இணையத்தில் இந்தப் பாடலைப் பாடியவர் பற்றித் தேடிப் பார்த்தேன். அடடே நமக்குத் தெரியாமல் இந்தளவு விசயங்கள் தமிழ் சொல்லிசையில் இருக்கிறதா என ஆச்சரியப்பட்டேன். இந்தப் பாடல் பற்றி நான் தேடிய போது,
ஈழத் திரு நாட்டைச் சேர்ந்தவரும், தற்போது புலம் பெயர்ந்து லண்டனில் வாழ்ந்து வருபவருமான சுஜித்ஜீ என்பவர் இப்பாடலை உருவாக்கியிருக்கிறார் என அறிந்தேன்.
இந்தச் சுஜித்ஜி அவர்களின் புதிய தமிச் சொல்லிசை அல்பமான இராவணன் இசை அல்பத்தில் இடம் பெற்ற ‘கோழை’ எனும் பாடலை உங்களோடு இப் பதிவின் மூலம் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன்.
பாடல்: கோழை..
பாடல் வரிகளை எழுதிப் பாடிபவர்: சுஜித்ஜி
பாடலுக்கு இசை: சந்தோஷ்
பெண்கள் பெயர் கொல்ல கதைகள் வளர்த்தாய்
பெண்ணின் உணர்வுகளை ஏறி மிதித்தாய்
பெண்ணை வெல்லப் பல பொய்கள் உரைத்தாய்
கோழை......கோழை...
அன்புத் தாயவளும் பெண்ணே, மறந்தாய்
அக்கா தங்கையவை, அவை யாவும் மறந்தாய்
பெண்ணை வெல்லுவது வீரமளந்தாய்
கோழை......................
நினைப்பிலை நீ ஒரு ஆம்பிளைச் சிங்கம்
நிஜத்திலை உனக்குள்ள முழுதும் அசிங்கம்
வாழ்வின் பெறுமதி உனக்குப் புரியாது
வாழ்வும் பெரு நதி உனக்குப் புரியாது
நிழலதை நிஜமென கதைகள் அளந்தாய்
கழிசறைப் பெண்ணென பொய்கள் புனைந்தாய்
நாளுக்கு நாளென துன்பம் கொடுத்தாய்
நீ சாகிற வரைக்கவர் இன்பம் அழித்தாய்
பெண்கள் தெய்வமடா உனக்குப் தெரியாது
அனைத்தும் அழிக்குமடா உனக்குப் புரியாது
ஆம்பிளை நானென நெஞ்சை நிமிர்த்தாதை
பொம்பிளை பாவத்தை வாழ்வில் சுமக்காதை
(பெண்கள் பெயர் கொல்ல .................)
பூமி உருண்டை போல வாழ்க்கை வட்டம்
நீ எங்கு ஓடினாலும் வந்து முட்டும்
இளைய வயதினிலை அடித்த கொட்டம்
உனை ஐம்பதிலும் வந்து தேடி வெட்டும்
பொய்யும் வதந்தியும் உன் மகளைப் பிடிக்க
அவள் வாடி அழ உனது இதயம் வலிக்க
நீ அன்று செய்த பாவம் வந்து சிரிக்க
வேண்டாம் திருந்தி விடு வாழ்க்கை வெளிக்க
பெண்ணின் உலகமதை அதை உணரப் பழகு
பெண்ணின் உணர்வுதனை மதிக்கப் பழகு
பெண்ணைப் பெண்ணாக நடத்தப் பழகு
நீ மொத்த மனுசனா வாழப் பழகு...
( பெண்கள் பெயர் கொல்ல .................)
ஒரு குடும்பத்திலும், சமூகத்திலும் பெண் எவ்வாறான நிலையினால் புறக்கணிக்கப்படுகிறாள், பெண்ணின் உணர்வுகள் எவ்வாறு உதாசீனம் செய்யபடுகின்றன என்பதை மிகவும் அழகாக தன் கவி நயம் மிக்க பாடல் வரிகளினூடு செதுக்கியுள்ளார் சுஜித்ஜி.
எப்படி இருந்தது பாடல்?
|
10 Comments:
இதை எங்க தேடிப்பிடிச்சீங்க நிரு சூப்பரா இருக்கு!
பெண்ணின் உலகமதை அதை உணரப் பழகு
பெண்ணின் உணர்வுதனை மதிக்கப் பழகு
பெண்ணைப் பெண்ணாக நடத்தப் பழகு
நீ மொத்த மனுசனா வாழப் பழகு...அழகான பகிர்வு.... நன்றி நண்பா உங்கள் பகிர்வுக்கு....
அருமையான பாடல்.. தேடித் தந்ததர்க்கு நன்றி..
பகிர்வுக்கு நன்றிங்க.... நல்லா இருக்குது.
அருமையான கவிதை....
எனது வலைபூவில் இன்று:தனபாலு...கோபாலு.... அரட்டை ஒண்ணு.
அருமையாக இருந்தது நிரு... இருவருக்கும் நன்றிகள்..
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
உலகப் புகழ் பெற்ற தமிழர் கோயிலும் அழிவடையும் தமிழர் சின்னமும்..
புதுசு புதுசா கண்டு பிடிக்கிறாங்கப்பா!!!
தேடுறீங்களோ ரூம் போட்டு??
//பூமி உருண்டை போல வாழ்க்கை வட்டம்
நீ எங்கு ஓடினாலும் வந்து முட்டும்//
அருமையா இருக்கு மக்கா...
பெண்ணைப் பெண்ணாக நினைக்காவிட்டாலும் ஒரு உயிராக நினைத்தால் போதுமே !
அர்த்தம் நிறைந்த வரிகள். படமாக்கிய விதம் அழகா இருக்கு. பகிர்வுக்கு நன்றி, நிரூ.
Post a Comment