அன்பே நீ சிரிக்கும் அழகோ தனி Twit's
நீ கிடைத்தால் எல்லோர்க்கும் கொடுப்பேன் Many Sweet's!
*********************************************************
அவள் கொஞ்சம் புதுமையானவள்
அன்பாய் பழகினால் இனிமையானவள்
கண்களால் பின்னூட்டும் கவிதையானவள்
நெஞ்சிலே எனைத் தாங்கும் உயிரானவள்
இப்படி ஓர் நாள் நண்பன் சொன்னான்;
நீண்ட நாட்களின் பின்னர் அவனிடம் கேட்டேன்,
இப்போது உந்தன் அழகுச் சிலை எங்கேயடா என்று?
அவன் சொன்னான்,
பழகுவதில் எப்போதுமவள் தனிரகம்
பணத்தைச் சுருட்டுவதிலோ அவள் முதலிடம்
குணத்தில் அவள் இப்போ குள்ள நரி- காரணம்
குற்றுயிராய் எனை விட்டு
போய் விட்டாள் வெளியிடம்!(வெளியிடம்- வெளி நாடு)
*********************************************************
கனவுகளும், கடந்த காலமும்!
ஒரு திக்கு நோக்கி, ஓர் நாளில் குடி பெயர்ந்து
குருதியில் குளித்தெழுந்து, குடல் தெறிக்கப் பல உயிர்கள்
கருகிச் செத்த காட்சிகளைப் பார்த்தோன்
இரு கையெடுத்தும் இனி மேலும் கேட்கான் ஈழம்!
****************************************************************
வேள்விக்காய் எமை வளர்த்தனர் ஒரு சில புலம் பெயர் தமிழர்
வெந்து நாம் கருகி உடல் சிதறுகையில்
வேடிக்கையாய் கைதட்டிச் சிரித்தனர் இன்னும் சில தமிழர்
இறுதியாய் உள்ளோர் இலக்கினை அடைவார் என
குருதியில் எமை நனைய வைத்தனர் சுதந்திர வீரர்
எங்கள் அவலத்தைக் காட்டி, அழகிய படமாக்கி
அகதியாய் விண்ணப்பித்து
குளு குளு வாழ்க்கை வாழ்கிறார் சில தமிழர்;
இறைவா இனியோர் போர் வேண்டாம் என
இறைஞ்சியே வாழ்கின்றார்கள் இப்போதைய ஈழத் தமிழர்!
******************************************************************
பிற் குறிப்பு: முதற் பகுதியில் உள்ள இரு நறுக்குகளைப் படித்தவுடன் கொஞ்சம் மகிழ்ந்திருப்பீர்கள். இரண்டாம் பகுதியில் உள்ள நறுக்குகளைப் படித்தவுடன் கொஞ்சம் உடைந்து போயிருப்பீர்கள். இது போலத் தான் இன்று முகாம்களை விட்டு வெளியே வந்து வாழும் தமிழர்களின் வாழ்வும். சுருங்கச் சொல்லின் ஒரு நிமிடம் சந்தோசமாகவும், மறு நிமிடம் நினைவுகள் வந்து சூழ்ந்து கொள்ளச் சோகமாகவும் வாழ்வது தான் எங்களின் வாழ்க்கை!
|
17 Comments:
வணக்கம் நிரூபன் கவிதை நன்றாக இருக்கிறது.ஆனால் ///வேள்விக்காய் எமை வளர்த்தனர் புலம் பெயர் தமிழர்/// இந்த வரிகள் எந்தளவு பொருந்தும் என்று தெரியவில்லை. காரணம் போராட்டத்தை 76 களில் ஆரம்பித்தது ஈழத்தில் உள்ள இளைஞர்கள்.போராட்டத்தை வளர்த்தது ஈழத்தில் உள்ள மக்களும் அரசியல் கட்சிகளும் (தமிழரசுக்கட்சி ,தமிழ் தேசிய கூட்டமைப்பு போன்ற) புலம்பெயர் மக்கள் என்பது இடையில் வந்தவர்கள் அதாவது கடந்த (5/10) வருடங்கள் வரை.
///ஒரு திக்கு நோக்கி, ஓர் நாளில் குடி பெயர்ந்து
குருதியில் குளித்தெழுந்து, குடல் தெறிக்கப் பல உயிர்கள்
கருகிச் செத்த காட்சிகளைப் பார்த்தோ///
அநேகமாக 90 களுக்கு முன்னர் வடகிலக்கிலே பிறந்த தமிழன் ஒவ்வொருவநிடமும் யுத்தத்தில் வடு நெஞ்சிலே இருக்கும்.எதோ ஒரு வகையால் யுத்தத்திலே பாதிக்கப்பட்டிருப்பான். இன்று கூட எனக்கு நவாலி தேவாலயத்தில் நடந்த கொரூடம் கண்முன்னே நிக்கிறது.
கந்தசாமி. said...
வணக்கம் நிரூபன் கவிதை நன்றாக இருக்கிறது.ஆனால் ///வேள்விக்காய் எமை வளர்த்தனர் புலம் பெயர் தமிழர்/// இந்த வரிகள் எந்தளவு பொருந்தும் என்று தெரியவில்லை. காரணம் போராட்டத்தை 76 களில் ஆரம்பித்தது ஈழத்தில் உள்ள இளைஞர்கள்.போராட்டத்தை வளர்த்தது ஈழத்தில் உள்ள மக்களும் அரசியல் கட்சிகளும் (தமிழரசுக்கட்சி ,தமிழ் தேசிய கூட்டமைப்பு போன்ற) புலம்பெயர் மக்கள் என்பது இடையில் வந்தவர்கள் அதாவது கடந்த (5/10) //
சகோதரம், கவிதையில் ஒரு வரியில் தவறிழைத்து விட்டேன். இப்போது திருத்தி விட்டேன் சகோதரம். புலம் பெயர் தமிழர்களில் ஒரு பகுதியினர் தங்களது பிள்ளைகளை நன்றாகப் படிக்க வைத்துக் கொண்டு, புலிகள் எப்ப அடிக்கிறார்கள்? எப்போது நிறைய இராணுவம் இறக்கும் என இணையங்களைத் தேடிய படி புலிகள் அடிக்க வேண்டும் எனும் எண்ணத் தோடு வாழ்ந்தார்கள் என அறிந்தேன். அந்த ஆதங்கத்தில் தான் இந்த வரிகளைச் சேர்த்தேன்.
என்ன தான் இருந்தாலும் ஒரு தலை முறையின் கையில் பாரத்தை ஒப்படைத்து விட்டு மறு தலைமுறை ஒதுங்கியிருந்து கூவி, விசிலடித்து, பிளேனால் அடிக்கும் போது சொக்கிளேற் குடுத்து மகிழ்ந்த கதைகளையும் அறிவேன். அந்த ஆதங்கங்களும், வலிகளும் தான் இந்த வரிகளின் பிறப்பிடம்.
வேதனை வரிகளில் வந்து விழுகிறது. சிரமப்படும் நம் மக்களுக்கு சீரிய வாழ்வு கிடைக்க இறைஞ்சுகிறேன் இறைவனிடத்தில்.
எமது அவலம் படித்தவுடன் முதல் இரண்டும் மனதில் இல்லை.
யுத்தம் ஈழத்தமிழருக்கு நல்லதையே கொண்டு வந்திருக்கும் கொஞ்சம் விட்டுக் கொடுத்துப் போயிருந்தால் !
///என்ன தான் இருந்தாலும் ஒரு தலை முறையின் கையில் பாரத்தை ஒப்படைத்து விட்டு மறு தலைமுறை ஒதுங்கியிருந்து கூவி, விசிலடித்து, பிளேனால் அடிக்கும் போது சொக்கிளேற் குடுத்து மகிழ்ந்த கதைகளையும் அறிவேன். அந்த ஆதங்கங்களும், வலிகளும் தான் இந்த வரிகளின் பிறப்பிடம் ///நீங்கள் சொல்வது உண்மை தான் நிரூபன்.யுத்தம் வேணும் என்று எதிர்பார்த்து இருக்கும் புலம்பெயர் சில தமிழர்கள் இனி வாழ்நாளில் ஈழத்துக்கு வரப்போவதும் இல்லை தங்கள் பிள்ளை குட்டிகளை ஈழத்துக்கு அனுப்பப்போவதும் இல்லை.ஆக அவர்கள் சொல்லி எதுமே நடக்கப்போவதில்லை. நான் ஏன் சொன்னேன் என்றால் புலம்பெயர் தேசத்திலே இடது கையால் கொடுப்பது வலது கைக்கு தெரியாதா வண்ணம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னிச்ச்சயாகவோ குழுக்களாகவோ முன்வந்து உதவி செய்யும் நல்ல உள்ளங்களும் இருக்கின்றனர். முடிந்தால் நான் நேரில் கண்ட /அறிந்த இவர்கள் பற்றி சிறு பதிவு போட முயற்ச்சிக்கிறேன்.
////யுத்தம் வேணும் என்று எதிர்பார்த்து இருக்கும் புலம்பெயர் சில தமிழர்கள் இனி வாழ்நாளில் ஈழத்துக்கு வரப்போவதும் இல்லை தங்கள் பிள்ளை குட்டிகளை ஈழத்துக்கு அனுப்பப்போவதும் இல்லை.ஆக அவர்கள் சொல்லி எதுமே நடக்கப்போவதில்லை. நான் ஏன் சொன்னேன் என்றால் புலம்பெயர் தேசத்திலே இடது கையால் கொடுப்பது வலது கைக்கு தெரியாதா வண்ணம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னிச்ச்சயாகவோ குழுக்களாகவோ முன்வந்து உதவி செய்யும் நல்ல உள்ளங்களும் இருக்கின்றனர்./////
ஆமாம் ஒரு சிலரின் சுயநலத்தால் தான் எம் வாழ்வே பறி போகிறது... உங்கள் பதிவுக்காய் காத்திருக்கிறோம்...
நிரூபன் சுறுக்கென்று இருக்குது....
வாழ்க்கை எனும் ஓடம்...
good one..:)
நிரு உங்களிடம் பிடித்ததே இந்தத் துணிச்சல்தான்!
எல்லாமே யதார்த்தமானவை! எனக்கு இன்னும் நிறையவே சொல்லத் தோணுது! பட் நேரம் போதவில்லை!
எங்கள் அவலத்தைக் காட்டி, அழகிய படமாக்கி
அகதியாய் விண்ணப்பித்து
குளு குளு வாழ்க்கை வாழ்கிறார் சில தமிழர்;
இறைவா இனியோர் போர் வேண்டாம் என
இறைஞ்சியே வாழ்கின்றார்கள் இப்போதைய ஈழத் தமிழர்!
கவிதைகளில் உங்கள் வேதனை தெரிகிறது.... ஈழத் தமிழனுக்கு நல்லதோர் வாழ்க்கை கிடைக்க வேண்டுவோம்....
கந்தசாமி. said...
///என்ன தான் இருந்தாலும் ஒரு தலை முறையின் கையில் பாரத்தை ஒப்படைத்து விட்டு மறு தலைமுறை ஒதுங்கியிருந்து கூவி, விசிலடித்து, பிளேனால் அடிக்கும் போது சொக்கிளேற் குடுத்து மகிழ்ந்த கதைகளையும் அறிவேன். அந்த ஆதங்கங்களும், வலிகளும் தான் இந்த வரிகளின் பிறப்பிடம் ///நீங்கள் சொல்வது உண்மை தான் நிரூபன்.யுத்தம் வேணும் என்று எதிர்பார்த்து இருக்கும் புலம்பெயர் சில தமிழர்கள் இனி வாழ்நாளில் ஈழத்துக்கு வரப்போவதும் இல்லை தங்கள் பிள்ளை குட்டிகளை ஈழத்துக்கு அனுப்பப்போவதும் இல்லை.ஆக அவர்கள் சொல்லி எதுமே நடக்கப்போவதில்லை. நான் ஏன் சொன்னேன் என்றால் புலம்பெயர் தேசத்திலே இடது கையால் கொடுப்பது வலது கைக்கு தெரியாதா வண்ணம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னிச்ச்சயாகவோ குழுக்களாகவோ முன்வந்து உதவி செய்யும் நல்ல உள்ளங்களும் இருக்கின்றனர். முடிந்தால் நான் நேரில் கண்ட /அறிந்த இவர்கள் பற்றி சிறு பதிவு போட முயற்ச்சிக்கிறேன்.//
உங்களின் பதிவுகளுக்காக நானும் காத்திருக்கிறேன். இவர்களின் உதவிகள் இப்போது எந்த வழியில் எங்கள் ஊரில் உள்ளவர்களுக்குக் கிடைக்கின்றன என்று விளக்கிக் கூற முடியுமா? இன்றைய கால கட்டத்த்தில் நான் வாழும் பகுதிகளிலோ, எனது அயலூர்களிலோ புலம் பெயர் தமிழர்களின் உதவிகள் வந்து சேர்வதாகவோ, புலம் பெயர் தமிழர்களின் நிதிப் பங்களிப்புகள் கிடைப்பதாகவோ நான் நேரில் காணவுமில்லை. அறியவுமில்லை.
அப்படியாயின் இப்போதும் எம்மை வைத்துப் படங் காட்டி ஒரு சிலர் பிழைக்கிறார்களோ என்று எண்ணவும் தோன்றுகிறது.
http://www.kuppilanweb.com/maindirectry/uthavum%20karankal.html
http://www.tamilwin.com/view.php?204oQjbdbcbF92S24e32IBz2023rpGieddc4Gp1c30edPL2Ibe4d829r4cb0HjQM32
மக்களுக்கு என புலம்பெயர் தேசத்திலே சேர்த்த பணம் சில தனிப்பட்டவர்கள் கைகளிலே தேக்கி நிற்கிறது. தட்டி கேட்டால் நாமும் துரோகி .
நிரூபனுடன் மீண்டும் முரண்படவேண்டியுள்ளது அடுத்ததலைமுறையிடம் பாரம் கொடுத்தார்களா!சிலர் செய்யும் தவறுக்காக எல்லாறும் பதிக்கப்படமுடியாது.நமக்கு ஓருவிடிவு கிடைக்கும் என்றுதான் நாங்களும் ஓர் இரவுக்குள் கடல்கடந்தோம் எவ்வளவு துயரங்கள்,இழப்புக்கள்,என்ன செய்யமுடியும் காலம் செய்த கோலம்.புலம் பெயர்ந்தவர்கள் சந்ததி எவ்வளவு குரல் கொடுத்தார்கள் (2009) காலப்பகுதியில்கொட்டும் மழையிலும் குளிரிலும் ஐரேப்பாவின் தலைநகரம்கங்களில் எவ்வளவு பாடுபட்டார்கள் உணர்வாள் என்பதை நேரடியாக கண்டவன் .அவர்கள் அதங்கம்தான் உங்களிடம் முரன்படவேண்டியுள்ளது.சிறபான கவிதை வாழ்த்துக்கள்
பின்குறிப்பில் ஒரு டச் வெச்சுடீங்க...
என்னத்தை சொல்ல...நான் எல்லாம் தமிழ்நாட்டில் பிறந்தும் காசுக்காக இன்னொரு நாட்டில் அகதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்...
Post a Comment