மயக்கம் தருகிறாய், நீ யாரடி
கனவில் தினம் வரும் காதலி
கவிதை எழுதுறேன் உன்னால் தானடி
நல்லூர் வீதியிலே நானடி
உனக்காய் நாளும் அலைகிறேன் பாரடி
கல்லோ உன் இதயம் சொல்லடி
கடைக் கண் பார்வை தந்து செல்லடி
என்னை உன் உயிரார் ஆதரி
என்னுள் உறவாட வா சகி!
சங்கக் கடையடி, சயன்ஸ்கோலடி எல்லாம்
சிங்கிள் பிகருனக்காய் காவல்
தங்கம் உனைக் கண்டால், தலை கால் புரியாத படி
தவழ்ந்து வரத் தூண்டுதடி ஆவல்
பொங்கும் முழு நிலவே, பொன்னாலை தமிழணங்கே
பெண்ணே வாழும் என் காதல்
அங்கிள் எனச் சொல்லி அன்பே நீ கடந்திடினும்
அடியே பதில் இல்லையோ நிகழ்வது மோதல்
எங்கும் உனை பின் தொடரும் எனை
ஏமாற்றினால் என்னுள் பிறக்கும் அடுத்த காதல்!
|
16 Comments:
யாருங்க அந்த மாலதி?
நன்று!
கவிதையில் பாரதியின் சுவாசம் நுகரப்படுகிறது.
ரொம்ப பழங்காலத்துக் கவிதை போல...
கவிதையில் உண்மை என்னவெனில்,
//ஏமாற்றினால் என்னுள் பிறக்கும் அடுத்த காதல்!//
இது சரியான பதம்.
அங்கிள் மனதில் பூத்த காதல்.
சிங்கிளா இன்னும் நீங்கள் ?
ஏமாற்றினால் என்னுள் பிறக்கும் அடுத்த காதல்!
ஆஹா.. இதுவே யதார்த்தம். பருவ வயது காதல் கவிதைகள் எப்போதும் சுகமானதே. கலக்குங்கள்.
ஹலோ ஹலோ...
”பொன்னாலை...மாலதி”நிரூபன் வலைத்தளப் பக்கம் வாங்களேன்.
உங்களுக்குத்தான் ஒரு கவிதை போட்டிருக்கார் !
தற்கால யதார்த்த காதல்நிலை
எதார்த்தக் காதல் கவிதை! அருமை!
ஆதவா said...
யாருங்க அந்த மாலதி?
நன்று!
கவிதையில் பாரதியின் சுவாசம் நுகரப்படுகிறது.
ரொம்ப பழங்காலத்துக் கவிதை போல...
கவிதையில் உண்மை என்னவெனில்,
//ஏமாற்றினால் என்னுள் பிறக்கும் அடுத்த காதல்!//
இது சரியான பதம்//
கவிதையின் வடிவம் பழைய மரபில் வந்தது தான் ஆனால் சம்பவம் இக் காலத்து நிஜம் சகோதரா.
சிவகுமாரன் said...
அங்கிள் மனதில் பூத்த காதல்.
சிங்கிளா இன்னும் நீங்கள்?//
இந்தக் காலத்திலை பொண்ணுகள் எல்லோரும் காதலிக்கிறோம் என்று பின்னாலை ஆண்கள் அலையும் போது அண்ணா என்பதற்கு பதிலாக அங்கிள் என்று அழைத்து எங்கள் காதலாசையை நிராசையாக்குகிறார்கள். அந்த வலியில் தான் இப்படி ஒரு அங்கிள்.
Jana said...
ஏமாற்றினால் என்னுள் பிறக்கும் அடுத்த காதல்!
ஆஹா.. இதுவே யதார்த்தம். பருவ வயது காதல் கவிதைகள் எப்போதும் சுகமானதே. கலக்குங்கள்.//
நன்றிகள் சகோதரா
ஹேமா said...
ஹலோ ஹலோ...
”பொன்னாலை...மாலதி”நிரூபன் வலைத்தளப் பக்கம் வாங்களேன்.
உங்களுக்குத்தான் ஒரு கவிதை போட்டிருக்கார் //
என்னது எனக்காகவா? சரி சரி வருகிறேன்.
சகோதரன் வைகறை, மற்றும் நட்சத்திரா ஆகியோருக்கும் பின்னூட்டமிட்ட அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள்.
நிரூபன்.
என்னாச்சு? பிறந்ததா அடுத்த காதல் ?
நக்கலும்..கிண்டலும்...புலம்பலும் ஏக ஜோர் நிருபன் இந்த கவிதையில் ..வெகுவாய் ரசித்தேன்...
நன்றாக உள்ளது நிருபன்
சயின்ஸ் ஹால் நல்லூர் வீதி
வாசிக்கவே நினைவுகள் இனிக்குது
அடடா அப்ப நாமெல்லாம் ஒரே கூட்டணியா ? ஹ..ஹ.. சகோதரா.. டெம்ளெட்டில் கொஞ்சம் கவனமெடுங்கள் அதன் அளவு திரைக்குள் உள்ளடங்கவில்லை...
ஆங்காங்கே அங்கில சொற்களை வலிந்து சேர்த்துள்ளீர்கள்.... அது ஒரு கவிதையின் போக்கை மாற்றுகிறது....
கவிதை எழுதுவது என்று முடிவெடித்த பின் அதை தமிழிலேயே எழுதினால் என்ன?
ஆங்கில கலப்பை தவிர்த்து கவிதை நல்லாதான் இருக்குங்க. பாரட்டுக்கள்.
Post a Comment