தான் செய்யாத
பல கருமங்களை
இப் பிறப்பில் செய்ய(ப்)
புத்தனுக்கு
பேராசை கருக்கொண்டது,
தான் மீண்டும் பிறப்பதென
தீர்மானமெடுத்தான்,
தன் ஆசா பாசங்களை
அனுபவிக்க
இந்த உலகினில் ஓர் இடம் தேடினான்
நித்திலம் தான்
தனக்கேற்ற இடமென
ஞான நிஷ்ட்டை
தெளிந்தான்;
'ஒரு உயிராய் பிறப்பதிலும்
பல உயிர்களாய்
உருக் கொள்தலே
வீரியமானது என(ப்)
பிரித் ஓதினான்
புத்தனின் அருகே இருந்த
மொட்டைப் பிக்கு ஒருவன்;
இறுதியில் இனவாதிகளின்
இதயங்களில்
சித்தார்த்தன் சூல் கொண்டான்!
ஓர் இனத்தின் மீதான
வேரறுப்பு
சித்தார்த்தனின் தத்துவமாக
மதம் எனும்
போர்வை அணிந்து
இனவாதிகளின் எச்சிலாக
நலிந்தவர்கள் மீது
உமிழப்படுகிறது!
மறு பிறப்பெடுத்தவனோ
பசிக்கையில்
வெள்ளரசுகள் சாமரம் வீசிட
காமமெனும் உயிரணுக்கள்
ஊன்று கோல் கொடுக்க
தமிழ் பெண்களை(ப்)
புணர்ந்து வேட்கை தணித்தான்,
இரத்த வெறியில்
இன்பம் இருக்கென
உணர்கையில்
உயிரோடு கொளுத்து
எனும் வாசகம்
புத்தனின் உணர்வுகளுக்குள்
பீறிட்டுப் பாயத் தொடங்கியது,
தமிழர் குருதியின்
சுவையில் சோம பானம்
உள்ளதெனும் உண்மையினை
உலகிற்கு உரைத்தான்,
மனிதக் கடவுளாய்
வெள்ளரசின் மைந்தன்
உரைப்பதை
உலகம்
உண்மையாய் உணர்ந்து
புத்தனிற்குப் புணர்தலை
அதிகரிக்க வீரியம் மிகு
விதைகளை வழங்கியது,
உயிரோடு புணர்தலிலும்
பிணத்தை(ப்) புணர்தலில்
புது சுகம் இருக்கென
புத்தனின் இருப்பிடத்தின்
காற் பக்கம் இருந்து
அசரீரி கேட்டது;
கூடவே தானும் இருக்கிறேன்
என்று கைகள்
நம்பிக்கை ரேகை காட்டியது
புத்தனோ வேறுபாடின்றி
தன் வேட்கையினை
வெறியர்கள் மூலம் தீர்த்தான்!
ஒரு சந்ததியின் வேர்கள்
இனவாத(ச்) சல்லாபத்திற்காய்
சரிக்கப்பட்ட நினைவுகளை(ச்)
சுமந்த படி தமிழர்கள்!
கேள்விக் குறிகளென நீளும்
விடைகளற்ற உறவுகளின்
தேடல்களைத் தொடர்ந்த படி
தமிழனின் வம்சம்
தெருவெங்கும்
ஆவியாய் அலைகிறது;
புத்தனின் போதனை நிறை,
பிக்குகள் பிரித் மொழி நிகர்
இனவாத பித்தர்கள் கூட்டமோ
புதியதோர் அத்தியாயம்
பிறந்தது எனும்
கேளிக்கையில்
தங்களின் புணர்ச்சிகள்
நிறை வடைந்து விட்டதாய்
ஈமச் சடங்கை
வெள்ளரசின் நிழலின் கீழ்
வெற்றிச் செருக்காய்
கொண்டாடி மகிழ்கிறார்கள்,
இறந்த பிணங்கள்
மீண்டும் சூல் கொள்ளும்
ஓர் நாளிகையில்
என்பதனை மட்டும் உணராதவர்களாய்
அவர்கள்......................!
பிரித் ஓதுதல்: பௌத்த மத வழி பாட்டின் போது உச்சரிக்கப்படும் மந்திரத்திற்கு நிகரான வாக்கியம்.
டிஸ்கி: இக் கவிதையில் உள்ள முதலாவது படம்,(புத்தனின் படம்) சகோதரன் பதிவர் கந்தசாமி அவர்களது கை வண்ணத்தில் உருவாக்கப்பட்டது.
இரண்டாவது படம் தமிழ் மக்கள் குரல் வலைப் பதிவில் இருந்து கூகிளின் உதவியுடன் எடுக்கப்பட்டது.
|
99 Comments:
பால் கோப்பி எனக்கே எனக்கா!
உண்மையில் இதயம் கனக்கிறது வேதனை துயரங்களைத்தாண்டி என் நித்திரையையும் தாண்டி பதிவிடும் நேரத்தில் பிரித் ஓதுதல் உண்மையில் வேதம் அறிந்த அந்தனன் செயல்போல் ஆனால் வெள்ளரசுப்போய்களிடம் உண்மையான புத்தபிக்கு தோற்றுப் போனது ஆட்சியில் என்று அவர்களை மந்திர ஆலோசனை என்ற ஓட்டுக்காக அரசியலில் குதித்தவர்களின் பின்னால் போனதன் விளைவே ஆஸ்கிரிய,மல்வத்தைகளின் வம்சங்கள் சாதாரன துறவிகளை தாண்டியவன் என்பதில் பிணம்தின்னும் போய்களை சாடியவர்கள் உண்மை பெளத்தன் என்பவம் கோபம் அற்றவன் என்பது போதனையை நான் நேரில் கேட்டவன் கண்டவன் ! அப்படியான துறவிகளை ஆடைகளைந்து ஓடவிட்டதும் இந்த தேசம்தான்!
மீண்டும் காலைவருவேன் பணிகளுக்கிடையிலும்!
நிரூபன் வலி நிறைந்த கவிதைகள் தருவதில் வல்லவர் என்பதை மீண்டும் நிரூபிக்கிறார்.
எம் தமிழரின் வலிகள் அப்படியே உங்களின் கவிதைகளில்;
ஆண்டுகள் பல சென்ற போதும் மறக்க முடியாத துன்ப துயரங்களை தாங்கியே திறந்த சிறைச்சாலைக்குள் வாழும்
மக்களாக எம் மக்கள்
@Nesan
பால் கோப்பி எனக்கே எனக்கா!//
பால் கோப்பி எல்லாம் கொடுக்க முடியாது, வெறும் பிளேன் டீ தான் இப்ப தர முடியும்;-))
அவ்....
@Nesan
பௌத்தத்தைப் பற்றி நிறையப் புரிந்து வைத்திருக்கிறீர்கள் சகோ. உங்கள் வருகைக்காக காத்திருக்கிறேன் சகோ.
@சி.பி.செந்தில்குமார்
நிரூபன் வலி நிறைந்த கவிதைகள் தருவதில் வல்லவர் என்பதை மீண்டும் நிரூபிக்கிறார்.//
எங்கள் அவலங்களை, என்னால் முடிந்த வடிவத்தில் சொல்லும் ஒரு முயற்சி தான் இது சகோ.
நன்றிகள் சகோ.
@Mahan.Thamesh
எம் தமிழரின் வலிகள் அப்படியே உங்களின் கவிதைகளில்;
ஆண்டுகள் பல சென்ற போதும் மறக்க முடியாத துன்ப துயரங்களை தாங்கியே திறந்த சிறைச்சாலைக்குள் வாழும்
மக்களாக எம் மக்கள்//
ம்...இனி என்ன செய்ய முடியும்?
விதி விட்ட வழி இது தானே சகோ.
சகோ படிக்கும் போதே கவிதை மனதை என்னவோ செய்கிறது.. வழிகள் மிகுந்த கவிதை ...
இக்கவிதை உண்மையை படம் பிடித்து காட்டும் கண்ணாடி..
நம் ரத்த சொந்தங்களின் அவலங்களின் குவியல் சகோ,,
நிஜமாகவே அந்த புத்தர் படம் அங்கு நடந்த கொடுமையை கண்முன் நிறுத்துகிறது..
உயிரோடு புணர்தலிலும்
பிணத்தை(ப்) புணர்தலில்
புது சுகம் இருக்கென
புத்தனின் இருப்பிடத்தின்
காற் பக்கம் இருந்து
அசரீரி கேட்டது;
கூடவே தானும் இருக்கிறேன்
என்று கைகள்
நம்பிக்கை ரேகை காட்டியது///
கொடூரத்தின் உச்சம்... வார்த்தைகளில் வலிகளை குழைத்து அருமையாக தந்துள்ளீர்கள்..
பதிவர் கந்தசாமி இலங்கையா?
@FOOD
கவிதை காவியமும் படைக்கும்,கசப்பான உணர்வுகளையும் கொடுக்கும்//
நன்றிகள் சகோ.
கேள்விக் குறிகளென நீளும்
விடைகளற்ற உறவுகளின்
தேடல்களைத் தொடர்ந்த படி
தமிழனின் வம்சம்
தெருவெங்கும்
ஆவியாய் அலைகிறது;///
கண்களில் நீர் முட்டுகிறது சகோ..
@!* வேடந்தாங்கல் - கருன் *!
சகோ படிக்கும் போதே கவிதை மனதை என்னவோ செய்கிறது.. வழிகள் மிகுந்த கவிதை ...//
நன்றிகள் சகோ, இந்த உணர்வுகள் எல்லோரையும் எட்ட வேண்டும், அதன் மூலமாவது தமிழனுக்கு ஓர் வழி பிறக்க வேண்டும் என்பதே என் ஆதங்கம்.
@!* வேடந்தாங்கல் - கருன் *!
இக்கவிதை உண்மையை படம் பிடித்து காட்டும் கண்ணாடி..//
நம் ரத்த சொந்தங்களின் அவலங்களின் குவியல் சகோ,//
நன்றிகள் சகோ.
இந்த உண்மைகளை அனைவரையும் சென்றடைந்து எமக்கான ஓர் நல் வழி பிறக்க வேண்டும் என்பதே எனது ஆவ்ல். ஆதங்கம்.
@!* வேடந்தாங்கல் - கருன் *!
நிஜமாகவே அந்த புத்தர் படம் அங்கு நடந்த கொடுமையை கண்முன் நிறுத்துகிறது..//
நன்றிகள் சகோ, இப் படத்திற்குரிய கை வண்ணம் கந்தசாமியினையே சாரும்.
இரத்த வெறியில்
இன்பம் இருக்கென
உணர்கையில்
உயிரோடு கொளுத்து
எனும் வாசகம்
புத்தனின் உணர்வுகளுக்குள்
பீறிட்டுப் பாயத் தொடங்கியது,
தமிழர் குருதியின்
சுவையில் சோம பானம்
உள்ளதெனும் உண்மையினை
உலகிற்கு உரைத்தான்,///
இயலாமை என்பது எவ்வளவு கொடூரமானது.. நம்பிக்கை தான் வாழ்க்கை என்று தமிழர்கள் நம்பியிருக்கவேண்டும். புது வாழ்க்கை மலரும் என்று முற்று முழுதாக நம்பவேண்டும்..
அது விரைவில் நடந்தேறும்..
@சரியில்ல.......
கொடூரத்தின் உச்சம்... வார்த்தைகளில் வலிகளை குழைத்து அருமையாக தந்துள்ளீர்கள்..//
நன்றிகள் சகோ.
தான் மீண்டும் பிறப்பதென
தீர்மானமெடுத்தான்,
தன் ஆசா பாசங்களை
அனுபவிக்க
இந்த உலகினில் ஓர் இடம் தேடினான்
இந்து சமுத்திரத்தின்
நித்திலம் தான்
தனக்கேற்ற இடமென...................
யாரைப்பற்றி சொல்லுகிறீர்கள் என்று தெரிகிறது
இரத்த வெறியில்
இன்பம் இருக்கென
உணர்கையில்
உயிரோடு கொளுத்து
எனும் வாசகம்
நெஞ்சை தைக்கும் வரிகள்
மறு பிறப்பெடுத்தவனோ
பசிக்கையில்
வெள்ளரசுகள் சாமரம் வீசிட
காமமெனும் உயிரணுக்கள்
ஊன்று கோல் கொடுக்க
தமிழ் பெண்களை(ப்)
புணர்ந்து வேட்கை தணித்தான்,
உணர்வுத்தமிழ் உச்சம் காட்டும் வரிகள்
பிணமாக விழுந்தாலும் இனமாக விழுவோம் என்று இறுதிவரை இருந்த தமிழர்களுக்கு வீர வணக்கம்
பிணங்களை தின்ற புத்தன்
புத்தன் எந்த அதிர்வும் இல்லாமல் அமைதியாக இருக்கிறான்..
//கேள்விக் குறிகளென நீளும்
விடைகளற்ற உறவுகளின்
தேடல்களைத் தொடர்ந்த படி
தமிழனின் வம்சம்
தெருவெங்கும்
ஆவியாய் அலைகிறது;// கவிதையின் உச்சம் இந்தப் பகுதி தான்..நம் மக்களின் ஆன்மா சாந்தியைடைய வழி தான் என்ன?
உண்மையில் புத்தனின் பெயரால் இவர்கள் செய்த கொடுமைகளை ஊக்கிவித்த மதகுருமார்களும் ஆட்ச்சியாளர்களும் அகிம்சையை போதித்த சித்தாத்தரின் சிந்தனையை சீரலித்துவிட்டார்கள்!
எந்த மதமும் யாருக்கும் தீங்கு செய்ய சொல்லவில்லை என்பதற்கு அந்த புத்தரின் படமே சரியான எடுத்துக்காட்டு. புத்தரின் கண்களில் இருந்து வரும் ரத்த கண்ணீர் கலங்க செய்கிறது.
இதையும் படியுங்க
திரையுலகம் மிரளும் அளவுக்கு கலைஞரின் புதிய படம்
ஒட்டு போட்டுட்டு கெளம்புறேன் நிரு கமென்ட் சொல்ல பிறகு வருகிறேன்!
நானும் ஒட்டு போட்டு கெளம்புறேன்...
கருத்துக்கு அடுத்த பதிவுக்கு வருகிறேன் ஹிஹி
ம்ம்ம்...நல்லாத்தான் சொல்றீங்க...ஆனா புத்தன் பாவம் இவனுகளால (சிங்கள பேரினவாதிகள்) அந்த மனுஷனும்..
பதவி துறந்து போன புத்தனை அரியாசனத்தில் ஏற்றி இனவாதப் பேய்களை ஊக்கிவித்த அரசியல் காடையர்களிடம் பெளத்தம் தோற்று பலகாலம் ஆச்சு!
பஞ்ச சீலக்கொள்கை என்று புத்தன் சொன்ன போதனைகளை காலாவதியாக்கிய மதகுருமார்கள் என்ற பிணம் தின்னிகள் அறம் தவறிய செயல்கண்டுதானோ புத்தன் இன்னும் சயணத்தில் இருக்கிறார் என என்னத்தோன்றுகிறது!
தர்ம உபதேசம் செய்யும் இனவாதமற்ற மதகுருமார்களை அங்கி கிழித்து அடித்து வெரட்டிய காடையர் கூட்டங்களை வேடிக்கைபார்த்த அரசகாவலர்களையும் நேரில் கண்டவர்களில் நானும் ஒருவன்!ஆனாலும் புத்தன் பாவம் என்பேன் தன் பெயரால் நடக்கும் கொடுமையையும் சுமக்கவேண்டியுள்ளதே!
நான் பெளத்தத்திற்கு விரோதியல்ல மதவாதிகளுக்கும் பெளத்த பேரின வாதிகளுக்கும் எதிரானவன் நண்பா!குழப்பமில்லை ராமன் பெயரால் அயோத்தியும், குயாராத்தில் ரயில் எரிக்கப் பட்டதும் இந்துத்துவவாதிகளால் தானே இந்து செய்யவில்லையே பயங்கரவாதம்!
நண்பா...கவிதையின் வரிகளில் உங்கள் துயரம் தெரிகிறது.
///மனிதக் கடவுளாய்
வெள்ளரசின் மைந்தன்
உரைப்பதை
உலகம்
உண்மையாய் உணர்ந்து
புத்தனிற்குப் புணர்தலை
அதிகரிக்க வீரியம் மிகு
விதைகளை வழங்கியது////
உயிரோடு புணர்தலிலும்
பிணத்தை(ப்) புணர்தலில்
புது சுகம் இருக்கென
புத்தனின் இருப்பிடத்தின்
காற் பக்கம் இருந்து
அசரீரி கேட்டது;
கூடவே தானும் இருக்கிறேன்
என்று கைகள்
நம்பிக்கை ரேகை காட்டியது////
எம் அழிவுக்கு ஊன்று கோலாய் நின்ற சர்வதேசம் இந்தியா (காங்கிரஸ்) என்று அனைவரையும் சாடி செல்கிறது கவிதை...
///இறந்த பிணங்கள்
மீண்டும் சூல் கொள்ளும்
ஓர் நாளிகையில்
என்பதனை மட்டும் உணராதவர்களாய்
அவர்கள்......................!
//// முடிவு சிந்திக்க வைக்கிறது எம்மை.
////டிஸ்கி: இக் கவிதையில் உள்ள முதலாவது படம்,(புத்தனின் படம்) சகோதரன் பதிவர் கந்தசாமி அவர்களது கை வண்ணத்தில் உருவாக்கப்பட்டது.//// உங்களுக்கு ஐஞ்சு வருஷம் என்றால் எனக்கும் அஞ்சு வருஷம் தான் போல .............."பின்னாலே ----------- சட்டம் துரத்த போகுது "
////* வேடந்தாங்கல் - கருன் *! said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates
பதிவர் கந்தசாமி இலங்கையா?
/// பப்ளிக் பப்ளிக்.............
கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது ..
http://zenguna.blogspot.com
புத்தன் குடும்பஸ்தனா இருந்திருந்தா ஒரு வேலை ஏதாவது மாறி இருக்குமோ.........
அதனால்தானோ குடும்பங்களின் அழுகை குரல் கேட்கவில்லை!
கண்ணீர் சுமந்து எழுதிய வரிகள் சகோ ............
மௌன சாட்சியாய் அந்த புத்தன் மட்டுமல்ல
நாங்களும் தான்
இதயம் கணக்கிறது
கண்ணீர் பார்வையை மறைக்கிறது
அற்புதமான பதிவு
அட அட
புதிய புத்தன்
வலிகள் நிறைந்த சிறப்பான கவிதை..
//கேள்விக் குறிகளென நீளும்
விடைகளற்ற உறவுகளின்
தேடல்களைத் தொடர்ந்த படி
தமிழனின் வம்சம்
தெருவெங்கும்
ஆவியாய் அலைகிறது;//
அருமை.!!
நன்று சகோ! அது சரி நெகடிவ் ஓட்டு உங்கள் வளர்ச்சி பிடிக்காமலா?
ஆனைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம்.......
இது எமது வாழ்வில் நடக்குதா என்று பார்போம்...........
ஒவ்வொரு வரியும் வலி நிறைந்த வரி!மனம் கனக்கிறது!
கவிதை அருமை. அந்தப் படங்கள் மனதை என்னவோ செய்கின்றது.
பிணங்களைப் புணர்ந்த புத்தன்!//
இதுபோன்று இல்லாமல்.. ரசனையோடு கூடிய கவிதையை நான் உங்களிடத்து எதிர்பார்க்கிறேன் நிரூ..
இறுதியில் இனவாதிகளின்
இதயங்களில்
சித்தார்த்தன் சூல் கொண்டான்//
ஓ.. அப்படியா.?
இனவாதிகளின் எச்சிலாக
நலிந்தவர்கள் மீது
உமிழப்படுகிறது!//
உமிழபட்டென அனைத்தும் ஆசிட்களாக மாறி இருக்க வேண்டாமா.?
தமிழ் பெண்களை(ப்)
புணர்ந்து வேட்கை தணித்தான், //
இதை குறிப்பிடாது உங்கள் கவிதைகள் இருக்காது.. அதிலிருந்தே இதன் குறிப்பிட முடியாத வலி புரிகிறது..
தமிழர் குருதியின்
சுவையில் சோம பானம்
உள்ளதெனும் உண்மையினை
உலகிற்கு உரைத்தான்,//
சோம பானமா.? இல்லை உயிரறுக்கும் ஸ்லோ பாய்சனா என்பது விரைவில் தெரியும்.
அதிகரிக்க வீரியம் மிகு
விதைகளை வழங்கியது,//
ம்ம்.. இது நம் போரில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது..
இறந்த பிணங்கள்
மீண்டும் சூல் கொள்ளும்
ஓர் நாளிகையில்
என்பதனை மட்டும் உணராதவர்களாய்
அவர்கள்......................!//
அருமை நிரூ.. கண்டிப்பாக.. நம்புவோம்..
இன்னும் எத்தனை இருக்கு இது போல விசயங்கள் சொல்ல.
புத்தர் இதற்கு என்ன செய்வார். மன்னிக்கவும் நான் இதை விரும்பவில்லை. இதற்காக உங்களை விமர்சிக்கவும் விரும்பவில்லை.(நான் இதற்கு மைனஸ் வாக்களிக்கவில்லை)
கவிதை உண்மையில் கண்ணீரை வரவைக்கிறது கவிதை படிக்கும்போது காட்சி அமைப்பு போல் தோன்றுகிறது அது தங்கள் கவிதைக்கு கிடைத்த வெற்றி
கவிதையில் வலியை உணர்ந்தேன்.
நிரூ...இவ்வளவு கடைசியா வந்திருக்கேன்.
பின்னூட்டங்கள் நிறைவானதா இருக்கு.நான் என்னத்தைச் சொல்ல.படமே போதும் கவிதையைவிட வேதனையாயிருக்கு.
மேலே ஒருவர் சொன்னதுபோல புத்தரைத் திட்டுவது முட்டாள்தனமாகத்தான் தெரிகிறது.
நானும் எழுதியிருக்கிறேன்தான்.
புத்தபிக்குகள்தான் இந்த அநியாயங்களுக்கு உடந்தை !
தலைப்பே திடுக்கிட வைத்தது .நிரூபன். உண்மையில் எனக்கு புத்த பிக்குகளுக்கும் பின்லேடனுக்கும் வித்தியாசம் இருப்பதாகத் தெரியவில்லை.
- உங்கள் வலியை உணத்த முயன்றிருக்கிறீர்கள். அதற்கு செம்மொழி என்ன எம்மொழியும் போதாது.
படங்கள் அருமை பல விடயங்கள் உணர்திவிட்டது
@!* வேடந்தாங்கல் - கருன் *!
பதிவர் கந்தசாமி இலங்கையா?//
ஏனய்யா, கந்தசாமிக்கு ஆப்படிக்கும் ப்ளானோ(((;
@சரியில்ல.......
இயலாமை என்பது எவ்வளவு கொடூரமானது.. நம்பிக்கை தான் வாழ்க்கை என்று தமிழர்கள் நம்பியிருக்கவேண்டும். புது வாழ்க்கை மலரும் என்று முற்று முழுதாக நம்பவேண்டும்..
அது விரைவில் நடந்தேறும்.//
இதனைத் தானே எல்லோரும் காலதி காலமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.
@யாதவன்
யாரைப்பற்றி சொல்லுகிறீர்கள் என்று தெரிகிறது//
ஏன் அதனைப் பப்ளிக்கில் விளக்கமாகச் சொல்லுறீங்கள்.
@செங்கோவி
கவிதையின் உச்சம் இந்தப் பகுதி தான்..நம் மக்களின் ஆன்மா சாந்தியைடைய வழி தான் என்ன//
நம் மக்களின் ஆன்மா சாந்தியடைய, தீர்வுப் பொதியினைத் தருவது தான் ஒரே வழி.
@சசிகுமார்
எந்த மதமும் யாருக்கும் தீங்கு செய்ய சொல்லவில்லை என்பதற்கு அந்த புத்தரின் படமே சரியான எடுத்துக்காட்டு. புத்தரின் கண்களில் இருந்து வரும் ரத்த கண்ணீர் கலங்க செய்கிறது.//
ஆனால் புத்தரின் பெயரால் இடம் பெற்ற அவலங்களை மறக்க மனமிடங் கொடுக்கவில்லை சகோ.
@நர்மதன்
இதையும் படியுங்க
திரையுலகம் மிரளும் அளவுக்கு கலைஞரின் புதிய படம்//
கவிதையைப் பற்றி ஏதாவது சொல்லுவீங்க என்று நினைத்தால், கட்டணம் செலுத்தாமல் ஓசியில் விளம்பரம் போட்டு விட்டுப் போறீங்களே.
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
ஒட்டு போட்டுட்டு கெளம்புறேன் நிரு கமென்ட் சொல்ல பிறகு வருகிறேன்!//
ஏன் ரொம்ப பிசியாகிட்டீங்களோ.
@மைந்தன் சிவா
நானும் ஒட்டு போட்டு கெளம்புறேன்...
கருத்துக்கு அடுத்த பதிவுக்கு வருகிறேன் ஹிஹி//
கண்டிப்பாக வருவீங்க தானே.அவ்...
@ஜீ...
ம்ம்ம்...நல்லாத்தான் சொல்றீங்க...ஆனா புத்தன் பாவம் இவனுகளால (சிங்கள பேரினவாதிகள்) அந்த மனுஷனும்...//
ஆமாம் சகோ, ஆனால் அவரைப் பின்பற்றுவோர் செய்த அநீதிகளை மறக்கவா முடியும்,
@Nesan
பதவி துறந்து போன புத்தனை அரியாசனத்தில் ஏற்றி இனவாதப் பேய்களை ஊக்கிவித்த அரசியல் காடையர்களிடம் பெளத்தம் தோற்று பலகாலம் ஆச்சு!//
கவிதையாக, கருத்துச் சொல்லியிருக்கிறீர்கள் சகோ. நன்றிகள்.
@Nesan
நான் பெளத்தத்திற்கு விரோதியல்ல மதவாதிகளுக்கும் பெளத்த பேரின வாதிகளுக்கும் எதிரானவன் நண்பா!குழப்பமில்லை ராமன் பெயரால் அயோத்தியும், குயாராத்தில் ரயில் எரிக்கப் பட்டதும் இந்துத்துவவாதிகளால் தானே இந்து செய்யவில்லையே பயங்கரவாதம்!.//
சகோ, உண்மையில் மதங்களின் பெயரால் அனைவருமே பயங்கரவாதம் செய்திருக்கிறார்கள். நன்றிகள் சகோ.
@தமிழ்வாசி - Prakash
நண்பா...கவிதையின் வரிகளில் உங்கள் துயரம் தெரிகிறது.//
நன்றிகள் சகோ.
@கந்தசாமி.
எம் அழிவுக்கு ஊன்று கோலாய் நின்ற சர்வதேசம் இந்தியா (காங்கிரஸ்) என்று அனைவரையும் சாடி செல்கிறது கவிதை....//
சகோ பப்ளிக், பப்ளிக்!
@கந்தசாமி.
///டிஸ்கி: இக் கவிதையில் உள்ள முதலாவது படம்,(புத்தனின் படம்) சகோதரன் பதிவர் கந்தசாமி அவர்களது கை வண்ணத்தில் உருவாக்கப்பட்டது.//// உங்களுக்கு ஐஞ்சு வருஷம் என்றால் எனக்கும் அஞ்சு வருஷம் தான் போல .............."பின்னாலே ----------- சட்டம் துரத்த போகுது "//
வாங்க சகோ, இரண்டு பேரும் ஒன்றாகப் போயிருந்து பாணும், பருப்புக் கறியும் சாப்பிடுவோம்.
@விக்கி உலகம்
புத்தன் குடும்பஸ்தனா இருந்திருந்தா ஒரு வேலை ஏதாவது மாறி இருக்குமோ.........
அதனால்தானோ குடும்பங்களின் அழுகை குரல் கேட்கவில்லை!//
ஆமாம் சகோ. புத்தன் தனி மரமாக முற்றும் துறக்கையில், மனிதாபிமானத்தையும் சேர்த்துத் துறந்து விட்டான் என எண்ணுகிறேன்.
@A.R.RAJAGOPALAN
கண்ணீர் சுமந்து எழுதிய வரிகள் சகோ ............
மௌன சாட்சியாய் அந்த புத்தன் மட்டுமல்ல
நாங்களும் தான்
இதயம் கணக்கிறது
கண்ணீர் பார்வையை மறைக்கிறது
அற்புதமான பதிவு//
நன்றிகள் சகோ.
@குணசேகரன்...
கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது ..
http://zenguna.blogspot.com//
இக் கவிதையில் குழம்ப என்ன இருக்கிறது சகோ. மீண்டும் ஒரு தடவை படித்துப் பாருங்கள்.
@tharsigan//
புதிய புத்தன் எங்கே இருக்கிறார்.
புரியலையே சகா.
@ஈரி
அருமை.!!//
நன்றிகள் சகோ.
@shanmugavel
நன்று சகோ! அது சரி நெகடிவ் ஓட்டு உங்கள் வளர்ச்சி பிடிக்காமலா?//
நான் ஏற்கனவே வளர்ந்து விட்டேன் சகோ, 169 செண்டி மீட்டர் வளர்ச்சி பிடிக்கலைப் போல. அவ்....
@akulan
நன்று சகோ! அது சரி நெகடிவ் ஓட்டு உங்கள் வளர்ச்சி பிடிக்காமலா?//
இனியும் எவ்வளவு காலம் தான் பொறுப்பது சகோ.
@சென்னை பித்தன்
ஒவ்வொரு வரியும் வலி நிறைந்த வரி!மனம் கனக்கிறது!//
நன்றிகள் ஐயா.
@vanathy
கவிதை அருமை. அந்தப் படங்கள் மனதை என்னவோ செய்கின்றது.//
நன்றிகள் சகோ, படமே இப்படி என்றால், நிஜங்களைத் தரிசித்தால்?
@தம்பி கூர்மதியன்
இதுபோன்று இல்லாமல்.. ரசனையோடு கூடிய கவிதையை நான் உங்களிடத்து எதிர்பார்க்கிறேன் நிரூ..//
ஏன் சகோ, இதிலே ரசனை இல்லையா. அவ்...
\
@தம்பி கூர்மதியன்
உமிழபட்டென அனைத்தும் ஆசிட்களாக மாறி இருக்க வேண்டாமா.?.//
அவை ஒரு காலத்தில் அசிட்களாக மாறின..
அவ்..
@தம்பி கூர்மதியன்
சோம பானமா.? இல்லை உயிரறுக்கும் ஸ்லோ பாய்சனா என்பது விரைவில் தெரியும்.//
எல்லோரும் விரைவில், விரைவில் என்று சொல்லி, காலத்தை இழுத்தடிப்பதை மட்டும் நிறுத்தி விடாதீர்கள்.
@ஜ.ரா.ரமேஷ் பாபு
சோம பானமா.? இல்லை உயிரறுக்கும் ஸ்லோ பாய்சனா என்பது விரைவில் தெரியும்.//
நன்றிகள் சகோ.
@பலே பிரபு
புத்தர் இதற்கு என்ன செய்வார். மன்னிக்கவும் நான் இதை விரும்பவில்லை. இதற்காக உங்களை விமர்சிக்கவும் விரும்பவில்லை.(நான் இதற்கு மைனஸ் வாக்களிக்கவில்லை)//
சகோ, எம் ஊரில் புத்தரின் பெயராலும் புத்தரைப் பின்பற்றுவோரை அடிப்படையாகக் கொண்டும் தான் பல துயரங்கள் நிகழ்ந்தேறின.
@பிரபாஷ்கரன்
கவிதை உண்மையில் கண்ணீரை வரவைக்கிறது கவிதை படிக்கும்போது காட்சி அமைப்பு போல் தோன்றுகிறது அது தங்கள் கவிதைக்கு கிடைத்த வெற்றி//
நன்றிகள் சகோ.
@மதுரை சரவணன்
கவிதையில் வலியை உணர்ந்தேன்..//
நன்றிகள் சகோ.
@ஹேமா
நிரூ...இவ்வளவு கடைசியா வந்திருக்கேன்.
பின்னூட்டங்கள் நிறைவானதா இருக்கு.நான் என்னத்தைச் சொல்ல.படமே போதும் கவிதையைவிட வேதனையாயிருக்கு.
மேலே ஒருவர் சொன்னதுபோல புத்தரைத் திட்டுவது முட்டாள்தனமாகத்தான் தெரிகிறது.
நானும் எழுதியிருக்கிறேன்தான்.
புத்தபிக்குகள்தான் இந்த அநியாயங்களுக்கு உடந்தை !//
நன்றிகள் சகோ.
@sarujan
படங்கள் அருமை பல விடயங்கள் உணர்திவிட்டது//
நன்றிகள் சகோ.
வக்கிரத்தின் வலி... என்றைக்கும் இனி ஆறாதது...
பௌத்தத்தில் பௌதிக மாற்றம் ஏற்படுத்தியவர்களை கண்டிப்பாக புத்தர் தண்டிக்க மாட்டார்.வேறு யார் தண்டிப்பது?
Post a Comment