முற் குறிப்பு: இந்தப் பதிவு முழுக்க முழுக்க நகைச்சுவையான ஒரு பதிவு. இப் பதிவின் நோக்கம் யார் மனதையும் நோகடிப்பதல்ல. பதிவு பிடிக்காதவர்கள் இந்த அறிமுகத்தைப் படித்து விட்டு, எஸ்கேப் ஆகலாம். இவ் அறிமுகத்தின் கீழே அபாயக் குறியீடுகள், சிகப்புக் கோடுகள் உள்ளன. மனதில் தைரியம்- தெம்பு உள்ளவர்கள், சாதிக்க விரும்பும் அன்பர்கள், எல்லோரும் இந்தச் சிகப்புக் கோட்டினைத் தாண்டி வரலாம். பதிவில் உள்ள கருத்துக்கள் நேரடியாக உங்களில் யாரையாவது தாக்குகிறது, பதிவில் உள்ள கருத்துக்கள் எனக்கே குத்தலாக உள் குத்துடன் எழுதப்பட்டிருக்கிறது என்று பஞ்சாயத்துப் பண்ண சால்வையைத் தோளில் போடுற ப்ளாண் உள்ள உள்ளங்கள் இப்பவே எஸ் ஆகிடுங்க. சிகப்புக் கோட்டைத் தாண்டி வந்தீங்க- ரொம்ப சீரியஸ் ஆகிடுவீங்க! இனிப் பதிவிற்குள் போவோமா.
டிஸ்கி: சிகப்புக் கோடு உபயம்: ஓட்ட வடை நாராயணன்)
டிஸ்கி: சிகப்புக் கோடு உபயம்: ஓட்ட வடை நாராயணன்)
என் பாட்டிக்கு ரொம்ப நாளா ஒரு ஆசை, தானும் ஒரு ப்ளாக்கர் ஆகனுமாம்.
ஒரு நாள் பூரா வேலை செஞ்ச களைப்போடை, வேலையால வந்து மாலைச் சாப்பட்டைச் சாப்பிட்ட பின்னர் கம்பியூட்டர் முன்னாடி உட்கார்ந்து நம்ம நண்பர்களின் பதிவினைப் படிப்போம் என்று வெளிக்கிட்டால், அந்தக் கிழவி...ஒரு வித அதட்டலுடன் என்னைக் கூப்பிட்டது(அழைத்தது)
‘எடேய் பேராண்டி.... எடேய் பேராண்டி! இங்கே வாடா தம்பி.
என்ன அம்மம்மா! என்னையைக் கூப்பிட்டனீங்களே! என்ன விசயம் சொல்லுங்கோவன்? என்று கேட்டேன்.
நானும் கொஞ்ச நாளாப் பார்க்கிறன், நீ அடிக்கடி கம்பியூட்டரிலை போய் உட்காருறாய். நீ என்ன கம்பியூட்டரையே கலியாணம் பண்ணப் போறியே? கம்பியூட்டரே உன்ரை மனுசி?
இல்லை அம்மம்மா. அது வந்து நான் ப்ளாக் எழுதுறேன்,
என்ன ப்ளாக் எழுதுறியோ. நீ மட்டும் தான் ப்ளாக் எழுதலாம் என்று உன்ரை மனசிலை நினைப்போ, அப்போ நான் மட்டும் என்னவாம், வீட்டிலை உட்கார்ந்து மூன்று வேளையும் சாப்பிட்டுப் போட்டு, சரிஞ்சு படுக்கிறதே. எனக்கும் உந்த ப்ளாக் வித்தையளைச் சொல்லித் தரலாம் தானே தம்பி நிரூபன்!
கிழிஞ்சுது போ... ஏன் கிழவி, உனக்குச் சாகப் போற வயசிலை, அதுவும் எழுபத்தியாறு வயதிலை ப்ளாக் கேட்குதோ. இயம தர்மன் உன்னட்டை எப்ப வாறார் என எழுத உனக்கு ப்ளாக் கேட்குதோ?
அடேய் பேராண்டி, உன்னையைப் பிச்சுப் புடுவன்! பிச்சு. சாகப் போற வயசிலை சாதிக்கக் கூடாது என்று யாராச்சும் சொல்லியிருக்காங்களே! படுவா! வர வர என்ரை மரியாதையும் போகுது. உனக்கு ப்ளாக் படிச்சு வாய் நீண்டு போய்ச்சு. இரு உன்ரை வாயை நானும் ஒரு ப்ளாக் பதிவரா வந்து அடக்கிறன். சும்மா பீலா வுடுற வேலையை நிறுத்திட்டு, ப்ளாக்கர் ஆக வேணும் என்றால் நான் என்ன பண்ணனும் என்று சொல்லு பேரா.
கிழவி, ப்ளாக் என்பது ஒரு போதை மாதிரி. எழுதத் தொடங்கிட்டியோ விடமாட்டாய், ப்ளாக் எழுதத் தொடங்கினால், நீ லேசிலை நீ நிறுத்த மாட்டாய் அம்மம்மா. உனக்கு வாசகர்கள் பெருகும், நீ பிரபலம் ஆகிட்டாய் என்றால் உனக்கு கோயில் கட்டி கும்புடுற அளவிற்கு நம்ம ஆளுங்க பின்னாடி வருவாங்க. அப்புறம் இண்டைக்கோ, நாளைக்கோ என்று போகப் போற உன்ரை சீவனும்(உயிரும்) போகாமல் அந்தரித்துக் கொண்டு இருக்கும். நீ படுக்கையிலை இருந்து கொண்டும், பம்பரமாய் ப்ளாக் எழுதுவாய் கிழவி.
அடேய் பொடிப் பயலே! நான் என்ன கேட்கிறன், நீ என்ன சொல்கிறாய். ப்ளாக்கர் ஆகனும் என்றால் என்ன பண்ணனும்?
கிழவி! வர வர உன் தொல்லை அதிகமாகிக் கொண்டு போகுது. கூகிளில் எக்கவுண்ட் இருக்கனும், உனக்கென்று ஒரு சொந்த ப்ளாக் இருக்கனும்! இவ்ளோ விபரமாக் கேட்கிறியே கிழவி, உன் கிட்டை சொந்தச் சரக்கிருக்கா? ப்ளாக்கிலை எழுத ஏதாச்சும் கைவசம் இருக்கா! உனக்கு கம்பியூட்டரிலை ஏதும் தெரியுமா? அதை முதலில் சொல்லு கிழவி!
அடேய் நிரூபா, நேற்றுப் பெய்த மழையிலை- இன்றைக்கு முளைச்ச நீ வந்து எனக்கு கம்பியூட்டர் தெரிஞ்சிருக்கோனும் என்று சொல்லுறாய். நான் எல்லாம் அந்தக் காலத்திலை எஸ் எஸ் எஸ்ஸி (SSSC) பாஸ் பண்ணின ஆளு. ப்ளாக் எழுத என்ன கம்பஸிலை படிச்சே இருக்கனும்?
என் கிட்டேவா. ஏன் என்கிட்ட மேட்டர் இல்லையா. அவிட்டு வுடுறன். கேள் பொடியா.
நாலு கவிதை, ரெண்டு கட்டுரை, ஒரு பாட்டு.. இதெல்லாம் தெரிஞ்சிருக்கனும்.
நிறுத்து கிழவி, இந்த ரேஞ்சிலை நீ போய்க் கொண்டிருந்தால் எப்போ நீ பிரபலம் ஆகிறது. எப்போ நீ ஹிட்ஸ் அள்ளுறது?
கொஞ்சம் பொறு நிரூபா.
எனக்கென்ன பதிவுலக மேட்டர் தெரியாது என்று நினைச்சிட்டியே. எட்டி உதைச்சால் பல்லுப் பறக்க நிலத்திலை போய் விழுவாய். இனி வாயை மூடிக் கொண்டு நான் சொல்லுறதைக் கேட்கனும்.
ப்ளாக் தொடங்கிப் பிரபலமாக என் கிட்ட வழி இல்லை என்றே நீ நினைக்கிறாய். என் ரகசியத்தை எப்படியாவது கேட்டு சைட் கப்பிலை- நீ பெரிய ஆள் ஆகிடலாம் என்று பார்க்கிறாய் போல இருக்கு. இருந்தாலும் உனக்கென்ற படியால், காதைக் கொஞ்சம் கிட்டக் கொண்டு வா..
ப்ளாக் தொடங்கி எழுத மேட்டர் இல்லை என்றாலும், முதலில் எல்லோர் ப்ளாக்கையும் படிக்கனும், எல்லா இடத்திற்கும் போய் வரனும், ப்ளாக்கிலை யார் ரொம்ப பிரபலமா இருக்கிறாங்களோ, அவங்களோடை பதிவில்- குற்றம் குறை கண்டு பிடிக்கனும், அந்தக் குறையை வைத்து விமர்சிக்கத் தொடங்கனும். மத்தவங்க சந்தோசமாக எந்த எந்த ப்ளாக்கில் இருக்கிறாங்களோ அங்கே எல்லாம் போய் அவங்கள் என்ன மேட்டர் பேசுறாங்க என்று படித்துப் பார்த்து, அதிலிருந்து ஒரு மேட்டரை செலக்ட் பண்ணி என் வலையில் தலைப்பா வைத்து அவங்களை கிழி கிழி என்று கிழிச்சு நாறடிக்கனும்.
இதையும் வைச்சு நான் பிரபலம் ஆக முடியலை என்றால், சொந்த சும்மா இருந்து எழுதுற- சிவனே என்று போய்க் கொண்டிருக்கிற பதிவர்களினை வலிய அழைத்து வம்பிழுக்கிற மாதிரி ஒரு பதிவு போடனும். அந்த மேட்டராலையும் ஹிட்ஸ் ஏறலை என்றால், ஒருவரின் பதிவில் உள்ள பின்னூட்டங்களில் போய் உன் கருத்தை திணிக்கனும். அந்த கருத்துக்கள் மூலம் சண்டையை வர வைக்கனும். சண்டையை மூட்டிப் போட்டு,
அந்தப் பதிவில் தவறு என்று உன் ப்ளாக்கில் எழுதனும்.
இப்ப சொல்லு நிரூபா! எப்படி என் ஐடியா?
உன்ரை ஐடியாவும், நீயும் கிழவி! இந்த ரேஞ்சிலை நீ ப்ளாக் தொடங்கினாய் என்றால், தொடங்கி மூன்றாம் நாளே நீ தான் ஈ ஓட்டிக் கொண்டிருக்க வேண்டும்.
யாரைப் பார்த்து, என்ன வசனம் பேசுறாய் பேராண்டி! தனிக் கடை என்றாலும், பொழைப்பை ஓட்டிட மாட்டேனா. நானே எழுதிப் போட்டு, அதை நானே திரும்பத் திரும்ப வாசித்து ஹிட் கவுண்டர் எண்ணிக்கையினை, பார்வையாளர் வருகையினை ஏத்திர மாட்டேனா என்ன.
அடுத்த மேட்டர் என்ன என்று கேட்க உனக்கு ஆவல் வரவில்லையா பேரா. பதிவர்களைத் திட்டி, அரசியல் கட்சிகளுடன் தொடர்புபடுத்தி சைட் கப்பிலை எலக்சன் முடிவு வர முன்னாடி புகுந்து விளையாடனும். அப்போ தான் நமக்கும் ஹிட்ஸ் எகிறும், நாமளும் அரசியல் கட்சி ஆள் என்று பந்தா காட்டலாமில்ல.
பதிவோடை தரத்தை, பதிவில் உள்ள தவறுகளை யாரு இப்போ உற்றுப் படிக்கிறாங்க. பதிவினைப் படிக்காமல் பின்னூட்டம் போட்டுத் தங்களின் பதிவுகளைப் படிக்க வைக்க, ஓட்டு வாங்க் ஒரு கூட்டம் அலையுது தானே, அவங்க ஆதரவு என் பதிவிற்கு கண்டிப்பா கிடைக்கும் பேரா. நான் என்ன மேட்டர் எழுதினாலும், அதனைச் சரி என்று சொல்லி என்னைப் புகழ்ந்து பின்னூட்ட என் பேரப் பிள்ளைகள் இருக்கிற உலகத்தில் ஹிட்ஸைப் பற்றியோ, இல்லை பாலோவர்ஸை பற்றியோ நான் ஏன் கவலைப் பட வேணும்?
இதையும் மீறி நான் பாப்புலர் ஆகலை என்றால், கலாச்சாரம், சமூகம் முதலியன பதிவர்களால் சீரழிகிறது என்று பொங்க வேணும். அப்போ தான் சிங்கில் கப்பில் நாம சிக்ஸர் அடிக்கிறதா முடியுமில்ல.
கிழவி இவ்வளோ, விபரமாப் பேசுறியே, இம்புட்டு மேட்டரையும் எப்பூடிக் கற்றுக் கிட்டாய் கிழவி? யார் உனக்குச் சொல்லித் தந்தது?
பதிவுலக பில்லாக்கள் யாருடனாவது உனக்கு ரகசியத் தொடர்பிருக்கோ கிழவி!
தம்பி நிரூபா, உன்னோடை வயசு, என்னோடை அனுபவம்! நீ ப்ளாக் எழுத கம்பியூட்டரை ஆன் பண்ணும் நேரம் பார்த்து, நான் மறைஞ்சிருந்து உன் கம்பியூட்டர் பாஸ்வேர்ட்டை நோட் பண்ணியெல்லோ வைச்சிருக்கிறேன்!
இது எப்பூடி.......
ஆட்டைக் கடிச்சு, மாட்டைக் கடிச்சு, கடைசியாக என் ப்ளாக்கையே நீ கடிச்சுப் போட்டியே கிழவு! உண்மையிலே நீ வெகு விரைவில் பிரபலம் ஆகிடுவாய்! இன்றே பதிவெழுத தொடங்கு கிழவி!
எல்லாம் இருக்கட்டும், ப்ளாக்கிற்கு என்ன பெயர் வைக்கப் போறீங்க அம்மம்மா?
என் ப்ளாக்கிற்கோ, தூசனம்!
ஆனால் இங்கை தானே உதைக்குது, நீ ப்ளாக்கிற்கு வைச்சிருக்கிற தலைப்பு விவகாரமா இருக்கே அம்மம்மா. உன் பதிவினைத் தூக்கிடுவாங்களே கிழவி?
யார் சொன்னது..
தூ............. என்றால் மழை......
சனம் என்றால் மக்கள்!
என் ப்ளாக்கின் அர்த்தம் என்ன என்று இப்பவாச்சும் உன் மர மண்டைக்குப் புரியுதா நிரூபா?
மக்களுக்கான ப்ளாக் இது!
இது எப்புடிப்பேரு?
ஐயோ.......கிழவி, உன் கூடப் பேசிக் கொண்டிருந்தால், எனக்கு லூசாக்கிடும், ஆளை விடு!
ஐ ஆம்.......எஸ் கேப்!
டிஸ்கி: இவையாவும் என் பாட்டியின் உணர்வலைகள்! யாராச்சும் சண்டை போட விரும்பினீங்க, உடனடியாக என் பாட்டியுடன் தொடர்பு கொள்ளுங்க.
தொல்லை பேசி: 0094-777111444
|
106 Comments:
அய்யோ ! இந்தவடை எனக்கு வேண்டாம் பால்கோப்பி தான் வேண்டும் பிறகு வாரன் கருத்துடன்!
உண்மையில் இந்தபாட்டி மார்களின் அனுபவம் எனக்கு இல்லை இன்றும் என்பாட்டி வாழ்கிற வயசில் என் தந்தை இல்லை !நானோ என் மனைவியை படத்தை பார்த்து தெரிந்து கொள் என்று tpயில் சொல்கிற நிலையில்!
இப்பவும் பாட்டி சொல்கிறமாதிரி டேய் நாம்பன் இன்னும் தூங்களையா? காலையில் கோப்பை கழுவனும் மறந்திடாத இப்படித்தான் உன் கொப்பனும் என் பேச்சு கேட்கல நீயாவது திருந்து போய் நித்திரை கொள் ஆமா உன் கனனியை எனக்கு திறந்துவிடு எனக்கும் பொழுது போகனும் எத்தனை நாள்தான் இந்த சீரியலில் கண்னை கசக்கிறது!
டேய் குறுக்கால போகாமல் போய் தூங்கு காலையில் பேசலாம் நீ திருந்தமாட்டாய் இரு உன் பொண்டாட்டி வரட்டும் இந்த tv யை தூக்கு குப்பையில் போடுறன்ஐய்யோ பாட்டி இது கனனி என்ற சொத்து ஆமா உன் கொப்பன் சொத்தோ! பாட்டி திட்டுறா நண்பா!நாளைப் பொழுதில் வருகிறேன் கருத்துக்கலுடன் பாட்டி வராது எனக்கு துனையா அருகில் படுக்க இந்த பேய்பயம் இன்னும் தீரல!
மாப்ள நடத்துய்யா ஒன்னும் சொல்றதுக்கில்ல ஹிஹி!
அடேய் பேராண்டி, உன்னையைப் பிச்சுப் புடுவன்! பிச்சு. சாகப் போற வயசிலை சாதிக்கக் கூடாது என்று யாராச்சும் சொல்லியிருக்காங்களே! படுவா! வர வர என்ரை மரியாதையும் போகுது. உனக்கு ப்ளாக் படிச்சு வாய் நீண்டு போய்ச்சு. இரு உன்ரை வாயை நானும் ஒரு ப்ளாக் பதிவரா வந்து அடக்கிறன்.
சகோ நீயே இப்படினா உனக்கு கதை சொன்ன பாட்டி வந்தா?... சூப்பர் போ...ஹ ஹ
கிழவி, ப்ளாக் என்பது ஒரு போதை மாதிரி. எழுதத் தொடங்கிட்டியோ விடமாட்டாய், ப்ளாக் எழுதத் தொடங்கினால், நீ லேசிலை நீ நிறுத்த மாட்டாய் அம்மம்மா. உனக்கு வாசகர்கள் பெருகும், நீ பிரபலம் ஆகிட்டாய் என்றால் உனக்கு கோயில் கட்டி கும்புடுற அளவிற்கு நம்ம ஆளுங்க பின்னாடி வருவாங்க.
அப்டியா சொல்லவே இல்ல சகோ?..
--
அடேய் நிரூபா, நேற்றுப் பெய்த மழையிலை- இன்றைக்கு முளைச்ச நீ வந்து எனக்கு கம்பியூட்டர் தெரிஞ்சிருக்கோனும் என்று சொல்லுறாய். நான் எல்லாம் அந்தக் காலத்திலை எஸ் எஸ் எஸ்ஸி (SSSC) பாஸ் பண்ணின ஆளு. ப்ளாக் எழுத என்ன கம்பஸிலை படிச்சே இருக்கனும்?
பாட்டி நீயாமா தானே கேக்குறாங்கோ?...
ப்ளாக் தொடங்கி எழுத மேட்டர் இல்லை என்றாலும், முதலில் எல்லோர் ப்ளாக்கையும் படிக்கனும், எல்லா இடத்திற்கும் போய் வரனும், ப்ளாக்கிலை யார் ரொம்ப பிரபலமா இருக்கிறாங்களோ, அவங்களோடை பதிவில்- குற்றம் குறை கண்டு பிடிக்கனும், அந்தக் குறையை வைத்து விமர்சிக்கத் தொடங்கனும்.
சகோ உன் நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு...உண்மையா அப்படியே சொல்லிருக்கேங்கள்//
இவையாவும் என் பாட்டியின் உணர்வலைகள்! யாராச்சும் சண்டை போட விரும்பினீங்க, உடனடியாக என் பாட்டியுடன் தொடர்பு கொள்ளுங்க.
தொல்லை பேசி: 0094-777111444
இதோ வரேன்..சகோ , உண்மை சுழலை நகைச்வையாக சொல்லிருக்கேங்கள்...வாழ்த்துக்கள்....
சகோ..
பதிவு உலக அரசியல தொலுரிச்சி காட்டி இருக்கீங்க..
சபாஷ்..
’ட்ரிங்,ட்ரிங்’
ஹலோ,நிரூபனின் பாட்டியா?
பதிவுலகம் பற்றி எல்லாம் தெரிஞ்சு வச்சிருக்கீங்க!
பதிவு ஆரம்பியுங்க!நான் முதல் பின்னூட்டம் போடுகிறேன்!
நீங்களும் என் பதிவில் தவறாமல் பின்னூட்டம் இடுங்கள்!
பாட்டியின் sssc இற்கு இன்று எந்தக் கல்வியும் ஈடாகாது!பதிவரசியல் உங்களிடம் புகுந்து விளையாடுகிறது தொடருங்கள் !
நல்லா தான் யோசிச்சிருக்கிங்க...பாட்டி கூட செர்ந்திக்கிட்டு...
////கிழவி, ப்ளாக் என்பது ஒரு போதை மாதிரி. எழுதத் தொடங்கிட்டியோ விடமாட்டாய், ப்ளாக் எழுதத் தொடங்கினால், நீ லேசிலை நீ நிறுத்த மாட்டாய்/// இது உண்மை தான்...
////எனக்கென்ன பதிவுலக மேட்டர் தெரியாது என்று நினைச்சிட்டியே. எட்டி உதைச்சால் பல்லுப் பறக்க நிலத்திலை போய் விழுவாய்.//// கவனம் பாஸ், பாட்டி ரொம்ப ஸ்ரோங் போல ....)))
////எனக்கென்ன பதிவுலக மேட்டர் தெரியாது என்று நினைச்சிட்டியே. எட்டி உதைச்சால் பல்லுப் பறக்க நிலத்திலை போய் விழுவாய்.//// கவனம் பாஸ், பாட்டி ரொம்ப ஸ்ரோங் போல ....)))
////முதலில் எல்லோர் ப்ளாக்கையும் படிக்கனும், எல்லா இடத்திற்கும் போய் வரனும், ப்ளாக்கிலை யார் ரொம்ப பிரபலமா இருக்கிறாங்களோ, அவங்களோடை பதிவில்- குற்றம் குறை கண்டு பிடிக்கனும், அந்தக் குறையை வைத்து விமர்சிக்கத் தொடங்கனும். /// ஹிஹிஹி ஒருசில நாளிலே பிரபலமாகிற மேட்டர் இது தானா )
பாட்டி பல வித்தை தெரிஞ்சி வெச்சிருக்கு ஹஹஹா
///பதிவர்களைத் திட்டி, அரசியல் கட்சிகளுடன் தொடர்புபடுத்தி சைட் கப்பிலை எலக்சன் முடிவு வர முன்னாடி புகுந்து விளையாடனும். /// ஆமா ஆமா ஒருபக்கத்தால வந்து பாராட்டுவார்கள், மற்றப்பக்கத்தால வந்து கும்முவார்கள்...)
நல்லாருக்கு
ஒரு அடிமை சிக்கிகிச்சா
////தூ............. என்றால் மழை......
சனம் என்றால் மக்கள்!///ஹஹாஹா நல்லா தான் மாத்தி யோசிக்கிறா உங்க பாட்டி ..)
உள்ள உள்ளங்கள் இப்பவே எஸ் ஆகிடுங்க//
யோவ்,!! என்னயா வர்றவனெல்லாம் போ போனு சொல்லிகிட்டு கிடக்க.?
பதிவுலக அரசியலை பாட்டி வேடத்தில் அலசியிருக்கிறீர்கள்...)))) பாவம்யா பாட்டி...)))
என் பாட்டிக்கு ரொம்ப நாளா ஒரு ஆசை, தானும் ஒரு ப்ளாக்கர் ஆகனுமாம். //
அதுக்கென்ன ஒரு ப்ளாக்க தட்டி விட வேண்டியது தானே.!!
‘எடேய் பேராண்டி.... எடேய் பேராண்டி! இங்கே வாடா தம்பி.//
பாசமா கூப்பிடுறாங்க அத போய் அதட்டலுங்கிறியே பாஸ்..
நீ என்ன கம்பியூட்டரையே கலியாணம் பண்ணப் போறியே? கம்பியூட்டரே உன்ரை மனுசி?//
இது மட்டும் நடந்ததுனா ஒரு பொட்டபுள்ள தப்பிச்சிக்கும்..
அதிலிருந்து ஒரு மேட்டரை செலக்ட் பண்ணி என் வலையில் தலைப்பா வைத்து அவங்களை கிழி கிழி என்று கிழிச்சு நாறடிக்கனும்.//
இத ஒரு பொழப்பாவே தான் பாக்குறாங்களோ.!!
என்ன நிரூபா இந்த நம்பருக்கு போன் பண்ணினால் யாரோ ஒரு சின்ன பொண்ணு எடுக்குறாங்க நம்பர மாதி போட்டுடீங்களா ஹா ஹா ஹா.
நிரூ.. பாட்டியை வைத்து பதிவுலகை நக்கல் அடித்து போட்டீர்கள்.. என்ன செய்யலாம்.? உங்களுக்கு ஒரு கண்டன பதிவு போட்டு நான் பேமஸ் ஆகிடலாமானு யோசிக்கிறேன்.
பாட்டிகளை அவ்வளவு லேசாக எடை போட முடியாது.
ஒரு நாள் எனக்கு பயங்கர தலைவலி! ஏதாவது மாத்திரை போட்டால் சரியாகும் என்ற நினைப்பில் மாத்திரை வாங்க கிளம்பினேன். இதை தெரிந்து கொண்ட என் பாட்டி 'தலைவலிக்கெல்லாம் ஏம்பா மாத்திரையை போட்டு உடம்பை கெடுத்தக்கிறே! நான் ஒரு பக்குவம் சொல்லட்டுமா?' என்றார். 'சொல்லு பாட்டி' என்றேன். 'கையை வாயில் விட்டு செரிமானமாகாத உணவை வாந்தி எடு' என்றார். பயந்து கொண்டே முயற்ச்சித்தேன. என்ன ஆச்சரியம் பாடாய் படுத்துன தலைவலி பறந்து விட்டது.
ஆக தலைவலி போவதற்கு இப்படி ஒரு வழி இருப்பதை பாட்டி மூலம் அன்றுதான் தெரிந்து கொண்டேன்.
உங்கள் பதிவும் ரசிக்கும் படி இருந்தது.
நிரூபா... எனக்கொரு உண்மை தெரியனும்.. இவ்ளோ விவரமான பாட்டிகூட இருந்துகொண்டா.. இத்தனை நாள் பாடாய் படுத்தின?
ஆனாலும் படா பேஜாரு பார்ட்டி தான் உன்னோட பாட்டி.
மதன் சார் (ஹாய் மதன்) சொல்ல்வது மாதிரி பாட்டிங்ககிட்ட இருந்து நிறைய விஷயம் தெரிஞ்சிக்கலாம். ஹிட்டு பதிவ போட்டு பட்டைய கெளப்பிட்ட... கலக்கு மச்சி..
நல்ல பல கருத்துக்களை
கொண்டு எழுதப்பட்ட பதிவு
அற்புதம் சகோ
இப்படி ஒரு பாட்டி
எல்லோருக்கும் இருந்தால்
மிகவும் நலமாய் இருக்கும்
சரி விடுங்க பாஸ், பாட்டி உண்மையத்தான சொல்லி இருக்காங்க, அதுசரி பாட்டி பிளாக் ஆரம்பிச்சிட்டாங்களா?
உரைநடையப் படிச்சா பாட்டி கூட கதைச்ச மாதிரி இருக்குது!ஆனா சிவப்பு எழுத்து பாட்டி ஆலோசனைகளைப் பார்த்தா ஏதோ உள்குத்துன்னு பதிவுலக சொல்ற மாதிரி தெரியுதே?
"ஒரு நாள் பூரா வேலை செஞ்ச களைப்போடை, வேலையால வந்து மாலைச் சாப்பட்டைச் சாப்பிட்ட பின்னர்'
என்ன ஒரு அக்கற.............(பிளாக்கர் மேல)
கலக்கிட்டீங்க சகோ !சூப்பர்
விபரம் தெரிஞ்ச பாட்டியாகி பதிவுலக விவகாரங்களை அழகாக அலசியிருக்கிறீர்கள்.
பாட்டி சொல்றாங்க.. பாட்டி சொல்றாங்கன்னு எல்லாத்தியும் சொல்லிபுட்டீங்களே..
//முற் குறிப்பு: இந்தப் பதிவு முழுக்க முழுக்க நகைச்சுவையான ஒரு பதிவு. இப் பதிவின் நோக்கம் யார் மனதையும் நோகடிப்பதல்ல. பதிவு பிடிக்காதவர்கள் இந்த அறிமுகத்தைப் படித்து விட்டு, எஸ்கேப் ஆகலாம். // நீங்களும் வாசலிலே நாயைக் கட்டிப் போட்டாச்சா..
ஆஹா..அடிச்சு விளையாடி இருக்கீங்களே..நான் வரலைப்பா இந்த ஆட்டத்துக்கு!
இது அந்த நாதாரிக்கு வச்ச ஆப்பு மாதிரியே இருக்கே....
சட்டை கிழிஞ்சா தச்சி போட்டுக்கலாம், பிளாக்கர் பொழந்துடுச்சே எங்கே முறையிடலாம்...
எப்படியோ பாட்டி மூலமாக நீங்கள் சொல்ல வந்ததை சொல்லிவிட்டீர்கள் வாழ்த்துக்கள்
//தூ............. என்றால் மழை......
சனம் என்றால் மக்கள்!//
கிழிஞ்சுது போங்க...
//
கிழவி இவ்வளோ, விபரமாப் பேசுறியே, இம்புட்டு மேட்டரையும் எப்பூடிக் கற்றுக் கிட்டாய் கிழவி//
என்னது கிளவிக்கிட்டே மேட்டரா??
எத்தின சிடியாம்??
//ஐயோ.......கிழவி, உன் கூடப் பேசிக் கொண்டிருந்தால், எனக்கு லூசாக்கிடும், ஆளை விடு!
//
என்னாது ட்ரவுசர் கழன்டிரிச்சோ??
எனக்கென்னமோ ரெட்டை அர்த்த பிட்டு படம் ஓட்டின மாதிரியே ஒரு பீலிங்'கு!!
எப்பொழுதும் நீங்க தான் கலக்குவீங்க... இன்னைக்கு பாட்டியா..ம்ம்..ம்ம் ரசிக்கும் படி இருக்கு
பாட்டிக்கும் Blog தான் வேணும் போல..
அன்பின் நிரூபன்,
வணக்கம். பாட்டியின் ஊடாக கொண்டு போகும் உத்தி அற்புதம். நல்ல பகடி.
தம்பி ...ராசா நிரூ...இவ உன்ர அம்மம்மாவெல்லோ.இப்பிடித்தான் இருப்பா.இதில என்ன அதிசயம்.
ச்ச...எனக்கொரு அம்மம்மா இப்பிடி இல்லாமப் போச்சே !
பாட்டியின் ஆசிர், எங்களுக்கும் வேண்டும். :-)
haa haa நிரூபன் செம வித்தியாசமான போஸ்ட். சாரி ஃபார் லேட்
இது கற்பனையா? நிஜமா நடந்ததா? #டவுட்டு
?>>>
இதையும் மீறி நான் பாப்புலர் ஆகலை என்றால், கலாச்சாரம், சமூகம் முதலியன பதிவர்களால் சீரழிகிறது என்று பொங்க வேணும். அப்போ தான் சிங்கில் கப்பில் நாம சிக்ஸர் அடிக்கிறதா முடியுமில்ல.
haa haa ஹா ஹா இது செம
Humerous
////இயம தர்மன் உன்னட்டை எப்ப வாறார் என எழுத உனக்கு ப்ளாக் கேட்குதோ?////
யோவ் அவளு தான் மரணபயமில்லாமல் எதுவும் எழுதலாம் நாம எழுதலாமா ?
@Nesan
அய்யோ ! இந்தவடை எனக்கு வேண்டாம் பால்கோப்பி தான் வேண்டும் பிறகு வாரன் கருத்துடன்!//
பால் கோப்பி முடிந்து விட்டது சகோ, பனங் கள்ளுத் தான் இருக்கு. தரவா.
@Nesan
உங்களின் கருத்துக்களுக்கு நன்றிகள் சகோ.
@விக்கி உலகம்
மாப்ள நடத்துய்யா ஒன்னும் சொல்றதுக்கில்ல ஹிஹி!//
நன்றிகள் சகோ.
@ரேவா
சகோ நீயே இப்படினா உனக்கு கதை சொன்ன பாட்டி வந்தா?... சூப்பர் போ...ஹ ஹ//
ஆமால்ல, பாட்டி வந்தால் பட்டயக் கிளப்பிடுவா.
@ரேவா
அப்டியா சொல்லவே இல்ல சகோ?..//
ஆமாம், இது கூடவா தெரியலை, சின்னப் புள்ளத் தனமா இருக்கே.
@ரேவா
சகோ உன் நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு...உண்மையா அப்படியே சொல்லிருக்கேங்கள்//
அவ்.....பப்ளிக் பப்ளிக்!
@!* வேடந்தாங்கல் - கருன் *!
சகோ..
பதிவு உலக அரசியல தொலுரிச்சி காட்டி இருக்கீங்க..
சபாஷ்.//
நன்றிகள் சகோ.
@சென்னை பித்தன்
ட்ரிங்,ட்ரிங்’
ஹலோ,நிரூபனின் பாட்டியா?
பதிவுலகம் பற்றி எல்லாம் தெரிஞ்சு வச்சிருக்கீங்க!
பதிவு ஆரம்பியுங்க!நான் முதல் பின்னூட்டம் போடுகிறேன்!
நீங்களும் என் பதிவில் தவறாமல் பின்னூட்டம் இடுங்கள்!//
அவ்.....இது தான் பண்ட மாற்று முறைப் பதிவுலகத் தந்திரமா.
பயங்கர அனுபவசாலியாக இருப்பீங்க போல இருக்கே.
@Nesan
பாட்டியின் sssc இற்கு இன்று எந்தக் கல்வியும் ஈடாகாது!பதிவரசியல் உங்களிடம் புகுந்து விளையாடுகிறது தொடருங்கள் !//
நன்றிகள் சகோ.
@தமிழ்வாசி - Prakash
நல்லா தான் யோசிச்சிருக்கிங்க...பாட்டி கூட செர்ந்திக்கிட்டு...//
நிஜமாவா, சொல்லவே இல்ல.
@கந்தசாமி.
இது உண்மை தான்..//
மக்களே! அடுத்த அனுபவசாலி சொல்லுறாரு, கேட்டுத் தெரிஞ்சுக்குங்க.
@ஆர்.கே.சதீஷ்குமார்
பாட்டி பல வித்தை தெரிஞ்சி வெச்சிருக்கு ஹஹஹா//
நன்றிகள் சகோ.
@தம்பி கூர்மதியன்
யோவ்,!! என்னயா வர்றவனெல்லாம் போ போனு சொல்லிகிட்டு கிடக்க.?//
வாசலிலை நாயைக் கட்டி வைச்சிருந்தா, போர்ட் மாட்டி தொங்கவுடனும் என்று பெரியவங்க சொல்லியிருக்கிறாங்க எல்லே.
@கந்தசாமி.
பதிவுலக அரசியலை பாட்டி வேடத்தில் அலசியிருக்கிறீர்கள்...)))) பாவம்யா பாட்டி...)))//
நன்றிகள் சகோ.
ஆமா எந்தப் பார்ட்டி;-)))
@தம்பி கூர்மதியன்
அதுக்கென்ன ஒரு ப்ளாக்க தட்டி விட வேண்டியது தானே.!!//
ப்ளாக் தட்டுறது ஓகே, ஆனால் அதன் மூலமா வாற பின் விளைவுகளை யாரு சமாளிக்கிறது. அவ்...
@தம்பி கூர்மதியன்
இது மட்டும் நடந்ததுனா ஒரு பொட்டபுள்ள தப்பிச்சிக்கும்..//
எத்தனை பேர் இப்படிம் கிளம்பியிருக்கீங்க.
@சசிகுமார்
என்ன நிரூபா இந்த நம்பருக்கு போன் பண்ணினால் யாரோ ஒரு சின்ன பொண்ணு எடுக்குறாங்க நம்பர மாதி போட்டுடீங்களா ஹா ஹா ஹா.//
இல்லையே சகோ, பாட்டி தானே பேசுவா. அவ்...
@தம்பி கூர்மதியன்
நிரூ.. பாட்டியை வைத்து பதிவுலகை நக்கல் அடித்து போட்டீர்கள்.. என்ன செய்யலாம்.? உங்களுக்கு ஒரு கண்டன பதிவு போட்டு நான் பேமஸ் ஆகிடலாமானு யோசிக்கிறேன்.//
அடப் பாவி, நீங்க சந்திலை சிந்து பாடுற நோக்கத்தோடை தான் அலையுறீங்க போல இருக்கே.
@சுவனப்பிரியன்
உங்கள் பதிவும் ரசிக்கும் படி இருந்தது.//
நன்றிகள் சகோ.
@சரியில்ல.......
நிரூபா... எனக்கொரு உண்மை தெரியனும்.. இவ்ளோ விவரமான பாட்டிகூட இருந்துகொண்டா.. இத்தனை நாள் பாடாய் படுத்தின?//
எடுங்கய்யா அந்த அருவாளை.
@சரியில்ல.......
ஆனாலும் படா பேஜாரு பார்ட்டி தான் உன்னோட பாட்டி.
மதன் சார் (ஹாய் மதன்) சொல்ல்வது மாதிரி பாட்டிங்ககிட்ட இருந்து நிறைய விஷயம் தெரிஞ்சிக்கலாம். ஹிட்டு பதிவ போட்டு பட்டைய கெளப்பிட்ட... கலக்கு மச்சி..//
நன்றிகள் மச்சி.
@A.R.RAJAGOPALAN
நல்ல பல கருத்துக்களை
கொண்டு எழுதப்பட்ட பதிவு
அற்புதம் சகோ
இப்படி ஒரு பாட்டி
எல்லோருக்கும் இருந்தால்
மிகவும் நலமாய் இருக்கும்//
நன்றிகள் சகோ.
@இரவு வானம்
சரி விடுங்க பாஸ், பாட்டி உண்மையத்தான சொல்லி இருக்காங்க, அதுசரி பாட்டி பிளாக் ஆரம்பிச்சிட்டாங்களா?//
ஆமா சகோ, கூகிளில் தேடிப் பாருங்க. பாட்டி காட்சி தருவா.
@ராஜ நடராஜன்
உரைநடையப் படிச்சா பாட்டி கூட கதைச்ச மாதிரி இருக்குது!ஆனா சிவப்பு எழுத்து பாட்டி ஆலோசனைகளைப் பார்த்தா ஏதோ உள்குத்துன்னு பதிவுலக சொல்ற மாதிரி தெரியுதே?//
இந்தப் பதிவில் உள் குத்தா, சான்ஸே இல்ல. சும்மா கோர்த்து வுடுற என்றே கிளம்பியிருக்கீங்க.
@akulan
என்ன ஒரு அக்கற.............(பிளாக்கர் மேல)//
நக்கலு.
@shanmugavel
கலக்கிட்டீங்க சகோ !சூப்பர்//
நன்றிகள் சகோ.
@Dr.எம்.கே.முருகானந்தன்
விபரம் தெரிஞ்ச பாட்டியாகி பதிவுலக விவகாரங்களை அழகாக அலசியிருக்கிறீர்கள்.//
நான் அலசலை சகோ. என் பாட்டி தா இதெல்லாம் சொன்னா.
@ரிஷபன்
பாட்டி சொல்றாங்க.. பாட்டி சொல்றாங்கன்னு எல்லாத்தியும் சொல்லிபுட்டீங்களே..//
அப்பத் தானே நாம தப்பிக்க முடியும்.
@செங்கோவி
நீங்களும் வாசலிலே நாயைக் கட்டிப் போட்டாச்சா.//
ஆமாய்ய, இது கொஞ்சம் கடி நாய். பார்த்து இறங்குங்க.
@செங்கோவி
ஆஹா..அடிச்சு விளையாடி இருக்கீங்களே..நான் வரலைப்பா இந்த ஆட்டத்துக்கு!//
நாம தான் ஆட்டத்திலை சேர்த்துக்கிறமில்ல. வர வேண்டியது தானே.
@MANO நாஞ்சில் மனோ
இது அந்த நாதாரிக்கு வச்ச ஆப்பு மாதிரியே இருக்கே....//
மெதுவாக சொல்லுங்க சகோ.
@MANO நாஞ்சில் மனோ
சட்டை கிழிஞ்சா தச்சி போட்டுக்கலாம், பிளாக்கர் பொழந்துடுச்சே எங்கே முறையிடலாம்...//
ஐயோ, ஐயோ.
ஹா.....ஹா....
@பிரபாஷ்கரன்
எப்படியோ பாட்டி மூலமாக நீங்கள் சொல்ல வந்ததை சொல்லிவிட்டீர்கள் வாழ்த்துக்கள்//
நன்றிகள் சகோ.
@மைந்தன் சிவா
//
கிழவி இவ்வளோ, விபரமாப் பேசுறியே, இம்புட்டு மேட்டரையும் எப்பூடிக் கற்றுக் கிட்டாய் கிழவி//
என்னது கிளவிக்கிட்டே மேட்டரா??
எத்தின சிடியாம்??//
தாங்கள் திருந்தவே மாட்டீங்களா. அவ்....
@சிநேகிதி
எப்பொழுதும் நீங்க தான் கலக்குவீங்க... இன்னைக்கு பாட்டியா..ம்ம்..ம்ம் ரசிக்கும் படி இருக்கு//
நிஜமாவே, இது என் பாட்டியோடை பஞ்ச் தான்.
@சிவலோகநாதன் நிறூஜ்
பாட்டிக்கும் Blog தான் வேணும் போல..//
யாருக்கு உங்க வீட்டுப் பாட்டிக்கா. ஒன்றை உருவாக்கிக் கொடுத்தாப் போச்சே.
@இரா.எட்வின்
அன்பின் நிரூபன்,
வணக்கம். பாட்டியின் ஊடாக கொண்டு போகும் உத்தி அற்புதம். நல்ல பகடி.//
நல்ல பகிடி,
நன்றிகள் ஐயா.
@ஹேமா
தம்பி ...ராசா நிரூ...இவ உன்ர அம்மம்மாவெல்லோ.இப்பிடித்தான் இருப்பா.இதில என்ன அதிசயம்.
ச்ச...எனக்கொரு அம்மம்மா இப்பிடி இல்லாமப் போச்சே !//
சைட் கப்பிலை, என்ரை அம்மம்மாவையும் சேர்த்து திட்டுறீங்க. அவ்.........
@FOOD
பாட்டியின் பெயரை சொல்லி கில்லி அடித்துள்ளீர்கள். நடக்கட்டும்.//
எல்லாம் உங்களின் ஆசி தான்.
நன்றிகள் சகோ.
@Chitra
பாட்டியின் ஆசிர், எங்களுக்கும் வேண்டும். :-)//
இப்பவே அப்பாயிமெண்ட் புக் பண்ணனும்.
@சி.பி.செந்தில்குமார்
haa haa நிரூபன் செம வித்தியாசமான போஸ்ட். சாரி ஃபார் லேட்//
நன்றிகள் சகோ.
@சி.பி.செந்தில்குமார்
இது கற்பனையா? நிஜமா நடந்ததா? #டவுட்டு//
அவ்.............
நிஜம் பாஸ், பார்த்தா தெரியலை.
@சி.பி.செந்தில்குமார்
haa haa ஹா ஹா இது செம//
வசனத்தைக் குறித்துக் காட்டி, கோர்த்துவுடுறதுக்கென்றே அலையுறீங்களா. அவ்........
@Geetha6
Humerous//
நன்றீகள் சகோ.
@♔ம.தி.சுதா♔
யோவ் அவளு தான் மரணபயமில்லாமல் எதுவும் எழுதலாம் நாம எழுதலாமா ?//
ஆஹா... இதிலை இப்படியும் மேட்டர் இருக்கா.
உங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கேன். நேரம்
கிடைக்கும் போது பாருங்கோ.
http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_9552.html
Post a Comment