நம்ம ஊர் பொண்ணுங்களைப் பொறுத்த வரைக்கும், மனசுக்குள் ஒரு பையன் மீது விருப்பம் இருந்தாலும் இலகுவில் ஓக்கே சொல்லிட மாட்டாங்க. பையனை அலை...அலையென்று தங்கள் பின்னால் அலைய வைத்து, தாங்கள் ஏதோ- ஒரு பெரிய சினிமா ஹீரோயின் மாதிரிப் பிலிம் காட்டித் தான் நம்ம பொடியங்களோடை மனசைப் புரிஞ்சு கொண்டு, இறுதியில் ஓக்கே சொல்லுவது போல பதில் சொல்லுவார்கள்.
இன்னொரு மேட்டர், என்னவென்றால், நம்ம பொண்ணுங்க தாங்களாக விரும்பிப் போய்- எங்களை மாதிரிப் பசங்களிட்டைக் காதலைச் சொல்ல மாட்டாங்க, அப்படி தெம்பான, துணிஞ்ச பொண்ணுங்க நூறுக்கு - ஒரு வீதம் என்றே கணிப்பிடலாம்.
நம்ம பசங்களைப் பொறுத்தவரை ஒன்பதாம் கிளாஸ் முடிய முதலே சைக்கிளில், தலைக்கு ஒரு தொப்பியையும் போட்டுக் கொண்டு பொண்ணுங்க, பாடசாலைக்கு முன்னால் அல்லது பொண்ணுங்க பள்ளிக் கூடம் விட்டுப் போற இடத்திற்கு அருகாக சென்று நூலு விடத் தொடங்கிடுவாங்க.
இதில் ஒரு முக்கியமான மேட்டர் என்னவென்றால், பொடியங்களின், பாடசாலை விட்டாற் பிறகு தான், சில ஊர்களில் பொண்ணுங்களோடை பள்ளிக் கூடம் விடும். பெரும்பாலும் பள்ளிக் கூடம் விடுற நேரம் மாடுகளைச் சாய்க்க வெளிக்கிட்டம் என்றால், மாலை ஆறு மணிக்கு ரியூசன் முடிஞ்சு, அவளுங்களை வீட்டை கொண்டு போய்ச் சேர்க்கும் வரைக்கும், றோட்டினைப் பசங்கள் குத்தகைக்கு எடுத்திடுவாங்க.
பொண்ணூங்கள் எல்லோரும், என்ன பண்ணுவாங்க என்றால், தாங்கள் வீதியில் போகும் போது எதிர்ப் பக்கத்திலை ஒரு பையன் வாறான் என்றால்- ஒரே ஒரு தடவை தான் கண்ணை வெட்டி முழிப்பாங்க- கண்ணடிப்பாங்க, அதுக்கு அப்புறம் என்ன நடக்கும் என்றால், பையன் அவள் விரிச்ச வலையிலை விழுந்து அவள் பின்னாடி சுத்தோ சுத்தென்று சுத்த வெளிக்கிடுவான். ஆனால் பொண்ணுங்களோ, ஒன்றுமே நடக்காத மாதிரியும், தாங்கள் ஏதோ சினிமா ஹீரோயின் எனும் நினைப்பிலையும் தங்களுக்கு பின்னாடி நாயாய் அலைய வைப்பாங்க.
ஒரு சில பொண்ணுங்க கிட்ட போட்டி இருக்கும், தமக்குப் பின்னால் எத்தனை பசங்க வழியுறாங்க, என்பதைக் கணக்கெடுப்பதற்காவாம்.- இது என்னோடு, பல வருடங்களுக்கு முன்பு, கம்பஸில் படித்த, நண்பி ஒராள் தந்த ரகசியத் தகவல்.
ஆண்கள் பாடசாலை விட்டாப் பின்னாடி, நாம எல்லோரும் சைக்கிளை எடுத்துக் கொண்டு, பெண்கள் பாடசாலைக்கு முன்னால் ரெண்டு றவுண்ட் அடிச்சுக் கொண்டு நிற்க, பெண்கள் பாடசாலை விட்டு, நம்ம கண்களைக் குளிர்விக்கும் கனகாம்பரம் பூக்கள் லேடிஸ் சைக்கிளில், இரட்டைக் கட்டுத் தலைப் பின்னலுடன் வரத் தொடங்குவார்கள்.
நாம என்ன பண்ணுவோமின்னா, ஆளுக்கு ஒரு சைக்கிளில் தான் போவோம், இருவர் ஒரு சைக்கிளில் போவதை எப்பவுமே தவிர்த்திடுவோம், தனி முயற்சி தானே வெற்றி பெறும் என்று ஒரு மனசினுள் ஒரு நப்பாசை வேறு.
முதலிலை ஹலோ, என்று சொல்லிப் பாப்போம், அப்படியே சைக்கிள் பெடலை இரண்டு உழக்கு, இறுக்கி உழக்கி, நீங்க ரொம்ப அழகாய் இருக்கிறீங்க என்று சொல்லுவோம், அதையும் மீறி- கொஞ்சம் பக்கத்தில் போய்- உங்களின் சிகப்பு கலர் தொப்பி ரொம்ம சூப்பராய் இருக்கென்று சொல்லுவோம், ஹலோ- நீங்க ரொம்ப அழகாத் தான் இருக்கிறீங்க, உங்ககிட்ட பேசலாமா,
இப்பூடி ஒரு வார்த்தையைப் போட்டதும் சில பொண்ணுங்க என்றால்
அப்பாவியாய் வெட்கப் பட்டு, முகத்தை குனிந்து சைக்கிள் ஓடிக் கொண்டு போவாளுங்க, ஆனால் சில பொண்ணுங்க- ரொம்பவும் வாய்க்காரப் பொண்ணுங்க.
செருப்புப் பிய்யும் சனியனே, உனக்கு அக்கா தங்கச்சி இல்லையோ என்று கேட்பாளுங்க,
இன்னும் சில பொண்ணுங்க, ‘நீயும் உன்ரை மூஞ்சியும், உனக்கு என் பின்னாலை வர, உனக்கு என்ன தகுதி இருக்கடா நாயே?
இப்படியும் பேசுவாங்க.
ஒரு தடவை நம்ம நண்பன் ஒருவன் ஹலோ சொல்லும் போது ஒருத்தி பேசிப் போட்டா, அவனுக்கு கோபம் வந்ததும், என்ன சொன்னான் தெரியுமா,
’ஐஞ்சு ரூபா வடையை வைச்சிருக்கிற உனக்கே இவ்வளவு தைரியம் என்றால்(தெனாவெட்டு)
பத்து ரூபா றோலை வைச்சிருக்கிற எனக்கு எப்புடித் தெம்பிருக்கும்,
போடி, பேய்ச்சி, நீயும் உன்ரை எடுவையும்.. இது ஒரு சம்பவம்.
இதே போலத் தான் ரியூசன் விட்டு வரும் பெண்கள் பின்னாலும் நம்ம நண்பர்கள் நூல் விட்டுக் கொண்டு வருவார்கள். யாரோ ஒருவனுக்கு ஒரு பொண்ணு சொல்லியிருக்கிறா,
’செருப்பைக் கழட்டி அடிச்சா கன்னம் வீங்கும் என்று,
அடக் கடவுளே, இந்தப் பேச்சை வாங்கிய, நம்ம தமிழ் மகன் என்ன சொன்னார் தெரியுமா..
சிப்பைக் கழட்டி அடிச்சால்...வண்டி வீங்கும் என்று. இப்படியும் பொண்ணுங்களை கலாய்ச்சு, பின்னாலை அலைஞ்சு றூட்டு விடுற சம்பவங்களும், இருக்கு,
பசங்க எல்லோரும் கூட்டமாக ஒவ்வோர் சந்தியிலும் நிற்பார்கள், எல்லோர் மனதினுள்ளும், ஒவ்வோர் பொண்ணிற்கு ரூட்டு போடுவதாக ப்ளான் இருக்கும், பொண்ணுங்களைக் கண்டதும், தனக்குரிய ஆள்(பிகர்) வாறா என்றால், அவாவிற்கு பின்னால், அவர் சைக்கிளை உழக்கி, உழக்கி போகத் தொடங்கிடுவார்.
(இயக்கம் றோட்டிலை வருதென்றால், திக்கு திசை தெரியாமல் றோட்டில் நிற்கும் ஆட்கள் எல்லோரும் ஓடி விடிவார்கள்)
இயக்கம்: முன்பொரு காலத்தில் எங்களூரின் அடையாளமாய் இருந்தவர்கள்.
நம்ம ஊரில் நாங்கள் ரூட்டு விட்ட காலத்தில் சைக்கிள்கள் தான் எங்களுக்கு தெய்வமாக, தூதுவர்களாக இருந்திருக்கின்றன. ஆனால் இப்போதெல்லாம் மோட்டார் சைக்கிளில் சவாரி செய்தல்லவா, கலாய்த்து, காதலைச் சொல்லுகிறார்கள் எங்கள் இளைய தலைமுறையினர்.
இலங்கையினைப் பொறுத்த வரை பொண்ணுங்களை, பசங்க கூட்டமாக நிற்கும் இடங்களில் ஒவ்வோர் சிறப்பு பெயர் சொல்லித் தான் அழைப்பாங்க.
ஆள்...உன் ஆள், என்ரை ஆள், அவனின்ரை ஆள்...இப்படி
ஆள்’ என்று சொல்லி அழைப்பார்கள்.
குட்டி- மச்சான் உன்ரை குட்டி எப்படியடா..
பிகரு- விளக்கம் தேவையில்லை என்பதால், தவிர்க்கிறேன்.
சரக்கு- உன்ரை சரக்கு, என்ரை சரக்கு, என்று அழைப்பார்கள், அத்தோடு
மச்சான் அந்தச் சரக்கு வடிவு என்னடா, என்றும் சொல்லுவார்கள்.
துண்டு- உன்ரை துண்டு, என்ரை துண்டு இப்படியும் சொல்லுவார்கள்.
இதனை விட வேறு சொற்கள் யாருக்காவது தெரிந்தால், பின்னூட்டமாக எழுதலாம். சிலோனுக்கு வந்து, யாரச்சும் சைட் அடிக்க விரும்பினால், இந்தச் சொற்களை எழுதி மனப் பாடம் பண்ணிக்கவும்.
பொண்ணுங்களைப் பொறுத்த வரை, ‘ஆளு’ எனும் வார்த்தையினைப் பயன்படுத்தித் தான் அவங்க ஆளை அழைப்பாங்க.(எங்களை அழைப்பாங்களாம்)
அதாவது ‘என்ன, உன்ரை ஆளை இன்றைக்குப் பார்த்தியா?’
இப்படி அழைப்பார்கள்.
காதலைச் சொல்வதற்கு, நம்ம ஊரில் பல கோயில்களுக்கு வேண்டுதல் வைத்தாலும், இலகுவில் சொல்லி விட முடியாது.. முற் காலத்தில் நம்ம பொண்ணுங்க முற் போக்காக, யோசித்து, தங்கள் குடும்பத்திற்கு தெரிந்தால் என்ன ஆகுமோ என்றெல்லாம் ஆழ்ந்து சிந்தித்துத் தான் முடிவெடுப்பாங்க, ஆனால்
இன்றைய தொழில் நுட்ப விருத்தி காரணமாக, இளசுகள் இப்ப காதலை வேகமாகவும் சொல்லி, காரியத்தையும் முடித்து, சட்ட விரோத கருக்கலைப்புக்களையும் செய்து விடுகிறார்கள்.
இன்றைக்குப் பத்து வருடங்களுக்கு முன்னர் பொண்ணுங்க பின்னாடி அலை அலை என்று அலைந்து, கடிதம் கொடுத்து காதலைச் சொன்னாலும், கொஞ்ச நாளைக்கப்புறமாகத் தான் பதில் தருவாங்க. பதில் தந்தாலும் - தங்களுக்கு பின்னாடி பிரச்சினை வரக் கூடாது எனும் நோக்கில், கடிதத்தில் பெயரைக் கூடச் சுருக்கித் தான் எழுதித் தருவாங்க. நம்ம ஊர் குட்டிகளிடம், போட்டோ வாங்கிறதென்றால், உயிர் போற விடயம். இலகுவில் போட்டோ தர மாட்டார்கள்.
முத்தம் என்றாலும் சரி, தொடுகை என்றாலும் சரி- பல வருடங்களுக்கு முன்பு கலியாணத்திற்கு முன்னர் கிடைக்காது என்ற நிலமை தான் இருந்தது, இன்றைய காலத்தில் காதலித்து மறு நாளே முதலிரவும் நடந்து, எங்களூர் இளசுகளின் காட்சிகள் இன்டர் நெட்டிலும் வந்து விடுகிறது- இப்போதைய சந்ததி பயங்கர வேகமாக இருக்கிறார்களே!
முற் காலத்தில் பலரது காதல்கள் இடப் பெயர்வுடன் இல்லாது போய் விடும் அல்லது தொலைந்து போய் விடும். நாம மடக்கிய பொண்ணுங்க எல்லாம் இடப் பெயர்வுகளோடு ஊர் விட்டு, ஊர் மாறிப் போய் விடுவார்கள்.
இதனால் காதல் இடை நடுவில் இடம் பெயர்ந்து விடும். ஒரு சில பசங்கள் பொண்ணுங்க பின்னாடி அலை அலை என்று அலைந்தும், அவளுங்க முடிவு சொல்லா விட்டால்- இயக்கத்திற்குப் போயிடுவன், நீ என் முடிவை ஏற்றுக் கொள்ளா விட்டால் இயக்கத்திற்கு போய் விடுவேன் என்று வெருட்டுவார்கள்.
உடனே நம்ம பொண்ணுங்க’ எங்க பாப்பம், நீ ஒரு வீரன் என்றால் இதனைச் செய்து காட்டன் என்று சவால் விடுவாங்க’
பிறகென்ன, பசங்கள் ‘சாவிலும் பெரிது மானமே’ என உரைத்து இயக்கத்திற்குப் போயிடுவாங்க. இயக்கத்திற்குப் போன பொடியன் வீரச் சாவென்றால், பொண்ணோடை நிலமை அம்போ தான்..
அதனை நினைத்து நினைதே அழுது கொண்டிருப்பா அந்தப் பொண்ணு.
பள்ளிக் கூடத்திலும், ரியூசனிலும் கொஞ்சம் படிக்க கூடிய கெட்டிக்காரப் பொடியனாகவும் வடிவாகவும் இருந்தால், பிகருங்களே தானாக வந்து ரூட்டு போடுவாங்க. ஆனால் மற்ற ஆட்கள் பாடு ஐயோ ஐயோ தான்.
இவை தான் நம்ம ஊர்ப் பொண்ணுங்களை மடக்குவதற்கான தியறிகள். இனிப் ப்ராக்டிக்கலா யாராவது ட்றை பண்ணப் போய்- செருப்படி வாங்கினால் அதற்கு ஐடியா தந்த ஆசாமியாகி நான் பொறுப்பல்ல.
பொண்ணுங்க எப்படிப் பசங்களை மடக்குவாங்க என்று யாராவது சொன்னால், நாம கொஞ்சம் வெரைட்டியாக ரூட்டு விடலாம் இல்லே!!
டிஸ்கி: அன்பு உறவுகளுக்கு ஓர் அறிவித்தல்: என் வலைப் பதிவினை ப்ளாக்கரில் இருந்து டாட்காம் ஆக மாற்றி இருப்பதால், என் வலையினைப் பாலோ பண்ணும், உங்களது டாஷ் போர்ட்டின் Google Reader இல் என் வலைப் பதிவின் Updates இனைக் காண முடியாது, ஆகவே நண்பர்கள் அனைவரும், சிரமத்தினைப் பாராது, மீண்டும் என் வலையினை பாலோ பண்ணுமாறு கேட்டுக் கொள்கிறேன். இடையூறுகளுக்கு- மன்னிக்கவும்,
|
104 Comments:
vada?
wait i read and come
நம்ம ஊர் பொண்ணுங்களைப் பொறுத்த வரைக்கும், மனசுக்குள் ஒரு பையன் மீது விருப்பம் இருந்தாலும் இலகுவில் ஓக்கே சொல்லிட மாட்டாங்க. பையனை அலை...அலையென்று தங்கள் பின்னால் அலைய வைத்து, தாங்கள் ஏதோ- ஒரு பெரிய சினிமா ஹீரோயின் மாதிரிப் பிலிம் காட்டித் தான் நம்ம பொடியங்களோடை மனசைப் புரிஞ்சு கொண்டு, இறுதியில் ஓக்கே சொல்லுவது போல பதில் சொல்லுவார்கள்.///
அப்படி ஓகே சொன்னதுக்கு பிறகு லேசில விடமாட்டாளவை! பிறகு நல்ல வேப்பம் பிசின் போட்டு ஓட்டினமாதிரிதான்!!
இன்னொரு மேட்டர், என்னவென்றால், நம்ம பொண்ணுங்க தாங்களாக விரும்பிப் போய்- எங்களை மாதிரிப் பசங்களிட்டைக் காதலைச் சொல்ல மாட்டாங்க, அப்படி தெம்பான, துணிஞ்ச பொண்ணுங்க நூறுக்கு - ஒரு வீதம் என்றே கணிப்பிடலாம்.///
அப்படி துணிச்சலான ஒரு பெண்ணை எனக்குத் தெரியும்! ஹி........ஹி.......ஹி......!!!
நம்ம பசங்களைப் பொறுத்தவரை ஒன்பதாம் கிளாஸ் முடிய முதலே சைக்கிளில், தலைக்கு ஒரு தொப்பியையும் போட்டுக் கொண்டு பொண்ணுங்க, பாடசாலைக்கு முன்னால் அல்லது பொண்ணுங்க பள்ளிக் கூடம் விட்டுப் போற இடத்திற்கு அருகாக சென்று நூலு விடத் தொடங்கிடுவாங்க.//
ஹி.....ஹி.......ஹி...... இதால எங்களுக்கு ஒரு கெட்ட பேரும் வரும் " பிஞ்சில பழுத்ததுகள் "
இதில் ஒரு முக்கியமான மேட்டர் என்னவென்றால், பொடியங்களின், பாடசாலை விட்டாற் பிறகு தான், சில ஊர்களில் பொண்ணுங்களோடை பள்ளிக் கூடம் விடும். பெரும்பாலும் பள்ளிக் கூடம் விடுற நேரம் மாடுகளைச் சாய்க்க வெளிக்கிட்டம் என்றால், மாலை ஆறு மணிக்கு ரியூசன் முடிஞ்சு, அவளுங்களை வீட்டை கொண்டு போய்ச் சேர்க்கும் வரைக்கும், றோட்டினைப் பசங்கள் குத்தகைக்கு எடுத்திடுவாங்க.///
ஒழுங்கா குளிக்கிறமோ இல்லையோ இந்த டியூட்டிய மட்டும் ஒழுங்கா செய்வம்!!
//சிலோன் பொண்ணுங்களை மடக்குவது எப்படி! //
அப்படியே பிரான்ஸ் பொண்ணுங்களை மடக்குவது எப்படின்னும்
போடுங்களேன் அண்ணா
lol
படைப்பின் இறுதி பகுதி நன்றாக உள்ளது . அந்தகாலத்து காதல் அனுபவம் இந்த காலத்து காதல் அரியண்டம் என்று ஒப்பு நோக்கின விதம் நீங்கள் ஒரு பழைய கட்டை என்பதை சொல்லிவிட்டது
அது சரி சைகுளுக்கு காத்து போன காத்தடிச்சி சைக்கிள் ஒட்டி கொடுக்கலையா , காதில தொப்பி கலந்து விழுந்தா ஓடிப்போய் எடுத்து கொடுக்கலையா அப்புறம் கீன்சுக்கு பின்னாடி இதயம் தைச்சு அத காடிடு திரியலா சங்கிலி பெண்டநில பெருசா பெயர் எழுதி அல்லது பொருந்தா முதல் எழுதேளுதி கட்டைய சங்கிலி போட்டு தெரியலையா
இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்..
அம்புட்டு மேட்டரையும் புட்டு புட்டு வைத்ததற்கு...
ஒரு இது இல்லாமல் போய்விட்டது ஹிஹி
பொடியன்கள் அலையுரானுகள் எண்டதும் அவளுகள் போடுவாளுகள் பாருங்கோ சீன்...
அம்மாடி...
அப்பிடி சீன் போட்ட பல "சுமார்' மற்றும் ஓகே ரக பிகருகள் இப்ப
சப்பை பொடியன்களை கட்டிக்கொண்டு சகட்டு வாழ்க்கை வாழுதுகள்..
இதனிலும் பார்க்க பேசாமல் அவங்களுக்கு ஓகே சொல்லி இருக்கலாம்.
நானும் இப்படி அலைஞ்ச ஒருத்தன் தான் ஹிஹி
அவள் எனக்கும் நூல விட்டு தண்ட ஊர்ல இன்னொருத்தனோட சுத்தினவள் பாஸ்..
அந்த விஷயம் எனக்கு தெரியாது!!
நான் வேண்டாம் எண்டு ஒதுங்கினப்புறம் தான் தெரிய வந்தது.
கொடுமை!!!
செருப்புப் பிய்யும் சனியனே, உனக்கு அக்கா தங்கச்சி இல்லையோ என்று கேட்பாளுங்க,// hhahaa...
பெண்களிடம் ஏச்சு வாங்கியதை இப்பூடி பப்ளிக்ல சொல்லப் படாது. கெதியா அம்மாவிடம் சொல்லி கல்யாணம், காட்சி ஆகிற வழியைப் பாருங்கோ.
மாப்ள இருவழிக்கதை புரிந்தது..........அதிலும் என்னைப்போல பள்ளிப்பருவ குழந்தைக்கு பல விஷயங்கள சொல்லி இருக்கீங்க..........இனி அப்படியே நடந்துக்கிறேன் ஹிஹி!
ஏதோ குரு சொல்றீங்க.. சிஷ்யன் கேட்டுக்கறேன்
நீட் போஸ்ட்
அருமையான பதிவு அழகான படங்கள் உண்மையில் தலைமுறை இடைவெளியா?இல்லை தறிகெட்ட நெறியா தெரியாது இன்று காதல் சொன்ன மறுநாளே முதலிரவு முடிந்து கருக்கலைப்பு வரை! சமூகத்தை நல்லா அவதானிக்கிறீங்க!
இடப்பெயர்வில் இடைமறந்த பலகதைகள் நானும் கேட்டிருக்கிறேன்!
..
நான் சின்னப்பொடியன் எனக்கெல்லாம் அனுபவம் இல்லை அண்ணா!
நீங்க ஏங்கையோ போட்டிங்க அண்ணா!(வலையில் தேடுகிறேன் பதில் வருமா?)
பொண்ணுங்க சைக்காலஜி கரைச்சி குடிச்சிருக்கீங்க
எல்லா பொண்ணுங்களும் இப்படித்தான் பாஸ்
இப்ப இருக்கிற பொண்ணுங்க காதலன் தொடுவதுதான் பிடிக்கிறது
சகோ எப்படி இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க!
சகோ இலங்கைப் பெண்களிடம் சில இந்தியப் பெண்கள் சிக்கி சின்னாப் பின்னமாகி இருக்கின்றார்கள் என்பதால் இலங்கைப் பெண்களிடம் வைத்துக் கொண்டதில்லை. ஆனால் அனைவரும் அப்படி இல்லை என்பதை நான் சொல்லிக் கொள்கின்றேன். அவர்களில் மூன்று ரகங்கள் இருப்பதை அறிவேன்.
முதல் ரகம் - வெளிநாட்டு பாவை எல்லாம் போட்டு பவுடர் எல்லாம் போட்டுகின்னு மாலை நேரத்தில் மார்க்கெட் வருவார்கள். அறுபது லட்சம் சென்னை வாசிகளில் இலங்கையர்கள் மட்டும் தனியாகத் தெரிவார்கள். ஐஎஸ்டி பூத்களில் போன் பேசுவார்கள். முகாமில் இருந்த அனுபவம் எல்லாம் இருக்காது. வெளிநாட்டு உறவினர்கள் வருவார்கள். நன்றாக பந்தாவாக அலைவார்கள். உள்ளூர் வாசிகளோடு இணைய மாட்டார்கள். எங்கட சொந்தம் பிரான்சு, கணடா அங்கே இங்கே னு பிலிம் காட்டுவாங்க... இந்தியப் பசங்களோடு பேருக்குத் தான் பழகுவாங்க.. வெளிநாட்டு மாப்பிள்ளைகள் ரெடியாக இருக்கும் என்று நினைப்பில் மிதப்பார்கள்.
இரண்டாவது இரகம் - வெளியில் இந்தியர்கள் போலவே பழகி வருவார்கள், பேசும் போது இலங்கை வாடை அடிக்கும். வீட்டில் இலங்கையராகவே வாழ்வார்கள் - இலங்கையில் இருந்து வெளிநாடுகளில் இருந்தோ சொந்தப் பந்தம் வந்துக் கொண்டே இருக்கும். கோயிலா கோயிலா சுத்துவாங்க. அவங்க அண்ணன்மார் பலர் ஸ்கூலுக்குப் போக மாட்டாங்க.. ஹீரோக் கணக்கா ஊர் சுற்றுவாங்க.. இந்திய ஆண்கள் யாராவது பின்னாடி சுத்தினா அண்ணங்காரு சண்டைக்கு வருவாரு.............. இலங்கைப் பாதி இந்தியா பாதி என்ற ரேஞ்சில் இருப்போர்.
மூன்றாவது இரகம் பாவப்பட்ட புள்ளைங்க.. முகாமிலோ வெளியிலோ கஷ்டப்பட்டு படிப்பாங்க.. இந்தியா பெண்களைப் போலவே இருப்பாங்க.. பார்ட் டைம் வேலை எல்லாம் கூட செய்வாங்க.. நல்ல ரேங்க் வாங்குவாங்க. வெளிநாட்டுல சொந்த இருக்காது, அல்லது இருந்தாலும் உதவி இருக்காது .... நல்லாப் பழகுவாங்க.. ஆனால் கட்டுப்பாடா இருப்பாங்க... எதாவது சாதிக்கணும்னு சொல்லுவாங்க.......
எனக்குத் தெரிந்த இந்தியாவில் இருக்கும் இலங்கைப் பெண்கள் இந்த மூன்று ரகம் தான். முதல் ரகத்தில் இருப்போரை இங்குள்ளோர் பலருக்குப் பிடிப்பதில்லை என்பதே உண்மை.
மற்றப்படி நீங்க சொன்னமாதிரி தான் இந்தியப் பெண்களும் இருப்பாங்க.. அதே மாதிரித் தான் இங்குள்ளப் பையன்களும் அலைவாங்க பாஸ் .... ஆனால் பலரை பெண்கள் அலைய வைத்து விட்டு டாடா காட்டிவிடுவாங்க.. ஆனால் இங்குள்ள ஆண்கள் அப்பிராணி - ஒரு பெண் சிரிச்சாலே அவளை சாமிக் கணக்கா பீல் பண்ணி அவங்க இவங்கனு மரியாதைப் பேசுவாங்க. பிகருக்காக பிரண்ட்சையும் கட் பண்ணத் தயங்கும் கர்ணர்கள் ..........
ஒருவேளை பிகரு டாட்டா காடினாலும் தாடி வளர்த்து பீலிங்கோட அடுத்த பிகர் மடங்காதனு அலைவாங்க...
இலங்கையினைப் பொறுத்த வரை பொண்ணுங்களை, பசங்க கூட்டமாக நிற்கும் இடங்களில் ஒவ்வோர் சிறப்பு பெயர் சொல்லித் தான் அழைப்பாங்க.
ஆள்...உன் ஆள், என்ரை ஆள், அவனின்ரை ஆள்...இப்படி
நல்லாத்தான் ஆராய்ச்சி பண்ணியிருக்கீங்க...
செருப்புப் பிய்யும் சனியனே, உனக்கு அக்கா தங்கச்சி இல்லையோ என்று கேட்பாளுங்க,
இன்னும் சில பொண்ணுங்க, ‘நீயும் உன்ரை மூஞ்சியும், உனக்கு என் பின்னாலை வர, உனக்கு என்ன தகுதி இருக்கடா நாயே?////
நல்ல அனுபவம்ங்க உங்களுக்கு.... (அவ்வ்)
///இலங்கையினைப் பொறுத்த வரை பொண்ணுங்களை, பசங்க கூட்டமாக நிற்கும் இடங்களில் ஒவ்வோர் சிறப்பு பெயர் சொல்லித் தான் அழைப்பாங்க.
ஆள்...உன் ஆள், என்ரை ஆள், அவனின்ரை ஆள்...இப்படி////
இங்கயும் அப்படித்தான்... என் ஆளு, உன் ஆளு..... அதுசரி... அதென்ன ஆள்??? பேரைக் கண்டுபிடிச்சிருக்கான் பாருங்க தமிழன்!! ஆனா சரக்குன்னுல்லாம் சொல்லமாட்டாங்க.... உலகத்தில தமிழ்ல சரக்கு என்ற சொல்லுக்கு ஒரே ஒரு அர்த்தம் தான்..... அது ”சரக்கு” தான்...
நல்லாத்தான் ஆராய்ச்சி பண்ணியிருக்கீங்க...
செருப்புப் பிய்யும் சனியனே, உனக்கு அக்கா தங்கச்சி இல்லையோ என்று கேட்பாளுங்க,
இன்னும் சில பொண்ணுங்க, ‘நீயும் உன்ரை மூஞ்சியும், உனக்கு என் பின்னாலை வர, உனக்கு என்ன தகுதி இருக்கடா நாயே?////
நல்ல அனுபவம்ங்க உங்களுக்கு.... (அவ்வ்)
///இலங்கையினைப் பொறுத்த வரை பொண்ணுங்களை, பசங்க கூட்டமாக நிற்கும் இடங்களில் ஒவ்வோர் சிறப்பு பெயர் சொல்லித் தான் அழைப்பாங்க.
ஆள்...உன் ஆள், என்ரை ஆள், அவனின்ரை ஆள்...இப்படி////
இங்கயும் அப்படித்தான்... என் ஆளு, உன் ஆளு..... அதுசரி... அதென்ன ஆள்??? பேரைக் கண்டுபிடிச்சிருக்கான் பாருங்க தமிழன்!! ஆனா சரக்குன்னுல்லாம் சொல்லமாட்டாங்க.... உலகத்தில தமிழ்ல சரக்கு என்ற சொல்லுக்கு ஒரே ஒரு அர்த்தம் தான்..... அது ”சரக்கு” தான்...
////சிலோன் பொண்ணுங்களை மடக்குவது எப்படி! /// அப்பிடின்னு ஒரு கிளாஸ் எடுத்து ஆளுக்கு நூறு ரூபாய் கட்டணமும் வாங்கினா பசங்களும் சந்தோஷ படுவாங்க அப்பிடியே உங்கட பாக்கட்டும் நிறஞ்சுடுமே..)
///இது என்னோடு, பல வருடங்களுக்கு முன்பு, கம்பஸில் படித்த, நண்பி ஒராள் தந்த ரகசியத் தகவல்/// அ நம்பிட்டன் அவ உங்கட நம்பி சிசி நண்பி தான் எண்டு
//செருப்புப் பிய்யும் சனியனே, // ஹிஹிஹி இந்த வசனத்தாலே ரொம்ப நொந்து முகத்தில முடி எல்லாம் வச்சு அலையிறாங்க பலர் ..)
///முத்தம் என்றாலும் சரி, தொடுகை என்றாலும் சரி- பல வருடங்களுக்கு முன்பு கலியாணத்திற்கு முன்னர் கிடைக்காது என்ற நிலமை தான் இருந்தது,// ஆமா ஆமா முன்னர் நம் சமூகம் மிகுந்த கண்ணியமா இருந்தது என்றதுக்கு இது ஒரு உதாரணம். இப்ப எல்லாம் காதல் என்ற பேர்ல காமம் கொண்டு பிறந்த குழந்தையைஅடுத்த நிமிடமே கடதாசில சுற்றி வீசினம் ...
மொத்தத்திலே இந்த இடுக பல ஈழத்து பசங்களுக்கு வழிகாட்டியா அமையும் என்று கூறி இத்தோடு விடை பெறுகிறேன்...நன்றி வணக்கம்
ஹே ஹே ஹே ஹே ஹே நீங்க சொன்னா சரிதான்....
என்னய்யா தலைப்பே சும்மா அதிருது...
இந்தப் பதிவை வாசிக்கும் பொழுது நீங்க பெண்கள் பற்றி அதிகமாக ஆராய்ச்சி செய்திருக்கிங்க என்பது திட்டவட்டமாகத் தெரிகிறது . புகைப்படங்கள் எல்லாம் நீங்கள் எடுத்ததா !? கவிதை சொல்லும் குட்டைப் பாவாடைகள் அனைத்தும் கலக்கல் . பதிவை ரசிக்கும் வகையில் எதார்த்த எழுத்து நடை சிறப்பு .
எங்க.. எனக்கு தமிழே வரவில்லை...
பாண்ட் மிஸ்ங் என்று நினைக்கிறேன்..
//துண்டு- உன்ரை துண்டு, என்ரை துண்டு இப்படியும் சொல்லுவார்கள்.//
நசர்ஜி!சீக்கிரம் ஓடியாங்க!துண்டு மாட்டிகிச்சு:)
//சிலோனுக்கு வந்து, யாரச்சும் சைட் அடிக்க விரும்பினால், //
அங்கேதான் வரணுமாக்கும்.நான் இங்கேயே வாங்கி கட்டிக்கொண்டேன்:)
இங்கயும் அதே வேலையதான் பண்ணுவாங்க பாஸ், நோ சேஞ்ச் :-)
இளமை துள்ளலுடன் பதிவு - கலகலப்பாக வந்து இருக்குது.
இது அப்பட்டமான உண்மை..........
(எல்லா புதிய தலைமுறையினரும் இப்படி இல்லை) நான் நல்ல பையன் .....ஆஆமா
சகோ, கலக்கிப்புட்டீங்க...அருமை..அருமை!
என்னது பொண்ணுகள சரக்கு என்று சொல்வீர்களா? நம்ம ஊரிலே சரக்கு என்றாலே கிராக்கி - கிராக்கி என்றால் கில்மா - கில்மா என்றால் சோலு .. போங்க அது வேறு மாதிரி பொம்பளைங்க தான் சரக்குனு சொல்வாங்க....
அது மட்டுமின்றி இங்கே திட்டுகின்ற பெண்ணிடம் ஜிப்பை கழட்டுவோம், அது இதுனு பேசினா மாப்ளே மாமியார் வீட்டில கஞ்சி ஊத்திடுவானுங்க ...... சோ சைட் சைட் சைட்.. சிலர் சைட் கடலை பிக்கெப்னு இருப்பாங்க........ கடைசில் எவக்கிட்டாயவது மாட்டி சம்சாய் ஆகிடுவானுங்க ........... பாஸ் ..........
எல்லாம் சரி. எழுத்து நடையைபார்த்தால், தமிழ் நாட்டில் இருந்து வந்த ஆள் எழுதினமாதிரி இருக்கு :-)
நிரூபனுக்கு கல்யான களை வந்திடிச்சு!
தொடர்ந்து பெண்கள் பற்றியே போடுறீங்களே(பதிவ சொன்னன்)
//’ஐஞ்சு ரூபா வடையை வைச்சிருக்கிற உனக்கே இவ்வளவு தைரியம் என்றால்(தெனாவெட்டு)
பத்து ரூபா றோலை வைச்சிருக்கிற எனக்கு எப்புடித் தெம்பிருக்கும்,//
பாஸ் என்ன மாதிரி சின்னப்பசங்களுக்கு விளங்கல்ல பாஸ்... கொஞ்ச விளக்கம் தாங்க ( கொஞ்ச= சிறிய,)
kalakkal
அனைவருக்கும் அவசியம் தேவையான பதிவு, இதுல எந்த உள்குத்தும் இல்ல
குட்டி துண்டு ஆளு, பிகரு , சரக்கு
இப்ப புதுசா சயிஸ் எண்டும் சொல்றாங்க
கோயிலுக்கு கூட்டிக் கொண்டு போய் திருப்பி வீட்டடிக்குக் கொண்டு வந்து விட்டிட்டுப் போறத விட்டிட்டியள்?கோயில்ல திருநீறு,சந்தனம்,குங்குமம், பூ குடுக்குறதயும் மறந்திட்டியள்!
எங்கட அம்மா அப்பா காலத்தில பிடிச்ச ஆக்களின்ர வீட்டு தட்டிப் படலை வாசலிலதானாம் சைக்கிள் செயின் கழன்று போகும் !
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
vada?//
முதலில் பூஜைக்குரிய தட்சணையைத் தாங்க, அப்புறமா வடை தாறேன்.
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
wait i read and come//
பதிவினூடாகப் பறந்து வரப் போறீங்களா..
நீங்கள் சொல்லும் பிரெஞ் சரியாகப் புரியவில்லையே சகோ.
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
நம்ம ஊர் பொண்ணுங்களைப் பொறுத்த வரைக்கும், மனசுக்குள் ஒரு பையன் மீது விருப்பம் இருந்தாலும் இலகுவில் ஓக்கே சொல்லிட மாட்டாங்க. பையனை அலை...அலையென்று தங்கள் பின்னால் அலைய வைத்து, தாங்கள் ஏதோ- ஒரு பெரிய சினிமா ஹீரோயின் மாதிரிப் பிலிம் காட்டித் தான் நம்ம பொடியங்களோடை மனசைப் புரிஞ்சு கொண்டு, இறுதியில் ஓக்கே சொல்லுவது போல பதில் சொல்லுவார்கள்.///
அப்படி ஓகே சொன்னதுக்கு பிறகு லேசில விடமாட்டாளவை! பிறகு நல்ல வேப்பம் பிசின் போட்டு ஓட்டினமாதிரிதான்!!//
ஆஹா..அனுபவம்...
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
இன்னொரு மேட்டர், என்னவென்றால், நம்ம பொண்ணுங்க தாங்களாக விரும்பிப் போய்- எங்களை மாதிரிப் பசங்களிட்டைக் காதலைச் சொல்ல மாட்டாங்க, அப்படி தெம்பான, துணிஞ்ச பொண்ணுங்க நூறுக்கு - ஒரு வீதம் என்றே கணிப்பிடலாம்.///
அப்படி துணிச்சலான ஒரு பெண்ணை எனக்குத் தெரியும்! ஹி........ஹி.......ஹி......!!!//
யாரு அந்தப் பிரெஞ்சுக்காரியா.
ஹி....ஹி...
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
நம்ம பசங்களைப் பொறுத்தவரை ஒன்பதாம் கிளாஸ் முடிய முதலே சைக்கிளில், தலைக்கு ஒரு தொப்பியையும் போட்டுக் கொண்டு பொண்ணுங்க, பாடசாலைக்கு முன்னால் அல்லது பொண்ணுங்க பள்ளிக் கூடம் விட்டுப் போற இடத்திற்கு அருகாக சென்று நூலு விடத் தொடங்கிடுவாங்க.//
ஹி.....ஹி.......ஹி...... இதால எங்களுக்கு ஒரு கெட்ட பேரும் வரும் " பிஞ்சில பழுத்ததுகள் "//
அனுபவம் தானே சகோ...
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
இதில் ஒரு முக்கியமான மேட்டர் என்னவென்றால், பொடியங்களின், பாடசாலை விட்டாற் பிறகு தான், சில ஊர்களில் பொண்ணுங்களோடை பள்ளிக் கூடம் விடும். பெரும்பாலும் பள்ளிக் கூடம் விடுற நேரம் மாடுகளைச் சாய்க்க வெளிக்கிட்டம் என்றால், மாலை ஆறு மணிக்கு ரியூசன் முடிஞ்சு, அவளுங்களை வீட்டை கொண்டு போய்ச் சேர்க்கும் வரைக்கும், றோட்டினைப் பசங்கள் குத்தகைக்கு எடுத்திடுவாங்க.///
ஒழுங்கா குளிக்கிறமோ இல்லையோ இந்த டியூட்டிய மட்டும் ஒழுங்கா செய்வம்!!//
எனக்குத் தெரிய, ஒரு சில நண்பர்கள் மழை என்றால் குளிக்க மாட்டார்கள், ஆனால் இந்த டியூட்டிக்கு மட்டும் ஓடிக் கொலோன் அடிச்சுக் கொண்டு வந்திடுவாங்க.
ஹி...ஹி...
@துஷ்யந்தனின் பக்கங்கள்
//சிலோன் பொண்ணுங்களை மடக்குவது எப்படி! //
அப்படியே பிரான்ஸ் பொண்ணுங்களை மடக்குவது எப்படின்னும்
போடுங்களேன் அண்ணா
lol//
அதுக்கு நீங்க பிரான்ஸில் இருக்கும் நம்ம ஓட்ட வடையினைத் தான் தொடர்பு கொள்ளனும்.
@யாதவன்
படைப்பின் இறுதி பகுதி நன்றாக உள்ளது . அந்தகாலத்து காதல் அனுபவம் இந்த காலத்து காதல் அரியண்டம் என்று ஒப்பு நோக்கின விதம் நீங்கள் ஒரு பழைய கட்டை என்பதை சொல்லிவிட்டது//
ஆஹா...இப்படியும் உட்கார்ந்து கண்டுப்பீங்க என்று தெரியாமப் போச்சே...எனக்கும் உங்களுக்கும் சேம் ஏஜ் என்று தான் நினைக்கிறேன்.
ஹி...ஹி...
//
அது சரி சைகுளுக்கு காத்து போன காத்தடிச்சி சைக்கிள் ஒட்டி கொடுக்கலையா , காதில தொப்பி கலந்து விழுந்தா ஓடிப்போய் எடுத்து கொடுக்கலையா அப்புறம் கீன்சுக்கு பின்னாடி இதயம் தைச்சு அத காடிடு திரியலா சங்கிலி பெண்டநில பெருசா பெயர் எழுதி அல்லது பொருந்தா முதல் எழுதேளுதி கட்டைய சங்கிலி போட்டு தெரியலையா//
ஆமாம், சகோ இந்த விடயங்களையும் எழுதியிருக்கலாம், ஆனால் பதிவு நீண்டு போகும் என்பதால் தவிர்த்து விட்டேன்,
டியூசன் கொட்டில் மேசையில் பெயர் இனிசியல் எழுதின நினைவுகளும் இருக்கு.
ஹி...ஹி...
ஞாபகமூட்டலுக்கும், கருத்துக்களுக்கும் நன்றிகள் சகோ.
@மைந்தன் சிவா
இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்..
அம்புட்டு மேட்டரையும் புட்டு புட்டு வைத்ததற்கு...//
நிறைய நாளைக்கு மனசிற்குள் வைத்தால் மறந்து போய் விடும் எனும் ஆதங்கத்தின் விளைவு தான் இப் பதிவு சகோ.
@மைந்தன் சிவா
ஒரு இது இல்லாமல் போய்விட்டது ஹிஹி
பொடியன்கள் அலையுரானுகள் எண்டதும் அவளுகள் போடுவாளுகள் பாருங்கோ சீன்...
அம்மாடி...
அப்பிடி சீன் போட்ட பல "சுமார்' மற்றும் ஓகே ரக பிகருகள் இப்ப
சப்பை பொடியன்களை கட்டிக்கொண்டு சகட்டு வாழ்க்கை வாழுதுகள்..//
இந்தக் கண் கொள்ளாக் காட்சிகளை நானும் பார்த்திருக்கிறேனே..
//இதனிலும் பார்க்க பேசாமல் அவங்களுக்கு ஓகே சொல்லி இருக்கலாம்.
நானும் இப்படி அலைஞ்ச ஒருத்தன் தான் ஹிஹி//
உஸ்...யாராவது ஒட்டுக் கேட்டு அவளின்ரை காதிலை போடப் போறாங்க. கவனம் சகோ.
@மைந்தன் சிவா
அவள் எனக்கும் நூல விட்டு தண்ட ஊர்ல இன்னொருத்தனோட சுத்தினவள் பாஸ்..
அந்த விஷயம் எனக்கு தெரியாது!!
நான் வேண்டாம் எண்டு ஒதுங்கினப்புறம் தான் தெரிய வந்தது.
கொடுமை!!!//
ஆஹா...இந்த மாதிரி மேட்டருகளிலை நம்ம ஊர் பொண்ணுங்க பலே கில்லாடி சகோ.
நான் உயர் தரம் படித்த காலப் பகுதியில், யாழ் நகரில் உள்ள டியூசனுக்குப் போவேன். அப்போது ஒருத்து, அடிக்கடி எதிர் வாங்கில்(தூரத்தில் இருந்து) எட்டி எட்டி என்னைப் பார்த்து வெட்டி முளிப்பாள், சிரிப்பாள்.
ஐந்நூறு பொடியள் படிக்கிற இடத்தில் என்னைப் பார்க்கிறாள் என்றால் சொல்லவே வேணும்.
பிறகு அவளுக்கு கிட்டப் போய் இருந்து அவளின் டீற்றெயில்ஸ் எல்லாம் எடுத்தேன். அதுக்குப் பின்னர் ஒரு நாள் பெருமாள் கோயிலுக்கு- பாட இடை வேளையின் நிமித்தம் சென்றேன்,
நான் கண்ட காட்சி, அவள் இன்னொருத்தனோடு கதைச்சுக் கொண்டு நிற்கிறாள்.
கடவுளே, ஆளை விடு என்று ஒரே ஓட்டமா ஓடி விட்டேன்.
@vanathy
செருப்புப் பிய்யும் சனியனே, உனக்கு அக்கா தங்கச்சி இல்லையோ என்று கேட்பாளுங்க,//
hhahaa...
பெண்களிடம் ஏச்சு வாங்கியதை இப்பூடி பப்ளிக்ல சொல்லப் படாது. கெதியா அம்மாவிடம் சொல்லி கல்யாணம், காட்சி ஆகிற வழியைப் பாருங்கோ.//
நாங்கள் பட்ட வேதனை உங்களுக்குச் சிரிப்பாக இருக்கு.. எங்கள் இலங்கைத் திரு நாட்டில் பெண்களுக்குப் பின்னால் சென்ற ஒவ்வோர் ஆண் மகனுக்கும் இப்படியான பல ஏச்சுக்கள் விழுந்திருக்கும், சிலருக்கு இதனை விடக் கேவலமான ஏச்சுக்கள் கிடைத்திருக்கும்.
ஹி...ஹி...
ஹி....ஹி...
அம்மா கலியாணத்துக்கு வயசிருக்கு என்று சொல்லுறா.
@விக்கி உலகம்
மாப்ள இருவழிக்கதை புரிந்தது..........அதிலும் என்னைப்போல பள்ளிப்பருவ குழந்தைக்கு பல விஷயங்கள சொல்லி இருக்கீங்க..........இனி அப்படியே நடந்துக்கிறேன் ஹிஹி!//
ஆஹா...நீங்களும் கிளம்பீட்டீங்களா.
@சி.பி.செந்தில்குமார்
ஏதோ குரு சொல்றீங்க.. சிஷ்யன் கேட்டுக்கறேன்
நீட் போஸ்ட்//
இதில் எங்களுக்கெல்லாம் குருவே நீங்க தான் சகோ.
ஹி..ஹி...
@Nesan
அருமையான பதிவு அழகான படங்கள் உண்மையில் தலைமுறை இடைவெளியா?இல்லை தறிகெட்ட நெறியா தெரியாது இன்று காதல் சொன்ன மறுநாளே முதலிரவு முடிந்து கருக்கலைப்பு வரை! சமூகத்தை நல்லா அவதானிக்கிறீங்க!
இடப்பெயர்வில் இடைமறந்த பலகதைகள் நானும் கேட்டிருக்கிறேன்!
..
நான் சின்னப்பொடியன் எனக்கெல்லாம் அனுபவம் இல்லை அண்ணா!
நீங்க ஏங்கையோ போட்டிங்க அண்ணா!(வலையில் தேடுகிறேன் பதில் வருமா?)//
இப்புடிச் சொல்லிப் போட்டு எஸ் ஆகிறீங்களே...
ஹி...ஹி...
என்னை விட உங்களுக்குத் தான் நிறைய அனுபவம் இருக்கும் போல சகோ.
@ஆர்.கே.சதீஷ்குமார்
பொண்ணுங்க சைக்காலஜி கரைச்சி குடிச்சிருக்கீங்க//
கரைச்சுக் குடிக்கவில்லை சகோ,
கலைச்சுப் பிடிச்சிருக்கிறேன் சகோ.
@ஆர்.கே.சதீஷ்குமார்
எல்லா பொண்ணுங்களும் இப்படித்தான் பாஸ்//
ஆஹா..உங்களுக்கும் அனுபவம் இருக்கு என்று தோணுதே!
@ஆர்.கே.சதீஷ்குமார்
இப்ப இருக்கிற பொண்ணுங்க காதலன் தொடுவதுதான் பிடிக்கிறது//
அஃதே.........அஃதே.........அஃதே....
@shanmugavel
சகோ எப்படி இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க!//
சும்மா...உட்கார்ந்து தான் யோசிக்கிறேன் சகோ.
@இக்பால் செல்வன்
சகோ இலங்கைப் பெண்களிடம் சில இந்தியப் பெண்கள் சிக்கி சின்னாப் பின்னமாகி இருக்கின்றார்கள் என்பதால் இலங்கைப் பெண்களிடம் வைத்துக் கொண்டதில்லை. ஆனால் அனைவரும் அப்படி இல்லை என்பதை நான் சொல்லிக் கொள்கின்றேன். அவர்களில் மூன்று ரகங்கள் இருப்பதை அறிவேன்.//
மூன்று ரகமா. அப்போ நீங்கள் பெரிய ஆராய்ச்சி தான் பண்ணியிருக்கிறீங்க.
@இக்பால் செல்வன்
முதல் ரகம் - வெளிநாட்டு பாவை எல்லாம் போட்டு பவுடர் எல்லாம் போட்டுகின்னு மாலை நேரத்தில் மார்க்கெட் வருவார்கள். அறுபது லட்சம் சென்னை வாசிகளில் இலங்கையர்கள் மட்டும் தனியாகத் தெரிவார்கள். ஐஎஸ்டி பூத்களில் போன் பேசுவார்கள். முகாமில் இருந்த அனுபவம் எல்லாம் இருக்காது. வெளிநாட்டு உறவினர்கள் வருவார்கள். நன்றாக பந்தாவாக அலைவார்கள். உள்ளூர் வாசிகளோடு இணைய மாட்டார்கள். எங்கட சொந்தம் பிரான்சு, கணடா அங்கே இங்கே னு பிலிம் காட்டுவாங்க... இந்தியப் பசங்களோடு பேருக்குத் தான் பழகுவாங்க.. வெளிநாட்டு மாப்பிள்ளைகள் ரெடியாக இருக்கும் என்று நினைப்பில் மிதப்பார்கள்.//
ஆஹா...ஊரில் ஒரு தொகுதி மக்கள் குண்டடிப்பட்டு சாகும் போது, இவர்கள் பந்தாவா காட்டுகிறார்கள்.
கலி காலம்.
வெளி நாட்டு மாப்பிளை ரெடி என்று பிலிம் வேறா..
ஐயோ... தாங்க முடியலையே.
@இக்பால் செல்வன்
இரண்டாவது இரகம் - வெளியில் இந்தியர்கள் போலவே பழகி வருவார்கள், பேசும் போது இலங்கை வாடை அடிக்கும். வீட்டில் இலங்கையராகவே வாழ்வார்கள் - இலங்கையில் இருந்து வெளிநாடுகளில் இருந்தோ சொந்தப் பந்தம் வந்துக் கொண்டே இருக்கும். கோயிலா கோயிலா சுத்துவாங்க. அவங்க அண்ணன்மார் பலர் ஸ்கூலுக்குப் போக மாட்டாங்க.. ஹீரோக் கணக்கா ஊர் சுற்றுவாங்க.. இந்திய ஆண்கள் யாராவது பின்னாடி சுத்தினா அண்ணங்காரு சண்டைக்கு வருவாரு.............. இலங்கைப் பாதி இந்தியா பாதி என்ற ரேஞ்சில் இருப்போர்.//
ஊடு விட்டு, ஊர் வந்து சண்டித்தனமா,
ரெண்டு போட்டு அடக்க வேண்டியது தானே.
@இக்பால் செல்வன்
மூன்றாவது இரகம் பாவப்பட்ட புள்ளைங்க.. முகாமிலோ வெளியிலோ கஷ்டப்பட்டு படிப்பாங்க.. இந்தியா பெண்களைப் போலவே இருப்பாங்க.. பார்ட் டைம் வேலை எல்லாம் கூட செய்வாங்க.. நல்ல ரேங்க் வாங்குவாங்க. வெளிநாட்டுல சொந்த இருக்காது, அல்லது இருந்தாலும் உதவி இருக்காது .... நல்லாப் பழகுவாங்க.. ஆனால் கட்டுப்பாடா இருப்பாங்க... எதாவது சாதிக்கணும்னு சொல்லுவாங்க.......//
நல்லாத் தான் நம்மாளுங்களைப் புரிஞ்சு வைச்சிருக்கிறீங்க.
நீங்க மகா கில்லாடியாக இருப்பீங்க என்று நினைக்கிறேன்.
@இக்பால் செல்வன்
எனக்குத் தெரிந்த இந்தியாவில் இருக்கும் இலங்கைப் பெண்கள் இந்த மூன்று ரகம் தான். முதல் ரகத்தில் இருப்போரை இங்குள்ளோர் பலருக்குப் பிடிப்பதில்லை என்பதே உண்மை.
மற்றப்படி நீங்க சொன்னமாதிரி தான் இந்தியப் பெண்களும் இருப்பாங்க.. அதே மாதிரித் தான் இங்குள்ளப் பையன்களும் அலைவாங்க பாஸ் .... ஆனால் பலரை பெண்கள் அலைய வைத்து விட்டு டாடா காட்டிவிடுவாங்க.. ஆனால் இங்குள்ள ஆண்கள் அப்பிராணி - ஒரு பெண் சிரிச்சாலே அவளை சாமிக் கணக்கா பீல் பண்ணி அவங்க இவங்கனு மரியாதைப் பேசுவாங்க. பிகருக்காக பிரண்ட்சையும் கட் பண்ணத் தயங்கும் கர்ணர்கள் ..........
ஒருவேளை பிகரு டாட்டா காடினாலும் தாடி வளர்த்து பீலிங்கோட அடுத்த பிகர் மடங்காதனு அலைவாங்க...//
சகோ, எல்லாத் துறைகளிலும் ஆராய்ச்சி செய்திருக்கிறீர்கள் என்றே நினைக்கிறேன்.
வாழ்த்துக்கள் சகோ.
@ஆதவா
நல்லாத்தான் ஆராய்ச்சி பண்ணியிருக்கீங்க...
செருப்புப் பிய்யும் சனியனே, உனக்கு அக்கா தங்கச்சி இல்லையோ என்று கேட்பாளுங்க,
இன்னும் சில பொண்ணுங்க, ‘நீயும் உன்ரை மூஞ்சியும், உனக்கு என் பின்னாலை வர, உனக்கு என்ன தகுதி இருக்கடா நாயே?////
நல்ல அனுபவம்ங்க உங்களுக்கு.... (அவ்வ்)//
யாருக்கு எனக்கு அனுபவமா...
ஹி...ஹி...
@ஆதவா
இங்கயும் அப்படித்தான்... என் ஆளு, உன் ஆளு..... அதுசரி... அதென்ன ஆள்??? பேரைக் கண்டுபிடிச்சிருக்கான் பாருங்க தமிழன்!! ஆனா சரக்குன்னுல்லாம் சொல்லமாட்டாங்க.... உலகத்தில தமிழ்ல சரக்கு என்ற சொல்லுக்கு ஒரே ஒரு அர்த்தம் தான்..... அது ”சரக்கு” தான்...//
நம்ம ஊரிலை சரக்கு என்றால் இரண்டு அர்த்தம் சகோ.
சரக்கு- வாசனைத் திரவியங்களை உள்ளடக்கிய தொகுதி
சரக்கு- பிகரு.
ஹி...ஹி...
@கந்தசாமி.
////சிலோன் பொண்ணுங்களை மடக்குவது எப்படி!
/// அப்பிடின்னு ஒரு கிளாஸ் எடுத்து ஆளுக்கு நூறு ரூபாய் கட்டணமும் வாங்கினா பசங்களும் சந்தோஷ படுவாங்க அப்பிடியே உங்கட பாக்கட்டும் நிறஞ்சுடுமே..)
ஆஹா.. இதுவும் நல்லாத் தானே இருக்கு சகோ.
ட்றை பண்ணிட வேண்டியது தான், நன்றிகள் சகோ.
@கந்தசாமி.
///இது என்னோடு, பல வருடங்களுக்கு முன்பு, கம்பஸில் படித்த, நண்பி ஒராள் தந்த ரகசியத் தகவல்
/// அ நம்பிட்டன் அவ உங்கட நம்பி சிசி நண்பி தான் எண்டு//
நண்பி தான் சகோ...
ஹி...ஹி...
@கந்தசாமி.
//செருப்புப் பிய்யும் சனியனே,
// ஹிஹிஹி இந்த வசனத்தாலே ரொம்ப நொந்து முகத்தில முடி எல்லாம் வச்சு அலையிறாங்க பலர் ..)//
இந்தப் பதிவைப் படித்த பின்னர் தான் தாங்களும் போட்டோவை மாற்றியிருக்கிறீர்கள் போல இருக்கே சகோ.
ஹி..ஹி...
@கந்தசாமி.
///முத்தம் என்றாலும் சரி, தொடுகை என்றாலும் சரி- பல வருடங்களுக்கு முன்பு கலியாணத்திற்கு முன்னர் கிடைக்காது என்ற நிலமை தான் இருந்தது,
// ஆமா ஆமா முன்னர் நம் சமூகம் மிகுந்த கண்ணியமா இருந்தது என்றதுக்கு இது ஒரு உதாரணம். இப்ப எல்லாம் காதல் என்ற பேர்ல காமம் கொண்டு பிறந்த குழந்தையைஅடுத்த நிமிடமே கடதாசில சுற்றி வீசினம் ...//
இது தானே இப்போது யாழில் வழமையான விடயம் ஆகி விட்டது.
@கந்தசாமி.
மொத்தத்திலே இந்த இடுக பல ஈழத்து பசங்களுக்கு வழிகாட்டியா அமையும் என்று கூறி இத்தோடு விடை பெறுகிறேன்...நன்றி வணக்கம்//
ஆஹா..இவ்வளோ யூஸ் புல்லா இருக்கும் என்று சொல்லிக் கொண்டு, முதலாவதாக ரோட்டுக்கு இறங்கும் ஆளே நீங்களாகத் தான் இருப்பீங்க. ஆனால் அடி வாங்கினால் நான் பொறுப்பாளி அல்ல.
@MANO நாஞ்சில் மனோ
ஹே ஹே ஹே ஹே ஹே நீங்க சொன்னா சரிதான்....//
ஆஹா... என்ன சொல்லுறேன் சகோ.
@MANO நாஞ்சில் மனோ
என்னய்யா தலைப்பே சும்மா அதிருது...//
ச்ச்...சும்மா ஒரு தூக்கலாக இருக்கட்டுமே என்று தான்.
@இராஜராஜேஸ்வரி
செருப்படி வாங்கினால் அதற்கு ஐடியா தந்த ஆசாமியாகி நான் பொறுப்பல்ல.!!???????//
ஆஹா...ஆஹா..
நீங்களும் களத்தில் இறங்கப் போகிறீர்களா.
@! ♥ பனித்துளி சங்கர் ♥ !
இந்தப் பதிவை வாசிக்கும் பொழுது நீங்க பெண்கள் பற்றி அதிகமாக ஆராய்ச்சி செய்திருக்கிங்க என்பது திட்டவட்டமாகத் தெரிகிறது .//
யோ, என்ன நடக்குது இங்க,
நான் ஆராய்ச்சி எல்லாம் பண்ணலிங்க, நம்ம ஊர் பசங்களோடை அனுபவத்தைத் தான் பதிவில் எழுதியுள்ளேன்.
//புகைப்படங்கள் எல்லாம் நீங்கள் எடுத்ததா !?//
அது சினிமா ஸ்டில் சகோ...
என்னைப் போயி வம்பிலை மாட்டுற ப்ளானா.
//கவிதை சொல்லும் குட்டைப் பாவாடைகள் அனைத்தும் கலக்கல் . பதிவை ரசிக்கும் வகையில் எதார்த்த எழுத்து நடை சிறப்பு .//
குட்டைப் பாவாடைக்கு, இப்படி ஒரு அணியா...
இப்படி ஒரு வர்ணனையா..முடியலை.
அவ்.......
நன்றிகள் சகோ.
கவிதை வீதி சௌந்தர் said...
எங்க.. எனக்கு தமிழே வரவில்லை...
பாண்ட் மிஸ்ங் என்று நினைக்கிறேன்..//
தமிழில் தானே அடிக்கிறீங்க...
ஆஹா....
சிலோனுக்கு கிளம்பிட்டீங்க என்று நினைக்கிறேன்,
@ராஜ நடராஜன்
//துண்டு- உன்ரை துண்டு, என்ரை துண்டு இப்படியும் சொல்லுவார்கள்.//
நசர்ஜி!சீக்கிரம் ஓடியாங்க!துண்டு மாட்டிகிச்சு:)//
பொண்ணுங்களைப் பார்த்து, நீங்க சொல்லி,
அடிவாங்கினால் அதற்கு சைட் அடிப்போர் சங்கம் பொறுப்பேற்காது சகோ.
@ராஜ நடராஜன்
/சிலோனுக்கு வந்து, யாரச்சும் சைட் அடிக்க விரும்பினால், //
அங்கேதான் வரணுமாக்கும்.நான் இங்கேயே வாங்கி கட்டிக்கொண்டேன்:)//
என்ன சகோ நல்லாப் பின்னிட்டாங்களா...
ஹி...ஹி...
@இரவு வானம்
இங்கயும் அதே வேலையதான் பண்ணுவாங்க பாஸ், நோ சேஞ்ச் :-)//
அட நீங்க கூட ட்ரை பண்ணியிருக்கீங்களா சகோ.
@Chitra
இளமை துள்ளலுடன் பதிவு - கலகலப்பாக வந்து இருக்குது.//
நன்றிகள் சகோ,
@FOOD
வசந்த கால வாச மலர்கள்.வாழ்த்துக்கள்.//
நன்றிகள் சகோ,
@FOOD
இளமை நினைவுகளை இனிக்க இனிக்க தந்த நண்பருக்கு நல்வாழ்த்துக்கள்.//
அப்போ நீங்க எங்களை விடப் பெரிய கில்லாடியாக இருப்பீங்க என்று நினைக்கிறேன்.
ஹி...ஹி..
@akulan
இது அப்பட்டமான உண்மை..........
(எல்லா புதிய தலைமுறையினரும் இப்படி இல்லை) நான் நல்ல பையன் .....ஆஆமா//
அதை உங்க ஏரியாப் பொண்ணுங்க தான் சொல்லனும் சகோ.’
@செங்கோவி
சகோ, கலக்கிப்புட்டீங்க...அருமை..அருமை!//
நன்றிகள் சகோ.
@இக்பால் செல்வன்
என்னது பொண்ணுகள சரக்கு என்று சொல்வீர்களா? நம்ம ஊரிலே சரக்கு என்றாலே கிராக்கி - கிராக்கி என்றால் கில்மா - கில்மா என்றால் சோலு .. போங்க அது வேறு மாதிரி பொம்பளைங்க தான் சரக்குனு சொல்வாங்க.... //
நம்ம ஊரில் அவங்களை அயிட்டம், வீலு, பம் என்று தான் சொல்லுவாங்க.
//அது மட்டுமின்றி இங்கே திட்டுகின்ற பெண்ணிடம் ஜிப்பை கழட்டுவோம், அது இதுனு பேசினா மாப்ளே மாமியார் வீட்டில கஞ்சி ஊத்திடுவானுங்க ...... சோ சைட் சைட் சைட்.. சிலர் சைட் கடலை பிக்கெப்னு இருப்பாங்க........ கடைசில் எவக்கிட்டாயவது மாட்டி சம்சாய் ஆகிடுவானுங்க ........... பாஸ்//
நம்ம ஊர் போலிஸ் அந்தக் காலத்திலை இதையெல்லாம் கண்டுக்க மாட்டாங்க பாஸ், அத்தோடு பொண்ணுங்க மானத்தைக் கருத்திற் கொண்டு மாமியார் வீட்டுக்கெல்லாம் போக மாட்டாங்க, போனால் அவங்க எதிர்காலம் கேவலமாகிடும் என்று பயம்.
அப்போ, நாம கொஞ்சம் அதிஸ்டக்காரப் பசங்க. இல்லையா சகோ.
@எஸ் சக்திவேல்
எல்லாம் சரி. எழுத்து நடையைபார்த்தால், தமிழ் நாட்டில் இருந்து வந்த ஆள் எழுதினமாதிரி இருக்கு :-)//
இன்று தான் என் பதிவினை நீங்கள் முதன் முறையாகப் படிக்கிறீர்கள் என்று நினைக்கிறேன் சகோ.
வாசகர்களில் பெரும்பான்மையானவர்கள் எங்கள் தாய்த் தேச உறவுகளே,
இலங்கைத் தமிழில் எழுதினால், அவர்களுக்கு புரிந்து கொள்வதில் சிரமம் ஏற்படுகிறது. ஆகவே தான் எல்லா நண்பர்களையும் ஒன்றாகத் திருப்திப்படுத்தும் நோக்கில்...
ஒரு மிக்ஸிங் தமிழில் எழுதுகிறேன் சகோ.
@Mathuran
நிரூபனுக்கு கல்யான களை வந்திடிச்சு!
தொடர்ந்து பெண்கள் பற்றியே போடுறீங்களே(பதிவ சொன்னன்)//
அடடா...இப்படியும் சொல்லலாமா...
நமக்கெல்லாம் கல்யாணக் களை வர நாட் செல்லும் சகோ.
@Mathuran
//’ஐஞ்சு ரூபா வடையை வைச்சிருக்கிற உனக்கே இவ்வளவு தைரியம் என்றால்(தெனாவெட்டு)
பத்து ரூபா றோலை வைச்சிருக்கிற எனக்கு எப்புடித் தெம்பிருக்கும்,//
பாஸ் என்ன மாதிரி சின்னப்பசங்களுக்கு விளங்கல்ல பாஸ்... கொஞ்ச விளக்கம் தாங்க ( கொஞ்ச= சிறிய,)//
சகோ...இதனை ஒரே ஒரு தடவை நீங்க சைட் அடிக்கப் போற பிகருகிட்டச் சொல்லிப் பாருங்க, அவளோடை ரிஜாக்சனில் நிறைய விளக்கங்கள் கிடைக்கும்,
எத்தனையோ வசனங்கள் எழுதியிருக்கிறேன், ஆனால் அவருக்கு இந்த வசனத்திற்கு மட்டும் தான் விளக்கம் தேவை என்று பின்னூட்டத்தில் கோடிட்டுக் காட்டுறார் நம்ம சகோ.
கலி காலம்!
ஹி....ஹி..
@ரஹீம் கஸாலி
kalakkal//
நன்றிகள் சகோ.
@சசிகுமார்
அனைவருக்கும் அவசியம் தேவையான பதிவு, இதுல எந்த உள்குத்தும் இல்ல//
அப்படீன்னா, டிக்கற் புக் பண்ணி சிலோனுக்கு வரப் போறீங்க.
வருக வருக!
@hajasreen
குட்டி துண்டு ஆளு, பிகரு , சரக்கு
இப்ப புதுசா சயிஸ் எண்டும் சொல்றாங்க//
சயிஸ் என்பது கொழும்புப் பகுதி வீதிக் காவலர்கள், சமூக சேவையாளர்கள் பாவிக்கும் சொல் சகோ, இன்னமும் யாழிற்கு வரவில்லை.
@Yoga.s.FR
கோயிலுக்கு கூட்டிக் கொண்டு போய் திருப்பி வீட்டடிக்குக் கொண்டு வந்து விட்டிட்டுப் போறத விட்டிட்டியள்?கோயில்ல திருநீறு,சந்தனம்,குங்குமம், பூ குடுக்குறதயும் மறந்திட்டியள்!//
எல்லாவற்றையும் எழுதினால் பதிவு நீண்டு விடும் என்பதால் சுருக்கி விட்டேன், இவற்றைப் பிறிதோர் பதிவில் தர முயற்சி செய்கிறேன்,
நன்றிகள் சகோ,
@ஹேமா
எங்கட அம்மா அப்பா காலத்தில பிடிச்ச ஆக்களின்ர வீட்டு தட்டிப் படலை வாசலிலதானாம் சைக்கிள் செயின் கழன்று போகும் !//
ஆஹா...
பொண்ணுங்களுக்குப் பின்னால் திரியும் நபர்களைக் கண்டால். ஒரு சில ஊர்ப் பெரியவர்கள், என்ன பண்ணுவாங்க என்றால், இப்படி சேஸிங் பண்ணுற பசங்க்ளைப் புடிச்சு, அவங்களோடை சைக்கிள் வால் கட்டையினைக் கழற்றி விடுவார்கள். பிறகு காற்றுப் போன சைக்கிளுடன் உருட்டிக் கொண்டு நடக்க வேண்டியது தான்.
நன்றய்தான் அலசி அரய்ந்துள்ளீர் !!!!!!!!!! நன்றி உங்களுக்கு இருந்தும் இதில் உங்கள் அனுபவம் கூடுதலாக உள்ளதாக தெரிகிறது. இதில் வரும் " செருப்புப் பிய்யும் சனியனே, உனக்கு அக்கா தங்கச்சி இல்லையோ என்று கேட்பாளுங்க,
இன்னும் சில பொண்ணுங்க, ‘நீயும் உன்ரை மூஞ்சியும், உனக்கு என் பின்னாலை வர, உனக்கு என்ன தகுதி இருக்கடா நாயே?//// என்பதுடன் ......;;;; உன்னுடைய மூஞ்சிய கண்ணாடியில பாரு அப்போது விளங்கும் அது குரங்கு முகம் என்று ?////////" இப்படி விளாசித்தள்ளும் பெண் பாவங்களும் இருக்கின்றனர் . இது எனக்கு நெருங்கிய ஒருவர் சொன்னது . நன்றி
ஆண்கள் குசும்பிலும் ஒரு ரசனை தான்! வேறு என்ன சொல்ல?
Post a Comment