இன்றும் வழமை போல மணியண்ணை, இளையபிள்ளையாச்சி, குணத்தான் முதலிய அரசியல் வித்தகர்களோடும், நிரூபனாகிய கத்துக் குட்டியுடனும் தொடங்குகிறது ஆல மரத்தடி அரட்டை!
’ஏய் தானானே தானா, தனனானே தனனா, தானனனே தனனான தானா...அவ்
ஓரொண்டு ஒன்று, ஈரொண்டு ரெண்டு, புரிஞ்சுக்கடா என்னோடை பிரண்டு’
குணத்தான்: என்ன மணியண்ணை இன்டைக்குப் பாட்டுப் பலமா இருக்கு. என்ன விஷேசம், அதுவும் பயங்கரச் சந்தோசத்திலை எங்கடை ஆல மரத்தடி மாநாட்டுக்கு வந்திருக்கிறீங்கள்?
மணியண்ணை: இல்லையடா தம்பி, அது வந்து, எங்கடை கலைஞர் கருணாநிதி இருக்கிறார் ஏலேய்! அவர் இந்த முறை எலக்சனிலை தோத்துப் போயிட்டார். அந்தச் செய்தியைக் கேட்டதும் வாற சந்தோசம் இருக்கே. அதனைச் சொல்லவே வார்த்தைகள் இல்லையடா தம்பி குணம்.
கலைஞர் தோத்துப் போட்டார் என்ற சந்தோசத்திலை நான் எங்கடை நல்லூர்(யாழ்ப்பாணம்) முருகனுக்கு தேங்காய் உடைச்சு, குத்து விளக்கெல்லே வேண்டிக் கொடுத்தனான்.
இளைய பிள்ளை: கலைஞர் தோத்துப் போட்டார் என்று சந்தோசப்படுறீங்கள். உங்களுக்கு விசயம் தெரியுமே, இப்படி ஒரு நிலமை தங்கடை குடும்ப அரசியலுக்கு வருமென்று அந்த கோபாலபுரக் கோமகனுக்கு முன் கூட்டியே தெரிஞ்சிருந்தா, மொரீசியல், சுவிஸ் பாங்க்(Bank) என்று பதுக்கி வைச்சிருக்கிற நூற்றி எழுபது கோடியிலை நூறு கோடியினை ஆச்சும் அள்ளி இறைச்சு, இலவசத்தை இரு மடங்காக்கியிருப்பார் ஏலேய்.
குணத்தான்: இதைக் கேளுங்கோ. கலைஞர் எத்தினை காலத்துக்கு மக்களை ஏமாற்ற முடியும்? இன்னும் எத்தினை நாளைக்கென்று தான் மக்களுக்கு தேர்தல் வாற டைம் பார்த்து,
‘இந்தா பிடி இலவசம் என்று; கிள்ளி எறிஞ்சு ஏமாற்ற முடியும்.
மக்கள் இப்ப நன்றாக உணர்ந்து தெளிந்து விட்டார்கள். இதிலை பெரிய மேட்டர் என்னன்னா, இலவசத்தை வாங்கிப் போட்டு, வாக்குப் போடாமல் கிளைமாக்ஸ் வைச்சாங்களே நம்ம உடன் பிறப்புக்கள் அவங்கள் ரொம்பவும் புத்திசாலிங்க. அவங்களைப் பாராட்டியே ஆகனும்.
மணியண்ணை: மெய் தான் பாருங்கோ(உண்மையாத் தான்) உந்தக் கலைஞர் நடக்க முடியாமல் தள்ளாடுற வயதிலையும் நாற்காலியில் இருந்து நதிர்தனா............திரனனா.....தகிர்தனா......என்று பாட்டுப் பார்க்கிறது ஒரு பக்கம், நடிகைகள், நடிகர்கள் பாராட்டு விழா வைக்க நடுவில் போய் இருந்து ரசிக்கிறது, மக்கள் பணத்தில் இருந்து மக்களுக்கே இலவசத்தைக் கொடுத்து ஏமாத்திறது, ஈழத்திற்காக இரண்டு மணி நேரம் உண்ணாவிரதம் இருக்கிறது, இப்புடி பல தில்லு முல்லுகளைச் செய்திருக்கிறார். அப்ப மக்கள் சரியான முடிவினைத் தான் எடுத்திருக்கிறார்கள். அந்த மக்களைக் கண்டிப்பா பாராட்டியே ஆக வேண்டும்,
நிரூபன்: பெரிசுகள், வயசான நீங்கள் மூன்று பேரும் கலைஞரை வீட்டுக்கு அனுப்பினது சரி, குடும்ப அரசியலை ஒழித்தது கரெக்ட்டு, என்று ஒத்தூதுறீங்க, அம்மையார் ஜெயலலிதாவும், இதே மாதிரியான வழியினைக் கையிலை எடுக்க மாட்டா என்பதற்கு என்ன நிச்சயம்?
அதுவும் ஈழப் பிரச்சினை நடந்த சமயத்தில் ‘போர் நடக்கும் போது மக்கள் சாவது தவறில்லை’ எனத் தானும் பத்தோடு பதினொன்றாக, ஒரு சிலரின் கூற்றினையெல்லோ நியாயப்படுத்தினவா.
எனக்கென்றால் ஈழப் பிரச்சினை பற்றி எல்லோரின் கோட்பாடுகள், கண்ணோட்டங்களும் ஒரே மாதிரித் தான் இருக்கும் என்று தோணுது.
என்ன தான் இருந்தாலும் மத்திய அரசை உலுப்புற பவரைத் தொகுதிப் பெரும்பான்மையோடை இப்ப அம்மா வைச்சிருக்கிறா. ஆனாலும் அம்மா மனமிரங்க வேணும் இல்லே.
மணியண்ணை: கலைஞரின் தோல்விக்கு நம்ம தம்பி சீமானின் அனல் பறக்கும் பிரச்சாரமும் ஒரு காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியாது. காங்கிரசோடை கூட்டுச் சேர்ந்த கையின் தமிழ்க் கையினை எல்லோ, ஒட்ட நறுக்கியிருக்கிறார். அவருக்கும் பாராட்ட வேண்டும்.
எங்கடை இலங்கைத் தமிழ் மக்களைப் பொறுத்த வரைக்கும், கலைஞர் தோற்றதைத் தான் செம ஜோலியாக நினைக்கிறார்கள். அம்மா வந்ததைப் பற்றி அதிக கவனம் யாரும் கொள்ளவில்லை. ஆனாலும் எல்லோர் மனங்களிலும் நம்பிக்கை மட்டும் இருக்கு. அம்மா அரவணைப்பா என்று.
இளையபிள்ளை ஆச்சி: இந்த முறை எலக்சனின் மூலம் மக்கள் அதிமுக, திமுக இரண்டிற்கும் சரியான பாடம் படிப்பித்திருக்கிறார்கள். மக்களின் சொத்தை கொள்ளையடித்து, சுக போக- வம்ச அரசியலை நிலை நாட்டிக் கொண்டிருந்த கூட்டத்தை வேரோடு கிள்ளியெறிந்து, இனிமேல் தலை நிமிர முடியாத வாறு கூவத்துக்கை எல்லே தள்ளி வுட்டுச் சரியான பாடம் புகட்டியிருக்கிறார்கள்.
அத்தோடு ஜெயலலிதாவுக்கும் ஒரு எச்சரிக்கை மணி அடித்திருக்கிறார்கள். பொது மக்கள் பிரச்சினையைப் பார்க்காது, பதவிக்கு வந்ததும் வாக்குறுதிகளைக் காற்றில் பறக்க விட்டால் இதே நிலமை தான் உங்களுக்கும் என்று!!!
ஆகவே இன்னும் கொஞ்சக் காலம் வெயிட் பண்ணித் தான் பார்க்கனும். மக்கள் பிரச்சினைகள், தமிழக நலன் தொடர்பான பொருளாதார முன்னேற்ற விடயங்கள், மீனவர் பிரச்சினைகள் எனப் பல தரப்பட்ட விடயங்களை ஜே எப்படிக் கையாள்கிறார் என்று.
நிரூபன்: தமிழக அரசியல் பற்றி நீங்கள் எல்லோரும் அலப்பறை வைச்சுக் கொண்டிருக்கிறீங்க. ஆனால் நான் தான் தமிழக அரசியலில் கத்துக் குட்டியாச்சே. இன்னும் நிறைய விடயங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும். உங்களை மாதிரி பெரிய ஆட்கள் வைக்கிற அலப்பறை மாநாட்டுக்களில் இருந்து இந்த அரசியல் மேட்டருகளைப் பொறுக்கினால் தான், ப்ளாக்கிலையும் எழுதலாம். நேரம் நெருங்குது, ஆறு மணியாச்சு. எல்லோரும் கிளம்புவமோ.
மணியண்ணை: ஓம் வாங்கோ, வாங்கோ, எல்லோரும் வீட்டை போவம்.
‘ஏய் ஓரொண்டு ஒன்று, ஈரொண்டு ரெண்டு,
ஜெயிலுக்கு இருக்குதடா கறுப்புக் கலரு கம்பி!
அது காத்திருக்கு கனியினைத் தான் எண்ணி!
நிரூபன்: மணியண்ணை இந்தப் பாட்டிலை ஏதும் உள் குத்து இல்லையே,
வடிவேலுவின் பாட்டினை மாற்றிப் பாடுறீங்கள். கொஞ்சம் விளக்கமாக சொல்லலாம் தானே?
மணியண்ணை: அடிங் கொய்யாலா, நீ சின்னப் பொடியன், உனக்கு இந்தப் பாடுப் பற்றி விளக்கமெல்லாம் சொல்ல முடியாது.
இப் பதிவில் வரும் படங்கள் யாவும் தமிழ் மக்கள் குரல் வலைப் பதிவில் இருந்து எடுக்கப்பட்டவை.
|
104 Comments:
நல்லாத்தான் பகடி விட்டுருக்காங்க என்ன? பேந்து வாறன்.. கன விசியம் கதைக்கத்தான் கெடக்கு.. இந்தக் கோதாரி புடிச்ச வேலையச் செய்து முடிக்கணும் இப்ப...
காங்கிரஸ் தோல்விக்கு சீமானின் பிரச்சாரமும் முக்கியக் காரணம் தான்.
//ஏய் ஓரொண்டு ஒன்று, ஈரொண்டு ரெண்டு,
ஜெயிலுக்கு இருக்குதடா கறுப்புக் கலரு கம்பி!
அது காத்திருக்கு கனியினைத் தான் எண்ணி!// அடி தூள்..எல்லாரும் கனி மேல ஒரு கண்ணாத்தான் இருக்காங்க.
தள்ளாத வயதிலும் தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் சேவை செய்ய இருந்தவரை இப்படி சேற்றில் இறக்கிய தமிழக சொந்தங்களை போற்றத்தான் வேனும்!
பதவி ஆசையிலும் குடும்ப பாசப் போராட்டத்திலும் தோத்தது இந்த அரசியல் சானக்கியனுக்கு கிடைத்த அவமரியாதை !
கண்முன்னே கட்சியும் குடும்பமும் ஆட்டம் கானும் கொடுமையை தாங்குமா ? இந்த நெஞ்சுக்கு நீதி எழுதிய ஞாபக சக்தியின் அண்ணாவின் இதயம் கடன் கேட்ட தமிழ்த்தலைவர் எனமகுடம் கேட்கும் கருனாநிதி ஐயா!
அருமை
சொக்க வைக்கும் ஈழ தமிழ்
வாழ்த்துகள்
@பழமைபேசி
நல்லாத்தான் பகடி விட்டுருக்காங்க என்ன? பேந்து வாறன்.. கன விசியம் கதைக்கத்தான் கெடக்கு.. இந்தக் கோதாரி புடிச்ச வேலையச் செய்து முடிக்கணும் இப்ப...//
வேலையோடு பிசியாக இருக்கிறீர்களா சகோ, உங்கள் வாயால் எங்கள் தமிழ் கேட்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். வாருங்கள் சகோ.
@செங்கோவி
காங்கிரஸ் தோல்விக்கு சீமானின் பிரச்சாரமும் முக்கியக் காரணம் தான்.//
ஆமாம் சகோ.
@செங்கோவி
//ஏய் ஓரொண்டு ஒன்று, ஈரொண்டு ரெண்டு,
ஜெயிலுக்கு இருக்குதடா கறுப்புக் கலரு கம்பி!
அது காத்திருக்கு கனியினைத் தான் எண்ணி!// அடி தூள்..எல்லாரும் கனி மேல ஒரு கண்ணாத்தான் இருக்காங்க.//
அவ்...........இலகுவாகப் புரிந்து விட்டீர்களே!
நிரூ....கார்ட்டூன் கலக்கல்.
வடையண்ணா ஒரு பதிவு போட்டிருந்தார் ஜெயலலிதா பற்றி.யாருமே அவவை நம்பியிருக்கிறதா சொல்லவேயில்லை.எல்லாம் குட்டைக்குள்ள ஊறின மட்டைகள்தானப்பு !
நிரூபா! நக்கல், கிண்டல் குறைவிலாம இருக்கே.... செம நச்
கருத்துகளும், படங்களும் ஹா....ஹா.... செம....
chandranrajah@yahoo.in //
சகோ,மைனஸ் ஓட்டுப் போடுவது ஓக்கே, ஆனால் என் பதிவினை முழுமையாகப் படித்தா நீங்கள் மைனஸ் ஓட்டுப் போட்டிருக்கிறீங்க என்பதனை ஒரு முறை பரிசீலனை செய்ய முடியுமா சகோ.
உங்களின் இந்த கருத்திலிருந்து சற்றே மாறுபடுகிறேன் சகோ
தமிழர் நலன் , குடும்ப அரசியல், ஊழல் , இலங்கை தமிழர் பிரச்சனை எல்லாவற்றிலுமே கலைஞருக்கும் ஜெயலலிதாவுக்கும் பெரிய வித்தியாசமில்லை , இவரின் ஆட்சியில் எந்த பெரிய மாற்றமும் நிகழப்போவதில்லை மிக குறிப்பாய் ஈழ தமிழர் நலனில் , அப்படி உண்மையாக இவருக்கு ஈழ தமிழர் நலனில் அக்கறை இருக்குமேயானால் காங்கிரஸ்சுடன் உறவாட துடிப்பதேன், மற்றபடி உங்களின் எழுத்து நடையில் மனம் பறிகொடுத்தேன் சிறப்பான பகிர்வு சகோ பாராட்டுக்கள்
@Nesan
கண்முன்னே கட்சியும் குடும்பமும் ஆட்டம் கானும் கொடுமையை தாங்குமா ? இந்த நெஞ்சுக்கு நீதி எழுதிய ஞாபக சக்தியின் அண்ணாவின் இதயம் கடன் கேட்ட தமிழ்த்தலைவர் எனமகுடம் கேட்கும் கருனாநிதி ஐயா!//
உங்களின் கருத்துக்களுக்கு நன்றிகள் சகோ.
@A.R.RAJAGOPALAN
உங்களின் இந்த கருத்திலிருந்து சற்றே மாறுபடுகிறேன் சகோ
தமிழர் நலன் , குடும்ப அரசியல், ஊழல் , இலங்கை தமிழர் பிரச்சனை எல்லாவற்றிலுமே கலைஞருக்கும் ஜெயலலிதாவுக்கும் பெரிய வித்தியாசமில்லை ,//
சகோ என் பதிவில் இவர்கள் இருவருடைய குணங்களையும் சுட்டியிருக்கிறேன். ஜெயலலிதா ஈழப் போராட்டம் இடம் பெற்ற சமயம் எவ்வாறான நிலையில் இருந்தார், கலைஞர் எந்த நிலையில் இருந்தார் என்பதனைப் பதிவில் தெளிவாக அலசியிருக்கிறேன். மீண்டும் ஒரு முறை முழுமையாகப் படித்துப் பாருங்கள் சகோ.
உங்களின் பகிர்வில் எந்த குறையும் இல்லை சகோ
இது என் கருத்து , கலைஞர் தோற்றது நல்ல விஷயம்தான் ஆனால் ஜெயலலிதா அவரின் மாற்று என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை, நான் எப்போதுமே உங்களின் எழுத்தில் மயங்கி உங்களின் பதிவுகளை இரண்டு முறைக்கு மேல் படிப்பவன் சகோ
@A.R.RAJAGOPALAN
உங்களின் இந்த கருத்திலிருந்து சற்றே மாறுபடுகிறேன் சகோ
தமிழர் நலன் , குடும்ப அரசியல், ஊழல் , இலங்கை தமிழர் பிரச்சனை எல்லாவற்றிலுமே கலைஞருக்கும் ஜெயலலிதாவுக்கும் பெரிய வித்தியாசமில்லை ,//
மெய் தான் பாருங்கோ(உண்மையாத் தான்) உந்தக் கலைஞர் நடக்க முடியாமல் தள்ளாடுற வயதிலையும் நாற்காலியில் இருந்து நதிர்தனா............திரனனா.....தகிர்தனா......என்று பாட்டுப் பார்க்கிறது ஒரு பக்கம், நடிகைகள், நடிகர்கள் பாராட்டு விழா வைக்க நடுவில் போய் இருந்து ரசிக்கிறது, மக்கள் பணத்தில் இருந்து மக்களுக்கே இலவசத்தைக் கொடுத்து ஏமாத்திறது, ஈழத்திற்காக இரண்டு மணி நேரம் உண்ணாவிரதம் இருக்கிறது, இப்புடி பல தில்லு முல்லுகளைச் செய்திருக்கிறார். அப்ப மக்கள் சரியான முடிவினைத் தான் எடுத்திருக்கிறார்கள். அந்த மக்களைக் கண்டிப்பா பாராட்டியே ஆக வேண்டும்,
நிரூபன்: பெரிசுகள், வயசான நீங்கள் மூன்று பேரும் கலைஞரை வீட்டுக்கு அனுப்பினது சரி, குடும்ப அரசியலை ஒழித்தது கரெக்ட்டு, என்று ஒத்தூதுறீங்க, அம்மையார் ஜெயலலிதாவும், இதே மாதிரியான வழியினைக் கையிலை எடுக்க மாட்டா என்பதற்கு என்ன நிச்சயம்?
@A.R.RAJAGOPALAN
உங்களின் இந்த கருத்திலிருந்து சற்றே மாறுபடுகிறேன் சகோ
தமிழர் நலன் , குடும்ப அரசியல், ஊழல் , இலங்கை தமிழர் பிரச்சனை எல்லாவற்றிலுமே கலைஞருக்கும் ஜெயலலிதாவுக்கும் பெரிய வித்தியாசமில்லை ,//
அதுவும் ஈழப் பிரச்சினை நடந்த சமயத்தில் ‘போர் நடக்கும் போது மக்கள் சாவது தவறில்லை’ எனத் தானும் பத்தோடு பதினொன்றாக, ஒரு சிலரின் கூற்றினையெல்லோ நியாயப்படுத்தினவா.
எனக்கென்றால் ஈழப் பிரச்சினை பற்றி எல்லோரின் கோட்பாடுகள், கண்ணோட்டங்களும் ஒரே மாதிரித் தான் இருக்கும் என்று தோணுது.
என்ன தான் இருந்தாலும் மத்திய அரசை உலுப்புற பவரைத் தொகுதிப் பெரும்பான்மையோடை இப்ப அம்மா வைச்சிருக்கிறா. ஆனாலும் அம்மா மனமிரங்க வேணும் இல்லே.//
@சார்வாகன்
அருமை
சொக்க வைக்கும் ஈழ தமிழ்
வாழ்த்துகள்//
நன்றிகள் சகோ.
@ஹேமா
நிரூ....கார்ட்டூன் கலக்கல்.
வடையண்ணா ஒரு பதிவு போட்டிருந்தார் ஜெயலலிதா பற்றி.யாருமே அவவை நம்பியிருக்கிறதா சொல்லவேயில்லை.எல்லாம் குட்டைக்குள்ள ஊறின மட்டைகள்தானப்பு !//
ஆமாம் சகோ, நானும் ஜெயலலிதா மனமிரங்க வேண்டும் என்று தான் பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன்.
@தமிழ்வாசி - Prakash
நிரூபா! நக்கல், கிண்டல் குறைவிலாம இருக்கே.... செம நச்//
நன்றிகள் சகோ.
@தமிழ்வாசி - Prakash
கருத்துகளும், படங்களும் ஹா....ஹா.... செம....//
நன்றிகள் சகோ.
@A.R.RAJAGOPALAN
உங்களின் பகிர்வில் எந்த குறையும் இல்லை சகோ
இது என் கருத்து , கலைஞர் தோற்றது நல்ல விஷயம்தான் ஆனால் ஜெயலலிதா அவரின் மாற்று என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை, நான் எப்போதுமே உங்களின் எழுத்தில் மயங்கி உங்களின் பதிவுகளை இரண்டு முறைக்கு மேல் படிப்பவன் சகோ//
நன்றிகள் சகோ, ஜெயலலிதாவின் கடந்த கால அரசியல் அடிப்படையில் தான், அவரது தரப்பில் ஈழத் தமிழர்கள் மீதான ஆதரவு குறைவு என்று கூறினேன் சகோ. இதற்கு ஒரு சில உதாரணங்களையும் கூறியுள்ளேன். கலைஞரோடு எல்லா விடயங்களிலும் ஜெயலலிதா ஒத்துப் போக மாட்டா.
She is bit different than கலைஞர்.
கருத்துகளுக்கு நன்றி மாப்ள அலப்பறை நல்லா இருக்கு!
நிரூபன் எந்தப்பதிவு போட்டாலும் மைனஸ் ஓட்டு போட ஒரு ஆள் ரெடியா இருக்காப்ல போல.. அண்னன் வளர்ந்துட்டு வர்றார்
///இப்படி ஒரு நிலமை தங்கடை குடும்ப அரசியலுக்கு வருமென்று அந்த கோபாலபுரக் கோமகனுக்கு முன் கூட்டியே தெரிஞ்சிருந்தா, மொரீசியல், சுவிஸ் பாங்க்(Bank) என்று பதுக்கி வைச்சிருக்கிற நூற்றி எழுபது கோடியிலை நூறு கோடியினை ஆச்சும் அள்ளி இறைச்சு, இலவசத்தை இரு மடங்காக்கியிருப்பார் ஏலேய்.//// ஆமா ஆமா உண்மை தான்... ஆனா தேர்தல்ல ஜெயிச்ச பிறகு டபுள் மடங்கா எல்லோ சுருட்டுவார்கள் ..)))
////இதிலை பெரிய மேட்டர் என்னன்னா, இலவசத்தை வாங்கிப் போட்டு, வாக்குப் போடாமல் கிளைமாக்ஸ் வைச்சாங்களே நம்ம உடன் பிறப்புக்கள் அவங்கள் ரொம்பவும் புத்திசாலிங்க. அவங்களைப் பாராட்டியே ஆகனும்./// ஆமாம் பாஸ் உண்மையிலே அவர்களுக்கு ஒரு சபாஸ் . இப்பொழுதாவது உணர்ந்தார்களே இலவசமாய் கொடுப்பதெல்லாம் தம் உழைப்பில் சுரண்டியது தான் என்று
////இலங்கைத் தமிழ் மக்களைப் பொறுத்த வரைக்கும், கலைஞர் தோற்றதைத் தான் செம ஜோலியாக நினைக்கிறார்கள். அம்மா வந்ததைப் பற்றி அதிக கவனம் யாரும் கொள்ளவில்லை./// ம்ம்ம் நான் இந்த தேர்தல் பற்றி இங்கே அருகில் உள்ள , நாட்டில் உள்ள உறவுகளுடன் கதைத்த வரை அவர்களுக்கும் இதே மன நிலை தான்.
//ஆகவே இன்னும் கொஞ்சக் காலம் வெயிட் பண்ணித் தான் பார்க்கனும். //
சரியே!
////‘ஏய் ஓரொண்டு ஒன்று, ஈரொண்டு ரெண்டு,
ஜெயிலுக்கு இருக்குதடா கறுப்புக் கலரு கம்பி!
அது காத்திருக்கு கனியினைத் தான் எண்ணி!/// ஹிஹிஹி உப்பு திண்டவன் தண்ணி குடிச்சு தானே ஆகணும்;-)
தமிழ்நாட்டு அரசியல் சராசரி ஈழ தமிழர்கள் பார்வையில் அருமையாக குறிப்பிட்டுள்ளீர்கள். ஈழத்து உரைநடை பிரமாதம் பாஸ்...
யாரப்பா அது மைன்ஸ் போட்டது.... இந்த பதிவில மைனஸ் ஓட்டு போடுற அளவுக்கு என்ன இருக்கு..?
அதுவும் ஈழப் பிரச்சினை நடந்த சமயத்தில் ‘போர் நடக்கும் போது மக்கள் சாவது தவறில்லை’ எனத் தானும் பத்தோடு பதினொன்றாக, ஒரு சிலரின் கூற்றினையெல்லோ நியாயப்படுத்தினவா.
எனக்கென்றால் ஈழப் பிரச்சினை பற்றி எல்லோரின் கோட்பாடுகள், கண்ணோட்டங்களும் ஒரே மாதிரித் தான் இருக்கும் என்று தோணுது.///
எல்லோரும் அப்படித்தான் சொல்கிறார்கள் நிரு! ஆனால் எங்கள் அப்பாவி மனசுதான் - ஏதேனும் அதிசயம் நடக்காதா என ஏங்குகிறது!
மைனஸ் ஒட்டு போடுறதுக்கு ஏதாவது சங்கம் வச்சிருக்காங்களா? அநியாயத்துக்கு போட்டுத் தொலைக்கிறாங்களே!
இதுக்கும் ஒருத்தன் மைனஸ் ஓட்டு போட்டுருக்கானே....!!!
நான் வளர்கிறேனே மம்மி'ன்னு பாடுங்க நிரூபன்....
கலைஞர் தோத்துப் போட்டார் என்ற சந்தோசத்திலை //
இந்த மாற்றம் உங்களுக்கு இனிக்காது.. ஹி ஹி..
இலவசத்தை இரு மடங்காக்கியிருப்பார் ஏலேய்.// என்ன முக்கினாலும் நடக்காது.. எங்க மக்கள் ஒரு முறை முடிவு பண்ணிட்டாங்கனா அவுங்க பேச்ச அவுங்களே கேக்க மாட்டாங்க..
மக்கள் இப்ப நன்றாக உணர்ந்து தெளிந்து விட்டார்கள். //
இது காமெடி பதிவா.? நானும் சீரியஸோனு இருந்தேன்
அவங்களைப் பாராட்டியே ஆகனும்.//
&$**#%%(**%&#&(%%#
மக்கள் சரியான முடிவினைத் தான் எடுத்திருக்கிறார்கள். // மக்கள் எடுக்கவில்லை.. எடுக்க வைத்திருக்கிறார்கள்..
அம்மையார் ஜெயலலிதாவும், இதே மாதிரியான வழியினைக் கையிலை எடுக்க மாட்டா என்பதற்கு என்ன நிச்சயம்?// என்னைய மாதிரியே யோசிக்கிற யா நிரூ..
அம்மா அரவணைப்பா என்று.// எங்களுக்கு நாதி இருக்குமா இல்லையானு தெரியல.. பாப்போம்..
ஜே எப்படிக் கையாள்கிறார் என்று.// சரிதான் ஒத்துக்கொள்கிறேன்..
சிறப்பாக அலசியுள்ளீர்கள்.. எனக்கென்னவோ ஜெ., மீது அவ்வளவு நம்பிக்கை இல்லை.. பார்ப்போம்..
மொத்ததுல இலங்கை தமிழருக்கு தமிழக / இந்திய வாழ் தமிழர்களை பலி கொடுக்கணும் .. அதானே உங்க கதை.. வேற நாட்டுல போய் வாழுவீங்க... ஆனா தமிழ் நாட்டு அரசியல் உங்க மூக்கை நுழைப்பீங்க.. இந்த பொம்பளை ஒட்டு மொத்த இலங்கை தமிழர்களை ஆப்படிக்கும் நாள் தொலைவில் இல்லை
@hemamalini
hemarang//
இரண்டாவது மைனஸ் ஓட்டளித்த பெருந்தகையே, பதிவில் நான் என்ன சொல்லியிருக்கிறேன் என்பதனைக் கொஞ்சம் படிக்கக் கூடாதா.
ஏன் அவசரக் குடுக்கையாக வந்து பதிவிற்கு தொடர்பில்லாத கருத்துக்களை எழுதுகிறீர்கள்.
@hemamalini
மொத்ததுல இலங்கை தமிழருக்கு தமிழக / இந்திய வாழ் தமிழர்களை பலி கொடுக்கணும் .. அதானே உங்க கதை.. வேற நாட்டுல போய் வாழுவீங்க... ஆனா தமிழ் நாட்டு அரசியல் உங்க மூக்கை நுழைப்பீங்க.. இந்த பொம்பளை ஒட்டு மொத்த இலங்கை தமிழர்களை ஆப்படிக்கும் நாள் தொலைவில் இல்லை//
இப் பதிவில் எங்காவது, தமிழக இந்திய உறவுகளைப் பலி கொடுக்க வேண்டும் என்று சொல்லியிருக்கேனா,
இப்படி எத்தினை பேர் கிளம்பியிருக்கிங்க. இலங்கைத் தமிழர்களுக்குள்ளும், இந்தியத் தமிழர்களுக்குள்ளும் சண்டையை மூட்டி குளிர் காய.
@hemamalini
மொத்ததுல இலங்கை தமிழருக்கு தமிழக / இந்திய வாழ் தமிழர்களை பலி கொடுக்கணும் .. அதானே உங்க கதை.. வேற நாட்டுல போய் வாழுவீங்க...//
சகோ, நான் வேற நாட்டிலை போய் வாழல. என் சொந்த நாட்டிலை தான் இருக்கேன். பதிவினைப் கொஞ்சம் பொறுமையாகப் படித்துப் பாருங்க சகோ. அவசரக் குடுக்கையாக வந்து பின்னூட்டம் போடுவதை விட, பதிவினைப் புரிந்து கொண்டு பின்னூட்டம் எழுதலாம் தானே))));
//ஆனா தமிழ் நாட்டு அரசியல் உங்க மூக்கை நுழைப்பீங்க.. இந்த பொம்பளை ஒட்டு மொத்த இலங்கை தமிழர்களை ஆப்படிக்கும் நாள் தொலைவில் இல்லை//
இது என்ன சின்னப் புள்ளத் தனமா இருக்கு. நான் என்ன தமிழ் நாட்டு அரசியலில் இறங்கி ஓட்டா கேட்கிறன். இல்லை குதர்க்க வாதமா செய்றேன். இலங்கை அரசியல் பற்றி தமிழ் நாட்டு உறவுகள் பதிவு எழுதுவதில்லை. அது மாதிரித் தான் இந்தப் பதிவும். கொஞ்சமாவது புரிந்து கொள்ளுங்க சகோ.
சிறந்த பதிவு
தெளிவான பார்வை
கலைஞர் கவிழ்ந்தார் இனி எந்திரிக்க முடியாது
ரெண்டு மைனஸ் ஓட்டு வாங்கியிருக்கும் அண்ணன் .. பிரபல பதிவர் ஆகிவிட்டார்..
சில வழமையான கமென்ட் போடும் பதிவர்களை காணவில்லை அரசியல் பதிவு போடும் போது..ஹிஹி எஸ் ஆகிட்டாங்க போல
கலைஞருக்கு ஜெயலலிதா மாற்றாக தேர்ந்தெடுத்துள்ளோம். பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கிறதென்று.
சரியில்ல தளத்தில்...
”தி.மு.க காரன்கிட்டேயிருந்து தமிழ் ஓடிப்போய் எங்கேயெல்லாமோ திசை தெரியாமல் பயணிக்கிறது”
என்று சொல்லி விட்டு இங்கே வந்தேன்.
//கலைஞருக்கும் ஜெயலலிதாவுக்கும் பெரிய வித்தியாசமில்லை , இவரின் ஆட்சியில் எந்த பெரிய மாற்றமும் நிகழப்போவதில்லை மிக குறிப்பாய் ஈழ தமிழர் நலனில் , //
ஒரு தடவை பெயிலாவதை மக்குப் பிள்ளையென்று சொல்லி விட முடியாது.அதே வகுப்பை விட்டு நகரமாட்டேன் என்று அடம் புடித்தால் பள்ளியே துரத்தி விடும்.
ஜெயலலிதா பாடம் கற்றுக்கொள்வார் என எதிர்பார்ப்போம்.மேலும்,ஜெயலலிதா அரசு இயந்திரத்தின் முத்திரையே.முத்திரையோடு இருந்தால் ஈழம் மிளிர்வதற்கு துணை புரியும்.இல்லாவிட்டாலும் ஈழம் வேறு முத்திரைகளோடு தன்னை எப்படியாவது புதுப்பித்துக்கொள்ளும் சாத்தியங்கள் இருக்கின்றது.
//பெரிசுகள், வயசான நீங்கள் மூன்று பேரும் கலைஞரை வீட்டுக்கு அனுப்பினது சரி, குடும்ப அரசியலை ஒழித்தது கரெக்ட்டு, என்று ஒத்தூதுறீங்க, அம்மையார் ஜெயலலிதாவும், இதே மாதிரியான வழியினைக் கையிலை எடுக்க மாட்டா என்பதற்கு என்ன நிச்சயம்?//
கரெக்டு
நான் முன்னாடியே உங்களுக்கு சொல்லியிருக்கேன்.முகமூடி,வெறும் புரபைல் மட்டும் போட்டுக்கொண்டவர்களிடம் எச்சரிக்கையாய் இருங்களென்று.நீங்க தனி வர்ணத்தில் முக்கியத்துவம் தருவது இவர்களை ஊக்குவிப்பது போலாகும்.
மனிதம் பேசாத பிரித்தாளும் சூழ்ச்சிக்கு பலியாக வேண்டாம்.
//கவிழ்ந்தது க(கொ)லைஞர் அரசு! //
நல்ல தலைப்பு தோழரே!!!
தன் குடும்பத்துக்காக இவர் கட்சியையே பலி கொடுக்கும் நாள் தொலைவில் இல்லை.
/////இந்தா பிடி இலவசம் என்று; கிள்ளி எறிஞ்சு ஏமாற்ற முடியும்./////
இனி அதுவும் செல்லாதா அவரும் என்ன வழியில் தேங்காயை எடுத்து தெருவில் பிள்ளையாருக்குத் தானே அடித்தார்...
ஆலமரத்தடி அரட்டை வழக்கம் போல கலக்கல். ஒவ்வொரு பாத்திரத்தையும் ஒவ்வொரு வட்டார வழக்கு மொழி பேச வைத்திருந்தால்.. இன்னும் அட்டகாசமாக இருந்திருக்கும்..
தமிழக அரசியலை நல்ல பார்வையுடன் அலசியிருக்கிறிங்க.. வாழ்த்துக்கள்...
இம் நன்கு அலசி இருக்கிறீர்கள்
அசத்தலான பதிவு அண்ணா.
எதிரியை மன்னித்தாலும்
துரோகியை மன்னிக்கவே கூடாது..
கருணா நிதி துரோகி....
நிரூபனும் ஜீவனும் பிரபலம் ஆகி வர்றாங்க என்பதற்கு தொடர்ந்து அவர்கள் வாங்கை வரும் மைனஸ் ஓட்டே சாட்சி
அன்பின் நிரூபன் தமிழக மக்களுக்கு நேரடியக கலைஞர் தவறிழைத்தார்.குடும்ப அரசியல் செய்தார் கொள்ளையடித்தார்.மானட மயிலாட பார்த்தார் என்பது மன்னிக்க முடியாத குற்றம்.இவை ஏதும் ஜெ வின் நடவடிக்கைகளில் இடம் பெறாது என்பதில் எந்த உத்திரவாதமும் இல்லை.
கிடக்கட்டும்.
ஈழமக்களின் துயரைத்துடைக்கிறது போல் சவடால்களை எல்லோரும் காசாக்கினார்கள், காசாக்குகிறார்கள் பிழைப்பு நடத்துவார்கள் என்பதே எனது முப்பதுவருட அவதானிப்பு.
சினிமாவில் வருவதுபோல கனவில் வருவது போல இந்துக்கடவுள் கதைகளில் வருவதுபோல எந்த தமிழ் அரசியல்வாதியும் கடல்தாண்டி வந்துவிடப்போவதில்லை.
அதில் உங்கள் ஜெ வும் சீமானும் அடக்கம்.
தயவு செய்து என்னை திமுக கட்சிக்காரன் என்று கணக்குப்போடவேண்டாம்.
அப்புறம்,அண்ணன் சீமான் அடுத்த தேர்தலில் களத்தில் குதித்து வெற்றி வாகை சூடி நினைத்ததையெல்லாம்
செய்யலாம்ல்ல.எதுக்கு கண்டவங்களையெல்லாம் நம்பிகிட்டு?
துஷ்யந்தனின் பக்கங்கள் said... [Reply to comment]
//
அசத்தலான பதிவு அண்ணா.
எதிரியை மன்னித்தாலும்
துரோகியை மன்னிக்கவே கூடாது..
கருணா நிதி துரோகி //
எனில் எதிரி சாட்ஷாத் ராஜபக்சே தாம்.
ராஜபக்சேயை மன்னியுங்கள் கருணாநிதிக்கு மரண தண்டனை வழங்குங்கள்.
கொடுமை
@விக்கி உலகம்
கருத்துகளுக்கு நன்றி மாப்ள அலப்பறை நல்லா இருக்கு!//
நன்றிகள் சகோ.
@FOOD
Present sir//
அரசியல் என்றதும் ஓடி ஒளியுறீங்களே.
@சி.பி.செந்தில்குமார்
நிரூபன் எந்தப்பதிவு போட்டாலும் மைனஸ் ஓட்டு போட ஒரு ஆள் ரெடியா இருக்காப்ல போல.. அண்னன் வளர்ந்துட்டு வர்றார்//
ஏன் இந்தக் கோர்த்து வுடும் வேலை. அவ்........
@கந்தசாமி.
ஆமா ஆமா உண்மை தான்... ஆனா தேர்தல்ல ஜெயிச்ச பிறகு டபுள் மடங்கா எல்லோ சுருட்டுவார்கள் ..)))//
வேறு என்ன செய்ய முடியும் சகோ, கொடுத்ததை எடுக்க வேண்டாமா.
@சென்னை பித்தன்
/ஆகவே இன்னும் கொஞ்சக் காலம் வெயிட் பண்ணித் தான் பார்க்கனும். //
சரியே!//
நன்றிகள் ஐயா.
@கந்தசாமி.
யாரப்பா அது மைன்ஸ் போட்டது.... இந்த பதிவில மைனஸ் ஓட்டு போடுற அளவுக்கு என்ன இருக்கு..?//
அது எனக்குத் தெரியுமே. ஆளைக் கண்டு பிடிச்சிட்டனே பாஸ்.
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
எல்லோரும் அப்படித்தான் சொல்கிறார்கள் நிரு! ஆனால் எங்கள் அப்பாவி மனசுதான் - ஏதேனும் அதிசயம் நடக்காதா என ஏங்குகிறது!//
நம்பினார் கைவிடப்படார் என்று சொல்ல வாறீங்க.
அவ்..
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
மைனஸ் ஒட்டு போடுறதுக்கு ஏதாவது சங்கம் வச்சிருக்காங்களா? அநியாயத்துக்கு போட்டுத் தொலைக்கிறாங்களே!//
இல்லைச் சகோ, தனி ஒருவன் தான் போட்டுத் தள்ளுறான்.
@MANO நாஞ்சில் மனோ
இதுக்கும் ஒருத்தன் மைனஸ் ஓட்டு போட்டுருக்கானே....!!!
நான் வளர்கிறேனே மம்மி'ன்னு பாடுங்க நிரூபன்....//
நன்றிகள் சகோ.
@தம்பி கூர்மதியன்
கலைஞர் தோத்துப் போட்டார் என்ற சந்தோசத்திலை //
இந்த மாற்றம் உங்களுக்கு இனிக்காது.. ஹி ஹி..//
ஏன் சகோ இப்புடிச் சொல்லுறீங்க. திரும்பவும் கலைஞர் ஜீ வரப் போறாரா.
@தம்பி கூர்மதியன்
மக்கள் இப்ப நன்றாக உணர்ந்து தெளிந்து விட்டார்கள். //
இது காமெடி பதிவா.? நானும் சீரியஸோனு இருந்தேன்//
இது சீரியஸ் பதிவு பாஸ்...
@தம்பி கூர்மதியன்
அவங்களைப் பாராட்டியே ஆகனும்.//
&$**#%%(**%&#&(%%#//
இதென்ன பாராட்டுவதற்கென்று நீங்கள் கண்டு பிடித்த மொழியா.
@தம்பி கூர்மதியன்
மக்கள் சரியான முடிவினைத் தான் எடுத்திருக்கிறார்கள். // மக்கள் எடுக்கவில்லை.. எடுக்க வைத்திருக்கிறார்கள்..//
அப்பிடிப் போடுங்க சகோ அருவாளை.
@தம்பி கூர்மதியன்
அம்மையார் ஜெயலலிதாவும், இதே மாதிரியான வழியினைக் கையிலை எடுக்க மாட்டா என்பதற்கு என்ன நிச்சயம்?// என்னைய மாதிரியே யோசிக்கிற யா நிரூ..//
ஆய் சேம் சேம் பப்பி சேம்.
@தம்பி கூர்மதியன்
சிறப்பாக அலசியுள்ளீர்கள்.. எனக்கென்னவோ ஜெ., மீது அவ்வளவு நம்பிக்கை இல்லை.. பார்ப்போம்..//
எதற்கும் சிறிது காலம் வெயிட் பண்ணிப் பார்த்த பின்னர் சொல்வோம் சகோ.
@ஆர்.கே.சதீஷ்குமார்
தெளிவான பார்வை//
நன்றிகள் சகோ.
@!* வேடந்தாங்கல் - கருன் *!
ரெண்டு மைனஸ் ஓட்டு வாங்கியிருக்கும் அண்ணன் .. பிரபல பதிவர் ஆகிவிட்டார்..//
நாஞ்சிலார் எடுங்க அந்த அருவாளை.
@மைந்தன் சிவா
சில வழமையான கமென்ட் போடும் பதிவர்களை காணவில்லை அரசியல் பதிவு போடும் போது..ஹிஹி எஸ் ஆகிட்டாங்க போல//
சகோ எல்லோரும் வந்திருக்கிறார்கள். மேலே பாருங்க சகோ.
@சசிகுமார்
கலைஞருக்கு ஜெயலலிதா மாற்றாக தேர்ந்தெடுத்துள்ளோம். பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கிறதென்று.//
ஆமாம் கொஞ்சக் காலம் பொறுத்திருப்பதே உசிதம்.
@ராஜ நடராஜன்
சரியில்ல தளத்தில்...
”தி.மு.க காரன்கிட்டேயிருந்து தமிழ் ஓடிப்போய் எங்கேயெல்லாமோ திசை தெரியாமல் பயணிக்கிறது”
என்று சொல்லி விட்டு இங்கே வந்தேன்.//
இங்க வந்தா...........
வசனத்தை முடிக்கலையே சகோ.
@மதுரன்
கரெக்டு//
நன்றிகள் சகோ.
@ராஜ நடராஜன்
நான் முன்னாடியே உங்களுக்கு சொல்லியிருக்கேன்.முகமூடி,வெறும் புரபைல் மட்டும் போட்டுக்கொண்டவர்களிடம் எச்சரிக்கையாய் இருங்களென்று.நீங்க தனி வர்ணத்தில் முக்கியத்துவம் தருவது இவர்களை ஊக்குவிப்பது போலாகும்.
மனிதம் பேசாத பிரித்தாளும் சூழ்ச்சிக்கு பலியாக வேண்டாம்//
கருத்துச் சுதந்திரத்தை முடக்குவது அழகல்ல என்பதால் தான் இவர்களை உள்ளே அனுமதிக்கிறேன். ஆனால் அவர்கள் இந்த வாய்ப்பினைத் துஷ்பிரயோகம் செய்கிறார்கள். எதிர்காலத்தில் இவர்களை அனுமதிப்பதை நிறுத்துவதாக முடிவெடுத்துள்ளேன்.
@ராஜ நடராஜன்
நான் முன்னாடியே உங்களுக்கு சொல்லியிருக்கேன்.முகமூடி,வெறும் புரபைல் மட்டும் போட்டுக்கொண்டவர்களிடம் எச்சரிக்கையாய் இருங்களென்று.நீங்க தனி வர்ணத்தில் முக்கியத்துவம் தருவது இவர்களை ஊக்குவிப்பது போலாகும்.
மனிதம் பேசாத பிரித்தாளும் சூழ்ச்சிக்கு பலியாக வேண்டாம்//
கருத்துச் சுதந்திரத்தை முடக்குவது அழகல்ல என்பதால் தான் இவர்களை உள்ளே அனுமதிக்கிறேன். ஆனால் அவர்கள் இந்த வாய்ப்பினைத் துஷ்பிரயோகம் செய்கிறார்கள். எதிர்காலத்தில் இவர்களை அனுமதிப்பதை நிறுத்துவதாக முடிவெடுத்துள்ளேன்.
@பலே பிரபு
/கவிழ்ந்தது க(கொ)லைஞர் அரசு! //
நல்ல தலைப்பு தோழரே!!!
தன் குடும்பத்துக்காக இவர் கட்சியையே பலி கொடுக்கும் நாள் தொலைவில் இல்லை.//
அவ்...............
@♔ம.தி.சுதா♔
இனி அதுவும் செல்லாதா அவரும் என்ன வழியில் தேங்காயை எடுத்து தெருவில் பிள்ளையாருக்குத் தானே அடித்தார்..//
அவ்...............
@சரியில்ல.......
ஆலமரத்தடி அரட்டை வழக்கம் போல கலக்கல். ஒவ்வொரு பாத்திரத்தையும் ஒவ்வொரு வட்டார வழக்கு மொழி பேச வைத்திருந்தால்.. இன்னும் அட்டகாசமாக இருந்திருக்கும்..//
ஆமாம் சகோ.அடுத்தடுத்த பதிவுகளில் கொஞ்சம் சேஞ்ச் காட்டுறேன். நன்றிகள் சகோ.
@பிரபாஷ்கரன்
இம் நன்கு அலசி இருக்கிறீர்கள்//
நன்றிகள் சகோ.
@துஷ்யந்தனின் பக்கங்கள்
அசத்தலான பதிவு அண்ணா.
எதிரியை மன்னித்தாலும்
துரோகியை மன்னிக்கவே கூடாது..
கருணா நிதி துரோகி....//
சகோ கருணாநிதி எங்களிடம் என்ன உதவி கேட்டா நிற்கிறார். இல்ல நாம என்ன நீதிமன்றமா நடாத்துறோம். மனிக்காமல் இருப்பதற்கு. அவ்.......
@சி.பி.செந்தில்குமார்
நிரூபனும் ஜீவனும் பிரபலம் ஆகி வர்றாங்க என்பதற்கு தொடர்ந்து அவர்கள் வாங்கை வரும் மைனஸ் ஓட்டே சாட்சி//
நெருப்பினைப் பற்ற வைக்கப் பலர் அலையும் வேளையில் சகோ குளிர் தண்ணி ஊற்றுகிறார். நன்றிகள் சகோ.
@காமராஜ்
அன்பின் நிரூபன் தமிழக மக்களுக்கு நேரடியக கலைஞர் தவறிழைத்தார்.குடும்ப அரசியல் செய்தார் கொள்ளையடித்தார்.மானட மயிலாட பார்த்தார் என்பது மன்னிக்க முடியாத குற்றம்.இவை ஏதும் ஜெ வின் நடவடிக்கைகளில் இடம் பெறாது என்பதில் எந்த உத்திரவாதமும் இல்லை.
கிடக்கட்டும்.//
ஆமாம் சகோ, இதனைத் தான் என் பதிவிலும் சொல்லியிருக்கிறேன், மக்களிடம் ஓட்டு வாங்கித் தெரிவாகிய பின்னர் ஜெ அவர்களும் கலைஞரின் அதே செயல்களைச் செய்ய மாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம் என்று கேட்டிருக்கிறேன் சகோ.
@காமராஜ்
ஈழமக்களின் துயரைத்துடைக்கிறது போல் சவடால்களை எல்லோரும் காசாக்கினார்கள், காசாக்குகிறார்கள் பிழைப்பு நடத்துவார்கள் என்பதே எனது முப்பதுவருட அவதானிப்பு.
சினிமாவில் வருவதுபோல கனவில் வருவது போல இந்துக்கடவுள் கதைகளில் வருவதுபோல எந்த தமிழ் அரசியல்வாதியும் கடல்தாண்டி வந்துவிடப்போவதில்லை.
அதில் உங்கள் ஜெ வும் சீமானும் அடக்கம்.//
ஆமாம் சகோ. ஈழத் தமிழர்களினை வைத்து இவர்கள் தங்களின் அரசியல் ஆதிக்கத்தினைத் தான் பலப்படுத்துகிறார்கள். யதார்த்தம் நிறைந்த கருத்துக்களுக்கு நன்றிகள் சகோ.
@காமராஜ்
தயவு செய்து என்னை திமுக கட்சிக்காரன் என்று கணக்குப்போடவேண்டாம்.//
அப்போ நான் என்ன அதிமுக காரனா?
அவ்........நடு நிலையாளர் சகோ.
@வலிபோக்கன்
அப்புறம்,அண்ணன் சீமான் அடுத்த தேர்தலில் களத்தில் குதித்து வெற்றி வாகை சூடி நினைத்ததையெல்லாம்
செய்யலாம்ல்ல.எதுக்கு கண்டவங்களையெல்லாம் நம்பிகிட்டு?//
சீமான் தான் புரியாத புதிராக இருக்காரே. அவ்...
@காமராஜ்
துஷ்யந்தனின் பக்கங்கள் said... [Reply to comment]
//
அசத்தலான பதிவு அண்ணா.
எதிரியை மன்னித்தாலும்
துரோகியை மன்னிக்கவே கூடாது..
கருணா நிதி துரோகி //
எனில் எதிரி சாட்ஷாத் ராஜபக்சே தாம்.
ராஜபக்சேயை மன்னியுங்கள் கருணாநிதிக்கு மரண தண்டனை வழங்குங்கள்.
கொடுமை//
துஷ்யந்தன் புரிந்தும், புரியாமலும் கருத்தினைச் சொல்லியிருக்கிறார் என நினைக்கிறேன்.
உங்களின் விளக்கங்களிற்கு நன்றிகள் சகோ.
Post a Comment