Monday, March 14, 2011

எனக்கு அது போக மாட்டேங்குது!

வணக்கம், வந்தனம், நமஸ்தே, ஆயுபோவான், அஸ்லாமு அலைக்கும், எல்லோரும் எப்பிடி இருக்கிறீங்கள்?  இன்றைக்கு ஒரு சீரியஸ்ஸான மேட்டரோடை உங்களை நாடி வருகிறேன். சில வேளை உங்களுக்கு இந்தப் பிரச்சினை சிரிப்பை வரவழைக்கலாம். ஆனாலும் இப் பிரச்சினையால் நான் தினம் தினம் படும் வேதனை இருக்கிறதே, அவலம் இருக்கிறதே அது வார்த்தைகளுக்குள் அடக்கமுடியாது.


எனக்கு இப்ப ஒரு ஆறு, ஏழு நாட்களாக அது ஒழுங்காக போக மாட்டேங்குது. ’’டோய் என்ன சும்மா அது இது என்று கதை விடுறாய்? விளக்காமச் சொன்னால் தானே புரியும் என்று முறைக்கிறீர்கள் தானே. என்ன அப்பிடிப் பார்க்கிறீங்க? சொல்ல வெட்கமா இருக்கு, சொன்னால் பேச மாட்டீங்களே? அந்தக் காலமையிலை பல்லை விளக்கிப் போட்டு தண்ணியை வாளியிலை எடுத்துக் கொண்டு போய் அமெரிக்காவின்ரை நாஸா முதல், நடிகைகளின்ரை அந்தரங்க அறை வரை சிந்தித்துக் கொண்டு மனதை ஒரு நிலையில் வைத்துக் கொண்டு இருப்போமே! அது தான் பாருங்கோ. நாங்கள் பிறியா(The place for freedom of thinking) இருந்து யோசிப்போமெல்லே ஒரு இடம். அந்த இடத்திலை போய்க் குந்தினால்; எனக்கு அது வர மாட்டேங்குது.

என்ன இன்னுமா புரியவில்லை. சொல்ல வெட்கமா இருக்குப் போங்கோ. எனக்கு இப்ப ஒரு கொஞ்ச நாளாக கக்கூஸ் அதாங்க ரொயிலெற் ஒழுங்காப் போக மாட்டேங்குது. இது இப்ப, போற வாற இடமெல்லாம் பெரிய பிரச்சியினைத் தருகிறது. ஆரம்பத்திலை வாளியிலை தண்ணியை எடுத்துக் கொண்டு போய் இருந்த ரெண்டு நாளும் ‘சறக்...புறக்...கறக்.....புறக்..........என்று சத்தமா வாய்வு மட்டும் தான் போய்ச்சு. என்ன கொடுமை நல்லுரானே, சந்நிதியானே என்று நினைச்சு நல்லா முக்கி இருந்து பார்த்தேன். ம்......கூம்.. அது போகவே மாட்டேங்குது சகோதரர்களே.

இது ஓவராப் போனாலும் பிரச்சினை, போகாட்டியும் பிரச்சினை எனும் கட்டத்திலை எனக்கு இப்போ போகாட்டிப் பிரச்சினை என்ற நிலமை. வேலைக்குப் போற இடத்திலை அலுவலகத்திலை எங்கடை ஊழியர்களுக்கு முன்னாலையும் ரொய்லெற்ற்குப் போகாட்டி வாற அதே சத்தம் தான் சறுக்......புறுக்.....குறுக்..............விறுக்....புர்........................என்று சத்தம் வந்திட்டுது என்றால் பாருங்களேன்? அவமானமாகவும், வெட்கமாகவும் இருக்கு. ஆட்களுக்கு முன்னு, நாலு பேருக்கு முன்னுக்கு உங்களுக்கு வாய்வு போனால் அது தான் குசு சத்தமாகப் போனால் எப்பிடியிருக்கும்? அதே நிலமை தான் இப்ப எனக்கும் ஏற்பட்டிருக்கிறது.
என்ன செய்ய என்ரை கடவுளே என்று அவசரமாக ஓடிப் போய்  ‘ஆனைப்பந்தியிலை உள்ள டொக்டர் சிவகடாட்சத்தைச் சந்தித்தேன்’ அவர் என்ன சொன்னார் தெரியுமே?

’தம்பி நிரூபன், உங்களுக்கு மலச் சிக்கல் இருக்குது என்று நினைக்கிறேன். இது ஒரு சின்னப் பிரச்சினை தான். (என்னது சின்னப் பிரச்சினையோ, வயித்திலை கல்லைக் கட்டிக் கொண்டு நடக்கிற மாதிரி கழிவெல்லாத்தையும் தேக்கி வைத்திருக்கிற எனக்குத் தான் தெரியும் அது என்ன பிரச்சினை என்று?)ஒரே வழி நீங்கள் நல்லாப் பழங்களை உண்ண வேணும். உந்தப் பெட்டிப் பால்(அதானுங்கோ Nestomalt, Anchor, Viva) குடிக்கிறதை நிறுத்திப் போட்டு இனிமேல் (Fresh) பிரெஷ்சாக பசுப்பாலை வாங்கிப் கொஞ்சம் சீனி போட்டு கொதிக்க வைச்சு இளஞ் சூட்டோடை குடிச்சுப் பாருங்கோ, அதோடை நல்லாப் பப்பாசிப் பழமும், வாழைப் பழமும், உண்ணச் சொல்லிச் சொன்னார்.

நானும் எங்களின் திருநெல்வேலிச் சந்தைக்கு நாயாய் அலைஞ்சு, ஒரு மாதிரிப் பப்பாசிப் பழம், வாழைப் பழம் எல்லாம் வாங்கிச் சாப்பிட்டுப் பார்த்தேன். ம்...கூம்.. எந்த வித மாற்றமும் இல்லை. அரை மணி நேரமா இருந்து முக்கின முக்கிலை ஆட்டுப் புழுக்கை போடுற மாதிரி இரண்டு கட்டியள்(Two small drop's) மட்டும் வந்திச்சு. ஊரிலை உள்ள கடவுள் மாரை எல்லாம் கும்பிட்டு மன்றாடி முக்கி முடிக்கிறதுக்குள்ளை ‘டோய் வெளியிலை வேளைக்கு வாடா’ என்று தம்பி வந்து கதவிலை தட்டுறான். என்ன கறுமம் பிடிச்ச வாழ்க்கை என்று எண்ணவும் தோன்றுது.

இதெல்லாம் சரிவராது என்று நொந்து நூலாகி வேலைக்கும் போன புதன் லீவு போட்டிட்டு முதல் போன டொக்டரும் சரி வர மாட்டார் என்ற நோக்கத்திலை ‘கல்வியங்காடு செந்தில் நாதன்’ டொக்டரிட்டைப் போனேன். அவரிட்டைப் பிரச்சினையைச் சொன்னதும் ஒரு பேதிக் குழுசையைத் தந்து போட்டுச் சொன்னார். இந்தப் ‘பேதிக் குளிசையைக் குடிச்சால்’ ஏற்கனவே உடம்பிலை இருக்கிற கசாளம் எல்லாம் ஒரேயடியா கலக்கிக் கழிவாப் போடும். இதுக்குப் பிறகு ரொய்லெற் ஒழுங்காகப் போகும் என்று.

பேதிக் குளிசை குடிச்ச ஒரு நாள் மட்டும் கொஞ்சம் சுமாராகப் போய்ச்சுது பாருங்கோ. அடுத்த நாள் முதல் இரண்டு சின்ன துண்டுகள் தான். நானும் உந்த உறைப்பான அல்வா மிக்ஸர், பக்கோடா எல்லாம் வேண்டிச் சாப்பிட்டுப் பார்த்தேன். சரியாக மாட்டேங்குது. இறுதியா ஒரே முடிவோடை களத்திலை இறங்கி மிளகாய்த் தூளைக் கூடக் கரைச்சுக் குடிச்சுப் பார்த்தேன். கலக்கிக் கொண்டு போகட்டும் என்று. எதுவுமே வேலைக்கு ஆக மாட்டேங்குது.

என்னோடை அவஸ்தை இருக்கே. அது சொல்லி மாளாது. நீங்கள் தான் ஹெல்ப் பண்ணவேணும் உறவுகளே. ரொயிலெற் போகா விட்டால் உடம்பிலை தேங்கி இருக்கிற கழிவுகள் அதிகமாகி உடலிலை குருதியோடு சேர்ந்து விடும் என்று என் நண்பன் ஒருவன் பெரிய குண்டை வேறை தூக்கிப் போட்டுட்டான். யாருக்காவது ஏதும் வழி தெரியுமே? என்னோடை வாழ்க்கையோடை விளையாடாதீங்கோ. சிரிப்பாக நினைக்காமல் சீரியஸ்ஸாகப் பதில் சொல்லுங்கோ.


இப்பவெல்லாம் கழிவு போகாததாலை உடல் நிறை அதிகமாகி எங்கை பொண்ணுகள் நம்மளை லுக்கு விடாமல் போயிடுவாங்களோ என்று சாப்பிடுறதையே குறைச்சிப் போட்டன் உறவுகளே.

56 Comments:

நிரூபன் said...
Best Blogger Tips

# கவிதை வீதி # சௌந்தர் said...
பயனுள்ள பதிவு..//

சகோதரம், என்னை வைச்சு காமெடி பண்ணுறீங்களே? என்னோடி வலி எனக்குத் தானய்யா தெரியும். ஆடு நனையுது என்று ஓநாய் அழுத கதை மாதிரியெல்லோ இது இருக்குது.
நான் வேறை வயித்திலை கல்லைக் கட்டிக் கொண்டு அலையுறன். இவர் பயனுள்ள பதிவாம்.

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

மக்கா இது ஒரு பிரச்சினையே இல்லை. ராத்திரி சாப்பிட்டு படுக்க போகும் முன்பு நல்லா பழுத்த வாழை பழம் சாப்பிடுங்க. காலையில எழும்பியதும் ஒரு கப் பிளாக் காப்பி சூடா குடிச்சிட்டு மெதுவா டாய்லேட் போங்க ஈசியா இருக்கும்......
அப்புறம் ஒரு நாளைக்கு இரண்டு லிட்டர் பச்சை [அந்த தண்ணி இல்லை] தண்ணீர் அருந்துங்கள் சரியாகி விடும்....

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

// # கவிதை வீதி # சௌந்தர் said...
பயனுள்ள பதிவு..//

அடடா.....யோவ் கவிதை வீதி, பயபுள்ளை முக்கி முனகிட்டு இருக்கார்....
இதுல நீரும் லந்து குடுத்து முக்க வச்சிட்டீரே ஹா ஹா ஹா ஹா...

Thenammai Lakshmanan said...
Best Blogger Tips

நல்ல டாக்டரிடம் போங்கள் நிரூபன்

✨முருகு தமிழ் அறிவன்✨ said...
Best Blogger Tips

முதலில் உங்களுக்கு பிரச்னை எதனால் என்று நீங்களே யோசியுங்கள்.

ஊகமான காரணங்கள்--
1.நீங்கள் காரமான உணவுப் பொருட்களையும் பொரித்த சிப்ஸ்,உருளைக் கிழங்கு போன்ற பதார்த்தங்களை அதிகம் உண்ணும் பழக்கம் உடையவரா?ஆமெனில் நிறுத்தவும்,கீரை,பச்சைக் காய்கறிகள் சேர்ந்த காரமில்லாத உணவுக்கு மாறவும்.
2.வாரத்திற்கு ஒரு முறையாவது தலையில் எண்ணெய் தேய்த்து ஊறியபிறகு வெந்நீர் வைத்துக் குளிக்கும் பழக்கம் உண்டா,இல்லையெனில் துவங்கவும்.
3.கருணைக் கிழங்கு பெரியது,சிறிய விரல் விரலாக இருப்பது அல்ல,வாங்கி வெங்காயம்,பூண்டு சேர்த்து குழம்பு வைத்து அடிக்கடி உண்ணவும்.
4.இரவில் நீண்ட நேரம் விழிக்கும் வழக்கம் இருப்பின் நிறுத்தவும்,சரியான நேரத்திற்குப் படுத்து எழும் வழக்கத்திற்கு வரவும்.
5.திரிபலாதி சூர்ணம் வாங்கி காலை பல் துலக்கியவுடன் ஒரு டீ ஸ்பூன் அளவு சாப்பிட்டு வார்ம் வாட்டர்-பொறுக்கும் சூட்டில் இருக்கும் நீர் ஒன்றரை டம்ளர் சுமார் 300 மிலி.அருந்தவும்.மருந்தை அப்படியே விழுங்காமல்,வாயில் போட்டு நீர் ஊற்றி கொப்பளிப்பது போல் செய்து சூர்ணம் நீரில் கரைந்த பின் குடிக்கவும்.
6.இரவில் இரண்டு பூவன் பழமும்-ரஸ்தாளி,மலைப்பழம் கூடாது-சாப்பிட்டு சுருக்கென்ற சூட்டில் பால் அருந்தவும்.

Unknown said...
Best Blogger Tips

அன்னாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

Unknown said...
Best Blogger Tips

அசத்தல் பதிவு தந்த நிரூபனுக்கா இந்த கதி # ஹிட்ஸ் வாழ்க..

DR.K.S.BALASUBRAMANIAN said...
Best Blogger Tips

ஆங்கில மருந்துகள் வேண்டாம் நண்பரே. நிலவாகை சூரணம் என்ற சித்த மருந்து மிக நல்ல தீர்வாக இருக்கும்
ஆனாலும் இந்த சிரமத்திலும் முக்கிக்கொண்டே பதிவெழுதும் உங்கள் திறமைக்கு பாராட்டுக்கள்

தனிமரம் said...
Best Blogger Tips

பசலிக்கீரை தொடர்ந்து சாப்பிட்டால்  சுகமான வழியில் மலம் வெளியேறும்.நல்ல பனங்கள்ளு குடித்தால் இன்னும் நல்லாக இருக்கும்

வசந்தா நடேசன் said...
Best Blogger Tips

உக்காந்து யோசிக்கிரீங்க.. ஏதாவது ஐடியா யாராவது சொல்ல வாழ்த்துக்கள், நம் கைவசம் ஒன்றும் இல்லை, இருக்கும் ஒன்றை மனோ சொல்லியிருக்கிறார்.. விரைவில் விடுபட வாழ்த்துக்கள்..

ஹேமா said...
Best Blogger Tips

ச்ச....ச்ச...நாறுது.சுவிஸ் வரைக்கும் நாத்தம் தாங்க முடியேல்ல நிரூபன்.
உங்களுக்குப் போகாட்டி நாற்றுப் பதிவை நாறவைக்கலாமோ.

எப்பவும் படுக்கப்போகேக்க மெல்லிய சுடுதண்ணி குடிச்சிட்டுப் படுங்கோ.எல்லாம் சரியாப்போகும்.

அந்த நடுவில ஏறிக் குந்தியிருந்து யோசிக்கிற படத்தில இருக்கிறது நீங்களோ.ரசனயோட இருக்கிறியள் அதுதான் !

டக்கால்டி said...
Best Blogger Tips

இரவில் படுக்குமுன் சூடான பானம் வெந்நீரோ, பாலோ குடித்து விட்டு படுங்கள். காலையில் எழுந்தவுடன் மூன்று டம்பளர் தண்ணீரை குடியுங்கள். பிறகு ஐந்து நிமிடம் நடைபோடுங்கள். பிறகே நீங்கள் கழிவறைக்கு செல்ல வேண்டும்.

டக்கால்டி said...
Best Blogger Tips

எனக்கெல்லாம் இந்த விஷயத்துக்கு நாயர் கடை சாயவும், ஒரு கோல்ட் பில்ட்டரும் போதுங்க

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
Best Blogger Tips

நிரு என்ன இது பழக்கவழக்கம்? சீச்சி.....! நான் ஒரு ஐடியா சொல்கிறேன்! உங்களது ஐ பாட்டில் எவண்டி உன்ன பெத்தான் பாடலை சத்தமா போட்டு கேளுங்கோ! எல்லாம் தன்னால வரும்!



( ஐடியா சொல்லித் தந்தவர் - பன்னிக்குட்டி ராமசாமி )

ம.தி.சுதா said...
Best Blogger Tips

நரு உடன நல்ல வைத்தியம் எடுங்க இது பார்க்க சின்ன பிரச்சனையானாலும் பலருக்கு ஞாபக மறதி, முகப் பரு போனற வற்றுக்கு இது தான் காரணம்...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
வைரமுத்துவின் மறுபக்கமும் என் சந்தேகங்களும் தீர்த்து விடுங்களேன்.

Anonymous said...
Best Blogger Tips

நிருபன் ,
வெந்தயத்தை இரவில் நீரில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் அந்த வெந்தயத்தை சாப்பிட்டு அந்த தண்ணியை குடிக்கவும். பலன் கிடைக்கும். எனது அனுபவம். (முதல் நாள் பலன் கிடைக்கும். இல்லாவிட்டால் 2 , 3 நாட்கள் முயற்சி செய்யவும்.)

நிரூபன் said...
Best Blogger Tips

MANO நாஞ்சில் மனோ said...
மக்கா இது ஒரு பிரச்சினையே இல்லை. ராத்திரி சாப்பிட்டு படுக்க போகும் முன்பு நல்லா பழுத்த வாழை பழம் சாப்பிடுங்க. காலையில எழும்பியதும் ஒரு கப் பிளாக் காப்பி சூடா குடிச்சிட்டு மெதுவா டாய்லேட் போங்க ஈசியா இருக்கும்......
அப்புறம் ஒரு நாளைக்கு இரண்டு லிட்டர் பச்சை [அந்த தண்ணி இல்லை] தண்ணீர் அருந்துங்கள் சரியாகி விடும்...//

மிக்க நன்றி உறவே, இந்த வழி கொஞ்சம் இலகுவானது, நான் முயற்சி பண்ணிப் பார்க்கிறேன்.

நிரூபன் said...
Best Blogger Tips

தேனம்மை லெக்ஷ்மணன் said...
நல்ல டாக்டரிடம் போங்கள் நிரூபன்//

நன்றிகள் சகோதரி. இதுவரை இரண்டு டாக்டரிடம் போயிட்டன். ஆனால் நல்ல பதிலேதும் இல்லை. ம்...நண்பர்கள் கூறிய வழிகளில் ட்றை பண்ணுறேன்.

நிரூபன் said...
Best Blogger Tips

அறிவன்#11802717200764379909 said...
முதலில் உங்களுக்கு பிரச்னை எதனால் என்று நீங்களே யோசியுங்கள்.

ஊகமான காரணங்கள்--
1.நீங்கள் காரமான உணவுப் பொருட்களையும் பொரித்த சிப்ஸ்,உருளைக் கிழங்கு போன்ற பதார்த்தங்களை அதிகம் உண்ணும் பழக்கம் உடையவரா?ஆமெனில் நிறுத்தவும்,கீரை,பச்சைக் காய்கறிகள் சேர்ந்த காரமில்லாத உணவுக்கு மாறவும்.
2.வாரத்திற்கு ஒரு முறையாவது தலையில் எண்ணெய் தேய்த்து ஊறியபிறகு வெந்நீர் வைத்துக் குளிக்கும் பழக்கம் உண்டா,இல்லையெனில் துவங்கவும்.
3.கருணைக் கிழங்கு பெரியது,சிறிய விரல் விரலாக இருப்பது அல்ல,வாங்கி வெங்காயம்,பூண்டு சேர்த்து குழம்பு வைத்து அடிக்கடி உண்ணவும்.
4.இரவில் நீண்ட நேரம் விழிக்கும் வழக்கம் இருப்பின் நிறுத்தவும்,சரியான நேரத்திற்குப் படுத்து எழும் வழக்கத்திற்கு வரவும்.
5.திரிபலாதி சூர்ணம் வாங்கி காலை பல் துலக்கியவுடன் ஒரு டீ ஸ்பூன் அளவு சாப்பிட்டு வார்ம் வாட்டர்-பொறுக்கும் சூட்டில் இருக்கும் நீர் ஒன்றரை டம்ளர் சுமார் 300 மிலி.அருந்தவும்.மருந்தை அப்படியே விழுங்காமல்,வாயில் போட்டு நீர் ஊற்றி கொப்பளிப்பது போல் செய்து சூர்ணம் நீரில் கரைந்த பின் குடிக்கவும்.
6.இரவில் இரண்டு பூவன் பழமும்-ரஸ்தாளி,மலைப்பழம் கூடாது-சாப்பிட்டு சுருக்கென்ற சூட்டில் பால் அருந்தவும்.//

நன்றிகள் உறவே,

1.நான் காரமான உணவுகளையும், பாகற்காய் பொரியல், உருளைக் கிழங்கு, கத்தரிக்காய், வாழைக்காய், மீன், இறால் பொரியல் அதிகம் சாப்பிடுவேன். இன்று முதல் நிறுத்துகிறேன்.

2.வாரத்திற்கு ஒரு முறையாவது தலையில் எண்ணெய் தேய்த்து ஊறியபிறகு வெந்நீர் வைத்துக் குளிக்கும் பழக்கம் உண்டா,இல்லையெனில் துவங்கவும்.//

இப்பவெல்லாம் Gel, Cream வைக்கத் தொடங்கினாப் பிறகு எண்ணெய் வைக்கும் பழக்கம் குறைந்து விட்டது. இந்த ஞாயிறு எண்ணெய் வைத்து முயற்சி செய்து பார்க்கிறேன்.

3.கரணைக் கிழங்கு முயற்சி செய்து பார்க்கிறேன்.

4.ஆமாம் இரவில் பதிவர்கள் பதிவுகளைப் படிப்பது, படம் பார்ப்பது என தூங்க அதிகாலை இரண்டு மணி ஆகி விடும். இனிமேல் இரவில் நேரத்திற்குத் தூங்கலாம் என முடிவு செய்துள்ளேன்.

5.திரிபலாதி சூர்ணம்- புரியவில்லை. ஆங்கிலத்தில் இதன் பெயர் தெரிந்தால் சொல்லுங்கோ. பிளீஸ் மிக்க உதவியாக இருக்கும்.

உங்களின் மேலான கருத்துக்களுக்கு நன்றிகள் சகோதரா.

நிரூபன் said...
Best Blogger Tips

பாரத்... பாரதி... said...
அசத்தல் பதிவு தந்த நிரூபனுக்கா இந்த கதி # ஹிட்ஸ் வாழ்க.//

பாரத்... பாரதி... said...
அசத்தல் பதிவு தந்த நிரூபனுக்கா இந்த கதி # ஹிட்ஸ் வாழ்க.//

என்னதூ...ஊரு கண்ணு பட்டுட்டு என்று மறைமுகமா சொல்லுறீங்களோ? இது வரை நான் எந்தவிதமான ஹிட்ஸ் பதிவுகளும் எழுதவில்லை. என் மனதில் பதிந்தவற்றை, நான் அனுபவித்த விடயங்களையும், எங்கள் வாழ்வில் நடந்தவற்றையும் மட்டுமே எழுதுகிறேன்.

இது ரொம்ப ஓவருங்க..

நிரூபன் said...
Best Blogger Tips

drbalas said...
ஆங்கில மருந்துகள் வேண்டாம் நண்பரே. நிலவாகை சூரணம் என்ற சித்த மருந்து மிக நல்ல தீர்வாக இருக்கும்
ஆனாலும் இந்த சிரமத்திலும் முக்கிக்கொண்டே பதிவெழுதும் உங்கள் திறமைக்கு பாராட்டுக்கள்//

பிளீஸ் நிலவாகை சூரணம் என்பது பெரிய சீரகமா? விளக்கம் தாங்கோ. இல்லையெனில் ஆங்கிலப் பெயரை யாராவது சொல்லுங்கோ. பதிவெழுதுகிறேனா?

//இந்த சிரமத்திலும் முக்கிக்கொண்டே பதிவெழுதும் உங்கள் திறமைக்கு பாராட்டுக்கள்//

வீட்டை நாறடிக்காமல் எழுதுறேன் பாருங்க.எப்பிடி நம்ம திறமை.

நிரூபன் said...
Best Blogger Tips

Nesan said...
பசலிக்கீரை தொடர்ந்து சாப்பிட்டால் சுகமான வழியில் மலம் வெளியேறும்.நல்ல பனங்கள்ளு குடித்தால் இன்னும் நல்லாக இருக்கும்//

நன்றிகள் நண்பா. முயற்சி செய்கிறேன். முடிவையும் வெகு விரைவில் சொல்கிறேன்.

நிரூபன் said...
Best Blogger Tips

வசந்தா நடேசன் said...
உக்காந்து யோசிக்கிரீங்க.. ஏதாவது ஐடியா யாராவது சொல்ல வாழ்த்துக்கள், நம் கைவசம் ஒன்றும் இல்லை, இருக்கும் ஒன்றை மனோ சொல்லியிருக்கிறார்.. விரைவில் விடுபட வாழ்த்துக்கள்..//

சரி பரவாயில்லை. இப்ப மட்டும் கை வசம் நிறைய ஐடியாக்கள் இருக்கு. முயற்சி செய்கிறேன்.

நிரூபன் said...
Best Blogger Tips

ஹேமா said...
ச்ச....ச்ச...நாறுது.சுவிஸ் வரைக்கும் நாத்தம் தாங்க முடியேல்ல நிரூபன்.
உங்களுக்குப் போகாட்டி நாற்றுப் பதிவை நாறவைக்கலாமோ.

எப்பவும் படுக்கப்போகேக்க மெல்லிய சுடுதண்ணி குடிச்சிட்டுப் படுங்கோ.எல்லாம் சரியாப்போகும்.

அந்த நடுவில ஏறிக் குந்தியிருந்து யோசிக்கிற படத்தில இருக்கிறது நீங்களோ.ரசனயோட இருக்கிறியள் அதுதான்!//

என்னது சுவிஸ் வரைக்கும் மணக்குதோ? அட லோக்கலிலை இருந்து இப்ப இன்ரநேஷனல் வரைக்கும் நாறுதா. கடவுளே நீதான் என்னைக் காப்பாற்ற வேணும்.

சகோதரி, சுடு தண்ணி குடிச்சுப் பார்க்கிறேன்.

அந்த நடுவில ஏறிக் குந்தியிருந்து யோசிக்கிற படத்தில இருக்கிறது நீங்களோ.ரசனயோட இருக்கிறியள் அதுதான்!//

என்னது ரசனையோ? எரியிற வீட்டிலையும் எண்ணெய் ஊத்துற முயற்சி இல்லையே இது? இது தான் கலைஞனின் கைப்பக்குவமோ? இதிலை உள் கூத்து ஏதும் இல்லையோ? என்ன மாதிரி ரசிக்கிறீங்க போங்க.

நிரூபன் said...
Best Blogger Tips

டக்கால்டி said...
இரவில் படுக்குமுன் சூடான பானம் வெந்நீரோ, பாலோ குடித்து விட்டு படுங்கள். காலையில் எழுந்தவுடன் மூன்று டம்பளர் தண்ணீரை குடியுங்கள். பிறகு ஐந்து நிமிடம் நடைபோடுங்கள். பிறகே நீங்கள் கழிவறைக்கு செல்ல வேண்டும்//

டக்கால்டி said...
எனக்கெல்லாம் இந்த விஷயத்துக்கு நாயர் கடை சாயவும், ஒரு கோல்ட் பில்ட்டரும் போதுங்க//

நீங்கள் சொல்லும் முதல் ஐடியா சூப்பரா இருக்கே. முயற்சி செய்கிறேன்.
சகோதரம், நாயார் கடைச் சாயா குடிக்க உங்க ஊருக்குத் தான் வரணும். நம்ம ஊரிலை கூழ் குடிச்சிட்டுத் தண்ணி குடிச்சால் எல்லாம் சரியாப் போகும் என்று சொல்லுவாங்க. ஆனால் அந்த மேட்டரையும் ட்றை பண்ணினேன். ம்..கூம்...

நிரூபன் said...
Best Blogger Tips

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
நிரு என்ன இது பழக்கவழக்கம்? சீச்சி.....! நான் ஒரு ஐடியா சொல்கிறேன்! உங்களது ஐ பாட்டில் எவண்டி உன்ன பெத்தான் பாடலை சத்தமா போட்டு கேளுங்கோ! எல்லாம் தன்னால வரும்!



( ஐடியா சொல்லித் தந்தவர் - பன்னிக்குட்டி ராமசாமி )//

என்னது... இப்பிடி ஒரு ஐடியாவா. இதோ உடனே முயற்சிக்கிறேன். தம்பி..இங்கே ஓடிவா. அண்ணணுக்காக ஒரே ஒரு உதவி. இணையத்தளத்திலை tamilbea.com இல் உந்தச் சிம்புவின் பாட்டை இறக்கி ஐ போட்டிலை ஏற்றித் தா. நான் இப்போதே அதனைக் கேட்ட படி நான் கழிவறைக்குப் போக வேண்டும்.

பன்னிக்குட்டியிட்டைக் கேளுங்கோ.. அந்தப் பாட்டின்ரை பேஸ் சத்தத்திற்கு எல்லாமே போயிடுமா? நிஜமாத் தான் சொல்லுறீங்களா? நன்றிங்க நண்பர்களே.

நிரூபன் said...
Best Blogger Tips

♔ம.தி.சுதா♔ said...
நரு உடன நல்ல வைத்தியம் எடுங்க இது பார்க்க சின்ன பிரச்சனையானாலும் பலருக்கு ஞாபக மறதி, முகப் பரு போனற வற்றுக்கு இது தான் காரணம்...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
வைரமுத்துவின் மறுபக்கமும் என் சந்தேகங்களும் தீர்த்து விடுங்களேன்.//

என்ன சகோதரம் சுதா, இப்பிடி ஒரு பெரிய அணு குண்டைத் தூக்கிப் போடுறீங்க. வெகு விரைவிலை இந்தப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும். இல்லா விட்டால் நீங்கள் சொல்வது போல முகப்பரு வந்திட்டால் என் நிலமை என்னாகும்? நான் வேலை முடிஞ்சு வரும் போகுது பிகருகளை லுக்கு விட முடியாதெல்லே?

நிரூபன் said...
Best Blogger Tips

Anonymous said...
நிருபன் ,
வெந்தயத்தை இரவில் நீரில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் அந்த வெந்தயத்தை சாப்பிட்டு அந்த தண்ணியை குடிக்கவும். பலன் கிடைக்கும். எனது அனுபவம். (முதல் நாள் பலன் கிடைக்கும். இல்லாவிட்டால் 2 , 3 நாட்கள் முயற்சி செய்யவும்.)//

இதுவும் இலகுவான வழி முறை தான். இப்போது நாளொன்றுக்கு ஒரு வழி முறை எனப் பின்பற்றுவதாகத் தீர்மானித்துள்ளேன். உங்களின் பொன்னான நேரத்தை எனக்காக ஒதுக்கி, என் பிரச்சினைக்குத் தீர்வினைத் தருவதற்காகப் பல்வேறு வழிகளிலும் ஆலோசனைகளை வழங்கி என் அன்பு நெஞ்சங்கள், பாசமிகு உறவுகள் அனைவருக்கும் நன்றிகள்....................நன்றிகள்...............நன்றிகள்................நன்றிகள்.

வெகு விரைவில் உங்கள் ஆலோசனைகள் எந்தலவில் வேலை செய்கிறது (Work out ஆகிறது) என்பதனை அறியத் தருகிறேன்.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...
Best Blogger Tips

தினமும் காலை எழுந்ததும் தண்ணீரர் அருந்தி வரவும் தொடர்ந்து யோகட் சாப்பிடுங்கள் .மற்றும் 3 நேரமு் நரியான நேரத்தில் உணவு உண்பதை வழக்கத்துக்கு கொண்டுவரவும். அதிக நீர் அருந்தி வாருங்கள் விரைவில் தீர்வு கிடைத்து விடும்

சக்தி கல்வி மையம் said...
Best Blogger Tips

நண்பா... உண்மையில் இதுக்கு என்ன கருத்து சொல்லனும்ன்னு தெரியல...
சீக்கிரம் குணமாகட்டும்..

ரேவா said...
Best Blogger Tips

நண்பா தினமும் பழங்கள் உணவில் சேர்த்துக் கொண்டால் இந்த பிரச்சனை சரி ஆகும்... அல்லது சூடான தேநீர் பருகினாலும் குணமடையும்... தண்ணீர் அதிகம் பருகாமல் இருப்பவர்களுக்கும் இந்த உபாதை ஏற்படும் நண்பா... அதிகம் தண்ணீர் குடியுங்கள்..சரி நண்பா அடுத்து அது வந்துருச்சுன்னு பதிவு போடுவீங்களா?... ஹ ஹ எதிர்பார்க்கிறோம்(சும்மா ஒரு காமெடி க்கு ,டோன்ட் டேக் இட் சீரியஸ் )

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

பூவன் பழம் டெயிலி 2 சாப்பிடுங்க.. அவ்வளவுதான்

தமிழ்ப் பையன் said...
Best Blogger Tips

அறிவன் சொன்னது போல செய்யுங்க... காரம், புளி, உப்பு குறைக்கவும்,.. குறிப்பா காரம் கூடவே கூடாது..

உடம்பு சூடு குறைக்க மோர் கலக்கி குடிச்சிட்டு வாங்க. எல்லாம் சரியாகும்.

பூவன் பழம் சாப்பிடுங்க...

அப்புறம் ரொம்ப நேரம் உட்காரமா.ஓடிஆடி விளையாடுங்க ..

இது எல்லாருக்கும் இருக்கது தான். ரொம்ப சீரியஸ்ஆச்சுனா. லாட்டஸ் மாத்திரை சாப்பிடுங்க.. ஹோமியோபதி நல்லதுங்க...

Anonymous said...
Best Blogger Tips

விளெக்கெண்ணை காய்ச்சி குடிங்க சும்மா பிச்சிக்கும்

Anonymous said...
Best Blogger Tips

காலையில் சிறிது விளெக்கெண்ணை ஆமணக்கு எண்ணை சூடு செய்து ஆறியபின் குடிக்கவும் 5 ஸ்பூன் அளவு..போதும்

✨முருகு தமிழ் அறிவன்✨ said...
Best Blogger Tips

||5.திரிபலாதி சூர்ணம்- புரியவில்லை. ஆங்கிலத்தில் இதன் பெயர் தெரிந்தால் சொல்லுங்கோ. பிளீஸ் மிக்க உதவியாக இருக்கும்.

உங்களின் மேலான கருத்துக்களுக்கு நன்றிகள் சகோதரா.||

ஆங்கிலப் பெயரா? வெளங்கிரும்...

நிருபன் என்ற பெயருக்கு ஆங்கிலப் பெயர் என்ன ?
:)

ஜோக்ஸ் அபார்ட்...ஐரோப்பாவில் திரிபலாதி கிடைக்குமா என்று தெரியவில்லை.
கடுக்காய்,நெல்லிக்காய்,தான்றிக் காய் ஆகிய மூன்று காய்களின் இடித்த சூரணத்தின் பெயர் திரிபலாதி.

இம்ப்காப்ஸ் மருந்துக் கடை அல்லது சித்த மருந்துக் கடைகள் இருந்தால் அங்கு கிடைக்கலாம்.
அல்லது இந்தியாவில் இருக்கும் நண்பர்களிடம் சொல்லி வாங்கி அனுப்பி வைக்கச் சொல்லவும்.

நிலவாகைச்சூரணம் பொதுவாக மலமிளக்கி அல்ல..

நன்றி.

நிரூபன் said...
Best Blogger Tips

தோழி பிரஷா said...
தினமும் காலை எழுந்ததும் தண்ணீரர் அருந்தி வரவும் தொடர்ந்து யோகட் சாப்பிடுங்கள் .மற்றும் 3 நேரமு் நரியான நேரத்தில் உணவு உண்பதை வழக்கத்துக்கு கொண்டுவரவும். அதிக நீர் அருந்தி வாருங்கள் விரைவில் தீர்வு கிடைத்து விடும்.//

நன்றிகள் பிரஷா.. இதையும் முயற்சி செய்து பார்க்கிறேன்.

நிரூபன் said...
Best Blogger Tips

சி.பி.செந்தில்குமார் said...
பூவன் பழம் டெயிலி 2 சாப்பிடுங்க.. அவ்வளவுதா//

நன்றிகள் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

ரேவா said...
நண்பா தினமும் பழங்கள் உணவில் சேர்த்துக் கொண்டால் இந்த பிரச்சனை சரி ஆகும்... அல்லது சூடான தேநீர் பருகினாலும் குணமடையும்... தண்ணீர் அதிகம் பருகாமல் இருப்பவர்களுக்கும் இந்த உபாதை ஏற்படும் நண்பா... அதிகம் தண்ணீர் குடியுங்கள்..சரி நண்பா அடுத்து அது வந்துருச்சுன்னு பதிவு போடுவீங்களா?... ஹ ஹ எதிர்பார்க்கிறோம்(சும்மா ஒரு காமெடி க்கு ,டோன்ட் டேக் இட் சீரியஸ்//

பழங்களையும் சேர்த்துக் கொள்கிறேன். இன்று முதல் வழமையாக குடிப்பதை விட கொஞ்சம் அதிகமாக குடிக்கிறேன்.(குடி தண்ணி)
அது வந்து முடிய ஒரு பதிவு போட்டாப் போச்சு. உங்கள் விருப்பம். கண்டிப்பாக நிறை வேற்றப்படும்.

நிரூபன் said...
Best Blogger Tips

சி.பி.செந்தில்குமார் said...
பூவன் பழம் டெயிலி 2 சாப்பிடுங்க.. அவ்வளவுதான்//

நன்றி.. நன்றி. முயற்சி செய்கிறேன் சகோதரம்.

நிரூபன் said...
Best Blogger Tips

தமிழ்ப் பையன் said...
அறிவன் சொன்னது போல செய்யுங்க... காரம், புளி, உப்பு குறைக்கவும்,.. குறிப்பா காரம் கூடவே கூடாது..

உடம்பு சூடு குறைக்க மோர் கலக்கி குடிச்சிட்டு வாங்க. எல்லாம் சரியாகும்.

பூவன் பழம் சாப்பிடுங்க...

அப்புறம் ரொம்ப நேரம் உட்காரமா.ஓடிஆடி விளையாடுங்க ..

இது எல்லாருக்கும் இருக்கது தான். ரொம்ப சீரியஸ்ஆச்சுனா. லாட்டஸ் மாத்திரை சாப்பிடுங்க.. ஹோமியோபதி நல்லதுங்க..//

நன்றிகள் சகோ. உங்களின் ஐடியாக்களையும் செய்து பார்க்கிறேன்.

நிரூபன் said...
Best Blogger Tips

ஆர்.கே.சதீஷ்குமார் said...
காலையில் சிறிது விளெக்கெண்ணை ஆமணக்கு எண்ணை சூடு செய்து ஆறியபின் குடிக்கவும் 5 ஸ்பூன் அளவு..போதும்.//

சகோதரம் இப்ப கைவசம் ஒரு ஆறேழு இலகுவான ஐடியாக்கள் இருக்குது. அது Work out ஆகாவிட்டால் உங்களின் ஐடியாவையும் செய்து பார்க்கிறேன். நன்றிகள்.

நிரூபன் said...
Best Blogger Tips

அறிவன்#11802717200764379909 said..|
//ஆங்கிலப் பெயரா? வெளங்கிரும்...

நிருபன் என்ற பெயருக்கு ஆங்கிலப் பெயர் என்ன ?
:)
//

சகோ சத்தியமாக நான் காமெடி பண்ணவில்லை. நான் இலங்கையில் பெருஞ்சீரகம், சிறு சீரகம், மல்லி, மிளகு, கடுகு. சிறு சீரகம் இவற்றை மட்டும் தான் நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.
Cumin Seeds, jeera, Pepper, Coriander, Poppy seeds, இவற்றில் எது திரிபலாதி சூரணம் என்றால் நிச்சயமாக புரியும்.

ஒரு சில தமிழ் நாட்டுச் சொற்களுக்கு சத்தியமாக எனக்குப் பொருள் தெரிவதில்லை. அதனை வைத்துத் தான் நான் கேட்டேன்.

//ஜோக்ஸ் அபார்ட்...ஐரோப்பாவில் திரிபலாதி கிடைக்குமா என்று தெரியவில்லை.
கடுக்காய்,நெல்லிக்காய்,தான்றிக் காய் ஆகிய மூன்று காய்களின் இடித்த சூரணத்தின் பெயர் திரிபலாதி.//

நான் ஐரோப்பாவில் இருக்கவில்லை. இலங்கையின் யாழ்ப்பாணத்தில் இருக்கிறேன். சில நேரம் ஐரோப்பாவில் இருந்தால் தெரியுமோ? அப்படியாயின் ஐரோப்பாவிற்கு விசா எடுத்துத் தாங்கோ நான் போக றெடி-;)


//இம்ப்காப்ஸ் மருந்துக் கடை அல்லது சித்த மருந்துக் கடைகள் இருந்தால் அங்கு கிடைக்கலாம்.
அல்லது இந்தியாவில் இருக்கும் நண்பர்களிடம் சொல்லி வாங்கி அனுப்பி வைக்கச் சொல்லவும்.//

இலங்கையிலும் நீங்கள் சொல்லும் திரிபலாதி சூரணம் வேறு பெயரில் கிடைக்கலாம். அந்தப் பெயர் விளங்காமல் தான் கேட்டேன்.
நான் எல்லோருடைய பதில்களையும் எனக்கு ஆலோசனையாக மட்டுமே எடுத்துக் கொண்டேன். உங்களது பதிலகளை வைத்துக் காமெடி பண்ணும் எண்ணம் எனக்கு இல்லை.

பன்னிக்குட்டி ராம்சாமி said...
Best Blogger Tips

நல்லா சாப்பிடுங்க, தூங்குங்க, லைட்டா எக்சர்சைஸ் பண்ணுங்க. அப்புறம் வழக்கமா போற இடத்துலேயே போங்க,....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...
Best Blogger Tips

//////# கவிதை வீதி # சௌந்தர் said...
பயனுள்ள பதிவு..///////

நாசமா போச்சு... இதுக்குத்தான் படிச்சிட்டு கமெண்ட்டு போடனும்கறது.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...
Best Blogger Tips

ஆங்....... இன்னொரு முகியமான விஷயம், தண்ணீர் தாராளமா குடிக்கனும்

Unknown said...
Best Blogger Tips

கோபிக்காதீங்க நண்பரே நான் கமெண்டு போட கொஞ்ச நாட்களாகும்....
இது கூட டெம்ளேட் கமெண்டு தான்

✨முருகு தமிழ் அறிவன்✨ said...
Best Blogger Tips

||உங்களது பதிலகளை வைத்துக் காமெடி பண்ணும் எண்ணம் எனக்கு இல்லை.||

எனக்கும் தெரியும்...

சும்மா பகடிக்குத்தான் எழுதினேன்..
டேக் இட் ஈஸி..

திரிபலம் என்பதற்கு ஆங்கில வார்த்தை அறியேன்,இருப்பதாகவும் தெரியவில்லை..

சுவிஸ் நாறுகிறது என்றெல்லாம் சில நண்பர்கள் போட்டு வாங்கியதால் ஐரோப்பாவில் இருக்கிறீர்களோ என்று நினைத்தேன்..

யாழ்ப்பாணத்தில் தமிழ் மருந்துக் கடைகள் இருந்தால்(!?) முயற்சிக்கவும்..

vimalanperali said...
Best Blogger Tips

நிறைய தண்ணீர் குடுயுங்கள்.இரவு படுகைக்குச்செல்லும் ஒரு கிளாஸ் சுடுதண்ணீர்.

Anonymous said...
Best Blogger Tips

Take one guava fruit before having ur dinner atleast before 30 mins...and if possible try to get Badam pisini from Tamilnadu....just soak it in the water in the night in a cup and have it in the morning with bit of sugar mixed or with milk....this will solve the problem...

take more fiber content foods....

நிரூபன் said...
Best Blogger Tips

Nesan said...
பசலிக்கீரை தொடர்ந்து சாப்பிட்டால் சுகமான வழியில் மலம் வெளியேறும்.நல்ல பனங்கள்ளு குடித்தால் இன்னும் நல்லாக இருக்கும்//

நன்றிகள் நண்பா. இதனையும் முயற்சி செய்து பார்க்கிறேன். உங்களிற்குப் பதிலளிக்கத் தவறி விட்டேன். தாமதமான பதிலுக்கு ஐ ஆம் So sorry.

ஜெய்லானி said...
Best Blogger Tips

ரொம்ப சுலபம் http://kjailani.blogspot.com/2010/12/2.html இது மாதிரி செய்து சாப்பிடுங்க ஹா..ஹா... :--))

இராஜராஜேஸ்வரி said...
Best Blogger Tips
This comment has been removed by the author.
நிரூபன் said...
Best Blogger Tips

விமலன் said...
நிறைய தண்ணீர் குடுயுங்கள்.இரவு படுகைக்குச்செல்லும் ஒரு கிளாஸ் சுடுதண்ணீர்.//


நன்றிகள் விமலன்.

//
ஜெய்லானி said...
ரொம்ப சுலபம் http://kjailani.blogspot.com/2010/12/2.html இது மாதிரி செய்து சாப்பிடுங்க ஹா..ஹா... :--)//

பொறுங்கோ படித்து விட்டு வருகிறேன்.

//
இராஜராஜேஸ்வரி said...
கடுக்காய்தூள் வெண்ணீரில் சாப்பிடுங்கள்.
கடுக்காய் கொடுத்துவிட்டான் -என்று ஏமாற்றப்பட்டவர்கள் புலம்புவார்களே.
தினமும் கீரை சூப் அருந்தவும்.
சுத்தமான தண்ணீர் அருகில் வைத்துக்கொண்டு அடிக்கடி அருந்தவும்.//

நேற்று முன் தினமே ஆரம்பித்து விட்டேன். தண்ணீர் அருந்த, சகோதரம் மனோவின் ஆலோசனையினைக் கடைப் பிடித்தேன். இப்போது கொஞ்சம் போகுது.

உங்கள் அனைவரி மேலான அன்பிற்கும், உங்களின் பொன்னான நேரத்தில் எனக்குப் பதிலளிக்கும் உங்களின் அன்பு மனசிற்கும் நன்றிகள். நன்றிகள்.

கோவை நேரம் said...
Best Blogger Tips

கொய்யா சாப்பிடுங்கள் , அப்புறம் நல்ல நார்சத்து உள்ள காய்கறிகள் சாப்பிடுங்கள் .வாழைக்காய் தண்டு பொரியல் சாப்பிடுங்கள் .காலை எழுந்தவுடன் ஒரு லிட்டர் தண்ணீர் குடிங்கள் ..அப்புறம் போயே போச்சு ....இட்ஸ் gone ....

ramalingams said...
Best Blogger Tips

காலையில் எழுந்தவுடன் மூன்று டம்பளர் தண்ணீரை குடியுங்கள். பிறகு ஐந்து நிமிடம் நடைபோடுங்கள். பிறகே நீங்கள் கழிவறைக்கு செல்ல வேண்டும் ithu thaan sariyaan theervu

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails