ஏமாற்றம் நிறைந்திருந்தாலும்,
என் முயற்சியில் சோர்வற்றவனாகி
அலைபேசியில் அவசரமாக
அதிகாரியை(த்) தொடர்பு கொண்டேன்,
வணக்கம் ஐயா சொல்லி
என்றுமே நாங்கள்
அடிமைகள் என்பதற்கு
அடையாளம் உணர்த்தி
என் உரையை ஆரம்பித்தேன்!
ஈழத்திற்கான தீர்வு
இந்த மாதம் கிடைக்கும்
என உறுதியளித்தீர்களே,
இன்னமும் காணவில்லையே,
என கேட்டேன்;
இல்லையே,
முள்ளி வாய்க்கால் முடிந்த
முதல் நாள் தொடங்கி
இன்று வரைக்கும்
இதையே தான் உரைக்கிறோம்
என இறுமாப்புடன் பதில் சொன்னார் அவர்,
அப்போ எங்களுக்கான
தீர்வுப் பொதி எங்கே என
ஏளனமாய் மீண்டும்
வினா(த்) தொடுத்தேன்,
அதிகாரியின் குரலில்
ஒரு வித நடுக்கம்,
இதோ கப்பலில்
இந்து சமுத்திரத்தினூடே
வந்து கொண்டிருக்கிறது
என சொன்னார்
மீண்டும் கேட்டேன்,
நிச்சயமாய் இந்த முறை ஏமாற்ற மாட்டீர்கள் தானே..
ஹா..ஹா. அதிகாரி
ஆணவமாய் சிரித்தார்,
நடுக்கடலில் வரும் கப்பல்
கரை தட்டினால் தான்
விடை தெரியும் என்றார்,
அலை பேசி(த்) தொடர்பை
அவராகவே துண்டித்தார்,
மீண்டும் பல மாதங்களின் பின்
நான் அலை பேசியில்
நேற்று அவரை
அழைத்தேன்,
இதோ, இந்தா வந்து விடும்,
இன்று வந்து விடும்
என(ச்) சொன்ன, ஈழமெனும்
தீர்வுப் பொதி சுமந்த
கப்பலெங்கே?
ஆத்திரத்துடன் கேட்டேன்,
கப்பல் நடுக்கடலில்
புயலில் சிக்கி
தத்தளித்து,
தாழத் தொடங்கி விட்டது
என்று மழுப்பல் பதில் சொன்னார் அவர்;
கப்பலுக்கு என்ன நடந்தது?
அதிகாரி சொன்னார்,
கப்பலில் பெரும்பான்மையாக
பொருட்கள் நிறைந்திருக்கின்றன,
சிறுபான்மையாக உள்ள
தீர்வு பொதி- மட்டும்
ஒரு ஓரத்தில் இருந்தது,
தீடீரென எழுந்த பேரலைகளால்
தராசின் செயலுக்கு ஒத்ததாய்,
சிறுபான்மை(த்) தீர்வு பொதி
தாழ(த்) தொடங்கி விட்டது,
அப்போ, எங்களுக்கான
தீர்வின் பொதிக்கு(ப்) பதிலாக
என்ன தரவுள்ளீர்கள்?
மீண்டும் அதிகாரி சிரித்தார்,
பெரும்பான்மை மட்டும்
இப்போது நீரின் மேல்
மிதந்து கொண்டிருக்கிறது,
நான் குறுக்கிட்டேன்,
கப்பல் தாழுகையில்
பெரும்பான்மை தானே முதலில்
நீரினுள் அமிழ்ந்து விடும்,
அதிகாரி சொன்னார்,
நீர் என்ன குழந்தையா?
சிறுபான்மை தான்
தன் கைகளினால்
கப்பலின் மேல் தளத்தில் உள்ள
பெரும் பான்மையை
தாளவிடாமற் தாங்கி(ப்) பிடிக்கிறது...
ஒரே ஒரு கேள்வி ஐயா,
கேட்கலாமா?
ஆம் என்றார்,
இறுதியாய் கேட்டேன்,
நீரினுள் தாழும்
தீர்வுப் பொதியை
மீட்க வழி இல்லையா?
அதிகாரி சொன்னார்,
’நீங்கள் இனத்தால் ஒன்று,
ஆனால் குணத்தால் வேறு
எல்லோரும் ஒன்றாய்
கடலுக்குள் இறங்கி
தாழும் தீர்வுப் பொதியை
ஓரணியில் தாங்கப் பாருங்கள்;
சில நேரம்
உங்கள் முயற்சியின் விளைவாய்
அது கரை தட்டலாம்!
* இது ஒரு வசன கவிதை.
|
45 Comments:
நல்ல கருத்து சகோ..நமக்குள் ஒற்றுமை தேவை என்பதை நாம் உணர்ந்தால் சரி தான்!
உண்மையை உணர்த்தும் நல்ல கவிதை.
உணர்ச்சிகரமாக இருந்தது சகோ...
தீர்வுப்பொதியைக் காட்டியே எத்தனை ஆட்சிகள் வந்துபோனது இந்தப்பொதியில் வரும் ஆனால் வராது!
மாப்ள புரியுது.....செல் உன் பாதையில் இது சரியான பார்வை(பாதை!)......
பகிர்வுக்கு நன்றி!
வேதனையின் வடுக்கள்
கொடுமையின் ஆட்சி
சின்னபின்னமான உயிர்கள்
சிவந்து நிற்கும் கண்கள் - ஆனால்
கேவலம்
எம்மால் முடியவில்லை
நல்ல பதில் கொடுத்திருக்கார் பெரிய நகைச்சுவை கவிதையிது... ஹ..ஹ..
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
அளவுக்கதிகமான பரசிட்டமோல் என்ன செய்யும்.. (Paracetamol Poisoning)
மிகவும் அருமையான கவிதை இது நிரு! தீராத சோகத்தில் யாராவது இருந்தால், " என்ன கப்பல் கவிழ்ந்து விட்டதா? " என்று கேட்பார்கள்தானே! தமிழர்களைப் பொறுத்தவரை இப்போது கப்பல் கவிழ்ந்து விட்டது!!
ஏமாற்றம் நிறைந்திருந்தாலும்,
என் முயற்சியில் சோர்வற்றவனாகி
அலைபேசியில் அவசரமாக
அதிகாரியை(த்) தொடர்பு கொண்டேன்,
வணக்கம் ஐயா சொல்லி
என்றுமே நாங்கள்
அடிமைகள் என்பதற்கு
அடையாளம் உணர்த்தி
என் உரையை ஆரம்பித்தேன்!///
இதில் " அடிமைகள் என்பதற்கு அடையாளம் உணர்த்தி " என்பது மிக அழகான சொல்லடையாகும்! அதாவது நீங்கள் உங்கள் பெயரையும், இடத்தையும் சொல்லி இருப்பீர்கள்! இது மட்டும் போதுமே! நாம் அடிமைகள் என்று காண்பிக்க!!!
நீர் என்ன குழந்தையா?
சிறுபான்மை தான்
தன் கைகளினால்
கப்பலின் மேல் தளத்தில் உள்ள
பெரும் பான்மையை
தாளவிடாமற் தாங்கி(ப்) பிடிக்கிறது...///
இதைவிட ஒரு யதார்த்த வரிகளை நான் கண்டதில்லை!
’நீங்கள் இனத்தால் ஒன்று,
ஆனால் குணத்தால் வேறு
எல்லோரும் ஒன்றாய்
கடலுக்குள் இறங்கி
தாழும் தீர்வுப் பொதியை
ஓரணியில் தாங்கப் பாருங்கள்;
சில நேரம்
உங்கள் முயற்சியின் விளைவாய்
அது கரை தட்டலாம்! ///
இது நடக்குமா? நிரு! அப்படியே ஒற்றுமையாகி, தாங்கிப்பிடித்து கரைக்கு கொண்டு வந்தாலும், ஆளாளுக்கு அடிபட்டு காரியத்தை கெடுத்திட மாட்டார்கள்?
//ஓரணியில் தாங்கப் பாருங்கள்;
சில நேரம்
உங்கள் முயற்சியின் விளைவாய்
அது கரை தட்டலாம்!//
நாங்களா? சும்மா போங்க பாஸ்! காமெடி பண்ணாதீங்க!
அப்பவே!!!! இது நடக்கல! இப்போ மட்டும் எப்பிடி?
இன்னுமா இந்த உலகம் நம்மள நம்பிக்கிட்டிருக்கு?
அன்பிற்கும் உண்டோ அடைங்குந்தாழ் புண்கண்ணீர் பூசல் தரும் ... புண்கண்ணீர் அற்றோர் அன்புடையவராக கொள்ளப்படமாட்டார் அவர் கண்ணிரண்டில் புண்ணுடையவர் ஆவார் ...
//’நீங்கள் இனத்தால் ஒன்று,
ஆனால் குணத்தால் வேறு//
நிஜம்தான் நிரூபன்
//எல்லோரும் ஒன்றாய்
கடலுக்குள் இறங்கி
தாழும் தீர்வுப் பொதியை
ஓரணியில் தாங்கப் பாருங்கள்;//////////
படவா ராஸ்கல். யாரப்பாத்து என்ன கேள்வி கேட்டுப்புட்டான்...
தமிழனாவது ஓரணியிலாவது
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு...
//வணக்கம் ஐயா சொல்லி
என்றுமே நாங்கள்
அடிமைகள் என்பதற்கு
அடையாளம் உணர்த்தி//
வலியை வேதனையை உணர்த்திய வரிகள்
எல்லாம் நன்கு புரிகிறது நிரூபன் .
எவ்வளவோ எழுத என் கைகள் துடித்தாலும் ...
சங்கிலி போட்டு கட்டி விட்டேன் .
உண்மையை உணர்த்தும் கவிதை.
வசன கவிதை உள்ளதை உணர்த்துகிறது..
சகோதரா அருமையான கவிதை...
இதற்கு நிறைய மறுமொழி சொல்லவேண்டும்... இப்போது நான் ஆணியில் உள்ளதால் மறுபடி வந்ததும் மறு மொழியிடுகிறேன்.
சிறப்பான கவிதைகள்.வாழ்த்துக்கள்.சகோ
கடைசிப் படத்துடன் கவிதை வரிகளும்...
@செங்கோவி
நல்ல கருத்து சகோ..நமக்குள் ஒற்றுமை தேவை என்பதை நாம் உணர்ந்தால் சரி தான்!//
நாம் எப்போது உணர்ந்து, எப்போது தெளிவது சகோ, தமிழனின் பரம்பரைக் குணத்தை மாற்றவா முடியும் சகோ.
@பலே பிரபு
உண்மையை உணர்த்தும் நல்ல கவிதை.//
நன்றிகள் சகோ
@Philosophy Prabhakaran
உணர்ச்சிகரமாக இருந்தது சகோ...//
நன்றிகள் சகோ.
@Nesan
தீர்வுப்பொதியைக் காட்டியே எத்தனை ஆட்சிகள் வந்துபோனது இந்தப்பொதியில் வரும் ஆனால் வராது!//
இது தானே எங்களின் கடந்த கால வரலாறு சகோ.
@விக்கி உலகம்
மாப்ள புரியுது.....செல் உன் பாதையில் இது சரியான பார்வை(பாதை!)......
பகிர்வுக்கு நன்றி!//
நன்றிகள் சகோ, உங்களின் ஆசிர்வாதம் இருக்கும் வரை என் பயணம் தொடரும்.
ஹி...ஹி..
@யாதவன்
வேதனையின் வடுக்கள்
கொடுமையின் ஆட்சி
சின்னபின்னமான உயிர்கள்
சிவந்து நிற்கும் கண்கள் - ஆனால்
கேவலம்
எம்மால் முடியவில்லை//
என்ன செய்யச் சகோ, தாங்கிடத் தான் இனி யாரும் இல்லையே!
@♔ம.தி.சுதா♔
நல்ல பதில் கொடுத்திருக்கார் பெரிய நகைச்சுவை கவிதையிது... ஹ..ஹ..//
இது தானே எங்களின் யதார்த்த வாழ்வு சகோ, அதுவே நகைச்சுவையாக மாறியும் விட்டது.
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
மிகவும் அருமையான கவிதை இது நிரு! தீராத சோகத்தில் யாராவது இருந்தால், " என்ன கப்பல் கவிழ்ந்து விட்டதா? " என்று கேட்பார்கள்தானே! தமிழர்களைப் பொறுத்தவரை இப்போது கப்பல் கவிழ்ந்து விட்டது!!//
ஆமாம் சகோ, கவிதையினை, நன்றாக உற்று நோக்கிக் கருத்துச் சொல்லுகிறீர்களே.
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
இதில் " அடிமைகள் என்பதற்கு அடையாளம் உணர்த்தி " என்பது மிக அழகான சொல்லடையாகும்! அதாவது நீங்கள் உங்கள் பெயரையும், இடத்தையும் சொல்லி இருப்பீர்கள்! இது மட்டும் போதுமே! நாம் அடிமைகள் என்று காண்பிக்க!!!//
எங்கள் மூதாதையர்கள் எம்மிடம் விட்டுச் சென்ற தமிழனின் இயல்பான குணம் தானே இது சகோ.
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
இதைவிட ஒரு யதார்த்த வரிகளை நான் கண்டதில்லை!//
நன்றிகள் சகோ.
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
இது நடக்குமா? நிரு! அப்படியே ஒற்றுமையாகி, தாங்கிப்பிடித்து கரைக்கு கொண்டு வந்தாலும், ஆளாளுக்கு அடிபட்டு காரியத்தை கெடுத்திட மாட்டார்கள்?//
ஆம் சகோ, தமிழர்களைப் பொறுத்தவரை, எப்போது உட் பூசல்கள் நீங்கி வேற்றுமைகளைக் களைந்து, ஒற்றுமையாய் ஆகிறோமோ அன்று தான் எம் அனைவர் வாழ்விலும் திருநாள் பிறக்கும்,
ஆனால் இந்த திரு நாள் எப்போது பிறக்கும் என்பதற்கு எம் மனங்களே சாட்சிகளாய் இருக்கின்றன சகோ.
பிரதேசவாதங்களும், பேதமைகளும் மனதில் இருக்கும் வரை....
@ஜீ...
ஓரணியில் தாங்கப் பாருங்கள்;
சில நேரம்
உங்கள் முயற்சியின் விளைவாய்
அது கரை தட்டலாம்!//
நாங்களா? சும்மா போங்க பாஸ்! காமெடி பண்ணாதீங்க!
அப்பவே!!!! இது நடக்கல! இப்போ மட்டும் எப்பிடி?
இன்னுமா இந்த உலகம் நம்மள நம்பிக்கிட்டிருக்கு?///
அது தானே பார்த்தேன்,
தமிழனைப் பொறுத்த வரை, இது ஓர் எட்டாக் கனியே.
@இக்பால் செல்வன்
அன்பிற்கும் உண்டோ அடைங்குந்தாழ் புண்கண்ணீர் பூசல் தரும் ... புண்கண்ணீர் அற்றோர் அன்புடையவராக கொள்ளப்படமாட்டார் அவர் கண்ணிரண்டில் புண்ணுடையவர் ஆவார் ...//
என்ன ஒரு அருமையான திருக்குறளை, சிற்றுவேசன் சாங்க் போலப் போடுறீங்க
நன்றிகள் சகோ.
@Mathuran
//எல்லோரும் ஒன்றாய்
கடலுக்குள் இறங்கி
தாழும் தீர்வுப் பொதியை
ஓரணியில் தாங்கப் பாருங்கள்;//////////
படவா ராஸ்கல். யாரப்பாத்து என்ன கேள்வி கேட்டுப்புட்டான்...
தமிழனாவது ஓரணியிலாவது//
ஹா...ஹா...அவ்........சிரிச்சிட்டேஇருக்கேன்.
@MANO நாஞ்சில் மனோ
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு....//
ஒற்றுமையே பலம் என்ற நிலை மாறி,
இப்போது
ஒற்றுமை நீங்கின் வேற்றுமை என்றாகி விட்டது சகோ.
@angelin
/வணக்கம் ஐயா சொல்லி
என்றுமே நாங்கள்
அடிமைகள் என்பதற்கு
அடையாளம் உணர்த்தி//
வலியை வேதனையை உணர்த்திய வரிகள்
எல்லாம் நன்கு புரிகிறது நிரூபன் .
எவ்வளவோ எழுத என் கைகள் துடித்தாலும் ...
சங்கிலி போட்டு கட்டி விட்டேன் .//
வார்த்தைகளை அடக்கி வைச்சிருந்தால், அது கண்ணீராகவோ/ பூகம்பமாகவோ/ எரிமலையாகவோ மாறலாம். ஆகவே அடுத்த தடவை கண்டிப்பாக எழுதிடுங்க சகோ.
நன்றிகள் சகோ.
@துஷ்யந்தனின் பக்கங்கள்
உண்மையை உணர்த்தும் கவிதை.//
நல்ல வேளை, நம்ம அரசாங்கம் செய்யுற மாதிரி, பொய்களை உண்மையாக்கும் கவிதை என்று ஒரு அடை மொழி சொல்லவில்லை.
நன்றிகள் சகோ.
@asiya omar
வசன கவிதை உள்ளதை உணர்த்துகிறது..//
நன்றிகள் சகோ.
@!* வேடந்தாங்கல் - கருன் *!
சகோதரா அருமையான கவிதை...
இதற்கு நிறைய மறுமொழி சொல்லவேண்டும்... இப்போது நான் ஆணியில் உள்ளதால் மறுபடி வந்ததும் மறு மொழியிடுகிறேன்//
நிறைய நேரம் ஆணியில் நிற்காதீங்க சகோ, கால் வெடிச்சு இரத்தம் பாயத் தொடங்கிடும்,
நன்றிகள் சகோ.
@இராஜராஜேஸ்வரி
இனத்தால் ஒன்று,
ஆனால் குணத்தால் வேறு//
பிரச்சினையின் மூலமே அதுதானே!//
ஆமாம் சகோ, தமிழனின் பூர்விகக் குணத்தை யாரால் மாற்ற முடியும்?
நன்றிகள் சகோ.
@shanmugavel
சிறப்பான கவிதைகள்.வாழ்த்துக்கள்.சகோ//
நன்றிகள் சகோ.
@ராஜ நடராஜன்
கடைசிப் படத்துடன் கவிதை வரிகளும்...//
சகோ என்ன வேலை இது, வசனத்தை முடிக்காமல், தொக்கி நிற்க வைத்திருக்கிறீர்கள்.
Post a Comment