ஆஹா இனி நம்ம பாட்டுக்குப் சிவனே என்று இருக்கலாம். கொஞ்ச நாளா, எங்கடை பதிவுகளுக்கு வந்து அறு அறு என்று எங்களையெல்லாம் அறுத்துத் தள்ளிய, நோண்டி நொங்கெடுத்த நம்ம நிரூபன் பயபுள்ளை இனிமே வலைப் பதிவிற்கு வரமாட்டான். சொந்தச் செலவிலையே சொர்க்க லோகம் போகப் போறான் என்று நீங்கள் மகிழ்ச்சியாக இப் பதிவினைப் படிக்கத் தொடங்குகிறீர்கள் என நினைக்கிறேன்.
கடந்த வாரம், இதமான பாடல்களைக் கேட்டவாறு உறக்கங் செல்கிறேன். உறங்கியதும் திடீரென கனவு வருகிறது. எங்கள் வீட்டு முற்றத்தில் என் அப்பா, இரண்டு தங்கைகள், நான், தம்பி என எல்லோரும் கூடி நிற்கிறோம். அப்பா பேசத் தொடங்குகிறார்.
‘பிள்ளைகளே! எனக்கும் வயசு போகிறது. இனி உங்களின் எதிர் காலத்தை நீங்களே தான் முடிவு செய்ய வேண்டும். உங்கள் ஒவ்வொருவரினதும் எதிர்க்காலக் கனவுகள் என்ன என்று கூறுங்கள் பார்க்கலாம்?
‘முதலாவது தங்கை பதிலுக்கு ‘’அப்பா நான் யூனிவர்சிற்றி முடித்து எக்கவுண்டன்(Accountant) ஆக வரப் போகிறேன்; அது வரைக்கும் வீட்டிலை இருந்த படியே கம்பஸிற்கும்(பல்கலைக் கழகத்திற்கும்) போய், ரியூசனும் கொடுக்கப் போறேன்’’ என்று கூறி முடித்தாள்.
இரண்டாவது தங்கை: அப்பா ‘நான் ஏலெவல் முடிய ஐரி(Information Technology) படிக்கலாம் என்று முடிவெடுத்துள்ளேன்’’ என்று கூறினாள்.
அடுத்தது என் முறை: ’’என் கைவசம் டெலிகொம் நிறுவனத்தில் வேலை இருந்தாலும் நான் சாமியாராகலாம் என்று முடிவெடுத்துள்ளேன்’’ என்று கூறினேன்.
அப்பா எதுவும் பேசவில்லை. அடுத்தது தம்பி பதில் கூறும் முறையாக இருந்தும் அவனும் எதுவும் பேசவில்லை. யாருமே எதுவும் பேசாதிருக்கும் போது, வெறும் நிசப்தம் மட்டுமே அவ் விடத்தில் நிலவியது. அப்பா மௌனத்தைக் கலைத்தார்.
‘டோய் நிரூபா! நீ தெருப் பொறுக்கியாகி சாமியாராகப் போறியோ. இது அப்பா.
பதிலுக்கு நான், ஏனப்பா, சாமியாராகிறதில என்ன தப்பு. நாட்டிலை எத்தினை சாமியார் இருக்கீனம். சாமியாரைப் பற்றி தப்பா சொன்னீங்க. சங்கை அறுத்திடுவேன் என்று மிரட்டுகிறேன்.
அப்பா கோபம் கொண்டவராய், விழிகள் சிவக்க, டோய் யாரைப் பார்த்து, எதிர்த்துப் பேசுறாய். வீட்டை விட்டு வெளியேறு என்று விரட்டுகிறார். நான் வீட்டை விட்டு வெளியேறி, ஒரு ஆச்சிரமத்தை மலைகள் நிறைந்த, ஆறுகள் தவழ்ந்து குளிர்ச்சி பரப்பும் ஜம்புகா ஹிம்புகா தேசத்தில் உருவாக்குகிறேன்.
’’பாணபத்திர பன்னிச் சாமியார்’ என எனக்கு நானே ஒரு பெயரைச் சூட்டிக் கொள்கிறேன்.
எனது அடியார்களை, சீடர்களை எனக்காக தேடும் நோக்கோடு பத்திரிகையில் விளம்பரம் கொடுக்கிறேன்.
‘ஜம்புகா ஹிம்புகா பிரதேசத்தில்
இதோ வந்து விட்டார் உங்கள்
பாண பத்திர பன்னிச் சாமியார்-
பாவங்களை மன்னிப்பார் இந்தச் சாமியார்
உங்களுக்குப் பிடித்துள்ள
சன்னி, ஏழரை, எட்டரை
தோசங்கள், குறை பாடுகள் அனைத்தும் நீங்க வேண்டுமா?
இன்றே வருக என்னிடம்!
பெண்களுக்கான குறைபாடுகள்,
கணவன் மனைவி பிரச்சினைகள்,
காதலன் காதலி அந்தரங்க விடயங்கள்
அனைத்தையும் நொடிப் பொழுதில் நீக்கித் தருவேன்!
நீங்கள் விரும்பியவரை விரும்பிய இடத்திற்கு அழைக்க வேண்டுமா?
உங்களுக்குப் பிடிக்காதவரை உலகை விட்டு அனுப்ப வேண்டுமா?
அனைத்திற்கும் இன்றே என்னைத் தொடர்பு கொள்ளுங்கள்.
பாணபத்திர பன்னிச் சாமியார்!
தொடர்புகளுக்கு:
சங்கிசா, பங்கிசா ஆச்சிரமம்
முங்கால் வீதி
ஜம்புகா ஹிம்புகா
யாழ்ப்பாணம்.
தொலைபேசி: 07772229994
பத்திரிகையில் விளம்பரம் போட்ட பின்னர் என் புகழ் உலகெல்லாம் பரவத் தொடங்கிறது. எனக்குத் தொண்டு செய்யச் சீடர்கள் வருகிறார்கள். என்னைச் சூழ அமைச்சர்கள், மந்திரிகள் படங்கள் தொங்குகின்றன. அனைவருமே எனக்கு அடிமைகளாக அல்லது அடியார்களாக நான் சொல்வதைக் கேட்கத் தயாராகுகிறார்கள்.
பிரபல மின் டீவி என்னைப் பேட்டி காண வருகிறது. போதையில், அபிசேகம், சைவ தீர்த்தம் எனும் பெயரில் நான் மெண்டிஸ் சாராயத்தை அடித்து விட்டு உளறுகையில் அவற்றினை அருள் வாக்கு என கலர் டிஸ்பிளே போட்டு தொலைக் காட்சி ஒளிபரப்புகிறது.
என் தத்துவங்கள் ‘சொன்னவர் யார்’’ என்ற தலைப்புடன் பத்திரிகைகளில் பெரிய எழுத்தில் வருகிறது.
நான் சொன்ன தத்துவங்கள்.
’கண்ணைத் திற காட்சி தெரியும்!
’அன்னையும் பிதாவும் பின்னடிக்கு இடஞ்சல்!
‘ஆலயம் போவது அரட்டைக்கு அழகு!
‘கல்லைக் கண்டால் நீ நாயைக் காண மாட்டாய்
காசைக் கண்டால் நீ கடவுளைத் தேட மாட்டாய்!
பணம் இல்லையேல் நீ பக்தனாகுவாய்
பணமிருந்தால் நீ சாராய பார் நண்பனாகுவாய்!
என்னுடைய தத்துவங்களையும், அருள் வாக்குகளையும் கேட்டு பக்தர்கள், அடியவர்கள், சீடர்கள் பெருகத் தொடங்குகிறார்கள். பணம் மலை மலையாகக் குவியத் தொடங்குகிறது. வைப்பிலிட மத்திய வங்கியில் இடம் போதாத காரணத்தால், சுவிஸ் வங்கியில் என் சீடர்களின் உதவியுடன் பணத்தினை வைப்புச் செய்கிறேன். திடீரென வீதியில் நாய் குலைக்கும் சத்தம் கேட்கிறது. கனவு கலைகிறது. அடச் சீ....கறுமம். இது கனவாகி விட்டதே என்று நொந்து கொள்கிறேன்.
பின்னர் சிந்தித்துப் பார்த்தேன். சாமியாராகுவதில் என்ன தப்பு? ஆன்மீகப் பணி செய்வது அகிலத்திற்கு நல்லது தானே! நிஜத்திலை சாமியாராகினால் எப்படியிருக்கும் எனும் நினைப்பில் நினைவுகளைத் திருப்பினேன்.
நம்ம ஊருக் கோவில்களிலை ஐய்யர் வரவில்லை என்றால் அவரது மகன்மார் தமிழில் பூஜை செய்வதில்லையா? அது போல என்னாலும் தமிழில் பூசை செய்ய முடியும் தானே. இதோ கைவசம் இருக்கிறதே மந்திரம், கவலை எதற்கு!
பூஜை பண்ணும் போது மந்திரம் ஓத வேண்டும்.
ஓம் சுக்கிலாம் பரதம்...விஷ்ணு..
பூ உனக்கு, பொங்கல் எனக்கு
அவல் உனக்கு, அரிசி எனக்கு
தேன் உனக்கு, தேங்காய் எனக்கு
சாந்தி உனக்கு, சரோஜா எனக்கு
ஓம் சாந்தி சாந்தி, சாந்தி நமக!
பூஜை நடந்து முடிந்ததும், தேவாரம் பாட வேண்டும்.
வேட்டி போட்ட பொடியன் - நீ வெறுங் கதைகள் பேசி
நாட்டினையும் கெடுக்கும் நல்ல தமிழ் அறிஞன்’
உனைப் பாட்டில் வைத்துச் சொன்னால் தமிழுக்கே கேடு- நீ
பாவையிடம் தோற்றால் பாவமெல்லாம் தீரும்!
இப்படியும் இப்போதைய இளைஞர்கள் போன்று பாடலாம் தானே.
அடுத்ததாக என்ன செய்ய வேண்டும். பூஜை முடிய திருநீறு, சந்தனம் கொடுக்க வேண்டும். ஆண்களுக்கென்றால் திருநீற்றைக் கையில் கொடுத்து விட்டு, பெண்களுக்கு மட்டும் விபூதியை நெற்றியில் பூசி, சந்தனத்தையும் வைத்து விட வேண்டும்.
பெண்களுக்கு திருநீறு, சந்தனம் வைக்கிற சாட்டிலை காலோடை காலைத் தெரியாமல் உரச வேண்டும். (இது எங்கள் ஊர் ஒரு சில ஐயர் மார் செய்யும் லீலை)
அட இது நமக்கு கை வந்த கலை தானே. இதுவும் நம்மாலை முடியும்,
அடுத்து; நதிர்தனா......திரணனா............தனனனா.......தா என்று பாட்டுப் போட்டு விட்டு, நடிகையொருத்தியை அழைத்து வந்து கை, கால் பிடிக்க வைத்து, ஒயில் மசாஜ் செய்ய வேண்டும். இப்படிச் செய்தால் வீட்டிற்கு ஆட்டோ வரும்
என்பது நிச்சயம் ஆதலால் அப் பணியை என் சீடர்களிடமே கொடுத்து விடுகிறேன்.
இறுதியாக இன்னொரு விடயமும் very important ஒன்று இருக்கிறது என்று நீங்கள் சொல்ல வாறீங்களா?
சுவாமிஜி, எனக்குத் தீராத வயிற்று வலி என்று அழுதழுது என்னிடம் வரும் பக்தைகளிற்கு பொக்குளில் தேசிக்காயை வைத்து மந்திரம் சொல்லி தேய்த்து, போலிஸிடம் அக்கப்பட வேண்டும். அதற்கும் ஐயாம் றெடி.
இப்படியான திறமைகள் இருந்தால் தான் சாமியாராக முடியும். இத்தகைய சாமியார்களைத் தானே நாங்கள் தினமும் கண்டு மகிழ்கிறோம். அப்ப இதே வழியைப் பின்பற்றினால் நானும் ஓர் சாமியார் தானே!
மகா ஜனங்களே! சாமியாராக நான் றெடி!
என் சீடர்களாக நீங்கள் றெடியா!
********************************************************************************
பாணபத்திர பன்னிச் சாமியும், நம்ம கோண புத்திர கொடிகா சாமியும் நாற்பது கிலோ மீற்றர் தொலைவில் உள்ள ஒரு மலை உச்சியினைப் பார்த்துப் பேசிக் கொள்கிறார்கள்.
பாண: ஏய் கோணா சாமி, அங்கை பார்த்தியா, அம்புட்டுத் தொலைவிலை உள்ள மலையிலை என் ஞானக் கண்ணுக்கு ஒரு எறும்புக் கூட்டம் வரிசையாகப் போய்க் கொண்டிருப்பது தெரிகிறது. உன் ஞானக் கண்ணில் ஏதாவது தெரிகிறதா கோணா சுவாமி.
கோணா: நீங்க வேற, அந்த மலையுச்சியிலை வரிசையாப் போற எறும்புக் கூட்டம் இருக்கே, அதுங்க எவ்வளோ வடிவா தேங்காய்ப் பூவை வாயிலை கவ்விக் கொண்டு, ஊர்ந்து போகுது பார்தீங்களா. இப்ப சொல்லுங்க. என்னோடை ஞானக் கண்ணா, உங்க ஞானக் கண்ணா ரொம்ப பவர் புல்லு!
|
54 Comments:
சாரி நிரூபன் இந்தப் பதிவு எனக்குப் பிடிக்கலை.
உங்க ஆசிரமத்தில என்னை சீடனா சேத்துக்குவீங்களா ? சத்தியமா கேமரா எல்லாம் வைக்க மாட்டேன்
//மகா ஜனங்களே! நான் சாமியாராகப் போகிறேன்! //
சகோதரம், நான் பிரதம சிஷ்யனாக வரட்டுமா? :-)
//சொந்தச் செலவிலையே சொர்க்க லோகம் போகப் போறான் என்று நீங்கள் மகிழ்ச்சியாக இப் பதிவினைப் படிக்கத் தொடங்குகிறீர்கள் என நினைக்கிறேன்.//
இல்லை நண்பரே! சொந்தச் செலவில் சொர்க்கம் போக முடியுமா? எந்த டிராவல்ஸ் ஏற்பாடு செய்வார்கள்??
//’’பாணபத்திர பன்னிச் சாமியார்’ என எனக்கு நானே ஒரு பெயரைச் சூட்டிக் கொள்கிறேன்.//
ஹிஹி! எங்கேயோ கேட்டா மாதிரி பெயர் இருக்கிறதே?
//ஒன்றுக்கு இருந்து விட்டு
ஒரு தட்டுத் தட்டா விட்டால்
நின்றிட்டு ஒழுகும் சொட்டு!//
ஆஹா! தத்துவ வித்தே! உத்தம சொத்தே! ஒன்பது பத்தே!
வணங்குகிறேன் ஸ்வாமி! தனியேனை ஆட்கொள்ளுங்கள்!
@எல் கே
சாரி நிரூபன் இந்தப் பதிவு எனக்குப் பிடிக்கலை.//
ஏன் சகோ, ஆன்மீகத்தை கடிப்பதாலா... சரி விடுங்க, சும்மா ஒரு கடியைத் தான் போட்டேன். அடுத்த பதிவிற்கு வாங்கோ, உங்கள் அனைவரையும் அமர்க்களப்படுத்துகிறேன்.
@சிவகுமாரன்
உங்க ஆசிரமத்தில என்னை சீடனா சேத்துக்குவீங்களா ? சத்தியமா கேமரா எல்லாம் வைக்க மாட்டேன்//
எப்படி நம்புவது, என் அக்கவுண்டிலையே கை வைக்க மாட்டீங்க. கமரா எதற்கு, இப்போதெல்லாம் ஒரு மொபைல் போனே போதுமே.
@சேட்டைக்காரன்
சகோதரம், நான் பிரதம சிஷ்யனாக வரட்டுமா? :-)//
சிஷ்யனாகுவதற்கு, ஒரு சில தகுதிகள் வேண்டும், அதனை எனது சீடர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் சகோதரம். சிஷ்யனா ஏற்றுக் கொண்டா சாமியாரை கிழிச்சிட மாட்டீங்க தானே?
@சேட்டைக்காரன்
/சொந்தச் செலவிலையே சொர்க்க லோகம் போகப் போறான் என்று நீங்கள் மகிழ்ச்சியாக இப் பதிவினைப் படிக்கத் தொடங்குகிறீர்கள் என நினைக்கிறேன்.//
இல்லை நண்பரே! சொந்தச் செலவில் சொர்க்கம் போக முடியுமா? எந்த டிராவல்ஸ் ஏற்பாடு செய்வார்கள்??//
நம்ம ஜம்புகா ஹிம்புகா ஆச்சிரமம் தான் ஏற்பாடு செய்வார்கள்.
@சேட்டைக்காரன்
//’’பாணபத்திர பன்னிச் சாமியார்’ என எனக்கு நானே ஒரு பெயரைச் சூட்டிக் கொள்கிறேன்.//
ஹிஹி! எங்கேயோ கேட்டா மாதிரி பெயர் இருக்கிறதே?//
நிச்சயமாய் இம்சை அரசன் 23ம் புலிகேசியில் அல்ல.
@சேட்டைக்காரன்
/’’பாணபத்திர பன்னிச் சாமியார்’ என எனக்கு நானே ஒரு பெயரைச் சூட்டிக் கொள்கிறேன்.//
ஹிஹி! எங்கேயோ கேட்டா மாதிரி பெயர் இருக்கிறதே?//
என் ஆச்சிரமத்திற்கு வந்திருக்கிறீங்க போல..அங்கே தான் கேட்டிருப்பீங்க.
///ஓம் சுக்கிலாம் பரதம்...விஷ்ணு..
பூ உனக்கு, பொங்கல் எனக்கு
அவல் உனக்கு, அரிசி எனக்கு
தேன் உனக்கு, தேங்காய் எனக்கு
சாந்தி உனக்கு, சரோஜா எனக்கு
ஓம் சாந்தி சாந்தி, சாந்தி நமக!
//// இது நல்ல இருக்கே. உந்த ஐயர்கள் சொல்லுகிற மந்திரம் எல்லாம் மக்களுக்கு புரிகிறது என்றா நினைக்கிறீர்கள் hehehe நடத்துங்க நடத்துங்க )))))
@சேட்டைக்காரன்
//ஒன்றுக்கு இருந்து விட்டு
ஒரு தட்டுத் தட்டா விட்டால்
நின்றிட்டு ஒழுகும் சொட்டு!//
ஆஹா! தத்துவ வித்தே! உத்தம சொத்தே! ஒன்பது பத்தே!//
சாமியாரையே ஆசிர்வதிக்கும் என் சீடன், எதிர் காலத்தில் அண்ட சராசரங்களும் போற்றும் அதிசய சுவாமி ஆகுவான் என அருள் வாக்குக் கூறுகிறேன்!
@சேட்டைக்காரன்
வணங்குகிறேன் ஸ்வாமி! தனியேனை ஆட்கொள்ளுங்கள்!//
என் ஆச்சிரமத்தில் பெண்களை மட்டும் தான் ஆட்கொள்ள முடியும், ஆண்களுக்கு அருள்வாக்கு மட்டும் தான்.
@கந்தசாமி.
//ஓம் சுக்கிலாம் பரதம்...விஷ்ணு..
பூ உனக்கு, பொங்கல் எனக்கு
அவல் உனக்கு, அரிசி எனக்கு
தேன் உனக்கு, தேங்காய் எனக்கு
சாந்தி உனக்கு, சரோஜா எனக்கு
ஓம் சாந்தி சாந்தி, சாந்தி நமக!
//// இது நல்ல இருக்கே. உந்த ஐயர்கள் சொல்லுகிற மந்திரம் எல்லாம் மக்களுக்கு புரிகிறது என்றா நினைக்கிறீர்கள் hehehe நடத்துங்க நடத்துங்க )))))//
ஐயர்மாருக்கு இந்த மந்திரங்களை ஒரு நூலாக அடித்துக் கொடுக்கலாம் என்றிருக்கிறேன் சகோ. உங்களின் கருத்து என்ன?
எப்பிடி இருந்த நான் இப்பிடி ஆயிட்டேன்...இதை திரும்ப திரும்ப பத்து முறை சொல்லுங்க....சாமியார் ஆசை வரவே வராது மக்கா...
இவ்வளுவு நாளா சாமி எங்க இருந்துச்சு...நதி மூலம் ரிஷி மூலம் என்னவோ
கவட்டைத் திற காற்றுப் படட்டும்//
அநியாயம் பண்ணாதீங்கய்யா ஹஹா
நடிகை யாரு..அவங்க இல்லைனா பிரபலம் ஆகமுடியாது ஓய்
நிரூபன்....அப்பா சாமி...இது சரியான ஓவர்...ஓம் சொல்லிப்போட்டன்.
சாமி பிடிக்காட்டி ஒதுங்கிக்கொள்ளவேணும்.அவரோட என்ன செருகிப் பாக்கிறது.இப்பவே இந்தப்பாடு.நீங்கள் சாமியாரானா உலகம் தாங்காது.நீங்கள் நீங்களாவே இருந்துகொள்ளுங்கோ !
@MANO நாஞ்சில் மனோ
எப்பிடி இருந்த நான் இப்பிடி ஆயிட்டேன்...இதை திரும்ப திரும்ப பத்து முறை சொல்லுங்க....சாமியார் ஆசை வரவே வராது மக்கா...//
இது என்ன சகோ மயக்கம் போக்கும் மந்திரமா?
நன்றிகள் நன்றிகள்.
@ஜீவன்சிவம்
இவ்வளுவு நாளா சாமி எங்க இருந்துச்சு...நதி மூலம் ரிஷி மூலம் என்னவோ//
மகனே! இந்தக் கேள்விக்கான பதில்களை நீங்கள் கண்ணை மூடிக் கொண்டு கேட்க வேண்டும். நதி மூலம் எனது ஆச்சிரமத்திற்கு அருகே ஓடும் ஆறு.
ரிசி மூலம்- நான் ஆச்சிரமத்தை தொடங்கிய அட்டமி நட்சத்திரம், உத்தாராட திதியை.
@ஆர்.கே.சதீஷ்குமார்
கவட்டைத் திற காற்றுப் படட்டும்//
அநியாயம் பண்ணாதீங்கய்யா ஹஹா//
இதிலை எங்க சார் அநியாயம் இருக்கு.
@ஆர்.கே.சதீஷ்குமார்
நடிகை யாரு..அவங்க இல்லைனா பிரபலம் ஆகமுடியாது ஓய்//
அவங்க ரொம்ப பழசு, இப்ப புதுசா யாரும் ஆன்மிகத் துறையை நாடி வருவாங்க இல்ல. அவங்களை அணுகுவோம்.
@ஹேமா
நிரூபன்....அப்பா சாமி...இது சரியான ஓவர்...ஓம் சொல்லிப்போட்டன்.
சாமி பிடிக்காட்டி ஒதுங்கிக்கொள்ளவேணும்.அவரோட என்ன செருகிப் பாக்கிறது.இப்பவே இந்தப்பாடு.நீங்கள் சாமியாரானா உலகம் தாங்காது.நீங்கள் நீங்களாவே இருந்துகொள்ளுங்கோ !//
குழந்தாய், தெய்வ முற்றம் பொல்லாதது, சாமியுடன் நான் சண்டைக்குப் போவேனா?
நான் போதையிலை புளொக் எழுதுவது கிடையாது. என்ன மப்பு ஓவர் என்று சொல்ல வாறீங்களா:))ஹி ஹி...ஹி..
சாமியாராகினால் உலகம் தாங்காது என்பதை விளக்க ஒரு கடி. நன்றிகள் சகோதரம்.
Super niru. I ll cum with ma cumputer....
முடியல சாமியாரே:)
பதிவுலகில் நசரேயன் விட்ட இடத்தை நீங்க புடிச்சுடுவீங்க போல இருக்குதே:)
@சரியில்ல.......
Super niru. I ll cum with ma cumputer....//
குழந்தாய்! பிச்சுப் புடுவேன், பிச்சு, என்னது கம்பியூட்டருடன் என் ஆச்சிரமத்திற்கு வரப் போகிறீங்களா?
நோ அனுமதி. இல்லவே இல்லை. நீங்க உங்க இண்டெல் கம்பியூட்டர் மூலம் என் ஆச்சிரம ரகசியத்தை உலகறியச் செய்து விடுவீர்கள்.
என் ஆச்சிரம வாயிலில் Mobile phone usage is strictly prohibited என்று பெரிய எழுத்திலை ஒரு board வைத்திருக்கும் போது, கம்பியூட்டராம், கம்பியூட்டர். அதனைப் பறித்து என் சீடர்களுக்கு தானமாக வழங்கி விடுவேன்.
@ராஜ நடராஜன்
முடியல சாமியாரே:)
பதிவுலகில் நசரேயன் விட்ட இடத்தை நீங்க புடிச்சுடுவீங்க போல இருக்குதே:)//
வாங்கோ சகோ, ஏதோ ஒரு உள்ளார்ந்த அர்த்தத்தோடை சொல்ல வாறீங்க என்று மட்டும் புரியுது. ரொம்ப புகழ்ந்து நம்மளையெல்லாம் குளிர்விக்கிறீங்க போல இருக்கு.
ஓருசில சாமியார்கள் செய்யும் வேலையால் உண்மையான சாமியார்களுக்கும் இப்போது கலிகாலம்தான்.மடாதிபதிகளின் வக்கிரத்திற்கு அப்பாவிகள் பலியாவதும் எப்படியும் பணம்சம்பாதிக்கனும் என்ற வக்கிரத்தின் வெளிபாடுதான் சாமியார்களின் மறுபக்கம்போடும் ஊடகங்களும் அதனுடன் சேரும் கூட்டங்களின் பிழைப்பும்.அரசியலில் ஆன்மீகவாதிகளின் உள்நுழைவுதான் எம்மக்களின் அவலத்தின் ஆரம்பம்.புனித இடம் புல்லுரிவிகளின் கூடமாகிவிட்டது.நீங்களும் போனால் கோப்பைகளுவிகளும்கூடவாறம் மனஅழுத்தம் தரும் வாழ்வில் இருந்து விடுபட.
நீங்க எதுக்கு ப்ளான் பண்றீங்கன்னு புரியுது, மாட்டிக்காம இருந்தா சரி...!
@Nesan
ஓருசில சாமியார்கள் செய்யும் வேலையால் உண்மையான சாமியார்களுக்கும் இப்போது கலிகாலம்தான்.மடாதிபதிகளின் வக்கிரத்திற்கு அப்பாவிகள் பலியாவதும் எப்படியும் பணம்சம்பாதிக்கனும் என்ற வக்கிரத்தின் வெளிபாடுதான் சாமியார்களின் மறுபக்கம்போடும் ஊடகங்களும் அதனுடன் சேரும் கூட்டங்களின் பிழைப்பும்.அரசியலில் ஆன்மீகவாதிகளின் உள்நுழைவுதான் எம்மக்களின் அவலத்தின் ஆரம்பம்.புனித இடம் புல்லுரிவிகளின் கூடமாகிவிட்டது.நீங்களும் போனால் கோப்பைகளுவிகளும்கூடவாறம் மனஅழுத்தம் தரும் வாழ்வில் இருந்து விடுபட.//
உங்களின் மன ஆதங்கத்தைக் கிளறி விட்டேனோ என்று எண்ணத் தோன்றுகிறது. உங்கேயும் வந்து விட்டார்களா சாமியார்கள். ஆய் வெளிநாட்டிலையும் சாமியார்கள்.
வெகு விரைவிலை நாமளும் உங்க நாட்டிலை ஒரு branch ஆரம்பிச்சிடனும்.
@பன்னிக்குட்டி ராம்சாமி
நீங்க எதுக்கு ப்ளான் பண்றீங்கன்னு புரியுது, மாட்டிக்காம இருந்தா சரி...!//
என் சீடனாக நீங்க இருக்கும் போது, எப்படிச் சகோ மாட்டிக்குவோம்?
பக்தி பகல் வேஷமானதை அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.
@சுவனப்பிரியன்
பக்தி பகல் வேஷமானதை அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.//
பக்தி பகல் வேசமா? இப்போ பல இலட்சங்களையும் சம்பாதிக்கும் வருமான வரி செலுத்தாத ஒரு தொழிலாகவே மாறிட்டு சகோ. நன்றிகள்.
சாமியாரே ஆச்சிரமத்தில் எனக்கும் இடம் உண்டா? கலக்கல் காமெடி நண்பா!!
இது உங்க சொந்தக் கதையா ? எனக்கு ரொம்ப நாளாவே டவுட்டு .. சுவாமி நித்தியானந்தா வலைப்பதிவில் புனைப் பெயரில் எழுதி வருகின்றாராம்.. ஏன் அது நீங்களா இருக்கக் கூடாதுனு தோனுது ........................ !!!
சாமியாரா ஆகப்போறீங்க....சிஷ்யைகளுடன் மஜாவா இருக்க ஆசிர்வதிக்கிறேன்....சி...சி..வாழ்த்துகிறேன்
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
சாமியாரே ஆச்சிரமத்தில் எனக்கும் இடம் உண்டா? கலக்கல் காமெடி நண்பா!!//
சீடானாக மட்டுமே அனுமதி, இடம் உண்டு குழந்தாய். கமரா போனுக்கு அனுமதி இல்லை.
@இராஜராஜேஸ்வரி
நீங்கள் நீங்களாவே இருந்துகொள்ளுங்கோ !//
சும்மா ஒரு காமெடியாகப் போட்டேன். நீங்க ரொம்ப சீரியஸ்ஸா எடுத்திட்டீங்க போல.
@இக்பால் செல்வன்
இது உங்க சொந்தக் கதையா ? எனக்கு ரொம்ப நாளாவே டவுட்டு .. சுவாமி நித்தியானந்தா வலைப்பதிவில் புனைப் பெயரில் எழுதி வருகின்றாராம்.. ஏன் அது நீங்களா இருக்கக் கூடாதுனு தோனுது ........................ !!!//
ஆஹா... ஆஹா... கிளம்பிட்டாங்கய்யா...கிளம்பிட்டாங்க..
மகனே! என் சீடனாக இருக்கும் நீங்கள் இப்படி உண்மைகளை உலகறியச் செய்யலாமா?
குசும்பின் உச்சகட்டம்...செம காமடி சாமியோ!!!
@ரஹீம் கஸாலி
சாமியாரா ஆகப்போறீங்க....சிஷ்யைகளுடன் மஜாவா இருக்க ஆசிர்வதிக்கிறேன்....சி...சி..வாழ்த்துகிறேன்//
என்னது? சிஷ்யைகளுடன் மாயமாய் மறைய வாழ்த்துக்களா!
ஒரு நோக்கமாத்தான் எல்லோரும் ஆச்சிரமத்திற்கு வர்றீங்க...
@! சிவகுமார் !
குசும்பின் உச்சகட்டம்...செம காமடி சாமியோ!!!//
க...க...போ..
கலி காலத்தில் கவலைகளை மறக்கும் போஸ்ற் என்று சொல்றீங்களா?
நன்றிகள் சகோதரம்.
மங்களம் உண்டாகட்டும்.. ஹி ஹி
டைட்டிலைப்பார்க்கும்போதே இந்த மாதிரி வில்லங்கமாத்தான் இருக்கும்னு நினைச்சேன்.. ஹா ஹா
@சி.பி.செந்தில்குமார்
மங்களம் உண்டாகட்டும்.. ஹி ஹி//
சாமியாருக்கே ஆசிர்வாதம்! வாழ்க வாழ்க மகனே!
டைட்டிலைப்பார்க்கும்போதே இந்த மாதிரி வில்லங்கமாத்தான் இருக்கும்னு நினைச்சேன்.. ஹா ஹா//
ம்...சில விவகாரமான விடயங்களை வில்லங்கமாகத் தான் கிளற வேண்டி இருக்கு. நன்றிகள் சகோ.
FYI
Samiyar work is to know himself...
God is inside you as uyir.
@Balu
FYI
Samiyar work is to know himself...
God is inside you as uyir.//
How can we trust this fake sami's?
Post a Comment