நரம்பறுக்கும் வேகத்துடன்
உயிர் குடிக்கும் எறிகணையாய்
என் உணர்வுகளை கிளறிய படி
இப்போது ஒலியெழுப்பிப் போகிறது அது!
நெருடல் கொண்ட நினைவுகளையும்
பரவிக் கிடக்கும் கற்பனா புலன்களையும்
ஒட்ட நறுக்கி விடத் துடித்த படி
வார்த்தைகளால் வானினையும் தொடுகிறது அது!
அடுக்களையினூடு ஏறி, இப்போது
அந்தரங்க காட்சிகளையும்
அனுமானித்துப் பார்க்கும் உணர்வுகளை
என்னுள் கிளறி விட்டபடி
மெதுவாய் நகர்து கொண்டிருக்கிறது!
வாழ்வை, வாழ்வின் பிடிமானத்தை,
மனித மனங்களின் சிந்தனையை
வாய்க்கரிசி போட்டு,
உயிருடனே புதைத்த படி
வானுயர்ந்த கனவுகளையும்,
கற்பனைகளையும் கண் முன்னே
சிதைத்த படி
காலக் கிரமத்தில் கண்ணுக்கு மட்டும்
வர்ண மையடித்து - தான் கொண்ட
கோலத்தை மட்டும் உணர்த்தி
பிணந் தின்னும் பிராணியின் ஓலமாய்
ஒலித்துக் கொண்டிருக்கிறது
இந்த உணர்வற்ற ஜீவன்,
இனி மூன்றாவது அணியாக
இளைஞர் அணி எனும்
அறை கூவல் வருகையில்
நடிகையின் நர்த்தனங்களும்,
நாத்திகம் பேசுவோரினை
மாற்றும் நவரசங்களும்
இலவசமாய் கிடைக்கும்
உணர்வு மேலெழுந்து வருகிறது!
என் கற்பனைகளையும்
கனவுகளையும்
காற்றின் ஒற்றை வார்த்தையில்
அடமானம் வைத்து விட்டு;
சுயத்தைத் தொலைத்தவனாய்
பசியின் கொடுமையால்
உருக்குலைந்து, உடல் நலிந்து
உணவேதுமின்றி, இறுதியில்
அழுகி நாற்றமடிக்கும்
இறந்த விலங்கின்
உணவினை புசித்தபடி
சிரித்துக் கொண்டிருக்கிறேன் நான்!
உண்டு பசியாறும் வரை
தெரியவில்லை,
இறந்து சீழ்க்கள் வழிந்து
மணக்கும் ஓர் தெரு நாய்
தான் அது என்பது!
|
58 Comments:
முதல் மழை
செம தாக்கா இருக்கே.. ஆனாலும் அந்த கடைசி வரிகளில் கொஞ்சம் மாற்றம் தேவை..
>>>தெரு நாயின் கிழிந்து
தொங்கும் விதைப்பையின்
சீழினைச் சுவைத்தபடி
இந்த வரிகள் கொஞ்சம் வல்கரா இருக்கே?
நல்ல கவிதை மச்சி! செந்தில்குமார் சொன்னமாதிரி, இன்னுமொரு உவமையச் சொல்லியிருக்கலாம் என்பது எனது கருத்து!!
ம்ம்ம்ம்...... சுயம் தொலைந்து எவ்வளவு நாட்களாகிவிட்டன?
வாழ்வை, வாழ்வின் பிடிமானத்தை,
மனித மனங்களின் சிந்தனையை
வாய்க்கரிசி போட்டு,
உயிருடனே புதைத்த படி
வானுயர்ந்த கனவுகளையும்,
கற்பனைகளையும் கண் முன்னே
சிதைத்த படி
காலக் கிரமத்தில் கண்ணுக்கு மட்டும்
வர்ண மையடித்து - தான் கொண்ட
கோலத்தை மட்டும் உணர்த்தி
பிணந் தின்னும் பிராணியின் ஓலமாய்
ஒலித்துக் கொண்டிருக்கிறது
இந்த உணர்வற்ற ஜீவன்,
அது நாந்தாங்க!!
@சி.பி.செந்தில்குமார்
முதல் மழை//
என்னை நனைத்ததே, மூடி வைத்த யன்னல் திறந்ததே....
@சி.பி.செந்தில்குமார்
//
செம தாக்கா இருக்கே.. ஆனாலும் அந்த கடைசி வரிகளில் கொஞ்சம் மாற்றம் தேவை.//
இறுதி வரியை மாற்றி விட்டேன். மிகவும் ஆழமாக ஒரு உணர்வினை வர்ணிக்க நினைத்த்தேன். அது தான் இப்படி ஆகி விட்டது. மாற்றி விட்டேன் சகோ.
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
//அது நாந்தாங்க!!//
இன்னொரு தடவை படிச்சுப் பார்த்துச் சொல்லுங்க, அது நீங்க தானா என்று சகோ, மிகவும் கொடூரமான வார்த்தைகளால் வர்ணித்துள்ளேன், அது தான்.
சென்சார் செய்யப்பட்ட இறுதி வரியை பின்னூட்டத்தில் தெரியப்படுத்திய பதிவுலக ஏந்தல் சிபி வாழ்க
என் மரமண்டைக்கு பாதி தான் சகா புரிஞ்சது..அருமைன்னு பொய் சொல்ல விரும்பல
@டக்கால்டி
என் மரமண்டைக்கு பாதி தான் சகா புரிஞ்சது..அருமைன்னு பொய் சொல்ல விரும்பல//
நன்றிகள் சகோதரம், உங்களின் நேர்மையைப் பாராட்டுகிறேன்.
ஆனா.. அருமையான கவிதை...
கலக்கரீங்க...
ஆனா.. அருமையான கவிதை...
கலக்கரீங்க...
ஆங்ங்ங்ங்.. வந்துட்டேன்.. ம்ம்ம்ம்ம்ம்ம்.. என்னாது எழுதியிருக்கீங்க.. பட்சிட்டு வர்றேன்..
//என் உணர்வுகளை கிளறிய படி
இப்போது ஒலியெழுப்பிப் போகிறது அது!//
உங்களையுமா.???
//வார்த்தைகளால் வானினையும் தொடுகிறது அது!//
இதுக்கு பேர் வயித்தெரிச்சலா.???
//அந்தரங்க காட்சிகளையும்
அனுமானித்துப் பார்க்கும் உணர்வுகளை
என்னுள் கிளறி விட்டபடி//
ரொம்ப கூர்ந்து கவனிக்கிறீங்களோ.???
அது என்று எதைச் சொன்னீர்கள் ... கவிதையையா???? கவிதை அருமை.. தள வடிவமைப்பும் அருமை ...
தளத்துக்கு தலையர் ( header )வேண்டுமானால் இலவசமாக ஒன்றை செய்து தர முடியும்... எனது தளத்தில் இருப்பதைப் போல.. வேண்டும் எனின் எனக்கு ஒரு மின்னஞ்சலைத் தட்டுங்கள் ....
//பிணந் தின்னும் பிராணியின் ஓலமாய்
ஒலித்துக் கொண்டிருக்கிறது//
ஹே ஹே.. நோ பீலிங்..
//நடிகையின் நர்த்தனங்களும்,
நாத்திகம் பேசுவோரினை
மாற்றும் நவரசங்களும்
இலவசமாய் கிடைக்கும்//
நாத்திகம்-கலைஞர்ஜீ..
//அழுகி நாற்றமடிக்கும்
இறந்த விலங்கின்
உணவினை புசித்தபடி
சிரித்துக் கொண்டிருக்கிறேன் நான்!//
இருவேறு அர்த்தமாக எனக்கு புரிகிறது.. வரும் தேர்தலின் எனக்கான சவுக்கடி போல் உள்ளது..
//நடு இரவில் தெறித்து
நரம்பறுக்கும் வேகத்துடன்
உயிர் குடிக்கும் எறிகணையாய்
என் உணர்வுகளை கிளறிய படி
இப்போது ஒலியெழுப்பிப் போகிறது அது!//
தேர்தல் சமய ப்ரச்சாரங்கள்..
//நெருடல் கொண்ட நினைவுகளையும்
பரவிக் கிடக்கும் கற்பனா புலன்களையும்
ஒட்ட நறுக்கி விடத் துடித்த படி
வார்த்தைகளால் வானினையும் தொடுகிறது அது!//
தேர்தல் அறிக்கை..
//அடுக்களையினூடு ஏறி, இப்போது
அந்தரங்க காட்சிகளையும்
அனுமானித்துப் பார்க்கும் உணர்வுகளை
என்னுள் கிளறி விட்டபடி
மெதுவாய் நகர்து கொண்டிருக்கிறது!//
இலவசம்.. இலவசம்..
//காலக் கிரமத்தில் கண்ணுக்கு மட்டும்
வர்ண மையடித்து - தான் கொண்ட
கோலத்தை மட்டும் உணர்த்தி
பிணந் தின்னும் பிராணியின் ஓலமாய்
ஒலித்துக் கொண்டிருக்கிறது
இந்த உணர்வற்ற ஜீவன்,//
மக்கள் நிலை..
//நடிகையின் நர்த்தனங்களும்,
நாத்திகம் பேசுவோரினை
மாற்றும் நவரசங்களும்
இலவசமாய் கிடைக்கும்
உணர்வு மேலெழுந்து வருகிறது!//
வைகோ,விசயகாந்த்..
//அழுகி நாற்றமடிக்கும்
இறந்த விலங்கின்
உணவினை புசித்தபடி
சிரித்துக் கொண்டிருக்கிறேன் நான்!//
பேசறதெல்லாம் பேசிட்டு அவனுக்கே ஓட்டு போடுறது..
//உண்டு பசியாறும் வரை
தெரியவில்லை,
இறந்து சீழ்க்கள் வழிந்து
மணக்கும் ஓர் தெரு நாய்
தான் அது என்பது!//
இலவசம்.. இலவசம்னு வாங்கிட்டு பிறகு விலையற்றம்னு தவிக்கிறது..
முதல் வரியும் கடைசி வரியும் ரொம்பவும் அடர்த்தி நெருக்கமாக இருக்கிறது. மிக நல்ல ஆரம்பம்.
இக்கவிதையி;ல் தெறிக்கும் வார்த்தைகள் உங்களின் கோபத்தையே நினைவுபடுத்துகிறது
கவிதை அருமையா இருக்கு,
தொடர் கோர்வையாக வந்திருக்கு...
ம்ம் எல்லாத்திலும் கலக்குறீங்க...
அப்பிட்யே என்னுடைய ப்ளாக் வந்து வதந்திகளும் பரப்புறீங்க,
ம்ம் வாழ்க வளமுடன் ஹிஹி
கடந்து போகும் நிகழ்வுகளை
ரொம்ப நல்லாவே வேட்டையாடி இருக்கீங்க நண்பரே.
ரொம்ப நல்லா வந்திருக்கு.
வாழ்த்துக்கள்,
தொடருங்கள்
@!* வேடந்தாங்கல் - கருன் *!
நன்றிகள் சகோதரம்,
@தம்பி கூர்மதியன்
//ஆங்ங்ங்ங்.. வந்துட்டேன்.. ம்ம்ம்ம்ம்ம்ம்.. என்னாது எழுதியிருக்கீங்க.. பட்சிட்டு வர்றேன்..//
அட வருகையை நம்ம தலை உறுதிப்படுத்திட்டாரில்ல...
You mean, you are present here?
is that correct?
@தம்பி கூர்மதியன்
//அந்தரங்க காட்சிகளையும்
அனுமானித்துப் பார்க்கும் உணர்வுகளை
என்னுள் கிளறி விட்டபடி//
ரொம்ப கூர்ந்து கவனிக்கிறீங்களோ.???//
என்னது கூர்ந்து கவனிக்கிறீங்களோ? நாங்க எல்லாம் கூலிங் கிளாஸ் போட்டு Micro லென்ஸ் வைச்சு மறைந்திருந்து, நன்றாக ஊடுருவியும் பார்ப்பமில்லே:)))
@இக்பால் செல்வன்
அது என்று எதைச் சொன்னீர்கள் ... கவிதையையா???? கவிதை அருமை.. தள வடிவமைப்பும் அருமை ...
தளத்துக்கு தலையர் ( header )வேண்டுமானால் இலவசமாக ஒன்றை செய்து தர முடியும்... எனது தளத்தில் இருப்பதைப் போல.. வேண்டும் எனின் எனக்கு ஒரு மின்னஞ்சலைத் தட்டுங்கள் //
அது என்று எதைச் சொன்னேன் என்பதை சகோதரர் தம்பி கூர்மதியான், இப் பின்னூட்டங்களுக்கு கீழே அருமையான முறையில் பொருள்- விளக்கங்களுடன் கூறியுள்ளார்.
அது என்பது இங்கே ஒரு அஃறிணைப் பொருளாக விளிக்கப்பட்டிருக்கிறது. அது நம்ம தேர்தல் சகோ. நன்றிகள் தோழா.
ஒரு மின்னஞ்சலைப் தட்டினாப் போச்சு. உங்களின் ஆழ்ந்த அன்பிற்கும், கருத்துக்களுக்கும் நன்றிகள். கண்டிப்பாக மின்னஞ்சல் அனுப்புகிறேன்.
@தம்பி கூர்மதியன்
//என் உணர்வுகளை கிளறிய படி
இப்போது ஒலியெழுப்பிப் போகிறது அது!//
உங்களையுமா.??//
ஆம், சகோதர பாசப் பிணைப்பேல்லோ, அது தான், எங்களின் தாய்த் தேசத்தில் நடப்பதென்றால் எங்க வீட்டிலையும் நடப்பது போன்ற ஒரு உணர்வு தானே.
இப்ப மனசிற்குள் நினைப்பீங்களே?
என்ன ஒரு பாசப் பிணைப்பு என்று:))
அவ்..........
@தம்பி கூர்மதியன்
//பிணந் தின்னும் பிராணியின் ஓலமாய்
ஒலித்துக் கொண்டிருக்கிறது//
ஹே ஹே.. நோ பீலிங்.//
இந்தக் கவிதையினை எழுதும் போதே யோசித்தேன், இவ் இடத்தில் இந்த உவமைக்குப் பதிலாக வேறு உவமை ஒன்று போட வேண்டும் என்று, எனக்கும் அஃதே...அஃதே.. இவ் இடத்தில் நோ பிலீங்.
@தம்பி கூர்மதியன்
//நடிகையின் நர்த்தனங்களும்,
நாத்திகம் பேசுவோரினை
மாற்றும் நவரசங்களும்
இலவசமாய் கிடைக்கும்//
நாத்திகம்-கலைஞர்ஜீ.//
சகோ.. உங்களுக்கு எப்படி நன்றி கூறுவது என்று தெரியல்லை.
ஓவரா, உள்ளார்ந்து கவிதையைக் கூர்ந்து- என் சகோ கூர்மதியான் கவனித்திருக்கிறார்.
ஆனாலும் நீங்கள் இதிலை கொடுத்த விளக்கத்தை படித்தார் என்றால் கடல் கடந்து இலங்கை வந்து என்னைக் கைது செய்யும் படி கலைஞர் அறிக்கையும் விட்டிடுவார்..
நான் சில சூசகமான மொழியினை கவிதையிலை கையாண்டாலும், அரசியலை கலாய்த்தாலும், பப்பிளிக்காக பொருளைச் சொல்லிப் புட்டீங்களே...
நீங்க ரொம்ப பெரிய வரு சகோ..
பேருக்கு ஏற்ற மாதிரி....கூர் மதியான் தான்!
@தம்பி கூர்மதியன்
//
//அழுகி நாற்றமடிக்கும்
இறந்த விலங்கின்
உணவினை புசித்தபடி
சிரித்துக் கொண்டிருக்கிறேன் நான்!//
இருவேறு அர்த்தமாக எனக்கு புரிகிறது.. வரும் தேர்தலின் எனக்கான சவுக்கடி போல் உள்ளது..//
ஏன் நீங்கள் இலவசமாய் ஏதும் வாங்கியே இந்த முறை ஓட்டுப் போடப் போறீங்கள்:))) அப்படியென்றால் பொருந்துமில்ல..
நல்ல வேளை, நீங்கள் ஒராள் மட்டும் தான் இதனைப் புரிந்திருக்கிறீர்கள். இல்லை என்றால் இப்போது என்னை நோண்டி, நொங்கெடுத்திருப்பார்கள்...
@தம்பி கூர்மதியன்
என் கவிதையின் உள்ளடக்கம், குறியீடு, படிமங்கள் அனைத்தையும் நன்றாக அலசி, ஒரு பொழிப்புரையே செய்திருக்கிறீர்கள் சகோ. உங்களைப் போன்ற விமர்சகர்களின் பங்களிப்பும், கருத்துக்களும், விமர்சனங்களும் தான் என் போன்ற நாற்றுக்களை(என்னைப் போன்ற சிறு பதிவர்களை)நீரிட்டு வளர வைக்கும்.
இந்த விமர்சனங்கள் தான்,எம்மை நன்றாகப் பட்டை தீட்டி எழுத வைக்கும் என்பதில் ஐயமில்லை.
சகோ, கூர்மதியான், : கூர்- மதியான். தன் கூர்மதியால் இக் கவிதையினை அலசி வழங்கிய கருத்துக்களுக்கு மிகுந்த நன்றிகள்..
கடைசி வரியில அசத்திட்டியலே மக்கா..!! :-))
@மைந்தன் சிவா
கவிதை அருமையா இருக்கு,
தொடர் கோர்வையாக வந்திருக்கு...
ம்ம் எல்லாத்திலும் கலக்குறீங்க...
அப்பிட்யே என்னுடைய ப்ளாக் வந்து வதந்திகளும் பரப்புறீங்க,
ம்ம் வாழ்க வளமுடன் ஹிஹி//
மேலே உள்ள வசனத்தில் ஏதும் பின் நவீனத்துவம் இல்லையோ?
வாழ்க வளமுடன் என்பது என் காதில் வாழ்க தப்சியுடன் என்று என் காதில் ஒலிக்கிறது.
நண்பனுக்கா, சகோதரனுக்காக ஒரு இனிய உள்ளம் தப்சியை விட்டுக் கொடுத்துப் போவது போன்ற உணர்வினை இது ஏற்படுத்துகிறது;))
(என்ன சகோ அரிவாளைத் தேடுறீங்களா? ஐயாம் எஸ் கேப்பு)
உங்க பிளாக்கிலை வதந்திகளைப் பரப்புறேனா? என்ன சொல்லிப் புட்டீங்க, நான் இலங்கை வானொலி கேட்பதில்லை. இப்போதெல்லாம் தனியார் வானொலிகள் தான் கேட்கிறனான். ஆதலால் வதந்திகளைப் பரப்ப சான்சே இல்லை. ஓ அந்த தப்சி மேட்டரா:))
@கமலேஷ்
கடந்து போகும் நிகழ்வுகளை
ரொம்ப நல்லாவே வேட்டையாடி இருக்கீங்க நண்பரே.
ரொம்ப நல்லா வந்திருக்கு.
வாழ்த்துக்கள்,
தொடருங்கள்//
வாழ்வில் நாமும் காணும் விடயங்களைப் பாடுவது, படைப்பது தானே நமது தொழில். நன்றிகள்.. நன்றிகள்.
@ஜெய்லானி
கடைசி வரியில அசத்திட்டியலே மக்கா..!! :-))//
சகோதரம், இதையெல்லாம் பப்பிளிக்காக சொல்லக் கூடாது, நம்மளைப் புடிச்சி உள்ள போட்டிடுவாங்க:))
நன்றிகள் சகோ.
@டக்கால்டி
என் மரமண்டைக்கு பாதி தான் சகா புரிஞ்சது..அருமைன்னு பொய் சொல்ல விரும்பல//
இந்தக் காலத்திலை புரியாத மாதிரி எழுதுறதைத் தான் கவிதை என்று சொலுறாங்கோ...
@நிரூபன்
என் மரமண்டைக்கு பாதி தான் சகா புரிஞ்சது..அருமைன்னு பொய் சொல்ல விரும்பல//
இந்தக் காலத்திலை புரியாத மாதிரி எழுதுறதைத் தான் கவிதை என்று சொலுறாங்கோ...
@ஆதவாமுதல் வரியும் கடைசி வரியும் ரொம்பவும் அடர்த்தி நெருக்கமாக இருக்கிறது. மிக நல்ல ஆரம்பம்.
இக்கவிதையி;ல் தெறிக்கும் வார்த்தைகள் உங்களின் கோபத்தையே நினைவுபடுத்துகிறது//
சகோ, உங்களின் இரண்டு பின்னூட்டங்கள் ஸ்பாம் பெட்டியினுள் போய் மறைந்து விட்டன. இப்போது தான் பார்த்து, பிரசுரித்தேன். உங்களின் விமர்சனத்திற்கு நன்றிகள்..
கவிதை இது கவிதை.உள்ளுணர்வை நோண்டியெடுத்துப் பார்த்து மீண்டும் புதைத்து மலர்மாலை போடும் நிறைவாக !
எழுத்து சந்தங்கள் அழகாக விழுகின்றன கவிதையில்.
////கனவுகளையும்
காற்றின் ஒற்றை வார்த்தையில்
அடமானம் வைத்து விட்டு;////
ஒரு சில வரிகளே தங்கள் பதிவின் ஆழத்தை அர்த்தத்துடன் விளக்ககிறது நிருபன்...
present
ஆமாங்க, மிக ஆழமாக ஒரு உணர்வைச்சொல்லும்போது இதுபோல வார்த்தைகள் நம்மை அறியாமல் வந்துவிடும்.
ஆரம்ப வரிகளே
"உயிர் குடிக்கும் எறிகணையாய்
என் உணர்வுகளை"
துடித்தழ வைக்கின்றன.
அருமையான வகிதை.
மாப்ள கவிதை நல்லா இருக்குய்யா
Soory எனது கருத்துரையில் தட்டச்சுப் பிழையால் “கவிதை“ ”வகிதை” ஆகிவிட்டது
@FOOD
இன்று உங்கள் வலைப்பூவை முதல்முறை பார்த்தேன். அருமையாக இருக்கிறது. இணைந்துவிட்டேன். உங்கள் நட்பு வட்டத்தில் எங்கள் ஊருக்கு அருகிலிருக்கும் சிவசைலத்தையும் சென்று பார்த்தேன். நன்றி.//
வருக வருக உறவே! நன்றிகள் சகோ.
@ஹேமா
கவிதை இது கவிதை.உள்ளுணர்வை நோண்டியெடுத்துப் பார்த்து மீண்டும் புதைத்து மலர்மாலை போடும் நிறைவாக !//
உங்களின் விமர்சனத்திற்கு நன்றிகள் சகோதரம்.
@ராஜ நடராஜன்
எழுத்து சந்தங்கள் அழகாக விழுகின்றன கவிதையில்.//
நன்றிகள் சகோ.
@♔ம.தி.சுதா♔
ஒரு சில வரிகளே தங்கள் பதிவின் ஆழத்தை அர்த்தத்துடன் விளக்ககிறது நிருபன்...//
நன்றிகள் சுதா.
@ரஹீம் கஸாலி
present//
shall I mark you on the board?
thank you.
@Lakshmi
ஆமாங்க, மிக ஆழமாக ஒரு உணர்வைச்சொல்லும்போது இதுபோல வார்த்தைகள் நம்மை அறியாமல் வந்துவிடும்.//
நன்றிகள்.
@Dr.எம்.கே.முருகானந்தன்
ஆரம்ப வரிகளே
"உயிர் குடிக்கும் எறிகணையாய்
என் உணர்வுகளை"
துடித்தழ வைக்கின்றன.
அருமையான வகிதை.//
நன்றிகள் சகோ.
இலவசங்களில் மயங்கிக்கிடப்போருக்கான அருமையான வேல்வீச்சு.
அருமைய்யா... அருமை...
Post a Comment