முற் குறிப்பு: எல்லோருடைய வாழ்க்கையிலும் பால்ய காலம், பாடசாலைக் காலம், பல்கலைக் கழகக் காலம் என்பன மறக்க முடியாத, நினைவேடுகளிலிருந்து அழிக்க முடியாத காலப் பகுதிகளாகும். இதனை விட நண்பர்களோடு கூடிக் கூத்தடித்துக் கும்மாளமடித்து மகிழ்ந்த காலங்களும் மறக்க முடியாத காலப் பகுதிகளாகும். அக் காலப் பகுதிகளில் இடம் பெற்ற சம்பவங்களை மீண்டும் மனக் கண் முன்னே கொண்டு வந்து உங்களோடும் உங்கள் உணர்வுகளோடும் கலப்புறச் செய்யும் முயற்சியாகவே இந்தப் பதிவினைத் தொடங்குகிறேன்.
நீண்ட நாட்களாக வாழ்வின் கறை படிந்த, இன்றும் கண் முன்னே நிழலாடும் நினைவுகளைப் பதிவாக்கி மீண்டும், மீண்டும் அதே நினைவுகளுக்குள் மூழ்க வேண்டாம் எனும் ஒரு சிலரின் வேண்டு கோளுக்கிணங்க இன்று ஒரு சுவாரஸ்யமான பதிவினைத் தொடங்குகிறேன்.
ஊரிலை எவ்வளவோ கஸ்ரப்பட்டுப் படித்து, சாதாரண தரப் பரீட்சை அல்லது ஓ/எல்(Equal to plus 1) பாஸ் பண்ணினால் போதும் பிறகு ஏலெவல் படிக்க எல்லொரும் கிளம்பி விடுவம். எங்களுக்கு விரும்பின பாடங்களை நாங்கள் தெரிவு செய்தாலும், பெற்றோரின் விருப்பமே அதிலும் முதன்மையாக நிற்பதால், நாங்களும்; பெற்றோரின் விருப்பம் ஐம்பது வீதம், எங்களது விருப்பம் ஐம்பது வீதம் எனும் அடிப்படையில் பாடங்களைத் தெரிவு செய்து உயர்தர வகுப்பிலை கல்வி கற்கத் தொடங்குவோம்.(உயர் தரம் - Equal to plus 2)
உயர் தரத்திற்குப் போயிட்டால், முதலாவது வருசம் எங்களை விட ஒரு வகுப்புக் கூடின சீனியர் பொடியங்களுக்கு, மூத்தவங்களுக்கு கொஞ்சம் அடங்கி ஒடுங்கிப் போவம். இந்த உயர் தரம் இரண்டரை அல்லது மூன்று வருடங்களை உள்ளடக்கிய கல்வி கற்கும் காலப் பகுதியாகும்.
முதலாவது வருசம் முடியப் போற காலப் பகுதியிலையே எங்கடை பொடியளுக்குச் சந்தோசம் தன் பாட்டிலை வரத் தொடங்கிவிடும். இந்த உயர் தரம் வாறதுக்கும், வந்து கூத்தடிக்கிறதுக்கும் ஒரு சில பொடியள் தவம் கிடப்பார்கள். ஏன் தெரியுமோ? எங்கடை உயர் தரத்திலை தானே பொட்டையளோடை நல்லா கதைச்சு சிரிச்சு கும்மியடிக்கலாம்.
உயர் தரத்திற்கு வருவதற்கு முன்பதாக- சாதாரண தர வகுப்பு வரை காற்சட்டை அல்லது கழுசான் தான் நாங்கள் போட வேணும். உயர் தரத்திற்கு வந்தவுடன் சொல்ல வேணுமே? ஒரு நீட்டு வெள்ளைக் கலர் றவுசரை(புட்டுக் குழலை) வாங்கிக் கொழுவிக் கொண்டு போனால் பள்ளிக் கூடத்திலை எங்களுக்கு ராஜ மரியாதை தான். அதுவும் பஸ்களிலை பள்ளிக் கூடம் போற ஆட்களுக்கு சொல்லவே வேணும்?
பஸ்களிலை நீலக் காற்சட்டையோடை போகும் போது வெள்ளை றவுசர் போட்ட பொடியங்களுக்குப் பயந்து, அவங்களுக்குக் கீழை அடக்கமாக, அந்த அண்ணாமாரின்ரை சொல்லைக் கேட்டு மிதி பலகைப் பக்கமோ(foot board) இல்லைப் பின் பக்க கண்ணாடிப் பக்கமோ நல்ல பிள்ளைகள் மாதிரித் திரும்பிப் பார்க்காமல் இருந்த எங்கள் எல்லோருக்கும் வெள்ளை றவுசர் போட்டால் கிடைக்கிற சந்தோசத்திற்கு ஈடு இணை எதுவேமியில்லை.
நாங்கள் வெள்ளை றவுசர் போட்டால் நீலக் காற்சட்டைப் பொடியங்கள் எல்லோரும் எங்களுக்குக் கீழை தானே இருக்க வேணும். இது தானே சட்டம். அதுவும் பஸ்ஸிலை மிதி பலகையிலை ஏறி நின்று போற வாற பிகருங்களையும், குட்டிங்களையும் பார்த்து ஹலோ சொல்லி, கண்ணடித்து, அவளுகளின்ரை தொப்பியை கழற்றிக் கையிலை எடுத்து, ஏப்ரல் பூலுக்கு மையடித்து, அந்தக் குட்டிகளின்ரை வெள்ளைச் சட்டைகளை நீல நிறமாக்கிற வரைக்கும் எங்கடை திருகு தாளங்கள் சொல்லி மாளாது. ( திருகு தாளங்கள்- குழப்படி / Naughty's/ சேட்டைகள்)
உயர் தரத்திலை பிகருங்களோடை சேர்ந்து கலவன் பாடசாலையிலை படிக்கிற பொடியங்கடை பாடு எப்பவுமே கொந்தாய் தான்( கொந்தாய்- மிகவும் நன்று). ஆனால் தனிப் பாடசாலையிலை ஆண்கள் பாடசாலையிலை படிக்கிற ஆண்களின் நிலமையும், பெண்கள் பாடசாலையிலை சைற் அடிக்கவும், கண்ணடிக்கவும், கொப்பி குடுக்கிற சாட்டிலை கையைப் பிடிக்கவும் ஆண்கள் இல்லாமல் படிக்கிற பொண்ணுகளின்ரை நிலமையும் அந்தோ பரிதாபம் தான்.
நான் படித்தது ஆண்கள் பாடசாலையிலை. எனக்கும் கொஞ்சம் வறட்சியான கால நிலை தான். ஆனாலும் என்னோடை பாடசாலைக்குப் பக்கத்திலை தான்(யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு) வேம்படி மகளிர் கல்லூரி இருக்கு. குடா நாட்டிலை உள்ள குதூகல குட்டிகளின் சரணாலயமென்றால் வேம்படி மகளிர் கல்லூரியும், சுண்டுக்குளி மகளிர் கல்லூரியும், உடுவில் மகளிர் கல்லூரி, இராமநாதன் மகளிர் கல்லூரி, மற்றும் இந்து மகளிர் கல்லூரியும் தானே?
உயர் தரத்துக்கு வந்தால் எல்லோருக்கும் நல்ல சந்தோசமாக இருக்கும். ஒவ்வோர் பாடசாலைகளிலும் உயர் தர மாணவர்களால், உயர் தர மாணவர்களை இணைத்து Social எனப்படும் Annual get together நிகழ்வினைக் கொண்டாடுவார்கள். ஆண்கள் பாடசாலையென்றாலும் சரி, பெண்கள் பாடசாலையென்றாலும் சரி தத்தமது சகோதரப் பாடசாலைகளில் இருந்து ஆண்களையும், பெண்களையும் அழைத்து பல் சுவை நிகழ்ச்சிகளோடு, பல் சுவை உணவுகளையும் பரிமாறி குதுகலமாக அந் நாளை மிகுந்த சந்தோசத்தோடு கொண்டாடி மகிழ்வார்கள்.
இந்த நிகழ்வைத் தான் நாங்கள் சோஷல் என்று சொல்லுவம். உயர் தர மாணவர் ஒன்றியத்தின்ரை தலமைப் பொறுப்பு என்னிடம் இருந்ததாலை சகோதரப் பாடசாலைகள், ஏனைய பாடசாலைகளில் இருந்து சோஷலுக்கு எங்கள் பாடசாலை மாணவர்களில் இருவர் அல்லது ஐவரினை வருமாறு அனுப்பப்படும் அழைப்பிதழ்கள்(Invitation Letters) யாவும் என்னுடைய கைகளுக்குத் தான் வரும். இதனடிப் படையில் குடா நாட்டிலை உள்ள அதிகமான பாடசாலைகளின் Annual get together நிகழ்விற்குச் சமூகமளித்துக் கும்மாளம் போட்டுக் கூத்தடித்துப் பிகருகள் கூட நின்று போட்டோ எடுத்த பெருமையும் அனுபவமும் எனக்கும் இருக்குது பாருங்கோ.
எங்கடை பள்ளிக் கூடத்திலை இந்தச் சோஷலைக் கொண்டாடுற நாளும் வந்திச்சு. அந்த நாளில் நாங்கள் செய்த அட்டகாசங்கள், கூத்துக்கள், ரகளைகளிற்குப் பிறகு ஒரு ஐந்தாறு வருசத்திற்குச் சோஷல் நடத்திறதையே எங்கடை பள்ளிக் கூட நிர்வாகம் நிறுத்திப் போட்டுது. காரணம் நாம் பெற்ற இன்பத்தை இவ் வையகமும் பெறக் கூடாது எனும் தொலை நோக்கில் நாம் செயற்பட்டமையாகும்.
சோஷலுக்கு உரிய நாள், நட்சத்திரம், நேரம் எல்லாம் குறித்து இன்விற்றேசனை இங்கிலீசிலை அடித்து சகோதரப் பெண்கள் பாடசாலையிலை இருந்து ஆறு மாணவிகளையும், ஏனைய பாடசாலைகளில் இருந்து தலா மூன்று மாணவ, மாணவிகளையும் அழைத்திருந்தோம்.
பிறகென்ன நிகழ்வுகள் ஆரம்பமாகப் போகின்றதால் ஆசிரியர்களுக்கு இதில் இடமில்லை என்பதை உணர்ந்தவராய், எங்களின் பிறின்சி( Our School Principal) மங்கல விளக்கினை ஏற்றி விட்டுப் போய் விட்டார். இந்தச் சோஷலின்ரை ஒரு நல்ல விசயம், இந் நிகழ்வானது மாணவர்களின் நிதிப் பங்களிப்பில் மாணவர்களால் நடாத்தப்படும் ஒரு நிகழ்வாகும். உணவு பரிமாறப்படும் போது மட்டும் ஆசிரியர்கள் கலந்து சிறப்பிப்பார்கள்.
முதலிலை நானும் என்னுடைய நண்பன் ஒருவரும் மைக்கை எடுத்துப் பிடித்து நிகழ்ச்சிகளை அறிவிக்கத் தொடங்கினோம். நிகழ்ச்சிகள் என்றால் சும்மா இல்லைப் பாருங்கோ. பொடியங்களும் பிகருங்களும் கலந்து கொள்கிற நிகழ்ச்சி என்பதனால் எல்லாமே இரட்டை அர்த்தங்களை உள்ளடக்கிய நிகழ்ச்சிகளாகத் தான் நாங்கள் தெரிவு செய்திருப்போம். இந் நிகழ்விற்கு ஆண்கள் கோர்ட் சூட் அணிந்தும் பெண்கள் எங்கள் தமிழ் மாதர்களின் கலாச்சார உடையாண சாறி அல்லது சேலையினை அணிந்தும் வருகை தருவார்கள்.
முதலாவது நிகழ்ச்சிக்காக ஒரு பொண்ணையும், ஒரு பையனையும் அழைத்தோம். நீங்கள் இந்தப் பொண்ணிடம் கேள்வி கேட்க வேண்டும்.
முதலாவது கேள்வியைப் பையன் கேட்கத் தொடங்கினான்:
நாய் ஏன் கறண்ட் போஸ்ற்றைக் கண்டால் (Electric pole) ஒற்றைக் காலைத் தூக்கிறது எனப் பையன் கேட்டான்?
அதற்குப் பதில் சொல்ல வேண்டிய பொண்ணு சுற்றும் முற்றும் பார்த்து, வளைஞ்சு நெளிஞ்சு, நாணப்பட்டு, தரையை ஒரு தரம் பார்த்து,
நீண்ட தூரம் ஓடினதாலை கால் வலிக்குமே அதனாலை தான் ஒரு காலைத் தூக்கி விட்டு, மற்றக் காலிலை நிற்குது’ என்றுங்க பதில் சொல்லும்.
உடனே பையன் நீங்க வேறை, அதுக்கு மூச்சா... போக வேணும் போல இருக்கு. அது தான் காலைத் தூக்குது என்று பதில் சொல்லுவான்.
இந்த நிகழ்ச்சியில் பங்கு பெறும் நபர்களை, பாடலினை ஒலிக்க விட்டு ஒரு பூவினை அரங்கத்தைச் சுற்றி வரும் வகையில் எல்லோர் கைகளினூடாகவும் பரிமாறச் செய்வோம். பாடல் நிற்கும் போது யார் கையில் அந்தப் பூ இருக்கிறதோ; அவரினை மேடைக்கு அழைத்துக் கலாய்க்கத் தொடங்குவோம்.
இன்னொரு பையன் ஒரு பொண்ணிடம் கேட்டான்.
முருகன் வள்ளியைக் காப்பாற்ற என்ன செய்தவர்?
பொண்ணு சொல்லிச்சு வேலையெடுத்தார் என்று..
இதன் பிறகு, ஒரு பொண்ணை மேடைக்கு அழைத்து விட்டு அந்தப் பொண்ணுடன் சேர்த்து மூன்று பையன்களையும் மேடைக்கு அழைத்தோம்.
அந்தப் பொண்ணை ஒரு லொறியாகவும்,
முதலாவது பையனை புறோக்கராகவும்,
இரண்டாவது பையனை லொறி வாங்குவோனாகவும்
மூன்றாவது பொடியனை அந்த லொறியின் உரிமையாளனாகவும் இந்த நிகழ்விற்காக நடிப்பார்கள் என்று கூறி, ஒரு சம்பவத்தைக் கூறினோம்.
புறோக்கர், லொறி வாங்கிற ஆள் இருவரும் லொறி ஒன்றினை வாங்குவதற்காகப் போகிறார்கள். அவர்களுக்கு எதிர்ப் பக்கத்தில் லொறியும்(அதாங்க பொண்ணும்) லொறியின் உரிமையாளரும் நிற்பார்கள்.
முதலி புறோக்கர் லொறியின் உரிமையாளரிடம் பேசத் தொடங்குவார்.
தம்பி ராசா, இந்த லொறி எப்பிடி என்று கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கோவன்?
லொறி உரிமையாளர்: இந்த லொறியோ, இதை நான் வாங்கி இப்ப ஒரு வருசம் தான் ஆகுது, என்னைப் பொறுத்த வரை எந்தவிதப் பிரச்சினையும் இல்லாமல் நல்லா ஓடுது, ஆனால் மாதத்திலை ஒருக்கால் எண்ணைய் அடைப்பாகிப் பெருகி ஊத்துப் படும்.. அது ஒன்று தான் பிரச்சினை என்று சொல்லி முடித்தார்.
உடனே லாறி வாங்கப் போகும் நபர் தன்னுடைய உரையாடலைத் தொடங்குவார்:
இந்த லொறி எப்பிடிப் பாவிக்குமே?
உரிமையாளர்: என்னோடை அனுபவத்தை வைச்சுச் சொல்லுறன். இது நல்லாப் பாவிக்கும். நல்லாத் தாக்குப் பிடிக்கும்.
வாங்கும் நபர்: அப்ப நல்லாப் பாரம் இழுக்குமே?
உரிமையாளர்: இதிலை என்ன சந்தேகம், நான் இந்த ஒரு வருசமாக முன்னாலை, பின்னாலை என்று நிறைய லோட் கட்டி ஓடுறன். சந்தேகமே வேண்டாம், நல்லாப் பாரமிழுக்கும். (இந்தளவும் பேசும் வரை மேடையில் உள்ள பொண்ணு ஒன்றுமே பேசாமல் சிரித்தபடி நிற்பா)
வாங்கும் நபர்: அண்ணை முன்னாலை கொஞ்சம் அடி பட்ட மாதிரிக் கிடக்குது.
உரிமையாளர்: பாவிச்ச லொறி என்றால் அடிபடாமல் பின்னைப் பிடிபட்டே இருக்கும்??
வாங்கும் நபர்: அண்ணை மாசத்திலை ஒருக்கால் ஒயில் மாத்த வேணும் என்று சொல்லுறியள். அதோடை முன்னாலையும் அடிப்பட்டு இருக்குது. இப்ப கடைசியா என்ன விலை சொல்லுறியள்?
உரிமையாளர்: ஒரு ஆறரை இலட்சம் ரூபா என்றால் தந்திட்டு, எடுத்திட்டுப் போங்கோ.
வாங்கும் நபர்: அண்ணை இந்த லொறியை ஒருக்கால் ஓடிப் பாக்கலாமோ?
உரிமையாளர்: என்ன இப்ப இந்த இடத்திலையே ஓடிப் பார்க்கப் போறீங்களோ?
வாங்கும் நபர்: லொறி ஓக்கே என்றால் நான் இப்பவே ஓடிப் பார்க்க றெடி. அதுவும் இந்த இடத்திலை என்றதும், அரங்கிலை நின்ற பொட்டை ஒருக்கால் ஒரு பார்வை பார்த்திச்சே.
அதுக்குப் பத்திரகாளி கூடத் தோற்றுப் போகும்.
அத்தோடை அந்த லொறி வாங்கிற விற்கிற நிகழ்ச்சியை நிறுத்திப் போட்டு,
அடுத்த நிகழ்ச்சிக்கான ஆட்களை அழைத்தோம்...........................................
இன்னும் வளரும்.............
தமிழக உறவுகளுக்காக என்னால் முடிந்தவரை இப் பதிவில் வரும் வார்த்தைகள், சொற் பிரயோகங்களை விளக்கியுள்ளேன். இப் பதிவினையும் என்னால் முடிந்தவரை இலங்கைத் தமிழைத் தவிர்த்து, இலகு தமிழில் தர முயற்சித்து இருக்கிறேன். ஏதாவது சொற்கள் புரியாது விட்டால் பின்னூட்டம் மூலம் கூறுங்கள்.
|
32 Comments:
////எங்கடை பள்ளிக் கூடத்திலை இந்தச் சோஷலைக் கொண்டாடுற நாளும் வந்திச்சு. அந்த நாளில் நாங்கள் செய்த அட்டகாசங்கள், கூத்துக்கள், ரகளைகளிற்குப் பிறகு ஒரு ஐந்தாறு வருசத்திற்குச் சோஷல் நடத்திறதையே எங்கடை பள்ளிக் கூட நிர்வாகம் நிறுத்திப் போட்டுது. காரணம் நாம் பெற்ற இன்பத்தை இவ் வையகமும் பெறக் கூடாது எனும் தொலை நோக்கில் நாம் செயற்பட்டமையாகும்.////வணக்கம் நிரூபன்! பாடசாலை காலங்களில் எதை வேணுமானாலும் தவறவிடலாம் ஆனால் இந்த சோசல் நிகழ்வுகளில் பங்குபர்ருவதை மட்டும் தவற விடவே கூடாது.
நீங்கள் எந்த ஆண்டு A/L
///உயர் தரத்திற்கு வருவதற்கு முன்பதாக- சாதாரண தர வகுப்பு வரை காற்சட்டை அல்லது கழுசான் தான் நாங்கள் போட வேணும்///நாங்கள் பத்தாம் வகுப்பிலேயே குழல் போடா தொடங்கிட்டம் )
///நாய் ஏன் கறண்ட் போஸ்ற்றைக் கண்டால் (Electric pole) ஒற்றைக் காலைத் தூக்கிறது எனப் பையன் கேட்டான்?/// இந்த ஒரு கேள்வி கேட்டதுக்காக நம்ம பாடசாலையில மிகப்பெரிய பிரச்சனை ஒன்று நடந்தது..
மறக்க முடியாத நினைவுகள், திரும்பியும் வராது (
அந்த நாள் ஞாபகங்கள்... உங்கள் பதிவை படித்தவுடன் எனக்கும் என்னுடைய பள்ளி, கல்லூரிக் கால நினைவுகள் வந்துவிட்டது..
தமிழ் எப்படி எழுதினாலும் புரியும் செம்மொழி தோழரே...
see.,
http://sakthistudycentre.blogspot.com/2011/03/blog-post_624.html
கந்தசாமி. said...
////எங்கடை பள்ளிக் கூடத்திலை இந்தச் சோஷலைக் கொண்டாடுற நாளும் வந்திச்சு. அந்த நாளில் நாங்கள் செய்த அட்டகாசங்கள், கூத்துக்கள், ரகளைகளிற்குப் பிறகு ஒரு ஐந்தாறு வருசத்திற்குச் சோஷல் நடத்திறதையே எங்கடை பள்ளிக் கூட நிர்வாகம் நிறுத்திப் போட்டுது. காரணம் நாம் பெற்ற இன்பத்தை இவ் வையகமும் பெறக் கூடாது எனும் தொலை நோக்கில் நாம் செயற்பட்டமையாகும்.////வணக்கம் நிரூபன்! பாடசாலை காலங்களில் எதை வேணுமானாலும் தவறவிடலாம் ஆனால் இந்த சோசல் நிகழ்வுகளில் பங்குபர்ருவதை மட்டும் தவற விடவே கூடாது.//
எங்கடை கந்தசாமியாருக்கும் அனுபவம் இருக்குது போல. உங்கடை அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளலாமே தோழா.
கந்தசாமி. said...
நீங்கள் எந்த ஆண்டு A/L//
ஏனப்பா என்ரை வயசை அறியத் தூண்டில் போடுறீங்களோ? நான் எப்பவுமே யூத்து தான். இடம் பெயர்ந்து மீண்டும் உள்ளுக்கு வந்து மூன்று வருசம் கழித்து ஏலெவல் படிச்சனான்:))
கந்தசாமி. said...
///உயர் தரத்திற்கு வருவதற்கு முன்பதாக- சாதாரண தர வகுப்பு வரை காற்சட்டை அல்லது கழுசான் தான் நாங்கள் போட வேணும்///நாங்கள் பத்தாம் வகுப்பிலேயே குழல் போடா தொடங்கிட்டம் )//
அப்ப நீங்கள் அதிஸ்டசாலிப் பொடியங்கள் என்று சொல்ல வாறீங்கள். நீங்கள் எந்தப் பள்ளிக் கூடத்திலை படிச்சனீங்கள்?
கந்தசாமி. said...
மறக்க முடியாத நினைவுகள், திரும்பியும் வராது (//
அதெல்லாம் ஒரு காலம் சகோதரா. எத்தினை சேட்டைகள் செய்திருப்பம். எல்லாவற்றையும் எழுத்திலை தொகுக்க வேண்டும் என்று ஆசை தான். நேரம் கிடைத்தால் தொகுக்கிறேன்.
* வேடந்தாங்கல் - கருன் *! said...
அந்த நாள் ஞாபகங்கள்... உங்கள் பதிவை படித்தவுடன் எனக்கும் என்னுடைய பள்ளி, கல்லூரிக் கால நினைவுகள் வந்துவிட்டது..
தமிழ் எப்படி எழுதினாலும் புரியும் செம்மொழி தோழரே...//
உங்களின் ஞாபகங்களை என் பதிவு கிளறி விட்டதா? சந்தோசம்.
இப்ப மீண்டும் மாணவனாகி விட்டீர்கள்.
ஒரு சிலருக்கு என் தமிழைப் புரிந்து கொள்வது கடினம் என்று சொல்கிறார்கள். அது தான் அவ்வாறு எழுதினேன்.
அந்த நாள் நியாபகம் நெஞ்சிலே நண்பனே நண்பனே...இந்த நாள் அன்று போல் இல்லையே நண்பனே....
அசத்தல் நியாபகங்கள் மக்கா....
//அப்ப நீங்கள் அதிஸ்டசாலிப் பொடியங்கள் என்று சொல்ல வாறீங்கள். நீங்கள் எந்தப் பள்ளிக் கூடத்திலை படிச்சனீங்கள்?///வட்டுக்கோட்டை பகுதியில் உள்ள ஒரு பாடசாலை 2007a/l . நான் நினைக்கிறேன் என் பெயரை பார்த்து வயசை எடை போட்டுவிட்டீர்கள் என்று. i am சின்ன பொடியன் )
//எங்கடை கந்தசாமியாருக்கும் அனுபவம் இருக்குது போல. உங்கடை அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளலாமே தோழா/// எங்க சகோ நேரம் இருக்கு, நேரம் இருக்கும் போது எழுத முயற்ச்சிக்கிறேன். அநேகமாக உங்கள் நினைவுகளுக்கும் எனது நினைவுகளுக்கும் பெரிதாக வேறுபாடு இருக்காது.ஆனால் சோஷல் நேரம் வரமாட்டம் என்று பெரிய பில்டப் எல்லாம் கொடுத்து............. ) கடைசில போட்டம் ..)
//எங்கடை கந்தசாமியாருக்கும் அனுபவம் இருக்குது போல. உங்கடை அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளலாமே தோழா/// எங்க சகோ நேரம் இருக்கு, நேரம் இருக்கும் போது எழுத முயற்ச்சிக்கிறேன். அநேகமாக உங்கள் நினைவுகளுக்கும் எனது நினைவுகளுக்கும் பெரிதாக வேறுபாடு இருக்காது.ஆனால் சோஷல் நேரம் வரமாட்டம் என்று பெரிய பில்டப் எல்லாம் கொடுத்து............. ) கடைசில போட்டம் ..)
எல்லோர் மனதிலும் இருக்கும் அவரது இளமை கால நினைவுகளை கிளறி விட்டிர்கள் ,நன்றி
அட பாவிகளா எவ்வளவு அக்கிரமம் பண்ணி இருக்கீங்க
MANO நாஞ்சில் மனோ said...
அந்த நாள் நியாபகம் நெஞ்சிலே நண்பனே நண்பனே...இந்த நாள் அன்று போல் இல்லையே நண்பனே....//
இதைத் தான் சொல்வதோ பதிவுக்கேற்ற பாடல் என்று சகோதரம்.
நன்றிகள் சகோ.
நிரூபன்...அட்டகாசம்தான்.பாவம் லொறி.நானா இருந்திருந்தா எட்டி உதைச்சிருப்பன் !
என்ன அழகா சேலை கட்டுறார்.அவர்தான் நீங்களோ !
கந்தசாமி. said...
//அப்ப நீங்கள் அதிஸ்டசாலிப் பொடியங்கள் என்று சொல்ல வாறீங்கள். நீங்கள் எந்தப் பள்ளிக் கூடத்திலை படிச்சனீங்கள்?///வட்டுக்கோட்டை பகுதியில் உள்ள ஒரு பாடசாலை 2007a/l . நான் நினைக்கிறேன் என் பெயரை பார்த்து வயசை எடை போட்டுவிட்டீர்கள் என்று. i am சின்ன பொடியன் )//
இதிலை என்ன இருக்கிறது சகோதரம், எங்களின் உணர்வுகளை வலையில் எழுத்தாக்கமாகப் பகிர்கிறோம். இதில் சின்னப் பொடியன், பெரிய பொடியன் வேண்டாம். எனக்கும் உங்களுக்கும் தசாப்தங்கள் இடை வெளியிருக்கும் என நினைக்கிறேன்(பத்து வருடங்கள்)
நன்றிகள் கந்தசாமியார்.
March 22, 2011 6:56 PM
கந்தசாமி. said...
//எங்கடை கந்தசாமியாருக்கும் அனுபவம் இருக்குது போல. உங்கடை அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளலாமே தோழா/// எங்க சகோ நேரம் இருக்கு, நேரம் இருக்கும் போது எழுத முயற்ச்சிக்கிறேன். அநேகமாக உங்கள் நினைவுகளுக்கும் எனது நினைவுகளுக்கும் பெரிதாக வேறுபாடு இருக்காது.ஆனால் சோஷல் நேரம் வரமாட்டம் என்று பெரிய பில்டப் எல்லாம் கொடுத்து............. ) கடைசில போட்டம் ..)//
எனது சோஷலுக்கு வரமாட்டமோ? பிச்சுப் புடுவன், பிச்சு. இப்பிடியொரு சந்தர்ப்பத்தை மிஸ் பண்ணலாமோ? எங்கடை பொடியள் முதலிலை பெரிய பில்டப் எல்லாம் கொடுத்துப் போட்டு, பிறகு சஸ்பென்ஸாக பொட்டையளுக்கு முன்னாலையும் நின்றிருக்கிறார்கள். நன்றிகள் நன்றிகள்.
இப்ப நடக்கிற சோஷலுக்கு எங்களை அனுமதிப்பாங்களோ? யாராவது விரும்பினால் எனக்கும் சகோதரன் கந்தசாமிக்கும் இரண்டு இன்விற்றேசன் அனுப்புங்கோ.
Felix Raj said...
எல்லோர் மனதிலும் இருக்கும் அவரது இளமை கால நினைவுகளை கிளறி விட்டிர்கள் ,நன்றி//
நன்றிகள் சகோதரம்.
//எல் கே said...
அட பாவிகளா எவ்வளவு அக்கிரமம் பண்ணி இருக்கீங்க//
இது சும்மா Trailer தான் சகோ. இனித் தான் மெயின் பிக்ஸரே இருக்கு. இதுக்கே இப்படியென்றால் அடுத்த பாகத்திலை வரப் போற அக்கிரமங்களை என்னவென்று சொல்லுவீங்க.
நன்றிகள் சகோ.
ஹேமா said...
நிரூபன்...அட்டகாசம்தான்.பாவம் லொறி.நானா இருந்திருந்தா எட்டி உதைச்சிருப்பன் !
என்ன அழகா சேலை கட்டுறார்.அவர்தான் நீங்களோ !//
உள் வீட்டு விடயங்களை வெளியில் சொல்லும், பகிரங்கப்படுத்தும் இந்த முயற்சியை தற்கால எமது இலங்கை நாட்டின் ஊடகச் சுதந்திரத்திற்கமைவாக வன்மையாகக் கண்டிக்கிறேன்.
இதையெல்லாம் பப்பிளிக்காக சொல்லி, பப்பிளிசிற்றி பண்ணக் கூடாது.
பிற் குறிப்பு அல்லது இத்தால் சகலருக்கும்: பதிவில் உள்ள சாறி கட்டும் ஆண் மகனின் படத்திற்கும், நிரூபனுக்கும் எந்தவிதச் சம்பந்தமும் இல்லை என்பதை அனைவருக்கும் அறியத்தருகிறேன்.
ஹேமா said...
நிரூபன்...அட்டகாசம்தான்.பாவம் லொறி.நானா இருந்திருந்தா எட்டி உதைச்சிருப்பன் !
என்ன அழகா சேலை கட்டுறார்.அவர்தான் நீங்களோ !//
காதைக் கொஞ்சம் கிட்டக் கொண்டு வாங்கோ சகோதரி, இதையெல்லாம் வெளிப்படையாகச் சொன்னால் நாளைக்கு ஊரிலை உள்ள ரீச்சர்மாரெல்லாம், சாறி கட்டத் தெரியாதவையெல்லாம் என்ரை வீட்டை நோக்கிப் படையெடுக்கட் தொடங்கி விடுவார்கள்:))
அருமையான, சுவையான கலக்கலான பதிவு நண்பா! எமது பழைய நினைவுகளை மீட்டித்தந்தது! வாழ்த்துக்கள் நண்பா?
நிரு நீங்கள் ஒரு வெளிப்படையான ஆளப்பா! எதுக்கும் பயப்படாமல் எல்லாத்தையும் வெளிப்படையாக எழுதுறீங்க!!
அந்த லாரி மேட்டர் சூப்பர்! இது போல எனக்கு இன்னுமொரு கதை தெரியும் நண்பா! தனிமெயிலில் அனுப்புகிறேன்!!
i shall read,vote,comment later..bcoz i m in full mabbu..he he..
ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
அருமையான, சுவையான கலக்கலான பதிவு நண்பா! எமது பழைய நினைவுகளை மீட்டித்தந்தது! வாழ்த்துக்கள் நண்பா?//
நன்றிகள், நன்றிகள்.
//
ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
நிரு நீங்கள் ஒரு வெளிப்படையான ஆளப்பா! எதுக்கும் பயப்படாமல் எல்லாத்தையும் வெளிப்படையாக எழுதுறீங்க!!//
இதிலை ஒரு உள் கூத்தும் இல்லையே? எல்லாத்தையும் வெளிப்படையாக எழுதேலாதப்பா.
டக்கால்டி said...
i shall read,vote,comment later..bcoz i m in full mabbu..he he.//
போதையிலை இருந்தாலும், என்ன ஒரு பணிவு.. உங்களின் நேர்மையைப் பாராட்டுறேன்.
Don't worry, Be Happy!
would you be able to wakeup tomorrow or today?
Post a Comment