ஊரில் தேர்தல் காலம்
தம் தேவைகளை உணர்ந்தோராய்
வேட்பாளர்கள் வீடு தேடி வரும் காலம்
பொய்களையெல்லாம் வர்ணமடித்து
பேச்சோசை எனும் பூச் சூடி
அலங்கரித்து, அழகாக்கி
அனைவரின் கதவுகளையும் தட்டி
வாக்குக் கேட்கும் இழிவான காலம்!
மக்களின் பிரச்சினை என்னவென்றே
தெரியாத மந்திரிகள்
தாம் புசித்ததை,
ஏப்பம் விட்டதை
’ஏவறைகளாக்கி கிராமெங்கும்
எட்டிப் பார்த்து துப்பும் வேளை இது!
உடலின் புஜ பலத்திற்கு
வார்த்தை ஜாலமிட்டு
வானொலி தொலைக்காட்சியெங்கும்
வாக்குக்காய் கையேந்தும்
வல்லூறுகளின் பிரச்சாரம்!
வீதிகள் தோறும் திடீரென முளைக்கும்
விலை மதிப்பற்ற விளம்பர பலகைகள்
அதில் நாக்கு கிழிபட்ட படி
நாலு வார்த்தைகளை
உதிர்க்கும் உயிரற்ற ஜீவன்கள்!
மக்கள் நலன்களெனும்
மேடை நாடகத்தில்
மந்திரிகள் வில்லன்களாய்;
சந்தர்ப்பவாத, சூழ்ச்சிகளை
அறியாதோராய்
குறிஞ்சிப் பூவை போல
இந்த இலவசங்களைக் கண்டு
ஏப்பம் விட்ட படி
எல்லோர் முகங்களும்!
விலை கொடுத்து வாங்காத
டாஸ்மாக் சரக்கு முதல்
மேல் நாட்டு விஸ்கி வரை
பிரச்சாரங்களின் பெறுமதியை
வாக்குகளாய் மாற்றும்,
வருடம் தோறும்
காற்றில் பறக்கும் வாக்குறுதிகள்
அவற்றின் உண்மையை
உணராதவர்களாய் சேற்றில்
கால் பதிக்கும் ஏழைகள்!
மீண்டும் தேர்தல் வரும்,
மீளாத் துயில் கொண்டோரும்
எழுவார்கள்,
இலவசங்கள்
இடை விடாது தொடரும்
தலையில் மிளகாய்
அரைக்கும் வித்தை
தலைவர்களுக்கு மட்டுமே தெரியும்!
மக்களின் அன்றாட
வாழ்வோ நெருப்பில்
மெழுகு போல எரியும்!
*ஏவறை: சாப்பிட்ட பின்பு ஏப்பம் விடும் போது உருவாகும் சத்தம்.
|
40 Comments:
முதன் முதலாக முதன் முதலாக பரவசமாக பரவசமாகத்தான்...
>>சந்தர்ப்பவாத, சூழ்சிகளை
சந்தர்ப்பவாத, சூழ்ச்சிகளை...
>>தலைவர்க்கு மட்டும் தான்
தெரியும் என்பதால்!
கலைஞரை மட்டும் தாக்குவதாக இருந்தால் இந்த லைன் ஓக்கே.. பொதுவாக எல்லாருமே அப்படித்தான் என கருத்து இருந்தால்
தலைவர்களுக்கு மட்டும் தான்
தெரியும் என்பதால்!
என மாற்றலாம்
@சி.பி.செந்தில்குமார்
தவறுகளைத் திருத்தி விட்டேன் சகோதரம்.
உங்களின் கருத்துக்களுக்கு நன்றிகள்.
விலை கொடுத்து வாங்காத
டாஸ்மாக் சரக்கு முதல்
மேல் நாட்டு விஸ்கி வரை
பிரச்சாரங்களின் பெறுமதியை
வாக்குகளாய் மாற்றும்,
கூடவே....
கிரைண்டரும், மிக்சியும், காற்றாடியும் என்று சேர்த்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்
மீண்டும் தேர்தல் வரும்,
மீளாத் துயில் கொண்டோரும்
எழுவார்கள்,
இலவசங்கள்
இடை விடாது தொடரும்
தலையில் மிளகாய்
அரைக்கும் வித்தை
தலைவர்களுக்கு மட்டுமே தெரியும்!
மக்களின் அன்றாட
வாழ்வோ நெருப்பில்
மெழுகு போல எரியும்!
உண்மை உண்மை!! நல்ல நச்சென்ற கவிதை நண்பா!!
வீதிகள் தோறும் திடீரென முளைக்கும்
விலை மதிப்பற்ற விளம்பர பலகைகள்
அதில் நாக்கு கிழிபட்ட படி
நாலு வார்த்தைகளை
உதிர்க்கும் உயிரற்ற ஜீவன்கள்!
நல்ல வாக்கியத்தேர்வு, சொற் கோர்ப்பு! வாழ்த்துக்கள்!!
மக்கள் நலன்களெனும்
மேடை நாடகத்தில்
மந்திரிகள் வில்லன்களாய்;
சந்தர்ப்பவாத, சூழ்ச்சிகளை
அறியாதோராய்
குறிஞ்சிப் பூவை போல
இந்த இலவசங்களைக் கண்டு
ஏப்பம் விட்ட படி
எல்லோர் முகங்களும்!
......உண்மை சுடத்தான் செய்கிறது. மக்கள் அனைவரும் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். இது ஒரு வகை விழிப்புணர்வு கவிதை.
விழிப்புணர்வு கவிதை.
////மக்களின் பிரச்சினை என்னவென்றே
தெரியாத மந்திரிகள்
தாம் புசித்ததை, ஏப்பம் விட்டதை
’ஏவறைகளாக்கி கிராமெங்கும்
எட்டிப் பார்த்து துப்பும் வேளை இது!//// ஆட்சி காலத்தில் அடிச்ச கொள்ளையிலே எலும்புத்துண்டாக வீசி எறியிரார்கள் தேர்தல் காலத்திலே ... நல்ல வரிகள் நிரூபன்...
பக்திப் பரவசமாய் பழனி சித்தனாதன் விபூதியை மண்டையில் தடவி பொழுதும் சிகரெட் புகைக்கும்
இமயமலை அடிவருடியை இப்படியா அடிப்பது?
அப்பு...ராசா...கவனம்.ஆட்டோ வரப்போகுது யாழ்ப்பாணத்துக்கு !
கவிதை அரசியல்வாதிகளுக்குச் சாட்டையடி.ஆனால் மக்களும் புரிஞ்சுகொள்ளவேணும்.இலவசங்களை ஒதுக்கவேணும்.செய்வார்களா !
//எம் உறவுகளின்
ஊரில் தேர்தல் காலம்//
உறவே.!!
//அனைவரின் கதவுகளையும் தட்டி
வாக்குக் கேட்கும் இழிவான காலம்!//
என்னமோ காலத்தின் சூழ்நிலையில் அவர்கள் இவ்வாறு பிச்சை கேட்டு வருவதுபோல, அவர் வேண்டாததை செய்வது போல இழிவு காலம் என்று சொல்வதேன்.!!
//’ஏவறைகளாக்கி கிராமெங்கும்
எட்டிப் பார்த்து துப்பும் வேளை இது!//
கிராமம் மட்டும் தானா.??
//அதில் நாக்கு கிழிபட்ட படி
நாலு வார்த்தைகளை//
ஹே ஹே.!! இதெல்லாம் சாதாரணம்பபா.!!
//விலை கொடுத்து வாங்காத
டாஸ்மாக் சரக்கு முதல்
மேல் நாட்டு விஸ்கி வரை
பிரச்சாரங்களின் பெறுமதியை//
ஏதோ வயித்தெரிச்சல் மாதிரி தெரியுதே.!!
//மக்களின் அன்றாட
வாழ்வோ நெருப்பில்
மெழுகு போல எரியும்!//
அதெல்லாம் பழகிபோச்சுங்கோ.!
இப்ப பொதுவாய்.. வார்த்தைகளில் முந்தைய கவிதையின் ஜாலம் இல்லை.. வருத்தம் தெரிந்த அளவு வலி தெரியவில்லை..(உனக்கு தானடா வலி, நிருபனுக்கு ஏன் வலி.!!)
இதுவோ இல்லை முந்தைய கவிதையா என்கையில் முந்தைய கவிதை பரிசை அள்ளும்..
@சி.பி.செந்தில்குமார்
உறவுகளே, சகோதரர்களே! இந்தக் கவிதையினை ஒரு குறுகிய நேரத்தினுள் எழுதினேன். இக் கவிதை என்னைப் பொறுத்த வரை நேர்த்தியாக எழுதப்படாது, அவசரமாக எழுதப்பட்டதாகவே இருக்கிறது.
இக் கவிதையில் உள்ள தவறுகளைச் சகோதரர் செந்தில்குமார் அவர்கள் சுட்டிக் காட்டியிருந்தார். அவரின் விமர்சனங்களையடுத்து, இக் கவிதையினை கொஞ்சம் திருத்தி, மாற்றியிருந்தேன்.
இக் கவிதை பற்றி நீங்கள் சொல்லும் கருத்துக்களும், விமர்சனங்களும், பாராட்டுக்களும் சகோதரர் செந்தில்குமாருக்கே உரியது! எனக்கல்ல!
சகோ செந்திலுக்கு உங்கள் சார்பிலும், என் சார்பிலும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
@ரஹீம் கஸாலி
விலை கொடுத்து வாங்காத
டாஸ்மாக் சரக்கு முதல்
மேல் நாட்டு விஸ்கி வரை
பிரச்சாரங்களின் பெறுமதியை
வாக்குகளாய் மாற்றும்,
கூடவே....
கிரைண்டரும், மிக்சியும், காற்றாடியும் என்று சேர்த்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்//
ம்... அந்த நேரம் இவை பற்றி நினைக்கவில்லை. இலவச லப்டொப்பையும் சேர்த்திருக்கலாம்.
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
வீதிகள் தோறும் திடீரென முளைக்கும்
விலை மதிப்பற்ற விளம்பர பலகைகள்
அதில் நாக்கு கிழிபட்ட படி
நாலு வார்த்தைகளை
உதிர்க்கும் உயிரற்ற ஜீவன்கள்!
நல்ல வாக்கியத்தேர்வு, சொற் கோர்ப்பு! வாழ்த்துக்கள்!!//
நன்றிகள் சகோ.
@Chitra
மக்கள் நலன்களெனும்
மேடை நாடகத்தில்
மந்திரிகள் வில்லன்களாய்;
சந்தர்ப்பவாத, சூழ்ச்சிகளை
அறியாதோராய்
குறிஞ்சிப் பூவை போல
இந்த இலவசங்களைக் கண்டு
ஏப்பம் விட்ட படி
எல்லோர் முகங்களும்!
......உண்மை சுடத்தான் செய்கிறது. மக்கள் அனைவரும் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். இது ஒரு வகை விழிப்புணர்வு கவிதை.//
நன்றிகள் சகோதரி, உண்மைகளை எமது உறவுகள் உணர்ந்து இம் முறைத் தேர்தலில் சரியான பதிலை வழங்குவார்கள் என நம்புகிறேன்.
@அன்புடன் மலிக்கா
விழிப்புணர்வு கவிதை...//
நன்றிகள் சகோதரி, இனி மக்கள் விழிப்படைய வேண்டுமே!
@கந்தசாமி.
மக்களின் பிரச்சினை என்னவென்றே
தெரியாத மந்திரிகள்
தாம் புசித்ததை, ஏப்பம் விட்டதை
’ஏவறைகளாக்கி கிராமெங்கும்
எட்டிப் பார்த்து துப்பும் வேளை இது!//// ஆட்சி காலத்தில் அடிச்ச கொள்ளையிலே எலும்புத்துண்டாக வீசி எறியிரார்கள் தேர்தல் காலத்திலே ... நல்ல வரிகள் நிரூபன்...//
ஆகா. ஆகா.. ஆட்டைக் கடிச்சு, மாட்டைக் கடிச்சு நம்ம சகோ நிரூபனைக் கடிக்க ஆட்டோ அனுப்புவதற்காக உட் கருத்துக்களை உலகறியச் செய்திருக்கிறார். நன்றிகள்.
@ttpian
பக்திப் பரவசமாய் பழனி சித்தனாதன் விபூதியை மண்டையில் தடவி பொழுதும் சிகரெட் புகைக்கும்
இமயமலை அடிவருடியை இப்படியா அடிப்பது?//
சகோதரம், இக் கவிதையில் எல்லோரையுமே சாடியுள்ளேன். தனியொருவரை அல்ல. இப்படியான தனி மனித விமர்சனங்களைத் தவிர்த்து விட்டு, அழகிய விமர்சனங்களை கவிதையுடன் தொடர்புபடுத்தித் வழங்கியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். நன்றிகள் உங்களின் உணர்வினைப் பகிர்ந்து கொண்டதற்காக!
@ஹேமா
அப்பு...ராசா...கவனம்.ஆட்டோ வரப்போகுது யாழ்ப்பாணத்துக்கு !
கவிதை அரசியல்வாதிகளுக்குச் சாட்டையடி.ஆனால் மக்களும் புரிஞ்சுகொள்ளவேணும்.இலவசங்களை ஒதுக்கவேணும்.செய்வார்களா !//
சகோதரி, அரசியல்வாதிகள் புரிந்து கொண்டால் கவிதை எழுதினவனைத் தேடி ஆட்டோவை அனுப்புவார்கள்.
மக்கள் புரிந்து கொண்டால் மந்திரிகளை வீட்டுக்கே அனுப்புவார்கள்.
இருங்கோ, வருகிறேன். றோட்டிலை ஏதோ ஒரு வாகனம் இரைகிற சத்தம் கேட்கிறது. ஆய் மஞ்சள் கலரு ஆட்டோ! ஐ ஆம் எஸ்கேப்பு.......
நன்றிகள் சகோதரம்.
@தம்பி கூர்மதியன்
//என்னமோ காலத்தின் சூழ்நிலையில் அவர்கள் இவ்வாறு பிச்சை கேட்டு வருவதுபோல, அவர் வேண்டாததை செய்வது போல இழிவு காலம் என்று சொல்வதேன்.!!//
அவர்கள் வேண்டியதைத் தான் செய்கிறார்கள் சகோ. ஆனாலும் மக்களுக்கு யார் வந்தாலும் அபிவிருத்தியோ, முன்னேற்றங்களோ நடக்கப் போவதில்லை தானே. மக்களுக்கு எப்போதுமே ஒரே காலம் எனும் அடிப்படையில் இந்தச் சொற்றொடரைப் பயன்படுத்தினேன்.
@தம்பி கூர்மதியன்
//’ஏவறைகளாக்கி கிராமெங்கும்
எட்டிப் பார்த்து துப்பும் வேளை இது!//
கிராமம் மட்டும் தானா.??//
இல்லையே அனைத்துப் பகுதிகளிலும் தான். நகரத்தையும் தவற விட்டு விட்டேன்.
நினைவூட்டியதற்கு நன்றிகள்.
@தம்பி கூர்மதியன்
//அதில் நாக்கு கிழிபட்ட படி
நாலு வார்த்தைகளை//
ஹே ஹே.!! இதெல்லாம் சாதாரணம்பபா.!!//
சகோ இந்தத் தேர்தலிலை எதிர் கட்சியை நாக்கு கிழிய கிழிய பேசின ஆளு அடுத்த தேர்தலிலை எதிர்கட்சியின் மேடையில் நின்று ஆளுங் கட்சிக்கு எதிராகப் பேசுறது சகஜம் தானே!
@தம்பி கூர்மதியன்
/விலை கொடுத்து வாங்காத
டாஸ்மாக் சரக்கு முதல்
மேல் நாட்டு விஸ்கி வரை
பிரச்சாரங்களின் பெறுமதியை//
ஏதோ வயித்தெரிச்சல் மாதிரி தெரியுதே.!!//
எப்படிக் கண்டு பிடிச்சீங்க?
எள்ளாக இருந்தாலும் ஏழாகப் பகிர வேண்டுமாம். அதனால் தான் ஒரு சின்ன ஆதங்கம். பார்சலிலை அனுப்ப்ப முடியுமே உங்க ஊரு டஸ்மாக்கை இலங்கைக்கு.
@தம்பி கூர்மதியன்
இப்ப பொதுவாய்.. வார்த்தைகளில் முந்தைய கவிதையின் ஜாலம் இல்லை.. வருத்தம் தெரிந்த அளவு வலி தெரியவில்லை..(உனக்கு தானடா வலி, நிருபனுக்கு ஏன் வலி.!!)
இதுவோ இல்லை முந்தைய கவிதையா என்கையில் முந்தைய கவிதை பரிசை அள்ளும்..//
மிக மிக நன்றிகள் சகோதரம், இந்தக் கவிதையினை தேர்தல் பற்றிய விழிப்புணர்வு நோக்கில் அவசர அவசரமாக காரணமாக எழுதினேன்.
கவிதை பற்றி அதிகம் கவனம் எடுக்கவில்லை என்பது உண்மையே, அதற்கு கவிதையே சாட்சி,
கவிதையில் ஒரு சில இடங்களை சகோ செந்தில்குமார் சுட்டிக் காட்டி திருத்தும் படி அறிவுரை கூறியிருந்தார்.
கவிதையில் தரம், சுவை, உணர்வுகள் குறைவு என்பதனால் பழியினை நான் ஏற்றுக் கொள்கிறேன்.
உங்களனைவரின் பாராட்டுக்களையும் சகோ செந்தில்குமாருக்குச் சமர்பிக்கிறேன்.
நன்றிகள் சகோ.
@தம்பி கூர்மதியன்
இப்ப பொதுவாய்.. வார்த்தைகளில் முந்தைய கவிதையின் ஜாலம் இல்லை.. வருத்தம் தெரிந்த அளவு வலி தெரியவில்லை..(உனக்கு தானடா வலி, நிருபனுக்கு ஏன் வலி.!!)
இதுவோ இல்லை முந்தைய கவிதையா என்கையில் முந்தைய கவிதை பரிசை அள்ளும்..//
ஆய் நம்ம கவிதைக்கும் ஒரு ஒப்பீட்டு விமர்சனம், நன்றிகள் சகோ.
@இராஜராஜேஸ்வரி
மீளாத் துயில் கொண்டோரும்
எழுவார்கள்,//
காத்திருப்போம் எழுவதற்காக..//
சகோதரம், நீங்கள் அடுத்த தேர்தலிலும் இப்படியான பூச்சாண்டி வித்தைகள் இடம் பெற அனுமதிக்கப் போகிறீர்களா? வேண்டவே வேண்டாம், இந்தத் தேர்தலுடனே இவர்களினைப் பற்றி உணர்ந்து வாக்கினை வழங்குங்கள்.
விழிப்புணர்வை உன் கைவலிக்க பதிவு பண்ணதுக்கு நன்றி மாப்ள
விழிப்புணர்வுகவிதை அட்டகாசம்.
இந்த அரசியல்வாதிகளை நினைத்தாலே
கோவம்தான் பொத்துகிட்டு வருது.
கடல் கடந்தும் தெரியும் எங்கள் அரசியல் அம்மணம் தமிழக் வீதிகளில் மட்டும் மறைக்கப்படும் ரகசியம் என்னவென்று தெரியவில்லையே...
@Lakshmi
விழிப்புணர்வுகவிதை அட்டகாசம்.
இந்த அரசியல்வாதிகளை நினைத்தாலே
கோவம்தான் பொத்துகிட்டு வருது.//
எங்களால் என்ன செய்ய முடியும், கோபத்தை மட்டும் தானே காட்ட முடியும்.
@ராஜ நடராஜன்
கடல் கடந்தும் தெரியும் எங்கள் அரசியல் அம்மணம் தமிழக் வீதிகளில் மட்டும் மறைக்கப்படும் ரகசியம் என்னவென்று தெரியவில்லையே...//
வாயைத் திறந்தால் ஏதாவது ஒரு சட்டத்தின் கீழ் கைது செய்து அடைத்து விடுவார்களல்லவா. அது தான் காரணமாக இருக்குமோ?
நன்றிகள் சகோ.
மீண்டும் தேர்தல் வரும்,
மீளாத் துயில் கொண்டோரும்
எழுவார்கள்,
இலவசங்கள்
இடை விடாது தொடரும்
தலையில் மிளகாய்
அரைக்கும் வித்தை
தலைவர்களுக்கு மட்டுமே தெரியும்!
மக்களின் அன்றாட
வாழ்வோ நெருப்பில்
மெழுகு போல எரியும்!
சொல்ல வார்த்தைகள் இல்லை. அழகான வார்த்தை பிரயோகம்..இலவசம் என்னும் காந்தத்தில் இருகட்சிகளாலும் இழுக்கப் படுகிறோம்... என்பதை அழகாக சொல்லி இருக்கிறேர்கள் சகோ.... நான் அதிகம் ரசித்தது இந்த கவிதையில் தலையில் மிளகாய்
அரைக்கும் வித்தை
தலைவர்களுக்கு மட்டுமே தெரியும்!சூப்பர்.. சூப்பர்.. ஹான்ட்ஸ் ஆப்... சகோ
Post a Comment