நினைவுகளை(ப்) பின் நகர்த்துகிறேன்
இறுதியாக நானும்
நீயும் சந்தித்துக் கொண்ட
அந்த கடைசி நிமிடங்கள்,
நீ பேசிய
கபடமில்லாத வார்த்தைகள்
‘ஏதோ நடந்தது நடந்து போச்சு
எனக்கு வெளி நாட்டிலை
மாப்பிளை பார்த்திருக்காங்க
அவசரப் பட்டு
ஆசையிலை என்னை இழந்திட்டன்?
பருவத் தவறால்
நாம் இருவரும் மணமாகாமலே
’அது உருவாகி விட்டது,
இப்போது அதை
அழித்திடலாம் என நினைக்கிறேன்,
அழித்திடலாம் என நினைக்கிறேன்,
எனக்கு என் எதிர் காலம் முக்கியம்
உங்களுக்கு என்னை விட்டால்
நீ சிரித்தபடி ராஜா கிறீம் கவுஸ்
ஐஸ் கீரிமில் நான் சுவைத்த
அதே ஸ்பெஷல் அயிட்டத்தை
மீண்டும் மீண்டும் சுவைத்தபடி
சொன்னாய்,
’இங்கை பாருங்க,
இந்த ஐஸ்கீறீம் கப்பை
சுடு தண்ணியிலை கழுவிப் போட்டு
அடுத்தவங்க பாவிக்கலை
’’சோ அதாலை கவலையை விடுங்க,
’எனக்கு வாற மாசம் கொழும்பு
கோல் பேஸ் ஹொட்டலிலை றிசப்ஷன்
முடிஞ்சா வாங்க,
இல்லைன்னா வாழ்திட்டுப் போங்க
பாய் நிரூபன் எனச் சொல்லி
என் பார்வையில் இருந்து
நீ நீங்கினாய்
நானோ உனைப் பார்த்தபடி
அசையாத சிலை போல்
அதிர்ச்சியில் ஆழ்ந்து விட்டேன்!
இது காமமா? காதலா?
ஏதும் நிகழாதது போல
எனைக் கடந்து
புது வாழ்க்கை தேடப் போகும் நீயும்
உன் நினைப்பில்
உன்னைப் பற்றி
முழுமையாக
புரிந்து கொள்ளாதா நானும்!
நீ நவீன நங்கை என்று
உனக்காக
பல மருத்துவமனைகள்
குடா நாடெங்கும் முளைத்து விட்டன
உன்னைப் போல
இன்னும் பல பேர்
அவற்றை அழிப்பதற்காக
இந்த நிலையங்களை நாடலாம்?
ஆனால் நான் மட்டும்
எதையோ தொலைத்தவன் போல
என்னை இழந்தவன் போல
பிரம்மை பிடித்தவனாக
எங்கள் ரெலிகொம் அறையில்
கணினியை திறக்கிறேன்
பதிவாய் இதை எழுதுவதற்காக!
|
24 Comments:
கவிதை அருமை...
எனது வலைபூவில் இன்று:
இந்தியா - அயர்லாந்து சுட சுட ஹைலைட்ஸ் - வீடியோ
கவிதை நல்லாயிருக்கு.உணர்வுகள் கொப்பளமாய்ச் சுடுகிறது நிரூபன்.ஆனாலும் வாரத்தைகளை வசனங்களை அழகாகக் கோர்த்திருக்கலாமோ என்று நினைக்கிறேன் !
படம் அருவருக்குது.
ஏன் இந்தப் படம் ?
////எங்கள் ரெலிகொம் அறையில்
கணினியை திறக்கிறேன்
பதிவாய் இதை எழுதுவதற்காக////
கடவுள் என்ன கடவுள்.. நமே படைப்பு நாமே அழிப்பு.. யார் கேட்பார் எமை...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பதிவுலகத்திலிருந்து பாமரர்களுக்கு உதவ வாருங்கள்.
அவளே எல்லாத்தையும் மறந்துண்டு சிம்பிளா இருக்கிறாள் நீ என் கவலைப்படுகிறே தம்பி! அண்ணன் இருக்க கவலை ஏன்
நிரூபன். பெயரே தனித்துத் தொனிக்கிறது.
உங்களின் நீண்ட பின்னொட்டத்தை ஹேமா அவர்களின் வலைப்பூவில் பார்த்தே இங்கு வந்தேன். தமிழகத்தில் பிறந்து வாழும் என் போன்றோரை விடவும், ஈழத்துத் தோழர்களுக்கு தமிழின் பால் பற்று மிக அதிகம்... அது கண்கூடு. நண்பா நானும் எனது வலைப்பூவில் கவிதைகள் எழுதி வருகிறேன். பொழுதிருந்தால் வருகை தந்து தங்கள் கருத்தை பகிருங்கள்.
இது இப்பதிவிற்கான பின்னூட்டம் இல்லை. ஆனால் தங்களை வேறெந்த வழியில் நான் தொடர்பு கொள்ள !?
கவிதை அருமை நண்பா
நல்லா இருக்கு...இது ஸ்டாண்டர்ட் கொமென்ட் இல்ல..
இது கற்பனை கவிதையா இல்லை, நிஜ வாழ்க்கையின் பிம்பமா? எதுவாக இருந்தாலும், மனதை உலுக்கும் கவிதை தான் இது.
வலிக்குதுய்யா......
நிரூபன்,
சொந்த கதையோ, சோகக்கதையோ தெரியாது, ஆனால் இதெல்லாம் சர்வ சாதாரணம் என்றாகிவிட்டது. சில ஆண்களுக்கும், பெண்களுக்கும் கூட.
செக்ஸ் என்பதே ஒரு உணவு என்பது போல, பசி முடிந்த பிறகு அதைப் பற்றி நினைக்க ஆளில்லை. ஆனால் செக்ஸ் வெறும் உணவுதானா?
உங்கள் பார்வையில் கவிதை வந்திருப்பதால் எழுத கொஞ்சம் தைரியம் வேணும். எதற்கும் அந்த பெண்ணின் பார்வையில் யோசிக்கலாமோ என்று தோணும்.!
புரியுது அண்ணா சீரழிந்து செல்லும் எம் சமூகம் மீது உங்களுக்கு இருக்கும் வேதனை. நாம் கையாலாகதவராக..:-(
எனைக் கடந்து
புது வாழ்க்கை தேடப் போகும் நீயும்
உன் நினைப்பில்
உன்னைப் பற்றி
முழுமையாக
புரிந்து கொள்ளாதா நானும்!
வலி நிறைந்த கவிதை... இது வெறும் கற்பனையாகவே இருக்க என் மனம் நாடுகிறது...இல்லையெனில் வருத்தமே மிஞ்சுகிறது...
என்னை இழந்தவன் போல
பிரம்மை பிடித்தவனாக
எங்கள் ரெலிகொம் அறையில்
கணினியை திறக்கிறேன்
பதிவாய் இதை எழுதுவதற்காக!////
நீங்கள் இட்ட பதிவில் உங்களுக்கு ஆதரவாய் நட்புக்கள் இருக்கிறோம் என்று கணினியில் பின்னூட்டம் மட்டுமே இடமுடிகிறது....வாழ்த்துக்கள் நிரூபன்
பொய்க்காதலின் திரைகளை காமம் கிழிக்கும்???
வேதனை
காதலின் முடிவு காமம் என்றால்
காமம் ஒரு கர்மம்! கர்மம்!!
////எங்கள் ரெலிகொம் அறையில்
கணினியை திறக்கிறேன்
பதிவாய் இதை எழுதுவதற்காக////
நினைவுகள் கூட ஒரு சுகம் ...
கவிதை அருமை.. நிரூபன்.
தற்போதைய பெரும்பாலானாவர்களின் காதல் காமத்தை மட்டும் நோக்கியே நகர்கிறது
ஹேமா said...
கவிதை நல்லாயிருக்கு.உணர்வுகள் கொப்பளமாய்ச் சுடுகிறது நிரூபன்.ஆனாலும் வாரத்தைகளை வசனங்களை அழகாகக் கோர்த்திருக்கலாமோ என்று நினைக்கிறேன் !
படம் அருவருக்குது.
ஏன் இந்தப் படம் //
ஒரு உண்மைச் சம்பவத்தை விளக்க இப்படியான படங்களினை இடுவது தவிர்க்க முடியாததாகிறது. நன்றிகள் சகோதரி.
♔ம.தி.சுதா♔ said...
////எங்கள் ரெலிகொம் அறையில்
கணினியை திறக்கிறேன்
பதிவாய் இதை எழுதுவதற்காக////
கடவுள் என்ன கடவுள்.. நமே படைப்பு நாமே அழிப்பு.. யார் கேட்பார் எமை...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பதிவுலகத்திலிருந்து பாமரர்களுக்கு உதவ வாருங்கள்.//
வாங்கோ சுதா, காலம் கலிகாலம் ஆகிப் போச்சுடா..
இது வைரமுத்து பாட்டு.
March 7, 2011 5:47 AM
ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
அவளே எல்லாத்தையும் மறந்துண்டு சிம்பிளா இருக்கிறாள் நீ என் கவலைப்படுகிறே தம்பி! அண்ணன் இருக்க கவலை ஏன்?//
அபயம் அண்ணா, அபயம். நீங்கள் தான் என் வாழ்வை இனி வளம்படுத்த வேண்டும்.
வருணன் said...
நிரூபன். பெயரே தனித்துத் தொனிக்கிறது.
உங்களின் நீண்ட பின்னொட்டத்தை ஹேமா அவர்களின் வலைப்பூவில் பார்த்தே இங்கு வந்தேன். தமிழகத்தில் பிறந்து வாழும் என் போன்றோரை விடவும், ஈழத்துத் தோழர்களுக்கு தமிழின் பால் பற்று மிக அதிகம்... அது கண்கூடு. நண்பா நானும் எனது வலைப்பூவில் கவிதைகள் எழுதி வருகிறேன். பொழுதிருந்தால் வருகை தந்து தங்கள் கருத்தை பகிருங்கள்.
இது இப்பதிவிற்கான பின்னூட்டம் இல்லை. ஆனால் தங்களை வேறெந்த வழியில் நான் தொடர்பு கொள்ள !?//
வணக்கம் சகோதரம், எங்களின் தமிழ்ப் பற்றை மெச்சும் உறவே,
எங்களின் அன்புக்குப் பாத்திரமான தமிழ் நெஞ்சே,
உங்களை என் வலைப் பூவிற்கு வருக வருக என வரவேற்கிறேன்.
எங்கள் மீதும், எங்கள் தமிழ் மீதும் நீங்கள் வைத்திருக்கும் பேரன்பிற்கும், பேருவகைக்கும் நாங்கள் என்றும் கடமைப்பட்டவர்கள்.
தொடர்பு கொள்ள
nirupan.blogger@gmail.com
என் பதிவினைப் படித்து என்னை ஊக்கப்படுத்தும், என் வலிகளோடு தங்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
காதலில்லா காமமா?
காமமில்லா காதலா?
காமம் கடந்த காதல் தான் காதல்!
கவிதை அருமை....
இப்படி சிலர் இருப்பது தவிர்க்க இயலாததே....
Post a Comment