அன்றொரு நாள் அன்பொழுக
அனைவருமே ஒன்றாக இருந்தோம்
ஊர் பிடிக்க, உறக்கமின்றிப்
பலர் வருகையிலோ
ஊரிழந்து, உடுத்த உடையுடனே
உணர்விழந்து அகதியானோம்,
சொந்த வீடு, உடு புடவை,
உறவுகளை தொலைத்தவராய்
கால் போன போக்கில்
நாம் நம்பினோர்
கைவிட மாட்டார்கள் எனும் நம்பிக்கையில்
ஒரு சிலரும்;
பாஸ் கிடைத்தால் ஆமியிடம்
போகலாம் பாஸ் கிடைக்காதா
எனும் அங்கலாய்ப்பில்
பலபேரும் ஓடத் தொடங்கினோம்!
ஒரு நாள் உறங்குதற்கு நேரமின்றி
ஒவ்வோர் ஊராய் இழந்தபடி
ஓடத் தொடங்கினோம்
கஞ்சியும், பருப்புக் கறியும்
சில நேரம் உணவாகக் கிடைப்பினும்
காணிகளில் கிடைக்கும்
இளநீரும், மாங்காய்களுமே
எம் பசியைப் போக்கின
ஆறுதலுக்கு யாருமின்றி
அழுது விழி நனைய
இறைவனிடம் மன்றாடினோம்,
நித்தம் நித்தம் எறிகணைகள்
நீண்ட தூரப் பல்குழல்கள்( multi barrel rocket launcher)
சுற்றி எங்கள் குடிசைகளில்
வீழும்,
வட்ட மிடும் விமானங்கள்,
வரிசையாக குண்டு வீசும்
நட்ட நடு இரவினை
பரா லைற் வெளிச்சமாக்கும்
குற்றுயிராப் பல உயிர்கள்
குருதி வெள்ளத்தில் பல உடல்கள்
செத்துவிடத் தோன்றிச்
சேடம் இழுக்கையிலோ
குடிநீரும் இல்லாது
உடல் அந்தரத்தில் தள்ளாடும்;
கால்கள் துண்டாகித் துடித்தபடி,
கைகள் இழந்து கதறியபடி
எங்கள் உறவுகள் கண்ணீர் வடிக்கையிலோ
இனியேன் இதெல்லாம்
என எண்ணத் தோன்றும்!
மருத்துவ வசதி ஏதுமின்றி
மரணத்தில் விளிம்பில்
நின்று மன்றாடி அழுதோம்,
இனியும் வாழ விடுங்கள்,
எங்களைப் போக விடுங்கள் என
இரஞ்சிக் கேட்டால்
காலால் உதை விழும்,
துவக்கால் துரத்தியும் அடி நிகழும்
கட்டாய ஆட்சேர்ப்பு நிகழும்,
இதனைத் தடுக்க ஒரு சிலரின்
உடனடிக் கலியாணமும் நடக்கும்
உயிரைக் கையில் பிடித்து
உணர்விழந்து இருக்கையிலோ
காலையில் வானொலியில்
செய்தியறிக்கைக்கு முன்பதாக
நாடு இதை நாடாவிட்டால்
ஏது வீடு எனக்
கவிஞர் அவலத்தின்
மத்தியிலும் கவிதைப் புரட்சி செய்வார்!
உணவேதுமின்றி பட்டினியால் வாடி(ச்)
சாகும் தறுவாயில் இருந்து
சகோதரனை, தாயைத் தந்தையைத்
தங்கையினைக் குண்டு
துளைக்கியில் பார்த்திருந்து- ஓடிப்
போகும் வழியேதுமின்றி
போருக்குள் அகப்பட்ட எங்களுக்கா
போரிட மனம் வரும்?????
மனம் அவலத்தில் நின்று ஓட
நினைக்கையிலோ
வானொலியில்
வாழ்ந்தால் வன்னியை மீட்டு வாழ்வோம்
இல்லையேல் வன்னிக்குள் வாழ்வை முடிப்போம்
என கவிதை நடக்கும்!
எல்லோரும் இறுதிவரை
உறுதியாய் இருப்போம்
என்று சொல்லி
எங்களையும் போக விடாதோர்
மட்டும் முதலில்
ஓடிப் போய்ச் சரணாகதி அடைந்தார்கள்!
இங்கே தான் புரிந்து கொண்டேன்
மன்னனுக்கு ஒரு நீதி!
மக்களுக்கு ஒரு நீதி
என்பதன் அர்த்தத்தை!
|
32 Comments:
இக் கவிதை படித்தவுடன் மனதில் ஏதோ வலிக்கிறது தோழரே...
தங்களின் உணர்வுகளுக்கு தலைவணங்குகிறேன்..
மனதில் இடியை இறக்கும் பதிவு!
மனசு வலியில் துடிக்குதுய்யா.....
ரத்தமும் கொதிக்குது....
திரும்பிப் பார்க்க....அதே வலிதான் !
நிதம் பார்க்கும் பக்கமல்ல
எமது வாழ்வின் கறைபடிந்த
மறுபக்கத்தையும்
அழகாகச் சொன்னீர்கள்
உணர்வோட்டமுள்ள நல்ல பதிவு
///மன்னனுக்கு ஒரு நீதி!
மக்களுக்கு ஒரு நீதி///
எல்லா இடத்திலயும் இப்படிதான்...
எனது வலைபூவில் இன்று: வலைச்சரம் ஆசிரியர் சீனா சிறப்புப் பேட்டி - இரண்டு
/////எல்லோரும் இறுதிவரை
உறுதியாய் இருப்போம்
என்று சொல்லி
எங்களையும் போக விடாதோர்
மட்டும் முதலில்
ஓடிப் போய்ச் சரணாகதி அடைந்தார்கள்!////
உண்மைகள் எப்போதும் உறங்கப் போவதில்லை உறங்கினாலும் உ(எ)ங்களைப் போல் அநாதைகளால் தட்டி எழுப்பப்ட்டுக் கொண்டே இருக்கும்...
ஃஃஃஃமருத்துவ வசதி ஏதுமின்றி
மரணத்தில் விளிம்பில்
நின்று மன்றாடி அழுதோம்,ஃஃஃஃ
அத்தருணங்கள் நினைவில் அகலாதவை 3 இரவுகள் கூட நித்திரையின்றி உழைத்திருக்கிறேன்... இந்த பகடைக்காய்களை காப்பாற்றுவதற்காக...
குலை நடுங்குகிறது.
வாழ்வில் மறக்க முடியாத நினைவுகளின் வலிகளை கொட்டி இருக்கிறீர்கள் நண்பா எனக்கு இதை நினைத்துப்பார்க்கும்போதே வலிக்கிறது..........
இந்தவிஷயத்தைப் பற்றி நான் கருத்துக்கூற விரும்பவில்லை நிரு! அப்புறம் எல்லாத்தையும் ஓபனா சொல்லவேண்டி வரும்! எனக்கு வாய் சும்மா கிடக்காது!!
எங்கும் எப்பொழுதும் போர் வேண்டாம்
இந்தவிஷயத்தைப் பற்றி நான் கருத்துக்கூற விரும்பவில்லை நிரு! அப்புறம் எல்லாத்தையும் ஓபனா சொல்லவேண்டி வரும்! எனக்கு வாய் சும்மா கிடக்காது!!//
அதே அதே!!!
இந்த நிலைமைகள் இப்பொழுது மத்திய கிழக்கு நாடுகளிலும் உருவாகி வருவது வேதனையைத் தருகிறது.
வாழ்க்கை என்பதே ஒருமுறை தான்..... அதில் போரிட்டு இனத்தை அழிப்பது எத்தனை மடத்தனம்!!!
உடுபுடவை...
இந்த வார்த்தை வித்தியாசமாக இருக்கிறது
சரி இனி போர் எப்பொழுதும் வேண்டாம்..கிடவுங்கள் எப்பொழுதும் அடிமை நாய்களாக.
எங்கும் எப்பொழுதும் போர் வேண்டாம்.
கவிதை மனதை வலிக்கசெய்கிறது..
!* வேடந்தாங்கல் - கருன் *! said...
இக் கவிதை படித்தவுடன் மனதில் ஏதோ வலிக்கிறது தோழரே...
தங்களின் உணர்வுகளுக்கு தலைவணங்குகிறேன்..//
எங்கள் உணர்வுகளைப் புரிந்து கொண்டாலே போதும். நன்றிகள் தோழா.
// ! சிவகுமார் ! said...
மனதில் இடியை இறக்கும் பதிவு!//
நன்றிகள் தோழா.
//
MANO நாஞ்சில் மனோ said...
மனசு வலியில் துடிக்குதுய்யா.....
ரத்தமும் கொதிக்குது....//
மனோ வார்த்தைகளை சென்சர் பண்ணி விடுங்கோ:) இல்லேண்ணா ஏதாவது பொடா, தடா என்று உள்ளை போட்டிடுவாங்க.
Dr.எம்.கே.முருகானந்தன் said...
நிதம் பார்க்கும் பக்கமல்ல
எமது வாழ்வின் கறைபடிந்த
மறுபக்கத்தையும்
அழகாகச் சொன்னீர்கள்
உணர்வோட்டமுள்ள நல்ல பதிவு//
நன்றிகள் டொக்டர், எங்களின் இறந்த காலங்களை அழிக்க நினைத்தாலும், இன்னமும் நெஞ்சினில் நிழலாடிக் கொண்டு தான் இருக்கின்றன அந்த நரக நினைவுகள்.
ஹேமா said...
திரும்பிப் பார்க்க....அதே வலிதான் !//
ஆனாலும் சகோதரி, இவற்றையெல்லாம் மறந்து, திரும்பிப் பார்க்காமலும் இருக்க முடியவில்லை.
♔ம.தி.சுதா♔ said...
/////எல்லோரும் இறுதிவரை
உறுதியாய் இருப்போம்
என்று சொல்லி
எங்களையும் போக விடாதோர்
மட்டும் முதலில்
ஓடிப் போய்ச் சரணாகதி அடைந்தார்கள்!////
உண்மைகள் எப்போதும் உறங்கப் போவதில்லை உறங்கினாலும் உ(எ)ங்களைப் போல் அநாதைகளால் தட்டி எழுப்பப்ட்டுக் கொண்டே இருக்கும்...//
//
♔ம.தி.சுதா♔ said...
ஃஃஃஃமருத்துவ வசதி ஏதுமின்றி
மரணத்தில் விளிம்பில்
நின்று மன்றாடி அழுதோம்,ஃஃஃஃ
அத்தருணங்கள் நினைவில் அகலாதவை 3 இரவுகள் கூட நித்திரையின்றி உழைத்திருக்கிறேன்... இந்த பகடைக்காய்களை காப்பாற்றுவதற்காக...//
சுதா உண்மைகளைச் சொன்னால் துரோகி என்கிறார்கள். நாங்கள் ஏதோ புதுக் கதை இயற்றும் கற்பனாவதிகள் என பாராட்டும் சொல்லுகிறார்கள். வன்னியில் என்னுடைய இரவுகளும் மறக்க இயலாதவை. அவற்றை எழுதப் பல பதிவுகள் தேவைப்படும் என நினைக்கிறேன்.
சிவகுமாரன் said...
குலை நடுங்குகிறது.//
இது தான் எங்கள் கடந்த காலங்களின் உண்மை நிலமையும் கூட.
//
விக்கி உலகம் said...
வாழ்வில் மறக்க முடியாத நினைவுகளின் வலிகளை கொட்டி இருக்கிறீர்கள் நண்பா எனக்கு இதை நினைத்துப்பார்க்கும்போதே வலிக்கிறது........../
நன்றிகள் சகோதரம்.
//
ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
இந்தவிஷயத்தைப் பற்றி நான் கருத்துக்கூற விரும்பவில்லை நிரு! அப்புறம் எல்லாத்தையும் ஓபனா சொல்லவேண்டி வரும்! எனக்கு வாய் சும்மா கிடக்காது!!//
யோ சும்மா பீலா விடாமல் நேரடியாக விசயத்தைப் போட்டு உடையுமய்யா.
டக்லாடி, எல் கே, இராஜராஜேஸ்வரி, மலிக்கா உங்கள் அனைவரின் கருத்துக்களுக்கும் நன்றிகள்.
Anonymous said...
சரி இனி போர் எப்பொழுதும் வேண்டாம்..கிடவுங்கள் எப்பொழுதும் அடிமை நாய்களாக.//
அண்ணா, வாங்கோ, வாங்கோ.
இந்த மானத்தை, இந்த தேசப் பற்றை சண்டை நடந்த நேரம் முன்னரங்கிலை போய் நின்று காட்டியிருக்கலாமே. இப்ப Too late சகோதரம்.
இவ்வளவு நாளும் போராடியும் அடிமை நாய்களாகத் தானே இருந்தோம். இனியும் போர் புரிந்தும் அடிமைகளாகத் தானே இருக்கப் போகிறோம். பரவாயில்லை. எப்போதுமே உயிர்ச் சேதங்களையும், பொருட் சேதங்களையும் தவிர்த்து அடிமைகளாக இருந்து விட்டுச் சாகிறோம். பிளீஸ் எங்களை விட்டு விடுங்கள்.
உங்களுக்கு இப்ப என்ன ரத்தம் கொதிக்குதா இல்லை உங்கள் உள்ளம் நடிக்குதா?
யோவ் டுபுக்கு,
அடிமை நாய்களாக சாக முடிவெடுத்துவிட்டீர்கள்..அதில் நக்கிப் பிழைத்து சாவதை விட எதிர்த்து வீரனாய் நினறு போராடினால் சிறிதாவது பிழைக்க வாய்ப்பிருக்கிறது. ஒங்களை மாதிரி நக்கிகளை,தமிழினம் ஈன்றது இழிவே!செத்தொழியுங்கள் நாய்களே.
யோவ் டுபுக்கு,
அடிமை நாய்களாக சாக முடிவெடுத்துவிட்டீர்கள்..அதில் நக்கிப் பிழைத்து சாவதை விட எதிர்த்து வீரனாய் நினறு போராடினால் சிறிதாவது பிழைக்க வாய்ப்பிருக்கிறது. ஒங்களை மாதிரி நக்கிகளை,தமிழினம் ஈன்றது இழிவே!செத்தொழியுங்கள் நாய்களே.
Anonymous said...
யோவ் டுபுக்கு,
அடிமை நாய்களாக சாக முடிவெடுத்துவிட்டீர்கள்..அதில் நக்கிப் பிழைத்து சாவதை விட எதிர்த்து வீரனாய் நினறு போராடினால் சிறிதாவது பிழைக்க வாய்ப்பிருக்கிறது. ஒங்களை மாதிரி நக்கிகளை,தமிழினம் ஈன்றது இழிவே!செத்தொழியுங்கள் நாய்களே.//
அண்ணோய் பெரியவரே, நாங்கள் மட்டும் எதிர்த்து நின்று வீரனாய் சாக வேண்டுமோ? அப்ப நீங்கள் என்ன செய்வதாக இருக்கிறீர்கள்? சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுப்பதாக உத்தேசமோ?
நாயின்ரை மொழி பேசுற ஆள், நாய்க்கு விளங்குகிற மாதிரி எழுதுகிற நல்ல உள்ளம் நீங்களும் நாய் தானே.
இப்போது நீங்களும், நானும் இதே ந்க்கிப் பிழைக்கும் பிழைப்பைத் தானே செய்து கொண்டிருக்கிறோம். ஆதலால் keep it quiet.
Anonymous said...
யோவ் டுபுக்கு,
அடிமை நாய்களாக சாக முடிவெடுத்துவிட்டீர்கள்..அதில் நக்கிப் பிழைத்து சாவதை விட எதிர்த்து வீரனாய் நினறு போராடினால் சிறிதாவது பிழைக்க வாய்ப்பிருக்கிறது. ஒங்களை மாதிரி நக்கிகளை,தமிழினம் ஈன்றது இழிவே!செத்தொழியுங்கள் நாய்களே.//
எல்லாம் நடந்து முடிந்து, சனமே சண்டை வேண்டாம் என்று ஒப்பாரி வைத்துக் கதறியழுது ஓய்ந்து போயிருக்கும் போது, ஒருவர் மட்டும் வந்து உசுப்பேத்துறார். தோடா என்ன கொடுமை இது! முதலிலை நீங்கள் காரியத்திலை இறங்குங்கோ சகோதரம். பிறகு யாராவது உங்களைப் பின் தொடர விரும்பினால் வருவார்கள்.
Anonymous said...
யோவ் டுபுக்கு,
அடிமை நாய்களாக சாக முடிவெடுத்துவிட்டீர்கள்..அதில் நக்கிப் பிழைத்து சாவதை விட எதிர்த்து வீரனாய் நினறு போராடினால் சிறிதாவது பிழைக்க வாய்ப்பிருக்கிறது. ஒங்களை மாதிரி நக்கிகளை,தமிழினம் ஈன்றது இழிவே!செத்தொழியுங்கள் நாய்களே.//
சகோதரம், செத்தொழியுங்கள் என்று, என்ன சாபம் போடுறீங்களோ?
இந்தச் சாபம் பலிக்கும் என்றால் உலகிலை அராஜகம் செய்கிற எல்லோருக்கும் முதலிலை சாபம் போடுங்கோ சகோதரா. பலிக்குதா என்று பார்ப்போம்.
போரின் கொடுமையினை அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள்.
'பொறுமை, மற்றும் பிரார்த்தனையின் மூலம் உதவி தேடுங்கள். பணியுடையொரைத் தவிர மற்றவர்களுக்கு இது பாரமாகவே இருக்கும்'- குர்ஆன் 2:45
உங்களின் வாழ்வினில் வசந்தம் வர பிரார்த்திக்கிறேன் சகோதரரே!
பின்னால் எவன் வாரான்னு பார்த்து காட்டிகுடுத்து சிங்களனுக்கு சோரம் போன பன்னி கூட்டத்திடம் சொரணையை எதிர்பார்ப்பது தப்பு. நீயும் ஒன் கவிதையும் த் தூ..!
பின்னால் எவன் வாரான்னு பார்த்து காட்டிகுடுத்து சிங்களனுக்கு சோரம் போன பன்னி கூட்டத்திடம் சொரணையை எதிர்பார்ப்பது தப்பு. நீயும் ஒன் கவிதையும் த் தூ..!
Post a Comment