வாரத்தில் இரு தரம் குளித்தும்- உன்னில்
கெட்ட வாடையேன் வரவில்லை
என் கண்ணே,
காரணம் சொல்லடி என்றேன்;
’பாரின்’ பெஃர்பியூம் பாக்கட்டில்
இருப்பதைப் பார்த்த பின்
நீரும் கேட்பது தகுமோ என்றாள்!
*பாரின் பெஃர்பியூம்- வெளி நாட்டு வாசனை திரவியம்.
வேற்றுமையில்லா உலகம்
ஆச்சி வீட்டு நாய்க்கு
அன்று நாங்கள் வைத்த பெயர் ரொம்மி-
பேச்சு மொழி மாறி, இப்போ இங்கிபீசில்
எம் பிள்ளைகட்கு வைக்கும் பெயர் சொம்மி!
என்னை(த்) தவிக்க விட்டுச் சென்று விட்டாள்!
முத்துமாரி அம்மன் கோவில் பின்னாலே
முதன் முதலில் பார்த்த குட்டி ஊரு ’துன்னாலே’
பேசிப் பேசி காதலித்தோம் இரு கண்ணாலே,
போன மாசம், அவள் ஓடிப் போனாள் கனடாவே!
ஐயையோ பரிதாபம்!
அடுத்த வீட்டு சரசு-ஆனாலும்
அவள் கொஞ்சம் பழசு
அரை மணிக்காய் கேட்கும் ரேட் அதிகம்
ஆண்களின் ஆசையினால் அழிகிறது
அவள் தேகம்!
டிஸ்கி: நேற்றைய தினம் முதல், (04.05.2011) பிரான்ஸில் இருக்கும் என்னுடைய நண்பன் டி.சாய் அவர்களின் உதவியினால் என்னுடைய http://tamilnattu.blogspot.com/ வலைப் பதிவானது, http://www.thamilnattu.com/ எனும் இணையத் தளமாக மாற்றப்பட்டிருக்கிறது என்பதனை மகிழ்ச்சியுடன் உறவுகள் அனைவருக்கும் அறியத்தருகிறேன். ப்ளாக்கரில் என் தளம் லோட் ஆக அதிக நேரம் எடுக்கிறது எனும் கோரிக்கையினை நிவர்த்தி செய்யும் நோக்கில் இந்த மாற்றம் அமையும் என நம்புகிறேன். இப்போது என் தளம் உங்கள் கணினிகளில் எப்படித் தெரிகிறது என்பது தொடர்பான கருத்துக்களை வரவேற்கிறேன்.
தொடர்ந்தும் உங்கள் அனைவரின் பேராதரவோடு, என் பயணம் தொடரும்!
தொடர்ந்தும் உங்கள் அனைவரின் பேராதரவோடு, என் பயணம் தொடரும்!
|
68 Comments:
.com மாறியதற்கு நண்பர்களுக்கு பார்ட்டி இல்லையா
உங்க கவிதை ஸ்டைல் பாமர தமிழில் ரசிக்கும்படி இருக்கிறது
.com மாற்றுவதால் என்னென்ன லாபம்...?நண்பரே
haay சீரியஸ் ரைட்டரான உங்கள் எழுத்தில் காமெடியும் இருப்பது வரவேற்கத்தக்கது
ரைட்டு
இப்போது வேகமாக இருக்கிறது தங்களின் தளம்.
பாரின்’ பெஃர்பியூம் பாக்கட்டில்
இருப்பதைப் பார்த்த பின்
நீரும் கேட்பது தகுமோ என்றாள்!//// நல்ல நகைச்சுவை இந்த வரிகளில்..
பாரின்’ பெஃர்பியூம் பாக்கட்டில்
இருப்பதைப் பார்த்த பின்
நீரும் கேட்பது தகுமோ என்றாள்!//// நல்ல நகைச்சுவை இந்த வரிகளில்..
இப்போ இங்கிபீசில்
எம் பிள்ளைகட்கு வைக்கும் பெயர் சொம்மி!///////////// இன்றைய அவல நிலை இவ்வரிகளில்..
படத்தில் இருக்கும் பெண்களை விட நாய் அதிகமாவே உடை அணிந்து உள்ளது.
"வேற்றுமையில்லா உலகம்" அருமை.
.com க்கு வாழ்த்துகள்.
உங்கள் கவிதை இன்றைய ஈழத்து மக்களின் அகதி வாழ்க்கையினை, யதார்த்தமாய் சுட்டிக்காட்டுகிறது.......!!!
ஐயோ ஐயோ ......... ஏதோ பழக்கதோசத்தில படிக்காமல் எழுதிவிட்டேன்: ( ஹி.........ஹி.......ஹி.......) இருங்க படிச்சிட்டு வர்றேன்!!
வாரத்தில் இரு தரம் குளித்தும்- உன்னில்
கெட்ட வாடையேன் வரவில்லை
என் கண்ணே,
காரணம் சொல்லடி என்றேன்;
’பாரின்’ பெஃர்பியூம் பாக்கட்டில்
இருப்பதைப் பார்த்த பின்
நீரும் கேட்பது தகுமோ என்றாள்!//
ஹா.....ஹா.... அதானே அவள் கேட்டதில் என்ன தப்பு இருக்கிறது!
ஆச்சி வீட்டு நாய்க்கு
அன்று நாங்கள் வைத்த பெயர் ரொம்மி-
பேச்சு மொழி மாறி, இப்போ இங்கிபீசில்
எம் பிள்ளைகட்கு வைக்கும் பெயர் சொம்மி!///
என்ன செய்ய நல்ல நல்ல தமிழ் பெயர்களை எம் குழந்தைகளுக்கு சூட்டிய காலம் மாறிவிட்டது! ம்.............!!
முத்துமாரி அம்மன் கோவில் பின்னாலே
முதன் முதலில் பார்த்த குட்டி ஊரு ’துன்னாலே’
பேசிப் பேசி காதலித்தோம் இரு கண்ணாலே,
போன மாசம், அவள் ஓடிப் போனாள் கனடாவே!//
அடப்பாவி உண்மையாகவே போன மாசம் எனக்கு தெரிஞ்ச ஒரு பெண் யாழ்ப்பாணத்தில இருந்து கனடா போனவா! இதுல ஏதாவது உள்குத்து இருக்கா?
அடுத்த வீட்டு சரசு-ஆனாலும்
அவள் கொஞ்சம் பழசு
அரை மணிக்காய் கேட்கும் ரேட் அதிகம்
ஆண்களின் ஆசையினால் அழிகிறது
அவள் தேகம்! //
யோவ் சரியா சொல்லுய்யா! அழியுதா? வளருதா?
oi sako ennoda dashboard la unnoda post display agalayeee ean?....konjam sollen
முன்ரைவிட இப்போது வலைப்பதிவு விரைவில் தோன்றுகிறது!
"துன்னாலையில் தேடாமல் திக்கம் போனால் துக்கத்தை கொண்டாட சிறப்புப் பாணம் கிடைக்கும் நண்பா!
இப்போதெல்லாம் பெயர் தட்டுப்பாடு தமிழில் வைத்தால் வரிவிலக்கு கிடைக்குமா!
எத்தனை நாளுக்குத்தான் சம்போ வாசனையில் காலம்கழிப்பது பாரின் செண்டு அத்தரா சொல்லுங்கள்!
//அடுத்த வீட்டு சரசு-ஆனாலும்
அவள் கொஞ்சம் பழசு
அரை மணிக்காய் கேட்கும் ரேட் அதிகம்
ஆண்களின் ஆசையினால் அழிகிறது
அவள் தேகம்! ///
ஐயய்யோ வேதனை...
//நேற்றைய தினம் முதல், (04.05.2011) பிரான்ஸில் இருக்கும் என்னுடைய நண்பன் டி.சாய் அவர்களின் உதவியினால் என்னுடைய http://tamilnattu.blogspot.com/ வலைப் பதிவானது, http://www.thamilnattu.com/ எனும் இணையத் தளமாக மாற்றப்பட்டிருக்கிறது என்பதனை மகிழ்ச்சியுடன் உறவுகள் அனைவருக்கும் அறியத்தருகிறேன்///
வாழ்த்துகள் வாழ்த்துகள்....
//இப்போது என் தளம் உங்கள் கணினிகளில் எப்படித் தெரிகிறது என்பது தொடர்பான கருத்துக்களை வரவேற்கிறேன்.///
அருமையா இருக்குய்யா....
/// இப்போது என் தளம் உங்கள் கணினிகளில் எப்படித் தெரிகிறது என்பது தொடர்பான கருத்துக்களை வரவேற்கிறேன்.///நல்ல லைட்டாத் தெரியுது!உதவி பண்ணிய புண்ணியவான் வாழ்க!-பாரிஸ் யோகா-
சகோ நான் முன் சொன்ன பிரச்சனை இப்போது இல்லை...டாஷ்போர்டில் உங்கள் பதிவுகள் தெரிகின்றன...
பாரின்’ பெஃர்பியூம் பெயரையும் கேட்டிருக்கலாமே?
@ஆர்.கே.சதீஷ்குமார்
.com மாறியதற்கு நண்பர்களுக்கு பார்ட்டி இல்லையா//
இதுக்கெல்லாம் பார்ட்டியா...
@ஆர்.கே.சதீஷ்குமார்
உங்க கவிதை ஸ்டைல் பாமர தமிழில் ரசிக்கும்படி இருக்கிறது//
நன்றிகள் சகோ.
@ஆர்.கே.சதீஷ்குமார்
.com மாற்றுவதால் என்னென்ன லாபம்...?நண்பரே//
எனக்காக ஒரு தனி இணையத் தளத்தை, கொஞ்சம் Privacy அதிகமாக வைத்திருக்கலாம், அத்தோடு, கொஞ்சம் வேகமாகவும் இருக்கும் என்று மாற்றிய நண்பன் சொன்னான்.
@சி.பி.செந்தில்குமார்
haay சீரியஸ் ரைட்டரான உங்கள் எழுத்தில் காமெடியும் இருப்பது வரவேற்கத்தக்கது//
ஓவர் நக்கலு, நம்ம எழுத்தில் சீரியஸ்ஸே இருக்காது சகோ. எல்லாமே காமெடி தான்.
@விக்கி உலகம்
ரைட்டு//
நன்றிகள் சகோ.
@!* வேடந்தாங்கல் - கருன் *!
இப்போது வேகமாக இருக்கிறது தங்களின் தளம்.//
நிஜமாவா, நன்றிகள் சகோ.
@!* வேடந்தாங்கல் - கருன் *!
பாரின்’ பெஃர்பியூம் பாக்கட்டில்
இருப்பதைப் பார்த்த பின்
நீரும் கேட்பது தகுமோ என்றாள்!//// நல்ல நகைச்சுவை இந்த வரிகளில்..//
நிஜமாகவே நல்ல நகைச்சுவையா, நன்றிகள் சகோ.
@!* வேடந்தாங்கல் - கருன் *!
எம் பிள்ளைகட்கு வைக்கும் பெயர் சொம்மி!///////////// இன்றைய அவல நிலை இவ்வரிகளில்.//
இன்றைய கலாச்சாரமே இது தான் என்று பலபேர் விளக்கம் கொடுக்கிறார்கள். நீங்க வேறு...
@பலே பிரபு
படத்தில் இருக்கும் பெண்களை விட நாய் அதிகமாவே உடை அணிந்து உள்ளது.
"வேற்றுமையில்லா உலகம்" அருமை.
.com க்கு வாழ்த்துகள்//
இதுக்குள்ளே, இப்படியும் ஒரு ரகசியமா..
அவ்...அவ்..
@பலே பிரபு
படத்தில் இருக்கும் பெண்களை விட நாய் அதிகமாவே உடை அணிந்து உள்ளது.
"வேற்றுமையில்லா உலகம்" அருமை.
.com க்கு வாழ்த்துகள்//
இதுக்குள்ளே, இப்படியும் ஒரு ரகசியமா..
அவ்...அவ்..
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
உங்கள் கவிதை இன்றைய ஈழத்து மக்களின் அகதி வாழ்க்கையினை, யதார்த்தமாய் சுட்டிக்காட்டுகிறது.......!!!
ஐயோ ஐயோ ......... ஏதோ பழக்கதோசத்தில படிக்காமல் எழுதிவிட்டேன்: ( ஹி.........ஹி.......ஹி.......) இருங்க படிச்சிட்டு வர்றேன்!//
ஏன் திருந்தி இருக்கிற நிரூபனையும், தீக்குளிக்கப் பண்ணுற ஐடியாவே,
சனியனைப் பிடிச்சு சட்டையுக்கை விடுறதென்றும்,
வேலிக்குள் போற ஓணாணைப் புடிச்சு வேட்டியுக்கை வுடுறதென்றும் ப்ளான் பண்ணித் தான் அலையூறீங்க..
பிச்சுப் புடுவேன், பிச்சு.
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
ஹா.....ஹா.... அதானே அவள் கேட்டதில் என்ன தப்பு இருக்கிறது!//
இதென்ன கவிதையினைத் தவறாகப் பொருள் விளங்கி எழுதுவது போல இருக்கே.
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
என்ன செய்ய நல்ல நல்ல தமிழ் பெயர்களை எம் குழந்தைகளுக்கு சூட்டிய காலம் மாறிவிட்டது! ம்.............!!//
இப்போதைய பஷன் இது தானே..
ஹி..ஹி..
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
அடப்பாவி உண்மையாகவே போன மாசம் எனக்கு தெரிஞ்ச ஒரு பெண் யாழ்ப்பாணத்தில இருந்து கனடா போனவா! இதுல ஏதாவது உள்குத்து இருக்கா?//
ஒரு மார்க்கமாகத் தான் கெளம்பியிருக்கீங்க..
கோர்த்து விட்டு கூத்துப் பார்க்க வேண்டும் என்று ஆசை.
இந்தக் கவிதைக்கும், வேறு நபர்களுக்கும் சம்பந்தமே இல்லை, போதுமா.
அவ்..............
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
யோவ் சரியா சொல்லுய்யா! அழியுதா? வளருதா?//
தேகம் அழியுது, குழந்தை வளருது. இப்ப சரியா.
@FOOD
உங்கள் கவிதை போல், தளமும் வேகமாகவே இருக்கிறது. வாழ்த்துக்கள்.//
நன்றிகள் சகோ.
@FOOD
எப்படில்லாம் சிந்திக்கிறாங்கய்யா!//
நெசமாவே சிந்திக்கல்லை சகோ, இது யதார்த்தம் சகோ.
@ரேவா
oi sako ennoda dashboard la unnoda post display agalayeee ean?....konjam sollen//
அது என்னான்ன, ப்ளாக்கில் இருந்து டாட்காம் இற்கு மாறினதால், பாலோவர்ஸ் இனை, என் பழைய தள முகவரியில் இருந்து மாற்ற முடியாமல் திண்டாடினேன், பிறகு கூகிள் ஆத்தா கை கொடுத்திட்டா.
இப்போ சக்ஸஸ்.
@Nesan
முன்ரைவிட இப்போது வலைப்பதிவு விரைவில் தோன்றுகிறது!
"துன்னாலையில் தேடாமல் திக்கம் போனால் துக்கத்தை கொண்டாட சிறப்புப் பாணம் கிடைக்கும் நண்பா!//
ஆஹா..திக்கம் வடிசாலையில் சகோ பிளாவில் அரை அடிச்சிருக்கிறார் போல..
//இப்போதெல்லாம் பெயர் தட்டுப்பாடு தமிழில் வைத்தால் வரிவிலக்கு கிடைக்குமா!//
அது எனக்குத் தெரியலை சகோ, ஆனால் இது தான் இப்போதைய பாஷன் ஆச்சே.
//எத்தனை நாளுக்குத்தான் சம்போ வாசனையில் காலம்கழிப்பது பாரின் செண்டு அத்தரா சொல்லுங்கள்!//
அவ்.....ஒரு பாரிஸ் செண்டிலை வாங்கி அனுப்புங்க சகோ. அடிச்சு பார்த்தாப் பிறகு தான் சொல்லலாம்,
நன்றிகள் சகோ.
@MANO நாஞ்சில் மனோ
ஐயய்யோ வேதனை...//
நிஜமாகவா சகோ.
@MANO நாஞ்சில் மனோ
வாழ்த்துகள் வாழ்த்துகள்....//
நன்றிகள் சகோ.
@MANO நாஞ்சில் மனோ
அருமையா இருக்குய்யா....//
நன்றிகள் சகோ.
எல்லாம் உங்கள் அனைவரின் ஆசிர்வாதம் தான்.
@Yoga.s.FR
/// இப்போது என் தளம் உங்கள் கணினிகளில் எப்படித் தெரிகிறது என்பது தொடர்பான கருத்துக்களை வரவேற்கிறேன்.///நல்ல லைட்டாத் தெரியுது!உதவி பண்ணிய புண்ணியவான் வாழ்க!-பாரிஸ் யோகா-//
நன்றிகள் சகோ.
மறு மொழிகளை மட்டுறுத்த வேண்டிய நிலமைக்கு, அரசியல் அடி தடி ரகளைப் பதிவுகள் என்னை ஆளாக்கி விட்டுது. அதனால் தான் பின்னூட்டப் பெட்டியில் ஒரு சில கமெண்ட் போடும் முறையினை மாற்றி விட்டேன்.
@Yoga.s.FR
/// இப்போது என் தளம் உங்கள் கணினிகளில் எப்படித் தெரிகிறது என்பது தொடர்பான கருத்துக்களை வரவேற்கிறேன்.///நல்ல லைட்டாத் தெரியுது!உதவி பண்ணிய புண்ணியவான் வாழ்க!-பாரிஸ் யோகா-//
உதவி பண்ணிய புண்ணியவானும் பரிஸில் தான் இருக்கிறார். என் நண்பன் ஒருவன். பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன் சகோ.
@ரேவா
சகோ நான் முன் சொன்ன பிரச்சனை இப்போது இல்லை...டாஷ்போர்டில் உங்கள் பதிவுகள் தெரிகின்றன...//
நன்றிகள் சகோ, உங்கள் விருப்பமே, எங்கள் சேவை!
அவ்.....
@ரஹீம் கஸாலி
சகோ நான் முன் சொன்ன பிரச்சனை இப்போது இல்லை...டாஷ்போர்டில் உங்கள் பதிவுகள் தெரிகின்றன...//
ஏன் தாங்களும் இதே வழியினைப் பின்பற்றப் போகிறீர்களா.
அவ்...
கவிதைகள் நகைச்சுவையா இருக்கு. படங்கள் பொருத்தமா இருக்கு, நிருபன்.
/////அவள் ஓடிப் போனாள் கனடாவே!////
மாப்பு ஆளை என்கிட்ட கொழுவி விடு நான் அங்க போன அப்புறம் விவாகரத்து கொடுக்கிறன்...
தங்களின் கொம் மாறலுக்கு வாழ்த்துக்கள் நிரு...
அப்படியே கூகுல் அட்சென்ஸ் எடுத்தால் அதைப் பற்றி எனக்கும் உதவுங்கள்...
குளிர்ச்சிதான்!
வாழ்த்துக்கள் நிருபன்
sorry for the late
முன்னையதை விட இப்பொழுது சற்று சீக்கிரம் லோட் ஆகிறது
கவிதை??அதுக்குள்ளே மொக்கை??
படவா..
பேசாமா காத்திரமா எழுதுங்க..
நம்மள மாதிரி எழுதி கெட்டுப் போயிடாதீங்க!!
கவிதை??அதுக்குள்ளே மொக்கை??
படவா..
பேசாமா காத்திரமா எழுதுங்க..
நம்மள மாதிரி எழுதி கெட்டுப் போயிடாதீங்க!!
முத்துமாரி அம்மன் கோவில் பின்னாலே
முதன் முதலில் பார்த்த குட்டி ஊரு ’துன்னாலே’
பேசிப் பேசி காதலித்தோம் இரு கண்ணாலே,
போன மாசம், அவள் ஓடிப் போனாள் கனடாவே!
கானா நிரூபன் வாழ்க.
கிண்டலுடன் கருத்திணையும் குறுங்கவிதைகள் அபாரம்.
@vanathy
கவிதைகள் நகைச்சுவையா இருக்கு. படங்கள் பொருத்தமா இருக்கு, நிருபன்.//
நன்றிகள் சகோ, கவிதையினை அழகூட்டப் படங்களும் இக் காலத்தில் அவசியம் என்று சொல்லுகிறார்கள், ஆதலால் தான் கொஞ்சம் வெரைட்டியாக முயற்சி செய்து பார்த்தேன்,
@♔ம.தி.சுதா♔
/////அவள் ஓடிப் போனாள் கனடாவே!////
மாப்பு ஆளை என்கிட்ட கொழுவி விடு நான் அங்க போன அப்புறம் விவாகரத்து கொடுக்கிறன்...//
அவள் இப்போ என் ஆள் இல்லையே, ஆதலால் எப்படி அவளைத் தொடர்பு கொள்வது..
ஹி..ஹி...
@♔ம.தி.சுதா♔
தங்களின் கொம் மாறலுக்கு வாழ்த்துக்கள் நிரு...
அப்படியே கூகுல் அட்சென்ஸ் எடுத்தால் அதைப் பற்றி எனக்கும் உதவுங்கள்...//
வாழ்த்துக்களுக்கு நன்றிகள் சகோ,
கூகிள் அட்சென்ஸ் தமிழ் தளங்களுக்கு வழங்குவதை நிறுத்தி விட்டார்கள்.
அவர்களிடம் உள்ள 16 மொழியினைச் சார்ந்த இணையத் தளங்களுக்கு மட்டும் தான் கூகிள் அட்சென்ஸ் வழங்குவோம் என கூகிள் நிறுவனம் புதிய ஓர் அழைப்பினை வெளியிட்டுள்ளது சகோ.
@சென்னை பித்தன்
குளிர்ச்சிதான்!//
நன்றிகள் சகோ.
@Mathuran
வாழ்த்துக்கள் நிருபன்
sorry for the late//
நமக்குள்ள என்ன சாறி...
ஹி...
நன்றிகள் சகோ.
@Mathuran
முன்னையதை விட இப்பொழுது சற்று சீக்கிரம் லோட் ஆகிறது//
எல்லாம் நண்பன் சாய் அவர்களின் மகிமை தான்.
ஹி..ஹி..ஹி..
@மைந்தன் சிவா
கவிதை??அதுக்குள்ளே மொக்கை??
படவா..
பேசாமா காத்திரமா எழுதுங்க..
நம்மள மாதிரி எழுதி கெட்டுப் போயிடாதீங்க!!//
தொடர்ந்து ஒரே மாதிரி உணவைச் உண்பதால் சலிப்பு ஏற்படாது,
ஆகவே தான் கொஞ்சம் வெரைட்டியாக இடைக்கிடை நகைச்சுவை கவிதைகளையும் கொடுக்கலாம் என்று ப்ளான்.
மொக்கை போட்டு கெட்டுப் போயிடுவாங்களா.
சொல்லவேயில்ல.
அப்போ உங்க பதிவினைப் படிக்கும் பொண்ணுங்க நிலமை...
@Jana
முத்துமாரி அம்மன் கோவில் பின்னாலே
முதன் முதலில் பார்த்த குட்டி ஊரு ’துன்னாலே’
பேசிப் பேசி காதலித்தோம் இரு கண்ணாலே,
போன மாசம், அவள் ஓடிப் போனாள் கனடாவே!
கானா நிரூபன் வாழ்க.//
நான் கானா நிரூபன் இல்லை,
செ. நிரூபன் சகோ.
@Dr.எம்.கே.முருகானந்தன்
கிண்டலுடன் கருத்திணையும் குறுங்கவிதைகள் அபாரம்.//
நன்றிகள் சகோ.
Post a Comment