ஆற்று நீரினை
மடை போட்டு- மறித்து,
அதன் திசை மாற்றும்
நோக்கில் காமுகர்களின் பார்வைகள்!
பீறிட்டுக் கிளம்பும்
பிரவாக நகி(க்) கிளைகளினை
முறித்தெறிந்து, கழிவு நீராக்கி விட
திமிர் பிடித்து அலைகின்றன
கொம்பேறி மூர்(க்)கன்கள்!
உண்மைகளின் உயிர்ப்புக்களின்
பின்னே,
பாத்தி கட்டி
அதன் பொருள் வலிமை சிதைக்க
இங்கே தணிக்கை எனும்
விதி தனித் தேரேறி
உலாவருகிறது,
எச்சரிக்கை எனும் உணர்வுகளின்
ஏக்கங்களை அவிழ்த்தெறிய
முடியாதனவாய், என் இராத்திரிகள்
முதலிரவெனும் சுப நாழிகைக்காய்
காத்திருக்கின்றன,
வரம்புடைத்து(ப்) பாயும்
வெள்ள நீராய் கள்ள(க்) காதல்கள்
தோற்றமுறுகின்றன,
அரங்கமெங்கும் அணிவகுப்பு ஏதுமின்றி
அட்ட திக்குகளின் குரல் வளையை நசுக்க
நட்சத்திர மாளிகைகளில்
நடந்தேறுகின்றன மாநாடுகள்!
வேண்டத்தகாத உறவொன்றின்
உருமாற்றம் வேண்டிய
கோரிக்கைகள் மட்டும்
இறுமாப்போடு, இப்படி
விரிந்து கொள்கின்றன;
தணிக்கை எனும் ஆடை - நீ
அணிந்து கொள்ளப் பழகின்
பிழைத்து(க்) கொள்வாய்
இல்லையேல்,
தனி மனித(க்) கருத்திற்கு
வலிமை இல்லை எனும்
தோரணையில்
முடக்கப்படுவாய்!
|
60 Comments:
வணக்கம் நிரூபன்.அருமையான பொருத்தமானப் படங்கள். இன்றைய எனது ஓட்டினை இந்தப் படங்களுக்காக, அதுவும் அந்த மைல் கல் படத்திற்காகப் போடுகிறேன்
//தணிக்கை எனும் ஆடை - நீ
அணிந்து கொள்ளப் பழகின்
பிழைத்து(க்) கொள்வாய்
இல்லையேல்,
தனி மனித(க்) கருத்திற்கு
வலிமை இல்லை எனும்
தோரணையில்
முடக்கப்படுவாய்!//
இது சரியான வரிகள் நிரூபன்.
இவ்வளவு வீரியமான கவிதையை இப்போதைக்குள் நான் வாசிக்கவில்லை..’தணிக்கை எனும் ஆடை’..என்ன ஒரு சொற்பிரயோகம்!..சொல்லிய வார்த்தைகளுள் சொல்லாத பொருள்கள்! பாராட்டுகள் சகோ!
சும்மா நச்சுன்னு இருக்கு பாஸ்
சும்மா நச்சுன்னு இருக்கு பாஸ்
சும்மா நச்சுன்னு இருக்கு பாஸ்
//தணிக்கை எனும் ஆடை - நீ
அணிந்து கொள்ளப் பழகின்
பிழைத்து(க்) கொள்வாய்
இல்லையேல்,
தனி மனித(க்) கருத்திற்கு
வலிமை இல்லை எனும்
தோரணையில்
முடக்கப்படுவாய்!//
நான் ரசித்த வரிகள்
ரியலி பாஸ்
\\தணிக்கை எனும் ஆடை - நீ
அணிந்து கொள்ளப் பழகின்
பிழைத்து(க்) கொள்வாய்
இல்லையேல்,
தனி மனித(க்) கருத்திற்கு
வலிமை இல்லை எனும்
தோரணையில்
முடக்கப்படுவாய்!//
--- இந்த வரிகளுக்கு மிகப் பொருத்தமாய்
கண்ணையும் வாயையும் காதையும் சேர்த்துக் கட்டிய அந்தப் படம் வெகு அருமை.
மனதிற்கும் உணர்வுகளுக்கும் தணிக்கை இன்றிப் போனால் சுனாமியாகிப் போகும் வாழ்க்கை
வரம்புடைத்து(ப்) பாயும்
வெள்ள நீராய் கள்ள(க்) காதல்கள்
தோற்றமுறுகின்றன,
அரங்கமெங்கும் அணிவகுப்பு ஏதுமின்றி
அட்ட திக்குகளின் குரல் வளையை நசுக்க
நட்சத்திர மாளிகைகளில்
நடந்தேறுகின்றன மாநாடுகள்!//
அருமை சகோ...
ரைட்டு!........மாப்ள கொன்னுட்ட போ!
கவிதைகள் அருமை நிரு!!
//தணிக்கை எனும் ஆடை - நீ
அணிந்து கொள்ளப் பழகின்
பிழைத்து(க்) கொள்வாய்//
அதை தான் நானும் ஜோசிக்கிறேன்..ஹிஹி
ஆமா அந்த படம் தலைவர் படம் இல்லியே??இல்லியே இல்லியே...
அருமைங்க நிரூபன். படங்கள் மிக மிக பொருத்தம்.
>>எச்சரிக்கை எனும் உணர்வுகளின்
ஏக்கங்களை அவிழ்த்தெறிய
முடியாதனவாய், என் இராத்திரிகள்
முதலிரவெனும் சுப நாளிகைக்காய்
காத்திருக்கின்றன,
arumai அருமை..
நாழிகை என்பதே சரி
வலி மிகுந்த கவிதை....
ஒவுவொறு மனிதனுக்குள்ளும் இருக்கும் மிருகத்தை அமைதிகாக்க எச்சரிக்கை விடுகிறது தங்கள் கவிதை...
அழகான கருத்துக்கள் பொதிந்த கவிதை எத்தனை யதார்த்தங்களை ஏறுக்கொள்ளவேண்டிய சூழல்!
தணிக்கை எனும் ஆடை - நீ
அணிந்து கொள்ளப் பழகின்
பிழைத்து(க்) கொள்வாய்
இல்லையேல்,
தனி மனித(க்) கருத்திற்கு
வலிமை இல்லை எனும்
தோரணையில்
முடக்கப்படுவாய்....
உண்மையிலே விரீயம் மிக்க கவிதை சகோ...அழகான ஆழமான பொருள் பொதிந்த கவிதை.. படங்களும் கூடுதல் அழகாய்...வாழ்த்துக்கள் சகோ
நிரு, உங்கள் கவிதை உள்ளார்த்தமாக உணர்த்துவது யாதென என்னால் அப்படியே புரிந்து கொள்ள முடிகிறது! கருத்துச் சுதந்திரம், ஊடக சுதந்திரம் எல்லாம், இலங்கையில் என்றில்லை உலகத்திலேயே நசுக்கப்பட்டுத்தான் வருகிறது! ஆனாலும் கருத்துச் சுதந்திரத்தை, Gun கொண்டு அடக்கும் கொடூரம் இலங்கையில்தான் நடக்கிறது! இதில் அவர், இவர் என்று தனித்து விரல் நீட்டி, வரலாற்றை திரிக்க நான் விரும்பவில்லை!
கீழே நான் சொல்லப் போவது, படு முட்டாள்தனமாகவும், பைத்தியக்காரத்தனமாகவும் இருக்கலாம்! ஆனால் இதனை ஆழ்ந்து சிந்தித்தால், உண்மைகள் வெளியே வரும்!
" எமது நாட்டில் ஊடக சுதந்திரம் நசுக்கப்படுவதற்கு - பாலியல் பிரச்சனைகளே காரணம்! "
testing..... ( selected email follow - up )
அருமை நிரூபன்!
பல பொருள் சொல்லும் ஒரு கவிதை
வலி நிறைந்த கவிதை...
தணிக்கை எனும் ஆடை - நீ
அணிந்து கொள்ளப் பழகின்
பிழைத்து(க்) கொள்வாய்
இல்லையேல்,
தனி மனித(க்) கருத்திற்கு
வலிமை இல்லை எனும்
தோரணையில்
முடக்கப்படுவாய்!
அதிகம் கவர்ந்த வரிகள்..
கலக்கல் நிரூ.. அதே உணர்வுகளே இங்கும்.
@இரா.எட்வின்
வணக்கம் நிரூபன்.அருமையான பொருத்தமானப் படங்கள். இன்றைய எனது ஓட்டினை இந்தப் படங்களுக்காக, அதுவும் அந்த மைல் கல் படத்திற்காகப் போடுகிறேன்//
நன்றிகள் உறவே.
@shanmugavel
தணிக்கை எனும் ஆடை - நீ
அணிந்து கொள்ளப் பழகின்
பிழைத்து(க்) கொள்வாய்
இல்லையேல்,
தனி மனித(க்) கருத்திற்கு
வலிமை இல்லை எனும்
தோரணையில்
முடக்கப்படுவாய்!//
இது சரியான வரிகள் நிரூபன்//
நன்றிகள் சகோ.
@செங்கோவி
இவ்வளவு வீரியமான கவிதையை இப்போதைக்குள் நான் வாசிக்கவில்லை..’தணிக்கை எனும் ஆடை’..என்ன ஒரு சொற்பிரயோகம்!..சொல்லிய வார்த்தைகளுள் சொல்லாத பொருள்கள்! பாராட்டுகள் சகோ!//
நன்றிகள் சகோ.
@துஷ்யந்தனின் பக்கங்கள்
சும்மா நச்சுன்னு இருக்கு பாஸ்//
நிஜமாகவா. நன்றிகள் சகோ.
@சிவகுமாரன்
\\தணிக்கை எனும் ஆடை - நீ
அணிந்து கொள்ளப் பழகின்
பிழைத்து(க்) கொள்வாய்
இல்லையேல்,
தனி மனித(க்) கருத்திற்கு
வலிமை இல்லை எனும்
தோரணையில்
முடக்கப்படுவாய்!//
--- இந்த வரிகளுக்கு மிகப் பொருத்தமாய்
கண்ணையும் வாயையும் காதையும் சேர்த்துக் கட்டிய அந்தப் படம் வெகு அருமை.
மனதிற்கும் உணர்வுகளுக்கும் தணிக்கை இன்றிப் போனால் சுனாமியாகிப் போகும் வாழ்க்கை//
நன்றிகள் சகோ.
நான் இங்கே, தணிக்கை எனும் பதத்தினை, எங்கள் நாட்டின் ஊடகச் சுதந்திரத்தின் பாதுகாப்பற்ற நிலமையினை விளக்கவே கையாண்டுள்ளேன் சகோ.
@டக்கால்டி
அருமை சகோ...//
நன்றிகள் சகோ.
@விக்கி உலகம்
ரைட்டு!........மாப்ள கொன்னுட்ட போ!//
நிஜமாகவா, நன்றிகள் சகோ.
நன்றிகள் சகோ.//
Ok Sago
//தணிக்கை எனும் ஆடை - நீ
அணிந்து கொள்ளப் பழகின்
பிழைத்து(க்) கொள்வாய்
இல்லையேல்,
தனி மனித(க்) கருத்திற்கு
வலிமை இல்லை எனும்
தோரணையில்
முடக்கப்படுவாய்//
என்ன வார்த்தை பிரயோகம் அருமை நண்பரே வாழ்த்த வார்த்தைகள் இல்லை
கவிதை நல்லா இருக்கு. படங்கள் பொருத்தமா தேர்ந்தெடுத்து போட்டிருக்கிறீங்க.
@பிரபாஷ்கரன்
என்ன வார்த்தை பிரயோகம் அருமை நண்பரே வாழ்த்த வார்த்தைகள் இல்லை//
நன்றிகள் சகோ, வாழ்த்த வார்த்தைகள் இல்லையா, தமிழில் தானே 247 எழுத்துக்கள் இருக்கு..
ஹி....ஹி,....
@vanathy
கவிதை நல்லா இருக்கு. படங்கள் பொருத்தமா தேர்ந்தெடுத்து போட்டிருக்கிறீங்க.//
நன்றிகள் சகோ.
@துஷ்யந்தனின் பக்கங்கள்
//தணிக்கை எனும் ஆடை - நீ
அணிந்து கொள்ளப் பழகின்
பிழைத்து(க்) கொள்வாய்
இல்லையேல்,
தனி மனித(க்) கருத்திற்கு
வலிமை இல்லை எனும்
தோரணையில்
முடக்கப்படுவாய்!//
நான் ரசித்த வரிகள்
ரியலி பாஸ்//
அதான் நம்புறேன் இல்ல..ஹி..ஹி..
இதுக்கெல்லாம் போயிச் சத்தியமா பண்ணுவாங்க.
நன்றிகள் சகோ.
@விக்கி உலகம்
ரைட்டு!........மாப்ள கொன்னுட்ட போ!..//
நிஜமாகவா சகோ,
நன்றிகள்.
@மைந்தன் சிவா
கவிதைகள் அருமை நிரு!!//
நன்றிகள் சகோ,
@மைந்தன் சிவா
//தணிக்கை எனும் ஆடை - நீ
அணிந்து கொள்ளப் பழகின்
பிழைத்து(க்) கொள்வாய்//
அதை தான் நானும் ஜோசிக்கிறேன்..ஹிஹி//
யோசிக்க முன்னாடி, ஏதாச்சும் ஒன்றை எழுதிப் போட்டு, பப்ளிஷ் பண்ணிட்டாப் பிறகு யோசிக்கனும்,
ஹி..ஹி....
@மைந்தன் சிவா
ஆமா அந்த படம் தலைவர் படம் இல்லியே??இல்லியே இல்லியே....//
ஏன் சகோ, நான் நல்லா இருக்கிறது உங்களுக்குப் பிடிக்கலையா?
என் வலையில் ஒரு பிரகண்டத்தையே உருவாக்கிறதாக நோக்கம் கொண்டுள்ளீர்களா.
வேணாம்யா, இது வரைக்கும் இது யார் காதுக்கும் எட்டலை, எட்டியிருந்தா, இந் நேரம் தேச பக்தர்கள் வந்து உண்டு இல்லை என்று ஆக்கியிருப்பாங்க.
@பலே பிரபு
அருமைங்க நிரூபன். படங்கள் மிக மிக பொருத்தம்.//
நன்றிகள் சகோ.
@சி.பி.செந்தில்குமார்
>>எச்சரிக்கை எனும் உணர்வுகளின்
ஏக்கங்களை அவிழ்த்தெறிய
முடியாதனவாய், என் இராத்திரிகள்
முதலிரவெனும் சுப நாளிகைக்காய்
காத்திருக்கின்றன,
arumai அருமை..
நாழிகை என்பதே சரி//
ஆமாம் சகோ, மாற்றி விட்டேன் எழுத்துப் பிழையினை.
நன்றிகள் சகோ.
கவிதை வீதி # சௌந்தர் said...
வலி மிகுந்த கவிதை....
ஒவுவொறு மனிதனுக்குள்ளும் இருக்கும் மிருகத்தை அமைதிகாக்க எச்சரிக்கை விடுகிறது தங்கள் கவிதை....//
ஆமாம் சகோ, சந்தப்பங்களையும் சூழ் நிலைகளையும் புரிந்து கொண்டு கருத்துக்களை வெளியிட்டால் பிரச்சினை ஏதும் இருக்காது என்பதனைச் சொன்னேன், அதுவும் எங்கள் நாட்டு ஜனநாயகப் பண்பின் அடிப்படையில் தான் இதனைச் சொன்னேன் சகோ.
நன்றிகள் சகோ.
@Nesan
அழகான கருத்துக்கள் பொதிந்த கவிதை எத்தனை யதார்த்தங்களை ஏறுக்கொள்ளவேண்டிய சூழல்!//
என்ன செய்ய, தமிழனாக அல்லவா பிறந்து விட்டோம் சகோ.
@ரேவா
தணிக்கை எனும் ஆடை - நீ
அணிந்து கொள்ளப் பழகின்
பிழைத்து(க்) கொள்வாய்
இல்லையேல்,
தனி மனித(க்) கருத்திற்கு
வலிமை இல்லை எனும்
தோரணையில்
முடக்கப்படுவாய்....
உண்மையிலே விரீயம் மிக்க கவிதை சகோ...அழகான ஆழமான பொருள் பொதிந்த கவிதை.. படங்களும் கூடுதல் அழகாய்...வாழ்த்துக்கள் சகோ//
அதிகமாகச் சொல்லுவீங்க என்று நினைத்தேன், இப்பிடி அப்பீட் ஆகிட்டீங்களே.
நன்றிகள் சகோ,
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
நிரு, உங்கள் கவிதை உள்ளார்த்தமாக உணர்த்துவது யாதென என்னால் அப்படியே புரிந்து கொள்ள முடிகிறது! கருத்துச் சுதந்திரம், ஊடக சுதந்திரம் எல்லாம், இலங்கையில் என்றில்லை உலகத்திலேயே நசுக்கப்பட்டுத்தான் வருகிறது! ஆனாலும் கருத்துச் சுதந்திரத்தை, Gun கொண்டு அடக்கும் கொடூரம் இலங்கையில்தான் நடக்கிறது! இதில் அவர், இவர் என்று தனித்து விரல் நீட்டி, வரலாற்றை திரிக்க நான் விரும்பவில்லை!
கீழே நான் சொல்லப் போவது, படு முட்டாள்தனமாகவும், பைத்தியக்காரத்தனமாகவும் இருக்கலாம்! ஆனால் இதனை ஆழ்ந்து சிந்தித்தால், உண்மைகள் வெளியே வரும்!
" எமது நாட்டில் ஊடக சுதந்திரம் நசுக்கப்படுவதற்கு - பாலியல் பிரச்சனைகளே காரணம்! "//
கவிதையினை விட உங்கள் கருத்துக்களில் உள்ளார்ந்தமாகப் பல அர்த்தங்கள் பொதிந்திருக்கின்றன சகோ, இதனைத் தான் சொல்வார்கள், நளினமாகவும், நாசூக்காகவும் பதில் சொல்வதென்று.
அந்த முறையினை நீங்கள் இங்கே பின்பற்றியிருக்கிறீர்கள்.
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
testing..... ( selected email follow - up )//
ஈமெயிலில் பேசுவதற்காக மைக் டெஸ்ட்டிங் பண்ணுறீங்களா..
ஹி....ஹி....
@இராஜராஜேஸ்வரி
கொம்பேறி மூர்(க்)கன்கள்!
சரியான வார்த்தை!!//
நன்றிகள் சகோ.
@பன்னிக்குட்டி ராம்சாமி
அருமை நிரூபன்!//
நன்றிகள் சகோ.
@யாதவன்
பல பொருள் சொல்லும் ஒரு கவிதை//
கவிக் கிழவன் அதிகம் சொல்லுவார் என்று நினைத்தேன், இப்படி நச்சென்று சொல்லி விட்டுச் சென்று விட்டீங்களே சகோ.
@பாட்டு ரசிகன்
வலி நிறைந்த கவிதை...//
நன்றிகள் சகோ
@பாட்டு ரசிகன்
உங்களுக்காக...
அத்திக்காய் ஆலங்காய் வெண்ணிலவே.....
http://tamilpaatu.blogspot.com/2011/05/blog-post.html//
அடடா, இது என்ன சிற்றுவேசன் சாங்கஸ் ஆ...
@Jana
தணிக்கை எனும் ஆடை - நீ
அணிந்து கொள்ளப் பழகின்
பிழைத்து(க்) கொள்வாய்
இல்லையேல்,
தனி மனித(க்) கருத்திற்கு
வலிமை இல்லை எனும்
தோரணையில்
முடக்கப்படுவாய்!
அதிகம் கவர்ந்த வரிகள்..
கலக்கல் நிரூ.. அதே உணர்வுகளே இங்கும்.//
இங்கும் என்பதில்- இரட்டை அர்த்தம் இருக்கிறது சகோ, ஆனால் விளக்கிச் சொல்லத் தான் பயமாக இருக்கே.
@FOOD
கவிதை அருமை, கலக்கல், தூள் தூள், என்ன சொன்னாலும் தகும்.//
நன்றிகள் சகோ.
@ரஹீம் கஸாலி
nice//
நன்றிகள் சகோ.
//////வேண்டத்தகாத உறவொன்றின்
உருமாற்றம் வேண்டிய
கோரிக்கைகள் மட்டும்
இறுமாப்போடு, இப்படி
விரிந்து கொள்கின்றன/////
அருமைப்பா இங்கே சொல்லப்படும் கருத்தை கவ்வும் மனிதனால் நிச்சயம் தலை நிமிர்ந்து நடக்க முடியும்...
கடைசிப் படம் போதும்யா அத்தனை வரிகளையும் ஒப்பிட..
////தணிக்கை எனும் ஆடை - நீ
அணிந்து கொள்ளப் பழகின்
பிழைத்து(க்) கொள்வாய்
இல்லையேல்,
தனி மனித(க்) கருத்திற்கு
வலிமை இல்லை எனும்
தோரணையில்
முடக்கப்படுவாய்!
////
சிறப்பான வரிகள்
பொருத்தமான படங்கள்
Post a Comment