அடி(க்) கள்ளி!
உன் போன் நம்பரை
டயல் செய்த போது தான்
புரிந்து கொண்டேன்,
நாணயத்தின் பெறுமதியை!
பொறி(க்) கிடங்கு!
நல்ல படைப்பின்
அர்த்தம் புரியாதோராய்
கண்ணை மூடி வந்து
மைனஸ் ஓட்டு குத்தும்
மகான்களைப் போலல்லவா
இருக்கிறது- உன்
காந்த விழிப் பார்வையும்
காதல் நிறை லீலைகளும்!
லிப்ஸ்டிக் லில்மா!
உதட்டிற்கு நீயேன்
மை பூசுகிறாய் என்பதை
இன்று தான் அறிந்தேன்;
உன் மையிற்கான
கட்டணமில்லாத
விளம்பர நிறுவனமாக
நான் இருக்கும்
உன்(ண்)மையினை உணராதவனாய்!
விடா முயற்சி!
என் சைக்கிள் ரியூப்பின்
தேய்மானத்தை விட
உன் பிடிமானத்தைத் தான்
அடிக்கடி நேசிக்கிறேன்;
அதனால் தான்
அடிக்கடி ரயர் மாற்றினாலும்
உன் பின்னால் வருவதை
நான் மாற்றவில்லை!
ஷோர்ட் அன் சுவீட்!
அன்பே உன் உடையும்,
விலை வாசியும்
ஒன்றென
அடிக்கடி நினைவூட்டுகிறாயே!
அரை மீட்டர் போதுமென்பதாலா?
அரை மீட்டர் போதுமென்பதாலா?
தீராத வலி!
முகில்களை எட்டிப் பிடிக்க
முடியாது
கூவும் கோழிகளைப் போல்- எம்
வலிகளைக் கேட்டு
கண்ணீர் விடுகின்றன
சாளரக் கம்பிகள்!
|
129 Comments:
என்னமா டைட்டில் வைக்கறார்யா மனுஷன்?
>>நல்ல படைப்பின்
அர்த்தம் புரியாதோராய்
கண்ணை மூடி வந்து
மைனஸ் ஓட்டு குத்தும்
அண்னன் எதுக்கும் எதுக்கும் லிங்க் குடுக்கறார் பாருங்க..
உன் மை
உண்மை எதுகை மோனைல பின்றாரே? மனுஷன்
@சி.பி.செந்தில்குமார்
என்னமா டைட்டில் வைக்கறார்யா மனுஷன்?//
டைட்டில் மேற்பார்வை, சென்சர் போட், நீங்க தானே...
அப்பாடா, நான் தப்பிச்சிட்டன்.
@சி.பி.செந்தில்குமார்
அண்னன் எதுக்கும் எதுக்கும் லிங்க் குடுக்கறார் பாருங்க..//
பப்ளிக், பப்ளிக்.
வம்பை வலியப் போய் வாங்கச் சொல்லுறீங்களா.
@சி.பி.செந்தில்குமார்
அண்னன் எதுக்கும் எதுக்கும் லிங்க் குடுக்கறார் பாருங்க..//
பப்ளிக், பப்ளிக்.
வம்பை வலியப் போய் வாங்கச் சொல்லுறீங்களா.
இன்னைக்கு வெள்ளீக்கிழமை என்பதால் அண்ணன் கிளு கிளுப்பா இருக்காரோ? டவுட்டு
மைனஸ் ஓட்டுக்கு கவிதையா? சகோ சூப்பர்
மாப்ளே என்னமா குத்துற ஹிஹி!
@சி.பி.செந்தில்குமார்
உண்மை எதுகை மோனைல பின்றாரே? மனுஷன்//
நன்றிகள் சகோ.
@சி.பி.செந்தில்குமார்
இன்னைக்கு வெள்ளீக்கிழமை என்பதால் அண்ணன் கிளு கிளுப்பா இருக்காரோ? டவுட்டு//
வெள்ளிக் கிழமை என்றால், விரதம் இருப்பாங்களாம் நீங்க வேறை,
@தமிழ்வாசி - Prakash
மைனஸ் ஓட்டுக்கு கவிதையா? சகோ சூப்பர்//
எதிரியையும் உயர்த்தித் தானே பாட வேண்டும். தாழ்த்துவது அழகல்லத் தானே.
அவ்...அவ்..
நன்றிகள் சகோ.
தீராத வலி!
முகில்களை எட்டிப் பிடிக்க
முடியாது
கூவும் கோழிகளைப் போல்- எம்
வலிகளைக் கேட்டு
கண்ணீர் விடுகின்றன
சாளரக் கம்பிகள்!
...... கலகலப்பான கவிதைகளாய் வந்தாலும், கடைசி கவிதையில் ஆழ்ந்து இருக்கும் வலி புரிகிறது.
பாஸ் உங்க பக்கம் கொஞ்சம் லோட் ஆகா டயும் எடுக்குது..
ஹிஹி மைனஸ் ஓட்டால பல பேரு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கு போல!!ஹிஹி
@விக்கி உலகம்
மாப்ளே என்னமா குத்துற ஹிஹி!//
யாரையுமே குத்தலையே மாமா...
அவ்..
சிக்கில் டியூப் மட்டும் தான் தேயுதா...
கருகுதே....
@Chitra
...... கலகலப்பான கவிதைகளாய் வந்தாலும், கடைசி கவிதையில் ஆழ்ந்து இருக்கும் வலி புரிகிறது.//
ஆமாம் சகோ, அவலங்களை மறக்க முடியாதவராய் நாங்கள்.....
//சி.பி.செந்தில்குமார் said... [Reply to comment]
உன் மை///
உண்மை...சி பிக்கு உண்மை வருதில்ல பாருங்க...
@மைந்தன் சிவா
பாஸ் உங்க பக்கம் கொஞ்சம் லோட் ஆகா டயும் எடுக்குது..//
இருங்க பாஸ், பில்ட்கேஸ் இற்கு போன் பண்ணி என்ன பிரச்சினை என்று பார்த்து, சரி பண்ணச் சொல்லுறேன்
//விக்கி உலகம் said...
மாப்ளே என்னமா குத்துற ஹி//
அரிசியா குத்துராறு நிருபன்??ஹிஹி
தக்காளிய நசுக்கத்தான் முடியும் குத்த எல்லாம் முடியாது பாஸ்!!
//நல்ல படைப்பின்
அர்த்தம் புரியாதோராய்
கண்ணை மூடி வந்து
மைனஸ் ஓட்டு குத்தும்
மகான்களைப் போலல்லவா//
ஆகா மைனஸ் ஓட்டு போட்டாலும் உங்களுக்கு மகான் தானா!!
எனக்கு நல்லா புரிஞ்சு போச்சு! இது சரிப்பட்டு வராது! கெதீல இதுக்கொரு அலுவல் பார்க்கவேணும்! ஹிஹிஹி..... மச்சி கவிதையெல்லாம் கலக்கல்!!
கவிதையில் பின்னுறீங்க சகோ விலைவாசியின் உயர்வுதான் ஆடையின் உயர்வோ நல்லாய் ரசிக்கிறீங்க .. !!விலைவாசியைச் சொன்னேன்!
அசத்தல் கவிதைகள் சகோ..
சிறப்பாய் உள்ளது சகோ மைனஸ் ஓட்டையும் காதல் லீலையையும் ஒப்பிட்டு ஒரு கவிதை சுப்பர் ;
கவிதைகள் சூப்பர்;மூன்றாவது கவிதைக்கான படம் சூப்பரோ சூப்பர்!
அடி(க்) கள்ளி!
உன் போன் நம்பரை
டயல் செய்த போது தான்
புரிந்து கொண்டேன்,
நாணயத்தின் பெறுமதியை!
பின்ன உங்கள் காதலியோடு கதைக்குறதுனா சும்மாவா?.... ஹி ஹி
கண்ணை மூடி வந்து
மைனஸ் ஓட்டு குத்தும்
மகான்களைப் போலல்லவா
இருக்கிறது- உன்
காந்த விழிப் பார்வையும்
காதல் நிறை லீலைகளும்!
ஹ ஹ.... சகோ நல்லாவே லிங்க் பண்ணிருக்க போ
இன்று தான் அறிந்தேன்;
உன் மையிற்கான
கட்டணமில்லாத
விளம்பர நிறுவனமாக
நான் இருக்கும்
உன்(ண்)மையினை உணராதவனாய்!
கவித கவித...
அழகான கவிதை
அவன் கன்னத்தில்...
அடிக்கடி நினைவூட்டுகிறாயே!
அரை மீட்டர் போதுமென்பதாலா?
பின்ன, போன் பில்லுக்கு கட்டுற காச, அவங்க இப்படி மிச்சம் பண்ணுறாங்க...
முகில்களை எட்டிப் பிடிக்க
முடியாது
கூவும் கோழிகளைப் போல்- எம்
வலிகளைக் கேட்டு
கண்ணீர் விடுகின்றன
சாளரக் கம்பிகள்!
வெகுவாய் ரசித்தேன் அனைத்து கவிதையையும்...வெயிலுக்கு இதம் என்று கடைசியில் தீராத வலிகளை உணர்த்தும் கவிதை மனதை கனக்கச் செய்கிறது சகோ
மகிழ்ச்சியாய் ரதம் போல்
மிதந்து வந்த மனம்
நிறைவில் சாளரக் கம்பி யா(ழ்)ல்
குத்தப்பட்டு நிலை தடுமாறி போனேன் சகோ .
இப்போது தான் புரிகிறது நீங்கள் ஏன் என் மின்னஞ்சல் முகவரி கேட்டீர்கள் என்று, எதுவாக இருந்தாலும் முகம் காட்டியே பேசும் பழக்கம் கொண்டவன் நான், நன்றி
////அடி(க்) கள்ளி!
உன் போன் நம்பரை
டயல் செய்த போது தான்
புரிந்து கொண்டேன்,
நாணயத்தின் பெறுமதியை! ///// அரசியல் போல தான்
காதல்லயும் இதெல்லாம் சாதாரணமப்பா...)
////நல்ல படைப்பின்
அர்த்தம் புரியாதோராய்
கண்ணை மூடி வந்து
மைனஸ் ஓட்டு குத்தும்
மகான்களைப் போலல்லவா
இருக்கிறது- உன்
காந்த விழிப் பார்வையும்
காதல் நிறை லீலைகளும்!/// ஹிஹிஹி நச் ன்னு ஒரு அடி...
////உதட்டிற்கு நீயேன்
மை பூசுகிறாய் என்பதை
இன்று தான் அறிந்தேன்;
உன் மையிற்கான
கட்டணமில்லாத
விளம்பர நிறுவனமாக
நான் இருக்கும்
உன்(ண்)மையினை உணராதவனாய்!////
ஒத்துக்கிரம் பாஸ் ! அதிஸ்ரசாலி தான் நீங்க ...
////என் சைக்கிள் ரியூப்பின்
தேய்மானத்தை விட
உன் பிடிமானத்தைத் தான்
அடிக்கடி நேசிக்கிறேன்;
அடிக்கடி ரயர் மாற்றினாலும்
உன் பின்னால் வருவதை
நான் மாற்றவில்லை! /// அருமை அருமை
இன்னொன்று
- "பின்சில்லாய் வாழ்க்கை பட்டால் முன் சில்லை கலைத்து தானே ஆகணும்...)
////அன்பே உன் உடையும்,
விலை வாசியும்
ஒன்றென
அடிக்கடி நினைவூட்டுகிறாயே!
அரை மீட்டர் போதுமென்பதாலா?////
ஹிஹிஹி சூப்பர்
///முகில்களை எட்டிப் பிடிக்க
முடியாது
கூவும் கோழிகளைப் போல்- எம்
வலிகளைக் கேட்டு
கண்ணீர் விடுகின்றன
சாளரக் கம்பிகள்!/// இவளவு நேரமும் ரசிக்க வச்சுட்டு இருதியில ஒரு வலியோட நிறைவு செய்திரிக்கீங்கள்.
சில்லுன்னு இருக்குங்க!
ரசனையான பதிவு!!
முகில்களை எட்டிப் பிடிக்க
முடியாது
கூவும் கோழிகளைப் போல்- எம்
வலிகளைக் கேட்டு
கண்ணீர் விடுகின்றன
சாளரக் கம்பிகள்!
//
மனதை கனக்க செய்யும் வரிகள்
அப்பு சூப்பர் கடைசி கவிதை அற்ப்புதம்
அதெப்பிடி உங்கட பதிவு படிக்கிறவங்க எல்லாருமே ஓட்டுப் போடுகினம் நிரூ.நானும் எல்லாருக்கும் போடுறன்.யாரும் சரியா எனக்குப் போடமாட்டினம்.பொறாமையா இருக்கு எனக்கு.ஒரு மைனஸ் ஓட்டுப்போடவா கோவம் போக !
அப்பாடி....இங்க காலநிலைபோலவே வெயில் கலந்த குளிர் கவிதை !
ரியலி அசத்தலான கவிதைகள்
நிருபன் அண்ணா இவ்லோ நல்ல கவிதையும் எழுதுவார
ஆச்சரியமா இருக்கு
ரியலி சூப்பர் அண்ணா
supper kavithakal thamilil elutha mudyavillai manikkavum
//மைனஸ் ஓட்டு குத்தும்
மகான்களைப் போலல்லவா
இருக்கிறது- உன்
காந்த விழிப் பார்வையும்
காதல் நிறை லீலைகளும்!//
மைனஸ் ஓட்டு காணாமல் போய்விட்டதே சகோ.நன்று
நல்ல படைப்பின்
அர்த்தம் புரியாதோராய்
கண்ணை மூடி வந்து
மைனஸ் ஓட்டு குத்தும்
மகான்களைப் போலல்லவா
இருக்கிறது- உன்
காந்த விழிப் பார்வையும்
காதல் நிறை லீலைகளும்!//
மைனஸ் ஓட்டுதானே விழுந்தது.. சந்தோசபடுங்க.. இங்க எனக்கு எந்த ஓட்டுமே விழலையே.. சும்மா சும்மா..
//உன் போன் நம்பரை
டயல் செய்த போது தான்
புரிந்து கொண்டேன்,
நாணயத்தின் பெறுமதியை!// ஹா..ஹா..மிஸ்டு கால் கொடுத்தே காலத்தை ஓட்டுறாங்கய்யா..
//நல்ல படைப்பின்
அர்த்தம் புரியாதோராய்
கண்ணை மூடி வந்து
மைனஸ் ஓட்டு குத்தும்
மகான்களைப் போலல்லவா// சூப்பர்.
//நல்ல படைப்பின்
அர்த்தம் புரியாதோராய்
கண்ணை மூடி வந்து
மைனஸ் ஓட்டு குத்தும்
மகான்களைப் போலல்லவா// சூப்பர்.
என் சைக்கிள் ரியூப்பின்
தேய்மானத்தை விட
உன் பிடிமானத்தைத் தான்
அடிக்கடி நேசிக்கிறேன்;
அடிக்கடி ரயர் மாற்றினாலும்
உன் பின்னால் வருவதை
நான் மாற்றவில்லை
ஆஹா என்ன ஒரு காதல் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு இந்த கவிதை
முகில்களை எட்டிப் பிடிக்க
முடியாது
கூவும் கோழிகளைப் போல்- எம்
வலிகளைக் கேட்டு
கண்ணீர் விடுகின்றன
சாளரக் கம்பிகள்!
கடசில நெஞ்சை தொட்டிடியே நண்பா
தீராத வலி!
முகில்களை எட்டிப் பிடிக்க
முடியாது
கூவும் கோழிகளைப் போல்- எம்
வலிகளைக் கேட்டு
கண்ணீர் விடுகின்றன
சாளரக் கம்பிகள்!
வலிக்கிறது நிரூபன். மிகவும் அருமை
சைக்கிள்ல போன எப்படி கார் பைக்ல போங்க ஓகே ஆனாலும் ஆயிடும் .அருமை சிறிய கவிதைகள்
//நல்ல படைப்பின்
அர்த்தம் புரியாதோராய்
கண்ணை மூடி வந்து
மைனஸ் ஓட்டு குத்தும்
மகான்களைப் போலல்லவா
இருக்கிறது- உன்
காந்த விழிப் பார்வையும்
காதல் நிறை லீலைகளும்!//
ஆஹா எத கொண்டுபோய் எதோட கோர்க்குறீங்க
கடைசி கவிதை "வலி"
ஏதோ உள்குத்து மாதிரி இருக்கே
'பிணங்களைப் புணர்ந்த...'கவிதை எழுதிய வலியின் ரணங்களை மறக்கவும் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொள்ளவும்தானா இந்தக் கவிதைகள்? மனதில் உள்ள உணர்வுகளை சுலபமாய் எழுத்தில் வடிக்கும் திறன் உங்களுக்கு நன்றாகவே வருகிறது வாழ்த்துக்கள்.
அடி(க்) கள்ளி!
உன் போன் நம்பரை
டயல் செய்த போது தான்
புரிந்து கொண்டேன்,
நாணயத்தின் பெறுமதியை! //
அதனால தான் என்னய போல புத்திசாலித்தனமா செயல்படணும்..
நல்ல படைப்பின்
அர்த்தம் புரியாதோராய்
கண்ணை மூடி வந்து
மைனஸ் ஓட்டு குத்தும்
மகான்களைப் போலல்லவா
இருக்கிறது- உன்
காந்த விழிப் பார்வையும்
காதல் நிறை லீலைகளும்!//
பாதிப்புகள் பேசுதா நிரூ.. ஹி ஹி.. என்னதான் சொன்னாலும் உங்களுக்கு மைனஸ் ஓட்டு குத்துறத நிறுத்தமாட்டாங்க.. மைனஸ் ஓட்டுகள் குத்துற மகராசன் யாராக இருந்தாலும் நிறுத்திடாதீங்க..
உதட்டிற்கு நீயேன்
மை பூசுகிறாய் என்பதை
இன்று தான் அறிந்தேன்;
உன் மையிற்கான
கட்டணமில்லாத
விளம்பர நிறுவனமாக
நான் இருக்கும்
உன்(ண்)மையினை உணராதவனாய்!//
இதுல எனக்கு அனுபவமில்லை.. உங்களுக்கு தான் நிறைய இருக்குமே.!
என் சைக்கிள் ரியூப்பின்
தேய்மானத்தை விட
உன் பிடிமானத்தைத் தான்
அடிக்கடி நேசிக்கிறேன்;
அடிக்கடி ரயர் மாற்றினாலும்
உன் பின்னால் வருவதை
நான் மாற்றவில்லை! //
நல்லா சைக்கிளுக்கு பஞ்சர் ஒட்டுறவன்கிட்ட ஒருமணி நேரம் உக்காந்து பிச்சையெடுத்து வாங்கி வந்த கவிதை போல இருக்கு.. ஹி ஹி
அன்பே உன் உடையும்,
விலை வாசியும்
ஒன்றென
அடிக்கடி நினைவூட்டுகிறாயே!
அரை மீட்டர் போதுமென்பதாலா?//
எனக்கு இது புரியவில்லை நிரூ..
முகில்களை எட்டிப் பிடிக்க
முடியாது
கூவும் கோழிகளைப் போல்- எம்
வலிகளைக் கேட்டு
கண்ணீர் விடுகின்றன
சாளரக் கம்பிகள்!//
சரியில்லையே.! உவமைகள் முட்டுதே.!
என்னையும் ஒரு மனுசனா மதிச்சு ஜாலியான கவிதை கேட்டதுக்கு போஸ்ட் செஞ்ச தானே தலைவர் நிரூபன் வாழ்க(மொதல்ல வாய பெனாயில் ஊத்தி கழுவணும்..)
அழகு... ஆல்ரெடி 20 வோட்டு இருக்கே, நானும் போடணுமா நிரூபன்? சரி 21 -அ வச்சிகங்க...ஏன்னா கவிதைகள் நன்று...
அப்ப அண்ணரும் பாழ்ங்கிணத்தில (காதலில) விழுந்திட்டார் போல?? நல்ல கவிதைகள்
முதலாவதும் கடைசியும் சூப்பர் அண்ணா.........
"முகில்களை எட்டிப் பிடிக்க
முடியாது
கூவும் கோழிகளைப் போல்- எம்
வலிகளைக் கேட்டு
கண்ணீர் விடுகின்றன
சாளரக் கம்பிகள்!"
ஏதோ புதிதாக உணருகின்றேன்....
வந்துட்டோம்ல... வாங்க அப்படியே போய் ஜில்லென்று ஒரு ஐஸ்பழம் குடிச்சுட்டு வரலாம்
அட போப்பா நாலு வரியில என் காதலை நாறடிச்சிட்டியே... ஹ..ஹ....
அது சரி மைனஸ் வோட்டு போட்டாலும் பொறி கிடங்கா...
@மைந்தன் சிவா
சிக்கில் டியூப் மட்டும் தான் தேயுதா...
கருகுதே...//
இல்லை சகோ, எல்லாம் தான் தேயுது.
அவ்...
@மைந்தன் சிவா
//சி.பி.செந்தில்குமார் said... [Reply to comment]
உன் மை///
உண்மை...சி பிக்கு உண்மை வருதில்ல பாருங்க..//
அந்தாளைத் திட்ட என் வலைத் தான் கிடைச்சுதா.
@மைந்தன் சிவா
//விக்கி உலகம் said...
மாப்ளே என்னமா குத்துற ஹி//
அரிசியா குத்துராறு நிருபன்??ஹிஹி
தக்காளிய நசுக்கத்தான் முடியும் குத்த எல்லாம் முடியாது பாஸ்!!//
அவரோடை கையிலை நீங்க கிடைச்சீங்க, சங்கு தான்.
@பலே பிரபு
ஆகா மைனஸ் ஓட்டு போட்டாலும் உங்களுக்கு மகான் தானா!!//
எதிரியையும் நண்பனாக மதிக்கிற மனப்பாங்கு வேணுமில்ல. அதான் சகோ.
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
எனக்கு நல்லா புரிஞ்சு போச்சு! இது சரிப்பட்டு வராது! கெதீல இதுக்கொரு அலுவல் பார்க்கவேணும்! ஹிஹிஹி..... மச்சி கவிதையெல்லாம் கலக்கல்!!//
ஏன் கால் கட்டுப் போட்டு, என்னையும் நோகடிக்கிற ப்ளானோ;-))
@Nesan
கவிதையில் பின்னுறீங்க சகோ விலைவாசியின் உயர்வுதான் ஆடையின் உயர்வோ நல்லாய் ரசிக்கிறீங்க .. !!விலைவாசியைச் சொன்னேன்!//
விலை வாசி குறைவென்றால் வாடிக்கையாளருக்கு இலாபம்
தானே;-))
@!* வேடந்தாங்கல் - கருன் *!
அசத்தல் கவிதைகள் சகோ..//
நன்றிகள் சகோ.
@Mahan.Thamesh
சிறப்பாய் உள்ளது சகோ மைனஸ் ஓட்டையும் காதல் லீலையையும் ஒப்பிட்டு ஒரு கவிதை சுப்பர் ;/
கோர்த்து வுடுறதுக்கென்றே திரியுறீங்க. இப்படி எத்தினை பேரு கிளம்பியிருக்கிறீங்க.
@சென்னை பித்தன்
கவிதைகள் சூப்பர்;மூன்றாவது கவிதைக்கான படம் சூப்பரோ சூப்பர்!//
நன்றிகள் சகோ.
@ரேவா
பின்ன உங்கள் காதலியோடு கதைக்குறதுனா சும்மாவா?.... ஹி ஹி//
அதுக்காக பாக்கட் மணியை உருவுவது ரொம்ப ஓவர் இல்லே.
@ரேவா
ஹ ஹ.... சகோ நல்லாவே லிங்க் பண்ணிருக்க போ//
போட்டுக் கொடுத்து, வம்பிலை மாட்டனும் என்றே கிளம்பியிருக்கிறீங்க.
@ரேவா
கவித கவித...
அழகான கவிதை
அவன் கன்னத்தில்..//
ஆனால் அடையாளம் தான் அடுத்த விநாடியே அழிஞ்சு போகுதே.
@ரேவா
பின்ன, போன் பில்லுக்கு கட்டுற காச, அவங்க இப்படி மிச்சம் பண்ணுறாங்க...//
அடடா, நீங்க தான் கரெக்டா பாயிண்டைப் புடிச்சிருக்கிறீங்க;-))
@ரேவா
வெகுவாய் ரசித்தேன் அனைத்து கவிதையையும்...வெயிலுக்கு இதம் என்று கடைசியில் தீராத வலிகளை உணர்த்தும் கவிதை மனதை கனக்கச் செய்கிறது சகோ//
எங்கள் யதார்த்ததையும் பகிர்ந்து கொள்ள வேண்டும் தானே. அது தான் சகோ.
@A.R.RAJAGOPALAN
வெகுவாய் ரசித்தேன் அனைத்து கவிதையையும்...வெயிலுக்கு இதம் என்று கடைசியில் தீராத வலிகளை உணர்த்தும் கவிதை மனதை கனக்கச் செய்கிறது சகோ//
நன்றிகள் சகோ.
@A.R.RAJAGOPALAN
இப்போது தான் புரிகிறது நீங்கள் ஏன் என் மின்னஞ்சல் முகவரி கேட்டீர்கள் என்று, எதுவாக இருந்தாலும் முகம் காட்டியே பேசும் பழக்கம் கொண்டவன் நான், நன்றி//
சைட் கப்பிலை யாரோ புகுந்து விளையாடுறாங்கள் பாஸ்...
அதான் முடியலை.
@கந்தசாமி.
அரசியல் போல தான்
காதல்லயும் இதெல்லாம் சாதாரணமப்பா...//
மக்களே அனுபவசாலி சொல்லுறாரு. எல்லோரும் நல்லா கேட்டுக்குங்க.
@கந்தசாமி.
ஹிஹிஹி நச் ன்னு ஒரு அடி...//
போட்டுக் குடுக்கிறியா.அடுத்த பதிவிலை உனக்கு ஸ்பெசல் கவனிப்பு வைக்கிறன் சகோ.
@கந்தசாமி.
இன்னொன்று
- "பின்சில்லாய் வாழ்க்கை பட்டால் முன் சில்லை கலைத்து தானே ஆகணும்...)//
தத்துவம் எல்லாம் அவிழ்த்து விடுறீங்களே. அருமையாக இருக்கு. எல்லாம் சொந்த அனுபவங்கள் தானே.
@FOOD
ரசிக்க வைத்து, சிந்திக்கவும் வச்சிட்டீங்க!//
நன்றிகள் சகோ.
@ஆர்.கே.சதீஷ்குமார்
சில்லுன்னு இருக்குங்க!//
அப்போ இனி ஐஸ்கிரீம் தேவை இல்லை என்று சொல்லுறீங்க.
@சசிகுமார்
அப்பு சூப்பர் கடைசி கவிதை அற்ப்புதம்//
நன்றிகள் சகோ.
@ஹேமா
அதெப்பிடி உங்கட பதிவு படிக்கிறவங்க எல்லாருமே ஓட்டுப் போடுகினம் நிரூ.நானும் எல்லாருக்கும் போடுறன்.யாரும் சரியா எனக்குப் போடமாட்டினம்.பொறாமையா இருக்கு எனக்கு.ஒரு மைனஸ் ஓட்டுப்போடவா கோவம் போக !//
அது வாசகர்களைத் தான் கேட்கனும் சகோ. எல்லோரும் உங்கள் பதிவிற்கும் ஓட்டுப் போடுவார்கள். கவலையை விடுங்க சகோ.
மைனஸ் ஓட்டுப் போடப் போறீங்களோ. அவ்...........
@துஷ்யந்தனின் பக்கங்கள்
ரியலி அசத்தலான கவிதைகள்
நிருபன் அண்ணா இவ்லோ நல்ல கவிதையும் எழுதுவார//
நக்கலு, நாம இதுக்கு முன்னாடியும் எழுதியிருக்கிறேனே.
நீங்க பார்க்கலைப் போல இருக்கே!
ஆச்சரியமா இருக்கு
ரியலி சூப்பர் அண்ணா//
நன்றிகல் சகோ.
@யாதவன்
supper kavithakal thamilil elutha mudyavillai manikkavum//
அட தமிழ்ங்கிலிஸ்.. நன்றிகள் சகோ. இருங்க உங்களை தமிழ்ப் பற்றாளர்களிடம் போட்டுக் கொடுக்கிறேன்.
@shanmugavel
மைனஸ் ஓட்டு காணாமல் போய்விட்டதே சகோ.நன்று//
இல்லைச் சகோ, அவன் இங்க தான் எங்கயாச்சும் சுத்திக் கொண்டு இருப்பான்.
@ஈரி
மைனஸ் ஓட்டுதானே விழுந்தது.. சந்தோசபடுங்க.. இங்க எனக்கு எந்த ஓட்டுமே விழலையே.. சும்மா சும்மா..//
சந்தோசப்படுறேன் சகோ.
@செங்கோவி
ஹா..ஹா..மிஸ்டு கால் கொடுத்தே காலத்தை ஓட்டுறாங்கய்யா..//
பிழைக்கத் தெரிஞ்சிருக்கனுமே மாப்பு.
அடிக்கடி நினைவூட்டுகிறாயே!
அரை மீட்டர் போதுமென்பதாலா? ///
என்னது அரை மீட்டரா ???? இப்போவெல்லாம் சிட்டி பெண்கள் அவ்ளோ நிறையா துணி யூஸ் பண்ணுறாங்களா? சேம் , சேம் பப்பி சேம் ..........
முதல் தடவையாக உங்களின் கவிதையைப் படித்துள்ளேன். மிகவும் நன்றாக இருக்கிறது. முன்னேற வாழ்த்துக்கள்.
@யாதவன்
ஆஹா என்ன ஒரு காதல் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு இந்த கவிதை//
நன்றிகள் சகோ.
@யாதவன்
கடசில நெஞ்சை தொட்டிடியே நண்பா//
என்ன செய்ய முடியும் சகோ. அவலங்களும் எம் கண்ணோடு கலந்திருக்கிறதே.
@இரா.எட்வின்
வலிக்கிறது நிரூபன். மிகவும் அருமை//
நன்றிகள் ஐயா.
@மதுரன்
ஆஹா எத கொண்டுபோய் எதோட கோர்க்குறீங்க//
சகோ, நேரடியாகச் சொன்னால் இன்னும் நிறைய மைனஸ் ஓட்டுப் போடுவாங்களே. அதான் இப்புடி உல்லுள்ளாகி வேலை
@MANO நாஞ்சில் மனோ
கடைசி கவிதை "வலி"//
நன்றிகள் சகோ.
@ரஹீம் கஸாலி
ஏதோ உள்குத்து மாதிரி இருக்கே//
புரிய வேண்டியவர்களுக்குப் புரியும் என்று எழுதியது சகோ.
@Amudhavan
'பிணங்களைப் புணர்ந்த...'கவிதை எழுதிய வலியின் ரணங்களை மறக்கவும் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொள்ளவும்தானா இந்தக் கவிதைகள்?//
ஆமாம் சகோ. எப்போதுமே சோகத்தில் மூழ்கிக் கிடப்பது அழகல்ல என்பதனால் எழுதப்பட்ட கவிதைகள் இவை.
//மனதில் உள்ள உணர்வுகளை சுலபமாய் எழுத்தில் வடிக்கும் திறன் உங்களுக்கு நன்றாகவே வருகிறது வாழ்த்துக்கள்.//
நன்றிகள் சகோ. வாசகர்களினதும், நண்பர்களினதும் ஊக்கம் தான் இவற்றுக்கெல்லாம் காரணம்.
@தம்பி கூர்மதியன்
அதனால தான் என்னய போல புத்திசாலித்தனமா செயல்படணும்..//
மவனே, நீ மிஸ்ட் கோலிலை லவ்சு வுடுற பார்ட்டியா. ஒரு நாளைக்கு வசமா மாட்டுவீங்க சகோ.
@தம்பி கூர்மதியன்
பாதிப்புகள் பேசுதா நிரூ.. ஹி ஹி.. என்னதான் சொன்னாலும் உங்களுக்கு மைனஸ் ஓட்டு குத்துறத நிறுத்தமாட்டாங்க.. மைனஸ் ஓட்டுகள் குத்துற மகராசன் யாராக இருந்தாலும் நிறுத்திடாதீங்க..//
அடப் பாவி, எனக்காக அனுதாப்பப்பட்டு, ஆறுதல் சொல்லுவீங்க என்று நினைத்தால் இப்படி மாட்டி வுடுறீங்களே.
@தம்பி கூர்மதியன்
இதுல எனக்கு அனுபவமில்லை.. உங்களுக்கு தான் நிறைய இருக்குமே.!//
சும்மா நடிக்காதீங்க சகோ.
@தம்பி கூர்மதியன்
நல்லா சைக்கிளுக்கு பஞ்சர் ஒட்டுறவன்கிட்ட ஒருமணி நேரம் உக்காந்து பிச்சையெடுத்து வாங்கி வந்த கவிதை போல இருக்கு.. ஹி ஹி//
இது தான், உங்க கிட்ட சைக்கிளைக் கடன் வாங்கக் கூடாது என்று சொல்லுவது.
@தம்பி கூர்மதியன்
எனக்கு இது புரியவில்லை நிரூ..//
நீங்கள் கண்ணுக்கு என்ன கூலிங் கிளாஸா போட்டிருக்கிறீங்கள்.
@தம்பி கூர்மதியன்
சரியில்லையே.! உவமைகள் முட்டுதே.!//
ஏனய்யா, உவமைகள் முட்டுது, கொஞ்சம் வடிவாகப் பார்க்கிறது.
@தம்பி கூர்மதியன்
என்னையும் ஒரு மனுசனா மதிச்சு ஜாலியான கவிதை கேட்டதுக்கு போஸ்ட் செஞ்ச தானே தலைவர் நிரூபன் வாழ்க(மொதல்ல வாய பெனாயில் ஊத்தி கழுவணும்..)//
ஏன் உங்க வாய் நல்ல வாயா இல்லை நாறின வாயா.
@சிராஜ்
அழகு... ஆல்ரெடி 20 வோட்டு இருக்கே, நானும் போடணுமா நிரூபன்? சரி 21 -அ வச்சிகங்க...ஏன்னா கவிதைகள் நன்று...//
நன்றிகள் சகோ. ஓட்டுப் போடும் போது சொல்லிப் போடுறீங்களே, நாம என்ன பண்ட மாற்றுப் பாலிசியா இங்கே வைச்சிருக்கிறம்?
@கார்த்தி
அப்ப அண்ணரும் பாழ்ங்கிணத்தில (காதலில) விழுந்திட்டார் போல?? நல்ல கவிதைகள்//
ஆமா பாஸ், பாழ் கிணற்றிலை விழுந்து கரையொதுங்கி விட்டேன். இனிமே விழ மாட்டேன் பாஸ்.
@akulan
முதலாவதும் கடைசியும் சூப்பர் அண்ணா.........
"முகில்களை எட்டிப் பிடிக்க
முடியாது
கூவும் கோழிகளைப் போல்- எம்
வலிகளைக் கேட்டு
கண்ணீர் விடுகின்றன
சாளரக் கம்பிகள்!"
ஏதோ புதிதாக உணருகின்றேன்....//
நன்றிகள் சகோ, புதிதாக ஒன்றும் நான் இங்கே சொல்லலை சகோ, இவை எல்லாம் எங்களின் கடந்த கால அவலங்களின் எழுத்து வடிவம் தான் இது.
@Jana
வந்துட்டோம்ல... வாங்க அப்படியே போய் ஜில்லென்று ஒரு ஐஸ்பழம் குடிச்சுட்டு வரலாம்//
எங்கே ராஜாவிலையா அல்லது றியோவிலையா ஐஸ்கிரீம் குடிப்பம்.
@♔ம.தி.சுதா♔
அட போப்பா நாலு வரியில என் காதலை நாறடிச்சிட்டியே... ஹ..ஹ....//
அடப் பாவி, நீங்களும் மிஸ்ட் கோல் பார்ட்டியா.
@♔ம.தி.சுதா♔
அது சரி மைனஸ் வோட்டு போட்டாலும் பொறி கிடங்கா...//
ஆமா மைனஸ் ஓட்டுப் போட்டவன் மாட்டிக்கிட்டானில்ல.
அவ்.........;-)))
@மங்குனி அமைச்சர்
என்னது அரை மீட்டரா ???? இப்போவெல்லாம் சிட்டி பெண்கள் அவ்ளோ நிறையா துணி யூஸ் பண்ணுறாங்களா? சேம் , சேம் பப்பி சேம் .........//
அப்போ கால் மீட்டர் என்று போட்டிருக்கனும் பாஸ்,
நான் தான் மாறி எழுதிட்டேன்.
@Thurkka Irashathurai
முதல் தடவையாக உங்களின் கவிதையைப் படித்துள்ளேன். மிகவும் நன்றாக இருக்கிறது. முன்னேற வாழ்த்துக்கள்.//
அதென்ன முன்னேற வாழ்த்துக்கள். நான் என்ன இங்கே படை நடவடிக்கையா செய்திட்டிருக்கேன்.
உங்களின் வாழ்த்துக்களுக்கும், முதல் வருகைக்கும் நன்றிகள் சகோ.
கவிதைகள் அனைத்தும் மிக அருமை.
சில்லரைக் காதல் சூப்பர்..
//தீராத வலி!
முகில்களை எட்டிப் பிடிக்க
முடியாது
கூவும் கோழிகளைப் போல்- எம்
வலிகளைக் கேட்டு
கண்ணீர் விடுகின்றன
சாளரக் கம்பிகள்!//
கடைசிக்கவிதை இதயத்தை கனக்கச்செய்தது.
வாழ்த்துகள் நிரூபன் .காம்மிற்கு மாறியதற்க்கும் சேர்த்து..
@அன்புடன் மலிக்கா
கவிதைகள் அனைத்தும் மிக அருமை.
சில்லரைக் காதல் சூப்பர்..//
நன்றிகள் சகோ.
கடைசிக்கவிதை இதயத்தை கனக்கச்செய்தது.
எங்களின் அவலங்களின் வரி வடிவம் தான் இக் கவிதை சகோ.
வாழ்த்துகள் நிரூபன் .காம்மிற்கு மாறியதற்க்கும் சேர்த்து..//
நன்றிகள் சகோ.
ம்ம்ம்
ரெம்ப அருமையான கவிதைகள்
Post a Comment