பாண்டியர்களால், பல்லவர்களால்
என வரிசையாக(ப்) பல
தமிழ்ப் பெரு(ம்) மன்னர்களால்
அரியணையில் ஏற்றி,
அழகு பார்க்கப் பட்ட
செங்கோல் எனும் என் பாட்டனின்
கோவணம் மீண்டும்
ஆட்சி பீடம் ஏறப் போகிறது நாளை!
ஏழைகள் மீதான
பரிதாபம் நிறைந்து,
நாட்டு நலன் மீதான
கரிசனை அதிகரித்து
காரியமே கண்ணெனச் செயற்பட்ட
பெரும் மன்னர் காலத்தில் தான்
என் பாட்டன் வாழ்ந்தான்,
இறந்து போன
அவனின் கோவணம்
ஆட்சியாளர்களின் கால்களில் மிதிபட்டு
இன்று மியூசியத்தில் இருப்பினும்;
நாத்தமின்றி இருக்கிறது- காரணம்
செந்தமிழர் வீரம் நிறை
செருக்கில் அவன் உயிர் பெற்றிருந்தான்,
மக்களுக்காய் வாழ்ந்த மன்னர்கள்
நிழலின் கீழ் அவன் குடியிருந்தான்!
இன்று தன் குலம் வாழ,
மந்திரிகள் யாகம் செய்து
மக்கள் சொத்தை
மாரப்பால் மறைக்கும்
பெண்களைப் போல
உள் வீட்டிற்குள்
உறைபனியாய்
உருக்கி மகிழ்கிறார்கள்,
பாட்டனின் பழைய ஆடைக்கோ
ஓரமாய் இருந்து
வேடிக்கை பார்க்கும் வேளையிலும்
உணர்வுகள் குறையாத வலிமை
இன்னமும் இருக்கிறதாம்,
நாளை என் பாட்டனின்
பழைய கந்தல் துணி
சுய நலம் எனும்
மழை நீரில் நனைந்து,
காற்றில் பறக்கலாம்,அதனை உதய சூரியன்
வந்து காயச் செய்யலாம்,
இலையேல்- இரட்டை இலைகள்
வந்து தாங்கிப் பிடிக்கலாம்,
யார் வந்தாலும்,
யார் தாங்கினாலும்
மாற்றங்கள் ஏதுமின்றி இருப்பதென்னவோ
என் பாட்டனின் கோவணம் தான்- ஆனால்
மாளிகை நிறை
சொத்துக்களால் உயர்வதென்னவோ
எங்கள் அரசிய வாதிகளின்
கைப் பைகள் தான்!
புதியதோர் அறிவிப்போடு, மீண்டும்
கோவர்த்தன மலையை(த்) தூக்கிய படி
நர்த்தன நடனம் சட்ட சபையில் ஆரம்பம்,
அம்மாவும், ஐயாவும்
இணைந்து நாளை மகுடி ஊதலாம்,
அதுவும் முடியாவிட்டால்
இருவரில் ஒருவர் மட்டும்
பாம்பாட்டியாய் மாறலாம்,
மீண்டும் ஏழைகள் வாழ்வு
ஏற்றமின்றி என் பாட்டனின்
பழைய கந்தல் துணி போலத் தொங்கும்,
அடுத்த தேர்தல் வருகையில்
இரு கரம் கூப்பிய படி
கோவணத்தை(த்) தேடி
அம்மாவும் ஐயாவும் வருவார்கள்,
இவர்களால் ஆகப் போவது
ஒன்றுமில்லை எனும்
உண்மையினை நாங்கள் உணராத வரைக்கும்........!
* படங்கள் கூகிள் அம்மம்மாவின் உதவியினால் கிடைத்தவை.
|
38 Comments:
உங்கள் பதிவு, நீங்கள் போட்டவுடன் என் டாஸ்க்போர்டில் தெரியமாட்டேங்குது..லேட்டாத் தான் தெரியுது..வடை வாங்கவே முடியலையே..
சுய தெளிவும் சமூக அக்கரையும் இல்லா மக்கள் போடும் ஓட்டில் தான் இந்த தாத்தா பாசப்பினைப்புக்களுடன் அறிவாலயத்தில் குந்தியிருந்து இலவசங்களை அள்ளிவீச ஓட்டாண்டியானவர்கள் வீழ்ந்து போவதன் கொடுமை இனியும் வரக்கூடாது சக்கர நாற்காளியில் என்னத்தை கிழிப்பார் இந்த முந்தானையில் மூழ்கிப்போனவர். பாவமய்யா இந்த எதிர்கால கனவுகள் சுமக்கும் பாமரமக்கள் கூட்டத்திற்கு விடிவெள்ளி எப்போது.
அருமையான உவமைகள்
@சிவா அது அண்ணா மியூசியத்தில் இருக்கு பத்திரமாக காவல் நம்ம வாத்தியர் அருகில்,
அருமை.வாழ்த்துக்கள்
மாப்ள வச்சிட்டான்யா ஆப்பு _ இதே நிலை தான் ஓட்டு போட்டவனுக்கும்...)
உங்கள் பதிவுகளுக்கு தலைப்புகள் எல்லாம் , மிரட்டல் ரகமாக இருக்குது. அதனாலேயே பல சமயங்களில் நான் பதிவுகளை வாசிக்காமல் விட்டு விடுகிறேன். அவ்வ்வ்...... !!! :-)))))
உணர்ந்து எழுதப்பட்ட பதிவு! பொறுத்திருந்து பார்ப்போம். அம்மா பழைய அம்மாவா! அல்லது திருந்திய அமமாவா என்று!
இன்னும் பதிவு படிக்கவில்லை வலையில் ஏதோ பிரச்சனை ஆனாலும் அம்மாவின் வருகை ஐய்யாவின் குடும்ப ஆட்ச்சிக்கும் அராயகத்திற்கும் வைக்கப்பட்ட முடிவு.
நான் போட்ட பின்னூட்டத்தை கூகிள் ஆட்டையப் போட்டுடுச்சா?
நம்ம பாட்டன் கோவணம் கிடைக்குமோ கிடைக்காதோன்னு தெரியாது!
ஆனால் தி.மு.க வின் கோவணம் இன்றைக்கு காத்துல பறந்துடுச்சு:)
நிரூபன் நான் வந்தேன் உங்களுக்கு ஓட்டு போட்டேன் .
அப்புறம் ஓடியே போய்டேன் .
என்னய்யா தலைப்பு இது??
அட வடை எனக்கா??
எனக்கு வேண்டாம் நீயே வைச்சுக்க...
இப்ப தான் சாப்பிட்டேன்...
கூகிள் அம்மாவா??அப்போ அப்பா யாகூவா??
முடிவுக்கு ஒரு சலாம்...அது தான் உண்மை!!
//இன்று மியூசியத்தில் இருப்பினும்;
நாத்தமின்றி இருக்கிறது-//
எந்த மியூசியம் பாஸ்???
சம்டயிம்ஸ் லாலா சோப்பு போட்டு தோச்சிருப்பாரோ??
அட... என்னம்மா? பூந்து விளயாடியிருக்கிங்க...
//புதியதோர் அறிவிப்போடு, மீண்டும்
கோவர்த்தன மலையை(த்) தூக்கிய படி
நர்த்தன நடனம் சட்ட சபையில் ஆரம்பம்,
அம்மாவும், ஐயாவும்
இணைந்து நாளை மகுடி ஊதலாம்,//
இவர்களின் ருத்ர தாண்டவத்தில் சிக்கி சீரழிய போவது மக்கள் தான்..
மாப்ள நச் கவிதை!
ம்ம்ம்ம்ம்ம்ம் அடி தூள்......
/உண்மையினை நாங்கள் உணராத வரைக்கும்........!/
அழகாக முடித்துள்ளீர்கள்
கலக்கல் சகோ..//மக்கள் சொத்தை
மாரப்பால் மறைக்கும்
பெண்களைப் போல
உள் வீட்டிற்குள்
உறைபனியாய்
உருக்கி மகிழ்கிறார்கள்,// அருமை..அருமை.
உங்கள் பதிவு, நீங்கள் போட்டவுடன் என் டாஸ்க்போர்டில் தெரியமாட்டேங்குது..லேட்டாத் தான் தெரியுது..வடை வாங்கவே முடியலையே..
அருமை. உணர்ந்தேதான் இத்தனையும் நிரூபன்
இந்த வடை புளிக்கும் இப்பவேண்டாம் பின்னாடி வாரன் கருத்தோடு படிச்சிட்டு.
இந்த வடை புளிக்கும் இப்பவேண்டாம் பின்னாடி வாரன் கருத்தோடு படிச்சிட்டு.
சுய தெளிவும் சமூக அக்கரையும் இல்லா மக்கள் போடும் ஓட்டில் தான் இந்த தாத்தா பாசப்பினைப்புக்களுடன் அறிவாலயத்தில் குந்தியிருந்து இலவசங்களை அள்ளிவீச ஓட்டாண்டியானவர்கள் வீழ்ந்து போவதன் கொடுமை இனியும் வரக்கூடாது சக்கர நாற்காளியில் என்னத்தை கிழிப்பார் இந்த முந்தானையில் மூழ்கிப்போனவர். பாவமய்யா இந்த எதிர்கால கனவுகள் சுமக்கும் பாமரமக்கள் கூட்டத்திற்கு விடிவெள்ளி எப்போது.
அருமையான உவமைகள்
@சிவா அது அண்ணா மியூசியத்தில் இருக்கு பத்திரமாக காவல் நம்ம வாத்தியர் அருகில்,
மாப்ள வச்சிட்டான்யா ஆப்பு _ இதே நிலை தான் ஓட்டு போட்டவனுக்கும்...)
///இன்று தன் குலம் வாழ,
மந்திரிகள் யாகம் செய்து
மக்கள் சொத்தை
மாரப்பால் மறைக்கும்
பெண்களைப் போல
உள் வீட்டிற்குள்
உறைபனியாய்
உருக்கி மகிழ்கிறார்கள்/// செமையா ஒரு தாக்கு...
///நாளை என் பாட்டனின்
பழைய கந்தல் துணி
சுய நலம் எனும்
மழை நீரில் நனைந்து,
காற்றில் பறக்கலாம்,
அதனை உதய சூரியன்
வந்து காயச் செய்யலாம்,
இலையேல்- இரட்டை இலைகள்
வந்து தாங்கிப் பிடிக்கலாம்,
யார் வந்தாலும்,
யார் தாங்கினாலும்
மாற்றங்கள் ஏதுமின்றி இருப்பதென்னவோ
என் பாட்டனின் கோவணம் தான்//// உண்மையான வரிகள். இருவரில் யார் வந்தாலும் மாற்றம் என்மது வராது தான்..
பாஸ்! கவிதைக்கு பொருத்தமான படங்கள் கலக்கல்...
தமிழ்த்தாய் ஈழமண்ணில் போய் உட்கார்ந்து கொண்டால் என்பது மட்டும் உண்மை.
தலைப்பு செம நச்சுன்னு இருக்கு
அருமை நண்பரே
நிரூபன் சார் நீங்க மதுரைகரரா கோவை பக்கமா
தமிழர்களின் ஒட்டு மொத்த குமுறலும் இதுவேதான்.விழிப்புணர்வே இதன் மீள் வழி.
அருமை..வாழ்த்துக்கள்
உங்கள் பதிவுகளுக்கு தலைப்புகள் எல்லாம் , மிரட்டல் ரகமாக இருக்குது. அதனாலேயே பல சமயங்களில் நான் பதிவுகளை வாசிக்காமல் விட்டு விடுகிறேன். அவ்வ்வ்...... !!! :-)))))
தி.மு.க.வோட கோமணத்தைக் கூட மக்கள் உருவிட்டாங்க!பார்போம்,அம்மா நல்லது செய்கிறார்களா என்று!
"...அடுத்த தேர்தல் வருகையில்
இரு கரம் கூப்பிய படி
கோவணத்தை(த்) தேடி
அம்மாவும் ஐயாவும் வரும்.." வரை நாம் வழமைபோல எதிர்பார்ப்பகளோடு ஏமாறவேண்டியதுதான்.
Post a Comment