எச்சங்கள்!

அன்பிற்கினிய உறவுகளே! இந்தத் தொடரின் நான்காவது பாகத்தினூடாக உங்களினைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி! நாள் தோறும் நீங்கள் வழங்கி வரும் பேராதரவு தான் ஈழத்து மண் வாசனை கலந்த இத் தொடரினை உங்களோடு பகிர்ந்து கொள்வதற்குத் தூண்டு கோலாக இருக்கிறது! அந்த வகையில் மீண்டும், மீண்டும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!
ஈழ வயல்களிற்காய் உரமான எலும்புகளின் எச்சங்கள் - பாகம் - 4
இத் தொடரின் கடந்த பதிவுகளைப் படிக்க..........



மூன்றாவது பாகத்தின் தொடர்ச்சியாக......


மார்கழி மாதத்தில் பாடசாலை விடுமுறை விட்டதும் பல திட்டங்கள் போட்டுப் பட்டங்கள் கட்டி ஏற்றத் தொடங்கிடுவோம். அதுவும் கழுசான் அவிழ்ந்து விழும் பருவத்தில் பட்டங்களைக் கட்டி வயற் தரை முழுதும் ஓடி, ஓடிப் பட்டம் ஏற்றிய அனுபவங்களை எளிதில் மறந்து விட முடியாது. ஆட்களின் உயரங்களுக்கேற்ப பட்டங்களின் வகைகள் பலவாறாய் அமைந்து கொள்ளும். 


சிறியவர்கள் என்றால், தையல் நூலில் ஏற்றக் கூடிய சீனன், பாம்பன் முதலிய பட்டங்களைத் தான் ஏற்றுவார்கள். பெரியவர்கள் அல்லது கொஞ்சம் வயதான நபர்கள் நைலோன் நூல் அல்லது ஈர்க்குப் பிரி நூலில் ஏற்றக் கூடிய பட்டங்களினை ஏற்றத் தொடங்குவார்கள். மார்கழியில் சூடு பிடிக்க்கும் பட்டத் திருவிழா களை கட்டி; மழை வெள்ளம் எல்லாம் ஓடி ஆடி விளையாடிய களைப்புக்கள் தீரத் தைத் திருநாளை எதிர் பார்த்துக் காத்திருக்கும்.


தைப் பொங்கலன்று தான் பட்டமேற்றல் சூடு பிடிக்கும். தை மாதத்தில் உதிக்கும் திசையில் இருக்கும் உதயனுக்கு நன்றி சொல்லும் நாளைத் தமிழர்கள் நன் நாளாக அனுஷ்டிப்பார்கள். வாசலில் கோலம் போட்டு, மாவிலை வைத்து தோரணம் கட்டி, வயலரிசியில் இருந்து பொங்கிப் படைத்து மகிழ்வார்கள். எப்போது இந்தப் பொங்கல் முடியும், எப்போது பானையிலிருந்து பொங்கலை இறக்குவார்கள் என ஆவலாக இளையோர்கள் பார்த்திருப்பார்கள். 


பொங்கிப் படைத்து உண்டு மகிழ்ந்ததும்,  பட்டமேற்றும் கூட்டணி வயல் வரம்புகளினூடாகப் படையெடுக்கத் தொடங்கும். பட்டம் ஏற்றுவதற்காக வயல் வரம்பினூடாக ஓடும் போது சில வேளை நெற் கதிர்களினை இளையர்கள் தவறுதலாக மிதித்து விடுவார்கள். வயற்காரன் கண்ணில் நெற் கதிர்களை மிதிப்பது தட்டுப் பட்டால், அதன் பின்னரான நிலமை சூர சங்காரமாகத் தான் இருக்கும். 


இத்தகைய வசந்த கால வாழ்வினை இயற்கை அன்னை அனுபவிக்கத் தந்திருந்தாலும், ஒரு காலத்தோடு அந்த வளங்களை மீண்டும் கையகப்படுத்திக் கொண்டாள். எங்கள் வாழ்வின் வசந்தங்கள் எப்போதும் கிராமத்துக் காற்றினைத் தழுவியபடி தான் இருந்தது.  இலகுவில் பிரிக்க முடியாதவர்களாய் மண் வாசனையோடு எம் மவர்கள் செம் புழுதியில் ஒட்டியிருந்தார்கள். நகரத்தில் வாழ்வதில் சுகம் அதிகம் இருக்கெனப் பலர் கூறி வாழ்ந்த காலத்தில்; ’கிராமத்தில் வாழ்வதில் தான் அலாதி இன்பம் இருக்கென’ அன்று நாம் மகிழ்ந்திருந்த காலங்கள் அவை. 


வன்னியில் வீட்டுக்கு ஒரு மாடு,வளர்ப்பார்கள். எல்லோர் வீடுகளிலும் என்று சொல்வதிலும் பார்க்க அதிகமான வீடுகளில் வீட்டுக்கு ஒரு மாடிருக்கும். அதனை விடச் சிலர் பட்டியாக(கூட்டமாக) மாடு வளர்ப்பார்கள். காலையில் மாடுகளை அவிழ்த்து விட்டால், பழக்கப்பட்ட மாடுகள் தானாகவே மேய்ச்சல் நிலங்களைத் தேடிச் செல்லும். பின்னர் மாலையில் கட்டைக்கு(மாட்டுப் பட்டிக்கு) வரும். மாட்டுத் திருடர்களிடமிருந்து மாடுகளைக் காப்பதற்காய் மாடுகளுக்கு குறி சுட்டிருப்பார்கள். 


மாடு வளர்க்கும் குடும்பத்தின் முதல் எழுத்தும், அவர்களின் பிள்ளைகளின் எழுத்துக்களும் தான் இந்தக் குறிகளில் அடங்கும். SN, SJ என என் அப்பா என் நினைவாகவும், அக்காவின் நினைவாகவும் மாடுகளிற்கு குறி சுட்டு வைத்திருந்தார். மாடுகளிற்கு செல்லப் பெயர்களாக கறுப்பி, சிவப்பி, லஸ்சுமி, சரசு, செல்வி, குங்குமம், எனப் பல பெயர்களை வைத்து அழைத்து மகிழ்வார்கள். யாராவது படிப்பில் மந்தம் என்றால், மர மண்டை என்றால்- நீ மாடு மேய்க்கத் தான் லாயக்கு என எங்களூர்களில் செல்லமாகத் திட்டுவார்கள்.


இதே போல மாட்டு வண்டிச் சவாரி மீது ஆர்வமுள்ளவர்கள், எருமை மாட்டினைக் கொம்பு சீவிச் வளர்ப்பார்கள். மாட்டு வண்டிச் சவாரி யாழ்ப்பாண மாவட்டத்திலும், கிழக்கிலங்கையின் மட்டக்களப்பிலும் மிகவும் பிரபல்யம் வாய்ந்தது. இந்தச் சவாரிப் போட்டியினை ரசிப்பதற்காக ஊரே அலையெனத் திரண்டு, சவாரித் திடலில் விழாக் கோலம் பூண்டு மகிழும். வன்னியில் சவாரிப் போட்டி நடை பெறுவதற்கேற்ற இடமாக கிளி நொச்சி சவாரித் திடலும், முழங்காவில் சவாரித் திடலும் மட்டுமே இருந்தது.(நான் அறிந்த வரை) 


வன்னியின் வனப்பு மிகு ஊர்களில் இருந்து இச் சவாரி மீது பிரியம் கொண்டவர்கள் எருமை மாட்டினைக் கொம்பு சீவி வளர்த்துச் சவாரிக்கேற்றாற் போல வேகமாக ஓடும் வகையில் பயிற்சி கொடுத்துப் பழக்கப்படுத்தி வைத்திருப்பார்கள். சவாரியன்று பல ஊர்களிலிருந்தும் அழைத்து வரப்படும் மாடுகள், சவாரிக்காக சவாரித் திடலில் இறக்கப்படும். 


மாடுகளை வேகங் கொள்ள வைப்பதற்காய் போதையேற்றும் குடி வகைகளை(சாராயம்- டாஸ்மாக்) மாடுகளுக்கு பருக்குவார்கள். இக் குடிவகைகளினைக் குடித்தும் மாடு வேகமாக ஓடாது வெருளத் தொடங்குகிறது என்றால், மாட்டின் பின் பக்கத்தில் ஊசியால் குத்துவார்கள். 



மாட்டு வண்டிலில் மாடுகளைப் பூட்டிய பின்னர் சவாரிக்கான மணி அடிக்கத் தொடங்கியதும் வண்டிலோடு சேர்ந்த மாடுகளை, சவாரியாளர் மாட்டின் பின் பக்கத்தில் அடி கொடுத்து, வேகமாக ஓட வைப்பார். 


இச் சவாரியினைப் பார்த்து மகிழ்ந்ததுவும், வன்னியில் சவாரிக்காக மாடுகளை வளர்த்ததுவும் நெஞ்சில் பதிந்து போன நினைவுகளாக மட்டும் எம் கண் முன்னே நிற்கின்றன. கால வோட்ட மாற்றத்தில் கரைந்துருகி, காலனவன் பிடியில் எம் மண் சிக்கியி பின்னர் இவை எல்லாமே, காட்சிகளாக மாறி விட்டன. வசந்த கால வாழ்வாக நாம் நினைத்து ஓடி ஆடித் திரிந்த வன்னியின் காடுகள் புடை சூழ்ந்த அழகு மிகு சோலைகள் எல்லாம் இன்று பல ஆயிரம் சேதிகளைத் தன்னகத்தே கொண்டு மௌனித்துப் போயிருக்கிறது. எங்களின் விளைச்சல் நிலங்கள் அனைத்திலும் பசளைகளுக்குப் பதிலாக(உரத்திற்கு) மனித எலும்புகளே புதைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றினைத் தோண்டி எடுத்து, தோல்விகளை ஆற்றுப்படுத்த முடியாதவர்களாய் நாங்கள் இன்று நடை போட்டுக் கொண்டிருக்கிறோம்.................................எச்சங்கள் தொடர்ந்தும் எழுத்தாக வரும்...........


டிஸ்கி: இது சிறுகதையோ அல்லது கதையோ அல்ல. கிரமாத்து மணங் கமழ எழுதப்படும் ஒரு உரை நடைத் தொகுப்பு.


டிஸ்கி: இப் பதிவில் பயன்படுத்தப்பட்டிருக்கும், தொடர் பதிவிற்கான Drop Down மெனு தொழில் நுட்பத்தை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நண்பர் பலே பிரபு அவர்கள். அத் தொழில் நுட்பம் தொடர்பான விபரங்களை இந்த இணைப்பில் கண்டு கொள்ளலாம். 

53 Comments:

செங்கோவி said...
Best Blogger Tips

//எங்களின் விளைச்சல் நிலங்கள் அனைத்திலும் பசளைகளுக்குப் பதிலாக(உரத்திற்கு) மனித எலும்புகளே புதைக்கப்பட்டிருக்கின்றன.// நெஞ்சு கனக்கிறது சகோ..அவர்கள் செய்த தவறு தான் என்ன? நாம் இப்படிக் கையாலாகாதவர்களாக வேடிக்கை பார்க்க நேரிட்டு விட்டதே என்று எண்ணும்போது வேதனையாக உள்ளது.

சசிகுமார் said...
Best Blogger Tips

//SN, SJ என என் அப்பா என் நினைவாகவும், அக்காவின் நினைவாகவும் மாடுகளிற்கு குறி சுட்டு வைத்திருந்தார்//

எங்கள் கிராமத்திலும் இந்த வழக்கம் இருந்தது.

Unknown said...
Best Blogger Tips

// நீ மாடு மேய்க்கத் தான் லாயக்கு என எங்களூர்களில் செல்லமாகத் திட்டுவார்கள்.//
ஹிஹி பலமுறை வாங்கி இருக்கிறேன்..ஹிஹி

Unknown said...
Best Blogger Tips

//சாராயம்- டாஸ்மாக்) //
மறுபடியும் பார்ரா!!

Unknown said...
Best Blogger Tips

முடிவு வேதனை ...
நடந்தது நன்மைக்கே என்று விட்டு விடக்கூடிய விஷயம் அல்ல இது..

தமிழ்வாசி பிரகாஷ் said...
Best Blogger Tips

வன்னியில் சவாரிப் போட்டி நடை பெறுவதற்கேற்ற இடமாக கிளி நொச்சி சவாரித் திடலும், முழங்காவில் சவாரித் திடலும் மட்டுமே இருந்தது.(நான் அறிந்த வரை)>>>>

எங்கள் ஊருக்கு அருகிலும் மாடு ரேஸ் நடக்கும். மாடு பிடி விளையாட்டும் நடைபெறும். பார்க்க விறுவிறுப்பாக இருக்கும்.

தமிழ்வாசி பிரகாஷ் said...
Best Blogger Tips

எங்களின் விளைச்சல் நிலங்கள் அனைத்திலும் பசளைகளுக்குப் பதிலாக(உரத்திற்கு) மனித எலும்புகளே புதைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றினைத் தோண்டி எடுத்து, தோல்விகளை ஆற்றுப்படுத்த முடியாதவர்களாய் நாங்கள் இன்று நடை போட்டுக் கொண்டிருக்கிறோம்.>>>>

சகோ... உங்கள் மக்களுக்கு எப்படி அறுதல் சொல்வது என தெரியவில்லை...

நிரூபன் said...
Best Blogger Tips

@செங்கோவி

நெஞ்சு கனக்கிறது சகோ..அவர்கள் செய்த தவறு தான் என்ன? நாம் இப்படிக் கையாலாகாதவர்களாக வேடிக்கை பார்க்க நேரிட்டு விட்டதே என்று எண்ணும்போது வேதனையாக உள்ளது.//

இல்லைச் சகோ, உங்களில் எந்தத் தவறும் இல்லை. பருவத்தே பயிர் செய்யத் தவறிய எம் மீது தான் தவறுகள் நண்பரே.

நிரூபன் said...
Best Blogger Tips

@சசிகுமார்
//SN, SJ என என் அப்பா என் நினைவாகவும், அக்காவின் நினைவாகவும் மாடுகளிற்கு குறி சுட்டு வைத்திருந்தார்//

எங்கள் கிராமத்திலும் இந்த வழக்கம் இருந்தது.//

ஆய் சேம் சேம் பப்பி சேம்.

நிரூபன் said...
Best Blogger Tips

@மைந்தன் சிவா

// நீ மாடு மேய்க்கத் தான் லாயக்கு என எங்களூர்களில் செல்லமாகத் திட்டுவார்கள்.//
ஹிஹி பலமுறை வாங்கி இருக்கிறேன்..ஹிஹி//

அப்போ, நீங்களும் நம்ம கட்சி என்று சொல்ல வர்றீங்க.

நிரூபன் said...
Best Blogger Tips

@மைந்தன் சிவா
//சாராயம்- டாஸ்மாக்) //
மறுபடியும் பார்ரா!!//

ஏன் சகோ, டென்ஸன் ஆகுறீங்க. விளக்கம் கொடுக்க வேணுமில்ல.

நிரூபன் said...
Best Blogger Tips

@மைந்தன் சிவா


முடிவு வேதனை ...
நடந்தது நன்மைக்கே என்று விட்டு விடக்கூடிய விஷயம் அல்ல இது..//

ஆமாம், சகோ. எல்லாவற்றையும் இலகுவில் மறந்து விட முடியாது. சில காரணங்களைம் மறைத்து விடவும் முடியாது.

Prabu Krishna said...
Best Blogger Tips

//மாடுகளிற்கு செல்லப் பெயர்களாக கறுப்பி, சிவப்பி, லஸ்சுமி, சரசு, செல்வி, குங்குமம், எனப் பல பெயர்களை வைத்து அழைத்து மகிழ்வார்கள்.//

தமிழர்கள் அனைவரும் மாடுகளை தங்கள் குடும்பத்தின் உறுப்பினராகவே நினைக்கின்றனர். (எங்கள் வீட்டிலும் அப்படியே)

Unknown said...
Best Blogger Tips

மாப்ள வலியோட பின்னப்பட்ட கட்டுரை பகிர்வுக்கு நன்றி!

தனிமரம் said...
Best Blogger Tips

மண்வாசனையூடே எத்தனை இன்பங்களை இழந்த ஒரு சமூகம் ஆகிவிட்டோம் மாடுகள் தானே எம் இன்னொரு சொத்தாக இருந்தது என் செய்வது பெரு மூச்சுத்தான் விடமுடிகிறது நானும் மாடு மாடு மேய்க்கத்தான் லாய்க்கு என்று கணித வாத்தியார் திட்டும் போது அன்று புரியவில்லை இன்று அதன் அர்த்தம் புரிகிறது!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

சிறியவர்கள் என்றால், தையல் நூலில் ஏற்றக் கூடிய சீனன், பாம்பன் முதலிய பட்டங்களைத் தான் ஏற்றுவார்கள். பெரியவர்கள் அல்லது கொஞ்சம் வயதான நபர்கள் நைலோன் நூல் அல்லது ஈர்க்குப் பிரி நூலில் ஏற்றக் கூடிய பட்டங்களினை ஏற்றத் தொடங்குவார்கள். மார்கழியில் சூடு பிடிக்க்கும் பட்டத் திருவிழா களை கட்டி; மழை வெள்ளம் எல்லாம் ஓடி ஆடி விளையாடிய களைப்புக்கள் தீரத் தைத் திருநாளை எதிர் பார்த்துக் காத்திருக்கும்.

ஆஹா..... அழகான நினைவுகள்! பசுமையான ஞாபகங்கள்!!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

யாராவது படிப்பில் மந்தம் என்றால், மர மண்டை என்றால்- நீ மாடு மேய்க்கத் தான் லாயக்கு என எங்களூர்களில் செல்லமாகத் திட்டுவார்கள்.///

ஹி ஹி ஹி ஹி ஹி......!!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

அப்படியே ஊருக்கு போய் வந்த நினைவு....!! அழகிய ஞாபகங்கள்!! பகிர்வுக்கு நன்றி நண்பரே!!

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

மிக தீர்க்க்கமாகப்பதிவு செய்யப்பட்ட இலங்கை நிகழ்வுகள்

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

>>யாராவது படிப்பில் மந்தம் என்றால், மர மண்டை என்றால்- நீ மாடு மேய்க்கத் தான் லாயக்கு என எங்களூர்களில் செல்லமாகத் திட்டுவார்கள்.///

எங்க ஊர்ல அதுக்குக்கூட லாயக்கில்லைன்னு திட்டுவாங்க

தனிமரம் said...
Best Blogger Tips

நான் அறிந்ததில் நீர்வேலியில் இந்த மாட்டுச்சாவாரி நடக்கும் போட்டிக்கு தீவில் இருந்து போட்டிபோட என்மாமாக்களுடன் நானும் சிறியவனாக பின்சென்றுபார்த்த காலங்கள் கண்ணுக்குள்!

தனிமரம் said...
Best Blogger Tips

இழந்து போன இன்பங்களை உங்கள் பதிவின் ஊடே நான் கற்பனையில் மிதக்கிறேன் மீண்டும் வராத காலத்தை என்னி!

தனிமரம் said...
Best Blogger Tips

எத்தனையை இழந்து இன்னும் ஏதிலியாக வாழ்கின்றோம்!

test said...
Best Blogger Tips

ம்ம்ம்...எங்கள் ஊரிலும் மார்கழி மாதத்தில் பட்டம் விடத் தொடங்கி, தைப்பொங்கலன்று பட்டம் விடுதல் இளையோரின் ஒரு சம்பிரதாயமாகவே நிகழும்! இப்போ? இரண்டுவாரங்களுக்கு முன்னரே எங்கள் பிரதேசம் செல்ல அனுமதிக்கப்பட்டிருக்கு...இருபத்தொரு வருடங்களின் பின்...

இனி அப்படியொரு காலம் சாத்தியமா??

test said...
Best Blogger Tips

சின்னஞ்சிறு வயதில் நான் பார்த்த என் ஊர் ஞாபகங்கள் உங்கள் பதிவினூடாக! நன்றி பாஸ்!

Anonymous said...
Best Blogger Tips

////சிறியவர்கள் என்றால், தையல் நூலில் ஏற்றக் கூடிய சீனன், பாம்பன் முதலிய பட்டங்களைத் தான் ஏற்றுவார்கள். பெரியவர்கள் அல்லது கொஞ்சம் வயதான நபர்கள் நைலோன் நூல் அல்லது ஈர்க்குப் பிரி நூலில் ஏற்றக் கூடிய பட்டங்களினை ஏற்றத் தொடங்குவார்கள். மார்கழியில் சூடு பிடிக்க்கும் பட்டத் திருவிழா களை கட்டி; மழை வெள்ளம் எல்லாம் ஓடி ஆடி விளையாடிய களைப்புக்கள் தீரத் தைத் திருநாளை எதிர் பார்த்துக் காத்திருக்கும்./// அது ஒரு அழகிய நிலா காலம் கனவினில் தினம் தினம் உலா போகும்....வேற எனத்த சொல்ல ...(

Anonymous said...
Best Blogger Tips

////நகரத்தில் வாழ்வதில் சுகம் அதிகம் இருக்கெனப் பலர் கூறி வாழ்ந்த காலத்தில்; ’கிராமத்தில் வாழ்வதில் தான் அலாதி இன்பம் இருக்கென’ அன்று நாம் மகிழ்ந்திருந்த காலங்கள் அவை. /// உண்மையும் இது தான். இரண்டு வாழ்க்கையும் வாழ்ந்தவன் என்ற அனுபவத்தில் சொல்கிறேன்...

Anonymous said...
Best Blogger Tips

மாடு வளர்க்கும் குடும்பத்தின் முதல் எழுத்தும், அவர்களின் பிள்ளைகளின் எழுத்துக்களும் தான் இந்தக் குறிகளில் அடங்கும். SN, SJ என என் அப்பா என் நினைவாகவும், அக்காவின் நினைவாகவும் மாடுகளிற்கு குறி சுட்டு வைத்திருந்தார்.// நான் கூட சிறு வயசிலே இந்த குறிகளை பார்த்து புரியாமல் நின்றதுண்டு...மற்றையது மாடுகளில் கால்களுக்கு தகடு வைப்பார்களே,நாணயம் குற்ருவார்களே ,இவற்றை எல்லாம் ஒரு கலையாக கிராம புற மக்கள் செய்வார்கள்...

Anonymous said...
Best Blogger Tips

///எங்களின் விளைச்சல் நிலங்கள் அனைத்திலும் பசளைகளுக்குப் பதிலாக(உரத்திற்கு) மனித எலும்புகளே புதைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றினைத் தோண்டி எடுத்து, தோல்விகளை ஆற்றுப்படுத்த முடியாதவர்களாய் நாங்கள் இன்று நடை போட்டுக் கொண்டிருக்கிறோம்..// எலும்புகளாலும் கந்தக துண்டுகளாலும் எம்மவர் நிலங்கள் நிரப்பப்பட்டுள்ளதே..



தொடர்ந்து எழுதுங்கள் பாஸ். வசனங்களை கோர்த்த விதம் அருமை ..

Unknown said...
Best Blogger Tips

தம்பீ
வணக்கம்
எலும்புகள் உரமாயாக-என
எழதினீர நெஞ்சம் நோக
தளும்பிய கண்ணீர்-இங்கே
தரைதனை ஈரமாக்க
வளமிகு வன்னிக் காடே-உன்
வளமைக்கு இல்லை ஈடே
உளமது கலங்க வேண்டாம்-இது
உறுதிநீ பெறுவாய் மீண்டாம்

புலவர் சா இராமாநுசம்

கார்த்தி said...
Best Blogger Tips

1995 இடப்பெயர்வின்போதும் கரவெட்டியில் வயல்வெளிகளில் நானும் அண்ணாவும் பட்டம்விட்டு விளையாடியிருந்தோம்! பின் 2000ல் உடுவிலிலும் அது தொடர்ந்தது. இறுதி பந்திகள் வேதனையை கக்குகிறது!!

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

மனசு ரணமாய் வலிக்குதுய்யா...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
Best Blogger Tips

வலி மிகுந்த வரிகள்...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...
Best Blogger Tips

அடுத்த தலைமுறையாவது வலிகள் இல்லா வாழ்வு பெறட்டும்!

சக்தி கல்வி மையம் said...
Best Blogger Tips

வலி நிறைந்த வரிகள்..

Jana said...
Best Blogger Tips

முன்னுக்கு கொஞ்சத்தை படிக்காமல் விட்டுட்டன் படித்துவிட்டு வாறான்.

Jana said...
Best Blogger Tips

பட்டமேற்றல் வடமராட்சியில் தை மாதம் கேள்விப்பட்டிருக்கின்றேன். நம்ம ஊர்களிலை ஆடிமாதம்...

Jana said...
Best Blogger Tips

’கிராமத்தில் வாழ்வதில் தான் அலாதி இன்பம் இருக்கென’ அன்று நாம் மகிழ்ந்திருந்த காலங்கள் அவை.

முழுமையாக சரியான வசனங்கள். 1995 களில் ஆறுமாத இடப்பெயர்வில் இந்த இன்பங்களை துன்பங்களுக்கு மத்தியிலும் அனுபவித்துள்ளேன்.

Jana said...
Best Blogger Tips

யாராவது படிப்பில் மந்தம் என்றால், மர மண்டை என்றால்- நீ மாடு மேய்க்கத் தான் லாயக்கு என எங்களூர்களில் செல்லமாகத் திட்டுவார்கள்.

ஹி..ஹி.. எல்லா ஊரிலையும் அப்படித்தானோ?

Jana said...
Best Blogger Tips

மாட்டு வண்டிச் சவாரி

அரியாலையில் ஒருமுறை பெருமெடப்பாக நடந்ததை பார்த்தேன். பாவம் அந்த மாடுகளை இவங்க படுத்தும் பாடு.. அதுக்கு எங்க தொட்டா உயிர் போகுமோ அங்கை எல்லாம் கைவைத்து நசித்து முறுக்குவாங்கப்பா :)

Jana said...
Best Blogger Tips

உணமைதான் நாங்கள் மண்ணியம் சுமந்த மேனியர் அல்ல..வலி சுமந்த மேனியர் ஆகிவிட்டோம்..

சென்னை பித்தன் said...
Best Blogger Tips

//எங்களின் விளைச்சல் நிலங்கள் அனைத்திலும் பசளைகளுக்குப் பதிலாக(உரத்திற்கு) மனித எலும்புகளே புதைக்கப்பட்டிருக்கின்றன.//
வேதனை நிறைந்த வரி.
பழைய பதிவுகளையும் படிக்கிறேன்!

ஆகுலன் said...
Best Blogger Tips

பாஸ் வன்னியில் வற்ராபளையில் மாட்டு வண்டி சவாரி நடக்குறது......

நினைவுகள்...........

shanmugavel said...
Best Blogger Tips

//இச் சவாரியினைப் பார்த்து மகிழ்ந்ததுவும், வன்னியில் சவாரிக்காக மாடுகளை வளர்த்ததுவும் நெஞ்சில் பதிந்து போன நினைவுகளாக மட்டும் எம் கண் முன்னே நிற்கின்றன. கால வோட்ட மாற்றத்தில் கரைந்துருகி, காலனவன் பிடியில் எம் மண் சிக்கியி பின்னர் இவை எல்லாமே, காட்சிகளாக மாறி விட்டன.//

நெஞ்சை சுடுகிறது சகோ.சிறப்பான பதிவு.

shanmugavel said...
Best Blogger Tips

//இச் சவாரியினைப் பார்த்து மகிழ்ந்ததுவும், வன்னியில் சவாரிக்காக மாடுகளை வளர்த்ததுவும் நெஞ்சில் பதிந்து போன நினைவுகளாக மட்டும் எம் கண் முன்னே நிற்கின்றன. கால வோட்ட மாற்றத்தில் கரைந்துருகி, காலனவன் பிடியில் எம் மண் சிக்கியி பின்னர் இவை எல்லாமே, காட்சிகளாக மாறி விட்டன.//

நெஞ்சை சுடுகிறது சகோ.சிறப்பான பதிவு.

Mathuran said...
Best Blogger Tips

பாஸ்.. இப்போதைக்கு ஓட்டு மாத்திரம் போட்டுட்டு போறன்... ஆறுதலாக வந்து படிக்கிறன்

ஹேமா said...
Best Blogger Tips

நிரூ...மீ(தீ)ட்டிக்கொண்டே இருப்போம் மனதிற்குள் !

பாரணை முடிச்ச:) அதிரா said...
Best Blogger Tips

அந்தநாள் நினைவுகளை அழகாக மீட்டி விட்டிருக்கிறீங்க நிரூபன்.

பொங்கல் கோலமும் ஆடுமாடுகளும்... அந்தக் காலங்களை மீண்டும் மனதில் கொண்டுவந்துவிட்டன.

பிரபாஷ்கரன் said...
Best Blogger Tips

பசுமை ..நினைவுகள்
அருமை என்று
படிக்கும் வேளையில்
கடைசியில் ..
மனதை வலிக்க செய்யும்
வரிகள் ..
வேதனை

மீண்டும் ..
அங்கு வசந்தம்
கண்டிப்பாக ..
பிறகும் ..
என்ற நம்பிக்கை
கொள்வோம் ..

சுதா SJ said...
Best Blogger Tips

அந்த நாள் ஞாபகம் நெஞ்சினிலே வந்ததே...
படிக்கும் போதே மனசு கனக்கிறது..
வலி மிகு வார்த்தைகள் தான் அதிகம் :(

Chitra said...
Best Blogger Tips

வாசிக்கும் போது, காட்சிகள் கண் முன் விரிகின்றன.

www.eraaedwin.com said...
Best Blogger Tips

வணக்கம் நிரூபன். அருமை .தமிழ் மணம் , இண்டெலி வாக்குகள் உங்களுக்கு விழுகின்றன. பத்து முறை அழுத்தியும் தமிழ் 10 வாக்கு விழவில்லையே ஏன்?

suvanappiriyan said...
Best Blogger Tips

//எங்களின் விளைச்சல் நிலங்கள் அனைத்திலும் பசளைகளுக்குப் பதிலாக(உரத்திற்கு) மனித எலும்புகளே புதைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றினைத் தோண்டி எடுத்து, தோல்விகளை ஆற்றுப்படுத்த முடியாதவர்களாய் நாங்கள் இன்று நடை போட்டுக் கொண்டிருக்கிறோம்//

வரிகளைப் படித்து மிகுந்த துயருற்றேன். நம் சொந்தங்கள் மகிழ்வான வாழ்வை அமைத்துக் கொள்ள இறையிடம் பிரார்த்திக்கிறேன்.

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails