Wednesday, March 23, 2011

கேட்டியளே, எனக்கு கலியாணம் நடக்காதாம்!

மனித மனங்கள் ஒவ்வொன்றிற்கும் பல் வேறு விதமான ஆசா பாசங்கள் இருக்கும். அத்தகைய மனித இனத்த்தில் வந்த எனக்கும் இயல்பான ஆசாபாசங்கள் இருப்பது வழமை தானே. ஒரு சில விசயங்களைத் தனி மனிதனாகத் தீர்த்து விடலாம். இன்னும் சில விடயங்களைப் பேசித் தீர்த்து விடலாம்.

ஆனால் சில விபரீதமான விடயங்களால் மெல்லவும், முடியாமல், விழுங்கவும் முடியாமல் மனசுக்குள் பூட்டிப் பூட்டி வைத்து தீர்க்க முடியாதவர்களாகி,  இறுதியில் மன அழுத்தத்திற்குத் தானே நாங்கள் ஆளாகிறோம். என்னுடைய ஒரு சில பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும் எனும் நம்பிக்கையிலை தான் உங்களிடம் இப்பதிவினைக் கொண்டு வருகிறேன்.
என்னய்யா எல்லோரும் வானத்தைப் பார்த்துப் பெரு மூச்சு விடுற மாதிரி விறைச்சுப் போய் நிற்கிறீங்க. ஒரு சிதம்பர இரகசியத்தை, இவ்வளவு நாளும் மனதுக்கை பூட்டிப் பூட்டி வைச்சு அழுதுகிட்டிருந்த உள்ளூர் ரகசியத்தை இப்ப உலகத்திற்கே வலைப் பதிவு மூலமாகப் பரகசியமாக்கிப் பரிகாரம் தேடலாம் எனும் முயற்சி தான் இது.

ஐந்தறிவுள்ள மிருகங்கள் தொடக்கம், செயற்கையாக உருவாகின குளோனிங் உயிரினங்கள் வரை எல்லாமே தங்கடை வேலைகளிலை கருமமே கண்ணாகி நேர காலத்திற்கு அம்புட்டு மேட்டரையும் சட்டுப் புட்டுன்னு முடிச்சுப் போட்டுக் கொட்டாவி விட்டு, கொர்.........கொர்...........கொர்ரென்னு குறட்டை விட்டிருக்கய்யா.

பாவம் ஆறறிவுள்ள மனித இனத்திலை, ஆயகலைகள் அறுபத்தி நான்கும் தெரிந்த, பேசத் தெரிந்த, நன்றாக வடிவாக உள்ள Handsome பையனாகிய நான் மட்டும் கலியாணம் ஆகாமல் இலவு காத்த கிளி போலக் காத்திட்டு இருக்கிறன்.

என்னோடை படிச்ச ஆட்களிலை எல்லாருமே கலியாணம் கட்டி, குலை தள்ளுற மாதிரி ஒன்று இரண்டென்று குழந்தைகளையும் தள்ளிப் போட்டு சாறி பெத்துப் போட்டு இருக்கும் போது நான் மட்டும் நமிதா படத்தைப் பார்த்து நச்சென்று வீணி ஊத்திக் கிட்டிருக்கேன். என்ன கொடுமை இறைவா??

’முதன் முதலிலை அம்மாவிடம் பேசி ஜாடை மாடையா மேட்டரைப் போட்டுடைக்க முயற்சி செய்தேன்.

‘’அம்மா என்னோடை படிச்ச சிவா, வாணி எல்லோரும் கலியாணம் கட்டி வெளி நாடு போயிட்டாங்க, இப்ப வாணியோடை தங்கச்சி சுபாவுக்கும் கலியாணம் நடக்கப் போகுது. அவங்க வயசிலை உள்ள நான் மட்டும்...............ம்........

ம்..........என்று வசனத்தை முடிக்க முதல் அம்மா; அம்மன் படத்திலை வாற ரம்மியா கிருஸ்ணன் வேலாயுதத்தோடை கனவிலை வந்து என்ரை கண்ணைக் குத்த வாற மாதிரி, ஒரு அஸ்திரத்தை எடுத்து விட்டா பாருங்கோ.

‘தம்பி உனக்கென்ன வயசே போட்டுது, இப்பத் தானே இருபத்தியெ............ அதுக்கை என்ன அவசரம், எல்லாம் காலம் நேரம் வரும் போது தன் பாட்டிலை உன்னைத் தேடி வரும், உனக்கென்று ஒருத்தி பிறக்காமலா போயிட்டாள்??
உனக்கு கீழை இருக்கிற குமருகளைக் கரை சேர்த்திட்டாய் என்றால் பிறகு உனக்குத் தானே கலியாணம் என்று அம்மா பேசி முடித்தா.

’கோயில் திருவிழாவிலை ஆசையாய் வாங்கிய சின்னப் பையனின் பலூன் திடீரென்று காத்துப் போய் உடைந்தது போன்ற உணர்வோடை மெதுவாக அந்த இடத்தை விட்டு எழுந்து, கணினி அறைக்குள் போனன்.

அவா சொல்லுறதைப் பார்த்தா, இருக்கிற இரண்டு குமருகளையும்(என் தங்கைகளையும்) கரை சேர்த்து, கலியாணம் பண்ணி வைச்சாப் பிறகு தான் எனக்கு கலியாணமாம். இந்த ரேஞ்சிலை போனால், முப்பதைத் தாண்டினாலும் நான் இதே முனிவ நிலையிலை தான் இருக்க வேணும் என எனக்குள் நானே கடிந்து கொண்டேன். கடுப்பேத்துறாங்கப்பா. சும்மா சம்பிரதாயம் சடங்கு என்று ஏதேதோ சொல்லி என்று சிந்தித்துத் கொண்டிருந்த எனக்கு ஒரு ஐடியா வந்திச்சு.

பேசாமல் 750ம் இலக்க பஸ்ஸைப் பிடிச்சு வடமராட்சி அல்வாயிலை இருக்கிற பேமஸான புறோக்கர் விசுவலிங்கம் அண்ணையிட்டைப் போய் ஏதாவது நல்ல பிகருகள் இருந்தால் (Sorry தமிழ் மாறி வந்திடுச்சு) பிகருங்களோடை போட்டோக்கள் பொருத்தம் பாக்கிறதுக்காக இருந்தால் போய் வாங்கி வந்து அம்மா, அப்பாகிட்டைக் காட்டி, பேசிக் கலியாணத்தை ஒப்பேத்திப் போடலாம்(நிறைவேற்றலாம்) என்ற நப்பாசையிலை(பேராசையிலை) போனேன் பாருங்கோ. அங்கை தான் விதி விளையாடிச்சு.

போன போக்கிலை வணக்கம் சொல்லி, புறோக்கர் விசுவலிங்கத்தாரிட்டை என்ரை நிலமையை எடுத்துச் சொல்லி, ஏதாவது நல்ல காலம் பிறக்கும் என்ற நம்பிக்கையிலை இருந்தால், அந்தாள் கூட எனக்கு எமனாகி விட்டார். தம்பி நிரூபன்,

‘உங்கடை சாதகத்தைக் கொண்டு வந்தனீங்களோ என்று கேட்டார்? 

அப்பிடியே, அரக்கப் பரக்க என்ரை அடிட்டாஸ் (Adidas  Bag) பாக்கிற்கை தேடி, பழைய கடதாசிப் பேப்பராலை(Brown paper) ஒட்டி, இதுவரை காலமும், காற்றுக் கூடப் படாதமாதிரி அம்மா இறங்குப் பெட்டியினுள் வைத்திருந்த சாதகத்தை முதன் முதலாக நீண்ட காலத்திற்குப் பின்னர் வெளியிலை எடுத்து என் கையாலை புறோக்கரிட்டைக் காட்டுவதற்காய் கொடுத்தேன்.

புறோக்கர் மேலையும் கீழையும் ஜாதகத்தின்ரை முதல் இரண்டு பக்கங்களையும் பார்த்து விட்டுச் சொன்னார்.

‘தம்பி உமக்குச் செவ்வாய் குற்றம். அதுவும் ஏழிலை செவ்வாய். உமக்கேற்ற பொம்பிளையைத் தேடி எடுக்கிறது மிகவும் கஸ்டம். கொஞ்சக் காலம் வெயிற் பண்ணும் தம்பி என்று ஒரு பெரிய நச்சுக் குண்டைத் தூக்கி மனுசன் போட்டிட்டார். ஊரிலை செவ்வாய் குற்றம் உள்ள பெண்களின் சாதகம் ஏதாவது வந்தால் போன் பண்ணுறன் என்று சொன்னார்.

‘விடுவேனா நான், எத்தினை நாளைக்குத் தான்
‘காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி........என்ற பாட்டைக் கேட்டுக் கேட்டுச் சலிப்படைகிறது என்கிற ஆத்திரம், அவமானம், மன அழுத்தம் காரணமாக ஒரேயடியாக ஒரு கேள்வியைக் கேட்டன்.

‘அப்ப விசுவண்ணை, உந்தச் செவ்வாய் குற்றத்திற்கு ஏதாவது பரிகாரம் இருக்கோ, என்று கேட்டன்? அந்தாள் எனக்கு ஜோதிட விளக்கமே சொல்லத் தொடங்கிச்சு. இந்தச் செவ்வாய் குற்றம் பிறப்பாலை வாறது. நீங்கள் பிறந்த நேரம், நாள், நட்சத்திரம் இன்னும் பல விடயங்களை அடிப்படையாக வைத்துச் சாதகம் எழுதும் போது கணிக்கப்படுவதாலை யாராலையும் இதனை நிவர்த்தி செய்ய முடியாது என்றார்.

‘’ஒரே ஒரு வழி செவ்வாய்க் குற்றமுள்ள பெண்ணைத் திருமணம் செய்வது தான் என்றார் விசுவண்ணை. செவ்வாய்க் குற்றமோ, உச்சத்திலை சனியோ அதைப் பற்றிப் பிரச்சினையில்லை, நல்ல வடிவான பிகரைப் பார்த்துப் பொருத்தம் பார்த்துப் பேசி முடிச்சிட்டீங்களென்றால் சரி என்றேன்.

’’அண்ணோய் குறிப்பிலை(ஜாதகத்திலை) ஏதாவது உள் கூத்துச் செய்து, குறிப்பினைக் கொஞ்சம் மாற்றம் செய்து கலியாணத்தை நட்த்துற வழி பார்க்கேலாதோ??

’’அம்மா, அப்பா இந்தச் சாதகம், ஜோதிடத்தை நம்புறவை அதாலை ஏதாவது மாற்றம் செய்தால் திருட்டுத்தனமா பெற்றோர் சம்மதத்துடன் கலியாணம் செய்து வைத்த பெருமையும், ஒரு தொகையும் உங்களுக்கு கிடைக்கும் தானே என்றேன்?

புறோக்கர் சீறினார், சினந்தார், உந்த மாதிரி இழிவான வேலையெல்லாம் என்ரை தொழிலுக்குச் சரிவராது. என்ன முந்திரிக் கொட்டை மாதிரி முந்திக் கொண்டு நிற்கிறீர்?  இவ்வளவு காலமும் வெயிட் பண்ணினனீர் தானே. இன்னும் கொஞ்சக் காலம் வெயிற் பண்ணும் என்று பேசிப் போட்டார்.

அடுத்ததாக கொஞ்சம் ஆழமா யோசித்துப் போட்டுக் கேட்டேன், அண்ணோய் கேட்கிறன் என்று கோபப்படாதேங்கோ,
‘உந்த நவரத்தினக் கற்கள் தோசங்களையும், குறைகளையும் நிவர்த்தி செய்யும் என்று சொல்லுறாங்கள் தானே, அது போல ஏதாவது கற்களை வைத்து முயற்சி செய்து பார்க்கலாம் தானே என்று கேட்டன்?

‘புறோக்கரண்ணை சுற்றும் முற்றும் கொஞ்ச நேரம் பார்த்து விட்டுச் சொன்னார்,

‘உங்களுக்கு இராசியான கல்லு எதுத் தெரியுமே?
‘ஆட்டுக் கல்லுத் தம்பி’ அதைக் கொண்டு வந்து நடு வீட்டுக்கை வைத்து ஒவ்வொரு நாளும் திரு முழுக்குச் செய்ய வேண்டும் என்றார். (ரொம்ப கடுப்பாகியிருப்பாரோ) நான் வெளியை போக வேணும். இன்னொரு நாளைக்குச் சந்திப்பம் என்றார். 

‘என்ன றீலே விடுறீங்கள் புறோக்கர் அண்ணை? ஆட்டுக் கல்லைக் கொண்டு வந்து நடு வீட்டுக்கை வைத்து நானென்ன மாவே ஆட்டுறது.. போய்யா, புறோக்கர்............பு............
என்ன அப்பிடிப் பார்க்கிறீங்க, போய்யா புறோக்கர் புண்ணாக்கு, நீயும் உன்ரை ஏமாத்துப் புறோக்கர் வேலையும், இப்பவே இன்ர நெட்டிலை, இன்ர நைசனல் லெவல் யாரோ ஜோதிடர் ஆர்.கே.சதீஷ்குமார் என்று ஓராள் இருக்கிறாராம். அந்தாளிட்டைக் கேட்டாலாவது நல்ல பரிகாரம் கிடைக்கும், இப்பவே போய் அவரைத் தேடிப் பிடித்து, போன் பண்ணிப் பேசப் போறன், என்று ஒரே ஓட்டமாக ஓடி வந்தேன்.

வரும் வழியில் பஸ்ஸினுள்
‘’கடலுக்கு பிஸ்ஸிங் நெற்று..
காதலுக்கு இன்ர நெற்று...
தேசம் விட்டுத் தேசம் வீசும்
காதல் வலை.........என்று ரேடியோவிலை பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.

‘அட நம்ம பேஸ்புக்கைப் பற்றிப் பாட்டுப் பாடியிருக்கிறாங்களே, என்று பேஸ் புக் நினைவிற்கு வந்தவானக, அவசர அவசரமாக வீட்டிற்கு ஓடி வந்து பேஸ்புக் எக்கவுண்ட் ஒன்றை கிறியேற் பண்ணினன். கிறியேற் பண்ணும் போது போட்டோ கேட்டிச்சு.

‘அட நம்மளை நேரிலை தாடியோடை பார்க்கும் போது அண்ணா என்கிறாளுங்க, தாடியில்லாமல் போகும் போது தம்பி என்கிறாளுங்க இந்தக் குட்டிகள், இந்த ரேஞ்சிலை ரெண்டும் கெட்டான் தோற்றத்திலை இருக்கிற என்னோடை போட்டோவை அப்டேற் பண்ணினால் பதிலுக்குச் செருப்பாலை தான் Poke அனுப்புவாளுங்க என்பதால் போட்டோவிற்குப் பதிலாக என் புளொக்கிலை உள்ள என்னோடை சிம்போலைப் போட்டிட்டன். 

’’யாரவது சொல்லுங்கோ, அதேன் என்னை மாதிரி ஹாண்ட் சம் ஆனா யூத்தையெல்லாம் தாடியோடை பார்க்கும் போது அண்ணா என்றும், கிளீன் சேவ் ஆக தாடியில்லாமல் பார்க்கும் தம்பி என்றும் சொல்லுறாளுங்க, ஒரு இழவுமே புரிய மாட்டேங்குது.

பேஸ்புக்கிலை எவளாச்சும் மாட்டாமலா விடுவாளுங்க, எனக்கென்று ஒருத்தி உலகத்தின்ரை எதோ ஓர் மூலையிலை வெயிற் பண்ணாமலா போகப் போறாள், இரடி இரடி... உன்னை வெகு சீக்கிரம் தேடிக் கண்டு பிடிக்கிறன் மவளே!




‘’இந்தக் காலத்திலை கள்ளக் காதல் முதல், கருக் கலைப்பு வரை, கலியாணம் முதல், கோயில் கும்பாவிஷேகம் வரை பேஸ் புக் என்ற ஒன்றாலை தானே உருப்படியா நடக்கிறது எனும் உலக விடயத்தைத் தெரிந்தவனாக பேஸ் புக்கிலை வடிவோ, வடிவில்லையோ எல்லாப் பொண்ணுகளையும் தேடித் தேடி (Add) அட் பண்ணத் தொடங்கினன். எக்கவுண்ட் தொடங்கி சரியா மூன்று கிழமைகள் தான் ஆகுது. ஒருத்தியுமே நம்ம மூஞ்சியை பிடிக்காதவளுங்க போல ‘அக்செப்ற் பண்ண மாட்டேங்கிறாளுங்க. 

அட நீங்க வேறை, விடா முயற்சியோடை களமிறங்கி, ஒரு வெறியோடை (Friend Request) எல்லோரையும் முதலிலை நண்பராகத் தெரிவு செய்வோம் என்று களத்திலை இறங்கினால் இன்றைக்கு இரண்டாவது தடவையாக என்னோடை Friend Request ஐ பேஸ் புக் நிறுத்தி வைச்சிருக்கு. வாற பதின்னான்கு நாட்களுக்கு நீ யாரையுமே நண்பராகச் சேர்க்கக் கூடாது என்று ஒரு எச்சரிக்கை வேறை. இந்தக் கொடுமையை நான் எங்கை போய், யார் கிட்ட, எப்பிடிச் சொல்லி அழுவேன்.

மேலோகத்திலை இருக்கிற உமாதேவியார் முதல், பூலோகத்திலை புன்னாலைக் கட்டுவனிலை இருக்கிற மாரித் தவக்கை(தவக்ளை) வரைக்கும் ஆளாளுக்கு நூற்றுக்கு மேற்பட்ட பிரண்ஸ்ஸோடை ஒன்றுக்குப் பதிலாக ஆறேழு பெயரிலை பேஸ் புக் இருக்கும் போது எனக்கு மட்டும் நிலமை இப்பிடி ஆகிடுச்சி என்றால் பாருங்களேன்.


அண்மையிலை எங்கடை உறவுக்காரப் பெண் ஒருத்தி போன் பண்ணி என் அமமா கூடக் கொஞ்ச நேரம் பேசினா. அம்மாவும் சாடை மாடையா என்னோடை கலியாணம் பற்றிப் பேச்சுக் கொடுத்துப் பார்த்தா. அம்மாகிட்ட பேசி முடிஞ்ச பிறகு என்னோடை பேசத் தொடங்கிச்சு அந்தப் பிகர்.

தன்னைக் கலியாணம் கட்டுற ஆளுக்கு, பிள்ளை பிராக்காட்டத் தெரிய வேணுமாம், (Baby sitting) துணி துவைப்பதோடு, சமைக்கவும் தெரியவும் வேணும் என்று மூன்று கண்டிசன் வேறை சொல்லிச்சு. ஆளவிடடா என்ரை சந்நிதி வேலவா என்று அப்பிடியே லைனை ஆப் ஆக்கிட்டு எஸ் ஆகிட்டன்.

உள்ளூரிலையும் இந்த ரேஞ்சிலை கூட்டமா வேறை அலையுறாளுங்க. வீட்டோடை மாப்பிளை வேணும் என்று கேட்கிறாளுங்க. ’’வாவ்,  இது நல்லா இருக்கே என்று கொஞ்சம் ஆழமா விசாரிச்சா, அவளுங்க மார்கட்டுக்கும்,  வேலைக்கும் போக வேணுமாம், ஆம்பிளைங்க மட்டும் வீட்டிற்குள்ளை உட்கார்ந்திருந்து சமைச்சு, துணி துவைச்சுக் கொடுக்க வேணுமாம். அதோடை வாறவள் புளொக்(Blogg) எழுதுறவளா இருந்தால், அவளோடை உணர்வுகளைப் புரிஞ்சு கிட்டு அவள் சொல்லச் சொல்ல நீங்கள் டைப் பண்ணி புளொக்கிலை வேற ஏற்றித் திரட்டிகளிலை இணைக்க வேணுமாம். கேட்டியளே சங்கதி? 
உசாரய்யா, உசாரு! எதிர் காலத்திலை பிள்ளை வேறை பராமரிக்க வேணும் என்பதை கலியாணத்திற்கு முதலே சாடையாச் சொல்லுறாளுங்க நம்ம குட்டிகள்.

இனிமேலும் வெந்து, வேகக் கூடாது என்ற நல்ல நோக்கத்திலை

'கற்பனையோடு வாழ்ந்து விட்டேன் பாதி வாழ்க்கையே
கனவுகளோடு வாழுகிறேன் மீதி வாழ்க்கையே...
காதல் ராணி இல்லையே கலந்து மகிழவே............ என்ற பாடலை மட்டும் ஐ போட்டில ரொப் சோங்க்ஸா (Top Song) கேட்ட படி நான் அடுத்த பிகரை பேஸ் புக்கை லொக் இன் பண்ணுறேன் நான்!

இப்படி மனதளவில் நொந்து, நொருங்கிப் போயிருக்கும் என்னைப் போன்ற எத்தனையோ ஜீவன்களுக்கு, வாழ்க்கையில் முன்னேற, நல்ல ஆலோசனைகள் ஏதாவது உங்களிடம் இருந்தால் உங்கள் கருத்துக்கள் வாயிலாக அவற்றையும் பகிர்ந்து கொள்ளலாமே! 

*********************************************************************************
வன்னியிலை இருக்கும் போது, எனக்குத் தெரிஞ்ச ஒராள் இயக்கத்திலை இருந்தவர். அவர் இன்னொரு இயக்கப் பொட்டையோடை லவ்சு விட்டு, அது கொம்பனிக்குத் தெரியப் போய், பிறகு அவையளை எச்சரித்து (Warning பண்ணி) கலியாணம் கட்டி வைச்சிட்டீனம்.
பொடியன் கலியாணம் ஆகி ஏழு மாதத்திலை குழந்தைக்கு அப்பாவாகிட்டான். விடுவமா நாங்கள். எங்கடை நண்பர்கள் ஒரு சிலர் சேர்ந்து நீ பெரிய ஸ்மார்ட் மச்சான். கலியாணமாகி ஏழு மாதத்திலையே குழந்தை பெத்துட்டாய் என்று கிண்டலடித்தோம். உன்ரை தொழில் ரகசியம் என்னவென்று சொல்லன் மச்சான் என நச்சரித்த படி,  துருவித் துருவிக் கேட்டு அவனைத் தினம் தோறும் குடைந்தெடுத்தோம்.
அவன் சொன்னான், அது வந்து மச்சான் கொமாண்டோ அடியெண்டு. (Commando Attack)

31 Comments:

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

dum டும் டும் டும்..

Anonymous said...
Best Blogger Tips

ஹும், குடும்பத்தில கடைக்குட்டியாக பிறக்கிறவன் தான் கொடுத்து வச்சவன். ஹிஹிஹி அந்தவகையில நானும்...........)

சக்தி கல்வி மையம் said...
Best Blogger Tips

சகோதரா..
பதிவின் நீளத்தை குறைத்தால் உங்கள் பதிவுகள் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும் என்பது என்னுடைய கருத்து...
இது உங்கள்விருப்பம் தவறிருந்தால் மன்னிக்கவும்...

நேரமிருந்தால்...
http://sakthistudycentre.blogspot.com/2011/03/blog-post_23.html
வாங்க..

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

படிக்க படிக்க கரண்ட் போயிடுச்சு இருங்க வர்றேன்

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

vவித்தியாசமான நடை.. தின மலர் வாரமருக்கு அனுப்பினால் இது செலக்ட் ஆகும்னு தோணுது நண்பா...

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

ரொம்ப நீ.....ள......மா.......இருக்கே மக்கா....படிக்க சுவாரஸ்யமா இருக்கு.....

Ram said...
Best Blogger Tips

எழுத்து நடை நல்லாருக்கு நிரூபன்..

அப்பரம் நீங்க உள்ளூர்ல தேடுறத விட்டுபுட்டு கொஞ்சம் வெளிநாட்லயும் தேடலாம்..

பிரபல பதிவர்களிடம் உங்களுக்காக பெண் வேண்டும் என பதிவு போடசொல்லலாம்..

நீங்களும் பிரபல பதிவர் தானே நீங்களும் அப்படி பதிவு போடலாம்..

எடுத்த உடனே பொண்ணுங்கள்ட போயி காஞ்ச மாடு கம்பம் கொள்ளையில பூந்த மாதிரி இல்லாம பொருமையா விடயத்தை ஆரம்பிக்கலாம்..

இன்னும் எவ்வளவோ இருக்கு.??

இதெல்லாம் பண்றது உங்க பொண்டாட்டிக்கோ, பசங்களுக்கோ இல்ல பேரக் குழந்தைகளுக்கோ தெரிஞ்சிடாம பாத்துகோங்க..

ஹி ஹி.. பதிவு சூப்பர்

Anonymous said...
Best Blogger Tips

//பேஸ்புக்கிலை எவளாச்சும் மாட்டாமலா விடுவாளுங்க, எனக்கென்று ஒருத்தி உலகத்தின்ரை எதோ ஓர் மூலையிலை வெயிற் பண்ணாமலா போகப் போறாள், இரடி இரடி... உன்னை வெகு சீக்கிரம் தேடிக் கண்டு பிடிக்கிறன் மவளே//

ஹிஹி இதுவும் இப்போ பெயில் ஆகிவிட்டது என்ன???


28 வயது ஆகிடுச்சு இது தான் கண்ணாலம் கட்ட சரியான வயது சகோ. உங்களுக்கு இருக்கும் அதே பிரச்சனைத் தான் எனக்கு ஆனால் என்ன எனக்கு உங்களை விட வயதுக் குறைவு, பெண்ணும் இருக்கு, ஆனால் குறுக்கே நாடு, வீடு, சாதி, மதம் என பல பிரிவுகள் வந்து நிற்கிறது. பெண் வீட்டில ஓக்கே ஆகிடுச்சு.. எங்க வீட்டில சொல்லணும்னா எனக்கு நல்ல வேலை கிடைக்கணும்... அது தானே இங்கே பெரும் பிரச்சனையாக இருக்கு ... உங்க ஃபீலிங்க என்னால புரிஞ்சுக்கொள்ள முடியுது சகோ.. சீக்கிரம் எங்கேயாவது மாட்டுவீங்க.. வாழ்த்துக்கள்

தனிமரம் said...
Best Blogger Tips

மூத்தவன் இருக்கான் எனக்கு ஓருகுறையும் இல்லை என்பாரத்தை தோலில் சுமப்பான் என என்னும் தந்தையின் வலிகள் புரியாது உங்களின் அவசத்திற்கு ஓவ்வொருத்தரும் தனியே குறிப்புடன் அலைவதால்தான் இன்று குடும்ப உறவுகள் தனித்தீவுகளாக மாறிக்கொண்டு போகிற நிலை எம்தேசத்தில் பா.விஜய் சொல்வதுபோல்" உள்ளே அண்ணியின் கட்டில் முணங்கல்கள் வெளியே முதிர்கன்னி எப்படி வரும் தூக்கம்""இப்படித்தான் உள்ளது இன்றைய சமுதாய அவலம்.

நிரூபன் said...
Best Blogger Tips

@சி.பி.செந்தில்குமார்

மனுசன் நொந்து போயிருக்கிறான். இவர் வேறை கெட்டி மேளம் கொட்டுறார். நண்பனுக்கு ஒரு உதவி செய்வதை விட்டு விட்டு, மேளம் கொட்டுறீங்களோ? இருங்கோ வருகிறேன்.

நிரூபன் said...
Best Blogger Tips

@கந்தசாமி.
//ஹும், குடும்பத்தில கடைக்குட்டியாக பிறக்கிறவன் தான் கொடுத்து வச்சவன். ஹிஹிஹி அந்தவகையில நானும்...........)//

சகோதரம், நீங்கள் எதிர் பார்ப்புடனும், ஏக்கங்களுடனும் அந்த நாளை எண்ணிக் காத்திருக்கிறீங்கள் என்பதை ஜாடையாகச் சொல்ல வாறீங்கள். குடுத்து வைச்ச ஆள் தானப்பா நீங்கள்.

நிரூபன் said...
Best Blogger Tips

@!* வேடந்தாங்கல் - கருன் *!
//!* வேடந்தாங்கல் - கருன் *! said...
சகோதரா..
பதிவின் நீளத்தை குறைத்தால் உங்கள் பதிவுகள் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும் என்பது என்னுடைய கருத்து...
இது உங்கள்விருப்பம் தவறிருந்தால் மன்னிக்கவும்...

நேரமிருந்தால்...
http://sakthistudycentre.blogspot.com/2011/03/blog-post_23.html
வாங்க....//

சகோதரம், இதிலை என்ன தவறு இருக்கிறது? உங்களின் கருத்துக்கள் தான் என்னைப் போன்ற நாற்றுக்களை மெருகுபடுத்தி வளரச் செய்யும். நீங்க சொல்லிட்டீங்க எல்லே. அடுத்த பதிவைப் பாருங்க. சுருக்கிச் சுவையாப் போடுறன். நன்றிகள் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@சி.பி.செந்தில்குமார்
//
படிக்க படிக்க கரண்ட் போயிடுச்சு இருங்க வர்றேன்//

ஏன் நான் பதிவிலை ஏதாச்சும் அதிர்ச்சி வைத்தியம், Shocking news எழுதியிருக்கிறேனோ? கரண் கட்டாகிற அழவுக்கு என்ரை வாழ்க்கை மோசமாகிட்டு என்று நினைக்கிறன். சரி தானே சகோ?

நிரூபன் said...
Best Blogger Tips

@சி.பி.செந்தில்குமார்
//
vவித்தியாசமான நடை.. தின மலர் வாரமருக்கு அனுப்பினால் இது செலக்ட் ஆகும்னு தோணுது நண்பா...//

மிகவும் ரசித்துப் படித்திருக்கிறீர்கள் போலச் சகோதரம். நன்றிகள்.

நிரூபன் said...
Best Blogger Tips

@MANO நாஞ்சில் மனோ

//
ரொம்ப நீ.....ள......மா.......இருக்கே மக்கா....படிக்க சுவாரஸ்யமா இருக்கு.....//

சகோதரா, வாழ்க்கையே நடக்க வேண்டிய விடயங்கள் நேர காலத்திற்கு நடக்காத காரணத்தினாலை நீண்டு போகிறது. பதிவும் அதைச் சொல்வதனால் நீளமாகத் தானே இருக்கும்:))
உங்களின் விருப்பமும், விமர்சனமுமே என் வளர்ச்சிக்குப் பங்களிக்கும் என்பதால் அடுத்த பதிவுகளில் இருந்து எல்லாமே சிறிய பதிவுகளாகத் தான் அமையும்.

நிரூபன் said...
Best Blogger Tips

@தம்பி கூர்மதியன்
எழுத்து நடை நல்லாருக்கு நிரூபன்..

நன்றிகள் சகோதரம்,

//அப்பரம் நீங்க உள்ளூர்ல தேடுறத விட்டுபுட்டு கொஞ்சம் வெளிநாட்லயும் தேடலாம்..//

வெளி நாட்டிலை தேடுவதாயின் இங்கிபீசு இல்லா விட்டால் பிரெஞ்சு தெரிந்திருக்க வேணுமே?

//பிரபல பதிவர்களிடம் உங்களுக்காக பெண் வேண்டும் என பதிவு போடசொல்லலாம்..//

இதைத் தான் சொல்லுவது, உசுப்பேத்தியே ரணகளமாக்கிற விசயம் என்று. என்ரை வாழ்க்கையும், நான் அனுபவிக்கும் வேதனைகளும் உங்களுக்கு ரொம்பவும் நக்கலாப் போச்சு:))

//நீங்களும் பிரபல பதிவர் தானே நீங்களும் அப்படி பதிவு போடலாம்..//

இது வஞ்சப் புகழ்ச்சி இல்லையே? நானே நேற்றுப் பெய்த மழையிலை முளைச்ச காளான், எங்காவது பெரிய வெள்ளமோ, சூறாவளியோ வந்தால் சட்டென்று காணமல் போயிடுவன். என்னைப் போயி ரொம்ப கிண்டலா இந்த மாதிரி லிஸ்டிலை சேர்க்கிறீங்க. நானெல்லாம் ஒரு சிறிய பதிவர் சகோ. என் பாட்டுக்கு இருந்து விட்டுப் போகிறேன். பிரபலம் என்ற வார்த்தையைப் பாவித்து என்னைப் பிராப்பிளத்திலை(problem) மாட்டாது விட்டாலே போதும். ஐயோ ஆளை விடுங்கடா சாமி, இந்த தம்பி கூர்மதியான் ஏதோ பெரிய வார்த்தையெல்லாம் பேசுது. ஐ ஆம் எஸ் கேப்........

//எடுத்த உடனே பொண்ணுங்கள்ட போயி காஞ்ச மாடு கம்பம் கொள்ளையில பூந்த மாதிரி இல்லாம பொருமையா விடயத்தை ஆரம்பிக்கலாம்..//

அட இது நல்லாயிருக்கே. நன்றிகள் நன்றிகள்.

இன்னும் எவ்வளவோ இருக்கு.??//

எவ்வளவோ இருக்கு என்று கேள்விக் குறியைப் போட்டாச் சரியோ? அதுகளையும் வெளியை சொன்னால் தானே வேலைக்கு உதவும் சகோதரம்.

இதெல்லாம் பண்றது உங்க பொண்டாட்டிக்கோ, பசங்களுக்கோ இல்ல பேரக் குழந்தைகளுக்கோ தெரிஞ்சிடாம பாத்துகோங்க..//

யோ நீங்க எந்த உலகத்திலை இருக்கிறீங்க சகோ, நானே பொண்டாட்டி தேடிக் கொண்டிருக்கிறன். அதுக்குள்ளை நீங்கள் வந்து பொண்டாட்டி, பசங்க, பேரக் குழந்தை என்று:))

புரளியைக் கிளப்பியே, பீதியைக் கிளப்பியே என்னை எப்பவும் பச்சிலராக பார்க்க நினைக்கிற நீங்கள் வாழ்க....!

ஹி ஹி.. பதிவு சூப்பர்//

நன்றிகள், நன்றிகள் சகோதரம்.

நிரூபன் said...
Best Blogger Tips

@இக்பால் செல்வன்

//இக்பால் செல்வன் said...
//பேஸ்புக்கிலை எவளாச்சும் மாட்டாமலா விடுவாளுங்க, எனக்கென்று ஒருத்தி உலகத்தின்ரை எதோ ஓர் மூலையிலை வெயிற் பண்ணாமலா போகப் போறாள், இரடி இரடி... உன்னை வெகு சீக்கிரம் தேடிக் கண்டு பிடிக்கிறன் மவளே//

ஹிஹி இதுவும் இப்போ பெயில் ஆகிவிட்டது என்ன???//

//மீண்டும் முயற்சி செய்து கொண்டிருக்கிறன். உங்களுக்கு நக்கல் வேண்டிக் கிடக்குது சகோ.


28 வயது ஆகிடுச்சு இது தான் கண்ணாலம் கட்ட சரியான வயது சகோ.//

//கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட, பதிவினைப் படித்த அத்தனை உள்ளங்களுக்குள்ளும் ஒரே ஒரு வார்த்தையைச் சொல்லி என் மனதின் ரணத்தை ஆற்றி விட்டீர்கள் சகோ!

//உங்களுக்கு இருக்கும் அதே பிரச்சனைத் தான் எனக்கு ஆனால் என்ன எனக்கு உங்களை விட வயதுக் குறைவு, பெண்ணும் இருக்கு, ஆனால் குறுக்கே நாடு, வீடு, சாதி, மதம் என பல பிரிவுகள் வந்து நிற்கிறது. பெண் வீட்டில ஓக்கே ஆகிடுச்சு.. எங்க வீட்டில சொல்லணும்னா எனக்கு நல்ல வேலை கிடைக்கணும்... அது தானே இங்கே பெரும் பிரச்சனையாக இருக்கு//

இதனைத் தான் எங்கள் ஊரில் சொல்லுவார்கள். மற்றவரின் துன்பத்தில் தனது துன்பத்தையும் பகிர்ந்து கொள்வது என்று.
நண்பேண்டா நீங்க என் நண்பேண்டா.
உங்க நேர்மையை நான் இவ் இடத்தில் பாராட்டுகிறேன் இக்பால், உங்கள் பெற்றோருக்கு இம் மறு மொழியை அனுப்பி வைக்க முயற்சி செய்கிறேன்.

//... உங்க ஃபீலிங்க என்னால புரிஞ்சுக்கொள்ள முடியுது சகோ.. சீக்கிரம் எங்கேயாவது மாட்டுவீங்க.. வாழ்த்துக்கள்//

தலையிடியும், காய்ச்சலும் தனக்கு வந்தால் தானே தெரியும். இது தான் வலியை அனுபவித்தவனின் வரிகள்.
நன்றிகள் சகோதரம் இக்பால்!

நிரூபன் said...
Best Blogger Tips

@Nesan
மூத்தவன் இருக்கான் எனக்கு ஓருகுறையும் இல்லை என்பாரத்தை தோலில் சுமப்பான் என என்னும் தந்தையின் வலிகள் புரியாது உங்களின் அவசத்திற்கு ஓவ்வொருத்தரும் தனியே குறிப்புடன் அலைவதால்தான் இன்று குடும்ப உறவுகள் தனித்தீவுகளாக மாறிக்கொண்டு போகிற நிலை எம்தேசத்தில் பா.விஜய் சொல்வதுபோல்" உள்ளே அண்ணியின் கட்டில் முணங்கல்கள் வெளியே முதிர்கன்னி எப்படி வரும் தூக்கம்""இப்படித்தான் உள்ளது இன்றைய சமுதாய அவலம்.//

பாரத்தை தோலிலா அல்லது தோளிலா சுமப்பான்:))
சும்மா ஒரு நக்கலுக்குப் போட்டன்.

அவசரம் இல்லிங்கோ. நானாச்சும் சகோதரா நேர்மையா என் அத்தியாவசிய தேவையை வெட்கப்படாமல் வெளியை சொல்லுறன். இன்னும் சிலர் மனதிற்குள் பூட்டி வைத்தெல்லே மகிடி வாசிக்கிறார்கள்.

உங்களின் மனதைத் தொடும் கருத்தான ‘அவசரத்தில் அலைவதால் குடும்ப உறவுகள் இன்று திசை மாறுகின்றன எனும் கருத்தினை ஏற்றுக் கொள்கிறேன். அதிலுள்ள உண்மைத் தன்மையையும் சட்ட விரோத சிசுக் கொலைகள், இன்று யாழ்ப்பாணத்தில் வீதிகளில் மீட்கப்படும் அநாதரவான சிசுக்களின் எண்ணிக்கைகள் மூலம் நேரே அறிந்தவன் நான்.

ஆனாலும் ஒரு நல்ல நோக்கத்திற்காக, நம்பிக்கையுடன், காலம் பூராகவும் ஒருத்தியைக் கண் கலங்காமல் காப்பாற்ற ஆசைப்படுகிற அப்பாவி ஆண்மகனைப் பார்த்துத் தாங்கள் இப்படித் தப்பாகப் பேசலாமோ:)))

ஹேமா said...
Best Blogger Tips

நிரூபன்....வரவரப் பதிவுகள் உங்கட ஆதங்கத்தையெல்லாம் அள்ளி வைக்குது.

ஏன் அண்ணாச்ச...பிள்ளை பாத்தா,
வீட்ல சமைச்சுக் குடுத்தா,உடுப்புத் தோய்ச்சுக் குடுத்தா குறைஞ்சோ போயிடுவீங்கள்.உங்கட வீட்டு வேலை செய்ய ஏன் ஆருக்காவது வெக்கப்படவோ பயப்படவோ வேணுமோ.அப்பிடி ஒரு மனநிலையில நீங்கள் இருந்தா நானும் ஒரு சாபம் குடுக்கிறன் “சத்தியமா உங்களுக்கு இந்தச் சென்மத்தில கல்யாணம் நடக்காது....ஓம் “!

டக்கால்டி said...
Best Blogger Tips

Saga I will read and comment you back later

இராஜராஜேஸ்வரி said...
Best Blogger Tips
This comment has been removed by the author.
நிரூபன் said...
Best Blogger Tips

@ஹேமா
நிரூபன்....வரவரப் பதிவுகள் உங்கட ஆதங்கத்தையெல்லாம் அள்ளி வைக்குது.

ஏன் அண்ணாச்ச...பிள்ளை பாத்தா,
வீட்ல சமைச்சுக் குடுத்தா,உடுப்புத் தோய்ச்சுக் குடுத்தா குறைஞ்சோ போயிடுவீங்கள்.உங்கட வீட்டு வேலை செய்ய ஏன் ஆருக்காவது வெக்கப்படவோ பயப்படவோ வேணுமோ.அப்பிடி ஒரு மனநிலையில நீங்கள் இருந்தா நானும் ஒரு சாபம் குடுக்கிறன் “சத்தியமா உங்களுக்கு இந்தச் சென்மத்தில கல்யாணம் நடக்காது....ஓம் “!//

ஆய் எங்கடை வீட்டு வேலை. சகோதரம், அதுக்காக வீட்டுக்கை நாள் முழுக்க அடைஞ்சு கிடக்கலாமோ?
ஒரு சின்னக் கேள்வி: வீட்டு வேலை செய்ய நான் றெடியென்றால் எனக்கு இப்பவே கலியாணம் நடந்திடுமோ?
உங்க இடத்திலை யாராச்சும் இருந்தால் சொல்லுங்கோ. நான் போட்டோவை பேர்சனல் மெயிலிலை அனுப்புகிறேன்.

//உங்களுக்கு இந்தச் சென்மத்தில கல்யாணம் நடக்காது....ஓம் “!//

இந்தச் சாபத்தை வாபஸ் வாங்கவும், இல்லையேல் யாழ் நகர் பஸ் நிலையத்தில் இன்று உங்களின் இக் கருத்தை எதிர்த்து கண்டனப் பேரணி நடத்திடுவேன்.
ஒரு அப்பாவி ஆண்மகனின் வாழ்க்கையினை இப்பிடிச் சாபம் போட்டுக் சிதைக்கப் பார்க்கிறீங்களே?

இந்த ஜென்மத்துக்கே கலியாணம் நடக்காதா? அப்போ நான் என்ன பண்ண கடலிலை குதிச்சு.........
நல்லா ஒரு வாழ்த்துச் சொல்லி வாழ்க்கையை வாழவைப்பீர்கள் என்று நம்பி ஒரு பதிவு போட்டால் இப்பிடி சாபம் போட்டே என் மனசை உடைச்சுப் புட்டிங்களே.

ஐயா பெரியவங்களே, சகோதர்களே, எனக்கு ஜென்மத்திற்கும் கலியாணம் நடக்காதாம்! இந்தக் கொடுமையைக் கேட்க யாருமே இல்லையா?

என்னைக் கதை சொல்லச் சொன்னால்
என்ன கதை சொல்லுறது,
சொந்தக் கதை சோகக் கதை... என்று நான் காலம் பூராகவும் பாடிக் கொண்டே அழுதழுது வாழ்வதா?

நிரூபன் said...
Best Blogger Tips

@டக்கால்டி
Saga I will read and comment you back later//

இதனைத் தானே கடந்த ரெண்டு பதிவுகளுக்குச் சொல்லிக் கொண்டிருக்கீங்க. எப்ப தான் வருவீங்க, என்ன அவ்வளவு பிசியோ?

நிரூபன் said...
Best Blogger Tips

@இராஜராஜேஸ்வரி

thirumaNm viraivil nadakka vaazththukkaL.//

என்னாம் பெரிய மனசு உங்களுக்கு! உங்களை மாதிரி எல்லோர் மனசுமிருந்து என்னை வாழ்த்தினால் வெகு விரைவிலை என் வாழ்விலை கெட்டி மேளம் கெட்டி மேளம் தான்.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

நிரு.... சிரிசிரிஎன்று சிரிக்கிறேன்! மண்வாசனை, பழைய நினைவுகள், ஒருகாலத்தில் பேசித்திரிஞ்ச சொற்கள்......... அதே கலாச்சார பின்னணி, எதிர்பார்ப்புகள், அயலவரின் பேச்சுக்கள்..... எல்லாமே அருமை நிரு!!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

மனித மனங்கள் ஒவ்வொன்றிற்கும் பல் வேறு விதமான ஆசா பாசங்கள் இருக்கும்.


ஆசா யாரு பக்கத்துவீட்டு பிகரா?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

ஆனால் சில விபரீதமான விடயங்களால் மெல்லவும், முடியாமல், விழுங்கவும் முடியாமல் மனசுக்குள் பூட்டிப் பூட்டி வைத்து தீர்க்க முடியாதவர்களாகி, இறுதியில் மன அழுத்தத்திற்குத் தானே நாங்கள் ஆளாகிறோம். என்னுடைய ஒரு சில பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும் எனும் நம்பிக்கையிலை தான் உங்களிடம் இப்பதிவினைக் கொண்டு வருகிறேன்.


யோவ் சீரியஸா சொல்லுறியா? காமெடியா சொல்லுறியா?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

பாவம் ஆறறிவுள்ள மனித இனத்திலை, ஆயகலைகள் அறுபத்தி நான்கும் தெரிந்த, பேசத் தெரிந்த, நன்றாக வடிவாக உள்ள Handsome பையனாகிய நான் மட்டும் கலியாணம் ஆகாமல் இலவு காத்த கிளி போலக் காத்திட்டு இருக்கிறன்.


இப்ப எதுக்கு கல்யாணத்தின் மேல அவ்வளவு ஆசை? யாராவது வேணும்னே தலை ல மண் அள்ளிப் போடுவாங்களா?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

அவன் சொன்னான், அது வந்து மச்சான் கொமாண்டோ அடியெண்டு. (Commando Attack)

ஹா...... ஹா......ஹா...... செம காமெடி!!!

vanathy said...
Best Blogger Tips

இந்த ரேஞ்சிலை ரெண்டும் கெட்டான் தோற்றத்திலை இருக்கிற என்னோடை போட்டோவை அப்டேற் பண்ணினால் பதிலுக்குச் செருப்பாலை தான் Poke அனுப்புவாளுங்க //உண்மையாவா?? மனசை தளர விடாதீங்கோ. நல்ல பெண்ணா கிடைக்க வாழ்த்துக்கள்!

vanathy said...
Best Blogger Tips

யாராவது வேணும்னே தலை ல மண் அள்ளிப் போடுவாங்களா?///உங்க சொந்த அனுபவமோ???

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails